Nov 3, 2009

ஆடறா ராமா..டண்டனக்கு


முன்(அ)முக்கிய (அ) மு.குறிப்பு:
   இந்த புனை..ஹும்மை(நன்றி:நர்சிம்) ரசிக்க முடியாதவர்கள் ஃப்ரீயா விடுங்க. இங்க போய் பழைய மொக்கை ஒன்றைப் படித்துவிட்டு செல்லலாம்.
*************************************************************************************************************

அடடே.. வாப்பா வேலாயுதம். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு போல இருக்கே..
ஆமாம்ப்பா..  அந்த புது அபார்ட்மெண்ட்ஸூக்கு போன உடனே பழைய ஆளுங்கள சந்திக்கவே நேரமில்லையே.
ம்ம். அப்ப அந்த இடமும், ஆளுங்களும் ரொம்பவே புடிச்சு போச்சன்னு சொல்லு.
ஒரு வகையில சரிதான். ஆனா அடிக்கடி எவனாவது ஒருத்தன் பிரச்சினை பண்ணிடறான். அதான்..
நீ ஒன்னு. மத்த இடத்தில எல்லாம் இருக்கிறவன் எல்லாருமே பிரச்சினை பண்றாங்க. அப்படி பார்த்தா இது எவ்ளோ தேவலாமே!!! ஆமாம் இப்ப என்ன பிரச்சின? யாரு? என்ன மேட்டரு?
யெஸ். புண்ணியகோடின்னு ஒருத்தன் இருக்காம்ப்பா. இத்தனைக்கும் அவனுக்கு அந்த அபார்ட்மெண்ட்ஸுல சொந்தமா ஃப்ளாட்டு கூட கிடையாது. யாராவது வீட்டுல பி.ஜிய தங்குவான். அவ்ளோதான். அவன்கிட்ட யாராவது ஒரு வார்த்தை கேட்டுட்டா, கேட்டவன் ஜாதகத்தையே அலசி ராகு எந்த வீட்டுல இருக்கான், சுக்ரன் எங்க இருக்கிறான், இவன் சின்ன வீடு எங்க இருக்குன்னு எல்லா மேட்டரையும் யாரு வீட்டுல பி.ஜியா இருக்கிறானோ அங்க சத்தமா உளறான்.
அட. சரியான ஆளா இருக்கானே. அதான் பேரு யெஸ்.புண்ணியகோடியோ? ஆமாம். நீங்க எல்லோரும் அவன உள்ள வரமுடியாதபடி வீட்ட பூட்டி வச்சிக்கலாமே.
அதாம்ப்பா பிரச்சினை. அந்த வீடு எனக்கு புடிச்சதே சுதந்திரம் இருக்கிறதாலதான். அதுவும் நானும் என்னோட ஃப்ரெண்டுஸும் அந்த அபார்ட்மெண்ட்ஸுக்கே வந்தவுடனேதான் நல்லா இருக்குன்னு ரொம்ப நாளா அந்தக் காலனில உண்மையா இருந்த ஒரு மனுஷன் சொன்னாருப்பா. அதான் கொஞ்சம் விட்டுப்புடிக்கலாம்னு.,
அப்ப உஷாரா இருக்கிறவன் வீட்டுல எல்லாம் அவன் நுழையறது இல்லை. உங்கள மாதிரி ஆளுங்ககிட்டதான் ஆடறான்.
அதுக்குதான் இன்னொருவன் இருக்கானே!!!
அவன் யாருப்பா?
அட அவன் பேரு கணே..இல்ல இல்ல வசந்த். அவன் ஸ்டைல் என்னன்னா பூட்டின வீடு, பூட்டாத வீடெல்லாம் இல்லை. கதவுகிட்ட யாருமில்லாதப்ப குப்பைகளை அள்ளிட்டு வந்து போட்டுடுவான். அத க்ளீன் பண்ணி முடிக்கவே வீட்டுக்காரருக்கு டங்குவாரு அறுந்துரும். இப்ப கொஞ்ச நாளா ஆளக் காணோம். எப்போ வருவானோ?
அப்ப பூட்டிய வீட்டுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லையா?
