Oct 30, 2009

நிலா காலிங்

48 கருத்துக்குத்து

  

எக்ஸ்ரே எடுத்த டாக்டர்

குழம்பிவிட்டாராம் 

பூமிப்பந்தை தூக்கி நிற்கும்

ஹெர்குலஸைப் போல

என் இதயம் தூக்கி

நிற்கிறாயாம் நீ

***************                                   *****************

உன் ஸ்மைல் ஃப்ளூவிடமிருந்து

என்னைக் காக்கிறது...

நீ ஸ்வைன் ஃப்ளூவிற்காக

அணிந்த முகமூடி..

***************                                   *****************

”சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து”

பி.சுசீலா பாடியதுதானே என்றாய்.

காதில் விழாமல்

சிட்டுக்குருவியாகிக் கொண்டிருந்தேன்

***************                                   *****************

"காப்பியடிச்சுதானே பாஸ் பண்ண நீ?" என்றாய்.

"இல்லையே", என்றதற்கு,

அப்புறம் ஏன் என்னைப் பார்த்து

காப்பியடிச்சு கவிதை எழுதற

என்கிற உன்னை என்ன சொல்வது?

***************                                   *****************

உன்னைப் பற்றி எழுதுவதெல்லாம்

கவிதை அல்ல என்கிறார்கள்.

நான் கவிதையா எழுதுகிறேன்?

கவிதையைப் பற்றிதானே எழுதுகிறேன் என்றேன்

நீ என் கைகளைப் பற்ற, தொடங்கியது ஒரு புதுக்கவிதை

***************                                   *****************

நிலவைப் பார்த்து

என்னை அழைத்து சொன்னாய்

”ஹேய் மாடிக்கு போய் பாரு. அவ்ளோ அழகா இருக்கு”.

உன்னிடம் பேசும் போது

வெயிட்டிங்கில் வந்தது

“நிலா காலிங்”

***************                                   *****************

நேற்று வந்த சாரல் மழை

உன் ரகசியங்களை வெளிக்கொணர

முதல் முறையாய்

தமிழகத்தில் வென்னீர் மழை

என்றது தலைப்பு செய்தி.

_

 

Oct 29, 2009

பாடல் வந்தும் படத்தக் காணோம்

37 கருத்துக்குத்து

 

   சிலப் படங்கள் பூஜை போடும் அன்றே எதிர்பார்ப்பை கிளப்பிவிடும். சிலப்படங்கள் பாடல்கள் வெளிவந்து சூடேற்றிவிடும். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல், முதலில் பாடல்கள்தான் வெளிவரும். ஆனால் சில சமயங்களில் யானை வராமலே ஓசை மட்டும் வந்துக் கொண்டேயிருக்கும் நம் கோடம்பாக்கத்தில். இன்றைய தேதியில் இப்படி பலப் படங்கள் இருக்கின்றன. அதில் டாப் 5 எவையென பார்ப்போம்.

ஐந்தாவது இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாத எங்கள் ஆசான். கேப்டன் நடித்த இந்தப்படம் ஃபினான்ஸ் பிரச்சினையில் முடங்கிவிட்டது. வெளிவரும் அறிகுறி தெரியவில்லை.

4) நந்தலாலா. இயக்குனர் –மிஷ்கின்,இசை – இளையராஜா

200px-Nandalala     மிஷ்கினே கதையின் நாயகனாகவும் நடித்தப் படம். முதலில் ரவிகிருஷ்ணாவைத்தான் ஹீரோவாக்கினார்கள். பின் ஏனோ மிஷ்கினே நடித்தார். பாடல்கள் வெளியான போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. குறிப்பாக குறவர் ஒருவர் பாடிய பாடல். அதுமட்டுமில்லாமல் ஜேசுதாஸின் குரலில் ஒன்னுக்கொன்னு துணையிருக்கும், கார்த்திக்ராஜா மகனின் கு்ரலில் ஒரு வாண்டு கூட்டம் என்ற பாடலும் நம்மை 80களுக்கே கொண்டு செல்லும். பாடல்கள் வெளிவந்து பல மாதம் ஆகியும் படம் வருவதாய் தெரியவில்லை. Kikujiro என்ற ஜப்பானிய படம் ஒன்றின் தழுவல் என்கிறார்கள். சேரனின் பொக்கிஷமும் அப்படிப்பட்ட தழுவல்தானாம்.அந்தப் படம் பப்படம் ஆனபோது அதிகம் அதிர்ந்தவர் சேரனல்ல, மிஷ்கின் என்றது தமிழ்சினிமா.காம். இது ஒரு ஐங்கரன் தயாரிப்பு

3) அங்காடித் தெரு, இயக்குனர் – வசந்தபாலன், இசை- ஜி.வி.பிரகாஷ்& விஜய் ஆண்டனி

Angadi-Theru-Stills-6     வெயில் வெற்றியை அடுத்து வசந்தபாலனின் அடுத்த முயற்சிதான் அங்காடித் தெரு. கல்லூரி பட நாயகன் அகில் போல் இருக்கும் மகேஷ் என்ற புதுமுகமும், கற்றது தமிழ் அஞ்சலியும் ஜோடி. உருகுதே மருகுதே போன்று சில மெலடிகள் கிடைக்கக் கூடுமென்று எதிர்பார்ப்பை கூட்டியது இயக்குனர்& இசையமைப்பாளர் கூட்டணி. ”அவள் அப்படி ஒன்றும் அழகல்ல” என்ற பாடல் மட்டும் விஜய் ஆண்டனியின் கைவண்ணம். பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்றாலும் இந்த தெருவிற்கு கிரகப்பிரவேசம் எப்போது என்பது தெரியவில்லை. இதுவும் ஐங்கரன் தயாரிப்புதான்

2) வேட்டைக்காரன், இயக்குனர் – பாபுசிவன், இசை – விஜய் ஆண்டனி

vettai

  செப்டம்பர் மாதம் 23ம் தேதி பாடல்கள் வெளிவந்த போது, படம் தீபாவளிக்கு என்றார்கள். பின் சன் பிக்சர்ஸிடம் கைமாறியதும் படம் தள்ளிப் போனது. பின் நவம்பர் 7ம் தேதி என்றார்கள். இதுவரை டிரெயிலர் வரவில்லை. கிறிஸ்துமஸ் என்றும், இல்லை அசலோடு மோத பொங்கலுக்குத்தான் என்றும் சொல்கிறார்கள். எப்படியும் வந்துவிடும் என்றாலும் இப்போதைக்கு ரிலீஸ் தேதி தெரியவில்லை. கரிகாலன் பாடல் எஃப்.எம்களிலும், புலி உறுமுது பாடல் குழந்தைகள் மத்தியிலும் பிரபலாமகியிருக்கின்றன.

1) ஆயிரத்தில் ஒருவன், இயக்குனர் – செல்வராகவன், இசை – ஜி.வி.பிரகாஷ்

aayirathil-oruvan-movie-photos-23-550x321     ஒவ்வொரு படத்துக்கும் இரண்டு வருடங்கள் ஆனால் என்னதான் செய்வார் கார்த்தி? பருத்திவீரனை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது ஆயிரத்தில் ஒருவன். பாடல்கள் வெளிவந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தாய் தின்ற மண்ணே என்ற பாடல் பலத்த அதிர்வையும், எதிர்பார்ப்பையும் ஏற்றிவிட்டது. மாலை நேரம் சில வாரங்கள் எஃப்.எம்களில் தேசிய கீதமாக இருந்து இப்போது மறக்கப்பட்டு விட்டது. எப்போது வந்தாலும் ரெக்கார்ட் ஒப்பனிங் மட்டும் நிச்சயம். படம் எப்போது எனத் தெரியாமல் செல்வா அடுத்த பட டிஸ்கஷனுக்கு வெளிநாடு சென்றிருக்கிறாம்.

Oct 28, 2009

குத்துப்பாட்டு உருவாவது எப்படி

28 கருத்துக்குத்து

 

    Sky jump will you come என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தம்பு, படத்தில் குத்துப் பாடலே இல்லை என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இயக்குனருடன் மனக்கசப்பில் இருக்கிறார். ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்து ஒரு குத்துப் பாடலுக்கு பர்மிஷன் வாங்கி தனது குத்துப்படையுடன் டிஸ்கஷன் நடத்துகிறார். இசையமைப்பாளர் சிவனும், பாடலாசிரியர் பூவரசுவும், கிரியேட்டிவ் ஹெட் காஃபி.அஞ்சும் வந்துவிட வேகமாக விரலால், மன்னிக்க, காலால் நடந்து வருகிறார் தம்பு

சிவன்: சிச்சுவேஷன் சொல்லுங்க. போட்டுடலாம்.

பூவரசு: தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க. ஹீரோ வில்லன்களையெல்லாம் ஒன்னா தீர்த்துக் கட்டப் போறாரு. அதான் க்ளைமேக்ஸ். அதுக்கு முன்னாடி தன் காதலிய பார்க்கறாரு.அப்ப ஒரு பாட்டு. கடைசி நேரங்கறதால நல்லா ஸ்பீடா இருக்கனும்.

காபி.அஞ்சு: (எகிறுகிறார்)

யோவ் நான் தான் கிரியேட்டிவ் ஹெட்டு

பாட்டு எழுத மட்டும்தான் உனக்கு துட்டு

நான் போட்ட‌ எல்லாப் பாட்டும் ஹிட்டு

இந்த‌ பாட்டுல‌ போட‌றோம் எட்டு செட்டு

(வேறு வழியின்றி வாய் மூடி அமர்கிறார் பூவரசு)

தம்பு: உலகத்திலே சின்ன வயசுல டைரக்டர் ஆனவன் நான் தான். நான் சொல்றேன் சிச்சுவேஷன். கதைப்படி ஹீரோயின நான் பிரிஞ்சிடறேன். அந்த சோகத்துல தண்ணியடிச்சிட்டு பாடறேன். குத்துப்பாட்டாவும் இருக்கனும். காதலின் வலியும் இருக்கனும்.

சிவன்: oops. இப்ப யாருக்கு நான் ட்யூன் போடனும்? தம்பு நீங்க சொன்ன மாதிரியே போடலாம். லிரிக் ரைட்டர் லீடு கொடுத்தா நல்லாயிருக்கும்

பூவரசு: இதோ ஒரு நிமிஷம் சார். (யோசிக்கிறார்)

கா.அ. : சொன்னவுடனே வரணும் பாட்டு

அதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு

இதாப்பா சிவன் புடிச்சுக்கோ..

டண் டணக்கா நீயும் அடிச்சுக்கோ

அட மயிலாப்பூர் ஃபிகரே உனக்கில்லை நிகரே

சிங்கமென வாழ்ந்தவன் நானே

என்னை அசிங்கமாக ஆக்கிட்டு போனே

தம்பு : மனதுக்குள்(இந்த பொன்னான மனசே ட்யூன விடவே மாட்டாரா?)

பூவரசு: வந்துடுச்சு சார். (எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க, ஆரம்பிக்கிறார்)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

சிவன்: வாவ். சூப்பர்ப் ஃபீலிங். என்ன தம்பு. மெட்டும் தானா வருது.(மூக்கால் பாடிக் காட்டுகிறார்)

தம்பு: யா. எக்ஸலண்ட். அடுத்த வரி என்ன சார்?

பூவரசு: (டஸ் புஸ் சத்தம் இல்லாம, வாயசைவதே தெரியாமல் பாடுகிறார்)

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

தம்பு: அப்படியே பல்லவியோட லாஸ்ட் லைன் சும்மா கும்முனு சொல்லுங்க. வார்த்தைகள் பவர்புல்லா, தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கனும்

பூவரசு: சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் புர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

சிவன்: (சிலிர்த்துக் கொண்டு பாடிக் காட்டுகிறார் பல்லவியை.)

சென்னையில ஓடுதடி கூவம்

என் மேல உனக்கென்ன கோவம்

நீ இல்லாம  நான் வாழ்ந்தா பாவம்

ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்

புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல

முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல

சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(கையாலும் வாயாலும் டண்டணக்க தாளம் போடுகிறார் கா.அ. வலிப்பு வந்ததைப் போல ஆடுகிறார் தம்பு)

பூவரசு: அப்படியே சரணமும் சொல்றேன் கேளுங்க

பிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க என்ன

நெஞ்சுக்குள்ள வச்சுப்புட்டேன் உன்ன

மஞ்சுன்னு உன் பேர நீ சொன்ன

ம்ம்.. கடைசி வரில வைக்கிறோம் சார் ல்வ் ஃபீலிங்க

நஞ்ச வச்சு இப்ப நீயே ஏன் கொன்ன.எப்படி சார்?

