Sep 30, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

   ஜான் ஏறினால் முழம் சறுக்குதுன்னு சொன்னா, ஜானுக்குத்தானே சறுக்கணும்ன்னு கேட்பீங்க. அது மட்டுமில்லாமல் இது தமிழைப் பற்றிய விதயம் அல்லது விடயம் அல்லது விஷயம். அதனால் சாண் ஏறினால் முழம் சறுக்குதுன்னு சொல்லியே ஆரம்பிக்கிறேன். இப்படி ஆகி போச்சே. உலகத் தமிழ் மாநாட்டைத்தான் சொல்றேன். நண்பர்களிடையே பெரும் ஆதரவும், ஊக்கமும் கிடைத்ததை எண்ணி சப்பாத்திருந்தேன்.(பூரித்திருந்தேன் என்றுதான் எழுத நினைத்தேன். டயட்டில் இருப்பதால்..). இருந்தாலும் சில புது சகாக்கள் தனிமடலிலும், பின்னூட்டத்திலும் தந்த ஆதரவு, ஒன்றை மட்டும் சொல்லியது. பின்னூட்டம் இடாமல், பதிவு எழுதாமல் வாசிக்க மட்டும் செய்யும் நண்பர்கள்தான் வலையுலகில் அதிகம். தேவையான சமயங்களில் மட்டும் வெளிவரும் அவர்கள்தான் வலையுலகின் தூண்கள். நன்றி நண்பர்களே

*******************************************

என் நண்பன் ஒருவனின் காதலில் வந்த சிக்கலை எழுதி இருந்தேன் அல்லவா? என்ன ஆச்சு என்று பலர் கேட்டார்கள். எனக்கு என்ன பரிசலைப் போல ஏழே முக்கால் லட்சத்திற்கு சற்று கம்மியான வாசகர்களா இருக்கிறார்கள்? ரெண்டு பேருதான் அந்த பலர் என்பதை அறிக. அந்தப் பெண் உறுதியாக இருக்கிறார். நாளுக்கு நாள் அவர்களது நிபந்தனைகள் அதிகமாகி கொண்டே போகிறது. முதலில் இரு வழியிலும் திருமணம் என்றவர்கள் இப்போது இவன் சைடில் ரிசப்ஷன் மட்டும்தான் வைக்க வேண்டுமாம். அப்படி ஏண்டா தொங்கற என்று அனைவரும் கேட்கிறார்கள். நான் மட்டும் அவனுக்கு ஆதரவாக பேசி வருகிறேன். அவன் ஒன்றும் டீன் ஏஜில் இல்லை. எது சரி, எது அவன் தேவை  என்று அவனால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லையென்றால் அவனுக்கு எதுக்கு திருமணம்? சீக்கிரமே நல்லது நடக்கும் மச்சான்.

*******************************************

புதிய தலைமுறை இதழை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்னும் வாங்காதவர்கள் வாங்கி விடுங்கள். பெரிய பொக்கிஷம் இருக்கு அதில். இளைஞர்களுக்கான புத்தகம் என்றவர்கள் எந்த இளைஞர்கள் என்பதில் குழம்பி போயிருக்கிறார்கள். ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். CAT தேர்வைப் பற்றி சொல்லும் போது எந்த ஐ.டி கார்டை எடுத்த செல்ல வேண்டுமென்று பாடம் எடுக்கிறார்கள். அது கூடத் தெரியாமலா ஒருவன் தேர்வுக்கு தயாராகி இருப்பான்? இளைஞர்களுக்கு நாட்டு நடப்பு தெரிய வேண்டுமென்று அவசியமில்லை என்று நினைத்துவிட்டார்கள். இதே இதழை இன்னும் சில மாதங்கள் கழித்தும் வெளியிடலாம். எல்லாமே கட்டுரையாக இருக்கிறது. ஒரு நடிகையின் படம் கூட இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு பாராட்டலாம். இருந்தாலும் அந்த வழ வழ தாளில் ஸ்ருதியையோ, அனுஷ்காவையோ பார்த்தால்…

