Nov 9, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

சில மாதங்கள் முன்பு வரை சினிமா என்றால் இவரது விமர்சனம் தான் நம்பத்தகுந்ததாய் இருந்தது. விமர்சனம் எழுதுவதையே இவர் நிறுத்திவிட ஆபத்பாந்தவனாய் வந்தார் கேபிள். விஷயம் இதுவல்ல. அவருடன் சேட்டில் உரையாடிய போது தீபாவளி ரிலிஸ் பற்றிய பேச்சு வந்தது. ஆதவன் கலெக்‌ஷனில் பின்றானாம். பேராண்மை, மவுத் டாக் நல்லா இருக்குன்னு வந்தாலும் கல்லா கட்டாவில்லையாம். வணிக ரீதியாக இதுவும் ஐங்கரனுக்கு நஷ்டம்தானாம். ஆதவன் தோல்வியடைந்திருந்தாலாவது சூர்யா மாறியிருக்கக் கூடும். சிங்கத்திற்கு பிறகு என்ன ஆகப் போறரோ என்றார்.

  இவ்வளவு பேசிவிட்டு வேட்டைக்காரன் பற்றி பேசாமலா இருந்திருப்பேன்?  படம் திசம்பர் சகா என்றார். நம்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே நாளிதழ்களில் திசம்பர் 18 முதல் வேட்டையாட வருகிறான் என்று விளம்பரம் வந்ததைப் பார்த்து கிட்டத்தட்ட மயக்காமாகி விட்டேன். ஏன்னா. அதை மட்டுமா சொன்னாரு? ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவர்களுக்கு படம் திருப்தி அளிக்கவில்லையாம். சில காட்சிகளை ரீஷூட் செய்தால்தான் சரிப்படும் என்று சொல்லிவிட்டார்களாம். என் நிலைமை புரிந்து சரியான நேரத்தில் குளுக்கோஸ் கொடுத்தும் உதவினார். டச்சப் ஒர்க் முடிந்து சென்சாருக்கு சென்ற ஃபைனல் புராடக்டைப் பார்த்து சென்சார் அதிகாரிகள் சொன்ன ரிசல்ட் சன்னுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் எக்கச்சக்க நம்பிக்கை தந்திருக்கிறதாம். ம்ம். இன்னும் 40 நாட்கள் தானே. பார்த்துவிடுவோம்.

(நம்மள வேட்டையாடாம இருந்தா சரிதான் கார்க்கி என்றெல்லாம் பின்னூட்டம் போடக் கூடாது சொல்லிப்புட்டேன்)

    ****************************************

     கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது  என் மொபைல் சிக்னல் கிடைக்காமல்  ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த பப்லு என்னடா ஆச்சு என்றான். இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றேன். அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னான் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.

(பார்றா. கத்தி மாதிரி பேசறான்னு இதுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுங்க)

****************************************

வியாழன்  இரவு பப்லுவுக்கு காய்ச்சல் அதிகமாகிவிட இரவு 10 மணிக்கு மேத்தா நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்றோம். சச்சின் 350ஐ தொட்டுவிட போராடிக் கொண்டிருந்ததை(மட்டும்) பார்த்துக் கொண்டிருந்தார்கள் எல்லா அப்பாக்களும். ச்சே இதான் அப்பாக்கள். அம்மாக்கள் எப்படி குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லைன்னு பத்திரமா பார்த்துக்குறாங்க என்றேன் உடன் வந்தவரிடம். ஒட்டுக் கேட்ட வார்டு பாய் சொன்னார் “நாளைக்கு ஒன்பது மணிக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க சார்”.

(இதுக்கு எப்படி வேணும்னாலும் பின்னூட்டம் போடாலாம்)

****************************************

வலையுலக தோழி ஒருவர் மடலிட்டிருந்தார். I MISS YOU என்பதற்கு தமிழில் சரியான வாக்கியம் என்ன  என்று கேட்டிருந்தார். எவ்வளவு கசக்கியும் தெரியவில்லை எனக்கு.  நேரிடையாக மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது என்றெல்லாம் விளக்கம் தந்துப் பார்த்தேன். ம்ஹூம். சரி பேச்சை மாற்றிவிடுவோம் என்று ”நான் ரெண்டு நாளா பதிவு போடலையே. என்னைதான் மிஸ் பண்றேன்னு சொல்ல போறீங்களா”ன்னு  ரிப்ளை அனுப்பினேன். பதில் மின்னல் வேகத்தில் வந்தது.