தம்பு: பின்றீங்க பாஸ். அப்படியே நம்ம மாஸ் காட்டலாமா?

பூவரசு: அது இல்லாமலா?

என் பின்னால ஒரு கோடி பேரு

தமிழ்நாட்டில் எல்லாமே என் ஊரு

உன் கையால சாப்பிடனும் சோறு

என்னை வெல்ல உனையன்றி யாரு?

ரெண்டு மனசுக்குள்ள நடக்குது வாரு

இப்ப என் கையில மட்டும் பாரு பீரு

தம்பு: கொன்னுட்டிங்க சார்

பூவரசு:  பினிஷிங் கேளுங்க

சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்

டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.

(ஏரியா கலகலப்பான நேரம், மோசதேவன் அங்கே வர, பாடலைப் பாடிக் காட்டுகிறார்கள். அலறியடித்துக் கொண்டு ஸ்க்ரிப்டோடு  கோர்யா வீட்டுக்கு ஓடுகிறார்.அங்கே அவர் மீசையை முறுக்கி, ”சாரி பாஸ். நான் பாலா அண்ணனுக்கே டேட்ஸ் இல்லைன்னு சொல்லிட்டேன். இப்ப என் ரூட்டே வேற” என்கிறார்)

Oct 27, 2009

சென்னைக்கு மீண்டும் ஆபத்து

56 கருத்துக்குத்து

 

சுட்டெரிக்கும் வெயிலில் கருப்பு நிற ஷூ, சாம்பல் நிற பேண்ட், அதனுள் கவனமாக உள்ளிறங்கிய நீல நிற சட்டை, கழுத்தை நெறிக்கும் வேலை என்பதை காட்ட டை. இந்த சுமைகளோட கலைஞர் இலவசமாய் கொடுத்த சுமையாக ஹெல்மேட். நகர நெரிசல் சாலைகளில் பல்சரில் உட்புகுந்து லாவகமாக  வெளிவந்து அலுவலகம் அடையும்போதே நாலு இட்லியும் புதினா சட்னியும் செரித்துவிடுகிறது. அலுவலக வளாகத்தில் நுழையும்போதே இன்னொரு சுமையாக முகமூடியொன்றை அணிந்துக் கொள்கிறோம். “Good morning sir” “have a nice day ahead” என்று எதிருப்பவரின் முகமூடியைப் பார்த்தே வாழ்த்துகிறோம். அல்லது வாழ்த்திக் கொள்கிறோம்.

வேலையின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் கூட நம் பேச்சு இயல்பாக இருப்பதில்லை. சேத்தன் பகத்தின் 2Statesம் ,ஷகீராவின் Shewolfம் யாருக்கு தெரிகிறதோ அவர்கள் அறிவாளி ஆகிவிடுகிறார்கள். வாழ்க்கை, வாழ்வது குறித்த பிரக்ஞை இல்லாதது பற்றி யாரும் கவலைப்படுவது கூட இல்லை.  உணவு கூட நம் விருப்பப்படி அமைவது இல்லை. மூன்று மணிக்குத்தான் மீட்டிங் முடிந்தது என்றால், வெஜ்.சேண்ட்விச்.  யாராவது அன்று பிறந்து தொலைத்திருந்தால், நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பிஸ்ஸா.எதுவும் இல்லையெனில் இருக்கவே இருக்கு டப்பர்வேர்.

மாலை மீண்டும் வீடு திரும்பும்போது குறைவான டிராஃபிக்கே இருந்தது என்பதை அந்த நாளின் சிறப்பென்று பேசித் திரிகிறோம். வீட்டுக்குள் நுழையும்போதே முகமூடியை கழட்டி எறிகிறோம். திறந்துவிட்ட அணையின் நீரைப்போல் வேகமாக வெளியேறுகின்றன கால்சட்டையும், முழுசட்டையும். இத்தனை வேகமும் தொலைக்காட்சி முன்பு போய் அமரும்போது அடங்கிவிடுகிறது. பாய்ஸ் Vs கேர்ல்ஸையோ, வண்டு முருகனையோ கண்டு களித்து சிரிக்கும்போது வாழ்க்கை சுகமாய் இருப்பதாக உணர்கிறோம்.  அலறும் மொபைலில், அமெரிக்கா விசா க்ளியர் ஆனதை சொல்கிறான் நண்பன். அதைப் பாராட்ட வேண்டுமென்று நினைக்கும்போதும் ”ங்கொய்யால. கலக்கல்டா மாப்ள” என்று வாயில் வருவதில்லை. “ Thats great dude. U have done it” என்கிறோம். இப்போதே ஷேவரையோ, புரொஜெக்டரையோ, லேப்டாப்பையோ நம் நெருக்கத்திற்கேற்ப முன்பதிவு செய்து கொள்கிறோம்.

இன்னும் இன்னும் ஆயிராமாயிரம் உண்டு நகரத்தில் வாழும் நரக வாழ்க்கையில். கிராமத்தில் சென்று வாழ்வது என்பது இப்போதைக்கு என்னளவில் வாய்ப்பில்லை என்பதால், சென்னைக்கே சென்று வீட்டோடு இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த 18 மாத ஹைதை வாழ்க்கையில் பிளாக் எழுதினேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த மாற்றமும் நடந்துவிடவில்லை என் வாழ்க்கையில். சார்மினார் எக்ஸ்பிரஸும், பேரடைஸ் பிரியாணியும்தான் என்னோடு சினேகம் வளர்த்தன. ஃபோர்ஜரி பட்டம் வாங்கிய டாக்டர்தான் என் காய்ச்சலுக்கு மருந்து தந்தார். எனக்கான உறவாக, நட்பாக, எந்த ரெட்டிகாரும் கிடைக்கவில்லை . தினம் 12 மணி நேரம் கணிணியோடே போகிறது வாழ்க்கை. அதனால் துணிந்து முடிவெடுத்துவிட்டேன்.

அடுத்த மாதம் சென்னைக்கே ரிட்டர்ன். வேலை எதுவும் தேடவில்லை. வேறு சில திட்டங்கள் உண்டு. விரைவில் சொல்கிறேன்.

   இப்போதைக்கு ஃப்ளாஷ் நியூஸ் : சென்னைக்கு மீண்டும் ஆபத்து..

Oct 26, 2009

என் தூக்கத்தை கெடுக்கும் பெண்

35 கருத்துக்குத்து

 

  சமீபகாலமாக கனவொன்று வந்துக் கொண்டேயிருக்கிறது. அதிகாலையா, முன்னிரவா என்பது சரியாக தெரியவில்லை. இயற்கையின் இருட்டோடு செயற்கை வெளிச்சம் மிகச்சரியாக இணைந்திருந்தது.  அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. படிகளில் அமர்ந்திருக்கிறாள் அவள். ஃப்ராக் என்றுதான் அதை சொல்வார்கள் என நினைக்கிறேன். வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஃப்ராக்கில் நிஜமாகவே தேவதை போலிருந்தாள். இருட்டில் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் அவளின் முகத்தைச் சுற்றி ஏதோ ஒரு குழல் விளக்கின் வெளிச்சம் பரவியிருந்தது. அவள் சிரிப்புக்கு ஏற்ற ஒரு வயலின் இசையையும் பிண்ணனியில் கேட்க முடிந்தது. என்னை இழந்து அவளை நோக்கி செல்கிறேன் நான். முதலில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கியவள், அவளருகே சென்றதும் என் கண்களை சற்று உற்று நோக்கினாள். அப்படியொரு சிரிப்பை இதுவரை நான் பார்த்ததேயில்லை. அவள் பிஞ்சு விரல்களை என் முகத்தில் படர விடுகிறாள். ப்ச்

  கனவு கலைந்து எழுகிறேன் நான். குறைந்தது ஒரு மணி நேரமாகிறது மீண்டும் தூங்குவதற்கு. கிட்டத்தட்ட ஆறு மாதமாக இந்தக் கனவு வந்துக் கொண்டிருக்கிறது. என்றாவது ஒரு நாள் இது நிஜத்தில் நான் காணப்போகிறேன் என்று மட்டும் உறுதியாக நம்பினேன். கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது.

வழக்கம் போல் சனிக்கிழமை மாலை கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். வழக்கம் போல் ரிமோட் என் கையில் மாட்டிக் கொண்டது. வழக்கம் போல் முதலில் எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல்களையும் நோட்டம் விட்ட பின் தமிழ் சேனல்களுக்கு தாவினேன். கமலிடம் ஒரு டிரேட்மார்க் எக்ஸ்பிரெஷன் உண்டு. தன் ஜோடியை காணாமல் தேடிச் செல்லும் போது, முதல் பார்வையில் அவளை காணாதது போல் செல்பவர், அடுத்து நொடி மீண்டும் திரையில் வரும்போது அவளைக் கண்டுவிட்டார் என்பது புரியும்வண்ணம் ஒரு உணர்ச்சியைக் காட்டுவார். அதேபோல் சேனல்களை தாவிக் கொண்டே செல்லும்போது ஏதோ ஒரு சேனலில் என் தேவதை பார்த்தது போல் இருந்தது. + பட்டனுக்கு பதில் – பட்டனைத் தேடி அழுத்தினேன்.

அதே அரையிருள். அதே குடியிருப்பு. அதே படிகள். அதே குழல் வெளிச்சம். அதே ஸ்லீவெலெஸ் ஃப்ராக்கில் என் தேவதை. சற்று யோசித்துப் பார்த்தால், அதே வயலின். ஏதோ செய்கிறது எனக்கு. யாருமில்லா ஒரு உலகத்திற்கு அவளை தூக்கிச் சென்று கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் அவசியம் இல்லை என்றாலும் என்றாவது எனக்கென்று ஒரு பெண் வரத்தான் போகிறாள். அதுவரை காத்திருக்கிறேன். இதோ அந்தக் காட்சி.

 

 

 

 

ஒரு வயசுப் பொண்ணு, என் தூக்கத்தை கெடுக்கும் முன்பே, இந்த “ஒரு”வயசுப் பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா…செம க்யூட் இல்ல?????

*********************************

பி.கு: மூன்று லட்சம் ஹிட்ஸுக்கும், 400 ஃபாலோயர்ஸ் ஆகவும் உதவிய அனைவருக்கும் நன்றி. நன்றி நன்றி..

Oct 23, 2009

பரிசல் 25

49 கருத்துக்குத்துparisal1   

பரிசல்காரன். இயற்பெயர் கிருஷ்ணகுமார். வலைப்பதிவாளர்களால் மறக்க முடியாத பெயர். எழுதினாலும் எழுதாவிட்டாலும் எப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருப்பவர். எழுதாமல் இருந்த காலங்களிலும் ஃபாலோ பண்ணுபவர்கள் எண்ணிக்கை மட்டும் கூடிக் கொண்டே போனது ஆச்சரியம்தான். வலையுலகம் அறியாத பரிசலைப் பற்றிய 25 விஷயங்கள் இதோ உங்களுக்காக


   தன் மனைவி - உமா, மகள்கள் மீரா-மேகா பெயரைக் குறிப்பிட வேண்டிய இடங்களில் குறிப்பிடுவார் பரிசல். “பேரெல்லாம் வேணாம் பரிசல். மறைமுகமா குறிப்பிடுங்க..” என்று சில நண்பர்கள் அறிவுறுத்திய போதும் இவர் கேட்காமல் செய்வது இது ஒன்றைத்தான்.

______XX_____

   “உங்களுக்கு இரண்டுமே பெண்ணா” என்று ஏதோ கவலை ததும்பும் குரலோடு கேட்டால் பிடிப்பதில்லை பரிசலுக்கு. கமல், ரஜினி என்று பெண் குழந்தைகள் பெற்றிருக்கும் பெற்றோர் லிஸ்டை எடுத்து விடுவார். இரண்டுமே பெண்கள் என்பதில் பெருமைப்படுபவர் அவர்.

______XX_____

    சமீபமாக வாட்ச் கட்டிக் கொள்ளும் பழக்கமில்லை. உமா இவருக்கு திருமணத்திற்கு முன்பு பரிசளித்த வாட்சை, பைக்கின் ஸ்பீடா மீட்டருக்குள் ஒட்டி வைத்திருக்கிறார். எல்லாரும் அதை வியப்பாய்ப் பார்த்து பாராட்டும் போது (எப்படீங்க வாட்சை இதுக்குள்ள ஃபிட் பண்ணினீங்க?) உமாவிடம் ‘பார்த்தியா நீ குடுத்த கிஃப்டை எப்படி வெச்சிருக்கேன்னு?’ என்று பீற்றிக் கொள்வார்.

