Oct 14, 2009

தீபாவளி.. திவால்(லி) ஆகிப் போனதே


  streetchildren_deepavali

   பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிழைக்க வந்த இடத்தில் என்ன கொண்டாட்டம் இருக்கப் போகிறது?  கால ஓட்டத்தில் காணாமல் போகும் பட்டியலில் இந்த தீபாவளியும் சேர்ந்துக் கொள்ளும் நாள் இதோ…. பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது. இல்லையேல் இந்திய தொலைக்காட்சிகளிலே….. போய் விடும் தீபாவளி. இத்தனை வருடம் கழித்தும் தீபாவளி என்றதும் எனக்கு திண்டிவனம்..அந்தத் தெரு.. அடுத்த நாள் அம்மாவின் கிராமம். இவைதான் நினைவுக்கு வருகிறது. இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது.

     எல்லாத் தெருவிலும் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். ரஜினி கமல் என்றோ, அந்த முக்கு இந்த முக்கு என்றோ, பெரிய பசங்க சின்ன பசங்க என்றோ… சரியாக இரண்டு கோஷ்டிகள்தான் இருக்கும். தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே ஊசிவெடியும், அரியாங்குப்பம் நாட்டு வெடியும் நாச வேலை செய்து கொண்டிருக்கும். தனியாக வரும் அந்த டீம்காரனின் மீது மாடியிலிருந்து வெடியை கொளுத்தி போடுவது, பதிலுக்கு நாம் அந்த பக்கம் போனா மாட்டுசாணத்தின் அடியில் வெடியை வைத்து அவர்கள் நம்மை வடிவேலாக்குவது... தீபாவளியன்று யார் வீட்டுக்கு முன் நிறைய பேப்பர் என்பது வரை நீடிக்கும் அந்தப் போர்… போரடிக்காத போர். இதற்காகவே லட்சுமி வெடியும், யானை வெடியும் நிறைய இருக்கும். பேப்பர் அதிகம் சுற்றப்பட்டிருக்கும் காரணத்தால்.

    மாமா வாங்கி வரும் 100வாலாவை ஒவ்வொன்றாக  பிரித்துப் போட, அதில் பாதிக்கு மேல் திரி பிடுங்கி வர, மீதியில் பாதி புஸ்ஸாகிவிட, மிச்சமிருக்கும் 20 வெடிகளை ஒரு மணி நேரமாக வெடிப்பதுண்டு. இப்போதெல்லாம் ஒத்தை வெடியை நாலு வயது சிறுவன் கூட ஒரே நேரத்தில் அஞ்சு வெடியின் திரியை சேர்த்துதான் வெடிக்கிறான். ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.

     தெருவில் எந்த வீட்டு வராந்தா பெரியதாக இருக்கிறது அங்கே கூடும் எங்கள் பட்டாசு மேசை மாநாடு. அனைவரது பட்டாசுகளையும் ஒன்றாக்கி  வெடிக்க தொடங்கிய உடனே.. அதுவரை அமைதியாக இருக்கும் கிழவி.. ”டேய் அந்தப் பக்கம் போய் வெடிங்கடா” என்று வெடிச்சத்தத்தை விட அதிகமாக கத்தும். யார் கேட்பது? எவனாவது கையால் வெடிக்கிறேன் என்று  கொளுத்திப் போட, அது சரியாய் கிழவியின் அருகில்தான் விழும்.அது ஊசி வெடிதான் என்றாலும் பாம் விழுந்தது போல் அலறும் கிழவி. கைகளில் சிக்கும் பட்டாசை எடுத்துக் கொண்டு அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பமாகும். இருக்கும் எல்லா பட்டாசும் டுமீல் ஆனவுடன் தொடங்கும் அடுத்த புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி.

    இன்னும் கொஞ்சம் பெரிய பசங்க வேறு வேலையில் பிசியாக இருப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் நடந்துக் கொண்டிருக்கும் பேனர் தயாரிப்பு. ரஜினியின் படம் ஒரு வழியாக அடையாளம் காணும் அளவுக்கு வந்ததும், கீழே பெயர்கள் எழுதும் படலம் தொடங்கும். ரஜினியின் படத்திகு வெகு அருகில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஏக்கமும். “இந்த திரைப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி- KILLER BOYS” என்று முடித்து, கண்களை வரைவதற்குள் விடிந்து விடும்.  அந்த முக்கில் கையில் லட்டுடன் அபிராமியை தேடும் கமலை வரைய மனமில்லாமல் சோர்ந்து போயிருப்பார்கள். அதிலே பாதி வெற்றி பெற்றுவிட்டு, காலை ஆறு மணிக்கு ஆட்டம் பாம் அலறும் இந்த முக்கில்.

இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு செய்து பார்க்க பட்டாசு மட்டும்தான் இருக்கு. டமால்………….

இன்னைக்கு வறேண்டா பப்லு. மாடியில் இருந்து நீயும் நானும் மட்டும் ”அவுட்” விட்டு மகிழலாம்.

சாளரத்தின் சகாக்களுக்கும், சகிக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

39 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on October 14, 2009 at 10:03 AM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்க்கி

தாரணி பிரியா on October 14, 2009 at 10:05 AM said...

எங்கள் ஊர் இன்னும் 50% கிராமமாகவே இருப்பதால் இந்த அனுபவங்கள் எங்களுக்கு இப்பவும் காண கிடைக்கிறது. தீபாவளி அன்று டிவி முன் தவம் இருப்பவர்கள் குறைவாகதான் இருப்பாங்க :)

Anbu on October 14, 2009 at 10:07 AM said...

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா..

தாரணி பிரியா on October 14, 2009 at 10:08 AM said...

பப்லுவுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிடுங்க. எல்லோரும் பார்த்து பட்டாசு வெடிங்க ")

விக்னேஷ்வரி on October 14, 2009 at 10:50 AM said...

ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு. //

நல்லாருக்கு.

எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா //

அப்போவிருந்தே ராதிகா தானா.... :P

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் யூத்துனு சொல்லிட்டுத் திரியப் போறீங்க. அடுத்த தீபாவளி தலை தீபாவளியாக வாழ்த்துக்கள்.

சுசி on October 14, 2009 at 11:13 AM said...

சேம் ப்ளட் கார்க்கி...
பதிவ படிக்கவே தீபாவளி கொண்டாடினா மாதிரி இருக்கு.
உங்களுக்கும் பப்லுவுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி.

☀நான் ஆதவன்☀ on October 14, 2009 at 11:20 AM said...

தீபாவளி வாழ்த்துகள் :)

maheswaro on October 14, 2009 at 11:41 AM said...

HAPPY DIWALI TO YOU KARKI AND DEAR BABLU
MAHESWARI

கல்யாணி சுரேஷ் on October 14, 2009 at 11:55 AM said...

தீபாவளி வாழ்த்துகள்.

Romeoboy on October 14, 2009 at 12:00 PM said...

தீபாவளி வாழ்த்துக்கள் சகா..

ஜெனோவா on October 14, 2009 at 12:01 PM said...

உங்களுக்குக்கும் , குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி !!!

நல்ல பகிர்வு , ரசித்துப் படித்தேன் ...

நன்றி

தீப்பெட்டி on October 14, 2009 at 12:01 PM said...

//பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது//

நூறு சதவீதம் உண்மை..

தீபாவளி நல்வாழ்த்துகள் சகா..

எம்.எம்.அப்துல்லா on October 14, 2009 at 12:03 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்க்கி

//சகிக்களுக்கும் //

அனர்த்தம் ஆகுது.மாத்து.

:)

யோ வாய்ஸ் (யோகா) on October 14, 2009 at 12:04 PM said...

தீப திருநாள் வாழ்த்துக்கள் சகா

டம்பி மேவீ on October 14, 2009 at 12:25 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு on October 14, 2009 at 12:28 PM said...

நல்லா இருக்கு, எல்லாருக்கும் பொது நினைவுகள் இவை. நல்ல பதிவு. நன்றி.

பட்டாம்பூச்சி on October 14, 2009 at 12:28 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்க்கி :)

கார்க்கி on October 14, 2009 at 1:15 PM said...

வாழ்த்துகள் தா.பி. கோவை கிராமமா?

வாழ்த்துகள் அன்பு

வாழ்த்துகள் விக்கி. ஹலோ, சும்மா இருங்க :))

வாழ்த்துகள் சுசி. நீஙக்ளாவது பதிவ பத்தி சொன்னிங்களே!!!

