Sep 24, 2009

வேட்டைக்காரன் – வெற்றியை நோக்கி


VettaikaranFront

1) புலி உறுமுது (அனந்து, மகேஷ் வினாயகம்) பாடல்-கபிலன்

  சாப்பாடே இல்லாமல் சோர்ந்து போன ஒருவனின் உடலினுள் 10 பாட்டில்  குளுக்கோஸ் ஏறினால்? பல மாதம் கழித்து தாமிராவின் கண்களில் 90 தென்பட்டால்? பதிவிட மேட்டர் இல்லாமல் திணறுபவர்களுக்கு இன்னொரு உ.பொ.ஒ கிடைத்தால்? ஆமாம். விஜய் ரசிகனின் ஒவ்வொருவரின் நரம்புக்குள்ளும் அட்ரீனலை அளவில்லாமல் ஏற்றுகிறார்கள் விஜய்ஆண்டனியும் கபிலனும்.ஆரம்ப பீட்டும், இசையுமே பாடல் ஹிட்டென்பதை உறுதி செய்கிறது

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரத பார்த்து

குலை நடுங்குது குலை நடுங்குது துடிதுடிக்குது துடிதுடிக்குது

நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து

தன் பங்கிற்கு பாடகர்களும் உசுப்பேற்றுகிறார்கள். படையப்பா- வெற்றி கொடி கட்டு மாதிரியான பாட்டு. ஒட்டு மொத்த படத்தின் வேகத்தையும் TVS apache போல் சில நொடிகளிலே மாற்றியமைக்க உதவும். பாடலைக் கேட்ட ஒவ்வொரு ரசிகனும் காலரை தூக்கி விட்டுக் கொண்டு தல ரசிகர்களை தேடி அலைவது நிச்சயம். எந்த வரியை சொல்வது????

இவனோட நியாயம் தனி நியாயம் இவனால் அடங்கும் அநியாயம்

சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா.

இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்..

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவனிருப்பான்?

எல்லா வரிகளுமே இப்படி என்றாலும் எனக்கு பிடிதத்து.

பட்டாக் கத்தி பளபளக்க பட்டித்தொட்டி கலகலக்க

பறந்து வறான் வேட்டைக்காரன்…. பாமரனின் கூட்டுக்காரன்..

கபிலன் அதகளம். குருவி, வில்லுவென சோர்ந்து போன ரசிகர்களுக்கு நம்பிக்கை டானிக்கை லிட்டர் கணக்கில் தரும் பாட்டு. எனக்காக ஒரு முறை கேட்டுப்பாருங்கள். இந்த வருட நாக்க முக்க இதுதான்.

டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருன்னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கருன்னா

2) சின்னத்தாமரை (க்ரிஷ், சுசித்ரா) பாடல் – விவேகா

தோழியா என் காதலியா போல் ஒரு பாடல் எதிர்பார்த்தேன். ஏமாற்றவில்லை. தமிழ்சினிமாவின் தற்போதைய விதிப்படி ஒரு சின்ன ராப்போடு தொடங்குகிறது. கிருஷ் மற்றும் சுசியின் குரலில் பல்லவி முதல் தடவை கேட்கும்போதே வசீகரிக்கிறது. பல்லவி முடிந்ததும் மீண்டும் அந்த ராப் என விதி காப்பற்றப்படுகிறது. பின் விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் ஹம்மிங். பின் சரணம், மீண்டும் நடுவில் ராப் என சென்று முடிவில் மீண்டும் ராப்போடு முடிகிறது. வெளிநாட்டு தெருக்களில் விஜயின் Cute expressions ஐ ரசிக்க முடிந்தவர்கள் ரசிக்கலாம். விவேகா, மொத்த சரக்கையும் கந்தசாமிக்கே கொடுத்துவிட்டார் போலும். சுசி, குரல் ஓக்கே.  ஆனா finishing சரியில்லையேம்மா, வரியின் கடைசியில் கஷ்டபடுகிறார் முடிக்க. இதுவும் Sure hit.

