Oct 13, 2009

கிரிக்கெட், சினிமா,நாவல்,சாரு


 

untitled

  ஒரு வழியாக இந்திய அணிகள் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு சேப்பியன்ஸ் லீகில். முதல் ஆட்டத்தில் மூன்று அணிகளும் வாங்கிய கும்மாங்குத்தை பார்த்தபோது சற்று அதிர்ந்துதான் போனேன். அதுவும் சோமர்செட்டின் தாமஸை சமாளிக்க முடியாமல் திணறிய சேப்பியன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. இதில் பெரிய ஜோக்கு என்னவென்றால் கோப்பையையே வாங்கிவிட்ட சார்ஜர்ஸ், இன்னும் ஒரு முறை கூட சொந்த மண்ணில் ஜெயிக்க வில்லை. எட்டாவது முறையாக தொடர்ந்து சொந்த மண்ணில் தோல்வியை தழுவினார்கள்.

   தழுவினார்கள் என்றவுடன் சினிமாதான் நினைவுக்கு  வருகிறது.பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு கூட்டத்தில் நடிகர்களும், நடிகைகளும் பேசிய பேச்சைப் பார்த்த போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்  இருந்தது. இதில் இயக்குனர்கள் பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களும் உண்மைக்கு வெகு தூரத்திலே எப்போதும் இருக்கிறார்கள். படைப்பாளி என்பவன் குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவனால் நிச்சயம் ஒரு நல்லப் படைப்பாளியாக இருக்க முடியாது என்பார்கள். இந்த சினிமாக்காரர்கள் யாருமே அப்படியில்லை. அப்படியென்றால் சினிமாக்காரர்களை படைப்பாளிகள் என்று சொல்ல முடியாதா? பின் யார் தான் படைப்பாளிகள்?

    படைப்பாளிகள் என்றவுடன் மேலே சொன்ன கருத்தை சொன்ன கோபிகிருஷ்ணன் நினைவுக்கு வருகிறார். அவரின் ”இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!” சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் தூயோன் சிறுகதை தொகுப்பை தொடர்ந்து இதைப் படித்தபோது ஆயாசாமாக இருந்தது. கிட்டத்தட்ட 20 பாத்திரங்களை சபீனா போட்டு விளக்குகிறார். அதுவும் அவர் விவரித்த விதம் அனைவருக்குமே  ஒரே மாதிரி இருப்பது இன்னும் சிரமம். “ நேர்த்தியாக உடை அணிவார்”, “தலையை நேராக வாருவார்” , “சிகரெட்(அ) பீடி புகைப்பார்” என்பது போன்ற விவரணைகள் எத்துணை முறை வருகிறது என்பது நினைவிலில்லை. சற்று போரடிக்கும் போதெல்லாம் கிளர்ச்சியாக எதையாவது எழுதி தொலைத்துவிடுகிறார். நாவலில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், பதிவில் நாம் சுட்டி கொடுப்பது போல், பின் இணைப்பாக அவரின் சிறுகதைகளை(கதைக்கு தொடர்புடைய) கொடுத்தது வித்தியாசமாக இருந்தது. மற்றபடி என் பார்வைக்கு,  கோபிகிருஷ்ணன் அந்தக் கால சாரு.

   சாரு என்றவுடன் குமுதத்தில் அவர் குடும்பத்துடன் வந்திருந்த விஷயம் நினைவுக்கு வருகிறது.அது இருக்கட்டும்.  உயிர்மையில் வந்திருந்த சாருவின் கட்டுரை ஒன்றை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். வேண்டாம்டா கார்க்கி என்றாலும், நண்பருக்காக முதல் சில பத்தியை படித்தேன்.

“’ வைகை ’ யில் ஏற்பட்ட கெட்ட அனுபவத்துக்குப் பிறகு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால் சசிகுமார் நாயகனாக நடித்த ’ நாடோடிகள் ’ வந்து நெடுநாட்கள் ஆகியும் படத்துக்குப் போகாமல் பதுங்கிக் கொண்டிருந்தேன்.”

