Oct 28, 2009

குத்துப்பாட்டு உருவாவது எப்படி


 

    Sky jump will you come என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தம்பு, படத்தில் குத்துப் பாடலே இல்லை என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இயக்குனருடன் மனக்கசப்பில் இருக்கிறார். ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்து ஒரு குத்துப் பாடலுக்கு பர்மிஷன் வாங்கி தனது குத்துப்படையுடன் டிஸ்கஷன் நடத்துகிறார். இசையமைப்பாளர் சிவனும், பாடலாசிரியர் பூவரசுவும், கிரியேட்டிவ் ஹெட் காஃபி.அஞ்சும் வந்துவிட வேகமாக விரலால், மன்னிக்க, காலால் நடந்து வருகிறார் தம்பு

சிவன்: சிச்சுவேஷன் சொல்லுங்க. போட்டுடலாம்.

பூவரசு: தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க. ஹீரோ வில்லன்களையெல்லாம் ஒன்னா தீர்த்துக் கட்டப் போறாரு. அதான் க்ளைமேக்ஸ். அதுக்கு முன்னாடி தன் காதலிய பார்க்கறாரு.அப்ப ஒரு பாட்டு. கடைசி நேரங்கறதால நல்லா ஸ்பீடா இருக்கனும்.

காபி.அஞ்சு: (எகிறுகிறார்)

யோவ் நான் தான் கிரியேட்டிவ் ஹெட்டு

பாட்டு எழுத மட்டும்தான் உனக்கு துட்டு

நான் போட்ட‌ எல்லாப் பாட்டும் ஹிட்டு

இந்த‌ பாட்டுல‌ போட‌றோம் எட்டு செட்டு

(வேறு வழியின்றி வாய் மூடி அமர்கிறார் பூவரசு)

தம்பு: உலகத்திலே சின்ன வயசுல டைரக்டர் ஆனவன் நான் தான். நான் சொல்றேன் சிச்சுவேஷன். கதைப்படி ஹீரோயின நான் பிரிஞ்சிடறேன். அந்த சோகத்துல தண்ணியடிச்சிட்டு பாடறேன். குத்துப்பாட்டாவும் இருக்கனும். காதலின் வலியும் இருக்கனும்.

சிவன்: oops. இப்ப யாருக்கு நான் ட்யூன் போடனும்? தம்பு நீங்க சொன்ன மாதிரியே போடலாம். லிரிக் ரைட்டர் லீடு கொடுத்தா நல்லாயிருக்கும்

பூவரசு: இதோ ஒரு நிமிஷம் சார். (யோசிக்கிறார்)

கா.அ. : சொன்னவுடனே வரணும் பாட்டு

அதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு

இதாப்பா சிவன் புடிச்சுக்கோ..

டண் டணக்கா நீயும் அடிச்சுக்கோ

அட மயிலாப்பூர் ஃபிகரே உனக்கில்லை நிகரே

சிங்கமென வாழ்ந்தவன் நானே

என்னை அசிங்கமாக ஆக்கிட்டு போனே

தம்பு : மனதுக்குள்(இந்த பொன்னான மனசே ட்யூன விடவே மாட்டாரா?)

பூவரசு: வந்துடுச்சு சார். (எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க, ஆரம்பிக்கிறார்)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

சிவன்: வாவ். சூப்பர்ப் ஃபீலிங். என்ன தம்பு. மெட்டும் தானா வருது.(மூக்கால் பாடிக் காட்டுகிறார்)

தம்பு: யா. எக்ஸலண்ட். அடுத்த வரி என்ன சார்?

பூவரசு: (டஸ் புஸ் சத்தம் இல்லாம, வாயசைவதே தெரியாமல் பாடுகிறார்)

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

தம்பு: அப்படியே பல்லவியோட லாஸ்ட் லைன் சும்மா கும்முனு சொல்லுங்க. வார்த்தைகள் பவர்புல்லா, தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கனும்

பூவரசு: சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் புர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

சிவன்: (சிலிர்த்துக் கொண்டு பாடிக் காட்டுகிறார் பல்லவியை.)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம  நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(கையாலும் வாயாலும் டண்டணக்க தாளம் போடுகிறார் கா.அ. வலிப்பு வந்ததைப் போல ஆடுகிறார் தம்பு)

பூவரசு: அப்படியே சரணமும் சொல்றேன் கேளுங்க

பிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க என்ன

நெஞ்சுக்குள்ள வச்சுப்புட்டேன் உன்ன

மஞ்சுன்னு உன் பேர நீ சொன்ன

ம்ம்.. கடைசி வரில வைக்கிறோம் சார் ல்வ் ஃபீலிங்க

நஞ்ச வச்சு இப்ப நீயே ஏன் கொன்ன.எப்படி சார்?

