Sep 21, 2009

ஈவ்னிங் யூ கம்யா அண்ட் நைட் கோ யா


 

tamil   

பப்லு மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனது தமிழ் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன், பஸ்ஸுக்கு தமிழ்ல என்னடா? அவன் பஸ்தான் என்கிறான். அப்படி இருக்காது பப்லு, தமிழ் வேற மொழி, ஆங்கில வேற மொழி என்கிறேன். புத்தகத்தை வேகமாக வாங்கி, 32வது பக்கத்திற்கு தாவுகிறான். பச்சை நிற பல்லவனுக்கு கீழே “ப ஸ்” என இருக்கிறது. அதற்கு அடுத்து மஞ்சள் நிறப் படத்திற்கு கீழே ”ஆட்டோ” என்றிருக்கிறது. நீ சரியா படிக்காம எனக்கு சொல்லித் தறீயா என்கிறான்.

நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.. 

மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++  தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient  என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.

மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும்  இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.

    ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in hyderabad?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம்  எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.

இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karki. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.

முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?

இந்த தேர்தலில் 66%  மக்கள்  வோட்டளித்தனர்.

மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.

   மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.

48 கருத்துக்குத்து:

♠ ராஜு ♠ on September 21, 2009 at 9:53 AM said...

இப்ப பாருங்களேன்.
நீங்க என்னைப் பொறுத்த வரை ன்னு. எழுதியிருக்குறத படிக்காம
(பார்க்காம) கொஞ்ச பேராச்சும் மல்லுக்கு நிப்பாங்க.
:-)

நர்சிம் on September 21, 2009 at 10:22 AM said...

வாழ்க.

தராசு on September 21, 2009 at 10:37 AM said...

//ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது.//

எனக்கு ஆத்திரம் வருகிறது.

//தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.//

நெருடுதே தல.

தராசு on September 21, 2009 at 10:38 AM said...

//அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karki. I am 26 years old என்பது நுனிப்புல்.//

அதுக்குன்னு சந்தடி சாக்குல வயசப் பத்தி இந்த விளம்பரம் அவசியம்தானா????

அறிவிலி on September 21, 2009 at 11:00 AM said...

புரியவில்லை.....

//ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும். //

ஆங்கிலம் தெரியுமென்று சொல்வதற்கே இதையெல்லாம் படித்திருக்க வேண்டுமா, அல்லது ஆங்கிலமே சிறந்தது என்று சொல்பவர்கள் இதையெல்லாம் படித்திருக்க வேண்டுமா???

அப்படியென்றால் தமிழ் தெரியும் என்று சொல்பவர்கள் தொல்காப்பியத்தையும் சீவக சிந்தாமணியையும் படித்திருக்க வேண்டுமா?

மொழியின் முக்கிய பயன்பாடு தகவல் பரிமாற்றம்தான். தமிழாகவே இருந்தாலும் கேட்பவர்களுக்கு புரியாவிட்டால் பேசி என்ன பயன்?

கலப்படமில்லாத தமிழ் சொற்றொடர்களை புரிந்து கொள்வதே பலருக்கும் கடினமாக இருக்குமே.

ரசனைக்காரி on September 21, 2009 at 11:01 AM said...

////தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.//

நெருடுதே தல.//

ஒருவன் எத்தனை மொழியில் புலமை பெற்றிருந்தாலும் முதலில் சிந்திப்பது தன் தாய் மொழியில் தான்..
நீங்களே யோசிச்சுப்பாருங்க... உங்க மேல் அதிகாரி உங்ககிட்ட எதோ கேக்குறார் அப்படினா உங்கள் பதில் உங்க மூளைக்குள்ள உடனே ஆங்கிலத்துலையா பதில் ஓடும்??!!! தமிழ்ல தானே??
அது மாதிரி தான்... தாய்மொழியில் சிந்திப்பதை தான் பிற மொழிகளில் உங்களால் வெளிப்படுத்த முடியும் தராசு ....

Anonymous said...

//ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். //

Well Said

பிரபாகர் on September 21, 2009 at 11:08 AM said...