______XX_____

    தீவிர ரஜினி ரசிகன். அதே அளவு கமலுக்கும் வக்காலத்து வாங்குவார். சமீப ஹீரோக்களில் ரசிப்பது விஜய் & சூர்யா.

______XX_____

   இளையராஜாவின் பரம விசிறி. ஆனாலும் ஐ பாடில் ஏ.ஆர்.ஆர், வித்யாசாகர், ஹாரிஸுக்கு தனி ஆல்பங்கள் வைத்து கேட்பார். (இன்னொரு கிசுகிசு: இவர் மனைவிக்கு ராஜாவைப் பிடிக்காது. அவர் சாய்ஸ் ஃபாஸ்ட் பீட் பாடல்கள்தான் !)

______XX_____

   அலுவலகம் விட்டு வந்தபின், ரிலாக்ஸாக இருக்க டி.வி.டி-யில் குத்துப் பாட்டைப் போட்டு குடும்பத்தோடு டான்ஸ் ஆடுவது வழக்கம். பெரியமகள் மீரா எந்த ஸ்டெப்பையும் டி.வி-யில் பார்த்த மாத்திரத்தில் கிரகித்துக் கொண்டு ஆடுவதில் கில்லாடி என்பதில் இவருக்கு சந்தோஷம்.

______XX_____

    பாடவும் வரும். அலுவலக உணவு இடைவேளையில் வாரத்துக்கு மூன்று நாட்களாவது இவர் குரல் கரோகே சிஸ்ட்த்தில் ஒலிக்கும். இளையராஜாவின் குரல் இவர் ஃபேவரைட். ரொம்பவும் உச்சஸ்தாயி வராதென்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற பாடல்களைப் பாடுவார். இவர் குரலில் “தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலும், ‘வழிவிடு வழிவிடு வழிவிடு’ பாடலும் இவரது சக நண்பர்களிடையே பிரபலம். சமீபத்தில் ‘கருகமணி கருகமணி கழுத்துல ஆடுதடி..’

______XX_____

   தமிழ், ஆங்கிலம் தவிர மலையாளம் பேச, படிக்க தெரியும். ஹிந்தியும் நன்றாகப் பேசுவார். பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு மொழி – குஜராத்தின் ‘கட்ச்’ மொழி.

______XX_____

   சமீபத்திய ஏமாற்றம் – ஒரு பண்பலையில் வலைப்பதிவாளராக பேட்டி காண அழைத்து ஏதோ ஒரு காரணம் காட்டி அதை அவர்கள் தள்ளிப்போட்டது. அழைத்த அந்த நண்பர் தனது தீவிர வாசகர் என்று சொல்லி, அதன்பிறகு ஏனோ அழைப்பதே இல்லை. ‘பேட்டி போனா போச்சுங்க.. ஃப்ரெண்டா கூட கூப்பிட அவருக்கு மனசு வர்ல பாருங்க’ என்று நண்பர்களிடம் புலம்புகிறார்.

______XX_____

   எப்போதும் பாஸிடிவாக பேசுவதையே விரும்புவார் பரிசல். நெகடீவிசம் ஆகவே ஆகாதுப்பா என்பார். அதையும் மீறி யாராவது நெகடீவாக பேசினால் ‘‘ஃப்ளைட் பறக்கலீன்னா..?’ன்னு நெகடீவா யோசிச்சவனாலதான் பாராசூட் கண்டுபிடிக்க முடிஞ்சது.. அதுமாதிரி இவன் நெகடீவா சொல்றதுல எதுனா நல்லது இருக்கான்னு பார்ப்போம்’ என்று அதையும் பாஸிடிவாக யோசிப்பார்.

______XX_____

  மிகப் பிடித்த விளையாட்டு – கிரிக்கெட். இண்டோர் கேம்ஸில் கேரம். அலுவலகத்தில் நம்பர் ஒன் கேரம் ப்ளேயர். எதிரிக்கு சில பாய்ண்டுகளைக் கொடுத்து, சவாலை ஏற்படுத்திக் கொண்டு நெருக்கடியில் ஜெயிப்பது மிகப் பிடிக்கும் பரிசலுக்கு.

______XX_____

   வித விதமான பேனாக்களை விரும்புவார். பயன்படுத்தும் இங்க் நிறம் கருப்பு. பிறரது பேனாக்கள் தவறுதலாக தன்னிடம் வந்துவிட்டால் தேடிப் பிடித்து கொடுத்துவிடுவார்.

______XX_____

  எப்போதாவது பீரடிப்பது வழக்கம். பிடிக்கவே பிடிக்காதது சிகரெட். கூடுமானவரை நண்பர்களை சிகரெட் பிடிக்காமல் பார்த்துக் கொள்வார். மனைவி உடன்நடக்க, சிகரெட் பிடித்துக் கொண்டே போகும் ஆண்களை அறவே வெறுப்பார்.

______XX_____

   கிரிக்கெட் உலகப் போட்டி நடக்கும்போது ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முதல்நாள் ப்ரடிக்‌ஷன் கேம் விளையாடுவது அலுவலகத்தில் இவரின் ஃபேவரைட். அதாவது அந்த மேட்சில் யார் முதல் பேட்டிங், ஸ்டார் பேட்ஸ்மேன்களின் ரன்கள், மேன் ஆஃப் த மேட்ச் யாராக இருக்கும் என்பது உட்பட 20 கேள்விகள் நிறைந்த லிஸ்டை இவரும் அலுவலக நண்பர்களும் யோசித்து எழுதி, அடுத்த நாள் சரிபார்ப்பார்கள். ஜெயிப்பவர்களும் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதிலும் பரிசல் கில்லாடி.

______XX_____

   அம்மா – அனந்தலட்சுமி. அப்பா – பாலசுப்பிரமணியன். இவர்களின் பெயரை சேர்த்து ‘அனந்த்பாலா’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

______XX_____

   ரொம்ப கடவுள் பக்தியெல்லாம் கிடையாது. மனித சக்திக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறதென்பதை நம்புகிறார். ‘அது நாமாகக் கூட இருக்கலாமே’ என்பார் கிண்டலாக!

______XX_____

  பொது இடங்களில் நடக்கும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவார் என்பது இவரிடம் உமாவுக்குப் பிடிக்காத விஷயம். சமீபத்தில் ராங் ரூட்டில் போன பேருந்தை, சமயோசிதமாக பரிசல் ஆர்.டி.ஓவிடம் மாட்டிவிட்ட சம்பவம் அவர் அலுவலகத்தில் பிரபலமாகப் பேசப்படுகிறதாம்.

______XX_____

  தனக்குப் பிடித்த விஐபிக்களை சந்திப்பதை விரும்பமாட்டார். ‘சந்தித்தபின் அவரைப் பற்றி இத்தனை நாள் நான் வைத்திருந்த பிம்பம் உடைந்து போகுமோ’ என பயப்படுவார்.
கோயில்களுக்குச் செல்லும்போது தொழுவதை விட, அந்தக் கோயிலில் தலபுராணம் கேட்பதில் மிக ஆர்வம் காட்டுவார். அதேபோல அந்தக் கோயிலின் வேலைப்பாடுகளை உன்னிப்பாக ரசிப்பார்.

______XX_____

  குடும்பம், குழந்தைகள் என்று இருந்தாலும், சமூகத்தின் மீதான மாற்றுப் பார்வை ஒன்றுண்டு பரிசலுக்கு. சமூகம், குடும்பம், கலாச்சாரம் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிரானது அது.

______XX_____

  மனிதர்களை தெய்வங்களாக்கி (சாமியார்கள்) கும்பிடுபவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. ‘ஒருத்தன் மனுஷனா இருந்தாலே போதுமே’ என்பார்.

______XX_____

  பிடித்த புத்தகங்கள் என்றால் மீண்டும் எடுத்துப் படிப்பார். அப்படி பரிசல் சமீபத்தில் மீண்டும் எடுத்து, இரண்டே நாட்களில் படித்தது ஆதவனின் ‘என் பெயர் ராமசேஷன்’

______XX_____

  கீபோர்ட் பழகி, பாடல்களை அதில் வாசிக்க வேண்டுமென்பது பரிசலின் நீண்டநாள் அவா.
மரம் சூழ்ந்த காடுகளும், நீர் சூழ்ந்த ஏரிகளும் பரிசலின் ஃபேவரைட். இயற்கையின் காதலன் அவர். அவ்வப்போது செடி கொடிகளிடம் பேசுவார்.

______XX_____

   எந்த செண்டிமெண்டின் மீதும் நம்பிக்கை இல்லை பரிசலுக்கு. ஆனால் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். ‘என்னால விடமுடியாத செண்டிமெண்ட்னா அது ஃபெரெண்ட்ஷிப்தான்’ என்பார். 

______XX_____

சமீபத்திய ரகசியம்: அறிமுக இசையமைப்பாளர் ஒருவரது ட்யூனுக்கு பாடல் வரிகளை எழுத வாய்ப்பு வந்தது பரிசலுக்கு. ‘சென்னைக்குப் போலாமா’ என்று கேட்ட நண்பரிடம் சொன்னார் பரிசல்: ‘ட்யூனை அனுப்புங்க. இங்கிருந்தே எழுதறேன்’  ஒரு பாடலுக்காக சென்னைக்கு போய் 15 நாட்கள் வேலை, குடும்பத்தை விட்டு டேரா போட விருப்பமில்லை அவருக்கு. அழைத்த நண்பர் ஒரே பாடலால் ஹிட்டானவர்கள் லிஸ்டைச் சொல்லி, ‘சும்மா யோசிக்காம கிளம்புங்க’ என்று நச்சரித்துக் கொண்டு இருக்கிறாராம்.

______XX_____

குறிப்பு: பரிசல் 25ஐ நான் போடறப்ப கார்க்கி 25ஐ வேற யார் போடுவாங்க? பரிசலேதான். இங்க போய் படிங்க.

Oct 22, 2009

நான் அடிச்சா தாங்க மாட்ட.

40 கருத்துக்குத்து

  

  ச்சே. இப்பலாம் இந்த மொபைலால் வரும் இம்சைக்கு பேசாம ஆதவனை இன்னொரு தரம் பார்த்து தொலைச்சிடலாம். நான் எனக்கு வரும் அழைப்புகளை பத்தி சொல்லல சாமீயோவ். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் முதலில் பலருக்கு ஆனந்தமும்,சிலருக்கு அதிர்ச்சியும்தான் தரும். மெல்ல மெல்ல அந்த சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்ளும் வித்தை அனைவருக்கும் தெரிவதில்லை. ஆனா இப்ப நான் சொல்ற பிரச்சினை அதன் முக்கிய காரணத்தால் வந்ததல்ல. மொபைல் வேணும்தான். ஆனா கூடவே வர்ற உப தொல்லைகள்தான் இம்சையே. அதாவது காலர்ட்யூனும், ரிங்டோனும்.

அன்னைக்கு டிரெயினில் போயிட்டு இருந்தேன். அப்பர் பெர்த்தில் இருந்த என் பேக் பேகில் இருந்து புத்தகத்தை எடுக்கிறேன். அருகில் இருந்தவர் மொபைல் ஒலிக்கிறது.

திருடாதே.. பாப்பா திருடாதே..

எல்லோரும் நிமிர்ந்து பார்க்க, நான் அலறியபடி நிற்க, சிரித்துக் கொண்டே ஹலோ என்கிறார் கொரியா மொபைல் ஓனர். அந்த செங்கல் மொபைலை அவர் தலையில் போட்டு உடைக்கலாம் போலிருந்தது எனக்கு.

இன்னொரு நாள் நல்ல பசியில் ஹோட்டலுக்கு சென்றேன். ஏமி காவல என்ற யாதவ கமிடி கல்லுகுரி ரெட்டியிடம்  ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ஆனியன் ஊத்தப்பம் என்றேன். அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நானும் ஆந்திராதான் என்றார் அந்த யாதவ……ரெட்டி. இட்லியில் கை வைக்கும் போது அருகிலிருந்தவருக்கு கால் வந்து மொபைல் அலறியது

கல்யாண சமையல் சாதம். காய் கறிகளும் பிரமாதம்.

உண்மையிலே கால் வந்ததா இல்லை அவனே பாட்டு போட்டான்னானு தெரியல.

இது பரவாயில்லை.  எம்.பி.ஏ தேர்வுகளை ஒரு வழியா முடிச்சிட்டு, சந்தோஷமான விஷயம்னு நண்பர்கள் சிலருடன் பகிர்ந்துக்கலாம்ன்னு கால் பண்ண ஆரமபிச்சேன்.

