Oct 27, 2009

சென்னைக்கு மீண்டும் ஆபத்து


 

சுட்டெரிக்கும் வெயிலில் கருப்பு நிற ஷூ, சாம்பல் நிற பேண்ட், அதனுள் கவனமாக உள்ளிறங்கிய நீல நிற சட்டை, கழுத்தை நெறிக்கும் வேலை என்பதை காட்ட டை. இந்த சுமைகளோட கலைஞர் இலவசமாய் கொடுத்த சுமையாக ஹெல்மேட். நகர நெரிசல் சாலைகளில் பல்சரில் உட்புகுந்து லாவகமாக  வெளிவந்து அலுவலகம் அடையும்போதே நாலு இட்லியும் புதினா சட்னியும் செரித்துவிடுகிறது. அலுவலக வளாகத்தில் நுழையும்போதே இன்னொரு சுமையாக முகமூடியொன்றை அணிந்துக் கொள்கிறோம். “Good morning sir” “have a nice day ahead” என்று எதிருப்பவரின் முகமூடியைப் பார்த்தே வாழ்த்துகிறோம். அல்லது வாழ்த்திக் கொள்கிறோம்.

வேலையின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் கூட நம் பேச்சு இயல்பாக இருப்பதில்லை. சேத்தன் பகத்தின் 2Statesம் ,ஷகீராவின் Shewolfம் யாருக்கு தெரிகிறதோ அவர்கள் அறிவாளி ஆகிவிடுகிறார்கள். வாழ்க்கை, வாழ்வது குறித்த பிரக்ஞை இல்லாதது பற்றி யாரும் கவலைப்படுவது கூட இல்லை.  உணவு கூட நம் விருப்பப்படி அமைவது இல்லை. மூன்று மணிக்குத்தான் மீட்டிங் முடிந்தது என்றால், வெஜ்.சேண்ட்விச்.  யாராவது அன்று பிறந்து தொலைத்திருந்தால், நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பிஸ்ஸா.எதுவும் இல்லையெனில் இருக்கவே இருக்கு டப்பர்வேர்.

மாலை மீண்டும் வீடு திரும்பும்போது குறைவான டிராஃபிக்கே இருந்தது என்பதை அந்த நாளின் சிறப்பென்று பேசித் திரிகிறோம். வீட்டுக்குள் நுழையும்போதே முகமூடியை கழட்டி எறிகிறோம். திறந்துவிட்ட அணையின் நீரைப்போல் வேகமாக வெளியேறுகின்றன கால்சட்டையும், முழுசட்டையும். இத்தனை வேகமும் தொலைக்காட்சி முன்பு போய் அமரும்போது அடங்கிவிடுகிறது. பாய்ஸ் Vs கேர்ல்ஸையோ, வண்டு முருகனையோ கண்டு களித்து சிரிக்கும்போது வாழ்க்கை சுகமாய் இருப்பதாக உணர்கிறோம்.  அலறும் மொபைலில், அமெரிக்கா விசா க்ளியர் ஆனதை சொல்கிறான் நண்பன். அதைப் பாராட்ட வேண்டுமென்று நினைக்கும்போதும் ”ங்கொய்யால. கலக்கல்டா மாப்ள” என்று வாயில் வருவதில்லை. “ Thats great dude. U have done it” என்கிறோம். இப்போதே ஷேவரையோ, புரொஜெக்டரையோ, லேப்டாப்பையோ நம் நெருக்கத்திற்கேற்ப முன்பதிவு செய்து கொள்கிறோம்.

இன்னும் இன்னும் ஆயிராமாயிரம் உண்டு நகரத்தில் வாழும் நரக வாழ்க்கையில். கிராமத்தில் சென்று வாழ்வது என்பது இப்போதைக்கு என்னளவில் வாய்ப்பில்லை என்பதால், சென்னைக்கே சென்று வீட்டோடு இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த 18 மாத ஹைதை வாழ்க்கையில் பிளாக் எழுதினேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த மாற்றமும் நடந்துவிடவில்லை என் வாழ்க்கையில். சார்மினார் எக்ஸ்பிரஸும், பேரடைஸ் பிரியாணியும்தான் என்னோடு சினேகம் வளர்த்தன. ஃபோர்ஜரி பட்டம் வாங்கிய டாக்டர்தான் என் காய்ச்சலுக்கு மருந்து தந்தார். எனக்கான உறவாக, நட்பாக, எந்த ரெட்டிகாரும் கிடைக்கவில்லை . தினம் 12 மணி நேரம் கணிணியோடே போகிறது வாழ்க்கை. அதனால் துணிந்து முடிவெடுத்துவிட்டேன்.

