Oct 8, 2009

அவன்..அவள்..மழை


 

   மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? பாண்டிச்சேரியில் இருப்பது போன்ற நேரான சாலைகளில், மழை நின்றும் நிற்காத தூறலில் காதலியின் கைகோர்த்தபடி நடந்து சென்று கடலை தரிசிப்பது சுகம். சுகம் என்பது கூட சரியா? அந்த பரவசநிலைக்கு ஏற்ற வார்த்தை எனக்குத் தெரியவில்லை. அவள் நனைவாள். அவளோடு இவனும் நனைவான். இருவரும் நடுங்குவார்கள். கூடவே மழையும் நடுங்கும். கைகளை குறுக்கே அணைத்து குளிருக்கு இதமாக்கிக் கொள்ளும் போது தன்னை அணைத்துக் கொள்ள மாட்டாளா என்று அவன் நினைத்துக் கொள்வதுண்டு. கைகளை எடுக்க மாட்டாளா என்று மழையும் நினைப்பதுண்டு.

rain-benches (1)

   மழை வந்து கழுவி சென்ற சாலை சுத்தமாய் இருக்கும். நனைந்து கிடக்கும் பூக்களைக் கூட மிதிக்காமல் மெல்ல நடந்து வருவாள். அவள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை பார்த்து அவனுக்கு பொறாமை எழும். சற்றே வலுவான துளிகள் அவள் கன்னம் வழி உதடுகளை அடையும்போது, வலுவிழுந்து கீழே விழத் தயாராகும். அதுவரை சைவமாக இருந்தவனை அவளது இதழ் வருடும் மழைத்துளி அசைவமாக்கக்கூடும். தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அந்த துளியை கைகளில் ஏந்தியவன் பொறாமை மறந்து கடவுளைக் கண்டவனைப் போல் மூர்ச்சையாகி இருப்பான். தீர்த்தமாய் பருகிக் கொண்டிருப்பான்.

ஆனந்தமாய் ஓடும் ஓடையின்  குறுக்கே இருக்கும் பாலத்தில் அவள் அமர்வாள். எழுதி வைத்த கவிதைத் தாள்களை அந்த மெல்லிய மழையினூடே அவளிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவான் அவன்.

நான் தானே நடக்கிறேன்

அது என்ன என் பின்னால்

உன் நிழல்?

சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும். கவிதை எனப்படும் கிறுக்கல்கள் கொண்ட தாளை முக்கோணமாய் மடிப்பாள். லப்டப் இதயம் டப்டப் என மாறித்துடிக்கும். உதடுகளால் காகிதத்தை ஈரமாக்கி  கிழிப்பாள். எழுதி இருந்த எழுத்துக்கள் அதிசயமாக உயிர்பெற்று உயிர் கொடுத்த அதிசயத்தை ரசிக்கத் தொடங்கும். காகிதம் கப்பலாகி, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் டைட்டானிக் போல பெருமித ஓட்டம் ஓடும். அவள் கைகளால் கப்பல்கள் ஆவதை  விட வேறு என்ன பெருமை கிடைத்து விடக்கூடும் அவன் கவிதைகளுக்கு?

ஓடை வேறு வழியாக கடலை நோக்கி ஓட, இவர்கள் வேறு வழியாக நடக்க துவங்குவார்கள். மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி  அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி. ஒரு செல்ல சிணுங்கல் செய்தபடி மரத்தை விட்டு கடலை நோக்கி ஓடுவாள் அவள். மரமும், இலைகளும் அவனை முறைத்தப்படி நிற்க, பயந்தபடி இவள் பின்னாள் ஓடி ஒளிந்துக் கொள்வான் அவன். அவளிடன் உனக்கு என்னடா வேலை என்று மீண்டும் பெய்யத் தொடங்கும் மழை. முகத்தை வான் நோக்கி உயர்த்தி மழையை ரசித்தபடி நடப்பாள் அவள். முத்தாகிவிட வேண்டும் என்ற ஆசையில் அவள் மேல் விழும் மழைத்துளி.