வைகை வந்தது ஜூலை கடைசியில். நாடோடிகள் வந்தது ஜூனில். அது கிடக்கட்டும். நாளையே ஒரு வாசகர் சாருவிடம் சென்று “கார்க்கி என்பவரது பிளாகை படித்து நொந்து போய்விட்டேன். அதனால்தான் உஙக்ளையும் நான் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக” சொன்னால், சாரு எப்படி குதிப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

    சாருவுக்கு பிறகு எனக்கு நினைவில் வரும் விஷயங்களை எழுத முடியுமா என்ன? அதனால் ஸ்ஸ்ஸ்ஸ்டாப் செய்கிறேன்.

33 கருத்துக்குத்து:

கல்யாணி சுரேஷ் on October 13, 2009 at 10:13 AM said...

me the first. :)

ஸ்ரீமதி on October 13, 2009 at 10:33 AM said...

ஹ்ம்ம்ம் :))))

புன்னகை on October 13, 2009 at 11:02 AM said...

நீங்க நல்லவரா கெட்டவரா??? :P

இசைப்பிரியன் on October 13, 2009 at 11:02 AM said...

எப்படியாவது சாருவின் கவனத்தை ஒரு முறையேனும் ஈர்த்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள் :-P !!!!

நடக்கட்டும் நடக்கட்டும் ......

taaru on October 13, 2009 at 11:04 AM said...

அண்ணே 'ம்' எல்லாம் 'ப்' பாகி இருக்கு..? இல்ல?!!
படைப்புகளைப் படைப்பதனால் நீ[யும்] படைப்போனே..!!! Yes, நல்ல படைப்பாளி...

விட்ட இடத்துல அடுத்த மேட்டர் பிடிச்சு இருக்கீங்கண்ணே.. அருமை..
நேத்து விட்டதையும் இங்கனக்குள்ள பிடிச்சு இருக்கேங்கன்னே..அதுவும் அருமை...

சுசி on October 13, 2009 at 11:27 AM said...

//பின் யார் தான் படைப்பாளிகள்?//

நீங்கதான் கார்க்கி. இதில டவுட்டு வேறயா? பிரபல பதிவர்கள்...

Indian on October 13, 2009 at 11:37 AM said...

//“’ வைகை ’ யில் ஏற்பட்ட கெட்ட அனுபவத்துக்குப் பிறகு //

What is this?

முரளிகண்ணன் on October 13, 2009 at 11:41 AM said...

கார்க்கி, காக்டெயில் தலைப்பு என்னாச்சு?

கார்க்கி on October 13, 2009 at 11:43 AM said...

வாங்க கல்யாணி மேடம்

என்ன ஆச்சு கவிதாயினி ஸ்ரீமதி???

புன்னகை, நான் ரொம்ம்ம்ப நல்லவன்.

ஹாஹா, இதுக்கு என்னை கெட்ட வார்த்தையாலே திட்டி இருக்கலாம் இசைப்பிரியன்

டாரு,ஹிஹிஹி..

சுசி,இப்போ எபப்டி இருக்கிங்க?

இந்தியன், வைகை என்று ஒருபடம். அந்த படம் பார்த்து நொந்து போனாராம் சாரு..அதனால் நாடோடிகளும் பார்க்கவில்லையாம்

RaGhaV on October 13, 2009 at 1:00 PM said...

Super flow.. :-)

அருமையான cocktail கார்க்கி.. :-)

யோ வாய்ஸ் (யோகா) on October 13, 2009 at 1:11 PM said...

காக்டெயில் பேரை போடலையே சகா?

அமுதா கிருஷ்ணா on October 13, 2009 at 1:40 PM said...

கிரிக்கெட் பார்க்க பிடிக்காது, பார்ப்பவர்களையும் கொஞ்சம் பிடிக்காது, சாரு யாரு?(புட்டியுடன் ஃபோட்டோ வருமே அவரா),,

கார்ல்ஸ்பெர்க் on October 13, 2009 at 1:55 PM said...