3) நான் அடிச்சா தூங்கமாட்ட (ஷங்கர் மகாதேவன்) பாடல் – கபிலன்

ஓப்பனிங் சாங். நெட்டில் சுற்றிய வேட்டைக்காரன் டோய் இல்லை. மாற்றினார்களா, இல்லை அது டுபாக்கூரா என தெரியவில்லை. ஷங்கர் மகாதேவனுக்காக போட்ட மாதிரி தெரியுது. மாடுலேஷனில் மனுஷன் மக்கா பின்றாருப்பா. வழக்கமான விஜய் ஓப்பனிங் பாடல் இல்லை. ஆனால் குத்துதான். சற்றே வித்தியாசமாக இருக்கிறது. முதல் சில தடவை டென்ஷன் ஆக்கினாலும் சரணம் சரிசெய்துவிடுகிறது. கபிலன் கண்ணில்பட்டால் கட்டிபிடி வைத்தியம்தான்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்ஃபோர்டா மாறனும்

நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்ட உயர்த்தனும்

வறட்டி தட்டும் சுவத்துல வேட்பாளர் முகமடா

காத்திருந்து கருத்து போச்சு வோட்டு போட்ட நகமடா

முடிவில் சிறுவனின் குரல் இந்தப் பாடலில் விஜயும், குட்டி விஜயும் வரப் போகிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. சிடி கவரிலும் அவரின் படம் இருக்கிறது. ஆட்டத்துக்கு தயாரா? முதல் நாள் உதயம். யார் வறீங்க?

4) கரிகாலன்(surcith, சங்கீதா) பாடல் – கபிலன்

சாதரண ஃபோக் சாங். ஆனால் ஆரம்ப ஹம்மிங்கிலே தன் துண்டைப் போட்டு விடுகிறார் விஜய் ஆண்டனி. லேசாக மெலடி சாயலும் அடிக்கிறது. வித்தியாசமான வரிகளில் மீண்டும் கபிலன் ஆட்சி.

கரிகாலன் காலை போல கருத்திருக்குது குழலு

குழலில்லை குழலில்லை தாஜ்மஹால் நிழலு

முழுப்பாடலும் இப்படியே செல்கிறது. எஃப்.எம்மில் ஃபேவரிட் பாடலாக வாய்ப்பு அதிகம்.

5) உச்சிமண்டை (கிருஷ்ணா அய்யர், ஷோபா சேகர்) பாடல் – அண்ணாமலை

ஒரு soothing melody எதிர்பார்த்தேன். இதுவும் இல்லை. அஞ்சு பாட்டு கூட இல்லாம விஜய் படம் எடுக்கறீங்களான்னு கேட்பாங்களேன்னு சேர்த்துட்டாரு டைரக்டரு. இதுவும் விஜய் ஆண்டனி பாட்டுதான். கரிகாலனும், இந்தப் பாட்டும் அடுத்தடுத்து வந்தால் தியேட்டர்காரன் பப்ஸ், சமோசா அதிகம் போட வேண்டியிருக்கும். அண்ணாமலையாம் பாடல். ரைட்டு.. டொர்ர்ர்ர்ர் என வாயாலே வண்டி ஓட்டும்போது யாருடா பாடினாங்க என்று கேட்க வைக்கிறார் கிருஷ்ணா அய்யர். ஷோபாவை விட்டுவிடுங்கப்பா. அவங்க கர்னாடக சங்கீதத்தை ஏதாவது செய்யட்டும்.

***********************************

எப்போதும் இரவு நேரத்தில் வேகமான பாடல்களை கேட்பதில்லை. அது விஜய் பாடலாகவே இருந்தாலும். ஆனால் நேற்று இரவு மூன்று மணி வரை கேட்டுக் கொண்டிருந்தேன் புலி உறுமுவதை. உ.பொ.ஒ  பின்நவீனத்துவ இசை, கட்டுடைத்தல் என்றவர்கள் குறைந்தபட்ச அறிவிருந்தாலும் வேட்டைக்காரனை வாங்கப்போவதில்லை. இது அதே குத்து ரசிகர்களுக்கு. ஆனால் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறது. படத்தைப் பற்றிய நம்பிக்கையை சற்று உயர்த்தி, முதல் வெற்றியை பெற்றிருக்கிறான் வேட்டைக்காரன். தீபாவளி எப்ப வருதுன்னு இன்றுதான் பார்த்தேன்.

original_Vijay-Antony_48e8bac00d12b தேங்க்ஸ்ண்ணா…

45 கருத்துக்குத்து:

ILA on September 24, 2009 at 8:57 AM said...