அடுத்த மாதம் சென்னைக்கே ரிட்டர்ன். வேலை எதுவும் தேடவில்லை. வேறு சில திட்டங்கள் உண்டு. விரைவில் சொல்கிறேன்.

   இப்போதைக்கு ஃப்ளாஷ் நியூஸ் : சென்னைக்கு மீண்டும் ஆபத்து..

56 கருத்துக்குத்து:

maheswaro on October 27, 2009 at 10:26 AM said...

why karki ?
but all the best for your bright future.

sila athiradi mudivugal valkkail nall matram tharum.

so again all the best.
maheswari

maheswaro on October 27, 2009 at 10:32 AM said...

இப்போதே ஷேவரையோ, புரொஜெக்டரையோ,லேப்டாப்பையோ நம் நெருக்கத்திற்கேற்ப முன்பதிவு செய்து கொள்கிறோம்.

Absolutely right
maheswari

Rishi on October 27, 2009 at 10:34 AM said...

Welcome Back to Chennai!!!!

அனுஜன்யா on October 27, 2009 at 11:08 AM said...

முன்னாடியாவது சென்னை வந்தால் யாருக்கும் சொல்லாமல் வந்து ஓடி விடுவது வழக்கம் (தர்ம அடி கொடுக்க ஒரு கூட்டமே இருப்பதால்). இனிமேல் சென்னை வருவது பற்றியே யோசிக்க வேண்டும் :)

ஆனாலும், முன்கூட்டியே இப்படி அபாய அறிவிப்பு செய்யும் உன்னோட டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு.

முக்கியமானது - இந்த இடுகை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. இந்த மாதிரி எழுதுவதைத் தான் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.

Last but not the least - All the very best. You will do well in Chennai as well.

அனுஜன்யா

Mahesh on October 27, 2009 at 11:17 AM said...

All the very best Karki !!! Chennai is ready to embrace you with all the love.... :)

ஆதிமூலகிருஷ்ணன் on October 27, 2009 at 11:20 AM said...

இப்படித்தான் இருக்கவேண்டும். அடுத்த பிளான் இருக்கோ இல்லையோ.. வேணாம்னா வேணாம்.!

கல்யாணத்துக்கு முன்னாடி என்னைப்பார்த்தா மாதிரியே இருக்குது.! (ஏய்.. இது காமெடி இல்லப்பா..)

அனு சொன்ன மாதிரி இந்த முடிவு இல்லாட்டியும் கூட இந்த போஸ்ட் நன்று.

ஆதிமூலகிருஷ்ணன் on October 27, 2009 at 11:22 AM said...

400 க்கு வாழ்த்துகள்.

எனக்கு ஃபாலோயர்ஸ் ரிவர்ஸ்ல போய்கிட்டிருக்காங்க.. அவ்வ்வ்வ்..

ஸ்ரீமதி on October 27, 2009 at 11:23 AM said...

//அனுஜன்யா on October 27, 2009 11:08 AM said...
முன்னாடியாவது சென்னை வந்தால் யாருக்கும் சொல்லாமல் வந்து ஓடி விடுவது வழக்கம் (தர்ம அடி கொடுக்க ஒரு கூட்டமே இருப்பதால்). இனிமேல் சென்னை வருவது பற்றியே யோசிக்க வேண்டும் :)//

அப்போ எங்க நிலைமை எல்லாம்...?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ;)))) ஆனாலும் உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு... //"சென்னைக்கு மீண்டும் ஆபத்து (கார்க்கி)"// ஹி ஹி ஹி... :)))

ஸ்ரீமதி on October 27, 2009 at 11:24 AM said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
இப்படித்தான் இருக்கவேண்டும். அடுத்த பிளான் இருக்கோ இல்லையோ.. வேணாம்னா வேணாம்.!//

இப்படி தான் நானும்... இப்பவும்.. ;)))

Anbu on October 27, 2009 at 11:38 AM said...

சிவகாசிக்கு வர்றீங்களா அண்ணா..

தராசு on October 27, 2009 at 11:57 AM said...

அப்ப இனிமே ஒவ்வொரு பதிவர் சந்திப்பிலும் தல தல காமிப்பீங்க.

