Sep 28, 2009

உலகத் தமிழ் மாநாடு - கோவையிலாம்


 

   உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடக்கவிருப்பது நாம் அறிந்ததே. மாநாடு என்றால் என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு அம்மையார் ஆட்சியில் தஞ்சையில் நடந்த போது சென்றிருக்கிறேன். அப்போது நான் ரொம்ம்ம்ம்ம்ம்ப சின்னப்பையன் என்பதால் சரியாக ஞாபகமில்லை. விஷயம் அதுவல்ல. இந்த மாநாட்டில் நாம், அதாங்க பதிவர்கள் என்ன செய்ய முடியும்? எனக்கு தோன்றிய சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறேன். சரிவருமா என்று சொல்லுங்கள். அப்படியே உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள். ஏதாவ்து செய்ய முடியுமா என்று பார்ப்போம்.

1) முதல் விஷயம். மேடையில் வலையுலகம் பற்றி பேச நமக்கு வாய்ப்பு கிடைத்தால்? தொழில்நுட்ப அறிவும் பேச்சாற்றலும் கொண்டவர் யாராவது வலைப் பற்றியும், வலைப்பூக்கள் பற்றியும் பேசலாம். வெகுசன ஊடகங்களுக்கு நல்லதொரு மாற்று என்பதை விளக்க வேண்டும். இதன் சாதக அம்சங்கள், தற்போதைய வளர்ச்சி மற்றும் வலைஞர்கள் குறித்து விளக்கலாம். கோவையில் இருப்பவர் என்பதும், நல்ல பேச்சாற்றலும் உடையவர் என்பதாலும் எனக்கு செல்வேந்திரன் பெயர் உடனடியாக ஞாபகம் வந்தது. என்ன சொல்றீங்க செல்வா? இதற்கு அனுமதி வாங்கும் முறைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அப்துல்லா உதவுவதாக சொல்லியிருக்கிறார். அவரால் முடியும்.

2) மேடை வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் என்ன? வழக்கமாக இது போன்ற மாநாட்டில் ஸ்டால்கள் போடுவார்கள் அல்லவா? ஒரு தட்டியுடனோ ஃபெளெக்ஸ் பேனர்களுடனோ ஒரு ஸ்டால் போடலாம். மேடையில் சொல்ல வேண்டிய தகவல்களை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடம் சேர்க்கலாம். மடிகணிணி மற்றும் டேட்டா கார்டு மூலம் அங்கேயே வரும் நண்பர்களுக்கு  விளக்கலாம். நான் என் கணிணியுடனும், டேட்டா கார்டுடனும் வரத் தயார். மேலும் துண்டு பிரசுரத்திற்கு தமிளிஷ் போன்ற திரட்டிகளிடமும் மற்றும் பதிவர்கள் நடத்தும் இலக்கிய பத்திரிக்கைகளிடம் விளம்பர உதவியும் கேட்கலாம். அவர்களின் சுட்டியும் தரப் போகிறோம் அல்லவா?

3) என்ன எழுதுகிறார்கள் வலையில் என்பதை எப்படி அவர்களுக்கு தெரியவைப்பது? வலையில் ஹிட்டடித்த சிறந்த 30 பதிவுகளை திரட்டி புத்தகமாக போடலாம். அந்தப் பதிவரின் புகைப்படமும், அவர்கள் பதிவுக்கு சுட்டியும் தரப் போவதால் அவர்களிடம் தலா 500 வாங்கலாம். இதன் மூலமே 15,000 ரூபாய் கிடைத்துவிடும். 1000 பிரதி போட 25,000 வரை செலவு ஆகுமென தெரிகிறது. மீதம் 10,000 ரூபாயை பிரதி ஒன்றுக்கு வெறும் 20ரூபாய் என வாங்கினாலே போதும். கூடவே இலவச இணைப்பாக சிறுகதை பட்டறையின் பதிவு செய்யப்பட்ட தொகுப்பை சிடியாக கொடுக்கலாம்.