சகா,

ஆங்கிலம் இன்று உலகளவில் வியாபித்திருக்க காரணம் அதன் உள் வாங்கல் தான். வணக்கம், இட்லி போன்ற வார்த்தைகளை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஸ்னரியில் பார்க்கலாம். ஆட்டோ, பஸ், கம்ப்யூட்டர், சைக்கிள் போன்ற வார்த்தைகளை அப்படியே உபயோகப்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.

தேவையான ஒரு பதிவு சகா. வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

சுசி on September 21, 2009 at 11:13 AM said...

நல்லா எழுதி இருக்கீங்க கார்க்கி...
இங்க கூட பசங்களுக்கு முதல்ல தாய் மொழிய கத்து குடுங்கன்னுதான் சொல்வாங்க. காரணம்
//தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது. //

Mahesh on September 21, 2009 at 11:16 AM said...

அன்றாட வாழ்க்கையில் தூய தமிழ்ங்கறது அவ்வளவு 'ப்ராக்டிகல்' கிடையாது சகா.... ஆங்கிலமே இப்பொது உலக மொழியானதுக்கு பிறகு பல மொழிச் சொற்கள் ஆங்கிலத்துல கலந்துடுச்சு. 50% தான் ஆங்கிலம்;மீதியெல்லாம் மொழிக்கலப்புதான்.

radhika on September 21, 2009 at 12:31 PM said...

மொழியின் முக்கிய பயன்பாடு தகவல் பரிமாற்றம்தான்.

this is the basic statement of this post friend. karki wants to tell that language is not just an communication tool. its more than that.

கலப்படமில்லாத தமிழ் சொற்றொடர்களை புரிந்து கொள்வதே பலருக்கும் கடினமாக இருக்குமே.

this is shame. really.

வணக்கம், இட்லி போன்ற வார்த்தைகளை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஸ்னரியில் பார்க்கலாம். ஆட்டோ, பஸ், கம்ப்யூட்டர், சைக்கிள் போன்ற வார்த்தைகளை அப்படியே உபயோகப்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து.

we too accept many words from other language. but when we have specific word in tamil why should we accept other language words?does english accept other language word when there is an english word?

superb post karki. i dont know how to type in tamil font. otherwise i will type in tamil only. i dunt want to use englsih script to write in tamil. Hats off friend.

Prosaic on September 21, 2009 at 12:44 PM said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!

அறிவிலி on September 21, 2009 at 1:13 PM said...

//this is the basic statement of this post friend. karki wants to tell that language is not just an communication tool. its more than that.//

Nowhere I have mentioned it is only a communication tool. Yes, it is more than that for those who can understand.

//this is shame. really.//

ஆம், டீ கடையில் போய் குளம்பியும் கொட்டை வடி நீரும் கேட்டு கடைக்காரருக்கு புரியவில்லை என்றால் "It will really be a shame"

//we too accept many words from other language. but when we have specific word in tamil why should we accept other language words?does english accept other language word when there is an english word//

ஆங்கிலமே முற்றும் தெரியாத, பேச்சுத் தமிழ் மற்றுமே தெரிந்த பல பாமரர்களுக்குகூட பஸ்ஸும், சைக்கிளும் தமிழ்தான்.

பேச்சுத்தமிழில் ஆங்கிலக் கலப்பை தவிர்ப்பது எளிதல்ல என்றே கூறுகிறேன்.

பாலா on September 21, 2009 at 1:38 PM said...

மச்சான் அப்பப்பபோ இப்புடி எதாவுது போட்டு கவுத்து புடுறியே
டமில் வால்க

தராசு on September 21, 2009 at 1:44 PM said...

ரசனைக்காரி,

நான் நெருடுதுன்னு சொன்னது, தாய்மொழியான தமிழின் முக்கியத்துவம் குறித்த வாக்கியத்தில் "more efficient" என்ற ஆங்கில வார்த்தையை.

Cable Sankar on September 21, 2009 at 2:26 PM said...

நேத்து நீயா நானா பார்த்த பாதிப்போ..?

ரசனைக்காரி on September 21, 2009 at 2:36 PM said...

தராசு,

இந்த ஆங்கிள்ள பாக்க விட்டுடேன்...சின்ன பொண்ணு தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சு விட்டுருங்க.

//நேத்து நீயா நானா பார்த்த பாதிப்போ..?//

நானும் ரீப்பீட்டு....

நேசன்..., on September 21, 2009 at 2:56 PM said...

என் பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர் தன் 3 வயது மகனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன்,பின்னே என்னப்பா மாசம் 2000 ரூபா கட்டிப் படிக்கவைக்கிறோம் இவன் என்னடான்னா அம்மா அப்பான்னே கூப்புடுறான் மம்மி,டாடின்னு சொல்லவே மாட்டேங்குறான் என்றார்...........

மணிகண்டன் on September 21, 2009 at 2:59 PM said...

***
இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா?
***

ஆமாம்.

பிரியமுடன்...வசந்த் on September 21, 2009 at 3:05 PM said...

அப்படியே இட்லிக்கு தமிழ் பேர்

ஃப்ரைட் ரைஸ்க்கு தமிழ் பேர்

கார்க்கு தமிழ் பேர்

சிக்கன் 65க்கு தமிழ் பேர்

சொல்லி பாருங்க சகா.....

puli on September 21, 2009 at 3:06 PM said...

¦Á¡Æ¢ ±ýÀÐ ´Õ ¸ÕÅ¢§Â. ¿ÁÐ ¸ÕòÐ츨ÇÔõ, ±ñ½í¸¨ÇÔõ ÀâÁ¡È¢¦¸¡ûǧÅ. ºí¸ ¸¡Äò¾¢Ä¢Õõó§¾ ¾Á¢ú ¦Á¡Æ¢ Á¢¸ ¸Îõ Á¡Ú¾ø¸¨Ç ºó¾¢òÐ ÅóÐûÇÐ. ±ó¾ ¦Á¡Æ¢ Ò¾¢Â ¦º¡ü¸¨Ç §º÷òÐ ¦¸¡ûÙõ ;ó¾¢Ãõ «¾¢¸õ ¦ÀüÚûǧ¾¡, «Ð§Å ÅÇÕõ ¦Á¡Æ¢Â¡¸ þÕóÐûÇÐ. ¾Á¢ØìÌõ Ò¾¢Â ¦º¡ü¸û §¾¨Å§Â.

please translate to unicode.

puli on September 21, 2009 at 3:18 PM said...

மொழி என்பது ஒரு கருவியே. நமது கருத்துக்களையும், எண்ணங்களையும் பரிமாறிகொள்ளவே. சங்க காலத்திலிரும்ந்தே தமிழ் மொழி மிக கடும் மாறுதல்களை சந்தித்து வந்துள்ளது. எந்த மொழி புதிய சொற்களை சேர்த்து கொள்ளும் சுதந்திரம் அதிகம் பெற்றுள்ளதோ, அதுவே வளரும் மொழியாக இருந்துள்ளது. தமிழுக்கும் புதிய சொற்கள் தேவையே.

கார்க்கி on September 21, 2009 at 4:00 PM said...

நன்றி ராஜு. :)))

நன்றி சகா

அதற்காகத்தான் அதை சொன்னேன் தராசு. நானும் பலிகடாதானே

அறிவிலி, நான் சங்கத் தமிழில் பேச சொல்லவில்லை. நம்மால் பிற மொழிக் கலப்பின்றி பேச முடியாதா? இந்தியிம் பேசுபவர்கள் 600 என்படஹ்ற்கு கிட்டதட்ட எல்லோரும் ச்சே செள என்றே சொல்கிறார்கள். நாம் எல்லோரும் six hunderd என்றே சொல்கிறோம்.

நன்றி ரசனைக்காரி

நன்றி சின்ன அம்மிணி

நன்றி பிரபாகர். ஆனால் ஆங்கிலம் தன் மொழியில் இல்லாத வார்த்தயை மட்டுமே கடன் வாங்கும். pizzaaவை நானும் பிஸா என்றே சொல்கிறேன். ஆனால் ஏன் பேருந்து பஸ் ஆக வேண்டும்?

நன்றி சுசி

கார்க்கி on September 21, 2009 at 4:10 PM said...

மஹேஷ், நிச்சயம் இப்போது சாத்தியமில்லை.இந்த அளவுக்கு ஆனதற்கும் நாம் தான் காரணம். இப்போதாவது விழிக்க வேண்டும். ஆங்கில 50% தான். ஆனால் bus என்பதற்கு பதில் வேறு மொழி வார்த்தை ஆங்கில அகராதியில் உண்டா? அதை ஏன் புரிந்துக் கொள்வதில்லை நாம்.