வாழ்த்துக்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) on October 27, 2009 at 11:57 AM said...

ஐயையோ..

இப்ப சென்னைல இருக்குற சேட்டைகளையே தாங்க முடியல.. இதுல இது வேறய்யா..?

முருகா..!

நர்சிம் on October 27, 2009 at 11:57 AM said...

வாங்க சகா..

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 27, 2009 at 12:08 PM said...

கார்க்கி, writing style நல்லாயிருக்கு. அப்புறம், welcome back to chennai.

பாண்டி-பரணி on October 27, 2009 at 12:11 PM said...

வாங்க சகா

கார்க்கி on October 27, 2009 at 12:19 PM said...

நன்றி மஹேஷ்வரி.

நன்றி ரிஷி

அனுஜன்யா,இனிமேல் சென்னை வந்தால் சொல்லாம போக முடியாது தல. இந்த மாதிரி எழுத நேரமெடுக்கிறது. இந்தப் பதிவுக்கு எனக்கு ஒரு மணி நேரம் மேல் ஆனது.

நன்றி மஹேஷ் :)

நன்றி ஆதி. முயற்சி செய்கிறோம். முடிந்தவரை இருப்போம் சகா

ஸ்ரீமதி, ம்ம்..நோட் பண்ணிக்கிட்டேன்

அன்பு, அடுத்த தீபாவளிக்கு வர வேண்டியிருக்கும். பப்லு அவ்ளோ பட்டாசு வெடிக்கிறான் :))

தராசண்னே, அது முடியுமான்னு தெரியல. வந்தாலும் கூடவே பப்லுவும் வருவார். விழா கமிட்டி ஒத்துப்பாஙக்ளா? :))

நன்றி தமிழன். தல, நான் ரொம்ப்ப்ப்ப அமைதியானவன் :)))

வந்துட்டோம் சகா. :))

நன்றி சுந்தர்ஜி. இதை எழுத தொடங்கும்போது வேற மாதிரி நினைச்சேன். ஆனா வேற மாதிரி வந்துச்சு எழுதி முடித்ததை படித்தவுடன் நான் நினைத்தது உங்களையும், அனுவையும்தான். குறி தப்பவில்லை :))

நன்றி பரணி. பாண்டிக்கு ஒரு டிரிப் பிளான் பண்ணியிருக்கோம்..

வெண்பூ on October 27, 2009 at 12:32 PM said...

வெல்கம் பேக்... புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

வினோத்கெளதம் on October 27, 2009 at 12:54 PM said...

கொஞ்சம் துணிச்சலான முடிவு..ஆனால் நல்ல முடிவு என்று தான் சொல்ல வேண்டும்..:)

சுசி on October 27, 2009 at 12:59 PM said...

மனதின் சந்தோசம் எழுத்தில் தெரியுது கார்க்கி. எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

பப்லுவுக்கு கொண்டாட்டம்.

சென்னை வாழ் மக்கள் 'எல்லாரும்' திண்டாடுவாங்கன்னு நான் நினைக்கல...

விக்னேஷ்வரி on October 27, 2009 at 1:08 PM said...

வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.
நகர வாழ்க்கையின் நரக எதார்த்தங்களை அழகா சொல்லியிருக்கீங்க.

யோ வாய்ஸ் (யோகா) on October 27, 2009 at 1:08 PM said...

ஒரு தடவை முடிவு பண்ணினால் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்கதானே சகா

வாழ்த்துக்கள். எதிர்கால முடிவுகள் சிறப்புற வாழ்த்துகிறேன் சகா

Achilles/அக்கிலீஸ் on October 27, 2009 at 1:13 PM said...

உங்கள் பதிவு உண்மையை தெளிவாகச் சொல்கிறது. அருமையான பதிவு கார்க்கி.

வாழ்த்துக்காள் நண்பரே..

இசைப்பிரியன் on October 27, 2009 at 1:14 PM said...

வாழ்த்துக்கள் நண்பா !

இளவயதில் இம்முடிவு எடுத்தது நன்று.
உண்மையில் உம் மனதுக்கு இதுவே நன்று.

என் நண்பனுக்கு, இப்போது தோன்றும் எனது மொழி - இவ்வாழ்க்கையில் ஆட்டத்தை மட்டுமே நம்மால் பல நேரங்களில் தேர்ந்தேடுக்க முடியும்.
நம்மோடு விளையாடுபவரை , நம் களத்தை , அதில் வரும் தொடர்பை , துண்டிப்பை , வலியை .... எதையும் நம்மால் முடிவு செய்வது கஷ்டம்.

