Oct 19, 2009

கார்க்கியின் காக்டெயில்(சினிமா ஸ்பெஷல்)


 

  தீபாவளிக்கு இந்த முறை சரவெடி போல் படங்கள் வெளியாகவில்லை. மூன்றே மூன்று ஒத்தை வெடிகள்தான். அதிலும் லட்சுமி வெடியாக இருக்குமென எதிர்பார்த்த ஜகன்மோகினி டிரெயிலர் பார்த்தவுடனே அது கேப் வெடி என்பது தெரிந்துவிட்டது. அடுத்து மார்க்கெட்டுக்கு வரும் புதுவகையான வெடியாக இருக்குமென எதிர்பார்த்த பேராண்மை ஓரளவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் என்கிறார்கள். வசூல் இல்லாவிடினும் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு உத்தரவாதம் என்கிறார்கள்.கடைசியாக ஆட்டம் பாமாக கருதப்பட்ட ஆதவன். நானும் பார்த்துவிட்டேன். பதிவர்களின் விமர்சனத்தாலும், பார்த்தவர்கள் சொன்னதை வைத்தும் நீங்களே முடிவு செய்திருப்பீர்கள். அயன் என்ற ஒரு வெற்றியே சூர்யாவை இப்படி மாற்றிவிட்டது என்றால்.. சரி விடுங்க. எல்லோரும் மறக்காம படம் பாருங்க. குறிப்பா கடைசி 15 நிமிடங்கள். மிஸ் பண்ணாதிங்க மக்கா

**********************************

அடுத்து தீபாவளி அன்று தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆன படங்கள். முதலில் ஆனந்த தாண்டவம், எனது புரொஃபைலில் எனக்கு பிடித்த நாவல்களில் பிரிவோம் சந்திப்போம் இருந்ததை சில கவனித்திருக்கக் கூடும். அதனாலே இந்தப் படம் வந்த போது நான் பார்க்கவில்லை. இந்த முறை சில காட்சிகள் பார்க்கலாமே என்று அமர்ந்தேன். சாமீ.. ரகுவைப் பார்த்தவுடன் முதல் அட்டாக். மதுமிதாவாக தமன்னா ஓக்கே என்றாலும், அவரை இயக்குனர் காட்டிய விதம், இரண்டாவது அட்டாக். மூன்றாவது அட்டாக்தான் சூப்பர். மதுமிதா அந்த அமெரிக்கா மாப்பிள்ளையுடன் அறையில் இருந்து வெளியே ஓடி வருவார். எதிரில் ரகு. மதுமிதாவின் டீஷர்ட்டில் அமெரிக்க நாட்டுக் கொடி. அந்த கொடியின் இடது பக்கம் மட்டும் கசங்கியிருக்கும்.இதையெல்லாம் நுணுக்கமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.. ஆனால் அதற்கு முந்தைய சீன்களில் ரகுவின் மாமனார் அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவாராம். ஆனால் ரகுவின் அப்பா பையன் ஃபோனே செய்யலைன்னு புலம்புவாராம். பணத்தை ரகுவிற்கு மணி ஆர்டர் செய்வாராம். சேனலெல்லாம் மாற்றவில்லை. ஆஃப் செய்துவிட்டு போய் ஃப்ளாட் ஆகிட்டேன்.

**********************************

அடுத்தப் படம் தான் டாப். நான் என் உறவினர் வீட்டுக்குள் நுழைந்தபோது அனைவரும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நல்ல வேளை.. விளம்பர நேரமென்பதால் வாங்க வாங்க என்றார்கள். பிறகு படம் போட்டபின் என் அம்மாவும் படத்தில் லயிக்க தொடங்கினார்கள். படம் முடியும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை. 5.30க்கு மேல் படம் முடிந்தபின்தான் எனக்கு காஃபியே கிடைத்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தை அனைவரும் குறைந்தது இரண்டு முறை ஏற்கனவே பார்த்து விட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூன்று மணி நேரம் கட்டி போடுவது என்பது சாதாரண விஷயமா? இப்போது கூட பண்டிகை நாட்களில் அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். அது போலொரு படம் அவருக்கு மட்டுமல்ல., இனி யாருக்கும் கிடைக்காது என்பது மட்டும் உண்மை. என்ன படமா? போங்க பாஸ்..