   அரசியலுக்கு இளைஞர்கள் ஏன் வருவதில்லை என்று ஒரு கட்டுரை. எனக்கு என்னவோ இன்னமும் அதே அளவில் இளைஞர்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. . அரசியலே மாறிவிட்டதால் அதன் வீச்சு தெரிவதில்லை. இதில் ஒரு உதாரணம். இரண்டு இளைஞர்கள். ஒருவர் வேலையில் சேருகிறார். இன்னொருவர் அரசியல். 40வது வயதில் வேலையில் சேர்ந்தவர் மேலாளர் ஆகி நல்லா இருக்காராம். அரசியல்வாதி வட்டத்துக்குள்ளே இருக்கிறாராம். அவர் வேலைக்கு சேர்ந்திருந்தாலும் அவர் அப்படித்தான் இருதிருப்பார். வேலைக்கு வரும் எல்லோரும் 40வது வயதில் பதவி உயர்வு பெற்று மேலே மேலே செல்ல முடியாது. அங்கேயும் அதே விகிதாச்சரத்தில்தான் மேலே செல்கிறார்கள். அரசியலோ, தொழிலோ, விளையாட்டோ, காதலோ, வாழ்க்கையோ, வேறு துறையோ எங்கேயும் ஒரே ஒரு மந்திரம் தான்.

SURVIVAL OF THE FITTEST.

சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(அப்படித்தான் ஆசிரியர் மின்மடலில் சொல்லியிருந்தார்) புகைப்படத்துடன் வந்திருக்கிறது.

*******************************************

நிறைய புதுப்பதிவர்கள், திரட்டிகள் வந்திருப்பதால் சென்ற வாரம் முழுமையாய ஒரு லுக் விட்டேன். ஒவ்வொரு வாரமும் சிறந்த பத்து பதிவுகள் என்று ஒரு தளத்தில் சுட்டி தந்தார்கள். நடிகை தமன்னாவின் அட்டகாச படங்கள் என்ற பதிவு அந்த டாப் டென்னில் ஒன்றாம். அதற்கு அந்த திரட்டியில் 15 வாக்குகளும், முன்னணியிலும் இருந்தது. ரைட் ஜூட் என கிளம்பினேன்.

*******************************************

உன்னைப் போல் ஒருவன் பார்த்துவிட்டேன். என்ன சொல்ல? basic instinct ல் இருந்து விஜய் டீவியின் கனா காணும் காலங்கள் வரை ஒவ்வொரு சீனும் காப்பியடித்திருக்கிறார்கள். தெரியாமல் இன்னும் என்ன என்ன செய்தார்களோ? இது போன்ற காட்சிகளால் நல்ல சீன்களில் கூட இது எங்க சுட்ட வடையோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.  ”அதான் இன்னும் ரெண்டு இருக்கு இல்ல” என்ற சந்தானபாரதியின் காமெடி(?) வசனத்தை ஒருவர் கூட ரசித்த மாதிரி தெரியவில்லை. மோகன்லாலுக்காக நிச்சயம் பார்க்கலாம். ஆனால் முதல்நாள் விமர்சனம் எழுதிய அ,ஜீகளுக்கு மிகச் சிறந்த தமிழ்ப் படமாய் தெரிந்தது போல் எனக்குத் தெரியவில்லை. லோ பட்ஜெட் படம் போல. கமல் கூட பழைய மாடல் டேட்டா கார்டைத்தான் (256kbps) உபயோகிக்கிறார். PHOTONPLUS(3Mbps) பற்றித் தெரியவில்லை இவர்களுக்கு. ஒரு வேளை wednesdayல் அதைத்தான் நஸ்ருதீன் ஷா பயன்படுத்தினாரோ?

38 கருத்துக்குத்து:

Anbu on September 30, 2009 at 11:57 AM said...

நல்லா இருக்கு அண்ணா..

Bleachingpowder on September 30, 2009 at 12:16 PM said...