மன்னிக்கனும் நண்பா, உங்க விமர்சனத்துக்கு என் விமர்சனத்துக்கு ஒரு நிமிட இடைவெளிதான். ஆனா .. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

gulf-tamilan on September 24, 2009 at 9:12 AM said...

ila விமர்சனம் படித்து பார்க்கவும் !!!
:))))

யோ வாய்ஸ் (யோகா) on September 24, 2009 at 9:13 AM said...

தளபதி பட பாடல்கள் முதல் விமர்சனம் உங்க கிட்ட இருந்துதான் சகா, பாட்டை கேட்டா ஏதோ கில்லி படம் மாதிரி கிடைக்கும் என நம்புகிறேன்.

முதல் படம் பார்க்க போக ப்ளேன் பண்ணியிருக்கோம் பார்ப்போம்.

தராசு on September 24, 2009 at 9:22 AM said...

)))))

பாலா on September 24, 2009 at 9:50 AM said...

enna fasttu ??
padam odunaa sari??

"ராஜா" from புலியூரான் on September 24, 2009 at 10:13 AM said...

//இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்..//

இன்னொன்னும் நிச்சயம் ஆகிடுச்சி.....

Anbu on September 24, 2009 at 10:25 AM said...

அண்ணா..பாடல்களை தரவிறக்கம் செய்துவிட்டேன்...

புலி உறுமுது பாடல் மட்டும் கேட்டு இருக்கிறேன்...நன்றாக இருக்கிறது...

மற்ற பாடல்கள் கேட்டுவிட்டு சொல்கிறேன்...

விஜய் ஆண்டனியின் மிகச்சிறந்த ஆல்பமாக இருக்கும் என நினைக்கிறேன்...

ஸ்ரீமதி on September 24, 2009 at 10:59 AM said...

ஹ்ம்ம்ம்...

கல்யாணி சுரேஷ் on September 24, 2009 at 11:24 AM said...

பாடல்களை கேட்டுட்டு சொல்றனே கார்க்கி.

அமுதா கிருஷ்ணா on September 24, 2009 at 11:44 AM said...

வேட்டைக்காரன் நேற்றிலிருந்தே கிளம்பிட்டாரா வேட்டைக்கு...இரண்டு விஜய்-னா சும்மாவா!!!

பரிசல்காரன் on September 24, 2009 at 12:07 PM said...

உ.போ.ஒ - என்பதை உ.பொ.ஒ என்று ஒற்றைச் சுழி போட்டு எழுதியதன் பின்னணியிலுள்ள நுண்ணரசியலை ரசித்தேன் சகா!

Anonymous said...

கொசு தொல்லை தங்க முடியலைடா நாராயணா.!!! :)

Ranil on September 24, 2009 at 12:40 PM said...
This comment has been removed by the author.
Ranil on September 24, 2009 at 12:42 PM said...

திருந்தவே மாட்டானா இவன். ரொம்ப கஷ்டம்.

RaGhaV on September 24, 2009 at 12:45 PM said...

:-)))

பாண்டி-பரணி on September 24, 2009 at 12:48 PM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தாரணி பிரியா on September 24, 2009 at 12:54 PM said...

வேட்டைக்காரன் கண்டிப்பா நல்லா இருக்கணுமுன்னு உங்க கூட சேர்ந்து வேண்டிக்கறதை தவிர எனக்கு வேற வழியே இல்லை. தீபாவளிக்கு வேட்டைக்காரன் கண்டிப்பா போகறோமுன்னு எங்க நரேன் முடிவு செஞ்சுட்டான் :(

Bleachingpowder on September 24, 2009 at 1:13 PM said...

தல !!!! பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :))))))))))

தமிழ்ப்பறவை on September 24, 2009 at 1:23 PM said...

சகா.. விமர்சனம் ‘வேட்டைக்காரன்’ பாடல்கள் போலவே கலக்கல்..
//ஓப்பனிங் சாங். நெட்டில் சுற்றிய வேட்டைக்காரன் டோய் இல்லை. //
நானும் அதே மெட்டில் இந்த வரிகள் வருமென எதிர்பார்த்தேன்.. அதுவும் நன்றாகத்தான் இருந்தது..
//ஆனால் ஆரம்ப ஹம்மிங்கிலே தன் துண்டைப் போட்டு விடுகிறார் விஜய் ஆண்டனி. /
:-))
என்னோட ஃபேவரிட்... கரிகாலன்,புலி உறுமுது,சின்னத்தாமரை...
இந்த அண்ணாமலையைப் பற்றி எனது நினைத்தாலே இனிக்கும் பாடல் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன், இன்னொரு பேரரசாக வரும் அபாயம் இருக்கிறதென. நிரூபித்துக் கொண்டிருக்கிறார்...