**********************************

இன்று காலை ஹைதைக்கு வந்தவுடன் ஒரு ஆச்சரியம். வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பின் சீட்டில் நடுவில் அமர்ந்திருந்தேன். ஓரத்தில் அமர்ந்தால் முன் சீட்டுக்கு தள்ளப்படுவோம். விஷயம் தெரியாதவர்கள் இதை படிச்சுக்கோங்க.தாடியுடன் முரட்டுத்தனமான ஒருவர் வந்து எக்ஸ்க்யூஸ் மீ என்றார். அப்படி உட்காருங்க என்பது போல் கண்ணசைத்தேன். அவர் என்னையே உற்றுப் பார்ப்பது போல் தெரிந்தது. என்னடா இது வம்பு என்றபடி வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். “Great surpise தெரியுங்களா?” என்றது ஒரு குரல். அவரா என்பது போல் திரும்பினால் அவர்தான். அட்ரீனலின் ஆறாக பெருக்கெடுத்து ஓடத் தயாரான நேரத்தில் கை கொடுத்தபடி சொன்னார் ” நான் தாங்க பார்த்தசாரதி.நீங்க பிளாகர் கார்க்கிதானே?” ஆவ்வ்.. புட்டிக்கதைகள் புண்ணியத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு நட்பு. இந்த வாரம் மீண்டும் சந்திப்பதாக முடிவெடுத்தோம். இந்த வாரம் எப்படியாவது புட்டிக்கதைகள் எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

29 கருத்துக்குத்து:

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 19, 2009 at 11:23 AM said...

பல வருடங்கள் கழித்து தொலைக்காட்சியில் சினிமா பார்த்தேன். கலைஞரில் தசாவதாரம். விளம்பர இடைவெளிகளுடன் 4.30 மணிநேரத்திற்கு மேல் படம் போனது. நடுவில் சிகரெட், ஒன்றிரண்டு பெக் என்று வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.

Karthik on October 19, 2009 at 11:46 AM said...

நான் இந்த தீபாவளியை சிறப்பு நிகழ்ச்சிகள் எதையும் பார்க்காமல் கொண்டாடினேன்.. நோபல்..ச்சீ..ஆஸ்கர்..ச்சீ கின்னஸுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா? :)

//இந்த வாரம் எப்படியாவது புட்டிக்கதைகள் எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

Yay!! :))

Anbu on October 19, 2009 at 11:54 AM said...

ஆதவன் நானும் முதல் நாளே பார்த்தேன்...சூர்யாவின் ரசிகன் என்பதனால்...படம் நல்லா இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்..

நீங்கள் கேபிலார் அண்ணன் பதிவினில் சொன்ன மாதிரி பேராண்மை மட்டுமல்ல ஜெகன்மோகினி கூட ஆதவனுக்கு ஆப்படிக்க வாய்ப்புண்டு...

வரட்டும் வேட்டைக்காரன் பார்ப்போம்..

தராசு on October 19, 2009 at 12:19 PM said...

ம். சரி,, சரி,,,

//இந்த வாரம் எப்படியாவது புட்டிக்கதைகள் எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.//

அதச் செய்யுங்க முதல்ல....

maheswaro on October 19, 2009 at 12:28 PM said...

that film is GILLI
right a?
mahes

யோ வாய்ஸ் (யோகா) on October 19, 2009 at 12:37 PM said...

டீவி முன்னுக்கே தீபாவளி சகா?

நர்சிம் on October 19, 2009 at 12:54 PM said...

