Nov 2, 2009

பப்லு ஒன்.டூ..த்ரீ...


     நல்லதொரு ஞாயிற்றுக்கிழமை அது. நானும், பப்லுவும்,அம்மாவும் வேளச்சேரியில் இருந்த திருவல்லிக்கேணி ரத்னா கபேவுக்கு விஜயம் செய்தோம். வழக்கம் போல் பேப்பர் ரோஸ்ட் என்றான் பப்லு. சர்வர் ஜோக்கடிப்பதாக நினைத்து ஹிந்துவா, டெக்கான் கிரானிக்க‌ளா என்று கேட்டுவிட்டு அவரே சிரித்துக் கொன்டார். யோசித்த பப்லு தினமலர் என்றான். ஏண்டா என்பது போல் நான் பார்க்க, "அதுதானே சண்டேன்னா ரெண்டு" என்றவனை சர்வர் ஒரு மாதிரித்தான் பார்த்தார்.

*******************************

கொஞ்சம் அல்ல, நல்லாவே வளர்ந்து விட்டான் பப்லு. சென்ற முறையே அவனால் நான் வாங்கிய பல்பு உங்களுக்கு தெரியும்தானே? இந்த முறை ட்யூப்லைட்டயே எரியவிட்டான். விஷயம் இதுதான். சைக்கிள் ஓட்டி எதிர்விட்டு காரில் கீறல் போட்ட பப்லு, நான் ஹைதையில் இருந்த நாட்களில் அவன் அப்பாவிடம் ஸ்கூட்டியே ஓட்டக் கத்துக் கொண்டானாம். தினமும் இரவில் இருவரும் ஒரு ரவுண்ட் ஓட்டி வந்துவிட்டே தூங்குகிறான். அவன் அப்பாவிடம் அடங்கி இருப்பான். என்னிடம் ம்ம்ம்ம்.. அதேதான். எதுக்குடா வம்பு என்று "உன் கூடலாம் நான் வரமாட்டேம்ப்பா" என்று சொன்னேன். சற்றும் யோசிக்காமல் " நான் ஓட்டுனா நீ வரமாட்ட. சிந்து ஓட்டினா பின்னாடி உட்கார்ந்துட்டு வருவ.போடா போடா" என்றான். சிந்து யாரென்ற விசாரனையெல்லாம் இப்போது வேண்டாமே. இந்த சம்பவம் நடந்தது இரண்டு வருடம் முன்பு. அவனது ஞாபக சக்தியை மெச்சிக் கொண்டு, அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை மறந்து விடுவோம். சரியா?

********************************   பப்லுவின் பள்ளியின் ஃபேன்சி டிரஸ் போட்டி வைத்தார்கள். வருடந்தோறும் அக்கா அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் ஸ்பைடர்மேன், பேட்மேன் என்று ஏதாவது வாங்கிவந்து போட்டு அனுப்புவது வழக்கம்.நானும் இல்லை. அம்மாவால் தனியாக எங்கும் சென்று வாங்க முடியாமல் போனது. இந்த தீபாவளிக்கு நான் வாங்கித் தந்த கருப்பு நிற சட்டையில் படு ஸ்மார்ட்டாக கிளம்பினானாம் பப்லு. அம்மாவுக்கு மட்டும் போட்டிக்காக எதுவும் செய்யமுடியவில்லையே. சூப்பர்மேன் இந்த முறை காமன்மேனாக செல்கிறானே என்று ஒரு மாதிரியாக இருந்ததாம். கவலைப்படாத பாட்டி என்று என்னுடைய பிளேசரை எடுத்து மேலே போட்டுக் கொன்டு ஒரு மாஸ்க்கையும் மாட்டிக் கொண்டானாம். பாட்டியும் சிரித்தபடி வாழ்த்தியனுப்ப, என்ன உடை என்றே தெரியாமல் இரண்டாம் பரிசைத் தட்டி வந்திருக்கிறான். முதல் பரிசா? அவன் நம்மாளுங்க. ப்ரீத்திக்கு விட்டுக் கொடுத்து விட்டானாம்.


24 கருத்துக்குத்து:

பச்சிலை புடுங்கி on November 2, 2009 at 9:34 AM said...

இது கொஞ்சம் பரவாயில்லை. நல்லா இருக்கு பதிவு. ஆனா உன் சுயபுராணத்த தவிர்த்திருக்கலாம். மீதிய நோ வந்து சொல்லுவாரு

Anbu on November 2, 2009 at 9:54 AM said...

யாருங்க இந்த பச்சிலை பிடுங்கி..

Anbu on November 2, 2009 at 9:55 AM said...

