Oct 16, 2009

தீபாவளி...டெய்லர்..முழுப்பேன்ட்.. "படுபாவி"


அப்படியே ஒரு 20 வருஷத்துக்கு பின்னாடி போங்க..

தீபாவளி வரப்போகிறது என்பதெல்லாம் மதனுக்கு காலண்டரைப் பார்த்தோ,அது நவம்பர் அக்டோபரில்தான் வருமென்றோ தெரியாது. டெய்லர் பாபு வீட்டுக்குள் வரும்போதுதான் தெரியும். காதில் பென்சிலோடும் கையில் நோட்டோடும் அவர் வரும்போது டெய்லரின் டிர‌யிலராக காஜா எடுக்கும் சிறுவன் குட்டி பாபுவும் வருவான்.

மனைவி ஒன்று மற்றது இரண்டு என்று இருக்கும் டெய்லர் ஏனோ தைப்பதில் ஆண்கள் மட்டும் என்று சொல்வார். 12..25..16.. என்று இன்ச் டேப்பால் அளந்துக் கொன்டே அவர் சொல்ல குட்டி பாபு, "குடியை மறக்க இங்கே வாருங்கள்" என்ற துண்டு நோட்டிஸின் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். மதன் மெல்ல டெய்லரை அழைத்தான். அவர் என்னடா என்பது போல் குனிய அவர் காதில் கிசுகிசுத்தான் "போன வருஷம் என் டிராயிரல பட்டன் வைக்காம விட்டுட்டிங்க. பக்கத்த் வீட்டு மாமி பார்த்துட்டு ஷேம் ஷேம் நு சொன்னா. இந்த தடவ மறக்காதீங்க மாமா".

"சரி தம்பி. நீயும் வள‌ர்ந்துட்ட. இந்த தடவ முழுப்பேன்ட்டா தைச்சிடுவோம்" என்று ஆசையை வள‌ர்த்தார்.

"டேய் போன வருஷம் மாதிரி தீபாவளி அன்னைக்கு காலைல கொண்டு வராதடா. ஒரு நாள் முன்னாடியே வந்துருனும்".இது தாத்தா. தலையை சொறிந்துக் கொண்டே "வந்துருங்க" என்று இழுத்தார் டெய்லர். தாத்தா முன்பணம் கொடுக்க கிளம்பினார் டெய்லர். இந்த தீபாவளிக்கு முழுப்பேன்ட் என்று தெரு முழுக்க சொல்லிக் கொண்டு திரிந்தான் மதன்.

தீபாவளியும் வந்தது. டெய்லரை மட்டும் காணவில்லை. பேன்ட்டில்லாமல் வெளியே போக மாட்டேன் என்று மதன் வீட்டுக்குள்ளேயே திரிந்தான். ஒரு வழியாய் காலை 11 மணிக்கு துணியுடன் வந்தான் குட்டி பாபு. தாத்தாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போதே தன் பேன்ட்டை உருவிக் கொண்டு ஓடினான் மதன். கச்சிதமாய் தைத்திருந்தார் டெய்லர். வீட்டில் யாரிடமும் காட்டாமால் தெருவுக்கு ஓடி வந்தான். எதிரில் மாமி வர அவசர அவசரமாய் பட்டனை தேடினான் மதன். பட்டன்கள் இருப்பதை உறுதி செய்தவன் ஹாயாக பாக்கெடுக்குள் படு ஸ்டைலாக கைகளை விட்டான்.

"படுபாவி" . கைகள் தொடையை தொட்டன. இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.

*****************************

சாளரத்தின் சகாக்களுக்கும், சகிக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

20 கருத்துக்குத்து:

maheswaro on October 16, 2009 at 10:35 AM said...

i am first

replay matter

mahes

சுசி on October 16, 2009 at 11:19 AM said...

மலரும் நினைவுகள்???
நான் மீள் பதிவ சொன்னேன் கார்க்கி.

நர்சிம் on October 16, 2009 at 12:12 PM said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

//சுசி said...
மலரும் நினைவுகள்???
நான் மீள் பதிவ சொன்னேன் கார்க்கி.
//

பதில் தேவை சகா.எனக்கும் இந்த டவுட்டு வந்தது.


//replay matter

mahes//

மீள் பதிவுங்கறதை இப்படிச் சொல்றீங்களா?

*****

பதிவு பிடித்திருந்தது சகா.

துஷா on October 16, 2009 at 12:26 PM said...

பின்னாடி போங்க என்று படிக்கும் போதெ, இதை முன்னாடி படித்த ஞபாகம் வந்துவிட்டது அண்ணா

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தராசு on October 16, 2009 at 12:52 PM said...

பட்டாசு வெடிச்சாச்சா??????

பாலா on October 16, 2009 at 12:55 PM said...

;)
hahahahahahahahahhahahahahaha

பிரியமுடன்...வசந்த் on October 16, 2009 at 1:17 PM said...

தீபாவளி வாழ்த்துக்கள் சகா

இராகவன் நைஜிரியா on October 16, 2009 at 1:22 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பட்டாம்பூச்சி on October 16, 2009 at 1:46 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :)

கார்ல்ஸ்பெர்க் on October 16, 2009 at 1:51 PM said...

என்ன, 'அனைவருக்கும் வாழ்த்துகள்'ன்னு ஒரே வார்த்தைல முடிச்சிட்டீங்க? நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே :(

பின்னோக்கி on October 16, 2009 at 1:56 PM said...

எதாவது ஒண்ண மறந்துட்டான் உங்க டெய்லர். ஆனா நீங்க உங்க பதிவ மறக்காம மீள் பதிவிடுறீங்க. வாழ்த்துக்கள்.

Truth on October 16, 2009 at 2:00 PM said...

ஹ ஹ ஹ...

சுசி on October 16, 2009 at 2:05 PM said...

சொல்ல மறந்திட்டேன்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஜெஸ்வந்தி on October 16, 2009 at 2:49 PM said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா on October 16, 2009 at 3:45 PM said...

ஒரு மீள் தீபாவளி வாழ்த்துக்கள்!

வேந்தன் on October 16, 2009 at 3:47 PM said...

உங்களுக்கும் எனது இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.

Karthik on October 16, 2009 at 9:37 PM said...

//அப்படியே ஒரு 20 வருஷத்துக்கு பின்னாடி போங்க..

அவ்வ்.. நான் காணாம போயிடுவேனே?! அப்ப பிறக்கவே இல்லைல?

மீள்ஸ்தான்.. ஒரிஜினல்ல கொஞ்சம் விவகாரமா முடிச்சிருந்தீங்கள்ல?! :)))

தீபாவளி நல்வாழ்த்துகள் :)

மங்களூர் சிவா on October 16, 2009 at 11:39 PM said...

/
"படுபாவி" .
இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.
/

:))))))))))
ROTFL

taaru on October 19, 2009 at 10:40 AM said...

தீவாளி வாழ்த்துக்கள் தல....
மறுபடியும் போட்டாலும்.. நெறையா நியாபகப் படுத்துது...

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 4:26 PM said...

வாழ்த்து சொல்ல நல்ல கதை சொல்றீங்கப்பா.! வாழ்த்துகள்.!!

(ஹிஹி.. வழக்கம் போல கொஞ்சம் லேட்டாயிருச்சு.!)

 

all rights reserved to www.karkibava.com