Oct 6, 2009

வேட்டைக்காரன் தீபாவளிக்கு வருமா?


 

       ஆதவன் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிப்பு. வேட்டைக்காரனை சமீபத்தில்தான் சன் பிக்சர்ஸ் வாங்கியது. ஆதவன் எப்போதோ தயார். வேட்டைக்காரனின் இன்னும் ஒரு பாடல் எடுக்கப்பட வேண்டும். தற்போது புனேவில் ஷூட்டிங்க் நடந்துக் கொண்டிருக்கிறது. விஜயதசமியன்று வேட்டைக்காரனின் பாடல் வெளீயீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று விளம்பரம் செய்தார்கள்.

அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. ஆதவனும், வேட்டைக்காரனும் ஒரே நாளில் வந்தால் ஒப்பனிங் வசூல் யாருக்கு குறையுமென்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஆதவன் தான் முதலில் தயாரானது. எனவே வேட்டைக்காரனை தாமதப்படுத்துவது என்று முடிவு செய்தது சன். ஆனால் ஆடியோவை வெளியிட்டு ரொம்ப நாள் தாமதப்படுத்துவது விஜய்க்கு பழக்கமல்ல. இதுவரை உதயா மட்டுமே அப்படி ஆகிப் போனது. மற்றப் படங்களெல்லாம் சில நாட்கள் வேண்டுமென்றால் தள்ளிப் போகுமே தவிர திட்டமிட்டப்படி முடித்துவிடுவார்கள். விஜயதசமியன்றே டிரெயிலரும் வெளியிடப்பட இருந்தது. ஆனால் ரீலீஸ் தேதிக்கு பல நாட்கள் முன்பே சன் டிவியில் போட ஆரம்பித்தால் அதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதால் அதுவும் செய்யப்படவில்லை.

VK-20

   விஜயும் தற்போது வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணமும் உண்டு. பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சன் டிவி சக்ஸேனா படம் எப்போது வரும் என்று இளைய தளபதி அறிவிப்பார் என்று பேசினார். ஆனால், அவர்களாகவே ரிலீஸை தள்ளிப் போட்டுவிட்டு ஏ.வி.எம்மிடம் மட்டும் சொன்னதாக தெரிகிறது. ஏ.வி.எம்மை எதிர்த்து பேசவும் விஜய்க்கு மனமில்லை. ஆனால் ஏ.வி.எம் விஜயைப் பற்றி கவலைப்படாமல் அப்பாடா என்று  சாய்ந்துவிட்டார்கள். விஜய்க்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா?

2010 ஏப்ரலுக்கு தனது 50வது படம் சுறா என்று முடிவு செய்து முதல் கட்ட படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார் விஜய். தீபாவளிக்கு வேட்டைக்காரன் வராவிட்டால், பொங்கலுக்கோ கிறிஸ்துமஸ்க்கோ தான் வரும். தயாரிப்பாளர்களின் சமீபத்திய அறிக்கையின்படி பெரிய நடிகர்களின் படங்கள் விழாக் காலங்களில் மட்டுமே வர வேண்டும். அப்படி செய்தால் சுறாவுக்கும் ,வேட்டைக்காரனுக்கு இடைவெளி குறைவாகிவிடும். இப்படித்தான் 2005 தீபாவளிக்கு சிவகாசி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போதே 2006 பொங்கலுக்கு ஆதி வந்தது. ஆதியும் தோல்வியடைய, சிவகாசியின் வசூலும் சடாரென குறைந்தது. ஆதி வரவில்லையென்றால் சிவகாசி இன்னும் கொஞ்சம் காசு பார்த்திருக்கும். இதுதான் இப்போது விஜயின் தலைவலி.

இன்னுமமும் எப்படியாவது தீபாவளிக்கு வேட்டைக்காரனை வெளியிட வேண்டுமென்று விஜய் தரப்பு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது. சன் டிவியோ தயாரிப்பாளர்கள் முடிவை எப்படியாவது காலாவதியாக்கி, நவம்பர் முதல் வாரத்தில் வேட்டைக்காரனை வெளியிட முயற்சி செய்கிறது. வந்த காசை எண்ணுவதில் மும்முரமாக இருக்கிறது ஏ.வி.எம். இதுவரை இது போல் ஒரு பிரச்சினை விஜய்க்கு வந்தது இல்லை. ஏ.எம். ரத்னம், ஆர்.பி.செளத்ரி, அப்பச்சன் என எல்லா பெரிய தயாரிப்பாளர்கள் கூட விஜய் தான் ரிலீஸ் தேதியை முடிவெடுக்க வேண்டும் என்றே சொன்னவர்கள். ஏ.வி எம்மில் நடிக்க ஆசைப்பட்டதற்கு விஜய் தரும் கூலி சற்று அதிகம்தான்.