//“’ வைகை ’ யில் ஏற்பட்ட கெட்ட அனுபவத்துக்குப் பிறகு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால் சசிகுமார் நாயகனாக நடித்த ’ நாடோடிகள் ’ வந்து நெடுநாட்கள் ஆகியும் படத்துக்குப் போகாமல் பதுங்கிக் கொண்டிருந்தேன்.” //

//வைகை வந்தது ஜூலை கடைசியில். நாடோடிகள் வந்தது ஜூனில்.//


அதான் 'நெடு நாட்கள் ஆகியும்'ன்னு சொல்லிட்டாங்களே, அப்பறம் எதுக்கு நீங்க சொன்னது?? நாடோடிகள் வந்தது ஜூன் 26, வைகை வந்தது ஜூலை 10.. Just 2 weeks gap.. ஒரு வேள, அவரு வைகைய முதல்ல பார்த்திருக்கலாம்.. சொன்னது சரி தான்னு தோணுது..

டம்பி மேவீ on October 13, 2009 at 2:02 PM said...

"புன்னகை said...
நீங்க நல்லவரா கெட்டவரா??? :P"


repeatu........

டம்பி மேவீ on October 13, 2009 at 2:05 PM said...

உங்களுக்கு ஜெயமோகன் முழுமையாக சப்போர்ட் செய்வர் என்று தெரிகிறது.......


(எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஏதோ ஒரு ரஜினி படத்தில் வரும்; இந்த பின்னோட்டத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை)

நர்சிம் on October 13, 2009 at 2:11 PM said...

இதற்கு ‘அந்தாதி’ என்று பெயர்.

ஒவ்வொரு பாராவின் முடிவில் இருக்கும் சொல் அடுத்த பாராவின் ஆரம்பம்.

அருமை சகா.

சாரு மேட்டர் அந்த முழுக் கட்டுரையையும் படிங்க சகா.நல்ல கட்டுரை.

தராசு on October 13, 2009 at 2:22 PM said...

தலைப்பு மாறிப் போச்சே,

ஆமாம், அந்த ...ருவை ஏன் இந்த வாரு வாரு வாருன்னு வாரு.

Romeoboy on October 13, 2009 at 2:42 PM said...

என்ன பாஸ் நாடோடிகள் படம் மாதுரி முடிவில் ஒரு தொடக்கம்ன்னு கலக்கி இருக்கிங்க.

rajan on October 13, 2009 at 3:14 PM said...

கலக்கல் கார்கி!

உரை வடிவில் ஒரு சிலேடை!

அற்புதம்!

Karthik on October 13, 2009 at 3:59 PM said...

சாம்பியன்ஸ் லீக் நான் பாக்கறதே இல்ல.. படிக்கிறேன்னு தப்பா நெனைக்காதீங்க.. :))

சாரு போட்டோ போடலியா?? :))))))

இசைப்பிரியன் on October 13, 2009 at 4:08 PM said...

புது பதிவு போட்டிருக்கோம் ...
வந்து பாருங்க !

கார்க்கி on October 13, 2009 at 4:28 PM said...

நன்றி ராகவ்

யோகா, இது காக்டெயில் மாதிரி :))

அமுதா மேடம், பார்க்க மாட்டிங்க சரி. நாங்க பார்த்தாலும் பிடிக்காதா???

கார்ல்ஸ்பெர்க், நாடோடிகளும் வந்த போது அதை விட்டு வைகை பார்த்தா எப்படி? அப்படியே பார்த்தாலும், வைகை நல்லா இல்லைன்னு நாடோடிகள் பார்க்காம போனாராம். ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்?

ஜெயமோகன் இல்லை டம்பீ, யுவன்

நன்றி நர்சிம். கட்டுரை நல்ல கட்டுரைதான். ஆனால் நான் கேட்பது,வைகை நல்லா இல்லைன்னு நாடோடிகள் பார்க்காம போனாராம். ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்?

தராசு, சும்மாதான். பொழுது போகனுமில்ல :))

நன்றி ரோமியா பாய்

நன்றி ராஜன்

நானும் பார்க்கல கார்த்திக். அந்த ஒரு மேட்ச் மட்டும் கண்ணில் பட்டது. சாரு படமா? வேணாம்ப்பா..

அறிவ், பார்த்து கமெண்ட்டும் போட்டாச்சு

kanagu on October 13, 2009 at 11:36 PM said...

kalavaiyaana padhivu nalla irukku thala...

'charu' itha padicha aadi than povar..

எம்.எம்.அப்துல்லா on October 13, 2009 at 11:53 PM said...

நடத்து, நடத்து :)

Anonymous said...

