Sep 22, 2009

பப்லுவின் பராக்கிரமங்கள்


 

கந்தசாமி கூட்டிட்டு போடா என்று பப்லு  அடம்பிடித்தான். எப்படியோ அவனை சமாளித்து Blur gaming zone அழைத்து சென்றேன். தரையில் அமர்ந்து ஆடுவதைப் போல ஒரு சோஃபா இருந்தது. X boxல் wrestling ஆடுகிறேன் என்று உண்மையிலே இவன் ஆடிக் கொண்டிருந்தான். அந்த சோஃபா அடிக்கடி நகர்ந்து வழித்தடத்தில் சென்றுவிட ஒருவர் சரிசெய்துவிட்டு போனார்.  அடுத்த மூறையும் இவன் ஆடியதில் அது நகர்ந்துவிட அந்த தம்பி வந்து பப்லூவிடம் “ஆடாத தம்பி” என்றார். பப்லு சீரியஸாக “Wrestling ஆடத்தானே காசு கொடுத்தோம். ஆட வேணாம்ன்னு சொல்றீங்க?” என்றான். ஸ்கிரீனில் குத்துப்பட்ட அண்டர்டேக்கர் போல கொலைவெறியோடு போனார் அந்த தம்பி

   ஒரு ஐனூறு நோட்டையும், சில நூறு ரூபாய் நோட்டுகளையும் ஸ்வாஹா செய்தவன் சொன்னான், “இதுக்கு கந்தசாமிக்கு போயிருந்தா கம்மியாதானே ஆயிருக்கும்”.  மரியாதையா உங்க டாடிகிட்ட காசு வாங்கித் தாடா என்றேன். டாடி வந்தவுடன் ஆரம்பித்தான்.”நாம் அப்பவே சொன்னேன் டாடி. வேற ஏதாவது விளையாடலாம்னு இவன்தான் கேட்காம, அவன போட்டு அடிச்சு, ரத்தம் வந்து பெரிய பிரச்சினை ஆயிடுச்சு”. அவர் ரணகளமாகி ”என்னங்க ஆச்சு?யாரை அடிச்சிங்க” என்று என்னைக் கேட்க, சத்தம் போடாமல் சிரித்த பப்லு சீரியஸாக சொன்னான்” அண்டர்டேக்கரதான் டாடி.பாவம்”.

******************************************************

காரில் சென்றுக் கொண்டிருந்தோம் நானும் பப்லுவும். முன்னே சென்ற காரில் எதையோ படித்தவன் சொன்னான்” அவங்க fire family போலிருக்குடா”. ஏன் என்றதற்கு அந்த வண்டியில் எழுதி இருந்த பெயர்களை படித்து காண்பித்தான். “சக்தீ, கீர்த்தீ, கார்த்தீயாம். பின்னாலிருந்த அம்மா திட்டிக் கொண்டிருதார்கள். ஏம்மா திட்டறீங்க என்றவுடன் அவர்களும் ஒரு பப்லு கதையை சொன்னார்கள். வீட்டிற்கு வந்த ஒரு அங்கிள், சிரிக்காமல் இருக்கும் விளையாட்டுக்கு அழைத்தாராம். அடக்க முடியாமல் உடனே சிரித்த பப்லுவிடம், எப்படி ஜோக்கே சொல்லாம சிரிக்க வச்சேன் பார்த்தியா என்று தன்னைத்தானே பீட்டர் விட்டிருக்கிறார்.கடுப்பான பப்லு சொன்னானாம் ”உங்க மூஞ்சிய பார்த்து எப்படி சிரிக்காம இருக்கிறது?வி.ஜி.பிக்கு போனா ப்ரைஸ் உங்களுக்குத்தான் கிடைக்கும்”

