Oct 7, 2009

புதிய பதிவர்களே!!! குரு உங்கள பார்க்கிறான்


 

   தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில்,  தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். பரிசல் இந்த வாரப் பதிவர் போடறாரு. நர்சிம் என்’ணங்களில் புதிய ஆளுங்கள பத்தி சொல்றாரு. அப்ப நாம என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

how-to-blog-blackboard-classroom_id785240_size485

முதல் ஸ்டெப்.(நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். வலையுலகம் ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன். அதே போல் நீங்களும் கட்டுமரக்காரன், மோட்டர் போட்காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பரிசல் எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் ஸ்பீடு போட்காரன், அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப டைட்டானிக் வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.

நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .

பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்து பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காண்ப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது “கேள்வி” கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.

எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள். அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா, மிக்ஸ்ட் ஊறுகாய், கூட்டாஞ்சோறு போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம். ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.

எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

ரொம்ப பெருசா போதோ? அப்ப தொடரா போட்டுடுவோம். மற்ற டிப்ஸுகள் விரைவில்..

52 கருத்துக்குத்து:

தத்துபித்து on October 7, 2009 at 10:19 AM said...

appuram namma sontha kathaiyai eluthi ithu en nanban moonu,aaru,pathu ena ethavathu numberoda kathainu eluthalama?
-
elutha theriyamal (thanniyil) thavippavargal sangam.

சஹானா a raga on October 7, 2009 at 10:19 AM said...

எந்த குரு காடுவெட்டி குருவா பாக்கறாரு, சரியா சொல்லணும்

சஹானா a raga on October 7, 2009 at 10:21 AM said...

//ரொம்ப பெருசா போதோ? அப்ப தொடரா போட்டுடுவோம். மற்ற டிப்ஸுகள் விரைவில்..//

சரி சரி

முதலமைச்சர் 2011 on October 7, 2009 at 10:22 AM said...

அக்மார்க் கார்க்கி பதிவு. சிரிச்சிக்கிட்டே இருக்கேன் சகா. கலக்குற போ

தராசு on October 7, 2009 at 10:26 AM said...

ங்கொய்யால

பிரியமுடன்...வசந்த் on October 7, 2009 at 10:33 AM said...

கலக்கல் பதிவுங்க்ண்ணா...

selvanambi on October 7, 2009 at 10:34 AM said...

hi hi hi hi........(not hai)

பிரியமுடன்...வசந்த் on October 7, 2009 at 10:34 AM said...

உண்மையிலே நீங்க புண்ணியவாந்தான்...

விக்னேஷ்வரி on October 7, 2009 at 10:53 AM said...

உங்க பாணியில டிப்ஸ் கலக்கலா குடுத்துருக்கீங்க. ஆனா, உள்ள எதோ அரசியல் இருக்குற மாதிரி தெரியுதே...

(அப்பாடா என் வேலை முடிஞ்சது)

விக்னேஷ்வரி on October 7, 2009 at 10:55 AM said...

இந்த படத்துல ரெட் ஷர்ட் போட்டிருக்குறது தான் நீங்களா.... ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க வாத்தியாரே. ;)

வள்ளி on October 7, 2009 at 10:58 AM said...

// பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்//
உண்மைதான் எழுதி எழுதிப் பாத்து கடைசில கிழிச்சுப் போடுறதே வேலையாப் போச்சு

ஜ்யோவ்ராம் சுந்தர் on October 7, 2009 at 11:27 AM said...

கார்க்கி, கலக்கல்!

taaru on October 7, 2009 at 11:34 AM said...

அண்ணே வணக்கோம்..
நான் இங்க புதுசு...
முதலுக்கு ஒரு லிஸ்ட்டும்..
ரெண்டாவதுக்கு கொஞ்சம் படமும் அனுப்பி வைங்கண்ணே...

நாமக்கல் சிபி on October 7, 2009 at 11:41 AM said...

//ரொம்ப பெருசா போதோ? அப்ப தொடரா போட்டுடுவோம். மற்ற டிப்ஸுகள் விரைவில்..//

இதுவே ஒரு டிப்ஸுதானய்யா!

Anonymous said...

//(பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்).//

நம்மளமாதிரி :)

ஜெனோவா on October 7, 2009 at 11:57 AM said...

kalakkunga anne... tips ah alli thelinga , namakku nemmba thevappaduthu.... Nanri..

aana oru davuttu , entha tapic edutthaalum nagaichuvaiyaaga eluthureengale athu eppadi ????

அனுஜன்யா on October 7, 2009 at 12:01 PM said...

//நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. .//

டேய், ஏன் இந்தக் கொலவெறி? பேசித் தீர்த்துக்குவோம்.

அனுஜன்யா

சுசி on October 7, 2009 at 12:08 PM said...

//தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில்//இப்படி ஒரு அற்புதமான பதிவை எழுதிய கார்க்கியின் பெயர் பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்!!!