4) வாசிக்க மட்டுமல்ல, திறமையான பலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை அறிவோம். ஓவியம், நகைச்சுவை, கவிதை, குறும்படம் என அவர்கள் திறமைகளை ஆயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் தமிழின் உபயோகத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். படிப்பது, எழுதுவது, தேடுவது என இயன்ற வரையில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்பதே முக்கிய நோக்கம்.

5) நேரம் முக்கியமானது. இதையெல்லாம் கேட்க நேரமில்லாதவர்கள், தங்களின் மின்னஞ்சல் முகவரியை தந்துவிட்டு செல்லலாம். மேலே சொன்ன அத்தனையையும் ஒரு தொகுப்பாக செய்து அவர்கள் முகவரிக்கு அனுப்பிவிடலாம். சிறந்த பதிவுகளின் சுட்டிகள், திரட்டிகளின் முகவரிகள், எழுத்துருக்களின் சுட்டி, புது வலையை எப்படி ஆரம்பிப்பது என எல்லாத் தகவல்களும் அடங்கிய தொகுப்பை நான் தயாரிக்கிறேன். மின்னஞ்சலில் சுற்ற விடுவோம்.

6)  என்ன செய்ய வேணும் நாம்? விருப்பம் இருக்கும் சகாக்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து திட்டமிட வேண்டியதுதான். கோவை மக்களை நன்கு அறிவேன். தங்குமிடம் மற்ற தேவைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் தயாரா?

 உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள். ஏதாவது செய்வோம் பாஸ்.

பி.கு: இந்த பேச்சைத் தொடங்கிய மேவீ, பல நல்ல யோசனைகள் சொன்ன கும்க்கி, செய்யலாம்டா என்று சொன்ன அப்துல்லா, நர்சிம், சிவராமன் மற்றும் பலருக்கு நன்றி

51 கருத்துக்குத்து:

அன்புடன் அருணா on September 28, 2009 at 12:43 PM said...

ஆஹா ...கார்க்கின்னா கார்க்கிதான்....பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய பூங்கொத்து!

அன்புடன் அருணா on September 28, 2009 at 12:44 PM said...

எனக்குத் தெரியாது என்ன செய்யணும் என்று.....ஆனால் என்னால் முடிந்த உதவியுண்டு.........வாழ்த்துக்கள்...!

பரிசல்காரன் on September 28, 2009 at 1:17 PM said...

மிகச் சிறந்த யோசனைகள் கார்க்கி!

முன்னெடுத்துச் சொன்ன உங்கள் யோசனைகளை, வழிநடத்திச் செல்ல குழு அமைக்க வேண்டியது அவசியம்.

உலகத் தமிழ்மாநாட்டிற்காக தனியாக ஒரு வலைப்பூ ஆரம்பித்து அவ்வப்போது இது சம்பந்தமான செயல்பாடுகளை அப்டேட் (என்ன தமிழில்?) செய்யலாம்.

வாழ்த்துகள் கார்க்கி.

முரளிகுமார் பத்மநாபன் on September 28, 2009 at 1:22 PM said...

சகா நல்லா யோசனை. உங்கள் யோசனை செயல் படுத்தப்படுமாயின் என்னால் ஆன உதவிகளை கட்டாயம் செய்வேன்.

முரளிகுமார் பத்மநாபன் on September 28, 2009 at 1:27 PM said...

உடனுக்குடன் வலையேற்றலாம் என்று சொல்லலாம், ஆனால் அப்டேட் க்கு சரியான தமிழ் சொல்? தெரியவில்லை.

யுவகிருஷ்ணா on September 28, 2009 at 1:30 PM said...

ஷங்கர் படம் பார்ப்பது போல பிரமிப்பா இருக்கு :-)

நேசன்..., on September 28, 2009 at 1:31 PM said...

அய்யோ கலக்கல் ஐடியா சகா!.....
நிச்சயம் இது நிறைவேற வேண்டும்!
பரிசலின் யோசனையும் செயல்படுத்தப்படவேண்டும்!.......

முரளிகுமார் பத்மநாபன் on September 28, 2009 at 1:41 PM said...

புதுப்பித்தல் - தல இது சரியா வருமா?

