Sep 26, 2009

கொஞ்சம் சிரிங்க – ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பாம்


 

*****************************************

   வழக்கமாக  ஃபார்வர்ட் மெயில்களை அதிகம் படிப்பதில்லை. ஆனால் இந்த மெயிலில் வந்த ஜோக்குகள் எல்லாமே எனக்கு புடிச்சுது. சனிக்கிழமைதானே, மீள்பதிவுக்கு இது பரவாயில்லை என போடறேன். சிரிச்சு பழகலாம் வாங்க.

1) ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம். அது ரொம்ப சாஃப்ட்டா, மெதுமெதுன்னு இருந்துச்சாம். அதுக்கு அவன் என்ன பேரு வைப்பான் சொல்லுங்க..

மைக்ரோசாஃப்ட்

*******************************************

2) ஏன் முனிவர்கள் எல்லாம் ஓம் ஓம்ன்னு சொல்றாங்க தெரியுமா?

Unit of resistance Ohm தானே? அதான் உலக சுகங்களின் இருந்து தப்பிக்கத்தான் சொல்றாங்களாம்

******************************************

3) அட இந்தி படிக்கிலாம் வாங்க

"Dhuniya me koyi nahi hai" – உலகத்தில் கோழியே இல்லை

koyi bath nahi – கோழி குளிப்பதே இல்லை

woh bar bar aathaa hai – அது பார்பரோட ஆத்தாவாம்

என்ன அதுக்குள்ள மும்பை கிளம்பிட்டிங்களா?

*******************************************

4) 90 தடவை தப்பு செய்தால், அட 90 அடிக்கிற தப்பு இல்லைங்க, 45 தடவை மாட்டிப்பானாம்  மேத்ஸ் ஸ்டூடண்ட், ஏன் தெரியுமா?

SIN 90 = COT 45

********************************************

4) ஹாரி பாட்டர் வரிசையில் அடுத்து வரவிருக்கும் படம் பேரு தெரியுமா?

Harry Potter and the Bottle of Quarter (ஹீரோ தாமிரா இல்லைங்க)
Harry Potter and Sappa Matter (ஹீரோ மேவி இல்லைங்க)
Harry Potter and Avar Vitta Peter (ஹீரோ கார்த்திக் இல்லைங்க)
Harry Potter and personal matter (ஹீரோவே இல்லைங்க)
Harry Potter and his love letter (ஹிஹிஹி. ஹீரோ நான் இல்லைங்க)

____________________________________XXXXXXXXXX__________________________________

  வரும் ஞாயிறு ( எல்லா ஞாயிற்றுக் கிழமையும்தான் வரும்) 27ஆம் தேதி , சென்னை மெரினா பீச் காந்தி சிலையின் பின்புறம் (பாவம்யா அவரு) மாலை 5.00-7.30 மணியளவில் பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. புதிய பதிவர்களை சந்திக்கும் நோக்கில் நடத்தப்பெறும் இந்த சந்திப்பில் மூத்த,(ஆதி?) முக்கிய, (லக்கி?) பழம்பெரும்,(டோண்டூ சார்?) முதுபெரும்(அதிஷா?), பிரபல பதிவர்கள் (வால்?)பலரும் கலந்துகொள்வார்கள் எனத்தெரிவதால் அனைவரையும் நமக்கு நாமே திட்டத்தில் அழைக்கிறோம். புதியவர்களும், வாசகர்களும் (அப்படி யாராவது இருந்தால்) தயக்கமின்றி கலந்துகொண்டு பதிவுகள் குறித்த சந்தேகங்களை (அப்படி ஏதும் இருந்தால்) நிவர்த்தி செய்து கொள்ளலாம். டீ, ஸ்நாக்ஸ் பக்கத்துக்கடைகளில் கிடைக்கலாம்.. பர்ஸை மறக்காமல் எடுத்து வரவும்..

மேலும் தொடர்புக்கு..