என்னடா பொல்லாத வாழ்க்கை. இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

என்ன மச்சான்?

நொன்ன மச்சான். வைடா.

அடுத்தவன்… “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?”

பேசாமலே கட் செஞ்சிட்டேன்

இதுதான் கடைசின்னு அந்த சமையல்கார பதிவருக்கு போட்டேன். நல்ல வேளை. ஒரு பெண் குரல்.

“இந்த காலர் ட்யூனை காப்பி செய்ய ஸ்டார் பட்டனை அமுக்குங்கள்”

படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. குடிச்சு பார்த்தேன்  ஏறிடுச்சு.

ங்கொய்யால. நான் உங்ககிட்ட சொல்லவே இல்லைடா சாமீன்னு மொட்டை மாடிக்கு போய் ஆத்தா நான் பாஸாயிட்டேன்னு ஆசை தீர கத்திட்டு வரலாம்ன்னு போனேங்க. பக்கத்து வீட்டு ஃபிகரு அவ ஆளுகிட்ட இருந்து வர்ற காலுக்காக வெயிட்டிங் போல. அந்த நேரம் பார்த்து அவ சைலண்ட் வேற போட மறந்துட்டா போல. நான் கத்தும் முன்பே அது கத்துது

சினேகிதனே சினேகிதனே.. ரகசிய சினேகிதனே

எம்.பி.ஏ பாஸ் ஆனது கூட என் விஷயத்துல ரகசியம் ஆயிடுச்சுங்க.

அந்த இளம் பிரபல பதிவருக்கு கால் போட்டா

“ஹாய் மாலினி.திஸ் இஸ் கிருஷ்ணன். இதுவரைக்கும் இவ்ளோ அழகா யாரும் பார்த்திருக்க  மாட்டாங்க”

அப்பிடின்னு சொல்லுதுங்க. ஏற்கனவே அந்த சித்தி நடிகையால இவரு பேரு ரிப்பேரு ஆனது பழைய கதை. ஆனா அந்த கதைக்கு லீடே இந்தப் பாட்டுதான்னு தெரிஞ்சும் இவரு மாத்தாம இருக்காருன்னா, ஏதோ இருக்குதுன்னு கிசுகிசு கூட கிளம்பியிருக்காம்.

இன்னொரு நாள் அந்த பிரபல பாடகர் பதிவருக்கு நைட் 11 மணிக்கு தூக்கம் வரலையேன்னு கால் பண்ணேங்க. மனுஷன் அன்னைகுத்தான் காலர் ட்யூன் மாத்திட்டாரு போலிருக்கு. தூக்கம் வரலைன்னு கால் பண்ணா அந்த பக்கம் சொல்லுது

“ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ”

எட்டு தடவை தாலேலோன்னு கேட்டதுதான் மிச்சம். மனுஷன் நவீன கும்பகர்ணன் போல.இழுத்து மூடிட்டு படுத்துட்டேன்.

இன்னொரு நாள் ஒரு இண்டெர்வியூவுக்கு ரெடியாய்ட்டு இருந்தேன். சரி அந்த க.பொ.க பதிவர் தான் சாமி பாட்டா வைப்பாரே. அவருக்கு கூப்பிடலாம்ன்னு போட்டா, மனுஷன் சரியான பாட்டுதான் வச்சிருந்தார்

”கோவிந்தா ஹரி கோவிந்தா”

நர்சிம் மாதிரி டைட்டா இன்சர்ட் பண்ணியிருந்தத எடுத்து வெளியெ விட்டுட்டு பகல் காட்சிக்கு போயிட்டேங்க. திங்கள்கிழமை காலைல பகல் காட்சிக்கு வந்தவன் மொபைலில் ரிங்டோன கேட்டபோதுதான் இந்தப் பதிவை எழுதலாம்னு தோணுச்சு.

வேலை வேலை வேலை காலையும் வேலை மாலையிலும் வேலை

டேய் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்ன செய்றேன் பாருங்கன்னு டைப் பண்ணி முடிக்கிறேன், எம் மொபைல் அலறுது

நான் அடிச்சா தாங்க மாட்ட. நாலு மாசம் தூங்க மாட்ட..

 

Oct 20, 2009

அடி சீனி சக்கரையே

25 கருத்துக்குத்து
மச்சி.. பாலாஜி பேசறேன். எப்படிடா இருக்க?


டேய். நல்லா இருக்கேன். நீ?


அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும்


சொல்லுடா.


நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு


”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப் 
பாட்டுமே இல்லையேடா!!


ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”


அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.


அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே


ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா


*&%%^^^%$$. பாட்ட சொல்றா


ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”


எல்லாம் சரி.முதல் வரி என்னடா?


மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.


ம்ம்


செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்


ம்ம்.


சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து


டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.


இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”


இதெல்லாம் சரியா பாடு..


ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா


ம்ம்


அடி சீனி சக்கரையே”


ம்ம்


எட்டி நீயும் நிக்கிறியே


ம்ம்


நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே


செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.


டேய்.அதாண்டா


இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


*************************************
ஒரு காலத்தில் என் எம்.பி3 பிளேயரில் மூனு பாட்டு எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அதில் ஒரு பாடல்தான் செங்குருவி செங்குருவி. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சுந்தர புருஷனில் வரும் சமஞ்சேன் உனக்குதான் என்ற பாடலும்,
செம்பருத்தி பூவே! செம்பருத்தி பூவே!
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
என்ற பாடலும் நம்ம ஃபேவரிட்ஸ். அதிலும் செங்குருவி டாப்பு. யூட்ய்பிலும், மற்ற ஆடியோ பிலேயரிலும் தேடி தேடி 2 மணி நேரம் வீணானதே மிச்சம். நீங்கள் தரவிறக்கி கேளுங்க மக்கா..

வீடியோ உபயம்: ஸ்ரீமதி

குசும்பனையே கலாய்க்க வர்றான்…

24 கருத்துக்குத்து

 

kusumban.com

தங்க குழந்தை

வெள்ளி மலர் காட்டியது

பவள வாய் திறந்து..

 

litlle child

shows a flower

open its mouth

எப்பூடி? நாங்களும் மொழிபெயர்ப்பு செய்வோமில்ல!!!! அத விடுங்க…

பதிவுலக பகலவன்

வலையுலக வல்லவன்

இணைய உலகின் இனியவன்

குசும்பன் அப்பாவாகி விட்டார்..

திரு & திருமதி. சரவணனுக்கு வாழ்த்துகள்..

Oct 19, 2009

கார்க்கியின் காக்டெயில்(சினிமா ஸ்பெஷல்)

29 கருத்துக்குத்து

 

  தீபாவளிக்கு இந்த முறை சரவெடி போல் படங்கள் வெளியாகவில்லை. மூன்றே மூன்று ஒத்தை வெடிகள்தான். அதிலும் லட்சுமி வெடியாக இருக்குமென எதிர்பார்த்த ஜகன்மோகினி டிரெயிலர் பார்த்தவுடனே அது கேப் வெடி என்பது தெரிந்துவிட்டது. அடுத்து மார்க்கெட்டுக்கு வரும் புதுவகையான வெடியாக இருக்குமென எதிர்பார்த்த பேராண்மை ஓரளவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் என்கிறார்கள். வசூல் இல்லாவிடினும் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு உத்தரவாதம் என்கிறார்கள்.கடைசியாக ஆட்டம் பாமாக கருதப்பட்ட ஆதவன். நானும் பார்த்துவிட்டேன். பதிவர்களின் விமர்சனத்தாலும், பார்த்தவர்கள் சொன்னதை வைத்தும் நீங்களே முடிவு செய்திருப்பீர்கள். அயன் என்ற ஒரு வெற்றியே சூர்யாவை இப்படி மாற்றிவிட்டது என்றால்.. சரி விடுங்க. எல்லோரும் மறக்காம படம் பாருங்க. குறிப்பா கடைசி 15 நிமிடங்கள். மிஸ் பண்ணாதிங்க மக்கா

**********************************

அடுத்து தீபாவளி அன்று தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆன படங்கள். முதலில் ஆனந்த தாண்டவம், எனது புரொஃபைலில் எனக்கு பிடித்த நாவல்களில் பிரிவோம் சந்திப்போம் இருந்ததை சில கவனித்திருக்கக் கூடும். அதனாலே இந்தப் படம் வந்த போது நான் பார்க்கவில்லை. இந்த முறை சில காட்சிகள் பார்க்கலாமே என்று அமர்ந்தேன். சாமீ.. ரகுவைப் பார்த்தவுடன் முதல் அட்டாக். மதுமிதாவாக தமன்னா ஓக்கே என்றாலும், அவரை இயக்குனர் காட்டிய விதம், இரண்டாவது அட்டாக். மூன்றாவது அட்டாக்தான் சூப்பர். மதுமிதா அந்த அமெரிக்கா மாப்பிள்ளையுடன் அறையில் இருந்து வெளியே ஓடி வருவார். எதிரில் ரகு. மதுமிதாவின் டீஷர்ட்டில் அமெரிக்க நாட்டுக் கொடி. அந்த கொடியின் இடது பக்கம் மட்டும் கசங்கியிருக்கும்.இதையெல்லாம் நுணுக்கமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.. ஆனால் அதற்கு முந்தைய சீன்களில் ரகுவின் மாமனார் அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவாராம். ஆனால் ரகுவின் அப்பா பையன் ஃபோனே செய்யலைன்னு புலம்புவாராம். பணத்தை ரகுவிற்கு மணி ஆர்டர் செய்வாராம். சேனலெல்லாம் மாற்றவில்லை. ஆஃப் செய்துவிட்டு போய் ஃப்ளாட் ஆகிட்டேன்.

**********************************

அடுத்தப் படம் தான் டாப். நான் என் உறவினர் வீட்டுக்குள் நுழைந்தபோது அனைவரும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நல்ல வேளை.. விளம்பர நேரமென்பதால் வாங்க வாங்க என்றார்கள். பிறகு படம் போட்டபின் என் அம்மாவும் படத்தில் லயிக்க தொடங்கினார்கள். படம் முடியும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை. 5.30க்கு மேல் படம் முடிந்தபின்தான் எனக்கு காஃபியே கிடைத்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தை அனைவரும் குறைந்தது இரண்டு முறை ஏற்கனவே பார்த்து விட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூன்று மணி நேரம் கட்டி போடுவது என்பது சாதாரண விஷயமா? இப்போது கூட பண்டிகை நாட்களில் அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். அது போலொரு படம் அவருக்கு மட்டுமல்ல., இனி யாருக்கும் கிடைக்காது என்பது மட்டும் உண்மை. என்ன படமா? போங்க பாஸ்..

**********************************

இன்று காலை ஹைதைக்கு வந்தவுடன் ஒரு ஆச்சரியம். வழக்கம் போல் ஷேர் ஆட்டோவில் பின் சீட்டில் நடுவில் அமர்ந்திருந்தேன். ஓரத்தில் அமர்ந்தால் முன் சீட்டுக்கு தள்ளப்படுவோம். விஷயம் தெரியாதவர்கள் இதை படிச்சுக்கோங்க.தாடியுடன் முரட்டுத்தனமான ஒருவர் வந்து எக்ஸ்க்யூஸ் மீ என்றார். அப்படி உட்காருங்க என்பது போல் கண்ணசைத்தேன். அவர் என்னையே உற்றுப் பார்ப்பது போல் தெரிந்தது. என்னடா இது வம்பு என்றபடி வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டேன். “Great surpise தெரியுங்களா?” என்றது ஒரு குரல். அவரா என்பது போல் திரும்பினால் அவர்தான். அட்ரீனலின் ஆறாக பெருக்கெடுத்து ஓடத் தயாரான நேரத்தில் கை கொடுத்தபடி சொன்னார் ” நான் தாங்க பார்த்தசாரதி.நீங்க பிளாகர் கார்க்கிதானே?” ஆவ்வ்.. புட்டிக்கதைகள் புண்ணியத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு நட்பு. இந்த வாரம் மீண்டும் சந்திப்பதாக முடிவெடுத்தோம். இந்த வாரம் எப்படியாவது புட்டிக்கதைகள் எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

Oct 17, 2009

போலி டாக்டர் வாழ்க

12 கருத்துக்குத்து
தீபாவளி அன்று பிறந்த நாள் காணும் நார்வே நாட்டு நாசராணி, அட ரைமிங்கா வந்துடுச்சுங்க.. நார்வே நாட்டு மகாராணி சுசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

இன்று போல் என்றும் 35வது பிறந்த நாளே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரக்கன் நரகாசுரன் அழிந்த அன்று பிறந்ததாலோ என்னவோ இந்த போலி மருத்துவர் பேஷண்ட்டை எல்லாம் இந்தக் கொடுமை செய்கிறார்!!!!