தராசு on September 28, 2009 at 1:44 PM said...

உங்கள் யோசனைக்கு தலை வணங்குகிறேன் தல.

ஒருவேளை வலைப் பூக்களைப் பற்றி மாநாட்டில் பேச தருணம் கிடைக்கும் பட்சத்தில் என்ன, எப்படி, எவ்வளவு பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே ஒரு குழு முடிவு செய்து, அதற்கான் சரியான ஒத்திகையுடன் போவது நல்லது.

ஒருவேளை மாநாட்டுத்திடலில் மின் திரைகள் இருப்பின், ஒரு Power Point Presentation நடத்தலாம்.

ஸ்டால் அமைக்கவோ, அச்சுப் பிரதிகளை வெளியிடவோ பணத் தேவை இருப்பின், எந்த நல்ல காரியத்துக்கும் வரிந்து கட்டிக் கொண்டு முன் நிற்கும் பதிவுலக அன்பர்கள் முன் வரமாட்டோமா என்ன?

susi on September 28, 2009 at 1:51 PM said...

யோசனைகள் அருமை.
உங்க பதிவுலக நண்பர்களுக்காக நீங்க செய்யும் உதவிகள படிக்க சந்தோஷமா இருக்கு.

யோ வாய்ஸ் (யோகா) on September 28, 2009 at 1:57 PM said...

வாழ்த்துக்கள் சகா.. தமிழ் பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்கள்.

கலக்குங்க

மஞ்சூர் ராசா on September 28, 2009 at 1:59 PM said...

தமிழ்மணம் உருவாக்கிய காசி கோவையில் தான் இருக்கிறார். அவரும் இந்த மாநாட்டில் இணைய உலகம் பற்றி பேசவேண்டும். இணையம் மற்றும் பதிவுலகம் பற்றிய நிறைய விவரம் தெரிந்தவர்.மேலும் ஓசை செல்லா, வாத்தியார் சுப்பையா, லதானந்த், பரிசல், வெயிலான், வடகரை, சஞ்சய், பாமரன் ஈரோடு கதிர் என பலரும் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் இருப்பதால் இம்மாநாட்டில் இணைய உலகை முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே நினைக்கிறேன். விரைவில் அதற்கான முன்னோட்டமாக ஒரு சந்திப்பை கோவையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

பாலகுமார் on September 28, 2009 at 2:05 PM said...

அருமையான் யோசனை !!!!

மகேஷ் on September 28, 2009 at 2:05 PM said...

கலக்கல் யோசனைகள் சகா :)

TBCD on September 28, 2009 at 2:11 PM said...

வரவேற்கிறேன் ! வாழ்த்துகிறேன் ! வழிமொகிறேன் !

எம்.எம்.அப்துல்லா on September 28, 2009 at 2:21 PM said...

//யுவகிருஷ்ணா on September 28, 2009 1:30 PM said...
ஷங்கர் படம் பார்ப்பது போல பிரமிப்பா இருக்கு :-)

//

வேலைக்காவாதுன்னு சொல்ல வர்றீங்களா லக்கியண்னே??

வித்யா on September 28, 2009 at 2:46 PM said...

நல்ல யோசனை. செயல் வடிவம் பெற வாழ்த்துகள்.

Dr.P.Kandaswamy on September 28, 2009 at 2:55 PM said...

நான் ஒரு கத்துக்குட்டி. உங்கள் கருத்து மிகவும் உபயோகமானது. நான் கோவை வாசி என்பதால் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன்.
என்னுடைய மின் அஞ்சல்
drpkandaswamyphd@sancharnet.in

ப.கந்தசாமி (விக்ரம் அல்ல)

ஜோசப் பால்ராஜ் on September 28, 2009 at 2:59 PM said...

மிக அருமையான யோசனை. வெற்றிகரமாக செயல்படுத்த குழுவா இணைந்து நன்கு திட்டமிட்டு உழைக்க வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர்ல இருக்கதால வாழ்த்து மட்டும் தான் சொல்ல முடியுது. ஏதேனும் வேலைகளை நான் இங்கிருந்தே செய்ய முடியும் என்று எண்ணிணால் செய்ய தயார். எப்போது வேண்டுமாணாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்.