அப்படித்தான். இருந்தாலும் ஒரு சித்த வைத்தியன் இருக்கான். அவன் தொல்லை பெருந்தொல்லை.  பாம்புன்னா குச்சிய வச்சு அடிக்கலாம். அட கையால கூட சுத்த சுத்தி தரையில் அடிச்சிடலாம். இது கரப்பான்பூச்சியா இருக்கா. ஒன்னும் பண்ண முடியல.
ஹாஹா. அந்த மாதிரி ஆளுங்க எல்லா இடத்திலும் இருப்பாங்க. மேல சொல்லு.
குழந்தைங்க எல்லாம் விளையாடற இடத்துல போய், சச்சின் எப்படி கவர் டிரைவ் ஆடுவாரு தெரியுமான்னு கிளாஸ் எடுக்கிறான். அதுங்க அங்கிள் நாங்க ஆடறது பேஸ் (base) பால்ன்னு சொன்னா, ஆமாம் எவ்ளோ வேகமா(Pace) போட்டாலும் சச்சின் ஆடுவாரு. நீ ஆட முடியலன்னா வீட்டுக்கு போன்னு சொல்றான்.
அட ராமா. அந்த அளவுக்கு ஞான சூன்யமா?
அவ சூன்யம் எல்லாம் இல்லை ஓய். நெகட்டிவ்ல போறான். அவன் டீட்டெயில் எல்லாம் பார்த்தா அவனுக்கு இந்த அப்பார்ட்மெண்ட்டுல பல வீடுங்க இருக்கு. எல்லாம் பினாமி பேர்ல வச்சிருக்கிறான். நாங்க என் ஃப்ரெண்ட்சுன்னு சொன்னேன் இல்ல, அவங்களால அவன் வீட்டு வாடகை குறைஞ்சிடுச்சு. ஏன்னா இவங்க எல்லாம் வீட்ட பாலிஷ் போட்டு, இண்ட்டீரியர் பண்ணி பளபளன்னு வச்சி இருக்காங்க. அட false ceiling ஓ ஏதோ ஒன்னு, வந்து பார்க்கிறவன் கண்ணுக்கு பளிச்ச்ன்னு இருக்கிறதால் கார்ப்பரேட் கெஸ்ட் அவுஸ் அப்படி இப்படின்னு இவங்க ரேட் ஏறிப்போச்சு. கடுப்பாகுமில்ல அவனுக்கு. அதான் இப்படி அலையறான்.
நீ சொல்றத பார்த்தா அந்த யெஸ்.பி, டாக்டரு இவங்கதான் சைக்கியாட்ரிஸ்ட் போய் பார்க்கனும். ஆனா உங்கள போய் பார்க்க வச்சிடுவாங்க போலிருக்கே.
யாருப்பா அந்த போலிஸூம், டாக்டரும்?
யெஸ்.புண்ணியகோடியும், சித்த மருத்தவரும்தான்
அட. அவங்களா. ஆரம்பத்துல அப்படித்தான் தெரியும். போக போக அவனுங்களே அடங்கிடுவாங்க.
இதெல்லாம் போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சத்தம் போட்டு பேசாத. கேட்டுட்டு வந்துட போறாங்க.
கொஞ்ச நாளா அபார்ட்மெண்ட்ஸ் போரடிக்குதுப்பா. வரட்டும்ன்னுதான் இதை நோட்டிஸ் போர்டுல போடப் போறேன். அப்பவாது ஜாலியா பொழுது போகுமே.
உன் வீட்டு நம்பர்ல போட்டு பிரச்சினை ஆயிட போது.ஜாக்கிரதைப்பா
ஓய். நாங்க இந்த வீட்டுக்கே வந்ததே ஜாலியா இருக்கனும்ன்னுதானே.. இவனுங்க எல்லாம் அதுக்குதானே வச்சிருக்கிறோம். என்ன நாங்க ஜாலியா இருக்க, அவனுங்க சட்டைய கிழிச்சிட்டு அலையறத பார்க்கதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா தொழில் பண்ன முடியுமா பாஸ்?
வாங்க புண்ணியகோடி & மருத்துவரே. கும்மி ஸ்டார்ட்ஸ். ஆடறா ராமா!!!!!
untitled