நன்றி ராதிகா

நன்றி ப்ரொசாய்க்

அறிவிலி, மெட்ராஸை சென்னை என்று மாற்றியபோது இது பொதுமக்களிடம் எடுமடாது என்றே நினைத்தேன். இன்று 99% சென்னை என்றே சொல்கிறார்கள். தேநீர் கேட்டால் நல்லாத்தானே இருக்கு? மாற்றம் வர வேண்டுமென்றே விரும்புகிறேன். நாளையே அல்ல

மாப்பி, வாழ்க வாழ்க

சங்கர்ஜி, அந்த டிராமைவை நான் பார்ப்பதில்லை

நேசன், என்ன சொல்வது? தலையெழுத்து

மணிகண்டன், என் கேள்வியை ஒப்புக் கொள்கிறீர்களா அல்லது, ஆங்கிலமே என்றே சொல்றீங்களா சகா?

வசந்த், பெயர்சொல்லை(noun) மொழி பெயர்த்தால் இப்படித்தான்.silly pointஎன்பதை அசட்டுப் புள்ளி என்றார் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர். நான் சொல்வது தமிழ் சொல் இருக்க, தமிழ் புத்தகத்தின் ஏன் பஸ்?

புலி, நல்ல கருத்து. இன்றுவரை சைனா, ஜப்பான், இன்னும் பல அய்ரோப்பா நாட்டு மொழிகள் 10% தஙக்ள் மொழியிலே பேசுகிறார்கள். எந்த மொழி காலத்திற்கேற்ப வார்த்தைகளை உருவாக்குகிறதோ அதுவே நிலைக்கும். ஆங்கிலம் போல கடன் வாங்க கூடாது. சைனா போல உருவாக்க வேண்டும்.

அமுதா கிருஷ்ணா on September 21, 2009 at 4:18 PM said...

yesterday this topic was discussed in neeya naanna program in vijay channel...
karki some problem in my system..so am using laptop...not able to type in tammil..sorry....good discussion!!!

Truth on September 21, 2009 at 4:19 PM said...

வெள்ளை அழகு, கருப்பு அழகின்மை
ஆங்கிலம் அறிவு, தமிழ் அறிவின்மை

இப்படி தான் பலரும் நினைச்சிருக்காங்க, வெள்ளை கருப்பு என்பது வெறும் நிறங்கள் தான். அதேப்போல் ஆங்கிலம், தமிழ் என்பது வெறும் மொழிகள் தான்.

நிறங்கள் அழகையும், மொழிகள் அறிவையும் வெளிபடுத்த உபயோகப் படுத்துவது என நினைப்பது தான் அறிவின்மை.

நீங்கள் இது வரை எழுதிய பதிவுகளில் இது டாப். வாழ்த்துக்கள் கார்க்கி.

நர்சிம் on September 21, 2009 at 4:21 PM said...

கனி இருப்ப ஹனி கவர்ந்தற்று’ன்னு சொல்றீங்க..

நல்ல பதிவு சகா.

அறிவிலி on September 21, 2009 at 4:30 PM said...

சரி.. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க.

பரிசல்காரன் on September 21, 2009 at 4:34 PM said...

வெல் செட்!

வித்யா on September 21, 2009 at 5:25 PM said...

நல்ல பதிவு.

இரா.சிவக்குமரன் on September 21, 2009 at 5:59 PM said...

good....

Truth on September 21, 2009 at 7:03 PM said...

//பரிசல்காரன் said...
வெல் செட்!

ஹி ஹி... இதுக்கு பஸ், ஆட்டோ பரவாயில்லை :-)

வெண்பூ on September 21, 2009 at 7:51 PM said...

தமிழ் லாங்குவேஜ் பத்தி கார்க்கி போட்டிருக்குற போஸ்ட் சூப்பர்யா.. கீப் இட் அப் கார்க்கி.. ஹி..ஹி :)))

தீப்பெட்டி on September 21, 2009 at 8:30 PM said...

மிக நல்ல அவசியமான பதிவு..

டம்பி மேவீ on September 21, 2009 at 9:18 PM said...