Oct 16, 2009

தீபாவளி...டெய்லர்..முழுப்பேன்ட்.. "படுபாவி"

20 கருத்துக்குத்து

அப்படியே ஒரு 20 வருஷத்துக்கு பின்னாடி போங்க..

தீபாவளி வரப்போகிறது என்பதெல்லாம் மதனுக்கு காலண்டரைப் பார்த்தோ,அது நவம்பர் அக்டோபரில்தான் வருமென்றோ தெரியாது. டெய்லர் பாபு வீட்டுக்குள் வரும்போதுதான் தெரியும். காதில் பென்சிலோடும் கையில் நோட்டோடும் அவர் வரும்போது டெய்லரின் டிர‌யிலராக காஜா எடுக்கும் சிறுவன் குட்டி பாபுவும் வருவான்.

மனைவி ஒன்று மற்றது இரண்டு என்று இருக்கும் டெய்லர் ஏனோ தைப்பதில் ஆண்கள் மட்டும் என்று சொல்வார். 12..25..16.. என்று இன்ச் டேப்பால் அளந்துக் கொன்டே அவர் சொல்ல குட்டி பாபு, "குடியை மறக்க இங்கே வாருங்கள்" என்ற துண்டு நோட்டிஸின் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். மதன் மெல்ல டெய்லரை அழைத்தான். அவர் என்னடா என்பது போல் குனிய அவர் காதில் கிசுகிசுத்தான் "போன வருஷம் என் டிராயிரல பட்டன் வைக்காம விட்டுட்டிங்க. பக்கத்த் வீட்டு மாமி பார்த்துட்டு ஷேம் ஷேம் நு சொன்னா. இந்த தடவ மறக்காதீங்க மாமா".

"சரி தம்பி. நீயும் வள‌ர்ந்துட்ட. இந்த தடவ முழுப்பேன்ட்டா தைச்சிடுவோம்" என்று ஆசையை வள‌ர்த்தார்.

"டேய் போன வருஷம் மாதிரி தீபாவளி அன்னைக்கு காலைல கொண்டு வராதடா. ஒரு நாள் முன்னாடியே வந்துருனும்".இது தாத்தா. தலையை சொறிந்துக் கொண்டே "வந்துருங்க" என்று இழுத்தார் டெய்லர். தாத்தா முன்பணம் கொடுக்க கிளம்பினார் டெய்லர். இந்த தீபாவளிக்கு முழுப்பேன்ட் என்று தெரு முழுக்க சொல்லிக் கொண்டு திரிந்தான் மதன்.

தீபாவளியும் வந்தது. டெய்லரை மட்டும் காணவில்லை. பேன்ட்டில்லாமல் வெளியே போக மாட்டேன் என்று மதன் வீட்டுக்குள்ளேயே திரிந்தான். ஒரு வழியாய் காலை 11 மணிக்கு துணியுடன் வந்தான் குட்டி பாபு. தாத்தாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போதே தன் பேன்ட்டை உருவிக் கொண்டு ஓடினான் மதன். கச்சிதமாய் தைத்திருந்தார் டெய்லர். வீட்டில் யாரிடமும் காட்டாமால் தெருவுக்கு ஓடி வந்தான். எதிரில் மாமி வர அவசர அவசரமாய் பட்டனை தேடினான் மதன். பட்டன்கள் இருப்பதை உறுதி செய்தவன் ஹாயாக பாக்கெடுக்குள் படு ஸ்டைலாக கைகளை விட்டான்.

"படுபாவி" . கைகள் தொடையை தொட்டன. இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.

*****************************

சாளரத்தின் சகாக்களுக்கும், சகிக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Oct 14, 2009

தீபாவளி.. திவால்(லி) ஆகிப் போனதே

39 கருத்துக்குத்து

  streetchildren_deepavali

   பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். தமிழ்நாட்டின் தலைவிதிக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிழைக்க வந்த இடத்தில் என்ன கொண்டாட்டம் இருக்கப் போகிறது?  கால ஓட்டத்தில் காணாமல் போகும் பட்டியலில் இந்த தீபாவளியும் சேர்ந்துக் கொள்ளும் நாள் இதோ…. பட்டாசு என்ற ஒரு வஸ்து மட்டுமே இன்னமும் தீபாவளியை உயிரோடு வைத்திருக்கிறது. இல்லையேல் இந்திய தொலைக்காட்சிகளிலே….. போய் விடும் தீபாவளி. இத்தனை வருடம் கழித்தும் தீபாவளி என்றதும் எனக்கு திண்டிவனம்..அந்தத் தெரு.. அடுத்த நாள் அம்மாவின் கிராமம். இவைதான் நினைவுக்கு வருகிறது. இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை விட அந்த தீபாவளியை நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியாயிருக்கிறது.

     எல்லாத் தெருவிலும் இரண்டு கோஷ்டிகள் இருக்கும். ரஜினி கமல் என்றோ, அந்த முக்கு இந்த முக்கு என்றோ, பெரிய பசங்க சின்ன பசங்க என்றோ… சரியாக இரண்டு கோஷ்டிகள்தான் இருக்கும். தீபாவளிக்கு பல நாட்கள் முன்பே ஊசிவெடியும், அரியாங்குப்பம் நாட்டு வெடியும் நாச வேலை செய்து கொண்டிருக்கும். தனியாக வரும் அந்த டீம்காரனின் மீது மாடியிலிருந்து வெடியை கொளுத்தி போடுவது, பதிலுக்கு நாம் அந்த பக்கம் போனா மாட்டுசாணத்தின் அடியில் வெடியை வைத்து அவர்கள் நம்மை வடிவேலாக்குவது... தீபாவளியன்று யார் வீட்டுக்கு முன் நிறைய பேப்பர் என்பது வரை நீடிக்கும் அந்தப் போர்… போரடிக்காத போர். இதற்காகவே லட்சுமி வெடியும், யானை வெடியும் நிறைய இருக்கும். பேப்பர் அதிகம் சுற்றப்பட்டிருக்கும் காரணத்தால்.

    மாமா வாங்கி வரும் 100வாலாவை ஒவ்வொன்றாக  பிரித்துப் போட, அதில் பாதிக்கு மேல் திரி பிடுங்கி வர, மீதியில் பாதி புஸ்ஸாகிவிட, மிச்சமிருக்கும் 20 வெடிகளை ஒரு மணி நேரமாக வெடிப்பதுண்டு. இப்போதெல்லாம் ஒத்தை வெடியை நாலு வயது சிறுவன் கூட ஒரே நேரத்தில் அஞ்சு வெடியின் திரியை சேர்த்துதான் வெடிக்கிறான். ஒற்றுமையின் பலம் வெடிப்பதில் மட்டுமே தெரிகிறது அவனுக்கு.

     தெருவில் எந்த வீட்டு வராந்தா பெரியதாக இருக்கிறது அங்கே கூடும் எங்கள் பட்டாசு மேசை மாநாடு. அனைவரது பட்டாசுகளையும் ஒன்றாக்கி  வெடிக்க தொடங்கிய உடனே.. அதுவரை அமைதியாக இருக்கும் கிழவி.. ”டேய் அந்தப் பக்கம் போய் வெடிங்கடா” என்று வெடிச்சத்தத்தை விட அதிகமாக கத்தும். யார் கேட்பது? எவனாவது கையால் வெடிக்கிறேன் என்று  கொளுத்திப் போட, அது சரியாய் கிழவியின் அருகில்தான் விழும்.அது ஊசி வெடிதான் என்றாலும் பாம் விழுந்தது போல் அலறும் கிழவி. கைகளில் சிக்கும் பட்டாசை எடுத்துக் கொண்டு அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பமாகும். இருக்கும் எல்லா பட்டாசும் டுமீல் ஆனவுடன் தொடங்கும் அடுத்த புராஜெக்ட்.புஸ்ஸாகிப் போன வெடிகளை சேகரித்து, மருந்தை மட்டும் பெரிய பேப்பரில் கொட்டி, ஒரு திரியை வைத்து கொளுத்தினால் ஜகஜ்ஜோதி.

    இன்னும் கொஞ்சம் பெரிய பசங்க வேறு வேலையில் பிசியாக இருப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு குண்டு பல்பு வெளிச்சத்தில் நடந்துக் கொண்டிருக்கும் பேனர் தயாரிப்பு. ரஜினியின் படம் ஒரு வழியாக அடையாளம் காணும் அளவுக்கு வந்ததும், கீழே பெயர்கள் எழுதும் படலம் தொடங்கும். ரஜினியின் படத்திகு வெகு அருகில் இருக்க வேண்டும் என்பதே அனைவரது ஏக்கமும். “இந்த திரைப்படத்தை காண வந்த கண்களுக்கு நன்றி- KILLER BOYS” என்று முடித்து, கண்களை வரைவதற்குள் விடிந்து விடும்.  அந்த முக்கில் கையில் லட்டுடன் அபிராமியை தேடும் கமலை வரைய மனமில்லாமல் சோர்ந்து போயிருப்பார்கள். அதிலே பாதி வெற்றி பெற்றுவிட்டு, காலை ஆறு மணிக்கு ஆட்டம் பாம் அலறும் இந்த முக்கில்.

இன்னும் புதிய டிரெஸ், எதிர்த்த வீட்டுக்கு தீபாவளிக்காக வந்திருந்த ராதிகா, நாலு வீட்டுக்காரர்களும் சேர்ந்து செய்யும் முறுக்கு, ஜாமுன், பாதுஷா என பல மேட்டர் இருக்கு அந்த தீபாவளியைப் பற்றி அசை போட. ம்ம். இந்த தீபாவளிக்கு செய்து பார்க்க பட்டாசு மட்டும்தான் இருக்கு. டமால்………….

இன்னைக்கு வறேண்டா பப்லு. மாடியில் இருந்து நீயும் நானும் மட்டும் ”அவுட்” விட்டு மகிழலாம்.

சாளரத்தின் சகாக்களுக்கும், சகிக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Oct 13, 2009

கிரிக்கெட், சினிமா,நாவல்,சாரு

33 கருத்துக்குத்து

 

untitled

  ஒரு வழியாக இந்திய அணிகள் ஜெயிக்க ஆரம்பிச்சாச்சு சேப்பியன்ஸ் லீகில். முதல் ஆட்டத்தில் மூன்று அணிகளும் வாங்கிய கும்மாங்குத்தை பார்த்தபோது சற்று அதிர்ந்துதான் போனேன். அதுவும் சோமர்செட்டின் தாமஸை சமாளிக்க முடியாமல் திணறிய சேப்பியன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. இதில் பெரிய ஜோக்கு என்னவென்றால் கோப்பையையே வாங்கிவிட்ட சார்ஜர்ஸ், இன்னும் ஒரு முறை கூட சொந்த மண்ணில் ஜெயிக்க வில்லை. எட்டாவது முறையாக தொடர்ந்து சொந்த மண்ணில் தோல்வியை தழுவினார்கள்.

   தழுவினார்கள் என்றவுடன் சினிமாதான் நினைவுக்கு  வருகிறது.பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு கூட்டத்தில் நடிகர்களும், நடிகைகளும் பேசிய பேச்சைப் பார்த்த போது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்  இருந்தது. இதில் இயக்குனர்கள் பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களும் உண்மைக்கு வெகு தூரத்திலே எப்போதும் இருக்கிறார்கள். படைப்பாளி என்பவன் குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் அவனால் நிச்சயம் ஒரு நல்லப் படைப்பாளியாக இருக்க முடியாது என்பார்கள். இந்த சினிமாக்காரர்கள் யாருமே அப்படியில்லை. அப்படியென்றால் சினிமாக்காரர்களை படைப்பாளிகள் என்று சொல்ல முடியாதா? பின் யார் தான் படைப்பாளிகள்?