தம்பு: பின்றீங்க பாஸ். அப்படியே நம்ம மாஸ் காட்டலாமா?

பூவரசு: அது இல்லாமலா?

என் பின்னால ஒரு கோடி பேரு

தமிழ்நாட்டில் எல்லாமே என் ஊரு

உன் கையால சாப்பிடனும் சோறு

என்னை வெல்ல உனையன்றி யாரு?

ரெண்டு மனசுக்குள்ள நடக்குது வாரு

இப்ப என் கையில மட்டும் பாரு பீரு

தம்பு: கொன்னுட்டிங்க சார்

பூவரசு:  பினிஷிங் கேளுங்க

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(ஏரியா கலகலப்பான நேரம், மோசதேவன் அங்கே வர, பாடலைப் பாடிக் காட்டுகிறார்கள். அலறியடித்துக் கொண்டு ஸ்க்ரிப்டோடு  கோர்யா வீட்டுக்கு ஓடுகிறார்.அங்கே அவர் மீசையை முறுக்கி, ”சாரி பாஸ். நான் பாலா அண்ணனுக்கே டேட்ஸ் இல்லைன்னு சொல்லிட்டேன். இப்ப என் ரூட்டே வேற” என்கிறார்)

28 கருத்துக்குத்து:

ரமேஷ் வைத்யா on October 28, 2009 at 10:12 AM said...

meeththa passttu!

Anonymous said...

//Sky jump will you come //

வி.தா.வ க்கா இப்பாடி ஒரு மொழிபெயர்ப்பு :)

ரமேஷ் வைத்யா on October 28, 2009 at 10:13 AM said...

daayyyyyyyyyyyyyyyyyyyyyy......

ஸ்ரீமதி on October 28, 2009 at 10:52 AM said...

ஹ்ம்ம் :))) சிரிச்சேன்...

சஹானா beautiful raga on October 28, 2009 at 10:57 AM said...

ரைட்டு ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????

வால்பையன் on October 28, 2009 at 11:58 AM said...

இந்த பாட்டே நல்லாத்தான் இருக்கு!

பரிசல் மியூசிக்கில், அப்துல்லா குரலில், ஜாக்கி சேகர் ஒளிப்பதிவு செய்ய கேபிள் சங்கர் டைரக்ட் செய்ய, கார்க்கி ஆட, நாமெல்லாம் பார்த்து சாவோம் சீ சீ போவோம்!

அனுஜன்யா on October 28, 2009 at 12:01 PM said...

Hilarious!

இப்ப வர பாட்டுகளை விட நீ எழுதின பாட்டு ரொம்பவே நல்லா இருக்கு கார்க்கி. யார் கண்டா! நீயே கோலிவுட்டுல ஒரு ரவுண்டு வந்தாலும் வருவ :)

அனுஜன்யா

நர்சிம் on October 28, 2009 at 12:15 PM said...

விகடன் லூசுப்பையன் ரேஞ்சு சகா..கலக்குங்க.

ஆதிமூலகிருஷ்ணன் on October 28, 2009 at 12:16 PM said...

கொலவெறி.!

விக்னேஷ்வரி on October 28, 2009 at 12:18 PM said...

ஹாஹாஹா... ரொம்ப கலக்கலா இருக்கு.

பரிசல் மியூசிக்கில், அப்துல்லா குரலில், ஜாக்கி சேகர் ஒளிப்பதிவு செய்ய கேபிள் சங்கர் டைரக்ட் செய்ய, கார்க்கி ஆட, நாமெல்லாம் பார்த்து சாவோம் சீ சீ போவோம்! //

கன்னா பின்னானு வழிமொழிகிறேன். :)

Achilles/அக்கிலீஸ் on October 28, 2009 at 12:26 PM said...

