Oct 29, 2009

பாடல் வந்தும் படத்தக் காணோம்


 

   சிலப் படங்கள் பூஜை போடும் அன்றே எதிர்பார்ப்பை கிளப்பிவிடும். சிலப்படங்கள் பாடல்கள் வெளிவந்து சூடேற்றிவிடும். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல், முதலில் பாடல்கள்தான் வெளிவரும். ஆனால் சில சமயங்களில் யானை வராமலே ஓசை மட்டும் வந்துக் கொண்டேயிருக்கும் நம் கோடம்பாக்கத்தில். இன்றைய தேதியில் இப்படி பலப் படங்கள் இருக்கின்றன. அதில் டாப் 5 எவையென பார்ப்போம்.

ஐந்தாவது இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாத எங்கள் ஆசான். கேப்டன் நடித்த இந்தப்படம் ஃபினான்ஸ் பிரச்சினையில் முடங்கிவிட்டது. வெளிவரும் அறிகுறி தெரியவில்லை.

4) நந்தலாலா. இயக்குனர் –மிஷ்கின்,இசை – இளையராஜா

200px-Nandalala     மிஷ்கினே கதையின் நாயகனாகவும் நடித்தப் படம். முதலில் ரவிகிருஷ்ணாவைத்தான் ஹீரோவாக்கினார்கள். பின் ஏனோ மிஷ்கினே நடித்தார். பாடல்கள் வெளியான போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக குறவர் ஒருவர் பாடிய பாடல். அதுமட்டுமில்லாமல் ஜேசுதாஸின் குரலில் ஒன்னுக்கொன்னு துணையிருக்கும், கார்த்திக்ராஜா மகனின் கு்ரலில் ஒரு வாண்டு கூட்டம் என்ற பாடலும் நம்மை 80களுக்கே கொண்டு செல்லும். பாடல்கள் வெளிவந்து பல மாதம் ஆகியும் படம் வருவதாய் தெரியவில்லை. Kikujiro என்ற ஜப்பானிய படம் ஒன்றின் தழுவல் என்கிறார்கள். சேரனின் பொக்கிஷமும் அப்படிப்பட்ட தழுவல்தானாம்.அந்தப் படம் பப்படம் ஆனபோது அதிகம் அதிர்ந்தவர் சேரனல்ல, மிஷ்கின் என்றது தமிழ்சினிமா.காம். இது ஒரு ஐங்கரன் தயாரிப்பு

3) அங்காடித் தெரு, இயக்குனர் – வசந்தபாலன், இசை- ஜி.வி.பிரகாஷ்& விஜய் ஆண்டனி

Angadi-Theru-Stills-6     வெயில் வெற்றியை அடுத்து வசந்தபாலனின் அடுத்த முயற்சிதான் அங்காடித் தெரு. கல்லூரி பட நாயகன் அகில் போல் இருக்கும் மகேஷ் என்ற புதுமுகமும், கற்றது தமிழ் அஞ்சலியும் ஜோடி. உருகுதே மருகுதே போன்று சில மெலடிகள் கிடைக்கக் கூடுமென்று எதிர்பார்ப்பை கூட்டியது இயக்குனர்& இசையமைப்பாளர் கூட்டணி. ”அவள் அப்படி ஒன்றும் அழகல்ல” என்ற பாடல் மட்டும் விஜய் ஆண்டனியின் கைவண்ணம். பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்றாலும் இந்த தெருவிற்கு கிரகப்பிரவேசம் எப்போது என்பது தெரியவில்லை. இதுவும் ஐங்கரன் தயாரிப்புதான்

2) வேட்டைக்காரன், இயக்குனர் – பாபுசிவன், இசை – விஜய் ஆண்டனி

vettai

  செப்டம்பர் மாதம் 23ம் தேதி பாடல்கள் வெளிவந்த போது, படம் தீபாவளிக்கு என்றார்கள். பின் சன் பிக்சர்ஸிடம் கைமாறியதும் படம் தள்ளிப் போனது. பின் நவம்பர் 7ம் தேதி என்றார்கள். இதுவரை டிரெயிலர் வரவில்லை. கிறிஸ்துமஸ் என்றும், இல்லை அசலோடு மோத பொங்கலுக்குத்தான் என்றும் சொல்கிறார்கள். எப்படியும் வந்துவிடும் என்றாலும் இப்போதைக்கு ரிலீஸ் தேதி தெரியவில்லை. கரிகாலன் பாடல் எஃப்.எம்களிலும், புலி உறுமுது பாடல் குழந்தைகள் மத்தியிலும் பிரபலாமகியிருக்கின்றன.