******************************************************

இன்னொரு நாள்.  பப்லு,அம்மா, நான் மூனு பேர் மட்டும்தான் இருந்தோம். என்னடா சமைப்பது என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார்கள். எது சொன்னாலும் அவர்கள் முடிவு செய்ததைத்தான் செய்வார்கள் என்று தெரிந்த நான், உங்க இஷ்டம் என்றேன். மோர் குழம்பு வைக்கவா என்றார்கள்?. நானும் சரி. கொஞ்சமா வைங்க என்றேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த பப்லு சொன்னான், டேய் கொஞ்சமா வச்சா அது லெஸ் குழம்புடா. நிறைய வச்சாதான் மோர் குழம்பு என்றான். அவனை தூக்கிய நான் சுத்தி போடுங்கம்மா என்றேன். டைனிங் டேபிளுக்கு அந்த பக்கம் இருந்த அம்மா, சுத்தி வந்து போட்டார்கள், என் தலையில் (அட அவருக்கு இல்லைங்க. எனக்குதான்). உன்னாலதான் இப்படி ஆயிட்டான் என்று.

******************************************************

untitled மொக்கையில் மட்டுமல்ல, நடனத்திலும் பப்லு என் டீம்தான்

யோகாவெல்லாம் செய்கிறான் பப்லு. வீட்டுக்கே வந்து சொல்லித் தருகிறார் மாஸ்டர் ஒருவர். ஆர்வத்தில் இவன் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாகவே செய்கிறான் போல. பத்மாசனத்தில் அமர்ந்தவனை முன்னே வர சொல்லி இருக்கிறார். வேகமாக சாய்ந்தவன் தொபுக்கடீர் என்று குடை சாய்ந்த வண்டியை போல் கவிழ்ந்து விட்டானாம். ரப்பர் போல வளையறீயேப்பா என்றாராம் மாஸ்டர். மேட்டர் அதுவல்ல. மறுநாள் ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தவன் தப்பாக எழுதிவிட்டு கையால் அழிக்க முயற்சி செய்திருக்கிறான். ஏண்டா என்றால், இவன் தான் ரப்பர் ஆச்சே. அதனால்தானாம்.

******************************************************

மீண்டும் யூ.எஸ் செல்லவிருக்கிறார் அக்கா. போகலாமா வேண்டாமா என்று பேசிக் கொண்டிருந்தோம். சம்மர் விடுமுறையில் உன்னையும் கூட்டிட்டு போறேண்டா என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். உஷாரான பப்லு கேட்டான் “என்னையும் கூட்டிட்டு போனா யூ.எஸ்ஸுக்கு குண்டு எடுத்துட்டு போறேன்னு உன்னை போலிஸ் புடிச்சிடாதா மம்மி” என்றான். அக்கா யோசிப்பார் என்று நம்புகிறேன்

******************************************************

சென்ற முறை பப்லு பற்றி எழுதிய பதிவுக்கு 3 ஓட்டுகளே விழுந்தது. அதை கவனித்த பப்லு உனக்கு மட்டும் நிறையா ஓட்டா என்று கேட்டான். அதனால் வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை தமிளிஷிலும், தமிழ்மணத்திலும் போட்டு பப்லுவை வெற்றி பெற செய்யுங்கள். எனக்கு ரெண்டு அடி குறைவாக கிடைக்க உதவுங்கள். பப்லுவின் பராக்கிரமங்களை தொடரலாமா என்றும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

33 கருத்துக்குத்து:

டம்பி மேவீ on September 22, 2009 at 9:31 AM said...

appada seat potachu ....

padichittu varen

டம்பி மேவீ on September 22, 2009 at 9:32 AM said...

karki vera yetho elutha poringa nnu sonninga .... antha matter ennachu

டம்பி மேவீ on September 22, 2009 at 9:40 AM said...

செம கலக்கல் கார்கி.... கார் கி ......

உங்களை ஓவர் டேக் பண்ணிவிடுவர் போல் இருக்கே ......


நேத்து உங்களிடம் பேசியதற்கே இன்னும் என் காதுகளில் ரத்தம் வந்து கொண்டு இருக்கிறது

பாலா on September 22, 2009 at 10:02 AM said...