சுசி on September 24, 2009 at 1:28 PM said...

நல்ல விமர்சனம்... இனிமேதான் பாட்டு கேக்கணும்.

//வெளிநாட்டு தெருக்களில் விஜயின் Cute expressions ஐ ரசிக்க முடிந்தவர்கள் ரசிக்கலாம். //

அதிமுக

வித்யா on September 24, 2009 at 1:41 PM said...

நல்லா இருந்தா சரி..

கார்ல்ஸ்பெர்க் on September 24, 2009 at 1:51 PM said...

Anna,

I'm not totally impressed with the songs.. Thought of writing a post about this, after a long time, but didn't get a mindset after listening. The great disappointment is the opening song.. Not at all a VJ kinda opening.. May be he can change it completely with his dance as how he did in ATM.. 'Puli urumudhu' is the only hope.. Hope these gets changed while watching it on screen.. I was too listening till late nite yesterday :)

பித்தன் on September 24, 2009 at 2:10 PM said...

நான் திரைப்பட விமர்சங்களுக்கு பின்னுட்டம் இடுவது இல்லை.

♠ ராஜு ♠ on September 24, 2009 at 2:25 PM said...

மொத்தம் ஆறு பாட்டு..!
இன்னோரு சின்னத்தாமரையை மிஸ் பண்னீட்டிங்க‌ன்னு நினைக்கிறேன்.
ரீமிக்ஸ் இல்லாம, விஜய் ஆண்டணி ஆல்பமா...?

ஆதிமூலகிருஷ்ணன் on September 24, 2009 at 3:08 PM said...

உனக்காகவேனும் இந்தப்பாடல்களும், படமும் பெருவெற்றி பெறட்டும். வாழ்த்துகள்.!

பிரபாகர் on September 24, 2009 at 3:30 PM said...

கார்க்கிக்காக எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது...

பிரபாகர்.

யோ வாய்ஸ் (யோகா) on September 24, 2009 at 3:37 PM said...

சகா உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டிவிட்டுள்ளேன், பிடித்ததை எழுதுங்கள்

பிடிக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்கும்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_6510.html

Karthik on September 24, 2009 at 4:25 PM said...

கேட்டு பார்த்துட்டு சொல்றேன். :)

//ஆட்டத்துக்கு தயாரா? முதல் நாள் உதயம். யார் வறீங்க?

மெட்ராசு செயில சுத்திக் காமிக்கிறேன்னு சொல்லிட்டு இப்ப மறந்துட்டியே சித்தப்பு? நீ எல்லாம் பெரிய மனுசனா?

:)))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 24, 2009 at 4:57 PM said...

முதல் பாட்டுக்கே இதயம் குபீர், குபீர்ன்னு தூக்கி போடுதுங்க சகா.
TVS apache போல் இல்ல இது, ஹார்லி டேவிசன் மாதிரி சும்மா பிச்சிட்டு போகுது.

பாட்டு மட்டும் இல்ல விமர்சனமும் "சும்மா பிரிச்சு மேயுது"

குசும்பன் on September 24, 2009 at 5:13 PM said...

//தீபாவளி எப்ப வருதுன்னு இன்றுதான் பார்த்தேன்.
//

ஏன்டா வந்தது தீபாவளியும்? படமும் என்று தோனாமல் இருந்தால் சரி:)

//முதல் படம் பார்க்க போக ப்ளேன் பண்ணியிருக்கோம் பார்ப்போம்.//

கொஞ்சம் அந்த ப்ளேனை இங்க துபாய் பக்கம் விடுங்க பாஸ், ஊருக்கு இலவசமாக வந்து படம் பார்த்துவிட்டு திரும்ப வசதியாக இருக்கும்:)))))

தர்ஷன் on September 24, 2009 at 5:38 PM said...