தமிழ்ப்பறவை on October 7, 2009 at 12:18 PM said...

கலக்கல் கார்க்கி.. :-))
(தலைப்புல ‘கார்க்கி’ போடுங்க. நான் ஏதோ ஸ்வாமி ஓம்கார்,இல்ல சுப்பையா வாத்தியாரோட சோதிடப் பதிவுன்னு நினைச்சு கவனிக்கலை)

மண்குதிரை on October 7, 2009 at 12:36 PM said...

-:)) sarithaan poongka

thalaippa paaththathumee ninaiththeen

கார்க்கி on October 7, 2009 at 12:39 PM said...

தத்துபித்து, அய்ய்ய்ய்யய்யோ. அறிவு கொழுந்துண்ண நீங்க..

சஹானா, பிசாசு பேரு தன எனக்கு பிடிக்குது :)).. தலைப்ப டிவில வர்ற ஜோசியக்காரன மாதிரி படிங்க.

நன்றி முதலமைச்சரே

தராசண்ணே, பதிவுலதான் ங்கொய்யால. இப்ப பின்னூட்டத்திலுமா?

நன்றி வசந்த் :))

வாங்க செல்வநம்பி

விக்கி, நன்றி. ரெட் ஷர்ட் நல்லா இருக்கா?அரசியல் உங்களுக்கே புரிஞ்சிடுச்சா? ஆவ்வ்வ்

வள்ளி, டைப் பண்ணி பாருங்க. டெலீட் செய்வது ஈசி. :)))..

நன்றி சுந்தர்ஜி. :))

டாரு, அஸ்க்கு புஸ்க்கு. டிடி அனுப்புங்க முதல்ல

சிபியண்னே, நீங்க எங்கேயோஓஓ போயிட்டிங்க..

அம்மிணி, நலமா?

ஜெனோவா, அதேதான் பிரச்சினைங்க. ரொம்ப சீரியஸா ஒரு விஷயத்த சொல்லுவேன். ஹிஹிஹின்னு சிரிச்சிட்டு போயிடறாங்க.. :))

அனுஜன்யா, தல நீங்களும் இதுல சிக்கறீங்களா? என் டார்கெட் வேற ஒருத்தர்..டைரி எழுதுவாரு :)

நன்றி நன்றி சுசி

நன்றி பறவை. மறந்துட்டேன் பேர் சேர்க்க:))

பிரபாகர் on October 7, 2009 at 12:42 PM said...

சகா,

ஃபுல் ஃப்ளோ வில இருக்கீங்க போலிருக்கு.... கலக்குங்க.... ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

♠ ராஜு ♠ on October 7, 2009 at 12:50 PM said...

\\மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும்\\

உங்க மனசு ரொம்ப ரொம்ப வெள்ளைங்க...!
:-)

பாலா on October 7, 2009 at 12:54 PM said...

maapplai piri katti adikuriyappa

கார்ல்ஸ்பெர்க் on October 7, 2009 at 1:45 PM said...

//பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்//

- அதான் பிரச்சனை வேணாம்னு கொஞ்சம் ஒதுங்கியே இருக்கேன் :))

நர்சிம் on October 7, 2009 at 1:56 PM said...

கலக்கல் சகா

Cable Sankar on October 7, 2009 at 2:07 PM said...

நல்லாருக்கு.. இது சோம்பேறிதனப்பட்டு போட்டதல்ல..

சூரியன் on October 7, 2009 at 2:15 PM said...

:)

ஜெஸ்வந்தி on October 7, 2009 at 2:24 PM said...

//எழுத எதுவும் பிடிபடவில்லை என்றால் இதோ இப்பிடி இலவச அறிவுரை எழுதலாம்.//
இதையும் சொல்லி இருக்கலாம்.

Prosaic on October 7, 2009 at 2:50 PM said...

:)))))))))

டம்பி மேவீ on October 7, 2009 at 2:54 PM said...

enakku oru advice yum illaiyaa

pappu on October 7, 2009 at 2:55 PM said...

என்னதான் இருந்தாலும் ரொம்ப நாளா புட்டி ஒண்ணு போடாம நீங்க டிமிக்கி கொடுக்குறது நல்லா இல்ல. சொல்லிபுட்டேன்!

யோ வாய்ஸ் (யோகா) on October 7, 2009 at 3:43 PM said...

//உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்//

எனக்கும் ஒரு பேரை சொல்லுங்க சகா...

Karthik on October 7, 2009 at 4:08 PM said...

நான் கூட என் பேர டால்ஸ்டாய்னு மாத்திக்கலாம்னு இருக்கேன். எப்டி?

கலக்கல். :))

Karthik on October 7, 2009 at 4:10 PM said...

//நிலாவில் தண்ணி இருக்காம்

என் ட்ராஃப்ட்ல இருக்கிறத (தண்ணியில்லைங்க..பதிவு) எப்படி படிச்சீங்க...ஆவ்வ்!!

எம்.எம்.அப்துல்லா on October 7, 2009 at 4:17 PM said...