எனக்கு எந்த மொழியும் முழுமையாய் தெரியாது ........ அனா சுத்தமான தமிழ் பேசுவது என்பது நடைமுறைக்கு கொஞ்ச கஷ்டம் ......


உலகில் எந்த மொழியும் கலப்பு இல்லாமல் வளர்ந்தது இல்லை ....... அதிககாலத்தில் மனிதன் போட்ட சத்தங்களை பகுத்து ....... எல்லா மொழிகளும் வந்தது.

டம்பி மேவீ on September 21, 2009 at 9:26 PM said...

"ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது."


இது உண்மை தான் கார்கி....... பல சாட்சிகள் இருக்கு உலக சரித்திரத்தில் ......


ex; ஆஸ்திரேலியா பழங்குடி மக்கள்

விக்னேஷ்வரி on September 21, 2009 at 11:02 PM said...

Nice Post. Good writing.

pappu on September 21, 2009 at 11:35 PM said...

கொஞ்சம் வெறுப்புதான்!
எனக்கு குழப்பமாகவும் உள்ளது! நாமே ஒருவன் ஆங்கிலம் பேசும் போது கொஞ்சம் அறிவாளியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது என நினைக்கும் போது எனக்கு ஏன் இப்படி என்ற வெறுப்பு!

கோபமில்லை!

கார்க்கி on September 22, 2009 at 8:32 AM said...

நன்றி அமுதா மேடம். நான் நீயா நானா பார்ப்பதில்லை

ட்ரூத் சரியா சொன்னிங்க.

அறிவிலி, ரைட்டு சகா

டேங்க்ஸ் பரிசல்

நன்றி வித்யா

நன்றி சிவக்குமாரன்

ஹிஹிஹி..வொய்ட் ஃப்ளார் டேங்க்ஸ்

நன்றி தீப்பெட்டி

தகவலுக்கு நன்றி டம்பி மேவீ

நன்றி விக்கி

நன்றி பப்பு :)))

கதியால் on September 22, 2009 at 9:10 AM said...

அப்பாடா ஒரு வழியா வயது 26 எண்டு சொல்லியாச்சு......பெரிய வேலை முடிஞ்சுது....!!!

மங்களூர் சிவா on September 22, 2009 at 12:00 PM said...

வாழ்க!

அன்புடன் அருணா on September 22, 2009 at 7:51 PM said...

நிறைய கருத்துக்களுடன் உடன்பாடில்லை என்றாலும் நல்ல பதிவு கார்க்கி..பூங்கொத்து!

அதிலை on September 23, 2009 at 12:27 AM said...

கார்க்கி,
தாங்களுடன் ஒத்துப்போகிறேன்... அனால் அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு நாம் என் பெயர் வைக்க வேண்டும்?? பஸ் பஸ்சாகவே இருந்துவிட்டு போட்டுமே .. மாட்டுவண்டி புல்லக் கார்ட் ஆகாமல் இருந்தால் சரி.. இதுதான் நம்ம 'பாலிசி' :)

Karthik on September 23, 2009 at 5:02 PM said...

வாழ்க வாழ்க! நல்ல பதிவு. :)

ஜோசப் பால்ராஜ் on September 28, 2009 at 3:21 PM said...

//my name is karki. I am 26 years old // ஓ, அப்டியா ?

பதிவில சொல்லியிருக்க மற்ற கருத்துகளுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் இந்தப் பதிவில் சில ஆங்கில சொற்பிரயோகங்களை தவிர்த்திருந்தால் சிறப்பா இருந்துருக்கும்.

குடுகுடுப்பை on September 29, 2009 at 1:47 AM said...

நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை..

மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++ தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது//

இதே சிந்தனை ஓட்டம் எனக்கும் உண்டு.

நடக்கப்போவது என்னவோ பல மொழிகளின் அழிவைத்தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

நாளைப்போவான் on January 27, 2010 at 9:25 PM said...

இந்த பின்னூட்டம் கொஞ்சம் காலம் தாழ்த்தி இடப்பட்டது என்றாலும் மொழியும் அதனால் சொல்ல விழைகிற கருத்தும் காலத்தின் பிடிக்குள் அடங்காது என்ற என் எண்ணத்தினால் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.