நான் அப்படி நினைக்கலை :) அக்சுவல்லி, ஐ வாஸ் ரிலீவ்ட் ப்ரொம் யுவர் மொக்கை :)))) 

சரி.அத விடுங்க. I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்?

(கடைசி வரியை கோட் செய்து நல்லாவே பேச்சை மாத்தறீங்க சகான்னு போட தடை)

****************************************

வலையுலகம் தெரியாத நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றான். எனக்கு மக்ரோனி என்றால் ரொம்ம்ம்ம்ப இஷ்டம் என்பதால் நிறைய வாங்கிவரச் சொன்னேன். மறந்துவிட போகிறான் என்று ஒரு ஐஸ் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.

  “தூத்துக்குடியில் முத்து எடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். பத்திரமா வந்து சேருடா”

அவன் ரொம்ப புத்திசாலி. அருமையான ரிப்ளை அனுப்பினான்.

“என்ன மச்சி மப்பா? முத்துவுக்கு அனுப்ப வேண்டியத எனக்கு அனுப்பி இருக்க!!

இவனெல்லாம் பதிவு படிக்க வந்தால் எப்படியிருக்கும் சொல்லுங்க? நோ. நெவர். பரிசல் அவர பத்தி தப்பு தப்பா பேசாதிங்க.

(இதைப் பத்தி யாருமே எதுவுமே சொல்லக்கூடாது. ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் )

****************************************

இன்றைய ஹாட் ஜாப்ஸைப் பார்க்க இங்கே க்ளிக்குங்கள்

50 கருத்துக்குத்து:

Cable Sankar on November 9, 2009 at 10:26 AM said...

ஆதவன் ஓப்பனிங் செம கலெக்‌ஷந்தான்.. அதில் ஏதும் விஷயமில்லை.. ஆனால் ஐங்கரனுக்கு ஹிட் என்று சொல்லிக்க கூடிய ஒரே படம் இதுதான்.. அவர்களுக்கு ஒரளவுக்கு பணம் வந்து விட்டது என்ற தகவல்தான் உண்மை..

ஸ்ரீமதி on November 9, 2009 at 10:28 AM said...

புரிந்தும்... புரியாமலும்...

மங்களூர் சிவா on November 9, 2009 at 10:37 AM said...

nice!

ilavarasan on November 9, 2009 at 10:44 AM said...
This comment has been removed by the author.
ilavarasan on November 9, 2009 at 10:45 AM said...

சகா, இதை நண்பர்களுக்கும் பயன்படுத்தலாம்.


I Miss you...
உன் பிரிவால் வாடுகிறேன்.
உன்னைப் பிரிந்திருத்தல் கடினமாக இருக்கிறது.

rajan on November 9, 2009 at 10:48 AM said...

i miss you = நான் உன் அருகாமையை இழக்கிறேன்!


என்ன சகா எதுவும் கோவமா? mail க்கு reply பண்ணவே இல்லை!!!

Romeoboy on November 9, 2009 at 10:56 AM said...

I Miss you :

பசங்க சொன்ன "செல்லம் எப்ப உன்னை பார்ப்பேன்"

பொண்ணுக சொன்ன "எஸ்கேப் டா"


இது எப்படி ...

யோ வாய்ஸ் (யோகா) on November 9, 2009 at 11:04 AM said...

மிஸ் யுக்கு உன்னை ரொம்ப இழக்கிறேன் என கூறலாம் சகா.

வர வர மொக்கை என்றால் சகா அல்ல பப்லு என மாற கூடிய வாய்ப்புகள் அதிகம் சகா. ஆகவே பபலுவிடம்கவனமாக இருக்கவும்

கல்யாணி சுரேஷ் on November 9, 2009 at 11:09 AM said...

//“அந்த இடத்து பேரு. கத்திபாராதானே? அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”//

Sorry கார்க்கி பப்லுவ பாராட்டாம இருக்க முடியல. உங்களுக்கு தேவையா இது?

//“நாளைக்கு ஒன்பது மணிக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க சார்”.//

Serial பார்க்கறதில்லைனாலும் I'm also a woman. So no comments.

I MISS YOU - உனது அருகாமை தேவையாய் இருக்கிறது.(?)

taaru on November 9, 2009 at 11:22 AM said...

