Oct 22, 2009

நான் அடிச்சா தாங்க மாட்ட.


  

  ச்சே. இப்பலாம் இந்த மொபைலால் வரும் இம்சைக்கு பேசாம ஆதவனை இன்னொரு தரம் பார்த்து தொலைச்சிடலாம். நான் எனக்கு வரும் அழைப்புகளை பத்தி சொல்லல சாமீயோவ். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பலருக்கு ஆனந்தமும்,சிலருக்கு அதிர்ச்சியும்தான் தரும். மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்ளும் வித்தை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனா இப்ப நான் சொல்ற பிரச்சினை அதன் முக்கிய காரணத்தால் வந்ததல்ல. மொபைல் வேணும்தான். ஆனா கூடவே வர்ற உப தொல்லைகள்தான் இம்சையே. அதாவது காலர்ட்யூனும், ரிங்டோனும்.

அன்னைக்கு டிரெயினில் போயிட்டு இருந்தேன். அப்பர் பெர்த்தில் இருந்த என் பேக் பேகில் இருந்து புத்தகத்தை எடுக்கிறேன். அருகில் இருந்தவர் மொபைல் ஒலிக்கிறது.

திருடாதே.. பாப்பா திருடாதே..

எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, நான் அலறியபடி நிற்க, சிரித்துக் கொண்டே ஹலோ என்கிறார் கொரியா மொபைல் ஓனர். அந்த செங்கல் மொபைலை அவர் தலையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது எனக்கு.

இன்னொரு நாள் நல்ல பசியில் ஹோட்டலுக்கு சென்றேன். ஏமி காவல என்ற யாதவ கமிடி கல்லுகுரி ரெட்டியிடம்  ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்றேன். அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நானும் ஆந்திராதான் என்றார் அந்த யாதவ……ரெட்டி. இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது

கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.

உண்மையிலே கால் வந்ததா இல்லை அவனே பாட்டு போட்டான்னானு தெரியல.

இது பரவாயில்லை.  எம்.பி.ஏ தேர்வுகளை ஒரு வழியா முடிச்சிட்டு, சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு அந்த சமையல்கார பதிவருக்கு போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன்  ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

எம்.பி.ஏ பாஸ் ஆனது கூட என் விஷயத்துல ரகசியம் ஆயிடுச்சுங்க.

அந்த இளம் பிரபல பதிவருக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க  மாட்டாங்க”

அப்பிடின்னு சொல்லுதுங்க. ஏற்கனவே அந்த சித்தி நடிகையால இவரு பேரு ரிப்பேரு ஆனது பழைய கதை. ஆனா அந்த கதைக்கு லீடே இந்தப் பாட்டுதான்னு தெரிஞ்சும் இவரு மாத்தாம இருக்காருன்னா, ஏதோ இருக்குதுன்னு கிசுகிசு கூட கிளம்பியிருக்காம்.

இன்னொரு நாள் அந்த பிரபல பாடகர் பதிவருக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி அந்த க.பொ.க பதிவர் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

நர்சிம் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.

வேலை வேலை வேலை காலையும் வேலை மாலையிலும் வேலை

டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்ன செய்றேன் பாருங்கன்னு டைப் பண்ணி முடிக்கிறேன், எம் மொபைல் அலறுது

நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட..

 

40 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on October 22, 2009 at 10:40 AM said...

நெசமாவே தாங்கல!

Anonymous said...

பரிசலாராலயே தாங்க முடியலை. ஓடிவந்து மொதப்பின்னூட்டம் போட்டப்பறம் நானெல்லாம் ..... :)

Busy on October 22, 2009 at 10:52 AM said...

krrrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!

Polam Right !!!!!!

Macha Peru Katki !!!!!!!!!

Hehe!!!!

புதுகைத் தென்றல் on October 22, 2009 at 10:55 AM said...

ம்முடியல..

ILA(@)இளா on October 22, 2009 at 11:14 AM said...

என்ன ஒரு Coincidence. இப்போதான் நான் 5 ரிங் டோன் கத்தரிச்சு வெச்சேன். முடிச்சுட்டு பார்த்தா உங்கப் பதிவு. Same Pinch

Anbu on October 22, 2009 at 11:19 AM said...

hmmm....

அமுதா கிருஷ்ணா on October 22, 2009 at 11:27 AM said...

பாவம் தான் கார்க்கி..சாமி கார்க்கியை காப்பாத்து...