அருமை சகா..அதென்னா காஃபி.அஞ்சு என்று ரொம்ப நேரமா யோசிச்சேன்... பேரு எல்லாம் ரொம்ப சூப்பராவே வைக்கிறீங்க... தூள்.. :))

கார்க்கி on October 28, 2009 at 12:44 PM said...

வாங்க ரமேஷண்ணா.. நல்லா இருக்கிஙக்ளா?

ஹிஹிஹி.அம்மிணி அதே

அப்பாடா. ஸ்ரீமதி சிரிச்சிட்டாங்கப்பா

சஹானா, இல்ல இல்ல பிசாசு, சும்மாதான்..

வால், என்னை விட நீங்கதான் நல்லா ”ஆடுவிங்களே” :)))

அனுஜன்யா, தல ஹிஹிஹி.. உங்க வாழ்த்து பலிக்கட்டும்.

நன்றி நர்சிம்..

ஆதி, யாருக்கு? யார் மேல? எப்போ? எதுக்கு?

விக்கி, நடக்கட்டும். ம்ம்ம்

அக்கீலீஸ், கண்டுபுடிச்சிட்டிங்களா?

டம்பி மேவீ on October 28, 2009 at 12:57 PM said...

"வால்பையன் said...
இந்த பாட்டே நல்லாத்தான் இருக்கு!

பரிசல் மியூசிக்கில், அப்துல்லா குரலில், ஜாக்கி சேகர் ஒளிப்பதிவு செய்ய கேபிள் சங்கர் டைரக்ட் செய்ய, கார்க்கி ஆட, நாமெல்லாம் பார்த்து சாவோம் சீ சீ போவோம்!"

aamanga....

(sari lady lead yaaru??)

Busy on October 28, 2009 at 1:08 PM said...

Sama Kuthu !!!

sivan ?? ARR?

r.selvakkumar on October 28, 2009 at 2:15 PM said...

நல்ல நையாண்டி.

susi on October 28, 2009 at 2:19 PM said...

சென்னை வர முன்னமே இப்டீன்னா வந்ததுக்கு அப்புறம் நம்மள யாரு காப்பாத்துறது?????

உங்க வம்பு சூப்பரா இருக்கு. அசத்துங்க...

கார்க்கி on October 28, 2009 at 3:19 PM said...

மேவீ, இது solo song.. :))

பிசி, சிவன்னா யுவன் பாஸ்.. அவர்தான் சிம்பு, ச்சே வம்பு டீம்.

நன்றி செல்வா

சுசி, சென்னை வந்தா குறையும்ன்னு நினைக்கிறேன்

Karthik on October 28, 2009 at 6:41 PM said...

நான் தான் 18ஆவதா? நல்லாருக்கு. :))

பச்சிலை புடுங்கி on October 28, 2009 at 8:28 PM said...

Continued ............
கோர்யா: சாரி பாஸ் நான் ரொம்ப பிஸி .................... பாலா அண்ணனுக்கே டேட்ஸ் இல்லன்னு சொல்லிட்டேன் ......................... வேணும்னா புஜய் சும்மா தான் இருக்காரு அவருகிட்ட போங்க .......................
மோசதேவன்: தம்புவாவது ஒரு குத்து பாட்டு தான் கேப்பாரு .................. ஆனா புஜய் எல்லாமே குத்து பாட்டா வேணும்னு அடம்பிடிப்பாரு ................. அவரும் என்ன பண்ணுவார் பாவம் அவருக்கு ஒழுங்கா வர்றதே டான்ஸ் மட்டும்தான் ....................... இவங்க ரெண்டு பேரையும் வெச்சு டைரக்ட் பண்றதுக்கு பதிலா நான் பாழும் கிணத்தில குதிச்சிடலாம் .................
(மோசதேவன் கிணற்றைத் தேடி ஓடுகிறார்)

அறிவிலி on October 28, 2009 at 8:42 PM said...

:))))))))))))

நாஞ்சில் பிரதாப் on October 28, 2009 at 10:57 PM said...

தல பொய் சொல்ல விரும்பல... மொக்கையாக இருந்தது.

பச்சிலை புடுங்கி on October 29, 2009 at 12:32 AM said...

