Sep 29, 2009

அனிதா காலிங்..


  

   பாதி வரை எரிந்து சாம்பலான சிகரெட்டின் முனை போல சுருண்டு கிடந்தான் மதன்.  புதிதாய் மாற்றி அமைக்கப்பட்ட சைடு அப்பர் அவனுக்கு தோதாக இல்லை. மேலும் ரயிலின் தடக் தடக் சத்தத்தை அவனது இதய துடிப்பு வெல்வதையும் அவன் விரும்பவில்லை. தெலுங்கில் ஏதோ சொல்லிக் கொண்டே கைகளை மேலே தூக்கிய பிச்சைக்கரானின் குடுவைக்குள் தன்னையே போட முடியுமா என்று எட்டிப் பார்த்தான். இடது கையில் கெட்டியாய் பிடித்திருந்த செல்ஃபோன் மீது கண் பட்டதும் உள்ளிழுத்துக் கொண்டான்.

  இன்னும் வரவில்லை அழைப்பு. துல்லியமாய் தெரிந்த TFT displayல் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மது. அந்த வசீகர சிரிப்பையும் மீறி இடது ஓரத்தில், இந்திய பொருளாதாரம் போல மேலும் கீழும் ஏறி இறங்கும் டவரையே வெறித்துக் கொண்டிருந்தான். சிக்னல் கிடைக்காமல் போகும் சமயங்களில் தட்டிப் பார்த்தான். அது கோவத்தின் வெளிப்பாடா அல்லது நோக்கியா இணையதளத்தில் கொடுக்கப்பட்ட டிப்ஸா எனத் தெரியவில்லை. மணி 12ஐ தாண்டி இருந்தது.

“Send me SMS if i am not reachable" .

  sent items ல் இருந்த அதே மெசேஜை பத்தாவது முறையாக ஃபார்வர்ட் செய்தான். “Message sent"  என்று சொல்லி தன் மீது எந்த தவறும் இல்லை என வாக்குமூலம் தந்தது ஏர்டெல் சேவை. மீண்டும் sent itemsக்கு சென்று மதுவிற்குத்தானே அனுப்பினோம் என்று தன் பக்க நியாயத்தை உறுதி செய்து கொண்டான். காரணமே இல்லாமால் அந்த நடு இரவில் இறங்கி சென்று சார்ஜ் செய்தான். ஐந்தே நிமிடத்தில் Battery full என்று காட்டியது. தூக்கம் வராமல் முன்தினம் நடந்ததை மெல்ல அசைப் போட்டான்.

மது.

என்ன?

நான் வேற ஒன்னும் கேட்கல. அடிக்கடி ஃபோன் செய். அது போதும்.

புரிஞ்சிக்கோ மதன். என்னால் முடியறப்ப கண்டிப்பா செய்றேன்.

நான் என்ன அரை மணி நேரமா பேச சொல்றேன் ஜஸ்ட் 2 மினிட்ஸ்.

ம்ம்.. சரி.

முடியலன்னா ஒரு எஸ்.எம்.எஸ். அவ்ளோதாம்ப்பா.

ம்ம்

என்ன. எல்லாத்துக்கும் ம்ம் னு சொன்னா என்ன அர்த்தம்?

கிளம்பறீயா? ட்ரெய்னுக்கு டைம் ஆச்சு.

ட்ரெய்னிக்குத்தானே ஆச்சு. எனக்கு இல்லையே.

ஜோக்கா? Be serious மதன். ஒழுங்கா போய்ட்டு வா.

எனக்கு போகவே பிடிக்கல. ஒரு மாதிரி இருக்குடா.

எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன். (வேகமாக நடந்தாள்)

ப்ளீஸ். கால் பண்ண மறக்காத. அது மட்டும் போதும். (கத்தினான்)

   இரண்டு கைகளிலும் இருந்த லக்கேஜ் அவன் கண்களை துடைக்க இடைஞ்சலாய் இருந்தது. அது மட்டுமல்ல நகரத் தொடங்கிய ரயிலிலும் ஏறும்போதும் தொல்லை தந்தது. பெர்த்தை கண்டுபிடித்து பைகளை வைத்துவிட்டு Compose செய்தான்.“Send me SMS if i am not reachable". அப்போதுதான் முதல் முறை அந்த புறா பறந்தது.