//கத்திபாரா //
மேம்பாலம் டூ ஆதம்பாக்கம் - கொஞ்சம் late தான்.. ஆனா கத்தி[யே] தான்...

I MISS YOU =
என் மனது ஆற - நீ
எப்போ வருவே நேர. [ஐயோ அடிக்காதீங்க...]

குடுகுடுப்பை on November 9, 2009 at 11:24 AM said...

தொலைஞ்சு போச்சு சனியன்

நர்சிம் on November 9, 2009 at 11:25 AM said...

சகா..மழைக்கு கின்னுன்னு இருக்கு காக்டெய்ல்.

Miss you மேட்டர்.

“தொலைந்து போனேன்” கவித்துவமா இருக்கும்.

“எங்கடா தொலைஞ்சு போன?”

ப்ராக்டிகலா இருக்கும்

ilavarasan on November 9, 2009 at 11:33 AM said...

To express I Miss you,
எப்போ உன்னை மறுபடியும் பாக்கறது?

idhu kooda nallaa irukkum.

பின்னோக்கி on November 9, 2009 at 11:45 AM said...

kathippara matter kalakkal.
350 mmm..3 runnula pootche :(

ஹுஸைனம்மா on November 9, 2009 at 11:47 AM said...

//கத்திபாரா மேம்பாலத்தில் செல்லும்போது என் மொபைல் சிக்னல் கிடைக்காமல் ஹலோ...//

வண்டி ஓட்டும்போது மொபைல் பேசாதிருப்பது நல்லது கார்க்கி!! (நிறுத்திவிட்டுப் பேசியிருந்தீர்கள் என்றால், ignore this).

I miss you - உன்னைத் தேடுகிறது - சரிவருமா?

கோவி.கண்ணன் on November 9, 2009 at 11:53 AM said...

//சரி.அத விடுங்க. I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்//

காணாமல் ஏங்குகிறேன் !!!

கோவி.கண்ணன் on November 9, 2009 at 11:53 AM said...

//சரி.அத விடுங்க. I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்//

காணாமல் வாடுகிறேன் !

ஷாகுல் on November 9, 2009 at 11:56 AM said...

//சரி.அத விடுங்க. I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்//

இத தமிழ்ல "ஐ மிஸ் யூ" னு சொல்லலாம்.

Anbu on November 9, 2009 at 11:56 AM said...

:-)

Anonymous said...

//I MISS YOU என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்?//

ஐ மிஸ் யூ, இப்படி தமிழ்ல சொல்லிருங்க. பிரச்சனை இல்லை!!!!

அ.மு.செய்யது on November 9, 2009 at 11:59 AM said...

I Miss you !!!


"நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்" இதான் தமிழாக்கம்.

ஏன்னா மிஸ்ஸிங்.,.ஃபீலிங் இதெல்லாம் எப்போவோ தமிழ் வார்த்தையா ஆக்கியாச்சு !!!

Achilles/அக்கிலீஸ் on November 9, 2009 at 12:02 PM said...

ரைட்டு.. :))

சஹானா beautiful raga on November 9, 2009 at 12:07 PM said...

கலக்கல் காக்டெயில், பப்லு சான்ஸே இல்ல

//Miss you மேட்டர்.


“எங்கடா தொலைஞ்சு போன?”

ப்ராக்டிகலா இருக்கும்//

ரிப்பிட்டேய்ய்

சுசி on November 9, 2009 at 12:33 PM said...

//(பார்றா. கத்தி மாதிரி பேசறான்னு இதுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுங்க)//

அப்டி போட மாட்டோம்.. (உங்கள விட) புத்தியோட பேசறார்னு போடுவோம்....

காக்டெயில் சூப்பர்....

யோ வாய்ஸ் (யோகா) on November 9, 2009 at 12:48 PM said...

sorry

Truth on November 9, 2009 at 1:31 PM said...

I miss you
நான் செல்வி நீ. கரெக்டா? :P

//"தூத்துக்குடியில் முத்து எடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம். பத்திரமா வந்து சேருடா"

இத பத்தி தான் கமெண்டணும்னு இருந்தேன். ச்சே வட போச்சே... சரி அவன் இன்னுமா கமெண்டல! அட!

கார்க்கி on November 9, 2009 at 1:38 PM said...

@கேபிள்,
சென்னையை தாண்டி பேராண்மை இரண்டாம் நாளே பேக்கப் ஆனதாக தெரிகிறது

@ஸ்ரீமதி,
ஏன்?