உன்னை நினைத்து, சூர்யா நடித்து விக்ரமன் இயக்கிய படம். அதில் முதலில் நடிக்க இருந்தவர் விஜய்தான். தன்னை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய விக்ரமனுக்காக ஒத்துக் கொண்டார். அதே சமயம் ஏ.வி.எம் தயாரிப்பு என்பதும் ஒரு காரணம். விஜய்க்கு ஏ.வி.எம் மீது ஏனோ ஒரு மயக்கம். ரஜினியை மாஸ் ஹீரோவாக்கியதில் ஏ.வி.எம்முக்கு பெரிய பங்கு உண்டு என்று யாராவது சொல்லியிருக்கக்கூடும். விக்ரமனோ, பிரியமான தோழியை மாதவனிடம் சொல்லி ஓக்கே வாங்கி அதை ஏ.வி.எம்முக்கு செய்ய நினைத்தார். விஜய், ஏ.வி.எம் என்பதாலே நடிக்க ஒத்துக் கொண்டேன். அவர்கள் இல்லையென்றால் காதல் கதை வேண்டாம். ஆக்‌ஷன் படம் சொல்லுங்கள் என்றாராம். கடுப்பான விக்ரமன் விஜயைப் பற்றி அவதூறாக பேட்டி கூட தந்தார். விஜய்க்கு ஏ.வி.எம்மில் படம் பண்ண ரொம்ப நாளாக ஆசை என்பதற்காக இந்த தகவல்.

எங்கோ போய் விட்டேனோ? மேட்டர் இதுதான். ஆதவனுக்காக வேட்டைக்காரனை தாமதபடுத்துகிறது சன் டிவி. ஆனால் வாங்கும் போது தீபாவளி ரிலீஸ் என்றே முடிவு செய்யப்பட்டது. சன்னிடம் பேச வேண்டிய ஏ.வி.எம் அடக்கி வாசிக்கிறது. முதல் முறையாக தயாரிப்பாளர்கள் பேச்சுக்கு ஆட வேண்டிய நிலையில் வேட்டைக்காரன் விஜய். பார்ப்போம். யார் ஜெயிக்கிறார்கள் என்று. தற்போதைய நிலவரப்படி நவம்பர் ஆறாம் தேதி வேட்டைக்காரன் வெளியாகுமென்று தெரிகிறது. விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி நமுத்து போன  ஒன்றாகிவிட்டது துரதிர்ஷ்டவசமே.

40 கருத்துக்குத்து:

பிரபாகர் on October 6, 2009 at 11:18 AM said...

சகா என்னிக்கு ரிலீஸ் ஆனாலும் உங்களுக்கு மொத நாள் உங்களுக்காக பாக்கனும்னு முடிவு பண்ணியிருக்கேன்...(இங்க மொத நாளே ரிலீஸ் ஆயிடும்... ஹி...ஹி)

பிரபாகர்.

rajan on October 6, 2009 at 11:18 AM said...

நான்தான் பர்ஸ்டு

rajan on October 6, 2009 at 11:20 AM said...

யாரப்பா அது என்ன விட ஒரு செகண்ட் முன்ன போட்டது (time ஐ கவனிங்கப்பா).
தலிவர் படம் எப்ப வந்தாலும் hit தான்.

Ariv on October 6, 2009 at 11:22 AM said...

என்னமோ விஜய் படம் வந்தா யார் படமும் ஓடாதுங்கரா மாதிரி ....
அவரும் என்னமோ ரொம்பதான் பன்றர்னா ... நீங்களுமா ? .
கடந்த ஒன்றரை வருட அடிகளையும் வாகியுமா இன்னும் மிதப்பு ?