1) ஆயிரத்தில் ஒருவன், இயக்குனர் – செல்வராகவன், இசை – ஜி.வி.பிரகாஷ்

aayirathil-oruvan-movie-photos-23-550x321     ஒவ்வொரு படத்துக்கும் இரண்டு வருடங்கள் ஆனால் என்னதான் செய்வார் கார்த்தி? பருத்திவீரனை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது ஆயிரத்தில் ஒருவன். பாடல்கள் வெளிவந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தாய் தின்ற மண்ணே என்ற பாடல் பலத்த அதிர்வையும், எதிர்பார்ப்பையும் ஏற்றிவிட்டது. மாலை நேரம் சில வாரங்கள் எஃப்.எம்களில் தேசிய கீதமாக இருந்து இப்போது மறக்கப்பட்டு விட்டது. எப்போது வந்தாலும் ரெக்கார்ட் ஒப்பனிங் மட்டும் நிச்சயம். படம் எப்போது எனத் தெரியாமல் செல்வா அடுத்த பட டிஸ்கஷனுக்கு வெளிநாடு சென்றிருக்கிறாம்.

37 கருத்துக்குத்து:

வந்தியத்தேவன் on October 29, 2009 at 10:26 AM said...

சகா கேடி குஞ்சுமோனின் மகன் எமி நடிக்க கோடிஸ்வரன் என்ற படத்தின் பாடல்கள் 10 வருடங்களுக்கு முன்னர் வெளியானது இன்னமும் படம் வரவேயில்லை. ஆகோஷ் என 3 பேர்கள் இசையமைத்தார்கள்.

UNGALODU NAAN on October 29, 2009 at 10:28 AM said...

இன்னைக்கு காலைல இதபத்தி நானும் யோசிச்சேன் ஆனா நீங்க பதிவே போட்டுடிங்க எங்க ஊர்ல எங்கள் ஆசான் ரிலீஸ் ஆயிடுச்சே

UNGALODU NAAN on October 29, 2009 at 10:30 AM said...

அதே மாதிரி ஸ்ரீகாந்த் நடிச்ச சதுரங்கம் பாட்டு எல்லாம் நல்லா இருந்தும் படம் ரிலீஸ் ஆகவில்லை

நர்சிம் on October 29, 2009 at 10:32 AM said...

மற்ற படங்களைப் பற்றி கவலை இல்லை.எங்கள் ஆசான் எப்பொழுது வருகிறது எனத் தகவல் தெரிந்தால் பதிவோ செய்தியோ உடனே பகிரவும்.

Anonymous said...

தாய் தின்ற மண்ணே பாட்டு நேத்தும் இன்னைக்கும் கேட்டேன். சூப்பர் வரிகள். சூப்பர் மெட்டு. படம் எப்ப வரும்னு எதிர்பாத்துகிட்டு இருக்கேன்.

அங்காடித்தெருவில நடிச்சது பாத்தா கொஞ்சம் பரத் மாதிரி இருக்குன்னு நினைச்சேன். கல்லூரி நடிச்சவரா!!!!

ஸ்ரீமதி on October 29, 2009 at 10:51 AM said...

//இந்த தெருவிற்கு கிரகப்பிரவேசம் எப்போது என்பது தெரியவில்லை.//

தெருவுக்கே கிரகப்பிரவேசம் செய்வாங்களா? எந்த ஊர்ல?? ;))

//நர்சிம் said...
மற்ற படங்களைப் பற்றி கவலை இல்லை.எங்கள் ஆசான் எப்பொழுது வருகிறது எனத் தகவல் தெரிந்தால் பதிவோ செய்தியோ உடனே பகிரவும்.//

இது சூப்பர்... :))

Anbu on October 29, 2009 at 10:51 AM said...

எங்கள் ஆசான் ரிலீஸ் ஆகிவிட்டது என நினைக்கிறேன் அண்ணா..