லக்கிலுக்9841354308

அதிஷா 9884881824

கேபிள் சங்கர் 9840332666

முரளி கண்ணன் 9444884964

நர்சிம் 9841888663

மணிஜி 934008998

30 கருத்துக்குத்து:

ஊர்சுற்றி on September 26, 2009 at 11:34 AM said...

நாங்களும் வந்துடுவோம்ல!

ஸ்வாமி ஓம்கார் on September 26, 2009 at 12:43 PM said...

//2) ஏன் முனிவர்கள் எல்லாம் ஓம் ஓம்ன்னு சொல்றாங்க தெரியுமா?

Unit of resistance Ohm தானே? அதான் உலக சுகங்களின் இருந்து தப்பிக்கத்தான் சொல்றாங்களாம்//

உலகத்தில் இருக்கும் தொல்லைகளை (resistance)தாங்குவதற்கும் (உங்களை இல்லைங்க :) )... ஓம்னு சொல்லுவாங்க...
ரசித்தேன்...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

தண்டோரா ...... on September 26, 2009 at 1:29 PM said...

ரசித்தேன் சகா

விக்னேஷ்வரி on September 26, 2009 at 1:39 PM said...

உங்க ப்ளாக் படிக்கிறவங்க இப்போ தான் சிரிச்சு பழகனுமா....

நல்லா வெக்குறீங்க பேரு.

ஓம் நல்லா இருக்கு. :) நல்லா யோசிக்குறீங்க.

என்ன ஹிந்தி புலமை...... பப்லுவுக்கு ஹிந்தி சொல்லிக் குடுத்துடாதீங்க.

நீங்க மேத்ஸ் ஸ்டூடண்ட் இல்லையே...

ஹாரி பாட்டர் சீரிஸ் நல்லாருக்கு. பசங்க sms ல அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க.

Nundhaa on September 26, 2009 at 1:45 PM said...

இந்தி, மேத்ஸ் - செம கமேடி ... ரசித்துச் சிரித்தேன்

பிரபாகர் on September 26, 2009 at 3:13 PM said...

ஜோக்குகள் அருமை சகா... அப்படியே பதிவர் சந்திப்பு ஜோக்குகளையும் சாரி விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாவும் நன்றாய் முடிந்தபின்.

பிரபாகர்...

Karthik on September 26, 2009 at 3:14 PM said...

உண்மைய சொல்லுங்க கார்க்கி, இதெல்லாம் உங்களுக்கு வந்த பார்வட் மெயிலா இல்லை நீங்க எழுதி பார்வட் பண்ணதா??? :)))

//Harry Potter and Avar Vitta Peter (ஹீரோ கார்த்திக் இல்லைங்க)

அவ்வ்!

pappu on September 26, 2009 at 4:16 PM said...

உண்மைய சொல்லுங்க கார்க்கி, இதெல்லாம் உங்களுக்கு வந்த பார்வட் மெயிலா இல்லை நீங்க எழுதி பார்வட் பண்ணதா??? :)))

//Harry Potter and Avar Vitta Peter (ஹீரோ கார்த்திக் இல்லைங்க)

அவ்வ்!////

உண்மையச் சொன்னா கசக்குதா!

சிங்கக்குட்டி on September 26, 2009 at 4:23 PM said...

//இந்தி படிக்கிலாம் வாங்க//

சூப்பர்...இதோ கிளம்பிட்டோம்...மும்பை இல்ல தார் வாங்க...!

இந்தி கத்துக்க சொன்னா தார் பூசுரதுதான் எங்க கலாச்சாரம் (அப்ப தான அங்க நடக்குறது இங்க யாருக்கும் புரியாது) தெரிஞ்சுகங்க :-))

பட்டிக்காட்டான்.. on September 26, 2009 at 4:25 PM said...

இந்த microsoft மாதிரியே personality னு ஒன்னு கேள்வி பட்டுருக்கிங்களா சகா..

பெருசு நாலு டீ..

ராஜராஜன் on September 26, 2009 at 4:25 PM said...