    படைப்பாளிகள் என்றவுடன் மேலே சொன்ன கருத்தை சொன்ன கோபிகிருஷ்ணன் நினைவுக்கு வருகிறார். அவரின் ”இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!” சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் தூயோன் சிறுகதை தொகுப்பை தொடர்ந்து இதைப் படித்தபோது ஆயாசாமாக இருந்தது. கிட்டத்தட்ட 20 பாத்திரங்களை சபீனா போட்டு விளக்குகிறார். அதுவும் அவர் விவரித்த விதம் அனைவருக்குமே  ஒரே மாதிரி இருப்பது இன்னும் சிரமம். “ நேர்த்தியாக உடை அணிவார்”, “தலையை நேராக வாருவார்” , “சிகரெட்(அ) பீடி புகைப்பார்” என்பது போன்ற விவரணைகள் எத்துணை முறை வருகிறது என்பது நினைவிலில்லை. சற்று போரடிக்கும் போதெல்லாம் கிளர்ச்சியாக எதையாவது எழுதி தொலைத்துவிடுகிறார். நாவலில் எனக்கு பிடித்த ஒரே விஷயம், பதிவில் நாம் சுட்டி கொடுப்பது போல், பின் இணைப்பாக அவரின் சிறுகதைகளை(கதைக்கு தொடர்புடைய) கொடுத்தது வித்தியாசமாக இருந்தது. மற்றபடி என் பார்வைக்கு,  கோபிகிருஷ்ணன் அந்தக் கால சாரு.

   சாரு என்றவுடன் குமுதத்தில் அவர் குடும்பத்துடன் வந்திருந்த விஷயம் நினைவுக்கு வருகிறது.அது இருக்கட்டும்.  உயிர்மையில் வந்திருந்த சாருவின் கட்டுரை ஒன்றை நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். வேண்டாம்டா கார்க்கி என்றாலும், நண்பருக்காக முதல் சில பத்தியை படித்தேன்.

“’ வைகை ’ யில் ஏற்பட்ட கெட்ட அனுபவத்துக்குப் பிறகு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணியதால் சசிகுமார் நாயகனாக நடித்த ’ நாடோடிகள் ’ வந்து நெடுநாட்கள் ஆகியும் படத்துக்குப் போகாமல் பதுங்கிக் கொண்டிருந்தேன்.”

வைகை வந்தது ஜூலை கடைசியில். நாடோடிகள் வந்தது ஜூனில். அது கிடக்கட்டும். நாளையே ஒரு வாசகர் சாருவிடம் சென்று “கார்க்கி என்பவரது பிளாகை படித்து நொந்து போய்விட்டேன். அதனால்தான் உஙக்ளையும் நான் படிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக” சொன்னால், சாரு எப்படி குதிப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

    சாருவுக்கு பிறகு எனக்கு நினைவில் வரும் விஷயங்களை எழுத முடியுமா என்ன? அதனால் ஸ்ஸ்ஸ்ஸ்டாப் செய்கிறேன்.

Oct 12, 2009

படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு

41 கருத்துக்குத்து

 

மு.கு: நாம் எழுதுகிற பதிவு எல்லோருக்கும் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. பெரும்பான்மையானவர்களுக்கு பிடித்தாலே ஹிட்டாகிவிடும். படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு பதிவு போட ஐடியா தோன்றியது எனக்கு. அதுவும் ஒரே வரியில். ”தமிழ் பதிவுலகில் முதன் முறையாக அனைவராலும் பாராட்டப்படப்போகும், படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு”.அது என்ன என்பதை கடைசியில் பார்ப்போம்.

இந்தப் பதிவு எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறேன்.

1) கூகிளில் சென்று “best search engines” என்று கேட்டால்?

2) தெலுங்கில் பேசுபவனிடம் “நாக்கு தெங்கு தெளிது” என்றால் ?

3) காந்திஜியின் சுயசரிதை யாரால் எழுதப்பட்டது என்று கேட்டால்?

இது போன்றதுதான் இன்றைய பதிவும். இதோ ”தமிழ் பதிவுலகில் முதன் முறையாக அனைவராலும் பாராட்டப்படப்போகும், படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு”. (முன் குறிப்பு முடிந்தது)

இன்று பதிவு எதுவும் கிடையாது

Oct 9, 2009

ஆதி&கார்க்கியின் அடுத்த குறும்படம்

72 கருத்துக்குத்து

 

Saravedi-1

இடம்: புதுக்கோட்டை கலைக்கூடம், சாந்தோம், சென்னை

நேரம்: மாலை ஆறு மணிக்கு

   ”நீ எங்கே” வின் வெற்றியைத் தொடர்ந்து எங்கள் கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். இதயம் இசைந்த இனிய நண்பர்களின் துணையோடு இன்று இனிதே தொடங்குகிறோம்.

வாருங்கள்.. வாழ்த்துங்கள்…

விரைவில் வெடிக்கும் சரவெடி………………………

நட்புடன்,

ஆதி & குழு.

****************************************************************************************************************

Press releases:

Click to enlarge…

    en-1615999657                    en-1386172644

 

en-455470147

Oct 8, 2009

அவன்..அவள்..மழை

53 கருத்துக்குத்து

 

   மழையும் காதலும் ரம்மியமானது என்றால் மழையில் காதலி உடன் இருப்பதை என்னவென்பது? பாண்டிச்சேரியில் இருப்பது போன்ற நேரான சாலைகளில், மழை நின்றும் நிற்காத தூறலில் காதலியின் கைகோர்த்தபடி நடந்து சென்று கடலை தரிசிப்பது சுகம். சுகம் என்பது கூட சரியா? அந்த பரவசநிலைக்கு ஏற்ற வார்த்தை எனக்குத் தெரியவில்லை. அவள் நனைவாள். அவளோடு இவனும் நனைவான். இருவரும் நடுங்குவார்கள். கூடவே மழையும் நடுங்கும். கைகளை குறுக்கே அணைத்து குளிருக்கு இதமாக்கிக் கொள்ளும் போது தன்னை அணைத்துக் கொள்ள மாட்டாளா என்று அவன் நினைத்துக் கொள்வதுண்டு. கைகளை எடுக்க மாட்டாளா என்று மழையும் நினைப்பதுண்டு.

rain-benches (1)

   மழை வந்து கழுவி சென்ற சாலை சுத்தமாய் இருக்கும். நனைந்து கிடக்கும் பூக்களைக் கூட மிதிக்காமல் மெல்ல நடந்து வருவாள். அவள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துளிகளை பார்த்து அவனுக்கு பொறாமை எழும். சற்றே வலுவான துளிகள் அவள் கன்னம் வழி உதடுகளை அடையும்போது, வலுவிழுந்து கீழே விழத் தயாராகும். அதுவரை சைவமாக இருந்தவனை அவளது இதழ் வருடும் மழைத்துளி அசைவமாக்கக்கூடும். தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் அந்த துளியை கைகளில் ஏந்தியவன் பொறாமை மறந்து கடவுளைக் கண்டவனைப் போல் மூர்ச்சையாகி இருப்பான். தீர்த்தமாய் பருகிக் கொண்டிருப்பான்.

ஆனந்தமாய் ஓடும் ஓடையின்  குறுக்கே இருக்கும் பாலத்தில் அவள் அமர்வாள். எழுதி வைத்த கவிதைத் தாள்களை அந்த மெல்லிய மழையினூடே அவளிடம் கொடுத்துப் படிக்க சொல்லுவான் அவன்.

நான் தானே நடக்கிறேன்

அது என்ன என் பின்னால்

உன் நிழல்?

சிரித்துக் கொள்வாள் அவள். எரிந்துக் கொண்டிருப்பான் அவன். நெருப்பை அணைக்கும் மழை கூட இவனுக்கு மட்டும் பெட்ரோலாய் பொழிந்துக் கொண்டிருக்கும். கவிதை எனப்படும் கிறுக்கல்கள் கொண்ட தாளை முக்கோணமாய் மடிப்பாள். லப்டப் இதயம் டப்டப் என மாறித்துடிக்கும். உதடுகளால் காகிதத்தை ஈரமாக்கி  கிழிப்பாள். எழுதி இருந்த எழுத்துக்கள் அதிசயமாக உயிர்பெற்று உயிர் கொடுத்த அதிசயத்தை ரசிக்கத் தொடங்கும். காகிதம் கப்பலாகி, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் டைட்டானிக் போல பெருமித ஓட்டம் ஓடும். அவள் கைகளால் கப்பல்கள் ஆவதை  விட வேறு என்ன பெருமை கிடைத்து விடக்கூடும் அவன் கவிதைகளுக்கு?

ஓடை வேறு வழியாக கடலை நோக்கி ஓட, இவர்கள் வேறு வழியாக நடக்க துவங்குவார்கள். மழை நின்ற சமயம் சிறிய மரமொன்றின் கீழ் நின்று கொண்டு, இலைகள் சேகரித்த துளிகளை உலுக்கி  அவளின் மேல் விழச்செய்யும்போது மலரை சேர்ந்ததாய் உணரக்கூடும் மழைத்துளி. ஒரு செல்ல சிணுங்கல் செய்தபடி மரத்தை விட்டு கடலை நோக்கி ஓடுவாள் அவள். மரமும், இலைகளும் அவனை முறைத்தப்படி நிற்க, பயந்தபடி இவள் பின்னாள் ஓடி ஒளிந்துக் கொள்வான் அவன். அவளிடன் உனக்கு என்னடா வேலை என்று மீண்டும் பெய்யத் தொடங்கும் மழை. முகத்தை வான் நோக்கி உயர்த்தி மழையை ரசித்தபடி நடப்பாள் அவள். முத்தாகிவிட வேண்டும் என்ற ஆசையில் அவள் மேல் விழும் மழைத்துளி.

இறுதியாய் கடலை அடைவார்கள். கரையில் நிற்கும் அவளை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு உயரமாய் எழும்பி வரும் அலைகள். கடலை உசுப்பிவிட, நான் முத்தமிடுகிறேன் பார் என்று கொட்டிவரும் மழை. மழையிலும் கரையாத ஐஸ்கிரீம் சிலை நீயென ஆச்சரியப்பட்டு போவான் அவன். ஆசையோடு ஒரு காலை மட்டும் அலையில் நனைப்பாள் அவள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியம் மட்டுமல்ல, எளிதானதும் என்றபடி கைகளில் ஏந்தி குடிப்பான் அவன். வெட்கத்தில் முகத்தை மூடுவாள் அவள். இவர்கள் காதலுக்கு குறுக்கே வர மனமின்றி நின்று போகும் மழை. சோகத்தில் அழுது அழுதே குடிநீரை மீண்டும் உப்பாக்கும் கடல். நமக்கு மட்டும் இனி என்ன வேலை? அவர்கள் காதலித்துப் போகட்டும். நாம் விடைபெறுவோம்.

Oct 7, 2009

புதிய பதிவர்களே!!! குரு உங்கள பார்க்கிறான்

52 கருத்துக்குத்து

 

   தமிழ் பதிவுலகம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் சமயத்தில்,  தினமும் பல புதிய பதிவர்கள் எழுத வந்துக் கொண்டிருக்கும் வேளையில், போட்டி அதிகமாகிக் கொண்டே போகும் நேரத்தில், **** காலத்தில், &&&&& கணத்தில், த்தில், தில் ல் ஸப்பா….. புதிய பதிவர்களுக்கு சில டிப்ஸ். அவ்ளோதாங்க விஷயம். பரிசல் இந்த வாரப் பதிவர் போடறாரு. நர்சிம் என்’ணங்களில் புதிய ஆளுங்கள பத்தி சொல்றாரு. அப்ப நாம என்ன செய்யலாம்னு யோசிச்சதில் உருவானது இந்த அரிய பதிவு. வகுப்புக்கு போகலாமா நண்பர்களே?

how-to-blog-blackboard-classroom_id785240_size485

முதல் ஸ்டெப்.(நாம என்ன கணக்கா போடறோம்?) பேரு வைக்கிறது. உங்க உண்மையான பெயரிலே வெற்றிக்கான கீ, அதாங்க சாவி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அந்தப் பெயரையே வைத்துக் கொள்ளலாம். அல்லது புனைபெயர் யோசிக்க வேண்டும். வலையுலகம் ஒரு கடல். அதில் நீந்த கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் ஹாயாக பரிசல் ஓட்டி ஜெயித்தவர் பரிசல்காரன். அதே போல் நீங்களும் கட்டுமரக்காரன், மோட்டர் போட்காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். பரிசல் எல்லாம் ஜுஜுபி. என் டார்கெட்டே வேற என்று நினைப்பவர்கள் ஸ்பீடு போட்காரன், அல்லது அவரவர் டார்கெட்டுக்கு ஏற்ப டைட்டானிக் வரைக்கும் பெயர் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் நகைச்சுவை திலகமா? காமெடி சும்மா காவிரி(கர்நாடகவில்) மாதிரி கரைபுரண்டு ஓடுமா? அப்ப பேரு வைப்பதில் சில சிக்கலுங்கோவ். ஏற்கனவே குசும்பன், நையாண்டி நைனா, குறும்பன்னு எல்லா பேரும் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுவிட்டது. கவலை வேண்டாம். சில்மிஷ சித்தப்பா, நக்கலு நடராஜு, கிச்சு கிச்சு கிரண், என்று பல பெயர்கள் என்வசம் இருக்கு. உங்க பேரை சொன்னா, சரியான அடைமொழியோடு நானே நாமகரணம் சூட்டுவேன்.