இறுதியாய் கடலை அடைவார்கள். கரையில் நிற்கும் அவளை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு உயரமாய் எழும்பி வரும் அலைகள். கடலை உசுப்பிவிட, நான் முத்தமிடுகிறேன் பார் என்று கொட்டிவரும் மழை. மழையிலும் கரையாத ஐஸ்கிரீம் சிலை நீயென ஆச்சரியப்பட்டு போவான் அவன். ஆசையோடு ஒரு காலை மட்டும் அலையில் நனைப்பாள் அவள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியம் மட்டுமல்ல, எளிதானதும் என்றபடி கைகளில் ஏந்தி குடிப்பான் அவன். வெட்கத்தில் முகத்தை மூடுவாள் அவள். இவர்கள் காதலுக்கு குறுக்கே வர மனமின்றி நின்று போகும் மழை. சோகத்தில் அழுது அழுதே குடிநீரை மீண்டும் உப்பாக்கும் கடல். நமக்கு மட்டும் இனி என்ன வேலை? அவர்கள் காதலித்துப் போகட்டும். நாம் விடைபெறுவோம்.

53 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:45 AM said...

நாந்தான் ஃப்ர்ஸ்ட் :))

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:49 AM said...

சென்னைல வெயில் கொளுத்துது.. இவரு ஹைதைல உக்காந்துகிட்டு மழை, அவள், அவன்னு எழுதுவாராம்... பொறாமையா இருக்கு... இவர அடக்க ஆளே இல்லையா?? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:51 AM said...

பதிவு சூப்பர்... எப்பப்பாரு பாண்டிச்சேரியா?? :((

//சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும்.//

அனுபவ வரிகள் அருமை.. இது மாதிரி நிறைய வரிகள் 'அட' போட வெச்சது.. இது சாம்பிள் தான்...

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:52 AM said...

//கவிதை எனப்படும் கிறுக்கல்கள் கொண்ட தாளை முக்கோணமாய் மடிப்பாள். லப்டப் இதயம் டப்டப் என மாறித்துடிக்கும். உதடுகளால் காகிதத்தை ஈரமாக்கி கிழிப்பாள். எழுதி இருந்த எழுத்துக்கள் அதிசயமாக உயிர்பெற்று உயிர் கொடுத்த அதிசயத்தை ரசிக்கத் தொடங்கும். காகிதம் கப்பலாகி, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் டைட்டானிக் போல பெருமித ஓட்டம் ஓடும். அவள் கைகளால் கப்பல்கள் ஆவதை விட வேறு என்ன பெருமை கிடைத்து விடக்கூடும் அவன் கவிதைகளுக்கு?//

எனக்கெல்லாம் கன்னாபின்னான்னு கோவம் வரும்.. உங்களால மட்டும் தான் இத ரசிக்க முடியுது... ;))

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:53 AM said...

//இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி.//

அழகான சிந்தனை :))

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:54 AM said...

//ஐஸ்கிரீம் சில//

சிலை??

ஸ்ரீமதி on October 8, 2009 at 10:55 AM said...

// நாம் விடைபெறுவோம்.//

நன்றி. வணக்கம். ;))

Anonymous said...

ஆஹா, சும்மா அடிச்சு ஆடியிருக்கீங்க கார்க்கி,தலைப்பும் சும்மா சூப்பர்

UNGALODU NAAN on October 8, 2009 at 11:07 AM said...

naanum nethu neenga potta padhiva parthuttu padhivu edhavadu ezhudalamnu ninaichen innaikku idha partha apparam chancey illa namma ellam only coment poda than layaku padhivu super thala

விக்னேஷ்வரி on October 8, 2009 at 11:11 AM said...

Great feeling Karki. Enjoyed reading word by word.

அப்படியே அந்த அவள் யாருன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்ல. ;)

தராசு on October 8, 2009 at 11:29 AM said...

