Oct 5, 2009

கார்க்கிக்கும் பேபி கிடைச்சாச்சு


 

DOY சோப் போட்டுதான் குளிப்பான் பப்லு. ஒவ்வொரு முறையும் விதவிதமான பொம்மைகள் வடிவத்தில் வாங்குவான். இந்த முறை சிங்கம். கவரைப் பிரித்தவன் என்னிடம் காட்டி சொன்னான், ”தூள் சோப்புடா. இத போட்டு குளிச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும் தெரியுமா?”

”சிங்கம் கடிச்சுடதாடா” என்றபடி சோப்பை வாங்கிய நான் கைத்தவறி கீழேப் போட்டுவிட்டேன்.

கோவத்துடன் முறைத்த பப்லு சொன்னார் “ தூள் சோப்புன்னுதான் சொன்னேன். நீ அத உடைச்சு சோப்பு தூள் ஆக்கிடுவியே”

!!!!!!!!!!!!!!!!

******************************************************

கூகிளில் சென்று “free online games” எனத் தேடி விளையாடுவது பப்லுவின் வழக்கம். என் லேப்டாப்பில் தமிழ் எழுத்தில் வர, எப்படி பப்லு என டைப் செய்வது என்று கேட்டான். சொன்னவுடன், கூகிளாண்டவரிடம் பப்லு என கேட்க, அவர் முதல் பதிலே என் பிளாக் பக்கம் கைக்காட்டி இருக்கிறார். வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பப்லுவைப் பற்றி நான் எழுதியதையும், பரிசல் ஆட்டோகிராஃப் வாங்கும் ஃபோட்டோவையும் காட்டி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் பப்லுவின் அப்பா, அவர் வளர்ந்த கதை, மம்மி யு.எஸ் போன கதையெல்லாம் சொல்லி, இப்படி பெரியாளாக வேண்டுமென்று அட்வைஸிக் கொண்டிருந்தார். யோசித்த பப்லு, கூகிளை திறந்த டேடி, மம்மி பெயரைப் போட்டு தேடினான். இவர்களுக்கு சம்பந்தமாக எதுவும் வரவில்லை. அடுத்து என்ன செய்திருப்பான் என்று சொல்லனுமா? அக்கா என பக்கம் திரும்புவதற்குள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

******************************************************

ஹோண்டா சிட்டி புக் செய்திருக்கிறார் பப்லுவின் அப்பா. ஞாயிற்றுக் கிழமை அன்று சும்மா ஒரு ரவுண்ட் போலாம் என்று ஷோருமூக்கு சென்று அப்போதுதான் ஷிப்பிங் ஆகி வந்திருந்த வண்டியில் கிளம்பினோம். தினமும் ஈவ்னிங் நீயும் நானும் ஒரு ரவுண்ட் போலாம்டா என்று என்னிடம் சொன்னான். எங்கடா போலாம் என்றேன். ”ஹோண்டா சிட்டில போய் போண்டாவா வாங்குவாங்க டாடி” என்றான். அவரும் ஏதோ ஒரு நினைப்பில் கரெக்ட் பப்லு. அதுக்கெல்லாம் எடுத்துட்டு போக கூடாது என்றார்.

அதான் டேடி. நாங்க பிட்ஸா ஹட்டுக்குதான் போயிட்டு வருவோம்

******************************************************

Image0055 

                                தல போல வருமா…

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங்க இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப் நீயும் என் டீம்தாண்டா என்றார். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்.

******************************************************

வினோத்(என் கஸின்), நான், பப்லு மூவரும் வேளச்சேரி Dominos pizza சென்றோம். Chicken mexican red wave, cheese burst எங்களுடைய ஒரே சாய்ஸ். ஆர்டர் எடுத்த பெண் அநியாயத்துக்கு க்யூட்டாக இருந்தார். நான் அவளை கவனிப்பதை, கவனித்த வினோத் “க்யூட்டா இருக்கால்ல” என்று காதில் கிசுகிசுத்தான். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். நேரமானதால் பப்லு  அக்காவிடம் போய் கேட்டான். அவர் feedback form கொடுத்து இத ஃபில் செய்ப்பா. அதுக்குள்ள வந்துடும் என்றார். இதுக்குள்ள அவ்வளவு பெரிய பிஸ்ஸா எப்படி வரும் என்ற பப்லுவை ஆச்சரியமாக பார்த்தார் அந்த அக்கா.

