Oct 26, 2009

என் தூக்கத்தை கெடுக்கும் பெண்


 

  சமீபகாலமாக கனவொன்று வந்துக் கொண்டேயிருக்கிறது. அதிகாலையா, முன்னிரவா என்பது சரியாக தெரியவில்லை. இயற்கையின் இருட்டோடு செயற்கை வெளிச்சம் மிகச்சரியாக இணைந்திருந்தது.  அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. படிகளில் அமர்ந்திருக்கிறாள் அவள். ஃப்ராக் என்றுதான் அதை சொல்வார்கள் என நினைக்கிறேன். வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஃப்ராக்கில் நிஜமாகவே தேவதை போலிருந்தாள். இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அவளின் முகத்தைச் சுற்றி ஏதோ ஒரு குழல் விளக்கின் வெளிச்சம் பரவியிருந்தது. அவள் சிரிப்புக்கு ஏற்ற ஒரு வயலின் இசையையும் பிண்ணனியில் கேட்க முடிந்தது. என்னை இழந்து அவளை நோக்கி செல்கிறேன் நான். முதலில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கியவள், அவளருகே சென்றதும் என் கண்களை சற்று உற்று நோக்கினாள். அப்படியொரு சிரிப்பை இதுவரை நான் பார்த்ததேயில்லை. அவள் பிஞ்சு விரல்களை என் முகத்தில் படர விடுகிறாள். ப்ச்

  கனவு கலைந்து எழுகிறேன் நான். குறைந்தது ஒரு மணி நேரமாகிறது மீண்டும் தூங்குவதற்கு. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இந்தக் கனவு வந்துக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் இது நிஜத்தில் நான் காணப்போகிறேன் என்று மட்டும் உறுதியாக நம்பினேன். கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.

வழக்கம் போல் சனிக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வழக்கம் போல் ரிமோட் என் கையில் மாட்டிக் கொண்டது. வழக்கம் போல் முதலில் எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல்களையும் நோட்டம் விட்ட பின் தமிழ் சேனல்களுக்கு தாவினேன். கமலிடம் ஒரு டிரேட்மார்க் எக்ஸ்பிரெஷன் உண்டு. தன் ஜோடியை காணாமல் தேடிச் செல்லும் போது, முதல் பார்வையில் அவளை காணாதது போல் செல்பவர், அடுத்து நொடி மீண்டும் திரையில் வரும்போது அவளைக் கண்டுவிட்டார் என்பது புரியும்வண்ணம் ஒரு உணர்ச்சியைக் காட்டுவார். அதேபோல் சேனல்களை தாவிக் கொண்டே செல்லும்போது ஏதோ ஒரு சேனலில் என் தேவதை பார்த்தது போல் இருந்தது. + பட்டனுக்கு பதில் – பட்டனைத் தேடி அழுத்தினேன்.

அதே அரையிருள். அதே குடியிருப்பு. அதே படிகள். அதே குழல் வெளிச்சம். அதே ஸ்லீவெலெஸ் ஃப்ராக்கில் என் தேவதை. சற்று யோசித்துப் பார்த்தால், அதே வயலின். ஏதோ செய்கிறது எனக்கு. யாருமில்லா ஒரு உலகத்திற்கு அவளை தூக்கிச் சென்று கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் அவசியம் இல்லை என்றாலும் என்றாவது எனக்கென்று ஒரு பெண் வரத்தான் போகிறாள். அதுவரை காத்திருக்கிறேன். இதோ அந்தக் காட்சி.

 

 

 

 

ஒரு வயசுப் பொண்ணு, என் தூக்கத்தை கெடுக்கும் முன்பே, இந்த “ஒரு”வயசுப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா…செம க்யூட் இல்ல?????

*********************************

பி.கு: மூன்று லட்சம் ஹிட்ஸுக்கும், 400 ஃபாலோயர்ஸ் ஆகவும் உதவிய அனைவருக்கும் நன்றி. நன்றி நன்றி..

35 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on October 26, 2009 at 10:32 AM said...

me the first :)

ஸ்ரீமதி on October 26, 2009 at 10:34 AM said...

என்ன காட்சி? எனக்கு தெரியல.. :((

விக்னேஷ்வரி on October 26, 2009 at 10:45 AM said...

ரொம்ப க்யூட் தான்.
எப்படியெல்லாம் நீங்க பதிவ ஒப்பேத்துறீங்க. அப்பப்பா...

