Oct 20, 2009

அடி சீனி சக்கரையே


மச்சி.. பாலாஜி பேசறேன். எப்படிடா இருக்க?


டேய். நல்லா இருக்கேன். நீ?


அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும்


சொல்லுடா.


நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு


”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப் 
பாட்டுமே இல்லையேடா!!


ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”


அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.


அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே


ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா


*&%%^^^%$$. பாட்ட சொல்றா


ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”


எல்லாம் சரி.முதல் வரி என்னடா?


மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.


ம்ம்


செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்


ம்ம்.


சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து


டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.


இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”


இதெல்லாம் சரியா பாடு..


ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா


ம்ம்


அடி சீனி சக்கரையே”


ம்ம்


எட்டி நீயும் நிக்கிறியே


ம்ம்


நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே


செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.


டேய்.அதாண்டா


இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


*************************************
ஒரு காலத்தில் என் எம்.பி3 பிளேயரில் மூனு பாட்டு எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதில் ஒரு பாடல்தான் செங்குருவி செங்குருவி. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சுந்தர புருஷனில் வரும் சமஞ்சேன் உனக்குதான் என்ற பாடலும்,
செம்பருத்தி பூவே! செம்பருத்தி பூவே!
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
என்ற பாடலும் நம்ம ஃபேவரிட்ஸ். அதிலும் செங்குருவி டாப்பு. யூட்ய்பிலும், மற்ற ஆடியோ பிலேயரிலும் தேடி தேடி 2 மணி நேரம் வீணானதே மிச்சம். நீங்கள் தரவிறக்கி கேளுங்க மக்கா..

வீடியோ உபயம்: ஸ்ரீமதி

25 கருத்துக்குத்து:

Anbu on October 21, 2009 at 10:15 AM said...

me the first.....

Anbu on October 21, 2009 at 10:31 AM said...

இப்படியும் கூட பதிவு எழுதலாமோ???

நல்லா இருக்கு அண்ணே..

சுசி on October 21, 2009 at 11:34 AM said...

செம்பருத்தி பூவே எனக்கும் பிடிக்கும்.

அச்சச்சோ உதவாக்கரையோட பொன்னான ரெண்டு மணி நேரம் வீணாப் போச்சாஆ....
கிர்ர்ர்ர்................

விக்னேஷ்வரி on October 21, 2009 at 11:42 AM said...

அதானே பாலாஜி தான பாட்டைக் கண்டுபிடிச்சாரு. :)
அது நல்ல பாட்டு சகா.

வள்ளி on October 21, 2009 at 12:31 PM said...

சிவப்பில உள்ளதெல்லாம் ஏழுவோடது ன்னு நினைச்சு படிச்சு ஏமாந்திடேன்....

டம்பி மேவீ on October 21, 2009 at 12:47 PM said...

boss..... padivu la charm illai.

oru interesting flow illai.

ஜெனோவா on October 21, 2009 at 1:01 PM said...

//செம்பருத்தி பூவே! செம்பருத்தி பூவே!
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா//
இது ஒருகாலத்துல எனக்கும் புடிச்ச பாட்டு ...

ஸ்கூல்ல நடந்த பாட்டுப்போட்டில நான் இத படிச்சிட்டிருந்தப்ப அந்த டீச்சர் காபி குடிக்க கெளம்பிட்டாங்க ;-(
போங்கடா நீங்களும் உங்கப்போட்டியும்னு வீட்டுக்கு ஓடியாந்துட்டேன் .

நெம்ப நாள் கழிச்சி நினைவுபடுத்தினதுக்கு நன்றி மக்கா !!

ஆமா , இந்த மக்காங்கற வார்த்த நம்ம ஊர் பக்கம் பேசற வார்த்தயாச்சே , நீங்க ரொம்ப use பண்றீங்களே எப்படி ??

சென்ஷி on October 21, 2009 at 1:04 PM said...