ம்ஹூம், ஓன்ணும் சரியில்ல,

இது எங்க போய் முடியப் போகுதோ,

என்ன தல, கலக்கலா ரொமான்ஸ் பக்கம் போயிட்டீங்க.

// நான் தானே நடக்கிறேன் அது என்ன என் பின்னால் உன் நிழல்?//

சூப்பர்.

இசைப்பிரியன் on October 8, 2009 at 11:32 AM said...

உங்களோட முந்தைய பதிவால வந்த வென , நானும் இன்னைக்கே ஒரு Blog Create பண்ணிட்டேன் , இந்த வருஷ PBC Ratingla இதையும் சேர்த்துகோங்க :)

தீப்பெட்டி on October 8, 2009 at 11:33 AM said...

ரொம்ப நல்லாயிருக்கு சகா..

நர்சிம் on October 8, 2009 at 11:40 AM said...

வாழ்த்துக்கள் சகா.

சுசி on October 8, 2009 at 11:43 AM said...

ரொம்.....ப நல்லா இருக்கு கார்க்கி....

//மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? //

ஆரம்பமே சூப்பர்.....

//அவர்கள் காதலித்துப் போகட்டும். நாம் விடைபெறுவோம்.//

விடைபெற மனசு வரல....:)))))

rajan on October 8, 2009 at 11:44 AM said...

//தூறலில் காதலியின் கைகோர்த்தபடி நடந்து சென்று கடலை தரிசிப்பது சுகம். சுகம் என்பது கூட சரியா? அந்த பரவசநிலைக்கு ஏற்ற வார்த்தை எனக்குத் தெரியவில்லை//

இந்த வரிகளில் பற்றி எரிகிறது காதல்.

//நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும்.//

அப்புறம் எறியாம என்ன பண்ணும்?

taaru on October 8, 2009 at 11:49 AM said...

பொண்ணுங்க எம்புட்டு படுத்தினாலும் இப்புடி தான் இருக்கணும் போல.. இல்லையா தல...!!?? ஒரு நாள் மழைக்கே இம்புட்டாண்ணே?!!
உங்க[ளோட] நடை [மழையிலும், இங்கேயும்] நெம்ப SOFT இடியாப்பம்.[படிச்சு நாக்குல ஒரு முடிச்சு விழுந்துருச்சு.. :-) :-) :-)]

Anbu on October 8, 2009 at 12:51 PM said...

வாழ்த்துக்கள் அண்ணா..

கார்க்கி on October 8, 2009 at 12:58 PM said...

முதலில் வந்த ஸ்ரீமதி வாழ்க. நஒம்ப நன்றிங்க கவிதாயினி

நன்றி அம்மிணி..

உங்களோடு நான், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எழுதினால் இன்னும் மகிழ்வேன் சகா

நன்றி விக்கி. நான் தான் அந்த அவன்னு வச்சுக்கிட்டா அவள் யாருன்னு பல பேருக்கு தெரியும். அதுவும் உஙக்ளுக்கு நிச்சயமா தெரியும்.

தராசண்னே, முன்பெல்லாம் அடிக்கடி ஃபீலாவேன். கொஞ்ச நாளா ஆவறதில்லை. மத்தபடி இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே

அறிவ், இசைப்பிரியன் ஆயாச்சா.. வாழ்த்துகள்

நன்றி தீப்பெட்டி.

ஹலோ நர்சிம், எதுக்கு வாழ்த்துகள்ன்னு சொல்லுங்க. அதுக்குள்ள பேபி கிடைச்சது உண்மையான்னு மெயில் அனுப்பறாங்க. அவர் நல்லா எழுதிட்டு வறேன்னு வாழ்த்துகள் சொன்னாராம்பா. ஃபோன்ல க்ளியர் பண்ணிட்டேன்

நன்றி சுசி, விடைபெறுவதே நல்லது. அவன் கொஞ்சம் மோசமானவன் :))

ராஜன், நன்றி சகா

டாரு, வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும்?பாட்டு கேட்டத்தில்லையா சகா?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on October 8, 2009 at 1:24 PM said...