ஸ்ரீமதி on October 29, 2009 at 10:53 AM said...

//செம்பருத்தி பூவே! செம்பருத்தி பூவே!
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா//

இந்த பாடல் இடம்பெற்ற படம் கூட வரல.. என்ன படம்??

Anonymous said...

எங்கள் ஆசான் ரிலீஸ் ஆயிடுச்சோ - கொஞ்ச நாள் முன்னாடி டிவிடி இங்க கடைகள்ல பாத்த ஞாபகம்.

டம்பி மேவீ on October 29, 2009 at 11:13 AM said...

"நர்சிம் said...
மற்ற படங்களைப் பற்றி கவலை இல்லை.எங்கள் ஆசான் எப்பொழுது வருகிறது எனத் தகவல் தெரிந்தால் பதிவோ செய்தியோ உடனே பகிரவும்."


அந்த படம் தாம்பரம் MR ல ரிலீஸ் ஆகி இரண்டு நாள் ஓடுச்சு....

டம்பி மேவீ on October 29, 2009 at 11:14 AM said...

எங்கள் ஆசான் ரிலீஸ் ஆகி மூன்று மாசத்துக்கு மேல் ஆச்சு

கார்க்கி on October 29, 2009 at 11:49 AM said...

@வந்தியதேவன்,ஆமாம் சகா.1998ல் வந்தது. இன்னமும் சில பாடல்கள் அடிக்கடி கேட்பேன். அந்த மாதிரி நிறைய படம் இருக்கு.

@உங்களோடு நான், ரிலீஸ்ன்னு எல்லா ஊரிலும் தியேட்டரில் பேனர் கட்டினாங்க. ஆனா போடி வரல. படம் இன்னும் ரிலீஸ் ஆகல்.

@நர்சிம், ரைட்டு

அம்மிணி, அது அகில்தான்.தாய் தின்ற மண்ணே. சீக்கிரம் வரணும்..

@ஸ்ரீமதி, எங்க ஊருல, அதான் சென்னைல, மேம்பாலத்துக்கு பண்றாங்களே!!

@அன்பு, இல்லை அன்பு.கடைசி நேரத்தில் பொட்டி வந்திருக்காது

@மேவீ, எனக்கு தெரிஞ்சு கடைசி நேரத்தில் பொட்டி வரல.இருந்தாலும் எப்படி உறுதிபடுத்த?

மகேந்திரன் எட்டப்பராசன் on October 29, 2009 at 12:00 PM said...

செம்பருத்தி பூவே பாடல் புன்னகைப்பூவே என்று பெயர் மட்டுமே இடப்பட்ட படத்துக்கான பாடல்.ராம்கி நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது.அதே பெயரில் வேறு படம் ஒன்று வந்தது பின்னாளில்

ஜெட்லி on October 29, 2009 at 12:33 PM said...

ஒரு வேளை டம்பி மேவீ எங்கள் ஆசான் படத்துக்கு போய் இருப்பாரோ?? இல்லை கரெக்ட்ஆ சொல்றாரே அதனால தான்
டவுட்.....

ஜெட்லி on October 29, 2009 at 12:34 PM said...

நந்தலாலா அப்போ நொந்தலாலாவா???

மண்குதிரை on October 29, 2009 at 1:10 PM said...

angkatith theru hero ahil illai

puthu mukam nanba

enakkum kuzhappam irunthuchchu

karu pazganiyappanoda oru padam sathurangkam nu ninaikken athu velivaraamale poochchu

nalla pakirvu

விக்னேஷ்வரி on October 29, 2009 at 2:05 PM said...

கேப்டன் படத்தையெல்லாம் கணக்கு வெச்சுக்குறீங்களா...

நானும் 'அங்காடித் தெரு'க்கு வெய்டிங்.

ஆயிரத்தில் ஒருவன் - படம் வந்தா சொல்லுங்க. இதுக்காகவே தமிழ்நாடு வரலாம்.

நர்சிம் on October 29, 2009 at 2:33 PM said...