நீங்கள் மற்றவர்களை கலாய்க்க போகிறீர்கள் என்றால் மட்டுமே மேலே சொன்ன பெயர்கள். மற்றவர்களால் கலாய்க்கப்பட போகிறீர்கள் என்றால் வேறு சில பெயர்கள் உண்டு. உப்பு, சீனி, கறிவேப்பிலை என்பது போன்ற பெயர்கள் எளிதில் மற்றவர்கள் மனதில் ”சிக்கிட்டாண்டா ஒருத்தன்” என்ற நம்பிக்கையை தரும் என்று வரலாறு சொல்கிறது .

பேரு வச்சாச்சு? கடைக்கு வருபவர்களுக்கு சோறு வைக்கனும் இல்ல? அதாங்க பதிவு. என்ன எழுதலாம்? முதல் பதிவாக பிரபல, மூத்த,(அடைப்புக் குறிக்குள் ‘ர’ போட்டுக்கலாம்) பதிவர்களை திட்டி ஒரு பதிவு போடலாம். அல்லது, அப்போது வெளியாகும் ஏதாவது ஒரு படத்தை பொதுபுத்தியின் பார்வையில் இல்லாமல் வித்தியாசமாக யோசித்து பதிவு போடலாம். இதனால் நீங்கள் அறிவு ஜீவியாகவோ, அல்லது குறைந்தபட்சம் அறிவு மணிரத்னமாகவோ அடையாளம் காண்ப்படுவீர்கள். அப்புறம் என்ன? வித்தவுட்டில் நிற்கும் ரஜினி, ஆபாச நடிகர் சல்மான் கானின் அந்தரங்கம் என்று ஏதாவது “கேள்வி” கேட்கும் பதிவுகளாக போட்டு பிழைத்துக் கொள்ளலாம்.

எதுவுமே எழுத இல்லையா? அல்லது கோர்வையாக எழுத வரவில்லையா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு கலந்து கட்டி அடிக்கும் பதிவுகள். அவியல், காக்டெயில், கொத்து பரோட்டா, மிக்ஸ்ட் ஊறுகாய், கூட்டாஞ்சோறு போன்ற டைப் பதிவுகள் எழுதி காலத்தை ஓட்டலாம். ஜூவியில் இதை படிச்சேன். விஜய் டிவியில் அதைப் பார்த்தேன். நிலாவில் தண்ணி இருக்காம், அண்டார்டிக்காவிலும் ஊழல் இருக்காம்ன்னு நாலு மேட்டர கலக்கிட்டு, கடைசியா இவன் கவிதையை படிச்சேங்க. அட்டகாசம்ன்னு அடுத்தவன் கவிதை போட்டு முடிச்சிடலாம். வருபவன் எல்லாம் கவிதை நல்லா இருக்குன்னு டைப் பண்ண சோம்பேறித்தனப்பட்டு, நல்லா இருக்குன்னு மட்டும் போடுவாங்க. இந்த மாதிரி பதிவுக்கு பேரு தான் ரொம்ப முக்கியம். இப்ப டிமாண்ட் கூட. பயப்படாதிங்க. அதுக்கும் எங்கிட்ட சரக்கு இருக்கு. ”சைனா சரக்கும் சில சைடிஷ்களும்”, ”தொகையறாவும், பல்லவியும், சரணமும்” , ”நச்சுன்னு நாலு மேட்டர்” இப்படி பல இருக்குங்க.

எழுதும் போது பல பிரச்சினை வரும். (பல பேருக்கு எழுதுறதே பிரச்சினைதான்). அதில் முக்கியமானது ஸ்பெல்லிங் மிஸ்டேக். ”புண்ணியவான்”ன்னு போன பதிவுல சரியா எழுதி இருப்பிங்க. அடுத்த பதிவுல “புன்னியவான்” அப்படின்னு தெரியாம போட்டுடுவீங்க. யாராவது வந்து ”நேத்து சரியா எழுதின. இன்னைக்கு ஏன் குழப்பம்னு?” கேட்பாங்க. உடனே அசராம, இன்னைக்கும் “புண்ணியவான்” ன்னு எழுதினா இவன் ஒரே மாதிரி எழுதறான்னு சொல்லுவாங்க. அதான் டிஃப்ரென்ஸ் காட்றேன்னு சொல்லி சமாளிக்க தெரியனும். அது இல்லன்னா பின்னூட்டம் மட்டுமே போட்டு சூடு ஏத்துற ஜிமெயில் ஜின்னா, ஹாட்மெயில் அர்னால்ட் டைப் ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கனும்.

ரொம்ப பெருசா போதோ? அப்ப தொடரா போட்டுடுவோம். மற்ற டிப்ஸுகள் விரைவில்..

Oct 6, 2009

வேட்டைக்காரன் தீபாவளிக்கு வருமா?

40 கருத்துக்குத்து

 

       ஆதவன் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிப்பு. வேட்டைக்காரனை சமீபத்தில்தான் சன் பிக்சர்ஸ் வாங்கியது. ஆதவன் எப்போதோ தயார். வேட்டைக்காரனின் இன்னும் ஒரு பாடல் எடுக்கப்பட வேண்டும். தற்போது புனேவில் ஷூட்டிங்க் நடந்துக் கொண்டிருக்கிறது. விஜயதசமியன்று வேட்டைக்காரனின் பாடல் வெளீயீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என்று விளம்பரம் செய்தார்கள்.

அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. ஆதவனும், வேட்டைக்காரனும் ஒரே நாளில் வந்தால் ஒப்பனிங் வசூல் யாருக்கு குறையுமென்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஆதவன் தான் முதலில் தயாரானது. எனவே வேட்டைக்காரனை தாமதப்படுத்துவது என்று முடிவு செய்தது சன். ஆனால் ஆடியோவை வெளியிட்டு ரொம்ப நாள் தாமதப்படுத்துவது விஜய்க்கு பழக்கமல்ல. இதுவரை உதயா மட்டுமே அப்படி ஆகிப் போனது. மற்றப் படங்களெல்லாம் சில நாட்கள் வேண்டுமென்றால் தள்ளிப் போகுமே தவிர திட்டமிட்டப்படி முடித்துவிடுவார்கள். விஜயதசமியன்றே டிரெயிலரும் வெளியிடப்பட இருந்தது. ஆனால் ரீலீஸ் தேதிக்கு பல நாட்கள் முன்பே சன் டிவியில் போட ஆரம்பித்தால் அதன் தாக்கம் அதிகம் இருக்காது என்பதால் அதுவும் செய்யப்படவில்லை.

VK-20

   விஜயும் தற்போது வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணமும் உண்டு. பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சன் டிவி சக்ஸேனா படம் எப்போது வரும் என்று இளைய தளபதி அறிவிப்பார் என்று பேசினார். ஆனால், அவர்களாகவே ரிலீஸை தள்ளிப் போட்டுவிட்டு ஏ.வி.எம்மிடம் மட்டும் சொன்னதாக தெரிகிறது. ஏ.வி.எம்மை எதிர்த்து பேசவும் விஜய்க்கு மனமில்லை. ஆனால் ஏ.வி.எம் விஜயைப் பற்றி கவலைப்படாமல் அப்பாடா என்று  சாய்ந்துவிட்டார்கள். விஜய்க்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா?

2010 ஏப்ரலுக்கு தனது 50வது படம் சுறா என்று முடிவு செய்து முதல் கட்ட படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார் விஜய். தீபாவளிக்கு வேட்டைக்காரன் வராவிட்டால், பொங்கலுக்கோ கிறிஸ்துமஸ்க்கோ தான் வரும். தயாரிப்பாளர்களின் சமீபத்திய அறிக்கையின்படி பெரிய நடிகர்களின் படங்கள் விழாக் காலங்களில் மட்டுமே வர வேண்டும். அப்படி செய்தால் சுறாவுக்கும் ,வேட்டைக்காரனுக்கு இடைவெளி குறைவாகிவிடும். இப்படித்தான் 2005 தீபாவளிக்கு சிவகாசி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போதே 2006 பொங்கலுக்கு ஆதி வந்தது. ஆதியும் தோல்வியடைய, சிவகாசியின் வசூலும் சடாரென குறைந்தது. ஆதி வரவில்லையென்றால் சிவகாசி இன்னும் கொஞ்சம் காசு பார்த்திருக்கும். இதுதான் இப்போது விஜயின் தலைவலி.

இன்னுமமும் எப்படியாவது தீபாவளிக்கு வேட்டைக்காரனை வெளியிட வேண்டுமென்று விஜய் தரப்பு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது. சன் டிவியோ தயாரிப்பாளர்கள் முடிவை எப்படியாவது காலாவதியாக்கி, நவம்பர் முதல் வாரத்தில் வேட்டைக்காரனை வெளியிட முயற்சி செய்கிறது. வந்த காசை எண்ணுவதில் மும்முரமாக இருக்கிறது ஏ.வி.எம். இதுவரை இது போல் ஒரு பிரச்சினை விஜய்க்கு வந்தது இல்லை. ஏ.எம். ரத்னம், ஆர்.பி.செளத்ரி, அப்பச்சன் என எல்லா பெரிய தயாரிப்பாளர்கள் கூட விஜய் தான் ரிலீஸ் தேதியை முடிவெடுக்க வேண்டும் என்றே சொன்னவர்கள். ஏ.வி எம்மில் நடிக்க ஆசைப்பட்டதற்கு விஜய் தரும் கூலி சற்று அதிகம்தான்.

உன்னை நினைத்து, சூர்யா நடித்து விக்ரமன் இயக்கிய படம். அதில் முதலில் நடிக்க இருந்தவர் விஜய்தான். தன்னை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய விக்ரமனுக்காக ஒத்துக் கொண்டார். அதே சமயம் ஏ.வி.எம் தயாரிப்பு என்பதும் ஒரு காரணம். விஜய்க்கு ஏ.வி.எம் மீது ஏனோ ஒரு மயக்கம். ரஜினியை மாஸ் ஹீரோவாக்கியதில் ஏ.வி.எம்முக்கு பெரிய பங்கு உண்டு என்று யாராவது சொல்லியிருக்கக்கூடும். விக்ரமனோ, பிரியமான தோழியை மாதவனிடம் சொல்லி ஓக்கே வாங்கி அதை ஏ.வி.எம்முக்கு செய்ய நினைத்தார். விஜய், ஏ.வி.எம் என்பதாலே நடிக்க ஒத்துக் கொண்டேன். அவர்கள் இல்லையென்றால் காதல் கதை வேண்டாம். ஆக்‌ஷன் படம் சொல்லுங்கள் என்றாராம். கடுப்பான விக்ரமன் விஜயைப் பற்றி அவதூறாக பேட்டி கூட தந்தார். விஜய்க்கு ஏ.வி.எம்மில் படம் பண்ண ரொம்ப நாளாக ஆசை என்பதற்காக இந்த தகவல்.

எங்கோ போய் விட்டேனோ? மேட்டர் இதுதான். ஆதவனுக்காக வேட்டைக்காரனை தாமதபடுத்துகிறது சன் டிவி. ஆனால் வாங்கும் போது தீபாவளி ரிலீஸ் என்றே முடிவு செய்யப்பட்டது. சன்னிடம் பேச வேண்டிய ஏ.வி.எம் அடக்கி வாசிக்கிறது. முதல் முறையாக தயாரிப்பாளர்கள் பேச்சுக்கு ஆட வேண்டிய நிலையில் வேட்டைக்காரன் விஜய். பார்ப்போம். யார் ஜெயிக்கிறார்கள் என்று. தற்போதைய நிலவரப்படி நவம்பர் ஆறாம் தேதி வேட்டைக்காரன் வெளியாகுமென்று தெரிகிறது. விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி நமுத்து போன  ஒன்றாகிவிட்டது துரதிர்ஷ்டவசமே.

Oct 5, 2009

கார்க்கிக்கும் பேபி கிடைச்சாச்சு

37 கருத்துக்குத்து

 

DOY சோப் போட்டுதான் குளிப்பான் பப்லு. ஒவ்வொரு முறையும் விதவிதமான பொம்மைகள் வடிவத்தில் வாங்குவான். இந்த முறை சிங்கம். கவரைப் பிரித்தவன் என்னிடம் காட்டி சொன்னான், ”தூள் சோப்புடா. இத போட்டு குளிச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும் தெரியுமா?”

