Oct 23, 2009

பரிசல் 25
parisal1   

பரிசல்காரன். இயற்பெயர் கிருஷ்ணகுமார். வலைப்பதிவாளர்களால் மறக்க முடியாத பெயர். எழுதினாலும் எழுதாவிட்டாலும் எப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர். எழுதாமல் இருந்த காலங்களிலும் ஃபாலோ பண்ணுபவர்கள் எண்ணிக்கை மட்டும் கூடிக் கொண்டே போனது ஆச்சரியம்தான். வலையுலகம் அறியாத பரிசலைப் பற்றிய 25 விஷயங்கள் இதோ உங்களுக்காக


   தன் மனைவி - உமா, மகள்கள் மீரா-மேகா பெயரைக் குறிப்பிட வேண்டிய இடங்களில் குறிப்பிடுவார் பரிசல். “பேரெல்லாம் வேணாம் பரிசல். மறைமுகமா குறிப்பிடுங்க..” என்று சில நண்பர்கள் அறிவுறுத்திய போதும் இவர் கேட்காமல் செய்வது இது ஒன்றைத்தான்.

______XX_____

   “உங்களுக்கு இரண்டுமே பெண்ணா” என்று ஏதோ கவலை ததும்பும் குரலோடு கேட்டால் பிடிப்பதில்லை பரிசலுக்கு. கமல், ரஜினி என்று பெண் குழந்தைகள் பெற்றிருக்கும் பெற்றோர் லிஸ்டை எடுத்து விடுவார். இரண்டுமே பெண்கள் என்பதில் பெருமைப்படுபவர் அவர்.

______XX_____

    சமீபமாக வாட்ச் கட்டிக் கொள்ளும் பழக்கமில்லை. உமா இவருக்கு திருமணத்திற்கு முன்பு பரிசளித்த வாட்சை, பைக்கின் ஸ்பீடா மீட்டருக்குள் ஒட்டி வைத்திருக்கிறார். எல்லாரும் அதை வியப்பாய்ப் பார்த்து பாராட்டும் போது (எப்படீங்க வாட்சை இதுக்குள்ள ஃபிட் பண்ணினீங்க?) உமாவிடம் ‘பார்த்தியா நீ குடுத்த கிஃப்டை எப்படி வெச்சிருக்கேன்னு?’ என்று பீற்றிக் கொள்வார்.

______XX_____

    தீவிர ரஜினி ரசிகன். அதே அளவு கமலுக்கும் வக்காலத்து வாங்குவார். சமீப ஹீரோக்களில் ரசிப்பது விஜய் & சூர்யா.

______XX_____

   இளையராஜாவின் பரம விசிறி. ஆனாலும் ஐ பாடில் ஏ.ஆர்.ஆர், வித்யாசாகர், ஹாரிஸுக்கு தனி ஆல்பங்கள் வைத்து கேட்பார். (இன்னொரு கிசுகிசு: இவர் மனைவிக்கு ராஜாவைப் பிடிக்காது. அவர் சாய்ஸ் ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் !)

______XX_____

   அலுவலகம் விட்டு வந்தபின், ரிலாக்ஸாக இருக்க டி.வி.டி-யில் குத்துப் பாட்டைப் போட்டு குடும்பத்தோடு டான்ஸ் ஆடுவது வழக்கம். பெரியமகள் மீரா எந்த ஸ்டெப்பையும் டி.வி-யில் பார்த்த மாத்திரத்தில் கிரகித்துக் கொண்டு ஆடுவதில் கில்லாடி என்பதில் இவருக்கு சந்தோஷம்.

______XX_____

    பாடவும் வரும். அலுவலக உணவு இடைவேளையில் வாரத்துக்கு மூன்று நாட்களாவது இவர் குரல் கரோகே சிஸ்ட்த்தில் ஒலிக்கும். இளையராஜாவின் குரல் இவர் ஃபேவரைட். ரொம்பவும் உச்சஸ்தாயி வராதென்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற பாடல்களைப் பாடுவார். இவர் குரலில் “தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலும், ‘வழிவிடு வழிவிடு வழிவிடு’ பாடலும் இவரது சக நண்பர்களிடையே பிரபலம். சமீபத்தில் ‘கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி..’