எல்லாவற்றிலும் excellent டிக் செய்துவிட்டு,மறக்காமல் என் ஃபோன் நம்பரையும் எழுதிவிட்டு “do you want to appreciate any specific person” என்ற இடத்தில் அக்காப் பெயரை எழுதலாம் என்று பப்லுவை போய் பேர் கேட்க சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என்று கவரை மூடி ஒட்டிவிட்டான் பப்லு. நான் இழுக்க, அவன் இழுக்க ஃபார்ம் டர்ர்ர்ர்ர். பேனாவை மட்டுமாவது கொடுக்கலாம் என்று போனால், பார்ம்? என்றது க்யூட். வேற ஒரு ஃபார்ம் வாங்கிக் கொண்டு, ur name  என்றேன். வெள்ளைதாளில் Gezillaa  என்று எழுதி, its an odd name என்றபடி பேப்பரை நீட்டினாள். அவள் பெயருக்கு கீழே Karki  என்று எழுதி, நானும் ரவுடிதான் என்றேன். எல்லாவற்றிலும் excellent போட்டு, என் பெயருடன் ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம்.

காரில் வரும்போது எதுக்கோ பப்லுவை நான் மிரட்ட, பதிலுக்கு பப்லு மிரட்டினான். பாட்டிக் கிட்ட சொல்லிடுவேன். நீ அந்த பொண்ணுகிட்ட “ I like u. Shall we go out” சொன்னேன்னு சொல்லிடுவேன் என்றான். பிட்ஸாதாண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்த பிசாசு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எப்போது இப்படி பெரிய ஆளாயிட்டான் பப்லு என்று யோசிக்க தொடங்கினான். வினோத் தன் கேர்ள் ஃப்ரெண்டை பேபி என்று அழைப்பதை ஒரு நாள் கேட்டுவிட்டான் பப்லு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் பப்லு கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”

37 கருத்துக்குத்து:

Lakshmi on October 5, 2009 at 11:03 AM said...

Congrats!! :))

ஆதிமூலகிருஷ்ணன் on October 5, 2009 at 11:11 AM said...

:-))

Anonymous said...

//ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”//

எல்லாம் பரம்பரையா வர்றது :)

Anonymous said...

//வீட்டுக்குள் நுழைந்தவுடன் பப்லு கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”//

:)

gulf-tamilan on October 5, 2009 at 11:23 AM said...

congrats !!! for cute baby :)))

விக்னேஷ்வரி on October 5, 2009 at 11:30 AM said...

வார தொடக்கத்திற்கு நல்ல டானிக்.

முதலமைச்சர் 2011 on October 5, 2009 at 12:59 PM said...

பெரிய ஆளான்னா பரவாயில்லை சகா. உங்கள மாதிரி ஆயிட்டு வர்றானே. அதான் எங்க கவலை.

அமுதா கிருஷ்ணா on October 5, 2009 at 1:12 PM said...

பாவம் அந்த பேபி...

Ammu&Madhu on October 5, 2009 at 1:28 PM said...

//கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு//
:)

♠ ராஜு ♠ on October 5, 2009 at 1:51 PM said...

:-)))))

சுசி on October 5, 2009 at 2:30 PM said...

தனி லேபல் பெற்ற மொக்கை இளவரசன் பப்லு வாழ்க...
ரசிக்கும்படியா எழுதுற கார்க்கியும் வாழ்க.

Truth on October 5, 2009 at 2:52 PM said...

விடாமல் சிரித்தேன். :-)

ராஜா | KVR on October 5, 2009 at 3:00 PM said...

:-)

ஜெஸ்வந்தி on October 5, 2009 at 3:03 PM said...

அடடே! இதுதான் பேபியா? நான் உண்மை என்று வாழ்த்துச் சொல்ல வந்தேன்.

கார்க்கி on October 5, 2009 at 3:36 PM said...