தராசு on October 26, 2009 at 10:51 AM said...

படிச்சுட்டோம்,

Lakshmi on October 26, 2009 at 11:02 AM said...

:) எப்படிங்க இப்படி?

டவுசர் பாண்டி on October 26, 2009 at 11:06 AM said...

ரொம்ப வர்ஷத்துக்கு மின்னால வந்த இந்த படத்துக்கு , இந்த மேரி அழகா எழத முடியும் இன்னு சொன்னதுக்கே உனுக்கு சலாம் வாஜாரே , சோக்கா கீதுப்பா !!

Anonymous said...

:)

யாசவி on October 26, 2009 at 11:35 AM said...

count me 400 :)

Karthik on October 26, 2009 at 11:38 AM said...

ஹை, நானும் அன்னிக்கு அஞ்சலிதான் பார்த்தேன்.. செம க்யுட்! :)

வாழ்த்துக்கள்! :)

Karthik on October 26, 2009 at 11:39 AM said...

//ஸ்ரீமதி said...
என்ன காட்சி? எனக்கு தெரியல.. :((

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி.. சின்னக் கண்மணி கண்மணி கண்மணி.. கனவில் இசைக்கலாமே! :)

அனுஜன்யா on October 26, 2009 at 11:43 AM said...

நானூறுக்கும், மூன்று லட்சத்துக்கும் (இதுக்கு எவ்வளவு சீரோ?) நிறைய பெருமூச்சுகளுடன் ... வாழ்த்துக்கள். Continue to rock.

அனுஜன்யா

ரமேஷ் வைத்யா on October 26, 2009 at 11:49 AM said...

//கமலிடம் ஒரு டிரேட்மார்க் எக்ஸ்பிரெஷன் உண்டு. தன் ஜோடியை காணாமல் தேடிச் செல்லும் போது, முதல் பார்வையில் அவளை காணாதது போல் செல்பவர், அடுத்து நொடி மீண்டும் திரையில் வரும்போது அவளைக் கண்டுவிட்டார் என்பது புரியும்வண்ணம் ஒரு உணர்ச்சியைக் காட்டுவார்//

Super maappi

lakshmi n on October 26, 2009 at 11:49 AM said...

Hi, I am reading your blog regularly. Good. Keep it up. How is seven and half?

ஸ்ரீமதி on October 26, 2009 at 11:55 AM said...

ஹை, நானும் அன்னிக்கு அஞ்சலிதான் பார்த்தேன்.. செம க்யுட்! :)

கார்க்கி on October 26, 2009 at 12:24 PM said...

ஸ்ரீமதி, இப்ப தெரிஞ்சுதா?

விக்கி, வேற மாதிரி எழுதினேன். இபப்டி ஆயிடுச்சு

நன்றி தராசு

லக்‌ஷ்மி, நான் கொஞ்சம் கூச்ச சுபாவங்க :))))

டவுசர் பாண்டியண்ணே, எப்படி கீறமே? மெரிசில் ஆவாம பட்சதுக்கு டேங்க்ஸூப்பா

நன்றி அம்மிணி

நன்றி யாசவி..400 ஆயிடுச்சு

கார்த்திக், காலைல இருந்து வேலையெல்லாம் விட்டு இந்தப் படத்தோட சீன்ஸ் தான் பார்த்துட்டு இருக்கேன்

நன்றி அனுஜன்யா :))

ரமேஷண்ணா, எப்படி இருக்கிங்க?

நன்றி லக்‌ஷ்மி.என். ஏழரை நல்லாத்தான் இருக்கிறான்

velji on October 26, 2009 at 12:40 PM said...

400 followers and 3L hits...!
enjoy yourself!

நர்சிம் on October 26, 2009 at 1:00 PM said...

வாழ்த்துக்கள் சகா.

இந்தப் பதிவு நன்றாக இருந்தது.

சீனிவாசன் on October 26, 2009 at 1:07 PM said...

எப்டி ஸார் இப்படிளாம் யோசிக்கிறீங்க ?சூப்பர்

Karthik on October 26, 2009 at 1:31 PM said...

//ஸ்ரீமதி said...
ஹை, நானும் அன்னிக்கு அஞ்சலிதான் பார்த்தேன்.. செம க்யுட்! :)

Grrrrr! ithu ennoda comment!