//அதிலும் செங்குருவி டாப்பு. /

அந்தப் பாட்டு நடுவுல ரவளியை ரெண்டு கையால தூக்கி கேப்டன் பாட்டு மியுசிக்குக்கு ஏத்தா மாதிரி டமடமடமன்னு மடக்குவாரு (முறிப்பாரு). எனக்கு முதுகு வலிக்க ஆரம்பிச்சுடும் ;)

யோ வாய்ஸ் (யோகா) on October 21, 2009 at 1:14 PM said...

ஏன் ஏன் எல்லாம் நல்லாதானே போய்டிருக்கு சகா

கார்க்கி on October 21, 2009 at 1:15 PM said...

நன்றி அன்பு

நன்றி சுசி.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நன்றி விக்கி.

ஹாஹா..வள்ளி மேடம். அந்த கலர பார்த்தாலே முடிவு பண்ணிடலாமா?

மேவி, நன்றி.. :)

ஜெனோவா, எனக்கே தெரியல. எப்படியோ ஒட்டிக்கிச்சு

சென்ஷி, இன்னும் சிரிச்சிட்டு இருக்கிரேன். அபப்டியே மைண்ட்ல அந்த சீன் வந்துச்சா...ஹிஹிஹி

வள்ளி on October 21, 2009 at 1:47 PM said...

//அந்த கலர பார்த்தாலே முடிவு பண்ணிடலாமா?//

தப்புத்தான் சார்.
அந்த கலர் காம்பினேஷன் பாத்தாலே அந்த நினைப்புத்தான் வருது. அதுமட்டுமில்ல பாலாஜி வேற பேசினாரா.....

தராசு on October 21, 2009 at 2:26 PM said...

ரைட்டு

தாரணி பிரியா on October 21, 2009 at 3:20 PM said...

வர வர கேப்டன் ரசிகன் ஆகிட்டு வர்றீங்க போல‌

அன்புடன் அருணா on October 21, 2009 at 6:36 PM said...

:(

பட்டிக்காட்டான்.. on October 21, 2009 at 10:41 PM said...

//.. வீடியோ உபயம்: ஸ்ரீமதி ..//

ஆமா இதென்ன கோவில் விழக்கள்ல போட்டுருக்குரமாதிரி..??!!

Anonymous said...

பாட்டு கேட்டேன். நல்லா இருக்கு. எப்பவோ கேட்டது. செம்பருத்திப்பூவே பாட்டு ஸ்ரீமதி கிட்ட இல்லியா.

RaGhaV on October 22, 2009 at 10:06 AM said...

:-)

கார்க்கி on October 22, 2009 at 11:35 AM said...

:)))) தராசண்னே

தா.பி. உஙக்ள் மாதிரி ஆயிட்டு வறேன்னு சொல்லுங்க

அருணா மேம் என்ன ஆச்சு?

பட்டிக்காட்டான், உபயம் செஞ்சா போட்டுதானே ஆகனும் ? :))

அம்மிணி, இல்லையாம்

நன்றி ராகவ்

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 2:34 PM said...

பதிவு ரசனை. ஆனா பாட்டு சரி மொக்கை.. சை!

Karthik on October 26, 2009 at 1:03 PM said...

//நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு

”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப் பாட்டுமே இல்லையேடா!!//

உஸ்ஸ்.. கொல்றீங்க.. முடியல.. ;))))))

இந்த கமெண்ட்ட சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்கப்பா..!

maheswaro on August 20, 2010 at 5:43 PM said...

meal pathivu

B on August 20, 2010 at 6:39 PM said...

http://www.youtube.com/watch?v=eBRzyu7e-os

சுசி on August 20, 2010 at 8:43 PM said...

இது என்ன புது முயற்சி??

பழைய கமன்ஸோட??

Busy on August 21, 2010 at 2:43 PM said...

Special Video for U
http://www.youtube.com/watch?v=LuaL42XdRXU

Nataraj on August 22, 2011 at 12:14 AM said...

திரு.மூர்த்தியில் நம்ம பேவரிட் மஸ்து மஸ்து மஸ்து..தான். ரம்பாவுக்கு முன்னோடி/முன்னாடி ரவளி. இன்ஷ்யூர் செய்யப்பட வேண்டிய விஷயத்தில்.

 

all rights reserved to www.karkibava.com