விடியலை அறிவிக்க வந்த சூரியன் மதனைக் கண்டு ஹாய் சொல்லிப் போனது. அப்போதும் அந்த வசீகர சிரிப்பிலே மூழ்கி கிடந்தான் மதன். இறங்குமிடம் வந்ததும் போர்ட்டரை தேடினான். இந்த ரெண்டு சின்ன பைக்கு போர்ட்டரா என்று யாரும் இவனை கவனிக்கவில்லை. முதுகில் ஒன்று, இடது கையில் ஒன்றுமாய் ஆக்கிக் கொண்டு, வலது கையில் அலைபேசியை பார்த்தபடி நடக்க தொடங்கினான். அவ்வபோது 121க்கு அழைத்து லைன் க்ளியர் என்பதை உறுதி செய்து கொண்டான்.

லாட்ஜ் வேணுமா சார்? ஏ.சி இருக்கு என்றவனிடம் , அந்த லாட்ஜில் ஏர்டெல் சிக்னல் கிடைக்குமா என்று வினவினான். ஒரு வழியாய் அறைக்குள் வருவதற்குள் அரை நாள் முடிந்து விட்டது. கால் இன்னும் வரவில்லை. குழப்பமாய் அலைந்தவன் ஒரு பாட்டிலை முடித்த நேரம் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தான். ஏனோ சில நிமிடங்களிலே மீண்டும் குழப்பமாய் அலையத் தொடங்கினான். சில மணி நேர அவஸ்தைக்குப் பின் டைரியைத் திறந்து எழுதத் தொடங்கினான்.

செய்வதென முடிவாகிவிட்டது.
எதைக் கொண்டு
என்பதில் தொடங்கியது
சில குழப்பங்கள்.
துப்பாக்கிகள்
எளிதில் கிடைப்பதில்லை.
பர்மா பஜார் கத்திகள்
100% வெல்வதில்லையாம்.
அருவிகள் தேடிச் செல்ல
நேரமில்லை.
என்ன செய்துவிடும் கயிறு?
சாக துணிந்தவனுக்கு
இதெல்லாம்
ஒரு வலியா
என்று நினைத்த நேரத்தில்
ஒலித்தது அலைபேசி

“Anitha calling"...

28 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on September 29, 2009 at 10:27 AM said...

நல்லா இருக்கு...

விக்னேஷ்வரி on September 29, 2009 at 10:34 AM said...

வர வர மீள்பதிவுகள் அதிகமாகுது.
???

யாழினி on September 29, 2009 at 10:56 AM said...

நல்லா இருக்கு...

அன்புடன் அருணா on September 29, 2009 at 11:22 AM said...

ஏற்கெனவே படிச்சாச்சு!

பித்தன் on September 29, 2009 at 11:32 AM said...

என்னா நைனா இது போஜாரா கீது, போனுல பேசுலனா தற்கொலையா, படா கதைவுடைறியே. அப்பால ஃபிகர் டகிலு ஆகிறுச்சுனா எஸ் ஆகிடுவா அது மட்டும் என்னா சொல்ல? நம்ப கையில காதுகுத்தற மாதிரி கதைவுடாத நைனா. இந்த பூச்சாண்டி எல்லாம் இம்மாம் பார்த்துருப்பம்.

முரளிகுமார் பத்மநாபன் on September 29, 2009 at 12:19 PM said...

நல்லா இருக்கு சகா..... கதையின் கரு பிடிபடவில்லை ஆனால் எழுத்தில் புத்திசாலித்தனம் கொப்பளிக்கிறது. :-)

susi on September 29, 2009 at 12:24 PM said...

நல்ல(லா) கதை (விடறீங்க)

♠ ராஜு ♠ on September 29, 2009 at 12:38 PM said...

மீள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

அமுதா கிருஷ்ணா on September 29, 2009 at 12:44 PM said...

நல்லாயிருக்கட்டும் அனிதா....

rajan RADHAMANALAN on September 29, 2009 at 12:49 PM said...

பிகர் மடிக்கறதெல்லாம் ஒரு மேட்டரா மச்சான்... இதே நானா இருந்தா என்ன செஞ்சிருப்பேன் தெரியுமா?
மச்சான் நீ கேளேன்!!!

கார்ல்ஸ்பெர்க் on September 29, 2009 at 12:57 PM said...