//கார்க்கி என்பவரது பிளாகை படித்து நொந்து போய்விட்டேன். அதனால்தான் உஙக்ளையும் நான் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக” சொன்னால், சாரு எப்படி குதிப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.//

சொந்த செலவுல சூன்யம் ஏன் :)

இசைப்பிரியன் on October 14, 2009 at 9:52 AM said...

http://i801.photobucket.com/albums/yy293/ajithfanz/Oct09/AjithInterview1.jpg

வேறு ஒரு சைட்டில் பார்த்தது ...

AjithInterview1 to 6

நீங்களே change பண்ணிக்குங்க . இந்த தைரியம் கார்க்கி blog ல யாருக்கு வரும் :) .

இசைப்பிரியன் on October 14, 2009 at 9:54 AM said...

http://i801.photobucket.com/albums/yy293/ajithfanz/
Oct09/AjithInterview1.jpg

the link was cut

முரளிகுமார் பத்மநாபன் on October 14, 2009 at 9:55 AM said...

சகா கலக்கல் இதைகூட தொடரலாமே காக்டெய்ல் மாதிரி, அருமையா இருக்கு

பித்தனின் வாக்கு on October 14, 2009 at 10:14 AM said...

இன்னும் நீ திருந்தலையா? ஆமா பாஸ் உங்ககிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன மூக்கா? பல்லா? எதுக்கும் அடுத்த பதிவர காலாய்க்கிற முன்னாடி பார்த்துகுங்க. ஒரு நன்பனின் அட்வைஸ்.

கார்க்கி on October 14, 2009 at 10:27 AM said...

நன்றி கனகு,

நன்றி அப்துல்லா

நன்றி அம்மிணி.. சும்மா லுல்லுலாயிக்கு

//இந்த தைரியம் கார்க்கி blog ல யாருக்கு வரும் ://

அறிவ், எனக்கு புரியல. என்ன தைரியம்? இதுவரைக்கும் என் பிளாகுல வந்து விஜயை தரக்குறைவா பேசுற ராஜா என்பவரின் பதிவில் சென்று நான் ஏதும் சொன்னதில்லை.எனக்கு பிடிக்காத பின்னூட்டஙக்ளை டெலீட் மட்டுமே செய்கிறேன். ஆனாலும் அவரின் மற்ற பின்னூட்டங்கள் அப்படியேதான் இருக்கு. இன்றும் அபல் அஜித் ரசிகர்கள் எனக்கு நல்ல நணப்ரக்ளா இருக்காங்க. அது வேறு இது வேறு. அப்புறம், பிஸிக்ஸ் 100 மார்க் வாங்கினார் என்பதற்காக பயாலிசி HOD யா போட முடியுமா?

நன்றி முரளி.

பித்தன், என்ன பிரச்சினை உஙக்ளுக்கு? நான் எந்த பதிவரை கலாய்ச்சேன்? அபப்டியே கலாய்ச்சாலும், நான் யாரை செய்றேனோ அவங்க தப்பா நினைச்சதில்லை. நீங்க சாருவை, பதிவர்ன்னு சொல்ல வறீஙக்ளா?அப்படியே இருந்தாலும் அவர நான் என்ன கலாய்ச்சேன்? கேட்ட கேள்வி தப்பா? அப்ப நீங்க பதில் சொல்லுங்க.

இசைப்பிரியன் on October 14, 2009 at 1:57 PM said...

டென்சன் ஆகாதீங்கண்ணே ....
உங்கள குத்தி குத்தி நெறைய பேர் டென்சன் பண்ணி வெச்சிருக்காங்க ....

அந்த பேட்டி நல்லா இருந்துதுன்னேன் , கூட ஒரு ஜிகினா sentence போட்டதுக்கு இவ்ளோ Reactionaa ...

☀நான் ஆதவன்☀ on October 15, 2009 at 10:40 AM said...

//கோபிகிருஷ்ணன் அந்தக் கால சாரு.//

அவ்வ்வ்வ்வ் இருந்தாலும் கோபி கிருஷ்ணனின் எல்லா நாவலையும் படித்து விட்டு இந்த முடிவுக்கு வருவது நல்லது சகா.

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 4:41 PM said...

நியாயம்.!

 

all rights reserved to www.karkibava.com