அது கிடக்கட்டும் , சித்து உங்கள ஒரு ரெண்டு மாசம் முன்னாடி மீட் பண்ணதா சொன்னான் , If you are in Chennai , Let me also meet you once with him (Ofcourse with prior appointment .. Dont Worry ;) )

விக்னேஷ்வரி on October 6, 2009 at 11:40 AM said...

இதை விட நல்ல வேட்டைக்காரன் ஸ்டில் போட்டிருக்கலாமே கார்க்கி.

அமுதா கிருஷ்ணா on October 6, 2009 at 11:42 AM said...

ஆகா இப்பவே கண்ணை கட்டுதே.....

அமுதா கிருஷ்ணா on October 6, 2009 at 11:42 AM said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பறவை on October 6, 2009 at 11:47 AM said...

நான் இந்த தீபாவளி லீவுல ஊர்ல ‘வேட்டைக்காரன்’ பார்க்கலாம்னு இருந்தேன். புஸ்வாணமாய்டுச்சே...:-(

கார்க்கி on October 6, 2009 at 11:51 AM said...

நன்றி பிரபாகர் :)))

வாக்க ராஜன்.உண்மையான சந்தோஷம்

அறிவ், நலமா? நாங்க அபப்டி சொல்லல. ஆதவன் டீம் அப்படி சொல்றாங்களாம். 11/2 வருடம் மட்டும்தான் ஞாபகம் இருக்கா? கன்னுக்குள் நிலவு, நெஞ்சினிலே, எ.காதல் என தொடர்ந்து 5 ஃப்லாப் கொடுத்தும் குஷி, ப்ரியமானவளே, ப்ரெண்ட்ஸ் என பட்டைய கிளப்பியது. திருமலைக்கு முன்பு 5 ஃப்ளாப் என்றாலும் ரெக்கார்ட் ஒப்பனிங் கொடுத்தது எல்லாம் நீங்க மறந்துட்டிங்களா? நீங்களும் ஒரு பழைய விஜய் ரசிகர்தானே? தெரியும் சகா :))

விக்கி, இதுவும் நல்லாத்தானே இருக்கு. மற்ற தளங்களில் இல்லாத படமென்று போட்டேன்

அமுதா மேடம், எழுந்திருங்க சீக்கிரம் :)))

ஆமாம் பறவை. நிறைய பேர் பிளான் பண்ணியிருந்தாங்க. ஏதாவ்து ஒரு லூசு வந்து தப்பிச்சிட்டிங்கன்னு கமெண்ட் போடும் பாருங்களேன்.

என். உலகநாதன் on October 6, 2009 at 12:05 PM said...

இவ்வளவு விசயங்களும் உங்களுக்கு எப்படித்தெரியும் சகா??

சினிமால்ல யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?

தராசு on October 6, 2009 at 12:10 PM said...

//ஏதாவ்து ஒரு லூசு வந்து தப்பிச்சிட்டிங்கன்னு கமெண்ட் போடும் பாருங்களேன்.//

நான் கமெண்டே போடல.

சுசி on October 6, 2009 at 12:13 PM said...

அப்போ தீபாவளிக்கு பட்டாசு சத்தம் குறையப் போதே கார்க்கி...
கொண்டாட்டம் கிடையாது :((((

உன்னை நினைத்து புதுசா இருக்கு.

சுசி on October 6, 2009 at 12:18 PM said...

//எங்கோ போய் விட்டேனோ? //

ஓ.. இதுதான் உங்க அடுத்த படத்தோட டைட்டிலா? நல்லாருக்குப்பா... எப்போ ரிலீஸ்???

நர்சிம் on October 6, 2009 at 12:22 PM said...

தீபாவளி ‘நல்’வாழ்த்துக்கள் சகா.

வெண்பூ on October 6, 2009 at 12:26 PM said...

//
ஏதாவ்து ஒரு லூசு வந்து தப்பிச்சிட்டிங்கன்னு கமெண்ட் போடும் பாருங்களேன்.
//

படம் முதல்ல வரட்டும் கார்க்கி. அப்புறம் பேசலாம். இந்த முறை நீங்களே கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க.. படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

Ariv on October 6, 2009 at 12:37 PM said...

நான் ரசிகனோ இல்லையோ , கொஞ்சம் காமெடி , கொஞ்சம் சுறுசுறுப்பு , அன்யாய அளவுக்கு டைம் பாஸ் ... இது எல்லாம் தேவைன்னா ,

நீங்க ஒரு பதிவு இந்த மாதிரி போட்டுட்டு ... Arguementla நல்லா பூந்து விளையாடுறீங்க ...