எப்போ இருந்து சகா இப்படி?
ஆனா இது கூட நல்லாத்தான் இருக்கு.
சரி, சட்டுபுட்டுன்னு அது யார்ன்னு சொல்லுங்க.

radhika on October 8, 2009 at 1:27 PM said...

wow!!! cant go without say something karki. very romantic.

//சற்றே வலுவான துளிகள் அவள் கன்னம் வழி உதடுகளை அடையும்போது, வலுவிழுந்து கீழே விழத் தயாராகும். அதுவரை சைவமாக இருந்தவனை அவளது இதழ் வருடும் மழைத்துளி அசைவமாக்கக்கூடும். தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அந்த துளியை கைகளில் ஏந்தியவன் பொறாமை மறந்து கடவுளைக் கண்டவனைப் போல் மூர்ச்சையாகி இருப்பான்.//

lines like these are awesome. lucky girl. great great great karki.

இசைப்பிரியன் on October 8, 2009 at 1:30 PM said...

கார்க்கி புண்ணியத்தில் ... ஆமாம் :)
இன்னும் சித்துவுக்கு கூட சொல்லல

இப்போதான் என் மகளை பற்றி ஒரு சிறிய பதிவு அச்சு பிச்சு தமிழில் ஒரு பதிவை எழுதினேன் ...

கொஞ்ச நாள் ஆகும் , I mean to get in to the groove .. :)

யோ வாய்ஸ் (யோகா) on October 8, 2009 at 2:08 PM said...

அழகான ரசனை சகா..

இசைப்பிரியன் on October 8, 2009 at 2:15 PM said...

எவ்வளவு அழகு , இத்தனை நுட்பமான ரசனை இருந்தும் சில வேளைகளில் விஜய் ரசிகனாக நீங்கள் இருப்பது என்னை ஒன்றும் ஆச்சர்யபடுதவில்லை ....

ஏனெனில் , நானே அப்படித்தான் ... ரசனைக்கு கூட உருவமும் அல்கோரிதமும் கிடையாது போல ....

இன்னும் இன்னும் படிக்கலாம் போல இருக்கு ...

வாழ்க !!!

பிரபாகர் on October 8, 2009 at 2:53 PM said...

கவிதை வேண்டுமா
காதலித்துப்பார்...
காவி வேண்டுமா
காதலித்துப்பார்..

ஜோடி வேண்டுமா
காதலித்துப்பார்.
தாடி வேண்டுமா
காதலித்துப்பார்

அன்பு வேண்டுமா
காதலித்துப்பார்
துன்பம் வேண்டுமா
காதலித்துப்பார்

அறிவு வேண்டுமா
காதலித்துப்பார்
பிரிவு வேண்டுமா
காதலித்துப்பார்....

சகா... என்னடா ஏதேதோ எழுதறான்னு தப்பா நினைக்காதீங்க... உங்களோடத படிச்சதும் அருவி மாதிரி வருது... அசத்தல் சகா.... கலக்குங்கள்...

பிரபாகர்.

சஹானா beautiful raga on October 8, 2009 at 3:00 PM said...

//மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? //


//சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும்.//

//இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி.//

// நான் தானே நடக்கிறேன் அது என்ன என் பின்னால் உன் நிழல்?//

சூப்பர்...

நட்புடன் கார்த்திக் on October 8, 2009 at 3:24 PM said...

[violet][b]hmmmm faboulous chemistry machi[/b][/violet]

Romeoboy on October 8, 2009 at 3:26 PM said...

ஓ இதுக்கு முன்னோட்டம் தான ""கார்க்கிக்கும் பேபி கிடைச்சாச்சு"" பதிவு...

ஒரு மொக்கைக்கு இன்னொரு மொக்கை கிடைக்காமல் இருந்தால் சரி.

T.V.Radhakrishnan on October 8, 2009 at 3:33 PM said...

வாழ்த்துக்கள்

கார்க்கி on October 8, 2009 at 5:01 PM said...