சென்ற முறை பப்லு பற்றி எழுதிய பதிவுக்கு 3 ஓட்டுகளே விழுந்தது. அதை கவனித்த பப்லு உனக்கு மட்டும் நிறையா ஓட்டா என்று கேட்டான். அதனால் வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை தமிளிஷிலும், தமிழ்மணத்திலும் போட்டு பப்லுவை வெற்றி பெற செய்யுங்கள். எனக்கு ரெண்டு அடி குறைவாக கிடைக்க உதவுங்கள். பப்லுவின் பராக்கிரமங்களை தொடரலாமா என்றும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

இதுக்கு நீ தூக்கு மட்டிக்கலாம் மாப்பி

சரிப்பா ஓடட்டும் போட்டாச்சு--

விக்னேஷ்வரி on September 22, 2009 at 10:13 AM said...

ஏழு, கார்க்கி வரிசையில் பப்லு?
நடத்துங்க. ஆமா, பப்லுவின் படம் எங்க? ஸ்டில் போடாம அவர் பேன்ஸைக் குறைச்சிடாதீங்க.

Anonymous said...

//என்னையும் கூட்டிட்டு போனா யூ.எஸ்ஸுக்கு குண்டு எடுத்துட்டு போறேன்னு உன்னை போலிஸ் புடிச்சிடாதா மம்மி//

இப்படி சேம் சைட் கோல் போடறானே பப்லு. மாமனும் மருமகனும் இப்படித்தான் இருக்கணும்ங்கறதுக்கு எடுத்துக்காட்ட இருக்கீங்க. தொடரட்டும் பப்லுவின் பராகிரமங்கள்.

Anonymous said...

ஓட்டு போட்டாச்சு

சுசி on September 22, 2009 at 11:05 AM said...

பப்லு சூப்பர்..
என்னது தொடரலாமாவா? பப்லு இதுக்கே ரெண்டு வைக்கணும் கார்க்கிக்கு.
இனிமே என் ஓட்டு பப்லுவுக்குத்தான்...

அமுதா கிருஷ்ணா on September 22, 2009 at 11:09 AM said...

பப்லுவிடம் மாட்டிய கார்க்கி பாவமா..கார்க்கியிடம் மாட்டிய பப்லு பாவமா..விரைவில் ஒரு பட்டிமன்றம் ரெடி.

கல்யாணி சுரேஷ் on September 22, 2009 at 11:52 AM said...

நாங்களும் ஓட்டு போட்டோம்ல

Kathir on September 22, 2009 at 12:43 PM said...

//டேய் கொஞ்சமா வச்சா அது லெஸ் குழம்புடா. நிறைய வச்சாதான் மோர் குழம்பு //

Super saga......

Unnai pol Oruvan......

;)

கார்க்கி on September 22, 2009 at 1:42 PM said...

மேவீ, நன்றி.அது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் இருக்கு

மாப்பி, ஏம்ப்பா இந்த கொலைவெறி?

விக்கி, ஃபோட்டோ போட்டாச்சு. தொடர முடியுதான்னு பார்ப்போம்

நன்றி அம்மிணி. அந்த சேம் சைடு கோல், அவன் அம்மா கூட இருக்க வேண்டுமென நினைப்பதால்..

நன்றி சுசி.. செய்திடுவோம்..

அமுதா மேடம் நீங்கதான் நடுவர் :)0

நன்றி கல்யாணி

நன்றி கதிர்..

யோ வாய்ஸ் (யோகா) on September 22, 2009 at 2:13 PM said...

சகா உண்மைக்கும் இது பப்லுவின் பராக்கிரமா? இல்லை உங்களதா?

எப்படியோ ரொம்பவே சிரிச்சி சிரிச்சி வாசிச்சேன்..

பரிசல்காரன் on September 22, 2009 at 2:13 PM said...