// பின்னூட்டம் இடாமல், பதிவு எழுதாமல் வாசிக்க மட்டும் செய்யும் நண்பர்கள்தான் வலையுலகில் அதிகம்//

நான் கூட இந்த லிஸ்ட்ல வந்துட்டேன் தல :((, ஆபிஸ்ல client networkல ப்ளாக்குக்கு ஆப்பு வச்சுட்டாங்க, google readerல தான் படிச்சிட்டு இருக்கேன்

சரவணகார்த்திகேயன் சி. on September 30, 2009 at 12:17 PM said...

//கமல் கூட பழைய மாடல் டேட்டா கார்டைத்தான் (256kbps) உபயோகிக்கிறார். PHOTONPLUS(3Mbps) பற்றித் தெரியவில்லை இவர்களுக்கு.//
s
The one which kamal uses in UPO is also a wireless broadband device of speed 3.1 Mbps from Reliance. It's model - ZTE AC871.

Reference: http://www.rcom.co.in/Communications/rcom/RNetconnect/netconnect_broadband_device.html

சுசி on September 30, 2009 at 12:19 PM said...

காக்டெயில் கலக்கல் கார்க்கி.

நீங்க பொக்கிஷத்த பத்தி சொல்லிட்டீங்க இல்ல. இன்னைக்கு தலைமுறை விற்பனை பிச்சுக்க போது.

//இருந்தாலும் அந்த வழ வழ தாளில் ஸ்ருதியையோ, அனுஷ்காவையோ பார்த்தால்…//

உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது....

Anonymous said...

//சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(//

வாழ்த்துக்கள் கார்க்கி

யோ வாய்ஸ் (யோகா) on September 30, 2009 at 12:31 PM said...

சகா மிஸ்டர் ஜான் ஏறுனால் மிஸ்டர் முழத்துக்கு சறுக்குமா?

வெண்பூ on September 30, 2009 at 12:38 PM said...

புதிய தலைமுறையில் பேட்டிக்கு வாழ்த்துகள் கார்க்கி..

//
முதல்நாள் விமர்சனம் எழுதிய அ,ஜீகளுக்கு மிகச் சிறந்த தமிழ்ப் படமாய் தெரிந்தது போல் எனக்குத் தெரியவில்லை.
//
ஹி..ஹி.. என்னை அ.ஜீ.ன்னு சொன்னதற்கு நன்றி.. உங்க ஆளை அவரு கிண்டலடிச்சதுனாலகூட உங்களுக்கு அந்த படம் புடிக்காம இருக்கலாம். அது மட்டும் இல்லாம இவ்ளோ விமர்சனம் படிச்சிட்டு போனா கண்டிப்பா படம் பிடிக்காது. அதனாலதான் நானே ரெண்டாவது தடவை படம் பாக்கலாம்னு நினைச்சவன்கூட இப்ப வேணாம்னு இருக்கேன் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் on September 30, 2009 at 12:39 PM said...

போன ஞாயிறு பு.த. வாங்கி பொக்கிஷத்தைப் பாதுகாக்கிறேன். ஆனால் பேட்டி என்பதெல்லாம் டூ மச் :)

அப்புறம், ஒரு நாலு வருஷம் முன்னாடி எடுத்த படமா சகா :)

Varadaradjalou .P on September 30, 2009 at 12:39 PM said...

//சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(//

வாழ்த்துக்கள்

நர்சிம் on September 30, 2009 at 12:42 PM said...

// சுசி said...
காக்டெயில் கலக்கல் கார்க்கி.

நீங்க பொக்கிஷத்த பத்தி சொல்லிட்டீங்க இல்ல. இன்னைக்கு தலைமுறை விற்பனை பிச்சுக்க போது.
//

சின்ன அம்மிணி said...
//சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(//

வாழ்த்துக்கள் கார்க்கி
//

வாழ்த்துகள் சகா.

நர்சிம் on September 30, 2009 at 12:43 PM said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
போன ஞாயிறு பு.த. வாங்கி பொக்கிஷத்தைப் பாதுகாக்கிறேன். ஆனால் பேட்டி என்பதெல்லாம் டூ மச் :)

அப்புறம், ஒரு நாலு வருஷம் முன்னாடி எடுத்த படமா சகா :)
//

வனவாசம்.