இப்போல்லாம் நான் எந்த ஹீரோவையும் ரசிக்கரதில (Including Kamal , உபயம் :- உன்னைப்போல் ஒருவன் ) ...

♠ ராஜு ♠ on October 6, 2009 at 12:49 PM said...

நர்சிம் அண்ணே, கலக்கல் கமெண்ட்...! அள்ளீட்டீங்க‌ தல..

கில்லிகள் on October 6, 2009 at 12:52 PM said...

அண்ணே, ராஜா அண்ணே..உங்காளோடு பெரிய ஹிட்டுன்னு சொன்ன பில்லா கூட ஒரே வருஷத்தில் டிவில போட்டாங்க. ஆனா விஜயின் படங்கள் மட்டுமே அது ரிலீசான வரிசையில் டிவில போட்டுட்டு வர்றாங்க.. கடைசியா போட்ட ஆதி கூட ரிலிஸாகி மூனு வருஷம் கழிச்சுதான் போட்டாங்க. உங்க பில்லா? வேற எந்த ஹீரோவின் படமும் இப்படி போட்டதில்ல.

உளராதிங்க.. ஆழ்வார், போக்கிரி வந்தப்ப யாருக்கு பெரிய ஒப்பனிங்னு மன்சாட்சி தொட்டு சொல்லுங்க.

கில்லிகள் on October 6, 2009 at 12:59 PM said...

//ஆதி பாத்த பின்னாடி எவனாது விஜய் படம் பாப்பானா?//

ஆழ்வார்,ரெட்,ராஜா,etc இதெல்லாம் பார்த்துட்டும் அசலுக்கு காத்திட்டு இருக்கிறது நியாயமோ?

//release பண்ணி சில நாட்கள்ல முழு படத்தையும் போட்டுருவாங்க... அதான் trailor எதுக்குன்னு வுட்டுடாங்க//

உங்க படம்தாங்க அப்படி போடுவாங்க. தெரியுமில்ல நடந்தது எல்லாம்..

முரளிகண்ணன் on October 6, 2009 at 1:01 PM said...

கார்க்கி கூல்.

ஜெட்லி on October 6, 2009 at 1:07 PM said...

மிக்க சந்தோசம்... நான் தீபாவளியை பேராண்மையோடு
நிம்மதியாக கொண்டாடுவேன்.....:)

அனுஜன்யா on October 6, 2009 at 1:09 PM said...

இவ்வளவு விஷயம் இருக்கா? இன்றைய நிலவரத்தில் சூர்யா படங்கள் விஜயை விட நல்லா ஓடுவது வாஸ்தவம்தானே கார்க்கி? அப்போ ஆதவனுடன் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா, ரிஸ்க் யாருக்கு?

If not on the creative side, you atleast have bright prospects on production, post-production, Trade analysis,overall management aspects in Tamil Cinema field :)

அனுஜன்யா

கார்க்கி on October 6, 2009 at 1:28 PM said...

உலகநாதன், தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க :))

தராசண்ணே, போட்டிங்களே :))

சுசி, சத்தம் கம்மி ஆகும். ஆனா 6ம்தேதி வரை தொடடும். அடுத்த படத்தின் பெயர் “அதிரடி”

நன்றி நர்சிம். நல்லாவே இருங்க :))

வெண்பூ, எனக்கும் கொஞ்சம் பயம் இருக்கு சகா. இருந்தாலும் கொசுத் தொல்லை அதிகமா இருக்கே

ராஜா,ஷாகுல் உங்க கமெண்ட் தேவையில்லைன்னு நினைச்சதால் டெலீட் செஞ்சிட்டேன். எனக்கு உங்க கூட ஆர்க்யூ பண்ற மூடு இல்லை

அறிவ், நல்ல முடிவு. எனக்கும் கொஞ்ச வருஷம் கழிச்சு தோனும். அதுவரை இப்படியே இருக்குறேனே :)

ராஜூ, நீயுமா? ரைட்டு

நன்றி கில்லிகள். ஃப்ரீயா விடுப்பா

முரளி, நாம எபப்வுமே கூல் தான் தல

ஜெட்லீ, ஆமாம். அசல் வரவில்லையாம். நிம்மதியா கொண்டாடுடுங்க.