பப்லுவிடம் முதலில் ஆட்டோக்ராஃப் வாங்கியவரென்று என் பெயரும் சரித்திரத்தில் (’அப்படி’ச் சொல்லல.. கவனிச்சியா?)இடம்பெறப்போவது உறுதி!

pappu on September 22, 2009 at 2:36 PM said...

பேசாம ப்ளாக்க அந்த பையன் கிட்ட கொடுத்துருங்க!

ஆதிமூலகிருஷ்ணன் on September 22, 2009 at 3:05 PM said...

செமத்தியாக வந்திருக்கிறது. ரரரசித்தேன். தொடரட்டும் பப்லுவின் அட்டகாசங்கள்.!

நாஞ்சில் நாதம் on September 22, 2009 at 3:11 PM said...

பப்லு சரக்கடிக்காத ஏழு மாதிரி தெரியுது

// பப்லுவின் பராக்கிரமங்களை தொடரலாமா //

இதுக்கே அவரு உங்கள புரட்டியெடுக்கணும்

☼ வெயிலான் on September 22, 2009 at 3:29 PM said...

கார்க்கி - மொக்கை மன்னன்
பப்லு - மொக்கை இளவரசன் :)

ராஜராஜன் on September 22, 2009 at 4:03 PM said...

பாஸ் தயவு செய்து பப்லுவையும் இந்த சைடுல கூடிட்டு வந்துடாதிங்க.

ஒரு கார்க்கி போதும் .

பப்லு பராக்கிரமங்களை தொடரலாம் ...

போலாம் ரைட் ரைட் ..

வித்யா on September 22, 2009 at 4:05 PM said...

பப்லு - டெரர்.

பட்டிக்காட்டான்.. on September 22, 2009 at 4:43 PM said...

அருமை.. ரசித்துச் சிரித்தேன்..

இரா.சிவக்குமரன் on September 22, 2009 at 4:59 PM said...

ஹா ஹா ஹா ...தொடரட்டும் உங்கள் சேவை....

வள்ளி on September 22, 2009 at 5:25 PM said...

நல்லா இருக்கு.

தொடரட்டும்.......
பப்லுவின் பராக்கிரமங்கள்

கும்க்கி on September 22, 2009 at 6:06 PM said...

ஓட்டு போட்டுட்டேம்பா...மனசாட்சியோட.
நல்லாருங்க சாமீ.

அன்புடன் அருணா on September 22, 2009 at 7:38 PM said...

இப்போ நீதான் பாவம் கார்க்கி.....!

Anonymous said...

பப்லுன்னு பேர் வச்சாலே இப்படித்தான் போல. :)

சரி உங்க trade mark தொப்பி எதுக்கு பப்லுக்கு.

நாதஸ் on September 22, 2009 at 10:19 PM said...

:)

பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி

பித்தன் on September 23, 2009 at 7:13 AM said...

அண்டர்டேக்கரை அடிச்சாரா, பராவாயில்லையே, எனக்கு எல்லாம் அவரு அடிக்கற மாதிரிதான் கனவு வரும். பப்பு வாழ்க. உங்க அம்மா சரியாதான் சொல்லியிருக்காங்க, ஒழுங்க உங்க அக்காவ அவனை யு எஸ் கூட்டிப்போக சொல்லுங்க இல்லனா நீங்க அவனை ஒருவழி பண்ணீடுவீங்க.

இவன் அகில உலக பப்பு இரசிகர் மன்றம்.

Anonymous said...

நல்லாத்தேன் இருக்கு...

பட்டாம்பூச்சி on September 23, 2009 at 11:09 AM said...

:)

Karthik on September 23, 2009 at 4:30 PM said...

உங்க கூட சேர்றவங்கள்ளாம் இப்படி ஆய்டுவாங்களா? ;)

தமிழ்ப்பறவை on September 24, 2009 at 1:38 AM said...

ஒரு கார்க்கிக்கே இங்க தாங்க முடியலை... இதுல ஜூனியர் கார்க்கியுமா...??
ரசித்தேன் உங்கள் கம்பைலேஷனை...

 

all rights reserved to www.karkibava.com