//சின்ன அம்மிணி said...
எங்கள் ஆசான் ரிலீஸ் ஆயிடுச்சோ - கொஞ்ச நாள் முன்னாடி டிவிடி இங்க கடைகள்ல பாத்த ஞாபகம்.
//

வாங்கி கொரியர் பண்ணிவிட்டீங்கன்னா ஏழோசொச்சம் ஜென்மத்துக்கும் கடன் பட்டவன் ஆவேன் உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

டம்பி மேவீ on October 29, 2009 at 2:45 PM said...

எங்கள் ஆசான் படம் ஆன்லைன் ல பார்க்கலாம்.....தமிழ் டியுப் ன்னு தளத்தில் பார்க்கலாம். பார்த்த பிறகு வரும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல

டம்பி மேவீ on October 29, 2009 at 2:47 PM said...

@ ஜெட்லி : எங்கள் ஆசான் TO சார்< WITH LOVE என்ற கதையின் தழுவல் என்று சொன்னாங்க... அதன் போய் தூங்கிட்டு வந்தேன்

கார்ல்ஸ்பெர்க் on October 29, 2009 at 3:35 PM said...

அண்ணா, 'எங்கள் ஆசான்' எப்பவோ வந்துடுச்சு.. நானே ரெண்டு தடவ வேற வழி இல்லாம பார்த்தேன்( ஆன்லைன்'ல தான்).. பெரிய மொக்கை.. தயவு செஞ்சு இதப் பார்க்கணும்னு மட்டும் நினைக்கவே நினைக்காதீங்க..

பின்னோக்கி on October 29, 2009 at 3:43 PM said...

ஆமாங்க இந்த படம் எல்லாம் எதிர்பார்ப்பை கிளப்புகின்றன. நந்தலால தவிர மற்ற படங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

அன்புடன் அருணா on October 29, 2009 at 3:59 PM said...

எதைப்பற்றியெல்லாம் டென்ஷன் ஆகவேண்டியிருக்கு கார்க்கி!!!!

RaGhaV on October 29, 2009 at 4:06 PM said...

அது சரி, உங்க படத்தோட பாடல் வெளியீடு எப்போ..? ;-)

susi on October 29, 2009 at 5:05 PM said...

உங்க லிஸ்ட்ல வேட்டைக்காரனையும் விட டாப்ல ஆயிரத்தில் ஒருவன் ஏன் இருக்குன்னு எனக்கு தெரியுமே:)))))

Karthik on October 29, 2009 at 5:57 PM said...

ஆயிரத்தில் ஒருவனை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. :)

கார்க்கி on October 29, 2009 at 6:00 PM said...

@மகேந்திரன்,

நல்ல பாடல் அது. தகவலுக்கு நன்றி

@ஜெட்லீ,
தெரியலப்பா. ஆனா வருவது கஷ்டம்தான்

@மண்குதிரை,
மாத்திட்டேன் சகா. தகவலுக்கு நன்றி

@விக்கி,
தப்பாதான் சொல்லியிருக்கேன் கேப்டனை பத்தி. ஆயிரத்தில் ஒருவன். நல்லா இருக்கும். இருக்கனும்

@நர்சிம்,
ஏழோசொச்சம் என்பதில் எனி உள்குத்து பாஸ்?

@கார்ல்ஸ்பெக்,
அதுக்கு ஏம்பா ரெண்டு தடவ பார்த்த/

@பின்னோக்கி,
ஆமாம். ஆ.ஒ, வேட்டைக்காரனும் வந்துவிடும்

@டீச்சர்,
டென்ஷன் எல்லாம் இல்ல டீச்சர். ஒரு ஆர்வம்தான்

@ராகவ்,
கிகிகி. எவ்ளோ வெள்ளந்தியா இருக்கிங்க சகா? :))

@சுசி,

ஆச்சரியம்தான். ஏன்னா எனக்கே தெரியாதி

Achilles/அக்கிலீஸ் on October 29, 2009 at 6:10 PM said...

யுவன் இசையமைச்சு, காதல் சாம்ராஜ்யம்னு ஒரு பட பாட்டு நான் காலேஜ் படிக்கும்போது வந்துச்சு. படம் இன்னமும் வெளி வரல...

:)

Cable Sankar on October 29, 2009 at 6:46 PM said...