த‌மிழ் பழைய‌ப் புத்த‌க‌ங்க‌ளை மின்னாக்க‌ம் செய்ய‌ வ‌ச‌தியாக‌ ஓசிஆர் த‌மிழ் மென்பொருள் த‌யாரிப்பு, மேம்ப‌டுத்த‌ல் போன்ற‌வற்றை குறித்து ஒரு ஆய்வறிக்கை சமர்பித்து அரசின் உதவியை பெறலாம். அப்படி செய்தால் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் ஓலைச்சுவடிகளில் இருந்த பல அரிய நூல்களை அச்சிலேற்றியது போல், அச்சில் இருந்து நூல்களை மின்னாக்கம் செய்து கால காலத்திற்கும் பாதுகாக்து அடுத்த தலைமுறைகளுக்கு கொடுக்க இயலும். இது குறித்தும் விவாதியுங்கள். சிங்கையில் ஏற்கனவே இதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். இது குறித்தும் ஏதும் விவரங்கள் வேண்டுமாயின் தொடர்பு கொள்ளுங்க சகா.

mvalarpirai on September 28, 2009 at 3:18 PM said...

நல்ல விசயம்..நிறைவேற வாழ்த்துகள் !
முயன்றால் முடியாதது இல்லை

செந்தழல் ரவி on September 28, 2009 at 3:24 PM said...
This comment has been removed by the author.
செந்தழல் ரவி on September 28, 2009 at 3:27 PM said...

கோவை என்றவுடன் நினைவுக்கு வருவது தமிழ்மணம் காசி சார், வாத்தியார் அய்யா, ஓசை செல்லா , மங்கை அக்கா. தனி குழு வலைப்பூ நல்லதொரு யோசனை. என்ன சகா ?

பாலா on September 28, 2009 at 3:32 PM said...

மாப்பி உன் கிட்னிய கொஞ்சம் கடன் குடுக்குறியா ?
உண்மையாவே யாருக்கு இதெல்லாம் தோணல பார்த்தியா ?
அப்பப்ப இப்படி ஏதாவது போட்டு நிருபிசுடுற

கார்க்கி on September 28, 2009 at 3:46 PM said...

மக்களே, அவசரமாக ஹைதை கிளம்புகிறேன். பல யோசனைகள் வந்திருக்கு. நிச்சயம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்துவோம். நாளையோ நாளை மறுநாளோ முடிந்தவர்களிடம் பேசி முடிவு செய்துவிடுவோம்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இன்னும் பல யோசனைகள் வருமென எதிர்பார்க்கிறேன்.

பரிசல் ,ரவி இன்னும் சிலர் சொன்னது போல் தனிவலைப்பூ மற்றும் குழுவை சீக்கிரமே செய்வோம்.

நாளை வந்து மீண்டும் சந்திக்கிறேன். வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

priyamudan on September 28, 2009 at 4:10 PM said...

வாழ்த்துக்கள் சகா... மிகவும் நல்ல யோசனை தொடருங்கள்... வலை பூ தொடங்குவது பற்றி மின் அஞ்சல் அனுப்புவதாக இருந்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்...

amjnizar@gmail.com

priyamudan on September 28, 2009 at 4:11 PM said...

வாழ்த்துக்கள் சகா... மிகவும் நல்ல யோசனை தொடருங்கள்... வலை பூ தொடங்குவது பற்றி மின் அஞ்சல் அனுப்புவதாக இருந்தால் எனக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள்...

amjnizar@gmail.com

டம்பி மேவீ on September 28, 2009 at 4:25 PM said...

யாரவது அவங்க ஐடியாவை இங்கே பின்னோட்டமாக போட்டால் என்னை மாதிரி முட்டாள்களும் படித்து தெரிந்து கொள்வோம் ல .........நான் அறிவாளி ஆகுவது யாருக்கும் பிடிக்கவில்லை போல் இருக்கு .......