பாலகுமாரன், நான் முன்னாடியே இப்படித்தான் சகா.. காதல் என்ற லேபிளில் இருப்பதை படியுங்கள்

நன்றி ராதிகா

அறிவ், மீண்டும் நன்றி. விஜய் ஸ்டைலிலே சொன்னால், அது வேறு இது வேறு :))

நன்றி யோகா

நன்றி பிரபாகர். இண்ஸ்டண்ட் கவிதைக்கு வோல்சேல் டீலரா நீங்க :))

நன்றி பிசாசு. வெறும் சூப்பர்தானா? ஏதாவ்து சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்

நன்றி கார்த்திக்

ரோமியொ பாய், இது நான் இல்லைங்க..

நன்றி டி.வீ.ஆர் சார்..

நேசன்..., on October 8, 2009 at 5:18 PM said...

ம்ம்ம்.......நடத்துங்க!நடத்துங்க!.....

அன்புடன் அருணா on October 8, 2009 at 5:42 PM said...

ம்ம்.......மழை!!மழை!மழை!இன்னும் நிறைய இருக்கு மழையினூடே!

அ.மு.செய்யது on October 8, 2009 at 5:54 PM said...

தாறுமாறான‌ ர‌ச‌னை ப‌திவு கார்க்கி !!! க‌ல‌க்கிட்டீங்க‌ !!

அ.மு.செய்யது on October 8, 2009 at 5:56 PM said...
This comment has been removed by the author.
கல்யாணி சுரேஷ் on October 8, 2009 at 6:14 PM said...

//சென்னைல (எங்க ஊர்ல)
வெயில் கொளுத்துது.. இவரு ஹைதைல உக்காந்துகிட்டு மழை, அவள், அவன்னு எழுதுவாராம்... பொறாமையா இருக்கு... இவர அடக்க ஆளே இல்லையா?? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//
ரிப்பீட்டு.

ஆரூரன் விசுவநாதன் on October 8, 2009 at 7:24 PM said...

மிக ரசனையான பதிவு....அருமை


ம்ம்.....பாண்டிச்சேரியோட இத வேற ஞாபகப்படுத்தீட்டிங்களே.....


ஆனாலும் மிக்ஸிங் சூப்பர்.....

அத்திரி on October 8, 2009 at 7:45 PM said...

உச்சிவெயில்ல உன்னை மவுண்ட் ரோட்டுல நிக்க வைக்கனும்டா.............

அறிவிலி on October 8, 2009 at 8:06 PM said...

பாத்து சகா,நல்லா இருக்கேன்னு ரொம்ப மழைல நனைஞ்சு ஜல்பு புடிச்சிக்க போவுது. உடம்ப பாத்துக்கோங்க.

தத்துபித்து on October 8, 2009 at 8:36 PM said...

onnum solrathukku illa
(poramaiyila vera enna solla mudiyum?)
.

Karthik on October 8, 2009 at 9:06 PM said...

உண்மையிலேயே மழையில நனைஞ்சா மாதிரி இருக்கு. அடிக்கடி இப்படி ஏதாவது எழுதினா ரொம்ப நல்லாருக்கும். :)

நேசமித்ரன் on October 8, 2009 at 9:09 PM said...

தூறல் காற்றில் மடிவது மாதிரி வார்த்தைகளில் வழிகிறது காதல் அருமை வாழ்த்துக்கள்

பீர் | Peer on October 8, 2009 at 9:11 PM said...

வழக்கம்போல அடிச்சு ஆடுறீங்க, கார்க்கி.

பாலா on October 8, 2009 at 9:15 PM said...

vithiyaasamaan nadai mapla
nalla irukuiyaa

முரளிகுமார் பத்மநாபன் on October 8, 2009 at 10:11 PM said...