______XX_____

   தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் பேச, படிக்க தெரியும். ஹிந்தியும் நன்றாகப் பேசுவார். பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு மொழி – குஜராத்தின் ‘கட்ச்’ மொழி.

______XX_____

   சமீபத்திய ஏமாற்றம் – ஒரு பண்பலையில் வலைப்பதிவாளராக பேட்டி காண அழைத்து ஏதோ ஒரு காரணம் காட்டி அதை அவர்கள் தள்ளிப்போட்டது. அழைத்த அந்த நண்பர் தனது தீவிர வாசகர் என்று சொல்லி, அதன்பிறகு ஏனோ அழைப்பதே இல்லை. ‘பேட்டி போனா போச்சுங்க.. ஃப்ரெண்டா கூட கூப்பிட அவருக்கு மனசு வர்ல பாருங்க’ என்று நண்பர்களிடம் புலம்புகிறார்.

______XX_____

   எப்போதும் பாஸிடிவாக பேசுவதையே விரும்புவார் பரிசல். நெகடீவிசம் ஆகவே ஆகாதுப்பா என்பார். அதையும் மீறி யாராவது நெகடீவாக பேசினால் ‘‘ஃப்ளைட் பறக்கலீன்னா..?’ன்னு நெகடீவா யோசிச்சவனாலதான் பாராசூட் கண்டுபிடிக்க முடிஞ்சது.. அதுமாதிரி இவன் நெகடீவா சொல்றதுல எதுனா நல்லது இருக்கான்னு பார்ப்போம்’ என்று அதையும் பாஸிடிவாக யோசிப்பார்.

______XX_____

  மிகப் பிடித்த விளையாட்டு – கிரிக்கெட். இண்டோர் கேம்ஸில் கேரம். அலுவலகத்தில் நம்பர் ஒன் கேரம் ப்ளேயர். எதிரிக்கு சில பாய்ண்டுகளைக் கொடுத்து, சவாலை ஏற்படுத்திக் கொண்டு நெருக்கடியில் ஜெயிப்பது மிகப் பிடிக்கும் பரிசலுக்கு.

______XX_____

   வித விதமான பேனாக்களை விரும்புவார். பயன்படுத்தும் இங்க் நிறம் கருப்பு. பிறரது பேனாக்கள் தவறுதலாக தன்னிடம் வந்துவிட்டால் தேடிப் பிடித்து கொடுத்துவிடுவார்.

______XX_____

  எப்போதாவது பீரடிப்பது வழக்கம். பிடிக்கவே பிடிக்காதது சிகரெட். கூடுமானவரை நண்பர்களை சிகரெட் பிடிக்காமல் பார்த்துக் கொள்வார். மனைவி உடன்நடக்க, சிகரெட் பிடித்துக் கொண்டே போகும் ஆண்களை அறவே வெறுப்பார்.

______XX_____

   கிரிக்கெட் உலகப் போட்டி நடக்கும்போது ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முதல்நாள் ப்ரடிக்‌ஷன் கேம் விளையாடுவது அலுவலகத்தில் இவரின் ஃபேவரைட். அதாவது அந்த மேட்சில் யார் முதல் பேட்டிங், ஸ்டார் பேட்ஸ்மேன்களின் ரன்கள், மேன் ஆஃப் த மேட்ச் யாராக இருக்கும் என்பது உட்பட 20 கேள்விகள் நிறைந்த லிஸ்டை இவரும் அலுவலக நண்பர்களும் யோசித்து எழுதி, அடுத்த நாள் சரிபார்ப்பார்கள். ஜெயிப்பவர்களும் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதிலும் பரிசல் கில்லாடி.