இதில் அந்நிய நாட்டு சதி இருக்கு

டம்பி மேவீ on September 28, 2009 at 4:26 PM said...

thanks ji

டம்பி மேவீ on September 28, 2009 at 4:27 PM said...

yaarAVATHU useful ah ethavathu sollunga

ஆதிமூலகிருஷ்ணன் on September 28, 2009 at 5:01 PM said...

மிகச் சிறந்த யோசனைகள்!

நானும் தயார்.!

கும்க்கி on September 28, 2009 at 5:14 PM said...

எழுமின்..விழுமின்...

அறிவிலி on September 28, 2009 at 5:23 PM said...

நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். ஜோஸஃப் பால்ராஜ் சொன்னது போல் நாங்களும் செய்யக்கூடிய உதவிகள் இருந்தால் தெரியப்படுத்தவும். நிச்சயம் செய்வோம்.

டம்பி மேவீ on September 28, 2009 at 6:09 PM said...

இந்த ஐடியாவை வைத்து எதாவது FM STATION ல ஒரு AWARENESS CREATE பண்ணலாமே

ராஜராஜன் on September 28, 2009 at 11:06 PM said...

கார்க்கி சொல்லி இருக்கும் யோசனை எல்லாம் நடந்தால் சராசரி கணினி உபயோகப்படுத்தும் தமிழனிடம் கூட வலைபூ பற்றி எளிமையாக எடுத்து கூற முடியும் என்றே தெரிகிறது. எனது பங்களிப்பு எதுவாயினும் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் சகா .

பித்தன் on September 29, 2009 at 8:58 AM said...

நல்ல பதிவு அருமையான யோசனைகள். ஆனால் பாரட்டுக்கூட்டத்தில் ஜால்ரா சத்தத்தில் இது எல்லாம் எடுபடாது. ஆனாலும் வரும் அதிக மக்களிடையே ஒரு சிலராவது இதில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் கருத்துக்களுக்கு வெற்றி கிடைக்கும். இதை புத்தக கண்காட்சிகளில் செய்யலாம். எனக்கு என்னமே இது உலகத்தமிழ் மாநாடாக இல்லாமல் இது உலக ஜால்ரா மாநாடக நடக்கும் என நினைக்கின்றேன். இந்த மாநாட்டை பலரும் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதுகின்றேன்.

விக்னேஷ்வரி on September 29, 2009 at 10:25 AM said...

Good ideas. Good Luck.

நர்சிம் on September 29, 2009 at 10:30 AM said...

செய்வோம்

காலப் பறவை on September 29, 2009 at 10:46 AM said...

பாஸ் என்னையும் சேத்துக்கங்க பாஸ்

செல்வேந்திரன் on September 29, 2009 at 10:50 AM said...

மிகுந்த தாமதமாக இந்தப் பத்திக்கு வந்தேன்.
யோசனை -1
'பேச்சாற்றல்' என்பதில் ஒப்புமை இல்லை. சமாளித்து விடலாம். கொஞ்சம் பயிற்சி எடுத்தால் ஜமாய்த்து விடலாம்.

யோசனை - 2
அருமை. தாங்களும் வருவதாக இருப்பின் மிகவும் உசிதம்.

யோசனை - 3
மிகவும் அருமை.

பதிவுலகில் புதுப்பாய்ச்சல்கள் நிகழ்ந்து வரும் தருணத்தில் இந்த முயற்சிகள் முக்கியமானதும், அவசியமானதும் ஆகிறது. சென்னைவாழ் நட்சத்திரங்கள் வந்தால் தங்குவதற்கு வசதியாக சஞ்ஜெயின் பங்களாவும், என்னுடைய வீடும் இருக்கிறது. நண்பர்கள் கூடி செம்மையாகத் திட்டமிட்டு செயல்படுவோம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Sabarinathan Arthanari on September 29, 2009 at 10:51 AM said...

தொழில் நுட்பங்களை தமிழக பொது மக்களுக்கு கொண்டு செல்வது மிக முக்கிய தேவை.

என் ஆதரவும் உண்டு.

வாழ்த்துக்கள்!