@லக்‌ஷ்மி, எதுக்குங்க?

என்ன சிரிப்பு, ஆ.மூ.கி?

அம்மிணி,அதே

கல்ஃப் தமிழன், நன்றி

@விக்கி, வார இறுதிக்கு வேற டானிக இருக்குங்க

முதலமைச்சரே, நல்லா வர்றாங்கறீங்களா?

அமுதா மேடம், நீங்களே இப்படி சொன்னா எப்படி?

அம்மு, நன்றி

வாடா டம்பி டாஜூ

வாழ்க வாழ்க..சுசி வாழ்க வாழ்க


நன்றி ட்ரூத்..

நன்றி ராஜா

நன்றி ஜெஸ்வந்தி. உண்மையாகனும் நினைச்சிங்க..

பட்டாம்பூச்சி on October 5, 2009 at 3:37 PM said...

Congrats :)!!!!

சூரியன் on October 5, 2009 at 3:40 PM said...

ஓ இதான் அந்த பேபியா?..நான் பேபின்னதும் ஷாக்காயிட்டேன்.

rajan on October 5, 2009 at 3:52 PM said...

நனறி!
கார்கி.தொடர்ந்து வாருங்கள்!
my blog

டம்பி மேவீ on October 5, 2009 at 4:28 PM said...

நன்றி கார்கி ... பப்லு பதிவு போட்டதற்கு

டம்பி மேவீ on October 5, 2009 at 4:28 PM said...

2o nane

டம்பி மேவீ on October 5, 2009 at 4:28 PM said...

2o nane

ghost on October 5, 2009 at 4:30 PM said...

நான் வேற ஏதோ பேபின்னு நினச்சேன் எனிவே வாழ்த்துக்கள் கார்க்கி

டம்பி மேவீ on October 5, 2009 at 5:18 PM said...

400 followers adikka valthukkal

யோ வாய்ஸ் (யோகா) on October 5, 2009 at 5:31 PM said...

பப்லு சின்ன கார்க்கியா இல்ல கார்க்கி பெரிய பப்லுவான்னு ஒரு சந்தேகம் சகா..

அறிவிலி on October 5, 2009 at 6:49 PM said...

:))

முரளிகண்ணன் on October 5, 2009 at 6:55 PM said...

கலக்கல் கார்க்கி

Itsdifferent on October 5, 2009 at 7:35 PM said...

Business India Headline:
Dominos Pizza - Velacheri Branch reports record weekend sale.

அன்புடன் அருணா on October 5, 2009 at 7:41 PM said...

நான் இப்போ பப்லு ஃபேன்!!!!!விசிறி!

குகன் on October 5, 2009 at 10:50 PM said...

யாரு அந்த பேபி சகா...??

Anonymous said...

வீட்டுக்குள் நுழைந்தவுடன் பப்லு கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”/


i know,i know, i know :))))

Romeoboy on October 5, 2009 at 11:02 PM said...

பப்லு ரவுசு ஓவர்ரா தான் போயிட்டு இருக்கு சகா. பிகர் எதாவது பார்த்து வச்சி இருந்திங்கனா கல்யாணம் பண்ற வரைக்கும் அவன் கிட்ட காட்டதிங்க அப்பறம் உங்க பாடு திண்டாட்டம் தான்.

T.V.Radhakrishnan on October 6, 2009 at 5:32 AM said...

:-)))

Vidhoosh on October 6, 2009 at 10:10 AM said...

என்னடா இது, கார்கி கூட குழந்தை உச்சா போன கதையெல்லாம் எழுத ஆரம்பித்தாச்சா என்று நினைத்துக் கொண்டே வந்தேன். அதான...

ம்ம்க்கும்...


:))

-வித்யா

கார்க்கி on October 6, 2009 at 10:24 AM said...

அனைவருக்கும் நன்றி

தமிழ்ப்பறவை on October 6, 2009 at 10:51 AM said...

:-) வாழ்த்துக்கள்

Karthik on October 6, 2009 at 1:44 PM said...

வாழ்த்துக்கள்!! :))

பப்லு படத்தில் கமெண்ட்...:((

வித்யா on October 6, 2009 at 3:02 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com