கார்க்கி on September 30, 2009 at 12:49 PM said...

நன்றி அன்பு

ப்ளீச்சிங், நினைச்சேன் சகா. நீங்கதான் வல்லவருன்னு மறுபடியும் பாடாவதி புராஜக்ட்டா?அய்ய்யோ பாவம்ம்ம்ம்ம்:))

நன்றி சரவண கார்த்திகேயன். என்னுடைய மாடலும் இதே மாதிரிதான்.ஆனால் 256kbps.. வெள்ளை நிற மாடல் மட்டுமே 3.1ஸ்பீடு என்று நினைத்துவிட்டேன்.:))

நன்றி சுசி. இன்னும் அவர்களுக்கு இணையத்தளம் வரவில்லை என நினைக்கிறேன்

நன்றி அம்மிணி.. ஹிஹி புத்தகம் பார்த்தால் வாழ்த்துகளை வாப்ஸ் வாங்கிக் கொள்வீர்கள்

யோகா, ஜானிடம் கேளுங்களேன் :))

வெண்பூ, நீங்களும் முதல் நாளே போட்டிங்களா? ஆவ்வ்வ்வ்..எங்காள அவரு கிண்டலடிக்கல. அது எல்லா நடிகர்களையும், கமல் உட்பட, டேமேஜ் பண்ணும்.நீங்க சொன்ன காரணம் கூட இருக்கலாம். அபப்டி இல்லையென்றாலும் இது ஒன்னும் டாப் கிளாஸ் படமல்ல என்பதே என் கருத்து

சுந்தர்ஜி, அடைப்புக்குறிக்குள் இருந்ததை பார்த்துமா இந்தக் கேள்வி?உங்க கணிப்பு மிகச்சரி. :)))

நன்றி வரதாரஜலூ

***************

மக்களே, அவசரப்பட்டு வாழ்த்தாதிங்க. புத்தகத்த பார்த்துட்டு சொல்லுங்க :))

மங்களூர் சிவா on September 30, 2009 at 12:49 PM said...

/
Anbu said...

நல்லா இருக்கு அண்ணா..
/

ரிப்பீட்டு !

குசும்பன் on September 30, 2009 at 12:56 PM said...

சரி அந்த பொக்கிஷம்? என்னுடையப் பேட்டி(அப்படித்தான் ஆசிரியர் மின்மடலில் சொல்லியிருந்தார்) புகைப்படத்துடன் வந்திருக்கிறது. //

சூப்பர் வாழ்த்துக்கள்!

ஜெட்லி on September 30, 2009 at 12:58 PM said...

//ஒரு வேளை wednesdayல் அதைத்தான் நஸ்ருதீன் ஷா பயன்படுத்தினாரோ?
//

அப்படியே ஹிந்தி படத்தை அட்டை காப்பி.....
அதுவும் கடைசி காட்சியில் கமலை மாமேதை
என்று புகழ்கிறார்கள்.....என்னத்த சொல்ல....

தமிழ்ப்பறவை on September 30, 2009 at 1:14 PM said...

வழக்கம்போல் இல்லாமல் கொஞ்சம் சீரியஸ் காக்டெயில்...
உ.போ.ஒ என் பார்வையும் இதுதான்...
மொக்கைப் படங்களுக்கு இடையில் இது போல் ஓரளவுக்கு நல்ல படம் வந்ததால் இவ்வளவு வரவேற்பு.படத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை...
இதேதான் ‘நாடோடிகள்’ விஷயத்திலும் நடந்தது..இனிமேலாவது விமர்சனம் படிக்காம படம் பார்க்கணும்...’ஈரம்’ பார்த்தாச்சா..? பரவாஇல்லை நல்லாவே இருந்தது சகா...

சித்து on September 30, 2009 at 1:21 PM said...

அப்ப அந்த தூண்களில் நானும் ஒருவனோ?? காக்டைல் போதை கம்மி, ரொம்ப காட்டா இருக்கு CARKEY.