22 கருத்துக்குத்து:

யோ வாய்ஸ் (யோகா) on November 3, 2009 at 10:29 AM said...

me the first

தாரணி பிரியா on November 3, 2009 at 10:59 AM said...

:) ha ha

அமுதா கிருஷ்ணா on November 3, 2009 at 11:16 AM said...

ஹ் ஹ ஹா:)

தராசு on November 3, 2009 at 11:48 AM said...

கொஞ்சம் புரியுது, ஆனா புரியல.

என்னவோ சொல்ல வர்றீங்க, ஆனா சொல்லல, சரிதானே.

தாரணி பிரியா on November 3, 2009 at 1:34 PM said...

enna kodumai karki ithu intha pathivukku innum punniyakodi varalai

நர்சிம் on November 3, 2009 at 1:55 PM said...

//தாரணி பிரியா said...
enna kodumai karki ithu intha pathivukku innum punniyakodi varalai
//

இப்பிடியே உ.ஏ.ஏ.ச.கி....

சுசி on November 3, 2009 at 2:28 PM said...

சூப்பர்.... அசத்தல்... கலக்கல் கார்க்கி...

ஜமாய்ச்சிட்டீங்க.

நான் நினைக்கல அவங்க இன்னைக்கு வருவாங்கன்னு. அவங்கதான் புண்ணியகோடியும் சித்த மருத்துவரும்.

எனக்கு யார்னு புரியலைன்னாலும் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும் :))))

rajan on November 3, 2009 at 2:33 PM said...

//யெஸ். புண்ணியகோடின்னு ஒருத்தன் இருக்காம்ப்பா. இத்தனைக்கும் அவனுக்கு அந்த அபார்ட்மெண்ட்ஸுல சொந்தமா ஃப்ளாட்டு கூட கிடையாது.//

ஹா.ஹா. ஹா. இந்த வீடு இல்லாதவனுங்க பண்ற லொள்ளுக்கு அளவே இல்லாமே போச்சு.

//அட அவன் பேரு கணே..இல்ல இல்ல வசந்த். அவன் ஸ்டைல் என்னன்னா பூட்டின வீடு, பூட்டாத வீடெல்லாம் இல்லை. கதவுகிட்ட யாருமில்லாதப்ப குப்பைகளை அள்ளிட்டு வந்து போட்டுடுவான். அத க்ளீன் பண்ணி முடிக்கவே வீட்டுக்காரருக்கு டங்குவாரு அறுந்துரும். இப்ப கொஞ்ச நாளா ஆளக் காணோம். எப்போ வருவானோ?//அட இவன் யாரு?

Karthik on November 3, 2009 at 3:03 PM said...

பின்றீங்கபா.. மல்லிகை கணேஷுக்கு பிறகு இதான்.. :))

தாரணி பிரியா on November 3, 2009 at 3:59 PM said...

//Blogger நர்சிம் said...

//தாரணி பிரியா said...
enna kodumai karki ithu intha pathivukku innum punniyakodi varalai
//

இப்பிடியே உ.ஏ.ஏ.ச.கி..//

aha enna sollaringa narsim sir ennakku puriyalai.

வெண்ணிற இரவுகள்....! on November 3, 2009 at 4:35 PM said...

he he he

கார்க்கி on November 3, 2009 at 5:09 PM said...

வாங்க யோகா

தா.பி. என்ன ஆச்சு?

அமுதா மேடம், ம்ம்ம்

தராசு, புரியலையா தல?

நர்சிம்,பாதிக்கு மேல இடிக்குதே சகா

சுசி, நீங்க தொடர்ந்து என்னை படிக்கறீங்கன்னு தெரியுது. நன்றி

ராஜன், கணேஷு தெரியாதா? பரிசல் வந்து விளக்கமா சொல்லுவாரு


கார்த்திக், மல்லிகை கணேஷையும் சேர்க்கலாம்ன்னு பார்த்தேன். அப்புறம் அவரது”நண்பரும்” சேர்க்க வேண்டி வருமென்பதால் விட்டு விட்டேன். ஏன்னா அவரு நமமாளு ஆச்செ

நன்றி வெண்ணிற இரவுகள்

ஆதிமூலகிருஷ்ணன் on November 3, 2009 at 5:26 PM said...

கணேஷைப்பற்றி பேசவே பயம்மா இருக்குது. என்ன பண்ண.. யாராவது சைலண்ட்டா வாட்ச் பண்ணிக்கிட்டிருந்தா என்னவாகும் கதை..? அவ்வ்வ்வ்வ்.

மற்றது பச்சிலை மற்றும் நோ'ன்னு தெரியுது. ஆனா நிஜத்துலதான் யார்னுதான் தெரியலை..

ரைட்டு விடு.!

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] on November 3, 2009 at 6:35 PM said...

-:)

தமிழ்ப்பறவை on November 3, 2009 at 7:12 PM said...

சகா சத்தியமா புரியலை...

அதிலை on November 3, 2009 at 7:13 PM said...

என்ன கொடுமய்யா இது?

வால்பையன் on November 3, 2009 at 7:51 PM said...

யெஸ்.புண்ணியகோடிக்கு வெளிநாட்டில் ஒரு ப்ளாட் இருக்கு! அங்கெல்லாம் தமிழில் பேசவே மாட்டாங்க!