______XX_____

   அம்மா – அனந்தலட்சுமி. அப்பா – பாலசுப்பிரமணியன். இவர்களின் பெயரை சேர்த்து ‘அனந்த்பாலா’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

______XX_____

   ரொம்ப கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. மனித சக்திக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறதென்பதை நம்புகிறார். ‘அது நாமாகக் கூட இருக்கலாமே’ என்பார் கிண்டலாக!

______XX_____

  பொது இடங்களில் நடக்கும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவார் என்பது இவரிடம் உமாவுக்குப் பிடிக்காத விஷயம். சமீபத்தில் ராங் ரூட்டில் போன பேருந்தை, சமயோசிதமாக பரிசல் ஆர்.டி.ஓவிடம் மாட்டிவிட்ட சம்பவம் அவர் அலுவலகத்தில் பிரபலமாகப் பேசப்படுகிறதாம்.

______XX_____

  தனக்குப் பிடித்த விஐபிக்களை சந்திப்பதை விரும்பமாட்டார். ‘சந்தித்தபின் அவரைப் பற்றி இத்தனை நாள் நான் வைத்திருந்த பிம்பம் உடைந்து போகுமோ’ என பயப்படுவார்.
கோயில்களுக்குச் செல்லும்போது தொழுவதை விட, அந்தக் கோயிலில் தலபுராணம் கேட்பதில் மிக ஆர்வம் காட்டுவார். அதேபோல அந்தக் கோயிலின் வேலைப்பாடுகளை உன்னிப்பாக ரசிப்பார்.

______XX_____

  குடும்பம், குழந்தைகள் என்று இருந்தாலும், சமூகத்தின் மீதான மாற்றுப் பார்வை ஒன்றுண்டு பரிசலுக்கு. சமூகம், குடும்பம், கலாச்சாரம் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிரானது அது.

______XX_____

  மனிதர்களை தெய்வங்களாக்கி (சாமியார்கள்) கும்பிடுபவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. ‘ஒருத்தன் மனுஷனா இருந்தாலே போதுமே’ என்பார்.

______XX_____

  பிடித்த புத்தகங்கள் என்றால் மீண்டும் எடுத்துப் படிப்பார். அப்படி பரிசல் சமீபத்தில் மீண்டும் எடுத்து, இரண்டே நாட்களில் படித்தது ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’

______XX_____

  கீபோர்ட் பழகி, பாடல்களை அதில் வாசிக்க வேண்டுமென்பது பரிசலின் நீண்டநாள் அவா.
மரம் சூழ்ந்த காடுகளும், நீர் சூழ்ந்த ஏரிகளும் பரிசலின் ஃபேவரைட். இயற்கையின் காதலன் அவர். அவ்வப்போது செடி கொடிகளிடம் பேசுவார்.

______XX_____

   எந்த செண்டிமெண்டின் மீதும் நம்பிக்கை இல்லை பரிசலுக்கு. ஆனால் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். ‘என்னால விடமுடியாத செண்டிமெண்ட்னா அது ஃபெரெண்ட்ஷிப்தான்’ என்பார். 

______XX_____

சமீபத்திய ரகசியம்: அறிமுக இசையமைப்பாளர் ஒருவரது ட்யூனுக்கு பாடல் வரிகளை எழுத வாய்ப்பு வந்தது பரிசலுக்கு. ‘சென்னைக்குப் போலாமா’ என்று கேட்ட நண்பரிடம் சொன்னார் பரிசல்: ‘ட்யூனை அனுப்புங்க. இங்கிருந்தே எழுதறேன்’  ஒரு பாடலுக்காக சென்னைக்கு போய் 15 நாட்கள் வேலை, குடும்பத்தை விட்டு டேரா போட விருப்பமில்லை அவருக்கு. அழைத்த நண்பர் ஒரே பாடலால் ஹிட்டானவர்கள் லிஸ்டைச் சொல்லி, ‘சும்மா யோசிக்காம கிளம்புங்க’ என்று நச்சரித்துக் கொண்டு இருக்கிறாராம்.