அவன் மேல பாரத்தை போட்டு ,
ஆட்டத்தின் மேல் உள்ள காதலில் என்ஜாய் பண்ண , அதில் பணமும் பண்ண வாழ்த்தும் - இசைப்பிரியன்.

முரளிகுமார் பத்மநாபன் on October 27, 2009 at 2:06 PM said...

Welcome to Chennai saka, ungaludaiya intha mudivu paarattuthalukkuriyathu, oralavu nalla position vanthavudane "stable" endra mananilaikku vanthuvidum naan utpada palaridamirutnhu vilaki nirkirirkal.
vaazththukkal sakaa

ஜெனோவா on October 27, 2009 at 2:23 PM said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் கார்க்கி!
எங்க இருந்தாலும் கலக்குங்க !!

வள்ளி on October 27, 2009 at 2:36 PM said...

// வீட்டோடு இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.//

இந்த மாதிரி ஒரு முடிவெடுக்க நானும் பலதடவைகள் முயன்றும் இதுவரை ஒரு முடிவுக்கும் வரவில்லை .

உங்கள் முடிவுக்கு வாழ்த்துக்கள்.

பதிவு பிடிச்சிருக்கு கார்க்கி.

சஹானா beautiful raga on October 27, 2009 at 3:08 PM said...

welcome back to chennai all the very best karki

கார்க்கி on October 27, 2009 at 3:11 PM said...

நன்றி வெண்பூ

நன்றி வினோத்

நன்றி சுசி

நன்றி விக்கி

நன்றி யோகா.. அதேதான் சகா

நன்றி அக்கிலீஸ்

நன்றி இசைப்பிரியன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி

நன்றி முரளி. பார்ப்போம் சகா. எத்தனை நாள் இப்படி இருக்க முடியுதுன்னு :))

நன்றி ஜெனோவா.கலக்குவோம்

நன்றி வள்ளி. சீக்கிரமே நடக்குங்க

அன்புடன் அருணா on October 27, 2009 at 3:23 PM said...

//ஹைதை வாழ்க்கையில் பிளாக் எழுதினேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த மாற்றமும் நடந்துவிடவில்லை என் வாழ்க்கையில்//
இந்த monotonous life ஹைதையில் மட்டுமல்ல கார்க்கி!

Rajeswari on October 27, 2009 at 3:34 PM said...

welcome and congrates...

கார்ல்ஸ்பெர்க் on October 27, 2009 at 4:16 PM said...

"இவன் வரலாற்ற மாத்திடும் வருங்காலம்"


- இந்த வரிகள் உங்களுக்கும் பொருந்த வாழ்த்துக்கள்!!!

அறிவிலி on October 27, 2009 at 4:19 PM said...

All the best

ILA(@)இளா on October 27, 2009 at 4:21 PM said...

All the Very Best!

டம்பி மேவீ on October 27, 2009 at 4:23 PM said...

சென்னை வருது ஒரு இலக்கிய சுனாமி !!!!!


வாழ்த்துக்கள் ....

(சினிமா ல வெற்றி பெற வாழ்த்துக்கள் )

pappu on October 27, 2009 at 4:55 PM said...

பாய்ஸ் Vs கேர்ல்ஸையோ, வண்டு முருகனையோ கண்டு களித்து சிரிக்கும்போது வாழ்க்கை சுகமாய் இருப்பதாக உணர்கிறோம். அலறும் மொபைலில், அமெரிக்கா விசா க்ளியர் ஆனதை சொல்கிறான் நண்பன். அதைப் பாராட்ட வேண்டுமென்று நினைக்கும்போதும் ”ங்கொய்யால. கலக்கல்டா மாப்ள” என்று வாயில் வருவதில்லை. “ Thats great dude. U have done it” என்கிறோம். இப்போதே ஷேவரையோ, புரொஜெக்டரையோ, லேப்டாப்பையோ நம் நெருக்கத்திற்கேற்ப முன்பதிவு செய்து கொள்கிறோம். /////

சேம் வயித்தெரிச்சல்.வொய் மீ?

இதே வெறுப்புதான்.

சென்னைக்கு வந்து பிஸினஸ் பண்ணி அம்பானி ஆகப் போறீங்கன்னு நெனைக்குறேன்.

KVR on October 27, 2009 at 5:03 PM said...