செல்வேந்திரன் on September 29, 2009 at 10:55 AM said...

திருச்செங்கோட்டைச் சேர்ந்த பேராசிரியர் இளங்கோவன் இணைய தமிழ் பயன்பாட்டை கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரப்ப அரும்பணிகளை மேற்கொண்டுள்ளார். அவர் என்னைக் காட்டிலும் இதற்குப் பொருத்தமாக இருப்பார் என்பது என் அபிப்ராயம். அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

யாழினி on September 29, 2009 at 11:21 AM said...

"வாசிக்க மட்டுமல்ல, திறமையான பலர் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை அறிவோம். ஓவியம், நகைச்சுவை, கவிதை, குறும்படம் என அவர்கள் திறமைகளை ஆயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகம் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் தமிழின் உபயோகத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். படிப்பது, எழுதுவது, தேடுவது என இயன்ற வரையில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்பதே ." முக்கிய நோக்கம்"
நோக்கம் மிக சிறப்பானது இந்த திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 29, 2009 at 3:42 PM said...

whatever it may be, i'll support u to proceed further.

hamaragana on September 29, 2009 at 7:52 PM said...

ayya samy ange 15% tamilan panniya vida kevalama nadathapdukiran ithil tamil maha nadu remba avsiyam samyy avasym nadathunga nalla iruppenga

thappuna mannichchugunga ayyamargalee?

தமிழ்ப்பறவை on September 30, 2009 at 1:49 AM said...

சிறுகதைப் பட்டறைக்குப் போயிட்டு வந்ததில இருந்தே இப்படித்தான் ரொம்ப சீரியஸ் பதிவுகள் வர ஆரம்பிக்குது...
தனி வலைப்பூ ஆரம்பிக்கலாம். பின்பு சூடு பிடிக்கும்...

கார்க்கி on September 30, 2009 at 10:41 AM said...

// hamaragana said...
ayya samy ange 15% tamilan panniya vida kevalama nadathapdukiran ithil tamil maha nadu remba avsiyam samyy avasym nadathunga nalla iruppenga

thappuna mannichchugunga ayyamargalee//

அய்யா சாமீ, அங்க 15% தமிழனை பன்னியை விட கேவலமா நடத்துறான். இங்க உங்களுக்கு பதிவு, பின்னூட்டம் , பட்டை, மாஇலை எதுக்கு கட்டனும், அஷ்டமின்னா என்னன்னு சொல்றது அவசியமா?

தப்புன்னா கூட கேட்டுத்தான் ஆகனும் அய்யாமாரே

Karthik on October 1, 2009 at 1:32 PM said...

உங்களுக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பியதற்கு நன்றிகள்...:))

☼ வெயிலான் on October 1, 2009 at 8:21 PM said...

2010 ஜீன் மாதத்திற்கு மாற்றி விட்டார்கள்.

நானும் உங்களின் முயற்சிகளுக்கு உதவத்தயார் கார்க்கி!

செந்தில் குமார் on October 24, 2009 at 4:38 PM said...

நல்ல பல யோசனைகள் கொண்டுள்ளீர்கள். புத்தக வாயிலாக படிக்கும் பழக்கம் வழக்கொழிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், வாசிக்க நேரம் இல்லை என்பவர்களுக்கு வலையுலகத்தை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றாகும்.

senthilr.nitt@gmail.com

Rajan on October 27, 2009 at 5:58 PM said...

உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடக்கவிருப்பது cancelled. மாநாடு மட்டும் போதும் என்றால் ok But Karunanithi Family functionala என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. Please without Politics we need this to happen

mythiliraj on March 13, 2010 at 3:51 PM said...

அன்பு தோழர்களே,
வணக்கம், என் பெயர் மைதிலி. நான் ஒரு தமிழ் ஆசிரியை, ஆன் லைன்ல தமிழ் சொல்லிக்கொடுத்துட்டு இருக்கேன்.. தற்போது பன்னிட்டு இருக்கேன். உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் நீங்கள் செய்யும் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ளவும்

 

all rights reserved to www.karkibava.com