______XX_____

குறிப்பு: பரிசல் 25ஐ நான் போடறப்ப கார்க்கி 25ஐ வேற யார் போடுவாங்க? பரிசலேதான். இங்க போய் படிங்க.

49 கருத்துக்குத்து:

பரிசல்காரன் on October 23, 2009 at 1:52 PM said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்!

Truth on October 23, 2009 at 2:08 PM said...

//பரிசல்காரன் said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்!

அதே அப்புறம் தான் :-)

வெண்பூ on October 23, 2009 at 2:23 PM said...

கொய்யால.. இவங்க ரெண்டு பேரும் அடங்க மாட்டேன்றாங்க..

வால்பையன் on October 23, 2009 at 2:23 PM said...

//பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு மொழி – குஜராத்தின் ‘கட்ச்’ மொழி.//

நமிதாவின் தாய்மொழியா!?

நர்சிம் on October 23, 2009 at 2:23 PM said...

அருமை சகா.

நேசன்..., on October 23, 2009 at 2:27 PM said...

எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்குங்க!........உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எவ்வளோ புரிதல்!......கிரேட்!

வால்பையன் on October 23, 2009 at 2:31 PM said...

உங்கள் நட்பு பிரமிக்கவைக்கிறது!

பேரரசன் on October 23, 2009 at 2:38 PM said...

பிடிக்காது. ‘ஒருத்தன் மனுஷனா இருந்தாலே போதுமே’ என்பார்.

சூப்பர்...ரொம்ப நாள் கழிச்சு... ஒரு நல்ல இடுகை... என்னா... நான் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு..... வாழ்த்துக்கள்...

ஜெனோவா on October 23, 2009 at 2:45 PM said...

கார்க்கி, ரொம்ப நாளா அவரோட பதிவுகளை படித்துவருகிறேன். ரொம்ப நல்ல அறிமுகம் ,நன்றிங்க !

அப்படியே போய் உங்களைப்பத்தியும் படிச்சிட்டு வந்துடுறேன் ... வர்ர்ட்டா..

வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் on October 23, 2009 at 2:59 PM said...

ஓவ்வ்! வாட் எ கோ இன்சினென்ஸ்! (எனக்கும் நடக்கும்போது ஒருகால் முன்னாடி இருந்தா ஒருகால் பின்னாடி இருக்கு சகா). எப்டியெல்லாம் கிளம்புறாய்ங்க...!!!!!

Varadaradjalou .P on October 23, 2009 at 3:05 PM said...

////பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு மொழி – குஜராத்தின் ‘கட்ச்’ மொழி.//

நமிதாவின் தாய்மொழியா!?//

ரொம்ப முக்கியமான கேள்வி கேட்டுருக்காரு. பதில் தெரிஞ்சவங்க சொல்லிடுங்கப்பா.

//கொய்யால.. இவங்க ரெண்டு பேரும் அடங்க மாட்டேன்றாங்க..//

இப்பிடி வேற ஆச இருக்கா உங்களுக்கு வெண்பூ? நடக்கற கதையா இது?

:))

ஸ்ரீமதி on October 23, 2009 at 3:09 PM said...

ஹ்ம்ம்ம் :))

பிரியமுடன்...வசந்த் on October 23, 2009 at 3:26 PM said...

பரிசல் அண்ணனப்பத்தி தெரிந்ததில் மகிழ்ச்சி நன்றி கார்க்கி...

யோ வாய்ஸ் (யோகா) on October 23, 2009 at 3:51 PM said...

//பரிசல்காரன் said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்!

நான் முதலில் பரிசலின் பதிவில் உங்களை பற்றி 25 படித்தவுடன் அப்படிதான் நினைத்திருந்தேன், ஆனால் இங்க வந்து பார்த்தால்தான் தெரிந்தது கூடி கும்மியடிச்சிருக்கீங்க சகா

ஸ்வாமி ஓம்கார் on October 23, 2009 at 3:52 PM said...

பரிசல் பத்தி 25 தானா?

தராசு on October 23, 2009 at 4:42 PM said...