வாழ்த்துகள் அம்மிணி

வாழ்த்துகள் ஆதவன்

வாழ்த்துகள் மஹேஷ்வரி

வாழ்த்துகள் கல்யாணி

வாழ்த்துகள் ரோமியோ

வாழ்த்துகள் ஜெனோவா

வாழ்த்துகள் தீப்பெட்டி.ம்ம்

வாழ்த்துகள் அப்துல்லாண்ணே. அதெல்லாம் ஆகாது. சாளரத்துக்குன்னுதானே போட்டு இருக்கேன்

வாழ்த்துகள் யோகா

வாழ்த்துகள் மேவீ

வாழ்த்துகள் பித்தன்

வாழ்த்துகள் பட்டாம்பூச்சி

கார்ல்ஸ்பெர்க் on October 14, 2009 at 1:21 PM said...

ஏற்கனவே இந்த வருஷம் தீபாவளி நம்ம ஊருல இல்லன்னு ஆகிப்போச்சு.. இதுல நம்ம படம் வேற Delay ஆயிடுச்சு :(
ஆமா, நவம்பர் 6th confirmed'a??

உங்க எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்'ணா :))

பட்டிக்காட்டான்.. on October 14, 2009 at 1:45 PM said...

//.. ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு. ..//

நான் ரசித்த வரிகள் சகா..

இசைப்பிரியன் on October 14, 2009 at 1:50 PM said...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

தாரணி பிரியா on October 14, 2009 at 2:07 PM said...

ம் கோவையில இருந்து 23கிமீ தூரம் தள்ளி இருக்கறதாலே எங்க ஊர் கொஞ்சம் போல கிராமமாதான் இருக்கும்

கணேஷ் on October 14, 2009 at 2:10 PM said...

தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா//

பூனை வெளியே வந்திருச்சி... இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி. அப்படியே சித்திக்கும் சொல்லிடுங்க..
(யாருப்பா, அது... சித்தின்னா ராதிகான்னு சொல்றது?)

ராஜா | KVR on October 14, 2009 at 2:39 PM said...

தீபாவளி வாழ்த்துகள் கார்க்கி

rajan on October 14, 2009 at 3:15 PM said...

சகா தீபாவளி நல்வாழ்த்துக்கள். பப்லுவுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிடுங்க.அடுத்த தீபாவளி தலை தீபாவளியாக வாழ்த்துக்கள்.

நர்சிம் on October 14, 2009 at 3:45 PM said...

எல்லா சகாக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா on October 14, 2009 at 5:52 PM said...

இன்னும் முழுசா வரவேயில்லை .அதுக்குள்ளே திவாலா????
/புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி. /

இது இப்பவும் எனக்குப் பிடிக்கும் ஜோதி!!நல்ல மலரும் நினைவுகள்...

செல்வேந்திரன் on October 14, 2009 at 6:48 PM said...

எக்ஸலண்ட் நோஸ்டால்ஜியா சகா! ரசித்துப் படித்தேன்.

கும்க்கி on October 14, 2009 at 7:41 PM said...

சகிக்கள் என்றால் சகித்துக்கொள்பவர்கள் என்று அர்த்தமா ப்ரதர்..?

பப்லுவுக்கு மட்டும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்..

அறிவிலி on October 14, 2009 at 8:20 PM said...

தித்திக்குதே, பிரியாத வரம் வேண்டும் படமெல்லாம் எனக்கு ஏன் ஞாபகம் வருது.

mvalarpirai on October 15, 2009 at 5:44 AM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்க்கி maappi..

jeyaramasamy on October 15, 2009 at 8:41 AM said...

நன்றி கார்க்கி !! தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

இப்போ எதிர் வீட்டுல யாரு வராங்க? :)

Karthik on October 15, 2009 at 1:13 PM said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))

முரளிகுமார் பத்மநாபன் on October 15, 2009 at 2:10 PM said...

//இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது//

//ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு//

சகா என்ன இதெல்லாம்.. அடிச்சி ஆடுங்க. :-) எனக்கு மிகவும் பிடித்துபோன வரிகள்.

இந்த தீபாவளியை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்

Achilles/அக்கிலீஸ் on October 15, 2009 at 10:02 PM said...

பழைய நினைவுகளை நியாபகப்படுத்திட்டீங்க... நன்றி...

தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி.. :))

RaGhaV on October 15, 2009 at 10:12 PM said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கார்க்கி.. :-))

கார்க்கி on October 16, 2009 at 10:18 AM said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 4:33 PM said...

புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி//

மீசை முளைச்சதுக்கப்புறமும் கூட இதப்பண்ணி மீசையை கருக்கிக்கிட்டுதான் இருந்தோம்.. ஹிஹி.!

 

all rights reserved to www.karkibava.com