/எங்கள் ஆசான். கேப்டன் நடித்த இந்தப்படம் ஃபினான்ஸ் பிரச்சினையில் முடங்கிவிட்டது. வெளிவரும் அறிகுறி தெரியவில்லை.
//

எங்கள் ஆசான் சென்னை தவிர மற்ற இடஙக்ளில் ரிலீஸாகி தியேட்டர் கொளளாத கும்பல் வந்து தூக்கிவிட்டதால்.. செனனையில் யாரும் ரிலீஸ் செய்யவில்லை

வேட்டைகாரன் அடுத்த் மாசம் அல்லது டிசம்பர்

ஆயிரத்தில் ஒருவன்.. ஆயிரத்தில் ஒரு டிஸ்ரிபுயூட்டர் 35 கோடியிருந்தால்தான் ரிலீஸ் செய்ய முடியும்..

மிஷ்கின் படம் அங்காடி தெருவுக்கு பிறகு.. அநேகமா அடுத்த மாசம் அங்காடி தெரு ரிலீஸாகும் என்று தெரிகிறது.. பைனல் மிக்ஸிங் ஒர்க் நடந்து கொண்டிருக்கிறது.. பேராண்மை ஐங்கரனுக்கு ஆக்ஸிஷன் கொடுத்திருப்பதால்..

யோ வாய்ஸ் (யோகா) on October 29, 2009 at 7:00 PM said...

வேட்டைக்காரன் வந்திடும் சகா..

அத்திரி on October 29, 2009 at 8:45 PM said...

சரி சரி ரொம்ப டென்சன் ஆகாத வேட்டைக்காரன் டிவிடி வேணுமா

ஆதிமூலகிருஷ்ணன் on October 29, 2009 at 10:13 PM said...

கரிகாலன் பாடல் எஃப்.எம்களிலும், புலி உறுமுது பாடல் குழந்தைகள் மத்தியிலும் பிரபலாமகியிருக்கின்றன//

பாட்டு வந்திருச்சா.. சொல்லவேயில்ல..

(ஹிஹி..)

கோபிநாத் on October 30, 2009 at 12:05 AM said...

\\அதுமட்டுமில்லாமல் ராஜாவின் குரலில் ஒன்னுக்கொன்னு துணையிருக்கும்,\\

சகா அது ஜேசுதாஸ் பாடுவர்.

எங்கள் ஆசானை தவிர மீதி எல்லாம் பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.

செல்வேந்திரன் on October 30, 2009 at 9:26 AM said...

எங்கள் ஆசானை - குறைத்து மதிப்பிட வேண்டாம். உயிர்மையின் வருகிற இதழ்களில் சாரு நிச்சயம் 'எங்கள் ஆசானுக்கு' விமர்சனம் எழுதுவார்...

கார்க்கி on October 30, 2009 at 10:44 AM said...

அக்கில்லீஸ், கோபால் ராவ் பாடிய “இரு கண்கல் சொல்லும் காதல் செய்தி”. அகத்தியன் இயக்கிய படம் சகா

நன்றி கேபிள். அப்போ பொங்கலுக்கு முன்பே வேட்டைக்காரன் வருமா?

யோகா, வந்தா சூப்பர்தான் சகா

அத்திரி, ரெண்டு பார்சல்

ஆ.மூ.கி, தளபதி ரிலீஸ் ஆயிடுச்சு பார்த்திங்களா?

கோபிநாத், மாத்திட்டேன் சகா. அவசரத்தில் எழுதிய பதிவு :))

செல்வா, காத்திருக்கிறேன் சகா

Karthik on October 30, 2009 at 4:23 PM said...
This comment has been removed by the author.
வெண்பூ on November 1, 2009 at 3:00 PM said...

பதிவை விட பின்னூட்டங்கள் டாப்... அதிலயும் நர்சிம் ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு..

இப்பதான் சேனல் மாத்துறப்ப டிவியில வாஞ்சிநாதன் படம் ஓடிட்டு இருந்தது.. சன் கிளாஸோட பாக்குறப்ப விஜயகாந்த் அப்படியே நம்ம நர்சிம் சாயல்ல இருக்குற மாதிரி இல்ல??? சரி.. ரெண்டு பேருமே மதுரக்காரங்கதானு.. ஹி..ஹி..

 

all rights reserved to www.karkibava.com