//வேறு சில திட்டங்கள் உண்டு. விரைவில் சொல்கிறேன்//

திட்டம் எதுவானாலும் வெற்றிபெற வாழ்த்துகள்

KaveriGanesh on October 27, 2009 at 5:28 PM said...

வாப்பா கார்க்கி

வனம் on October 27, 2009 at 6:06 PM said...

வருக வருக சகா.........

ஆமாம் வேண்டாம் என்றால் வேண்டாம் என்னைப்போலவும் இருக்கு.

உங்களையும், ஆதியையும் மீண்டும் ஒருசேர சந்திக்கவேண்டும்.

நானும் வருகின்றேன்; விடுமுறைக்கு.

இராஜராஜன்

இராஜராஜன்

Karthik Viswanathan on October 27, 2009 at 6:24 PM said...

பொறாமைத் தீயை கிளப்பாதீரும்...ஓய்... என்ன முயற்சியானாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Sure on October 27, 2009 at 6:56 PM said...

Same repettai

Karthik on October 27, 2009 at 7:46 PM said...

ரொம்ப நல்ல பதிவு.. வெல்கம் பேக்! :)

Lakshmi on October 27, 2009 at 7:50 PM said...

Same blood!!
Atleast u have managed 18 months thr. But i cud only 8 months. As u said, 'Paradise' biryani was the only good thing I enjoyed thr.
Well, good luck dude.

Regards,
Lakshmi

மங்களூர் சிவா on October 27, 2009 at 7:58 PM said...

வாழ்த்துக்கள்

பிஸ்ஸா புரியுது அது என்ன "டப்பர்வேர்."??

JDK on October 27, 2009 at 8:02 PM said...

Boss,You too !!! Most of my friends have left/abt to leave from Hyderabad :( Hope we'll meet b4 u leave. Will contact u.

Bye..
JDK.

ILA(@)இளா on October 27, 2009 at 9:28 PM said...

நீங்களாவது சென்னைய மேம்படுத்துங்க கார்க்கி. உங்களால மட்டும்தான் இது முடியும். முடிஞ்சப்புறம் “இது என் கடமை”ன்னு ஒரு வசனம் கூட பேசிக்கலாமே..

Kathir on October 27, 2009 at 9:52 PM said...

பதிவோட தலைப்ப படிச்ச உடனேயே விஷயம் புரிஞ்சுடிச்சு!!(நம்பனும்) நேரா கடைசி பத்திக்கு வந்து confirm செஞ்சப்புறம்தான் பதிவப் படிச்சேன்.

புது முயற்சிக்கு வாழ்த்துக்க்ள்.

Romeoboy on October 27, 2009 at 9:56 PM said...

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் நீங்க சென்னை வந்தா கண்டுகாமையா போக போது??

இதனால் எல்லோருக்கும் சொல்லுவது என்னவென்றால் சுனாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நண்பர் கார்க்கி ..

Welcome back to Chennai ..

Truth on October 27, 2009 at 10:08 PM said...

வாங்க வாங்க...

RaGhaV on October 28, 2009 at 12:24 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.. :-)) வருக வருக.. :-)

Rajalakshmi Pakkirisamy on October 28, 2009 at 1:59 AM said...

All the best :)

velji on October 28, 2009 at 5:27 AM said...

thoug it is a personal thing the writing style gets the reader to sympathize with you.

then,the latest news is chennai administration has asked for cenral force!

Cable Sankar on October 28, 2009 at 8:31 AM said...

வெல்கம் டூ சென்னை.. தொழிலதிபர் ஆக திட்டமா..?

தீப்பெட்டி on October 28, 2009 at 9:32 AM said...

வாழ்த்துகள் சகா.. சென்னை வரவேற்கிறது..

நாங்களும் காத்திருக்கிறோம்..

கார்க்கி on October 28, 2009 at 9:52 AM said...

அனைவருக்கும் நன்றி. பரவாயில்லை, சென்னையில் நமக்கு அடிஉதை விழுமோன்னு பயந்தேன் :)))

அதிலை on October 28, 2009 at 10:39 PM said...

good decision!!!! vazhthukkal

தமிழ்ப்பறவை on November 3, 2009 at 7:28 PM said...

நல்லா எழுதி இருக்கீங்க கார்க்கி...
புனைவுன்னு நினைச்சேன்..
இப்போதான் ப்ளாக் படிச்சேன்..
வாழ்த்துக்கள்...

 

all rights reserved to www.karkibava.com