நன்றி சிவா

@இளவரசன்,
இதெல்லாம் பாகவதர் படத்துலதான் சொல்லுவாங்க :))

@ராஜன்,
எந்த மெயில் சகா? அனுப்பிட்டேனே

ரோமியாபாய், நீங்கதான் யூத்

யோகா, வீட்டிலும் திட்டறாங்க சகா:)

கல்யாணி மேடம் சொல்லிடறேன் பப்லுகிட்ட

டாரு, தாறுமாறு

குடுகுடுப்பை, என்ன வெறுப்பு சக?

கார்ல்ஸ்பெர்க் on November 9, 2009 at 2:03 PM said...

//எனக்கு மக்ரோனி என்றால் ரொம்ம்ம்ம்ப இஷ்டம் என்பதால் நிறைய வாங்கிவரச் சொன்னேன்//

அண்ணா அது மக்ரோனி இல்ல.. மக்ரோன்.. மக்ரோனி அப்படிங்கறது வேற ஒரு சாப்பாட்டு ஐட்டம்.. நம்ம ஊரு மக்ரோனுக்குத்தான் famous..

ஆதிமூலகிருஷ்ணன் on November 9, 2009 at 2:07 PM said...

எப்பிடியும் டிஸம்பர்ல 10 நாள், ஜனவரியில் 10 நாள்.. அப்புறம் பொங்கல் படங்கள் வந்திடும். இப்பவே தெரிஞ்சிடுச்சு ரிஸல்ட்.. ஊத்திக்கிச்சேய்..!!

கார்க்கி on November 9, 2009 at 2:22 PM said...

@நர்சிம், ரெண்டாவ்து நல்லா இருக்கு சக

@பின்னோக்கி, அந்த மேட்ச் ஜெயிச்சிருந்தா சச்சின் மேல் இருந்த ஒரே ஒரு குறையும் போயிருக்கும் :(

@ஹுசைனம்மா, ஆமாங்க. சரியாதான் வருது

@கோவியே, கலக்கறீங்க போங்க

@ஷாகுல்&அம்மிணி, கடைசில நானும் அதேதான் சொன்னேன் :))

நன்றி அன்பு

@செய்யது, இன்னும் என்னென்ன வார்த்தை சகா? :)))

நன்றி அக்கிலீஸ்

டேங்க்ஸ் பிசாசு

நன்றி சுசி

யோகா, எதுக்கு சாரி?

ட்ரூத், நீங்க ரொம்ப நல்லவருங்க

டேங்க்ஸ் கார்ல்ஸ்பெர்க். ஏற்கனவே ஃப்ரெண்டு சொன்னான்

ஆ.மூ.கி, குருவி மாதிரி இன்னொரு விமர்சன்ம் ஏதாவ்து வந்துச்சு.... தொலைச்சுட்டேன்

ஆதிமூலகிருஷ்ணன் on November 9, 2009 at 2:35 PM said...

ஆ.மூ.கி, குருவி மாதிரி இன்னொரு விமர்சன்ம் ஏதாவ்து வந்துச்சு.... தொலைச்சுட்டேன்
//

ஏற்கனவே வில்லு விமர்சனத்தை மிஸ் பண்ணிய வருத்தம் உண்டு. ஹைலி எக்ஸ்பெக்டட். முதலிரண்டு நாட்களிலேயே பார்க்கும் ஐடியாவில் இருக்கிறேன்.

என் விமர்சனம் படத்தின் கையில் இருக்கிறது. ஹிஹி..

பரிசல்காரன் on November 9, 2009 at 3:20 PM said...

சகா..

வேட்டைக்காரன் படம் எப்படி இருக்கும்னு ஒரு முன்விமர்சனத்தொடர் ஆரம்பிக்கலாமா? படம் வந்து, எந்த விமர்சனத்தோட ஒத்துப் போகுதோ அவங்களுக்கு ஒரிஜினல் டிவிடி ஃப்ரீ!

எப்பூடீ??

ஸ்ரீமதி on November 9, 2009 at 3:53 PM said...

I MISS YOU

நீ இல்லாமல் அல்லது உன்னை இழந்து வாடுகிறேன்.. இப்படி சொல்லலாமா??

ஆதிமூலகிருஷ்ணன் on November 9, 2009 at 3:56 PM said...

I Miss you.!

இதுக்கு பதில் சொல்லாம விட்டுட்டேனே..