// நாஞ்சில் பிரதாப் on October 28, 2009 10:57 PM said...
தல பொய் சொல்ல விரும்பல... மொக்கையாக இருந்தது.//

அய்யய்யோ என்ன இப்படி சொல்லிட்டீங்க ............. போச்சு அவ்ளோ தான் இந்த பின்னூட்டத்தை கார்க்கி தூக்கிடுவார் .............. அவர் ஒரு பிரபல பதிவர் நீங்க எப்படி -ve comment குடுக்கலாம்? இதுவரைக்கும் அவரோட எந்த பதிவுலயாவது -ve comment பாத்திருக்கீங்களா? அப்படி வந்தாலும் அவர் allow பண்ண மாட்டாரு ..................

மங்களூர் சிவா on October 29, 2009 at 12:33 AM said...

:))))))))

தத்துபித்து on October 29, 2009 at 4:27 AM said...

////தல பொய் சொல்ல விரும்பல... மொக்கையாக இருந்தது.//

அய்யய்யோ என்ன இப்படி சொல்லிட்டீங்க ............. போச்சு அவ்ளோ தான் இந்த பின்னூட்டத்தை கார்க்கி தூக்கிடுவார் .............. அவர் ஒரு பிரபல பதிவர் நீங்க எப்படி -ve comment குடுக்கலாம்? இதுவரைக்கும் அவரோட எந்த பதிவுலயாவது -ve comment பாத்திருக்கீங்களா? அப்படி வந்தாலும் அவர் allow பண்ண மாட்டாரு ..................
??/

appadiya pachilai...
unmaiya karki? (antha comment allow panni illainu proof panniteengale..?)

கார்க்கி on October 29, 2009 at 9:30 AM said...

@பச்சிலை புடுங்கி,

கலக்கல்.இத சேர்க்காம விட்டுட்டேனே

வாங்க அறிவிலி.

@நாஞ்சில் பிரதாப்,
கருத்துக்கு நன்றி சகா. நிறைய பேரு நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. யூத்ஃபுல் விகடனில் லின்க் கொடுத்து இருக்காங்க. அவஙக்ளுக்கு புடிச்சிருக்கு. எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி போஸ்ட் எழுதுவது கஷ்டம் எல்லாம் இல்லை. முடியவே முடியாத காரியம். சீக்கிரமே உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒன்னு எழுத முயற்சி செய்றேன்.

@ புடுங்கி,
கிகிகி.. போன பதிவுக்கு கூட ரெண்டு மைனஸ் ஓட்டு. நான் ஒன்னும் ஆள் சேர்த்துட்டு காக்கா ஆய் போச்சுன்னு ஒரு பதிவு போட்டு, அதுக்கு அஞ்சு ஓட்டும் போட்டு பரிந்துரைல கொண்டு வரலையே.நாஞ்சில் மாதிரி பிடிக்கலை என்பதும் முறையா சொன்னா கேட்டுப்பேன்னு எல்லோருக்கு தெரியும். நீ புடுங்கியாட்டம் எங்கெங்க போய் என்னென்ன போடறன்னு தெரிஞ்சதால்தான் டெலீட் செஞ்சேன். நீ புது ஆள் கிடையாது. நீ யாரு, என்ன , எங்க இருக்க எல்லாம் தெரியும். உன் ஐ.பி தெரியலைன்னா சொல்லு, நான் சொல்றேன். :)))

@தத்துப்பித்து,

இவன் ஒரு பழைய ஆளுதான். சும்ம ஒரு ஐடி கிரியேட் பண்ணி சுத்திட்டு வர்றான். இவனுக்கெல்லாம் விளக்கம் சொல்லனுமா சகா? பார்த்துட்டுதானே இருக்கிங்க. இதுவரைக்கும் வேற யார் கமெண்ட்டாவது டெலீட் செஞ்சிருக்கேனா?

இவன் ஒரு சைக்கோ சகா.

அரை வேக்காடு. சேடிஸ்ட். முட்டாளு :)))

மணிகண்டன் on October 29, 2009 at 8:15 PM said...

கார்க்கி - கலக்கல்.

யோ வாய்ஸ் (யோகா) on October 30, 2009 at 9:55 AM said...

//சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்//

ஆஹா என்ன கவிதை..

sahana on October 31, 2009 at 12:19 AM said...

என் வாழ்க்கை போனது வீனா....
நீ எழுதர மச்சான் சீனா...

 

all rights reserved to www.karkibava.com