Oct 1, 2009

நச்சுன்னு நாலு சினிமா மேட்டர்


  

Vairamuthu-Son-wedding-stills-2    வைரமுத்துவின் ஒரு மகன் பெயர் கபிலன். இன்னொருவர் மதன் கார்க்கி. ஆஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு முடித்து வந்தவர். அப்பா வழிக்கு வரமாட்டார் என்றே கணித்திருந்தேன். அவரும் நானும் சில ஆண்டுகள் முன்பு ஆர்குட் நண்பர்கள். இளமை இதோ இதோ என்ற படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறாராம். வரவேற்போம் கார்க்கியை. அதாங்க மதன் கார்க்கியை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

************************************************************************

Bharath_2

  அடுத்த தலைமுறை நடிகர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் ஜீவா, தனுஷ், பரத் மற்றும் பிரசன்னா. ஏனோ பரத் சமீபகாலமாக சொதப்புகிறார். அவர் வருங்காலத்தில் நல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக வர வாய்ப்பு உண்டு என்பதை பட்டியல் படத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன். ஆனால் அவசரப்படக்கூடாது இல்லையா? இன்னும் ஒரெ ஸ்டெடி ஒப்பனிங்கே இல்லாத நிலையில் பழனி,சேவல்,  ஆறுமுகம், திருத்தணி என வரிசை கட்டி அடிப்பது ஏன் என்று தெரியவில்லை. கந்தசாமிக்கும் அன்னியன், சிவாஜிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று சுசி சொன்னதை கேட்டே சிரித்துக் கொண்டிருக்கிறோம். இதில் பரத் சொல்வதைக் கேட்டால்.. பரத்தண்ணே, நீங்க அண்ணாமலை பார்த்திருக்கிங்களா?

“அண்ணே, ஏண்ணே அப்படி சொல்றீங்க? அது வேற, இது வேற. சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்ணியதால் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருச்சு. மற்றபடி இந்த கதையிலே அம்மா சென்ட்டிமென்ட் அதிகமா இருக்கும். அம்மாவோட சமாதிய இடிக்க வர்ற ஒரு வில்லியை அவன் ரோட்டுக்கு கொண்டு வர்றேன்னு சபதம் போடுறான். சொன்னபடி செய்யுறான். இதுல எங்கே அண்ணாமலைய பார்த்தீங்க?”

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது

************************************************************************

vettai_new-Stills

வேட்டைக்காரன் தீபாவளிக்கென்று இயக்குனர் சொல்லியிருந்தாலும் வருமா என்பது சந்தேகம்தானாம். ஆதவன் முன்பே தன் கர்சீப்பை போட்டு இடம் பிடித்து விட்டது. எனவே நேருக்கு நேரில் வந்த விஜயும், சூர்யாவும் இந்த தீபாவளிக்கு நேருக்கு நேர் வேண்டாம் என்று விரும்புகிறார்களாம் குருவி என்ற தோல்விப் படத்தைத் தந்த ரெட் ஜெயண்ட் ஆட்கள். ஆனால் அயன் என்ற வெற்றிப் படம் தந்த சன் மக்களோ விடலாமே என்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆஸ்திரேலியா செல்லவிருந்த வேட்டைக்காரன் குழு, வேகமாக முடிக்கலாம் என்று புனேவிலே எடுக்க நேற்று கிளம்பிவிட்டார்கள். படம் பார்த்த விஜய் தீபாவளிக்கு பண்ணுங்க, இல்லைன்னா பொங்கலில் அசலோட மோத விடுங்க. தனியா வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பாசிட்டிவாக இருக்கிறாராம்.

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்

இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்?

இவனுக்கு இல்லடா கடிவாளம்

இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்

************************************************************************

Spider_monkey_465x330

காஞ்சிவரம் படத்திற்கு பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்  தேசிய விருது வாங்கியதில் தங்கர்பச்சானுக்கு என்ன கடுப்போ? வழக்கம் போல் உளறித் தள்ளுகிறார். நான்கு மலையாளிகள் தேர்வுக்குழுவில் இருப்பதால் தான் மலையாளி  பிரியதர்ஷன் இயக்கிய தமிழ்ப்படத்திற்கு ஒரு கன்னட நடிகனுக்கு விருது வழங்குவார்களா? சாதனா சர்கம் அழகி படத்துக்காக சிறந்த பிண்ணணி பாடகி விருது வாங்கிய போது, எந்த தமிழ் பாடகிக்கும் இவரது உச்சரிப்பு குறைந்ததல்ல என்ற தங்கர், இப்போது அந்த விருதும் அவர் வடநாட்டு பாடகி என்பதாலே கொடுக்கப்பட்டதாக சொல்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் இவன் மலையாளி, இவன் கன்னடன் என்று பிதற்றும் தங்கர் செய்ததென்ன?அழகியில் நந்திதா தாஸ். பின் தமிழ் நடிகைதான் நடிக்க வைப்பேன் என்றவர், நவ்யா நாயரிடம் சென்றார். குருவி குடைஞ்ச கொய்யாப்பழம் என்ற அழகிய பாடலை எடுத்தவர், குத்துப்பாட்டே இருக்ககூடாது என்றார். பின் கானா உலகநாதனின் ரோஸ் மேரி என்று குத்தாட்டம் போட்டார். தங்கருக்கெல்லாம் கும்பிபாகம் தான் சரி.