//எந்த செண்டிமெண்டின் மீதும் நம்பிக்கை இல்லை பரிசலுக்கு. ஆனால் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். ‘என்னால விடமுடியாத செண்டிமெண்ட்னா அது ஃபெரெண்ட்ஷிப்தான்’ என்பார்.//

இது இது இது தான்ப்பா பரிசல்.

ஆமா, இந்த போட்டோவுல இவரு இம்புட்டு அழகா இருக்க, இன்னொருத்தரு இவுரு படத்தையெல்லாம் வரைஞ்சு விருது குடுக்கறாரேப்பா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்ல.

Cable Sankar on October 23, 2009 at 4:43 PM said...

அடங்கவே மாட்டேன்குறாங்களே..?/

லவ்டேல் மேடி on October 23, 2009 at 4:44 PM said...

அடா... அடா...அடா...!! இதுல கோப்பெருஞ்சோழர் யாரு... பிசுராந்தையார் யாருன்னே தெரியலப்பா....??? யாருக்காச்சும் தெருஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா ...???முடியல.....

Cable Sankar on October 23, 2009 at 4:44 PM said...

அடஙக்வே மாட்டேன்குறாங்கப்பா..

கார்க்கி on October 23, 2009 at 4:45 PM said...

பரிசல், அதானே!!!

ட்ரூத், அப்ப முதல்ல அங்க போயிட்டுதான் வந்தீஙக்ளா:(((

வெண்பூ, ட்ரூத்தும் பரிசலும்தானே? ஆமாங்க அடங்கவே மாட்டாறாங்க

நமீதா பேசுமா வால்?

நர்சிம், இதுல என்ன உள்குத்தோ தெரியலையே சகா

நேசன், ஹிஹிஹி நன்றிங்க

பேரரசன் நன்றி

முரளி, வர்ற வர்ற இவங்க வேர்டெல்லாம் ரொம்ப பேடா இருக்கில்ல சகா?

ஜெனோவா, போனா வர்ற வேண்டியதுதானே? இன்னும் என்ன பண்றீங்க அங்க :)))

வரதராஜலு, இவ்ளோ நாள் அடங்கிதானே இருந்தோம் சகா?

ஸ்ரீமதி, என்ன ம்ம்?

நன்றி வசந்த்

யோ, ஹிஹிஹிஹி

ஸ்வாமி, எனக்கு அவ்ளோதான் தெரியும்ஜி...

Varadaradjalou .P on October 23, 2009 at 4:46 PM said...

//வரதராஜலு, இவ்ளோ நாள் அடங்கிதானே இருந்தோம் சகா?//

அப்படியா? இத நீங்க சொல்லிதான் எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டோம். தகவலுக்கு நன்றி

ஜெனோவா on October 23, 2009 at 4:52 PM said...

//ஜெனோவா, போனா வர்ற வேண்டியதுதானே? இன்னும் என்ன பண்றீங்க அங்க :)))//

ஆஜர் தல ;-))

அப்புறம் உங்களப்பத்தின தகவல்களெல்லாம் அருமை சகா !!

வந்தியத்தேவன் on October 23, 2009 at 4:57 PM said...

// “உங்களுக்கு இரண்டுமே பெண்ணா” என்று ஏதோ கவலை ததும்பும் குரலோடு கேட்டால் பிடிப்பதில்லை பரிசலுக்கு. கமல், ரஜினி என்று பெண் குழந்தைகள் பெற்றிருக்கும் பெற்றோர் லிஸ்டை எடுத்து விடுவார். இரண்டுமே பெண்கள் என்பதில் பெருமைப்படுபவர் அவர்.///

சகா ஜோர்ஜ் புஷ், கிளின்டன், என பல பிரபலங்களுக்கு இரண்டு பெண்கள் தான். பரிசலைப் பற்றிய சுவையான தகவல்கள்.

நேசமித்ரன் on October 23, 2009 at 5:27 PM said...

உங்கள் இருவருக்குள்ளும் இழையும் புரிதல் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி நண்பர்களே

கோபிநாத் on October 23, 2009 at 5:41 PM said...