கணே இல்ல இல்ல வசந்த் யாருன்னு லேச தெரிஞ்சிட்டதால சூட்ட தணிக்கை கொஞ்சம் ரெஸ்ட்டில் இருப்பதாக தெரிகிறது! மீண்டும் வேற பெயரில் கூட வரலாம்!

சித்த வைத்தியர் யாருன்னு தெரியல!

அறிவிலி on November 3, 2009 at 8:04 PM said...

ஹா.. ஹா.. ஹா... எங்க குப்பை போடறவ்ங்க யாரையும் காணோம்.

டம்பி மேவீ on November 3, 2009 at 8:21 PM said...

"தாரணி பிரியா said...
enna kodumai karki ithu intha pathivukku innum punniyakodi varalai"


:))

கடைக்குட்டி on November 4, 2009 at 12:38 AM said...

பூந்து கலாசுறியே தல.. :-)

கார்க்கி on November 4, 2009 at 9:03 AM said...

ஆ.மூ.கி, சகா துணிந்தவன் நடப்பான் கடலிலே.. நெஞ்சிலில்லை பயம் பயம்.. நேரம் வந்தாம் ஜெயம்.. ஆவ்வ்வ். டிவில ஆதவன் பாட்டுங்க

நன்றி ஞானப்பித்தன்

நன்றி பறவை. இப்போ விளங்கியிருக்குமே

அதிலை. அதானே!!

வால், என்ன இது புதுசா இருக்கே!!

அறிவிலி, நல்லா இருங்க பாஸ்


மேவீ, ஹிஹிஹி

கடைக்குட்டி., தொடர்ப்திவுக்கு கோத்துவிட்டிருக்கேன் பாஸ்

பச்சிலை புடுங்கி on November 5, 2009 at 8:22 AM said...

அடடே கொஞ்ச நாள் லீவ்ல இருந்தா நம்மளை பத்தி பதிவு போட்டிருக்காப்ல தெரியுது.............................
என்னய்யா நாங்கெல்லாம் வரணும்னு நோட்டீஸ் போர்டுல போடுவாராம் ஆனா பின்னூட்டம் போட்டா அதையெல்லாம் டெலிட் பண்ணிடுவாரம்........................... பெரிய தில்லாலங்கடியா இருப்பீரு போலருக்கே..................... தைரியம் இருந்தா டெலிட் பண்ணாம இருக்க வேண்டியது தானே.......................

//இருந்தாலும் ஒரு சித்த வைத்தியன் இருக்கான். அவன் தொல்லை பெருந்தொல்லை. பாம்புன்னா குச்சிய வச்சு அடிக்கலாம். அட கையால கூட சுத்த சுத்தி தரையில் அடிச்சிடலாம். இது கரப்பான்பூச்சியா இருக்கா. ஒன்னும் பண்ண முடியல.///

சரி விடுங்க இது உங்களோட இம்ப்ரஸ்ஸன் அதை ஒன்னும் சொல்லமுடியாது.................... இதுமாதிரி நானும் உங்களை பத்தி நெறைய வெச்சிருக்கேன் :) ................

//குழந்தைங்க எல்லாம் விளையாடற இடத்துல போய், சச்சின் எப்படி கவர் டிரைவ் ஆடுவாரு தெரியுமான்னு கிளாஸ் எடுக்கிறான். அதுங்க அங்கிள் நாங்க ஆடறது பேஸ் (base) பால்ன்னு சொன்னா, ஆமாம் எவ்ளோ வேகமா(Pace) போட்டாலும் சச்சின் ஆடுவாரு. நீ ஆட முடியலன்னா வீட்டுக்கு போன்னு சொல்றான்.
அட ராமா. அந்த அளவுக்கு ஞான சூன்யமா?
அவ சூன்யம் எல்லாம் இல்லை ஓய். நெகட்டிவ்ல போறான். அவன் டீட்டெயில் எல்லாம் பார்த்தா அவனுக்கு இந்த அப்பார்ட்மெண்ட்டுல பல வீடுங்க இருக்கு. எல்லாம் பினாமி பேர்ல வச்சிருக்கிறான். //

என்ன சொல்றீங்கன்னு சத்தியமா புரில..................... ஆனா ஒன்னு தெரியுது வலையுலகில "ஷெர்லாக் ஹோம்ஸ்" நொந்தழல் கவி, "ஜேம்ஸ் பாண்டு" பால் வையன் அவங்களுக்கு அடுத்து நீங்கதான் துப்பறியும் புலின்னு தெரியுது..................... அதாவது போட்டி தட்டுற பையனுக்கு இவ்ளோ அறிவான்னு எனக்கு பொறாமையா இருக்கு பாஸ்..................

 

all rights reserved to www.karkibava.com