அனுஜன்யா, இதுதான் பொதுபுத்தி என்பது. அயன் மட்டுமே வெற்றி. வாரணம் ஆயிரம் தயாரிப்பளாரை சுட்டுவிட்டது. வேல் சுமாரான வெற்றிதான். மாயாவி, சி.ஒ.கா எல்லாம் தோல்வி. ஆனாலும் அயன் என்ற ஒரு வெற்றி உங்களை அபப்டி யோசிக்க வைக்கிறது. அயன் ஓடியது சுமாரன படம் ப்ளஸ் சன் டிவி என்பதை கேபிளிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அதுதான் காரனம் வேட்டைக்காரனை தாமதபடுத்த.

கிரியேட்டிவ் சைடுல எனக்கு வேலையே இல்லையா தல?

Karthik on October 6, 2009 at 1:39 PM said...

என்னமோ போங்க கார்க்கி...

ஒரு காலத்தில் புட்டிக்கதைகள் எல்லாம் எழுதுனீங்க..:(

டம்பி மேவீ on October 6, 2009 at 2:01 PM said...

"விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி நமுத்து போன ஒன்றாகிவிட்டது துரதிர்ஷ்டவசமே."


ada pavame

கார்ல்ஸ்பெர்க் on October 6, 2009 at 2:09 PM said...

அண்ணா, நான் College Second Yr படிக்கும் போது 'திருமலை' வந்தது.. அதுக்கு முன்னாடி 'புதிய கீதை', 'வசீகரா', 'பகவதி'.. மூணுமே அடி வாங்குன படம். College'na சொல்லவா வேணும்?? அஜித் Fans எல்லாரும் இதே மாதிரி தான் பேசிட்டு இருந்தாங்க.. But அப்பறமா நடந்தது?? Rest is History.. பட்டய கெளப்பிட்டு ஒடிச்சு நம்ம படம்.. Lets hope so this time too :))

ஸ்ரீமதி on October 6, 2009 at 2:52 PM said...

:))

யோ வாய்ஸ் (யோகா) on October 6, 2009 at 2:55 PM said...

உங்களுக்காகவாவது வேட்டைக்காரன் பட்டயக்கிளப்பிக் கொண்டு ஓடனும் சகா. எங்க வீட்டுல சின்னவங்க எல்லாம் பயங்கர விஜய் ரசிகர்கள் உங்கள போல..

நானும் விஜய் டான்ஸ், காமெடிக்கு ரசிகன்தான்.

வித்யா on October 6, 2009 at 3:04 PM said...

:((
:))))

Haja on October 6, 2009 at 3:25 PM said...

எப்போ ரிலீஸ் ஆனாலும் ஊத்திக்கும்
நேத்து பெய்ஞ்ச மழையிலே முளைச்ச காளான் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக நினைக்குது

வான்முகிலன் on October 6, 2009 at 3:40 PM said...

ஹலோ, யாருங்க நீங்க? நீங்களெல்லாம் ரிலீஸ் தேதிய எதிர்பாத்து இருக்கீங்க. ஆனா தளபதி படமே ரிலீசாகுமா? ஆகாதானு தெரியாம தவிக்குறாரு. யாராவது அவருக்கு ஆறுதல் சொல்லுங்கப்பா...

முகிலன் on October 6, 2009 at 6:08 PM said...

ஏ.எம்.ரத்னம், ஆர்.பி.சவுத்ரிக்கு விஜய் படம் நடிச்சிக் குடுக்கும்போது வரிசையா பல ஹிட்டு குடுத்திருந்தாரு. இப்போ சன் டிவி மனசு வச்சாதான் வேட்டைக்காரன் ஹிட்டு. அதனால தான் விஜய் அடக்கி வாசிக்கிறாரு.

அது சரி, பேச்சு வாக்குல ஆதி ஃபெயிலியருக்கு சிவகாசிக்கும் ஆதிக்கும் இடையில கேப்பு குறைச்சலா இருந்ததுதான் காரணம்ங்கற மாதிரி சொல்றீங்க. இதே மாதிரி குருவி, வில்லு தோல்விக்கும் ஏதாவது காரணம் வச்சிருக்கிங்களா?