உங்கள் பதிவு மிகச்சரியே. இந்த கணிணி உலகத்திற்குள் வந்தபின்பு தமிழ் வழியே படித்த பலரும்கூட தமிழே தெரியாது என வெளிப்படையாய் சொல்வதை கண்டு பல சமயங்களில் எரிச்சலடைந்திருக்கிறேன். எத்தனையோ நல்ல தமிழ் நாவல்களையும் கட்டுரைகளையும் என்னால் இயன்ற அளவிற்கு எடுத்துக் காட்டினாலும் அதை என்னையே படிக்கச்சொல்லி கேட்கிறவர்கள் தான் இங்கே அதிகம். அதற்கு அவர்கள் சொல்கிற அர்த்தமற்ற பதில் தமிழ் படிக்க தடுமாறும் என்பது. இது போன்றவர்களை பார்க்கும்போது தலையில் அடித்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறொன்றும் நம்மால் செய்ய இயலவில்லை.

தமிழ்க்குடியில் பிறந்து ஆங்கிலத்தில் படித்து வருகிறவர்களுக்கு காலம் காலமாய் பேசிப் பழகி இரத்தத்திலும் நம் மரபணுவிலும் ஊறிப் போன ஒரு மொழியை தெரியாது என்று வாய்க்கூசாமல் சொல்வதற்கு எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல ஒரு மொழியைக் கற்பது அந்த மொழி பிறந்த நாட்டின் நாகரிகத்தைக் கற்பதற்கு சமம். இவர்கள் இந்த மொழியை தெரியாது என்று கூறுவதால் மொழியை மட்டுமல்ல, நம் நாகரிகத்தையும் நம் பண்பாட்டையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்கள் என்பதே என் கருத்தும்...

மொத்தத்தில் வேற்றுமொழி கலப்பைக் கட்டுப்படுத்தி தமிழை எந்த அளவிற்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறோம் என்பதை நாம் யோசித்து செயல்பட வேண்டிய தருணமிது..

நாளைப்போவான் on January 27, 2010 at 9:26 PM said...

இந்த பின்னூட்டம் கொஞ்சம் காலம் தாழ்த்தி இடப்பட்டது என்றாலும் மொழியும் அதனால் சொல்ல விழைகிற கருத்தும் காலத்தின் பிடிக்குள் அடங்காது என்ற என் எண்ணத்தினால் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.

உங்கள் பதிவு மிகச்சரியே. இந்த கணிணி உலகத்திற்குள் வந்தபின்பு தமிழ் வழியே படித்த பலரும்கூட தமிழே தெரியாது என வெளிப்படையாய் சொல்வதை கண்டு பல சமயங்களில் எரிச்சலடைந்திருக்கிறேன். எத்தனையோ நல்ல தமிழ் நாவல்களையும் கட்டுரைகளையும் என்னால் இயன்ற அளவிற்கு எடுத்துக் காட்டினாலும் அதை என்னையே படிக்கச்சொல்லி கேட்கிறவர்கள் தான் இங்கே அதிகம். அதற்கு அவர்கள் சொல்கிற அர்த்தமற்ற பதில் தமிழ் படிக்க தடுமாறும் என்பது. இது போன்றவர்களை பார்க்கும்போது தலையில் அடித்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறொன்றும் நம்மால் செய்ய இயலவில்லை.

தமிழ்க்குடியில் பிறந்து ஆங்கிலத்தில் படித்து வருகிறவர்களுக்கு காலம் காலமாய் பேசிப் பழகி இரத்தத்திலும் நம் மரபணுவிலும் ஊறிப் போன ஒரு மொழியை தெரியாது என்று வாய்க்கூசாமல் சொல்வதற்கு எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல ஒரு மொழியைக் கற்பது அந்த மொழி பிறந்த நாட்டின் நாகரிகத்தைக் கற்பதற்கு சமம். இவர்கள் இந்த மொழியை தெரியாது என்று கூறுவதால் மொழியை மட்டுமல்ல, நம் நாகரிகத்தையும் நம் பண்பாட்டையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்கள் என்பதே என் கருத்தும்...

மொத்தத்தில் வேற்றுமொழி கலப்பைக் கட்டுப்படுத்தி தமிழை எந்த அளவிற்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறோம் என்பதை நாம் யோசித்து செயல்பட வேண்டிய தருணமிது..

 

all rights reserved to www.karkibava.com