ஜெனோவா on October 22, 2009 at 11:39 AM said...

Y blood... same blood ;-)

sema mokka Karki..

தராசு on October 22, 2009 at 11:47 AM said...

பாருங்களேன்,

இந்த மொக்கையை படிச்சுட்டு இருக்கேன், பக்கத்துல ஒரு மொபைல் பாடுது,

"சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி"

ஸ்ரீமதி on October 22, 2009 at 11:52 AM said...

//அந்த இளம் பிரபல பதிவருக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க”

அப்பிடின்னு சொல்லுதுங்க. //

முதல் முறை கேட்டப்ப நிஜமாவே நம்மல தான் சொல்றாங்க போலன்னு திரும்பி திரும்பி பார்த்து நடந்தேன் ரோட்ல... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

சுசி on October 22, 2009 at 11:58 AM said...

கார்க்கி... //உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? //

நர்சிம் on October 22, 2009 at 12:05 PM said...

முடியுது.

கார்க்கி on October 22, 2009 at 12:26 PM said...

பரிசல், ஹிஹிஹி

அம்மிணி, அது வேற விஷயம்..

வாங்க பிசி..

தென்றலக்கா, :))

நீஙக்ளுமா இளா? அப்படியே மெயில் அனுப்பிடுங்க..

அன்பு, நலமா?

நன்றி அமுதா மேடம்...:))

ஜெனோவா, டென்ஷன் ஆவாதிங்க பாஸ்..

தராசண்ணே!!! எனக்கும் அதே சாங் தேவைப்படுது..

ஸ்ரீமதி... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சுசி மேடம், நன்றி..

என்ன சகா?

விக்னேஷ்வரி on October 22, 2009 at 12:31 PM said...

பதிவு நல்லாருக்கு. நடுவுல அப்படியே கிசுகிசுவை கன்ஃபார்ம் பண்றீங்களா... நடத்துங்க.

மண்குதிரை on October 22, 2009 at 12:31 PM said...

-:) nanba

பின்னோக்கி on October 22, 2009 at 12:38 PM said...

எல்லாரும் வைப்ரேசன்ல செல்போன வெச்சா நல்லாயிருக்கும். இப்ப காலர் டியூன் போய் காமெடி கிளிப்ங் எல்லாம் வந்துடுச்சு. நாம அவருதான் பேசுறாருன்னு நினைச்சு பேச ஆரம்பிச்சா ‘டேய் போண்டா தலையா !”னு கவுண்டர் வாய்ஸ் கேட்குது.

வால்பையன் on October 22, 2009 at 12:41 PM said...

நான் போன் வாங்கியதலிருந்து இன்று வரை ஒருமுறை கூட காலர்டியூன் வைத்ததில்லை!

ரிங்டோன், இந்த ஆர்யா நடிச்ச படத்துல ஒரு பேக்ரவுண்ட் மீயூசிக் வருமே பழய பாட்டோட ரீ மிக்ஸ், அது தான் வச்சிருக்கேன்!

இசைப்பிரியன் on October 22, 2009 at 1:16 PM said...

ஒரு நாள் நீங்க வீட்டுக்கு வரும்போது யூஸ் பண்ண இப்போவே பொருள் அல்லாத்தையும் எடுத்து வெக்கணும் ....
ரத்த களரி ரனக்கலறி ஆயிடும் சொல்லிபுட்டேன் .

நியூ போஸ்ட் கொஞ்சம் பாருங்க ...

வள்ளி on October 22, 2009 at 1:18 PM said...

பதிவு நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள் கார்க்கி! எம் பி ஏ பாஸ் ஆனத்துக்கு

யோ வாய்ஸ் (யோகா) on October 22, 2009 at 1:43 PM said...

ஏன் பாஸ் இப்படி மொக்க போடுறீங்க..

இதெல்லாம் கற்பனை தானே சகா?

கார்க்கி on October 22, 2009 at 1:47 PM said...

@விக்கி,

கன்ஃபார்ம் ஆயிட்டா அது கிசுகிசு இல்லைங்க. நியூஸ்

நலமா மண்குதிரை?

பின்னோக்கி,முன்னாடி ஃபேமஸா இருந்த கால்ர் ட்யூன். “யாரது? முருகரா பேசறது? கொஞ்சம் இருப்பா. நிச்சயம் எடுக்கிரேன்” ந்னு கிருபானந்தா வாரியர் பேசுவார்.