தராசு on September 30, 2009 at 1:40 PM said...

// உன்னைப் போல் ஒருவன் பார்த்துவிட்டேன்.//

விடு மாமு, ஏற்கெனவே ஜீப் நிறைஞ்சு, அவனவன் கூரைல உக்கார்ந்து போயிகிட்டிருக்கான், இதுல நீயும் வேறயா?????

கார்ல்ஸ்பெர்க் on September 30, 2009 at 1:55 PM said...

படத்துல கமல் Photon Plus Card'a யூஸ் பண்ணினா அப்பறம் நீங்க அவர Common Man'ன்னு ஒத்துக்க மாட்டீங்களே??

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 30, 2009 at 2:17 PM said...

"பேட்டிக்கு வாழ்த்துக்கள்"

சகா, வழக்கம் போல் இந்த காக்டெயில் இல்ல.

மொத்தத்தில்
"வோட்கா மார்டினி நாட் ஸ்ட்டிர்ட், நாட் ஷேக்கன்"

பாண்டி-பரணி on September 30, 2009 at 2:22 PM said...

சகா வாழ்த்துகள்
ஆனா புக்கு சுவரசியம் கம்மி தான்

அப்புறம் உங்க வயசு 24 நம்ப முடியல

பிரபாகர் on September 30, 2009 at 2:34 PM said...

சகா,

அப்படியே நமக்கும் ஒரு புக்க வாங்கி அனுப்பறது! படிச்சி தெரிஞ்சிக்குவோம்ல!

(வடிவேல் ஸ்டைல்ல படிக்கவும்)

வாழ்த்துக்கள் சகா... படிக்கலல்ல... தைரியமா சொல்ல்லாம்...

பிரபாகர்.

ஸ்ரீமதி on September 30, 2009 at 2:35 PM said...

:))))

யுவகிருஷ்ணா on September 30, 2009 at 3:16 PM said...

உங்களது பேட்டி :-) பத்திரிகையில் வந்தமைக்கு வாழ்த்துகள்! :-)

வித்யா on September 30, 2009 at 4:01 PM said...

:))

அன்புடன் அருணா on September 30, 2009 at 5:49 PM said...

:)

டம்பி மேவீ on September 30, 2009 at 6:44 PM said...

enakkum varutham thaan karki....


june july aachum nadakkutha entru parpom

டம்பி மேவீ on September 30, 2009 at 6:46 PM said...

"Bleachingpowder said...
google readerல தான் படிச்சிட்டு இருக்கேன்"


naan niraiya blog appadi than padikkuren.... comment poda than neram illai

டம்பி மேவீ on September 30, 2009 at 6:47 PM said...

"சரவணகார்த்திகேயன் சி. said...
//கமல் கூட பழைய மாடல் டேட்டா கார்டைத்தான் (256kbps) உபயோகிக்கிறார். PHOTONPLUS(3Mbps) பற்றித் தெரியவில்லை இவர்களுக்கு.//
s
The one which kamal uses in UPO is also a wireless broadband device of speed 3.1 Mbps from Reliance. It's model - ZTE AC871.

Reference: http://www.rcom.co.in/Communications/rcom/RNetconnect"


karki unga knowledge yai update pannikka vendiya neram vanthuruchu

டம்பி மேவீ on September 30, 2009 at 6:48 PM said...

"அன்புடன் அருணா said...
:)"


ithukku periya repeatu.......

payapulla on September 30, 2009 at 8:01 PM said...

கார்க்கி, முதல் முறையா பின்னூட்டம் போட்டாச்சு...அப்போ நான் வலையுலக அடிதளமா? konjam sollunga.‍
-பயபுள்ள

சரவணகுமரன் on September 30, 2009 at 8:56 PM said...

உன்னைப்போல் ஒருவனில் நல்லா லாஜிக் கவனிச்சிருக்கீங்க... ஆதி, குருவில கண்டுப்பிடிச்ச மாதிரி... :-)

Romeoboy on September 30, 2009 at 9:30 PM said...