மனதை தொட்டு சொல்லுங்கள் கார்க்கி பாடல்கள் உண்மையில் பிடித்திருக்கிறதா?
புலி வருது நல்ல விறு விறென்று உள்ளது உண்மை. ஆனால் படத்தில் ஏதோ ஒன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தர பாடல்கள் தவறியுள்ளதே.
தனது ரசிகர்கள் தாண்டி மற்றவர்களும் ரசிக்க படம் விஜய் தரவே மாட்டாரா
அப்புறம் எப்படி முதல்வராவதாம்

தர்ஷன் on September 24, 2009 at 5:39 PM said...

//முதல் படம் பார்க்க போக ப்ளேன் பண்ணியிருக்கோம் பார்ப்போம்.//

//கொஞ்சம் அந்த ப்ளேனை இங்க துபாய் பக்கம் விடுங்க பாஸ், ஊருக்கு இலவசமாக வந்து படம் பார்த்துவிட்டு திரும்ப வசதியாக இருக்கும்:)))))//

Super kusumban

pappu on September 24, 2009 at 6:27 PM said...

உச்சி... பாட்டு கேட்டேன். கொஞ்சம் லெட் டவுண். ஹிட் ஆகலாம். யாருக்கு தெரியும்? ஆனால் விஜய் டான்ஸுக்காக பாட்டுகளை காம்ப்ரமைஸ் செய்கிறார்கள் போல தெரிகிறது!

கார்ல்ஸ்பெர்க் on September 24, 2009 at 6:40 PM said...

//விஜய் டான்ஸுக்காக பாட்டுகளை காம்ப்ரமைஸ் செய்கிறார்கள் போல தெரிகிறது!//

- This is what I was too thinking..

sahana on September 24, 2009 at 6:43 PM said...

முடியலடா...!!!

கும்க்கி on September 24, 2009 at 6:51 PM said...

டவுன் லோட் லிங்க் போடமாட்டியா ப்ரதர்...?
நாங்களும் கேப்பமில்ல....

சிங்கக்குட்டி on September 24, 2009 at 7:48 PM said...

//வேட்டைக்காரன் – வெற்றியை நோக்கி// :-))

சிரிச்சு முடிச்சு பதிவ படிக்கிற வரை புது வருஷம் வருதுன்னு பதிவ
மாத்திராதிங்க கார்க்கி...:-))

negamam on September 24, 2009 at 8:23 PM said...

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வரத பார்த்து
i am w8ing

SSS on September 24, 2009 at 11:21 PM said...

விமர்சனம் மிக அருமை...!!

நானும் தங்களை போல் நானும் தீபாவளிக்காக காத்திருகிறேன்..!!

அந்த "வேட்டைக்காரன் டோய்" பாடல் இடம்பெற்ற படம் "வைதேகி"

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001349

லவ்டேல் மேடி on September 25, 2009 at 7:21 AM said...

/// வேட்டைக்காரன் – வெற்றியை நோக்கி ///

இஃகி...இஃகி....இஃகி.....இஃகி....இஃகி...இஃகி....

சகா.... உனக்கு நகைச்சுவை உணர்வு நெம்ப ஜாஸ்த்தி...!! அதுக்குன்னு இப்புடியா.....!!!

சூரியன் on September 25, 2009 at 1:02 PM said...

காமெடி பீசு...

பார்ப்போம் எதை நோக்கி போகுதுனு

சுரேகா.. on September 25, 2009 at 7:52 PM said...

கார்க்கி பிறந்து 2 நாள் கழிச்சு..
வேட்டைக்காரன் பாட்டு ரிலீஸ்..!

ரெண்டுமே ஹிட்டாகட்டும்..!

:)

ஷாகுல் on September 26, 2009 at 4:51 PM said...

//குலை நடுங்குது குலை நடுங்குது துடிதுடிக்குது துடிதுடிக்குது

நிலைகுலையுது நிலை குலையுது வேட்டைக்காரன் வரத பார்த்து//

ஐயோ! தீபாவளிக்கு படம் ரிலீசா எனக்கு குலை நடுங்குதுங்க.

விஜய் on September 27, 2009 at 11:22 PM said...

Good review, but
'EN UCHI MANDAILA' reiview'vai aethukka mudiyathu..........
matha songs ku correcta sollitu ithukku mattum en intha ora vanjanai

ithu hit aagum, appo unga karuthai paarpom

vignesh on October 15, 2009 at 11:46 AM said...

vijay song always hit

 

all rights reserved to www.karkibava.com