நேற்று என்பது முடிந்தது நினைவிலில்லை

நான் நாளைக்கு நடப்பதை நினைப்பது இல்லை

டமுக்..டமுக்..டமுக்கு டமுக்கு டம்மா

42 கருத்துக்குத்து:

சுசி on October 1, 2009 at 11:23 AM said...

துண்டு போட்டாச்சு... நான்தான் பஸ்டு.... இனி படிச்சுட்டு வரேன்..

சுசி on October 1, 2009 at 11:57 AM said...

விஜயையும் தாண்டி நாலு மேட்டரையும் படிக்கிறது ரொம்ப கஷ்டமானது கார்க்கி...

மதன்.. கார்க்கி.. வரவு நல்வரவாகட்டும்...

செந்தழல் ரவி on October 1, 2009 at 12:00 PM said...

சூப்பர்.

செந்தழல் ரவி on October 1, 2009 at 12:00 PM said...

மறுபடி வாரிசு அரசியலா ?

பிரபாகர் on October 1, 2009 at 12:06 PM said...

//தங்கருக்கெல்லாம் கும்பிபாகம் தான் சரி//

மிகவும் ரசித்த வரிகள்...

வேட்டைக்காரன் வெற்றிபெற வாழ்த்துக்கள். குருவிய வில்லால அடிச்சிட்டதால வேட்டைக்காரன் கண்டிப்பா பொழச்சுக்குவான்...டோன்ட் வொரி சகா...

பிரபாகர்.

ஜெட்லி on October 1, 2009 at 12:13 PM said...

வேட்டைக்காரன்?? --- பார்க்கத்தானே போறோம்.....

KISHORE on October 1, 2009 at 12:19 PM said...

அட ஏன் கார்கி நீங்க வேற.. தங்கரை எல்லாம் ஒரு ஆளா மதிச்சி பேசி பதிவு போட்டுகிட்டு ..

Anonymous said...

மதன் கார்க்கி வரவு நல்வரவாகட்டும்

அமுதா கிருஷ்ணா on October 1, 2009 at 12:30 PM said...

எனக்கு பரத்தை பிடிக்காது ஒரே மாதிரி நடிப்பு..சின்ன பையன் தானே வெயிட் செய்வோம்...

SurveySan on October 1, 2009 at 12:54 PM said...

'நச்' காப்பிரைட் நம்முளுது சாரே :)

மகா on October 1, 2009 at 12:55 PM said...

pathivu super

தீப்பெட்டி on October 1, 2009 at 1:12 PM said...

மதன் கார்க்கிக்கு வாழ்த்துகள்..

ஜீவா,தனுஷ்,பிரசன்னா மூவரும் எனக்கும் பிடித்தவர்கள்.. பரத் நிச்சயமாக தேறமாட்டார்

தளபதி படம் அருமை..

தங்கர் பச்சான் ஏன் இப்படி தமிழர்கள் பெயரைக் கெடுக்கிறார்?

டம்பி மேவீ on October 1, 2009 at 1:24 PM said...

bharath matter kku semaiya sirichen

Karthik on October 1, 2009 at 1:26 PM said...

உலகத்துல எத்தன கார்க்கிதாம்பா இருக்கீங்க? கார்த்திக்க விட கார்க்கீஸ் ஜாஸ்திபோல. :))

டம்பி மேவீ on October 1, 2009 at 1:26 PM said...

thangar bachan oda antha erndu pattum konjam over thaan

Karthik on October 1, 2009 at 1:26 PM said...

email follow up... no comments on vettaikaran.. :P

டம்பி மேவீ on October 1, 2009 at 1:27 PM said...

thambi karthik .....


gorky vera

karki vera

car key vera

dont confuse

Anbu on October 1, 2009 at 1:31 PM said...

மதன் கார்க்கிக்கு வாழ்த்துகள்..