\\அட இந்தி படிக்கிலாம் வாங்க

"Dhuniya me koyi nahi hai" – உலகத்தில் கோழியே இல்லை

koyi bath nahi – கோழி குளிப்பதே இல்லை

woh bar bar aathaa hai – அது பார்பரோட ஆத்தாவாம்

என்ன அதுக்குள்ள மும்பை கிளம்பிட்டிங்களா?//


நான் முதல உங்க ப்ளாக் விட்டு கிளம்புறேன்

சூப்பர் இருக்கு பாஸ் இந்த ஜோக் ,, ஹி ஹி ஹி ஹி

அன்புடன் அருணா on September 26, 2009 at 4:45 PM said...

பதிவர் சந்திப்புக்கு நாங்க ஏன் சிரிக்கணும்....ஹி..ஹி..ஹி

மஞ்சூர் ராசா on September 26, 2009 at 5:44 PM said...

இந்த பதிவு மூலம் ஹிந்தி கத்துகிட்டதால் மும்பைக்கு டிக்கெட் எடுத்துவிட்டேன்.

மிகவும் நன்றி.


சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகள்.

மேவி on September 26, 2009 at 6:17 PM said...

"kuch kuch hota hai" kku tamil meaning ennathu sir????


he he he he he

மேவி on September 26, 2009 at 6:21 PM said...

"Harry Potter and Sappa Matter (ஹீரோ மேவி இல்லைங்க) "

mudiyala .....

(emma watson vendum enakku அவங்களுக்கு பதிலா நீங்க வந்தாலும் ஓகே தான் )

மேவி on September 26, 2009 at 6:22 PM said...

துரை சயின்ஸ் எல்லாம் பேசுது ..... பெரிய ஆளுங்க நீங்க

மேவி on September 26, 2009 at 6:23 PM said...

ohm eppavo padichathu...... malarum ninaivugal

he he he he

ஆதிமூலகிருஷ்ணன் on September 26, 2009 at 6:25 PM said...

ஹிஹி.. வந்துர்றேன்ங்க..

(பின்னாடி கவனிப்பு உண்டா?)

மங்களூர் சிவா on September 26, 2009 at 6:35 PM said...

ஓம் ஷாந்தி.

மகேஷ் on September 26, 2009 at 6:56 PM said...

தலைப்பைப் பார்த்து கொஞ்சம் ட்ர்ர்ர்ர்ர்ராயிட்டேன் தல! :) செம நக்கலுங்க உமக்கு.

முரளிகுமார் பத்மநாபன் on September 26, 2009 at 6:56 PM said...

எனக்கு மைக்ரோசஃப்ட் மெசேஜ் புதுசுதான் சகா.

கும்க்கி on September 26, 2009 at 8:34 PM said...

நல்லாருக்கு ப்ரதர்...
ப்ரமாதம்.

Anonymous said...

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி .........:)


ஹஹஹஹஹஹஹ்ஹாஹஹ :)))))))

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

butterfly Surya on September 27, 2009 at 12:18 AM said...

நிறைய சிரிச்சேன்.

நன்றி.

வித்யா on September 27, 2009 at 7:12 AM said...

அந்த ஹிந்தி மேட்டர் lol...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

செல்வேந்திரன் on September 27, 2009 at 9:42 AM said...

புதிய தலைமுறையில் உங்களது பத்து வயசு படம் பிரசுரமாகி இருப்பதைக் கண்டேன். வாழ்த்துக்கள்!

கலையரசன் on September 27, 2009 at 11:49 AM said...

Profile போட்டோவுல Harry Potter and Avar Aditha Quarter மாதிரியே இருக்கியேப்பா?

மேவி on September 27, 2009 at 9:18 PM said...

என் பிளாக்யை வந்து பாருங்க

யோ வாய்ஸ் (யோகா) on September 28, 2009 at 10:18 AM said...

வாசிச்சி ரொம்ப சிரிச்சேன் சகா.. உங்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் on September 29, 2009 at 3:44 PM said...

//பிரபல பதிவர்கள் (வால்?)//

இப்படி கொழுத்தி போட்டது தான் எல்லாரும் ஏன் வரலைன்னு கேக்குறாங்களா!?

 

all rights reserved to www.karkibava.com