காக்டெயில் கலந்த விகிதாச்சாரம் கச்சிதம் சகா.

சுசி on October 19, 2009 at 1:44 PM said...

கில்லி கில்லிதான் கார்க்கி...

ஆ.தா ஆ.கோ காரணமா கடைசி வர பாத்தேன். :(((

எங்க பப்லுவ காணோம்???

டம்பி மேவீ on October 19, 2009 at 2:03 PM said...

pudikadhaigal soon eluthunga

ippadikku

trichy karki rasigar mantram

டம்பி மேவீ on October 19, 2009 at 2:05 PM said...

ஆனந்த் தாண்டவம் படத்தை அரங்கில் பார்த்த பொழுது எனக்கும் அதே பீலிங் தான்

டம்பி மேவீ on October 19, 2009 at 2:05 PM said...

DIWALI WISH SOLLA PHONE PANNINEN ... NEENGA YEDUKKALA SAGAA

டம்பி மேவீ on October 19, 2009 at 2:07 PM said...

TV PROGS YETHUM NAAN PARKKAVILLAI .... ORU BOOK FULLA READ PANNI MUDICHEN

ஜெனோவா on October 19, 2009 at 2:21 PM said...

வழக்கம்போல் காக்டைல் அருமை !!
ஆதவன் பாக்கலாமா வேண்டாமா தல? ஒரு மாதிரியா இருக்கே நீங்க சொல்ற "சரி விடுங்க. எல்லோரும் மறக்காம படம் பாருங்க" ;-)) சொல்லுங்க தல இந்த பாழாப்போன ஊர்ல டிக்கெட்ட இருநூறு ௦௦ ரூவாய்க்கு விக்கிரானுவ !!

அப்புறம் அந்த கில்லி மட்டரு -- உண்மையிலே கில்லிதான் போங்க !!

வெண்பூ on October 19, 2009 at 2:25 PM said...

சென்னை வந்துட்டு ஃபோன் பண்றேன்னு சொன்ன ஒரு மானஸ்தனை எதிர்த்து நான் வெளிநடப்பு செய்யலாம்னு இருந்தேன். ஆனா பதிவோட கடைசி வரிக்காக சும்மா விடுறேன். :)

வந்தியத்தேவன் on October 19, 2009 at 2:28 PM said...

என்னுடைய விருப்பமான நாவல்களில் ஆனந்ததாண்டவமும் ஒன்று ஆனால் அதனைப் படமாக்கி நாசமாக்கிப்போட்டார்கள். மதுமிதாவாக தமன்னா ஓகேதான் ஆனால் வாசிக்கும் போது இருந்த மதுமிதாவின் துள்ளல் தமன்னாவிடம் இல்லை. ரகு பாத்திரத்திற்க்கு அந்த நடிகர் பொருத்தமேயில்லை.

அந்தப் படம் தசாவதாரம் தானே. :-)

கார்ல்ஸ்பெர்க் on October 19, 2009 at 2:48 PM said...

//என்ன படமா?//


- என்ன கேள்வி இது?? போங்க பாஸ்..

ஆதவன் ஆப்பு, சிவாஜி'ல ரஜினி சொல்ற மாதிரி ஆயிடுச்சு.. 'திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி Red Giant பொத்திகிட்டு இருக்க வேண்டியது தான்'..

கார்ல்ஸ்பெர்க் on October 19, 2009 at 2:50 PM said...

Are you not an active Orkut user?? I hardly find you online..

தீப்பெட்டி on October 19, 2009 at 3:43 PM said...

காக்டெயில் சரியான மிக்ஸிங்..

கார்க்கி on October 19, 2009 at 4:17 PM said...

சுந்தர்ஜி, டிவி கமெண்ட்டெல்லாம் போடுவிங்களா????????