சகா, கலக்கல் போங்க, இதுல எங்கயாவது உண்மை ஒட்டியிருக்கிறதா? இருந்தால் மிகவும் சந்தோஷம். அந்த படத்த பாருங்க சகா, இன்னும் சில கரு கிடைக்கலாம், எவ்ளோ யோசிச்சாலும் காதல் மட்டும் எழுத்தில் வரவே மாட்டேங்குது. ஏதாவது டிப்ஸ்? :-) :-)

RaGhaV on October 9, 2009 at 1:13 AM said...

நான் மிகவும் ரசித்து படித்த பதிவு இது..
நல்லா இருக்கு கார்க்கி.. :-)

பட்டிக்காட்டான்.. on October 9, 2009 at 1:27 AM said...

சகா..

இப்பெல்லாம் love song ஆ கேட்கறிங்களா..?

மழைங்கரிங்க, அவள்ங்கரிங்க.. அவ்ளோதான..??

கும்க்கி on October 9, 2009 at 8:10 AM said...

அருமை....ப்ரதர்..
அச்சில் வர வாழ்த்துக்கள்...

பித்தனின் வாக்கு on October 9, 2009 at 9:17 AM said...

நல்லா இருக்கு கார்க்கி. நல்ல கற்பனை(அல்லது உங்க அனுபவமா). சூப்பர்.
மழை பெய்த நாளில் நானும் பாண்டியை சுத்தி இருக்கேன், அன்னையின் ஆசிரமத் தெருவில் மழையில் நடந்து இருக்கேன், பீச்சில் பெரியும் சுண்டலும் மாங்காயும் கொட்டும் மழையில் வாங்கி தின்றும் இருக்கேன். ஆனா கூடத்தான் யாரும் இல்லை, இம்ம்ம்(கண்ணிர்)

கார்க்கி on October 9, 2009 at 9:54 AM said...

நன்றி நேசன்

ஆமாம் டீச்சர்.

நன்றி செய்யது. அது என்ன டெலீட் செஞ்ச பின்னூட்டம்?

கல்யாணி மேடம், கிர்ர்ர்ர்ர்ர்

நன்றி விசுவநாதன். பாண்டியோட எத ஞாபகபடுத்திட்டேன்?

ஹிஹிஹி..அத்திரி, உங்க அன்புக்கு நான் அடிமைண்ணே

அறிவிலி, அதான் மழைவிட்டு தூறலில் நடக்கிறேன்..எப்பூடி?

நன்றி தத்துபித்து

கார்த்திக்.. அடிக்கடி எழுதுவதா? ஆவ்வ்வ்

ரொம்ப நன்றி நேசமித்ரன்

நன்றி பீர்.(பீர் அடிச்சு ஆடலையே?)

நன்றி மாப்பி

முரளி, உண்மை இருக்கலாம். ஆனால் எனக்கான்னு கேட்காதிங்க :)).. கரு தேடுவது இல்லை நான், காதலை மட்டுமே.. அபப்டி முயற்சி பண்ணுங்க. அதுவா வரும் சகா :))

நன்றி ராகவ்

பட்டிக்காட்டான்.. வேட்டைக்காரன் தான் கேட்கிறேன்.. அதுல என்ன லவ் இருக்கு? :)))

நன்றி கும்க்கி. ரொம்ப நாள் ஆச்சு போல?

பித்தன், ம்ம்.. கிடைப்பாங்க. என்ன வயசு ஆவுது சகா உங்களுக்கு?

பட்டாம்பூச்சி on October 9, 2009 at 5:36 PM said...

ரொம்ப நல்லாயிருக்கு :)

மங்களூர் சிவா on October 9, 2009 at 6:47 PM said...

உண்மையிலேயே மழையில நனைஞ்சா மாதிரி இருக்கு.

purushothaman on October 9, 2009 at 10:19 PM said...

hai karki it,s my first comment. well, it's realy wonderful feeling. keep it up. best regard to you (KARKI) BY PURUSHOTHAMAN DUBAI

தமிழ்ப்பறவை on October 10, 2009 at 1:11 AM said...

ரசித்தேன் சகா...
நல்லா இருக்கு,,,
பாடலும் நல்ல தேர்வு...

 

all rights reserved to www.karkibava.com