வால், நீங்க யாரு? எதை எதை எதெதுக்கு யூஸ் பண்ணனுமோ அதத அததுக்குதானே யூஸ் பண்ணுவிங்க

அறிவ், அந்த போஸ்டுல தீராத விளையாட்டு பிள்ளை பாடலோட வீடியோ போட்டு இருக்கலாம்.:))

வள்ளி மேம், நீங்கதான் பதிவோட மேட்டர ககபோ செஞ்சிருக்கிங்க :)

யோ, உண்மைதாம்ப்பா.. எல்லாமே எனக்கு நடக்கல். ஆனா நட்ந்ததுதான்

கதிர் - ஈரோடு on October 22, 2009 at 1:49 PM said...

இஃகிஃகி

நல்லாயிருக்குங்க கார்க்கி

சஹானா beautiful raga on October 22, 2009 at 1:57 PM said...

தாங்கமுடியலடா சாமி :)))))

Truth on October 22, 2009 at 2:59 PM said...

மேல...

RaGhaV on October 22, 2009 at 3:34 PM said...

//திருடாதே.. பாப்பா திருடாதே..//
எப்படித்தான் பார்த்த உடனயே கண்டுபிடிக்கிறாங்களோ.. ;-))

பதிவு நல்லா இருக்கு கார்க்கி.. :-) படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்.. :-)

pappu on October 22, 2009 at 4:17 PM said...

நாங்கல்லாம் ஸ்டாண்டார்ட் டிஃபால்ட் டோன்ஸ்தான். வி ஆர் புரொபஷனல்ஸ்! வீட்டுல சும்மாதானுங்கோ இருக்கேன்!

அறிவிலி on October 22, 2009 at 5:18 PM said...

எம்பியே பாஸ் பண்ணிணதுக்கு வாழ்த்துகள்.

அத்திரி on October 22, 2009 at 7:36 PM said...

ங்கொய்யால............

Kiruthikan Kumarasamy on October 22, 2009 at 7:41 PM said...

///ரிங்டோன், இந்த ஆர்யா நடிச்ச படத்துல ஒரு பேக்ரவுண்ட் மீயூசிக் வருமே பழய பாட்டோட ரீ மிக்ஸ், அது தான் வச்சிருக்கேன்///

வாலு.. எம்.எம்.எஸ்ல அந்த பாட்டை அனுப்புங்க...

இதயராஜா on October 22, 2009 at 8:47 PM said...

ஒரு ஜாலியான பதிவு!
வாழ்த்துகள்!!

அரசூரான் on October 22, 2009 at 9:03 PM said...

ம்ம்ம்... சாளரத்து வழியா வெரும் காத்தும் கருத்தும் மட்டும் வல்ல, இப்பெல்லாம் காலர்டோனும் வருது... அருமை.

Asha on October 22, 2009 at 9:28 PM said...

// இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.//

கரெக்ட் ஆ தானே பாடியிருக்கு.. நோ பீலிங்க்ஸ்..

Asha on October 22, 2009 at 9:30 PM said...
This comment has been removed by the author.
கும்க்கி on October 22, 2009 at 10:53 PM said...

பாகவுந்தி பாபு...

மங்களூர் சிவா on October 23, 2009 at 12:13 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி! எம் பி ஏ பாஸ் ஆனத்துக்கு.

பட்டிக்காட்டான்.. on October 23, 2009 at 2:12 AM said...

நிறுத்துரா வெளக்கெண்ண..

நான் எதுவும் சொல்லலைங்க, என்னோட மெசேஜ் டோன். இப்ப பார்த்து யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்க..??!!

கதியால் on October 23, 2009 at 8:35 AM said...

ம்ம்ம் கப்பில எம்பிஏ பரீட்சை எடுத்த கதை சொல்லி பாஸ் ஆன கதையயும் சொல்லி சந்துல சிந்து பாடிட்டீங்க...இருந்தாலும் வாழ்த்துக்கள் பாஸ்.!!

அன்புடன் அருணா on October 23, 2009 at 6:36 PM said...

இதுக்கு புட்டிக்க்தையே தேவலை!!!!

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 2:32 PM said...

நான் அடிச்சா தாங்க மாட்ட..

Karthik on October 26, 2009 at 12:51 PM said...

me the 40th..;)

LOL @ Srimathi, Pappu, Aruna ma'am comments.. :))))

 

all rights reserved to www.karkibava.com