மண்குதிரை on October 26, 2009 at 2:04 PM said...

nanba
nan muthalleye kizha ulla padaththa paththutten :-)

vazhththukkal

susi on October 26, 2009 at 2:30 PM said...

முதலில் வாழ்த்துக்கள்.

//ஒரு வயசுப் பொண்ணு, என் தூக்கத்தை கெடுக்கும் முன்பே//

நம்ப முடியவில்லை... முடியவில்லை... இல்லை...

பைத்தியக்காரன் on October 26, 2009 at 2:37 PM said...

அன்பின் கார்க்கி,

நானூறுக்கும், 3 லட்சத்துக்கும் வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

pappu on October 26, 2009 at 3:03 PM said...

400 ஆயிடும் சொல்லுறீங்க. நான் வரும் போதே 402ல நிக்குது!

KVR on October 26, 2009 at 4:29 PM said...

//ஒரு வயசுப் பொண்ணு, என் தூக்கத்தை கெடுக்கும் முன்பே, இந்த “ஒரு”வயசுப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா…செம க்யூட் இல்ல?????
//

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே ;-)

அன்புடன் அருணா on October 26, 2009 at 4:59 PM said...

நினைச்சேன் இப்பிடி ஏதாவது கார்க்கி ட்விஸ்ட் இருக்கும்னு!

அறிவிலி on October 26, 2009 at 6:04 PM said...

நூறுகளுக்கும் லட்சங்ளுக்கும் வாழ்த்துகள்.

கார்க்கி on October 26, 2009 at 6:18 PM said...

நன்றி வேல்ஜி

நன்றி நர்சிம்

நன்றி சீனிவாசன்

நன்றி மண்குதிரை. தல, நாங்க உங்க கவிதைலாம் அப்படியா படிக்கிறோம்?

சுசி, நம்புங்க மேடம்

நன்றி சிவாண்ணா

ஹிஹி.டேங்க்ஸ் பப்பு

கே.வி.ஆர். நடந்தா நல்லதுதான் சகா

அருணா டீச்சர் ஹிஹிஹிஹி

நன்றி அறிவிலி

கும்க்கி on October 26, 2009 at 6:36 PM said...

attendence.

அத்திரி on October 26, 2009 at 8:16 PM said...

இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல

Romeoboy on October 26, 2009 at 9:42 PM said...

என்ன ஒரு ஒற்றுமை ?? இந்த படத்த பற்றி நான் ஒரு பதிவு போடணும்ன்னு நினைக்கும் போது நீங்க முந்திகிட்டிங்க.

Kiruthikan Kumarasamy on October 26, 2009 at 10:25 PM said...

பப்லுவிடம் சொல்லி என் சார்பாக நன்றாக சாணி மிதித்த ஒரு பழைய செருப்பால் இரண்டு அடி வாங்கிக்கொள்ளவும்

கார்க்கி on October 27, 2009 at 10:21 AM said...

வாங்க கும்க்கி

அத்திரி, ஹிஹிஹி

ரோமியா பாய், அதனாலென்ன.. போடுங்க

கிருத்திகன், உங்களுக்காக இத கூட செய்ய மாட்டேனா பாஸ்? வாங்கி, நீங்க வரும்போது கொடுக்கிறேன் :))

ஆதிமூலகிருஷ்ணன் on October 27, 2009 at 12:44 PM said...

அனுஜன் : நானூறுக்கும், மூன்று லட்சத்துக்கும் (இதுக்கு எவ்வளவு சீரோ?) நிறைய பெருமூச்சுகளுடன் ... //

அனு அங்கிள், அது சீரோ இல்ல.. அதுக்கு எவ்வளவு முட்டை வரும்?னு கேட்கணும்.!

அழகான பதிவு. ஆனா..

ஸ்ரீமதி said...
என்ன காட்சி? எனக்கு தெரியல.. :((
//
ரிப்பீட்டு. வீட்லதான் போய் பாக்கணும்.!

யோ வாய்ஸ் (யோகா) on October 27, 2009 at 1:17 PM said...

//மூன்று லட்சம் ஹிட்ஸுக்கும், 400 ஃபாலோயர்ஸ் ஆகவும் உதவிய அனைவருக்கும் நன்றி. நன்றி நன்றி//

வாழ்த்துக்கள் சகா.

sahana on October 31, 2009 at 12:27 AM said...

மச்சான்... முடியள... டா...

 

all rights reserved to www.karkibava.com