நீங்க சொன்ன இளைய தலைய முறையில் எனக்கு பிடித்தது...ஜீவா மற்றும் தனுஷ்...

விஜயின் ஸ்டில் சூப்பர்

கலையரசன் on October 1, 2009 at 1:32 PM said...

ஏன்மா?

ஆமா!!

உம்மா!!!

போமா....

யோ வாய்ஸ் (யோகா) on October 1, 2009 at 1:36 PM said...

தங்கர் எல்லாம் பேசி பேசியே காலத்தை தள்ளுபவர்கள் உட்கார்ந்தால் நிற்க சொல்லுவாங்க, நின்னால் உட்கார சொல்லுவாங்க அவங்கள விட்டுடுவோம் சகா..

நம்ம சகாவுக்கு போட்டியா இன்னொரு கார்க்கியா? பதிவுலக பக்கம் வந்துட வேண்டாம்னு சொல்லிடுங்க..

நாடோடி இலக்கியன் on October 1, 2009 at 1:47 PM said...

//தங்கருக்கெல்லாம் கும்பிபாகம் தான் சரி//
இது டக்கர்.

வெண்பூ on October 1, 2009 at 1:48 PM said...

நல்ல துணுக்குகள்.. கடைசியா நான் படிச்ச செய்தியின்படி தீபாவளி முடிஞ்சி ரெண்டு வாரம் கழிச்சி வேட்டைக்காரன் வரும் போல.. நல்ல ஆக்ஷன் படமா இருக்கும்னு நம்புவோம். ஆனா நெட்ல ஏற்கனவே வந்த ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீனைப் பாத்தா பயமா இருக்கு :)

கடைசி துணுக்கு பத்தி... தங்கர் மாதிரி ஆளுங்களையே கண்டுக்கவே கூடாது கார்க்கி.. நாம கவனிக்கிறோம்னு தெரிஞ்சா இன்னும் அதிகமா பேசுவாங்க.. சுனா சாமி மாதிரி :)

கில்லிகள் on October 1, 2009 at 1:58 PM said...

//ஆனா நெட்ல ஏற்கனவே வந்த ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீனைப் பாத்தா பயமா இருக்கு :)//

நண்பரே, அது பந்தயம் என்ற படத்தில் வந்த காட்சி. வேட்டைக்காரன் என்று யாரோ கிளப்பிவிட்டார்கள். அதே போல் வேட்டைக்காரன் டோய் என்ற பாடல் வைதேகி என்ற படத்தில் வரும் பாடல்.

பந்தயம் என்பதால் அந்த காட்சியை நாங்கள் நல்லாயிருக்குன்னு சொல்லவில்லை. அது எங்கள் எதிரி, எஸ்.ஏ.ஸி இயக்கிய படம் என்பதை நீங்கள் அறீவிர்கள்

Cable Sankar on October 1, 2009 at 2:13 PM said...

நல்லாருக்கு..தங்கர் எல்லாம்காமெடி பீஸு.. பரத்து.. டமாசு.. விஜய்.. ?/??:

இந்த கார்க்கியை கடுப்பேத்துறதுல என்னதான் சந்தோஷமோ..?

pappu on October 1, 2009 at 3:29 PM said...

நாலு பேருல ரெண்டு பேர பரத், தங்கர்னு காமெடி பீஸா வச்சிருக்கீங்களே!

ராஜன் on October 1, 2009 at 3:53 PM said...

கார்க்கி -ன்னா என்னங்க அர்த்தம் ?....

கார்க்கி on October 1, 2009 at 3:55 PM said...

நன்றி சுசி.உண்மைதான்

நன்றி ரவி. இதில் அரசியல் இல்லை.பலர் வாய்ப்பு தரவில்லையாம்

நன்றி பிரபாகர். நடந்தால் சந்தோஷம்

ஜெட்லீ, எபப்டி இருந்தாலும் பார்க்கத்தானே போறீங்க

கிஷோர், உண்மைதான். இருந்தாலும்.

அதே அம்மிணி

அமுதா மேடம், நல்லாத்தான் நடிப்பாரு. நேரம் சரியில்லை

சர்வேசன் அவரக்ளே, இனிமேல் கவனிக்கறோம் :)))

நன்றி ம்கா

நன்றி தீப்பெட்டி. தள்பதின்னா சும்மாவா?

மேவீ, நடத்து

கார்த்திக், கார்க்கி என்று கர்நாடடாவில் ஒரு இடம் உண்டு

நன்றி அன்பு

கலை, ரைட்டும்மா

யோகா, எனக்கு என்னவோ விரைவில் வருவார்ன்னு தோணுது

நன்றி இலக்கியன்

வெண்பூ, இல்ல சகா அது வேட்டைக்காரன் இல்ல :))

நன்றி கில்லி..