என்ன சகா காக்டெயில் ரொம்ப காரமா இருக்குது..

LOSHAN on September 30, 2009 at 11:06 PM said...

முதலில் வாழ்த்துக்கள் சகா..
பேட்டி வராவிட்டால் தான் அது செய்தி..

//எது சரி, எது அவன் தேவை என்று அவனால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லையென்றால் அவனுக்கு எதுக்கு திருமணம்?//

:)


//நடிகை தமன்னாவின் அட்டகாச படங்கள் என்ற பதிவு அந்த டாப் டென்னில் ஒன்றாம். அதற்கு அந்த திரட்டியில் 15 வாக்குகளும், முன்னணியிலும் இருந்தது. ரைட் ஜூட் என கிளம்பினேன்//

:) டாப் டென்???

//முதல்நாள் விமர்சனம் எழுதிய அ,ஜீகளுக்கு மிகச் சிறந்த தமிழ்ப் படமாய் தெரிந்தது போல் எனக்குத் தெரியவில்லை//

விஜய் ரசிகர் ஒருவரிடமிருந்து வரக்கூடிய விமர்சனம் தான்.. வாழ்க கார்க்கி..:)

பித்தனின் வாக்கு on October 1, 2009 at 8:45 AM said...

இம்ம் என்ன சொல்ல அது வந்து வந்து வந்து நானும் பின்னூட்டம் போட்டுட்டன் ஒகே வா.

கார்க்கி on October 1, 2009 at 9:53 AM said...

வந்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

@பயபுள்ள,

இது கணக்கில் வராது சகா. நீங்க தூண்தான் :))

//சரவணகுமரன் said...
உன்னைப்போல் ஒருவனில் நல்லா லாஜிக் கவனிச்சிருக்கீங்க... ஆதி, குருவில கண்டுப்பிடிச்ச மாதிரி.//

சரவணகுமரன், எத்தனை தடவை சொல்வது சகா? ஆதி, குருவில லாஜிக் தேடறவன் தான் முட்டாள். என்னைக்காவது அந்த மாதிரி படங்கள் நல்ல படஙக்ள் என்று நான் சொல்லி இருக்கேனா? அது டைம்பாஸ். அவ்வளவுதான்.கமல் மாதிரி விஜய் தன்னை தமிழ்சினிமாவை மாற்றியமைத்தவன், உலகநாயகன் என்று சொல்லிக் கொள்வதில்லையே!!! அதே உதாரணம் தான். முனியாண்டி விலாஸில் மட்டன், சிக்கன் ஏன் கரப்பான் பூச்சி கூட இருக்கலாம். சரவனபவனில் இருக்கலாமா?

//விஜய் ரசிகர் ஒருவரிடமிருந்து வரக்கூடிய விமர்சனம் தான்.. வாழ்க கார்க்கி..://

மேலே இருக்கும் பதில்தான் சகா. ஆனா கந்தசாமி சூப்பர்ன்னு எழுதிய உஙக்ளுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

Karthik on October 1, 2009 at 1:31 PM said...

பேட்டி அருமையாக இருந்தது. அதிலும் அந்த 7ம் கேள்விக்கான பதில்.. ச்சே சான்ஸ்லெஸ்! ;)))

ஆதிமூலகிருஷ்ணன் on October 2, 2009 at 6:05 PM said...

பேட்டி ஒரு கேள்வின்னாலும் உருப்படி. அனேகமா பதில் நீ எழுதியிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். ஏன்னா பதில் நலாயிருந்ததே.!

basic instinct ல் இருந்து விஜய் டீவியின் கனா காணும் காலங்கள் வரை ஒவ்வொரு சீனும் காப்பியடித்திருக்கிறார்கள்.//

சீன் பை சீன் வெட்னஸ்டேயின் மறுபதிப்பு. ஒருவேளை அவங்க கனாகாணும் காலங்கள் பார்த்திருப்பாங்களோ? இருக்குமா இருக்கும்.

 

all rights reserved to www.karkibava.com