”சிங்கம் கடிச்சுடதாடா” என்றபடி சோப்பை வாங்கிய நான் கைத்தவறி கீழேப் போட்டுவிட்டேன்.

கோவத்துடன் முறைத்த பப்லு சொன்னார் “ தூள் சோப்புன்னுதான் சொன்னேன். நீ அத உடைச்சு சோப்பு தூள் ஆக்கிடுவியே”

!!!!!!!!!!!!!!!!

******************************************************

கூகிளில் சென்று “free online games” எனத் தேடி விளையாடுவது பப்லுவின் வழக்கம். என் லேப்டாப்பில் தமிழ் எழுத்தில் வர, எப்படி பப்லு என டைப் செய்வது என்று கேட்டான். சொன்னவுடன், கூகிளாண்டவரிடம் பப்லு என கேட்க, அவர் முதல் பதிலே என் பிளாக் பக்கம் கைக்காட்டி இருக்கிறார். வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பப்லுவைப் பற்றி நான் எழுதியதையும், பரிசல் ஆட்டோகிராஃப் வாங்கும் ஃபோட்டோவையும் காட்டி மகிழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் பப்லுவின் அப்பா, அவர் வளர்ந்த கதை, மம்மி யு.எஸ் போன கதையெல்லாம் சொல்லி, இப்படி பெரியாளாக வேண்டுமென்று அட்வைஸிக் கொண்டிருந்தார். யோசித்த பப்லு, கூகிளை திறந்த டேடி, மம்மி பெயரைப் போட்டு தேடினான். இவர்களுக்கு சம்பந்தமாக எதுவும் வரவில்லை. அடுத்து என்ன செய்திருப்பான் என்று சொல்லனுமா? அக்கா என பக்கம் திரும்புவதற்குள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

******************************************************

ஹோண்டா சிட்டி புக் செய்திருக்கிறார் பப்லுவின் அப்பா. ஞாயிற்றுக் கிழமை அன்று சும்மா ஒரு ரவுண்ட் போலாம் என்று ஷோருமூக்கு சென்று அப்போதுதான் ஷிப்பிங் ஆகி வந்திருந்த வண்டியில் கிளம்பினோம். தினமும் ஈவ்னிங் நீயும் நானும் ஒரு ரவுண்ட் போலாம்டா என்று என்னிடம் சொன்னான். எங்கடா போலாம் என்றேன். ”ஹோண்டா சிட்டில போய் போண்டாவா வாங்குவாங்க டாடி” என்றான். அவரும் ஏதோ ஒரு நினைப்பில் கரெக்ட் பப்லு. அதுக்கெல்லாம் எடுத்துட்டு போக கூடாது என்றார்.

அதான் டேடி. நாங்க பிட்ஸா ஹட்டுக்குதான் போயிட்டு வருவோம்

******************************************************

Image0055 

                                தல போல வருமா…

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங்க இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப் நீயும் என் டீம்தாண்டா என்றார். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்.

******************************************************

வினோத்(என் கஸின்), நான், பப்லு மூவரும் வேளச்சேரி Dominos pizza சென்றோம். Chicken mexican red wave, cheese burst எங்களுடைய ஒரே சாய்ஸ். ஆர்டர் எடுத்த பெண் அநியாயத்துக்கு க்யூட்டாக இருந்தார். நான் அவளை கவனிப்பதை, கவனித்த வினோத் “க்யூட்டா இருக்கால்ல” என்று காதில் கிசுகிசுத்தான். ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம். நேரமானதால் பப்லு  அக்காவிடம் போய் கேட்டான். அவர் feedback form கொடுத்து இத ஃபில் செய்ப்பா. அதுக்குள்ள வந்துடும் என்றார். இதுக்குள்ள அவ்வளவு பெரிய பிஸ்ஸா எப்படி வரும் என்ற பப்லுவை ஆச்சரியமாக பார்த்தார் அந்த அக்கா.

எல்லாவற்றிலும் excellent டிக் செய்துவிட்டு,மறக்காமல் என் ஃபோன் நம்பரையும் எழுதிவிட்டு “do you want to appreciate any specific person” என்ற இடத்தில் அக்காப் பெயரை எழுதலாம் என்று பப்லுவை போய் பேர் கேட்க சொன்னேன். அதெல்லாம் வேண்டாம் என்று கவரை மூடி ஒட்டிவிட்டான் பப்லு. நான் இழுக்க, அவன் இழுக்க ஃபார்ம் டர்ர்ர்ர்ர். பேனாவை மட்டுமாவது கொடுக்கலாம் என்று போனால், பார்ம்? என்றது க்யூட். வேற ஒரு ஃபார்ம் வாங்கிக் கொண்டு, ur name  என்றேன். வெள்ளைதாளில் Gezillaa  என்று எழுதி, its an odd name என்றபடி பேப்பரை நீட்டினாள். அவள் பெயருக்கு கீழே Karki  என்று எழுதி, நானும் ரவுடிதான் என்றேன். எல்லாவற்றிலும் excellent போட்டு, என் பெயருடன் ஃபோன் நம்பரையும் எழுதி கொடுத்து விட்டு வந்தேன். என் போர்ஷனும் காலி செய்துக் கொண்டிருந்தான் பப்லு. பரவாயில்லை என்று நிறைஞ்ச மனசோடு கிளம்பினோம்.

காரில் வரும்போது எதுக்கோ பப்லுவை நான் மிரட்ட, பதிலுக்கு பப்லு மிரட்டினான். பாட்டிக் கிட்ட சொல்லிடுவேன். நீ அந்த பொண்ணுகிட்ட “ I like u. Shall we go out” சொன்னேன்னு சொல்லிடுவேன் என்றான். பிட்ஸாதாண்டா சாப்பிட்டுக்கிட்டு இருந்த பிசாசு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, எப்போது இப்படி பெரிய ஆளாயிட்டான் பப்லு என்று யோசிக்க தொடங்கினான். வினோத் தன் கேர்ள் ஃப்ரெண்டை பேபி என்று அழைப்பதை ஒரு நாள் கேட்டுவிட்டான் பப்லு. வீட்டுக்குள் நுழைந்தவுடன் பப்லு கத்தினான் ” கார்க்கி மாமாவுக்கும் பேபி கிடைச்சாச்சு”

Oct 2, 2009

என்ன செய்யலாம் காந்தி ஜெயந்திக்கு?

32 கருத்துக்குத்து

 

  காந்தியடிகள் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் கண்களில் பட்டது அந்த அதிரடி செய்தி

” உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு உங்கள் **** டிவியில்  அர்ஜுன், நிலா, வடிவேலு நடித்த சூப்பர் ஹி திரைப்படம் மருதமலை

அப்புறம் என்ன மக்கா. வாங்க எல்லோரும் சொல்லுவோம்

ரகுபதி ராகவ ராஜாராம்

பசித்த பாவனா..த்ரிஷா..அசின்…

இப்படிக்கு,

டிவி பார்த்துக் கெட்டுப் போன காமன் மேன்.

Oct 1, 2009

நச்சுன்னு நாலு சினிமா மேட்டர்

42 கருத்துக்குத்து

  

Vairamuthu-Son-wedding-stills-2    வைரமுத்துவின் ஒரு மகன் பெயர் கபிலன். இன்னொருவர் மதன் கார்க்கி. ஆஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு முடித்து வந்தவர். அப்பா வழிக்கு வரமாட்டார் என்றே கணித்திருந்தேன். அவரும் நானும் சில ஆண்டுகள் முன்பு ஆர்குட் நண்பர்கள். இளமை இதோ இதோ என்ற படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறாராம். வரவேற்போம் கார்க்கியை. அதாங்க மதன் கார்க்கியை

என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூர மொழிகளில் வார்த்தை இல்லை

************************************************************************

Bharath_2

  அடுத்த தலைமுறை நடிகர்களில் என்னைக் கவர்ந்தவர்கள் ஜீவா, தனுஷ், பரத் மற்றும் பிரசன்னா. ஏனோ பரத் சமீபகாலமாக சொதப்புகிறார். அவர் வருங்காலத்தில் நல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக வர வாய்ப்பு உண்டு என்பதை பட்டியல் படத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன். ஆனால் அவசரப்படக்கூடாது இல்லையா? இன்னும் ஒரெ ஸ்டெடி ஒப்பனிங்கே இல்லாத நிலையில் பழனி,சேவல்,  ஆறுமுகம், திருத்தணி என வரிசை கட்டி அடிப்பது ஏன் என்று தெரியவில்லை. கந்தசாமிக்கும் அன்னியன், சிவாஜிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று சுசி சொன்னதை கேட்டே சிரித்துக் கொண்டிருக்கிறோம். இதில் பரத் சொல்வதைக் கேட்டால்.. பரத்தண்ணே, நீங்க அண்ணாமலை பார்த்திருக்கிங்களா?

“அண்ணே, ஏண்ணே அப்படி சொல்றீங்க? அது வேற, இது வேற. சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்ணியதால் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்திருச்சு. மற்றபடி இந்த கதையிலே அம்மா சென்ட்டிமென்ட் அதிகமா இருக்கும். அம்மாவோட சமாதிய இடிக்க வர்ற ஒரு வில்லியை அவன் ரோட்டுக்கு கொண்டு வர்றேன்னு சபதம் போடுறான். சொன்னபடி செய்யுறான். இதுல எங்கே அண்ணாமலைய பார்த்தீங்க?”

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது

************************************************************************

vettai_new-Stills

வேட்டைக்காரன் தீபாவளிக்கென்று இயக்குனர் சொல்லியிருந்தாலும் வருமா என்பது சந்தேகம்தானாம். ஆதவன் முன்பே தன் கர்சீப்பை போட்டு இடம் பிடித்து விட்டது. எனவே நேருக்கு நேரில் வந்த விஜயும், சூர்யாவும் இந்த தீபாவளிக்கு நேருக்கு நேர் வேண்டாம் என்று விரும்புகிறார்களாம் குருவி என்ற தோல்விப் படத்தைத் தந்த ரெட் ஜெயண்ட் ஆட்கள். ஆனால் அயன் என்ற வெற்றிப் படம் தந்த சன் மக்களோ விடலாமே என்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆஸ்திரேலியா செல்லவிருந்த வேட்டைக்காரன் குழு, வேகமாக முடிக்கலாம் என்று புனேவிலே எடுக்க நேற்று கிளம்பிவிட்டார்கள். படம் பார்த்த விஜய் தீபாவளிக்கு பண்ணுங்க, இல்லைன்னா பொங்கலில் அசலோட மோத விடுங்க. தனியா வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பாசிட்டிவாக இருக்கிறாராம்.

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்

இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்?

இவனுக்கு இல்லடா கடிவாளம்

இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்

************************************************************************

Spider_monkey_465x330

காஞ்சிவரம் படத்திற்கு பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர்  தேசிய விருது வாங்கியதில் தங்கர்பச்சானுக்கு என்ன கடுப்போ? வழக்கம் போல் உளறித் தள்ளுகிறார். நான்கு மலையாளிகள் தேர்வுக்குழுவில் இருப்பதால் தான் மலையாளி  பிரியதர்ஷன் இயக்கிய தமிழ்ப்படத்திற்கு ஒரு கன்னட நடிகனுக்கு விருது வழங்குவார்களா? சாதனா சர்கம் அழகி படத்துக்காக சிறந்த பிண்ணணி பாடகி விருது வாங்கிய போது, எந்த தமிழ் பாடகிக்கும் இவரது உச்சரிப்பு குறைந்ததல்ல என்ற தங்கர், இப்போது அந்த விருதும் அவர் வடநாட்டு பாடகி என்பதாலே கொடுக்கப்பட்டதாக சொல்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் இவன் மலையாளி, இவன் கன்னடன் என்று பிதற்றும் தங்கர் செய்ததென்ன?அழகியில் நந்திதா தாஸ். பின் தமிழ் நடிகைதான் நடிக்க வைப்பேன் என்றவர், நவ்யா நாயரிடம் சென்றார். குருவி குடைஞ்ச கொய்யாப்பழம் என்ற அழகிய பாடலை எடுத்தவர், குத்துப்பாட்டே இருக்ககூடாது என்றார். பின் கானா உலகநாதனின் ரோஸ் மேரி என்று குத்தாட்டம் போட்டார். தங்கருக்கெல்லாம் கும்பிபாகம் தான் சரி.

நேற்று என்பது முடிந்தது நினைவிலில்லை

நான் நாளைக்கு நடப்பதை நினைப்பது இல்லை

டமுக்..டமுக்..டமுக்கு டமுக்கு டம்மா

 

all rights reserved to www.karkibava.com