கார்த்திக், அப்ப உனக்கு சிறப்பு தீபாவளின்னு சொல்லு

அன்பு, இப்பவே வேட்டைக்காரனுக்கு விமர்சனம் எழுதிவிட்டு காத்திருப்பது போல் தெரியுதே!! :))

தராசண்ணே, :))

அதே மஹேஷ்வரி

இல்ல யோகா. அதிகம் இல்லை.

நன்றி நர்சிம்

சுசி, பாதி பார்க்கவே முடியல.. இதுல முழுசா??? பப்லு ஊருக்கு போயிருக்கார்

மேவீ, மொபைல் பிரச்சினை. உங்க நம்பர மெயில் அனுப்புங்க...என்ன புக் படிச்சிங்க?

ஜெனோவா, என்னைக் கேட்டா சூர்யாவுக்காக பார்க்கலாம். ஆனா கொஞ்சம் போரடிக்கத்தான் செய்யும்

வெண்பூ, ஃபோன் பிரச்சினை ஆயிடுச்சு. சரியானவுடனே தான் நம்பர் எடுக்க முடியும். தீபாவளிக்கு யாருக்குமே ஃபோன் பண்ணல சகா :((

வந்தி, சரியா சொன்னிங்க. ஆனா தசாவாதராமா? அதை கமலே இன்னொருதடவை பார்க்க மாட்டாரு

கார்ல்ஸ்பெர்க், அவங்க அடுத்த படமும் சூர்யாவுடன் தானாம். முருகதாஸுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆர்குட் அடிக்கடி போவதில்லை. :)

நன்றி தீப்பெட்டி

Cable Sankar on October 19, 2009 at 6:15 PM said...

/வந்தி, சரியா சொன்னிங்க. ஆனா தசாவாதராமா? அதை கமலே இன்னொருதடவை பார்க்க மாட்டாரு//

ithu உனக்கே ஓவரே இல்ல கார்க்கி..

கும்க்கி on October 19, 2009 at 7:08 PM said...

வெண்பூ said...

சென்னை வந்துட்டு ஃபோன் பண்றேன்னு சொன்ன ஒரு மானஸ்தனை....

அப்படியே போன் பண்ணீட்டாலும்.....

அத்திரி on October 19, 2009 at 9:32 PM said...

//அது போலொரு படம் அவருக்கு மட்டுமல்ல., இனி யாருக்கும் கிடைக்காது என்பது மட்டும் உண்மை. என்ன படமா//

ஓகே சகா போலாம் ரைட்டு...........

டம்பி மேவீ on October 20, 2009 at 8:20 AM said...

nan paditha book "RULE THE WORLD-THE WAY I DID"

அனுஜன்யா on October 20, 2009 at 10:06 AM said...

கில்லி (இது இரண்டாம் முறை) பார்த்தேன். என் சகோதரி மகனுடன் (அஞ்சாவப்பு). Rivetting stuff. Vijay all the way.

ஆனா, எத்தனை நாள் இப்படி பழம்பெருமை பேசியே காலத்த ஓட்டப் போற :))))

அனுஜன்யா

கல்யாணி சுரேஷ் on October 20, 2009 at 11:01 AM said...

என்னாச்சு கார்க்கி, தீபாவளியும் அதுவுமா பயங்கர சோதனை போல இருக்கு.

விக்னேஷ்வரி on October 20, 2009 at 12:20 PM said...

நல்லாருக்கு.

முரளிகண்ணன் on October 21, 2009 at 6:53 AM said...

:-))

Anonymous said...

ஆதவன் சூர்யாவுக்காக கூட பாக்கமுடியாது போலிருக்கு. இந்த தீபாவளிக்கு ஜெயம் ரவி கட்சி பக்கம் தாவிடலாம்னு இருக்கேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 4:18 PM said...

ஆனா, எத்தனை நாள் இப்படி பழம்பெருமை பேசியே காலத்த ஓட்டப் போற :)))
//

ஹிஹி..

 

all rights reserved to www.karkibava.com