ஆகா....;)

சுசி on October 23, 2009 at 6:09 PM said...

ஒரு நல்ல மனிதரை பற்றி அறிய தந்ததுக்கு நன்றி கார்க்கி.

உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள்.

ILA(@)இளா on October 23, 2009 at 6:28 PM said...

ஒருவனைப் பற்றி தெரிந்துகொள்ள அவனது நணபனை விசாரிம்பாங்க. நீங்க சொல்லிட்டீங்க.

RAMYA on October 23, 2009 at 6:29 PM said...

நண்பர்களுக்குள் இருக்கும் புரிதலை உணர்ந்து பிரமித்துப் போனேன் சகோதரா!!

நட்பு என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நட்பு பாலம் இருக்கிறதே எண்ணிலடங்கா தொலைவுகளுக்கு நம்மை ஆனந்தமாக இழுத்துச் செல்லும் வலிமை மிகுந்தது.

அந்த நட்பு இங்கே கச்சிதமாக அரங்கேறி உள்ளது.

மேலும் உங்கள் நட்பு சிறக்க வாழ்த்துக்கள்!!

r.selvakkumar on October 23, 2009 at 6:49 PM said...

நன்றாக உள்ளது!

அன்புடன் அருணா on October 23, 2009 at 6:56 PM said...

ம்ம்ம்...நடத்துங்க!!!நடத்துங்க

பீர் | Peer on October 23, 2009 at 7:45 PM said...

அட.. இங்கையுமா.. க்ரேட்.

Achilles/அக்கிலீஸ் on October 23, 2009 at 7:46 PM said...

ரைட்டு.. அருமை நண்பரே.. :))

கும்க்கி on October 23, 2009 at 8:09 PM said...

அடிக்கடி பேசிக்கறீங்க...அப்படின்னு மட்டும் புரியுது..
நல்லாருங்கப்பா...நல்லாருங்க.
(இதுல அந்த 650ml குடிதண்ணீர்ல்லாம் தேவையா..?)

முகிலன் on October 23, 2009 at 9:24 PM said...

பேசி வைத்துக் கொண்டு எழுதியதோ இல்லை கோ இன்சிடென்ஸோ, உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பும், புரிதலும் பிரம்மிக்க வைக்கிறது. வலையுலகில் இப்படி நட்புக்களும் கிட்டுமென்றால் இதை இவ்வளவு நாள் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.

raja on October 23, 2009 at 9:47 PM said...

அனைத்து ப‌திவ‌ர்க‌ளுக்கும் என‌து வ‌ண‌க்க‌ங்க‌ள்...
இந்த‌ ப‌திவில் குறிப்பிட‌ப‌ட்டிருக்கும் ப‌ண்ப‌லை தொகுப்பாள‌ர் நான் தான்.
ப‌ரிச‌ல் அவ‌ர்க‌ளின் எழுத்துக‌ளை மிக‌வும் நேசிக்கும்..வாசிக்கும்..ஆயிர‌க்கணக்கானோரில் நானும் ஒருவ‌ன் என்ப‌தை இந்த‌ ப‌திலீடு மூல‌ம் மீண்டூம் பரிசலுக்கும் மற்ற பதீவர்க்கும் தெரீவீக்க வீரும்புகிறேன். பரிசல் குர‌ல் ப‌ண்ப‌லையீல் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே அவரின் நேர்முகம் நிகழ்ச்சிக்கு முய‌ன்றேன். சந்த்தர்ப்ப சூழல் காரணமாக இது தடை பட்டது. என் நிலை பற்றீ பரிச‌லிட‌ம் விளக்கி சொன்னேன். பரிசல் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டேன். பிறகு இயல்பாகவே அவரிடம் தொடர்பு கொள்ள முடியா சூழல். என் மன‌திலும் ப‌ரிச‌ல் ந‌ம்மை ப‌ற்றி தப்பாக நினைத்து இருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியது. அத‌னால் தான் நான் பரிச‌லை தொடர்பு கொள்ளவில்லை. எனினும் நான் நேசிக்கும் பரிச‌ல் அவர்களின் மனம் புண்பட காரணமாய் நானே இருக்கிறேன் என அறியும் பொழுது வருந்துகிறேன். பரிசல் அண்ணா மன்னிக்கவும்...இதில் உள்ள எழுத்து பிழைகளுக்கும் சேர்த்து.