//விக்னேஷ்வரி on October 7, 2009 10:55 AM said...
இந்த படத்துல ரெட் ஷர்ட் போட்டிருக்குறது தான் நீங்களா.... ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க வாத்தியாரே. ;)

//

விக்கி, ரெட் கலர் சொல்ற விஷயம் அவன் டேஞ்சரான ஆளு :)

எம்.எம்.அப்துல்லா on October 7, 2009 at 4:18 PM said...

பதிவு உண்மையிலேயே நல்லாருக்குடா :)

isai on October 7, 2009 at 5:01 PM said...

வணக்கம் car key,
உங்களுடைய இரண்டுவருட படைப்புகள் அனைத்தையும் படித்தேன் மிக மிக அருமை. உங்களுடைய நையாண்டி, நக்கலு இதுதான் உங்களுடைய பதிவுகளை படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டியது.
வாழ்த்துக்கள்.

isai on October 7, 2009 at 5:01 PM said...

வணக்கம் கார்கி,
உங்களுடைய இரண்டுவருட படைப்புகள் அனைத்தையும் படித்தேன் மிக மிக அருமை. உங்களுடைய நையாண்டி, நக்கலு இதுதான் உங்களுடைய பதிவுகளை படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டியது.
வாழ்த்துக்கள்.

வித்யா on October 7, 2009 at 5:27 PM said...

:)

கார்க்கி on October 7, 2009 at 5:40 PM said...

நன்றி மண்குதிரை

நன்றி பிரபாகர்

நன்றி ராஜூ. உனக்கு தெரிஞ்சுடுச்சா?

நன்றி பாலா

நன்றி கார்ல்ஸ்பெர்க். சீக்கிரம் வாப்பா

நன்றி நர்சிம்

நன்றி சங்கர்ஜி :))

நன்றி சூரியன்

நன்றி ஜெஸ்வந்தி. ஹிஹிஹி

நன்றி அபி

நன்றி மேவீ.. உனக்கு எல்லாம் நான் எப்படி சொல்ரது?

நன்றி பப்பு. சீக்கிரம் போடறேன் :)

யோகா, டிடி அனுப்புங்க முதல்ல்

கார்த்திக், நல்ல பேரு.. :)))

நன்றி அப்துல்லா..

Achilles/அக்கிலீஸ் on October 7, 2009 at 6:46 PM said...

சூப்பர்... உங்க நக்கலுக்கு அளவே இல்லை.. :)

அன்புடன் அருணா on October 7, 2009 at 8:16 PM said...

fees எவ்வ்ளோ கார்ககி????

பீர் | Peer on October 7, 2009 at 9:30 PM said...

நல்லாயிருக்கு... (எனக்கு உபயோகமா இருக்கும்)

அது சரி... யாராவது "பிரபல மூத்த பதிவர்களுக்கு அட்வைஸ்" அப்டின்னு பதிவு எழுத மாட்டீங்களா?

மணிகண்டன் on October 7, 2009 at 10:38 PM said...

***
அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள்.
****

இது என்னளவுல நூறு சதவீதம் உண்மைங்க.

முரளிகண்ணன் on October 7, 2009 at 10:42 PM said...

அட்டகாசம் கார்க்கி

kanagu on October 7, 2009 at 11:44 PM said...

chance eh illa thala... :))

ore asathal thaan ponga..

enaya maathiri puthu padhivarukku romba upayogama irukku... :)

செல்வேந்திரன் on October 8, 2009 at 8:27 AM said...

:)

பித்தனின் வாக்கு on October 8, 2009 at 9:05 AM said...

கார்க்கினா அது இதுதான் சரியான நடை. நல்ல பஞ்ச். எப்பிடி இப்படி கொட்டுது? அடிக்கடி படிச்சா எங்களுகும் கொஞ்சம் ஒட்டும்னு நினைக்கின்றேன். டிப்ஸ் அருமை. காத்துருக்கேம்.

கார்க்கி on October 8, 2009 at 10:44 AM said...

நன்றி இசை. இன்னும் இரண்டு வருடம் ஆகலைங்க :)).. உங்கள் ஊக்கத்திற்கு மீண்டும் ஒரு நன்றி

நன்றி வித்யா

நன்றி அக்கீலீஸ் :))

டீச்சர், உஙக்ளுக்கு எதுக்கு? நீங்க கிளாஸ் எடுக்கனும்

பீர், நீங்களே எழுதுங்க.. நல்லாத்தான் இருக்கும்

வாங்க மணிகண்டன். நீங்க பின்னூட்டத்திலே அலப்பறையை கொடுப்பிங்களே..:))))

நன்றி முரளி..

நன்றி கனகு... :))))

நன்றி செல்வா

நன்றி பித்தனின் வாக்கு..

Anonymous said...

உங்கள் சேவை எங்களுக்கு ரொம்ப தேவை :)))

பட்டாம்பூச்சி on October 9, 2009 at 5:42 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com