சங்கர்ஜி, படம் எடுக்காமலா போயிடுவீங்க.. வச்சுக்கிறோம்

பப்பு, ஒரு குதுகலம் வேணாமா?

வித்யா on October 1, 2009 at 3:58 PM said...

நல்லாருக்கு. அந்த கடைசி மேட்டர் அதே.

வெண்பூ on October 1, 2009 at 4:14 PM said...

//
கில்லிகள் said...
அது எங்கள் எதிரி, எஸ்.ஏ.ஸி இயக்கிய படம் என்பதை நீங்கள் அறீவிர்கள்
//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. :)

நர்சிம் on October 1, 2009 at 4:45 PM said...

ரைட்டு சகா

ILA(@)இளா on October 1, 2009 at 5:01 PM said...

//ரைட்டு சகா//
தான் ஒரு ’இடது’ இல்லைன்னு நிரூபிக்கறாரோ நர்சிம்?

ILA(@)இளா on October 1, 2009 at 5:01 PM said...

சினிமா மேட்டர் நாலு இருக்கு. ‘நச்’ எங்கே இருக்கு?

Jaffar on October 1, 2009 at 6:26 PM said...

//தனியா வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பாசிட்டிவாக இருக்கிறாராம்.

*** எப்படி இருந்தாலும் பார்க்கத்தானே போறீங் ***

ரொம்பவே பாசிட்டிவாக இருக்கீங்க போல... :)

முகிலன் on October 1, 2009 at 7:02 PM said...

மதன் கார்க்கிக்கு வாழ்த்துக்கள்...

பரத் நல்ல நடிகர்தான். படங்களைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். பேரரசு என்ற பெயரை உச்சரிக்காமல் இருந்தால் மிகவும் நல்லது.

வேட்டைக்காரனை சன் டிவி வாங்கிவிட்டதால் பிழைத்துவிடும் என்று நம்புகிறேன்.

அது போன மாசம். இது இந்த மாசம். தங்கர் முரண்பாடுகளின் மொத்த உருவம்.

அறிவிலி on October 1, 2009 at 7:50 PM said...

//தங்கருக்கெல்லாம் கும்பிபாகம் தான் சரி//

நச்சு தான்

RaGhaV on October 2, 2009 at 12:47 AM said...

//அடுத்த தலைமுறை நடிகர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் ஜீவா, தனுஷ், பரத் மற்றும் பிரசன்னா.//

ரொம்ப கஷ்டம்.. மொதல்ல list அ மாத்துங்க கார்க்கி..

தங்கருக்கு நெத்தியடி - சூபபரப்பூ.. ;-)

தமிழ்ப்பறவை on October 2, 2009 at 1:04 AM said...

நச்...
//நல்ல ஆக்ஷன் படமா இருக்கும்னு நம்புவோம். ஆனா நெட்ல ஏற்கனவே வந்த ஒரு போலீஸ் ஸ்டேஷன் சீனைப் பாத்தா பயமா இருக்கு :)//
இது போலதான் நானும் பயந்துட்டிருந்தேன்...
ஆனா கில்லிகள் விளக்கம் தெளிவு படுத்தி விட்டது...
ஏன் எஸ்.ஏ.சி அஜித்தையோ,சூர்யாவையோ வச்சுப் படமெடுக்கக் கூடாது..?

பட்டிக்காட்டான்.. on October 2, 2009 at 2:46 AM said...

//.. pappu said...

நாலு பேருல ரெண்டு பேர பரத், தங்கர்னு காமெடி பீஸா வச்சிருக்கீங்களே! ..//

ரிப்பீட்டு...

ஊர்சுற்றி on October 2, 2009 at 1:42 PM said...

//இல்லைன்னா பொங்கலில் அசலோட மோத விடுங்க. தனியா வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பாசிட்டிவாக இருக்கிறாராம்.//

இதத்தான் நான் ரொம்ப ரசிச்சேன்! :)

ஆதிமூலகிருஷ்ணன் on October 2, 2009 at 6:00 PM said...

ஜீவா,தனுஷ் இருவரும் எனக்கும் பிடித்தவர்கள்..

பரத் நிச்சயமாக வேலைக்கே ஆவாது.!

பிரசன்னாவுக்கு 'சீனாதானா' ஒரு படம் போதும், வாழ்நாள்பூரா அவரை வெறுக்க.!

மங்களூர் சிவா on October 3, 2009 at 11:10 AM said...

சூப்பர்.

Madhan Karky on December 10, 2009 at 12:52 PM said...

நன்றி கார்க்கி :)

 

all rights reserved to www.karkibava.com