கார்க்கி on October 6, 2009 at 6:25 PM said...

//அது சரி, பேச்சு வாக்குல ஆதி ஃபெயிலியருக்கு சிவகாசிக்கும் ஆதிக்கும் இடையில கேப்பு குறைச்சலா இருந்ததுதான் காரணம்ங்கற மாதிரி சொல்றீங்க. இதே மாதிரி குருவி, வில்லு தோல்விக்கும் ஏதாவது காரணம் வச்சிருக்கிங்களா//

முகிலன், நல்லா படிச்சிங்களா?நான் அபப்டி சொல்லல. நான் சொன்னது சிவகாசி ஓடும்போதே ஆதி வந்தது. ஆதியும் அப்பீட்டு, அதன் பிறகு சிவகாசியும் ஓடல. ஆதி வரலைன்னா சிவகாசி கொஞ்சம் காசு பார்த்திருக்கும். உஙக்ளுக்கு விஜய் பிடிக்கலைன்னா விட்டுடுங்க பாஸ். இப்படி மனசுல இருக்கிரத வச்சு என்னை குறை சொல்லாதிங்க.

ஹாஜா, வான்முகிலன், ரொம்ப நன்றிங்க. நான் தெளிவாத்தான் இருக்கேன். எங்கேயும் வேட்டைக்காரன் ஷ்யூர் ஹிட்ன்னு சொல்லல நான். உங்களுக்கு பிடிகலைன்னா ஒதுங்குவதே நல்லது. நான் அதைத்தான் செய்கிறேன்.

கார்த்திக், கார்ல்ஸ்பெர்க், யோ, ஸ்ரீமதி, மேவீ, வித்யா நன்றி

அன்புடன் அருணா on October 6, 2009 at 7:30 PM said...

Blogger Karthik said...
/என்னமோ போங்க கார்க்கி.../
REPEATTU!!!!

முகிலன் on October 7, 2009 at 12:16 AM said...

//முகிலன், நல்லா படிச்சிங்களா?நான் அபப்டி சொல்லல. நான் சொன்னது சிவகாசி ஓடும்போதே ஆதி வந்தது. ஆதியும் அப்பீட்டு, அதன் பிறகு சிவகாசியும் ஓடல. ஆதி வரலைன்னா சிவகாசி கொஞ்சம் காசு பார்த்திருக்கும். உஙக்ளுக்கு விஜய் பிடிக்கலைன்னா விட்டுடுங்க பாஸ். இப்படி மனசுல இருக்கிரத வச்சு என்னை குறை சொல்லாதிங்க.
//
என்ன பாஸு சும்மா கலாய்ச்சா கூட கோச்சுக்கிறீங்க? எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும் சார். ஆனா சிவகாசி, குருவி, வில்லுல நடிக்கிற விஜய இல்ல.

பட்டிக்காட்டான்.. on October 7, 2009 at 1:26 AM said...

//.. ஏதாவ்து ஒரு லூசு வந்து தப்பிச்சிட்டிங்கன்னு கமெண்ட் போடும் பாருங்களேன். ..//

இப்படி கூட பின்னூட்டம் மட்டுறுத்தம்(சரியா?) பண்ணலாமா சகா..

கார்க்கி on October 7, 2009 at 10:10 AM said...

நன்றி டீச்சர் :))

//என்ன பாஸு சும்மா கலாய்ச்சா கூட கோச்சுக்கிறீங்க? எனக்கு விஜய் ரொம்ப பிடிக்கும் சார்//

கோச்சிக்கல சகா. நான் சொல்லாதத சொன்னதா சொன்னப்ப கொஞ்சம் டென்ஷன். அவ்ளோதான்.:))

பட்டிக்காட்டன், ஹிஹிஹி.. உஷாருதான்..

மங்களூர் சிவா on October 7, 2009 at 11:33 AM said...

ரைட்டு.

baln on October 16, 2009 at 12:51 AM said...

aadhavan

நாஞ்சில் பிரதாப் on October 23, 2009 at 1:43 AM said...

கார்க்கி, வேட்டைக்காரன் இப்பேதைக்கு ரிலீஸ் ஆகாதாம்ல... இதைப்பாருங்க...

http://vimarsagan1.blogspot.com/2009/10/blog-post_6782.html

 

all rights reserved to www.karkibava.com