அண்ணா, அனிதா யாரு? மதன் தங்கச்சியா??

pappu on September 29, 2009 at 1:30 PM said...

மீள் பதிவ்ஸ்? ஏதாவது மாடிஃபிகேஷன் பண்ணியிருக்கீங்களா?

Anonymous said...

மது, மதன், அனிதா???

கார்க்கி on September 29, 2009 at 1:57 PM said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி விக்கி. கண்டுபுடிச்சிட்டிங்களா? ஹிஹி

நன்றி யாழினி

நன்றி டீச்சர் :))

என்னப்பா பித்தா, மெர்சில ஆகாதப்பா.. அல்லாமே இப்பிதான்

நன்றி முரளி.

நன்றி சுசி. கதைதான்

டம்ப்ரீ ராஜூஊஊஊஊஊஊஊ

நன்றி அமுதா மேடம். :))

ராஜன், நல்ல வேளை மதன்கிட்ட சொல்லாம விட்டிங்களே

கார்ல்ஸ்பெர்க், அபப்டியும் வச்சிக்கலாம். முடிவு உங்க கையில்

பப்பு, உஷாருப்பா நீ. அதெலாம் ஒன்னும் பண்ணல

நன்றி அம்மிணி.. என்ன கேள்வி இது?

யோ வாய்ஸ் (யோகா) on September 29, 2009 at 2:31 PM said...

நல்ல முடிவு.

ஆதிமூலகிருஷ்ணன் on September 29, 2009 at 3:39 PM said...

கதை சுமார்.! (பழைய கமெண்டை தேடி எடுத்துப்போட்டு மடக்கவேண்டாம். அப்போ என்ன போட்டேன்னு நியாபகமில்லை.. ஹிஹி)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 29, 2009 at 3:47 PM said...

உள்ளேன் சகா.

சிங்கக்குட்டி on September 29, 2009 at 4:35 PM said...

நல்லா இருக்கு :-))

கலையரசன் on September 29, 2009 at 5:04 PM said...

எனக்கு அனிதா காலிங்.. அனிதா டார்லிங் மாதிரியே இருக்கு!!

வித்யா on September 29, 2009 at 7:48 PM said...

:)

ராஜராஜன் on September 29, 2009 at 11:09 PM said...

சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்லையோ ??

தமிழ்ப்பறவை on September 30, 2009 at 1:46 AM said...

மீள் பதிவு... :-) (முன்னாடியே படிச்சாச்சுல்ல)

T.V.Radhakrishnan on September 30, 2009 at 2:32 AM said...

;-)))

பட்டிக்காட்டான்.. on September 30, 2009 at 4:35 AM said...

முடிவுல சுவாரசியம் இல்லாத மாதிரி தோணுதுங்க..

தமிழினி on September 30, 2009 at 7:01 AM said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

கார்க்கி on September 30, 2009 at 10:29 AM said...

நன்றி யோவாய்ஸ்..

ஆதி, சிறுகதை பட்டறை தங்களை செப்பனிட்டுவிட்டது. அப்போது ரொம்ப சூப்பர் என்று சொல்லி இருக்கிங்க

பாலகுமாரன், ரைட்டு

நன்றி சிங்கக்குட்டி

கலை-அனிதா. நல்லாத்தான் இருக்குப்பா

நன்றி வித்யா

ராஜராஜன் ஹிஹிஹி

ஆமாம் பறவை. நீங்களாம் எல்லாமே படிக்கிறீங்க. இது மிஸ் பண்ணுவஙக்ளுக்கு(யாரும் தப்பிச்சிட கூடாது இல்ல ஹிஹிஹி)

நன்றி டீ.வி.ஆர் ஜி

ஆமாம் பட்டிக்காட்டான். இப்ப படிச்சா எனக்கும்..

மங்களூர் சிவா on September 30, 2009 at 2:29 PM said...

போன் வராம இருந்திருந்தா முடிவு சுவாரஸ்யமா இருந்திருக்கும் போல
:))))

நான் இப்பதான் முதல்முறையா படிக்கிறேன்.

Anonymous said...

வணக்கம் நண்பரே...
உங்கள் கதைகள் மற்றும்
நீங்கள் கதை எழுதும் நடை..
அருமை...

வாழ்த்துக்கள்...

நட்புடன்
சின்னா.

 

all rights reserved to www.karkibava.com