'ரொம்ப தேடிருச்சும்மா'

'ஒரே தேட்டமாப்போச்சுண்ணே'

'எந்தக்கண்ணு தேடுச்சு?'

அமுதா கிருஷ்ணா on November 9, 2009 at 5:11 PM said...

டிசம்பர் 10 தூத்துக்குடி போறேன் ஒரு கல்யாணத்திற்கு...நாளை என்னுடைய பதிவினை படிக்கவும்..ஒரு விஷயம் இருக்கும் உங்களுக்கு...

தராசு on November 9, 2009 at 6:30 PM said...

அதாவது வேட்டைக்காரனைப் பத்தி என்ன சொல்றதுன்னா.... அது வந்துங்க....

சரி சரி வேண்டாம், எல்லாவற்றிற்கும் காலம் சரியான பதிலை சொல்லும்.

தல ஆதி போன்ற அநேகர் செம பிளானிங்ல வெயிட்டிங். பார்ப்போம்.

மதுவதனன் மௌ. / cowboymathu on November 9, 2009 at 6:51 PM said...

Take Care என்பதற்கும் நீண்ட நாளாய் தமிழ்வார்த்தை தேடித்திரிகிறேன்... :))

அதிலை on November 9, 2009 at 7:20 PM said...

missing - தவிப்பு?

தமிழ்ப்பறவை on November 9, 2009 at 7:32 PM said...

டிச. 18 பார்க்கலாம்.
நல்ல காக்டெயில்...
கத்திப்பாரா கலக்கல்...

சாம்ராஜ்ய ப்ரியன் on November 9, 2009 at 8:12 PM said...

:D

ரோஸ்விக் on November 9, 2009 at 8:37 PM said...

I Miss You - னா, நீ எனக்கு செலவுக்கு பணம் குடுத்து ரொம்ப நாளாச்சுன்னு அர்த்தமாம். உங்கள மாதிரி ஒரு நண்பர் சொன்னாரு...சரியா சகா?

ஜெட்லி on November 9, 2009 at 9:57 PM said...

கார்க்கி, வேட்டைக்காரன் மேட்டர் நமக்கு புதுசு...

சென்சார் போர்டு அதிகாரிங்க பார்க்க மாட்டேனு அடம் பிடிச்சதா செய்தி???

withuVijay on November 9, 2009 at 10:55 PM said...

அண்ணே நான் புதுசு னே இனிமேல் உங்க கூடயே வருவேன் (அதன் follow பண்ணுவேன் )
பதிவுகள் அருமை
I Miss you...
நீயின்றி நான் இங்கு இல்லை
இதன் அர்த்தமா இருக்குமோ ???

RaGhaV on November 9, 2009 at 11:19 PM said...

என் பங்குக்கு..
I miss you - நீயின்றி தவிக்கிறேன்.. :-(

வேட்டைகாரன விடுங்க.. உங்க படம் எப்போ ரிலீஸ்..? ;-)

பட்டிக்காட்டான்.. on November 10, 2009 at 2:13 AM said...

கலக்கல் காக்டெயில் சகா(இந்த இடத்துல கார்க்கினு வந்துருக்கனுமோ? கலக்கிட்டியாடா காபி மாதிரி..!!)..

Karthik Viswanathan on November 10, 2009 at 8:14 PM said...

பெண்கள் சொன்னால்,
I miss - எனக்கு கல்யாணமாகல
you - உனக்கு?

என்று கொள்ளலாமா?

Siddarth on November 10, 2009 at 10:51 PM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on November 10, 2009 at 11:51 PM said...

:) பப்லு செமையா கலக்கறார்

Karthik on November 12, 2009 at 12:05 PM said...

ஐ மிஸ் யூ என்பதை 'கண் செல்வி திருப்பம்' என்று தமிழில் சொல்லலாம்.

முனைவர்.கார்த்திக் நாராயண்

Karthik on November 12, 2009 at 12:08 PM said...

வேட்டைக்காரன் படம் பார்த்துட்டு நான் கூட முதல்முதலா விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன். எல்லாம் விஜய் மேல ஒரு நம்பிக்கைதான். ;)))

கத்திப்பாரா? ஆவ்வ்வ். பப்லு லிங்விஸ்டிக்ஸ்ல டாக்டரேட் பண்ணுவான்னு நினைக்கிறேன். :))

me the 50!

 

all rights reserved to www.karkibava.com