பரிசல்காரன் on October 23, 2009 at 11:58 PM said...

@ raja

பரவால்ல தோழர்!

என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டீர்களென்று நம்புகிறேன்!

Anonymous said...

//டா... அடா...அடா...!! இதுல கோப்பெருஞ்சோழர் யாரு... பிசுராந்தையார் யாருன்னே தெரியலப்பா....??? யாருக்காச்சும் தெருஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா ...???//

ஹஹஹா

சூப்பரா இருக்கு கார்க்கி இந்த இடுகை

டம்பி மேவீ on October 24, 2009 at 8:15 AM said...

"பரிசல்காரன் said...
ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்!"


sami.... satyama mudiyala

பாண்டி-பரணி on October 24, 2009 at 9:33 AM said...

COMMON MAN விரும்பும் நல்ல மனித குணங்கள்

பரிசல்-25
very nice

ஆதிமூலகிருஷ்ணன் on October 24, 2009 at 2:31 PM said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்//

டாய்.. இன்னாங்கடா இது.?

ராஜா | KVR on October 24, 2009 at 3:59 PM said...

பரிசல் பற்றிய விஷயங்கள் நல்லா இருக்கு (உங்களைப் பற்றி பரிசல் சொன்னவையும்). இருந்தாலும் இந்த கோ-இன்ஸிடன்ஸ் உடான்ஸெல்லாம் ரொம்ப ஓவரு :-)

மங்களூர் சிவா on October 24, 2009 at 10:43 PM said...

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்//

டாய்.. இன்னாங்கடா இது.?
/

ஹா ஹா
ரிப்பீட்டு

மங்களூர் சிவா on October 24, 2009 at 10:44 PM said...

/
Blogger வால்பையன் said...

//பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு மொழி – குஜராத்தின் ‘கட்ச்’ மொழி.//

நமிதாவின் தாய்மொழியா!?


நர்சிம் said...

அருமை சகா.
/

நர்சிம் அருமைன்னு சொன்னது வால்பையன் கமெண்ட்டுக்குதானே
:))))))))))))

எம்.எம்.அப்துல்லா on October 26, 2009 at 9:46 AM said...

//ஓ! வாட் எ கோ இன்சிடென்ஸ்//


//


ங்கொய்யால.. நீங்க படிச்ச ஸ்கூல்ல நாங்க ஹெட்மாஸ்ட்டர்டா..

:)))

விக்னேஷ்வரி on October 26, 2009 at 11:19 AM said...

ரெண்டு பெரும் சொல்லி வச்சு முதல் கமென்ட் போட்டீங்களா...

Karthik on October 26, 2009 at 11:44 AM said...

ரெயின்போ தாட்ஸை கொஞ்சம் மாத்த வேண்டியிருக்கு.. அவ்வ்.. :))

உங்க 25ஐ பார்க்கிறேன்..

கார்க்கி on October 26, 2009 at 12:07 PM said...

இரண்டு நாட்களாக இணையப்பக்கம் வர முடியவில்லை... அடுத்த பதிவு போட்டாச்சு.. அங்க வந்துடுங்க மக்களே..

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

LOSHAN on October 27, 2009 at 9:03 PM said...

ஆகா அகா.. இதுவல்லவோ நட்பு.. கலக்கல்.. சின்ன சின்ன விஷயங்களைக் குறிப்பிட்டதும் க்ளாஸ்.

தமிழ்ப்பறவை on November 3, 2009 at 7:36 PM said...

ரசித்தேன் பதிவையும், பரிசலையும்.

 

all rights reserved to www.karkibava.com