\\\\அவன் நம்மாளுங்க. ப்ரீத்திக்கு விட்டுக் கொடுத்து விட்டானாம்.\\\\

:-)))

rajan on November 2, 2009 at 10:04 AM said...

//சூப்பர்மேன் இந்த முறை காமன்மேனாக செல்கிறானே என்று ஒரு மாதிரியாக இருந்ததாம். //

இப்ப இதுதானே வெய்ட்டு

ஸ்ரீமதி on November 2, 2009 at 10:20 AM said...

:))))

மங்களூர் சிவா on November 2, 2009 at 10:28 AM said...

:))

டம்பி மேவீ on November 2, 2009 at 10:58 AM said...

"சிறப்புமிக்க நிகழ்வை மறந்து விடுவோம். சரியா?"

naan markka matten karki" ப்ரீத்திக்கு விட்டுக் கொடுத்து விட்டானாம்."

:))

டம்பி மேவீ on November 2, 2009 at 10:59 AM said...

"Anbu said...
யாருங்க இந்த பச்சிலை பிடுங்கி.."

theriyalanga

ரமேஷ் வைத்யா on November 2, 2009 at 11:34 AM said...

வழக்கம்போல் கல கல.
யார் இந்தப் பச்சிலை புடுங்கி

Anonymous said...

பப்லுவை வைத்து சிந்து கொசுவர்த்தியா? நடத்துங்க..:)

Achilles/அக்கிலீஸ் on November 2, 2009 at 12:10 PM said...

சூப்பர்.. :))

சுசி on November 2, 2009 at 12:53 PM said...

நீங்க சந்துல 'சிந்து' பாடுரத்துக்கு எதுக்கு பப்லுவ இழுக்குறீங்க கார்க்கி.
சரி இப்போ விசாரிக்கல. அடுத்த பதிவுல சொல்லுங்க சிந்து யாருன்னு. சரியா?

பப்லு சூப்பர். அவர் எங்கேயோ போய்ட்டார். மொக்கையில.

பிளேசர் ஐடியா சூப்பர்... பப்லு அம்மா (அ) அப்பா மாதிரி புத்திசாலி...

// அவன் அப்பாவிடம் அடங்கி இருப்பான். //
நல்லவங்க கூட நல்ல பிள்ளையாக பப்லு.

//என்னிடம் ம்ம்ம்ம்.. அதேதான். //
மொக்கைசாமி கூட???

RaGhaV on November 2, 2009 at 2:38 PM said...

:-)))

பின்னோக்கி on November 2, 2009 at 3:43 PM said...

தைரியமிருந்தா சிந்துவ பத்தி தனி பதிவு எழுதவேண்டியதுதானே பாவம் பப்லு மேல குறை சொல்றீங்களே.

சண்டேன்னா ரெண்டு..சூப்பர்...

நேசன்..., on November 2, 2009 at 4:31 PM said...

பாஸ்!....நீங்க பேசாம கவிதையே எழுதீருங்க!.....அது எவ்வளவோ பரவால்ல!....

ஆதிமூலகிருஷ்ணன் on November 2, 2009 at 4:44 PM said...

நல்லாருந்துதுப்பா.. (நிஜம் நம்புங்க..)

அத்திரி on November 2, 2009 at 7:19 PM said...

பப்லுவைவிட உன்னோட சுய புராணம் கொஞ்சம் அதிகமா இருக்கே

அறிவிலி on November 2, 2009 at 7:34 PM said...

யார் இந்த ப.பு

ப்ரியமானவள் on November 2, 2009 at 7:37 PM said...

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

Karthik on November 2, 2009 at 8:13 PM said...

முதல் மேட்டர் கலக்கல்.. :)

கார்க்கி on November 2, 2009 at 8:43 PM said...

அனைவருக்கும் நன்றி. சில நாட்கள் வழக்கம் போல் அடிக்கடி வலைப்பக்கம் வர முடியாது. பரிசல் போல் லாங் லீவெடுக்காமல் பதிவு மட்டுமாவது போடுகிறேன்.

Truth on November 2, 2009 at 9:38 PM said...

பப்ளூவைப் பார்த்தால் 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் வரும் தனுஷின் தம்பி போல் இருக்கிறான்.

அவனுக்கு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணி கொடுத்துவிடுவது நல்லது!. :-)

தமிழ்ப்பறவை on November 3, 2009 at 7:22 PM said...

முதல் மேட்டர் நச்...
சந்துல ‘சிந்து’ பாடின மேட்டர் எப்போ வரும்....?

Anonymous said...

:) அந்த சர்வருக்கு வேண்டியதுதான்

 

all rights reserved to www.karkibava.com