Sep 17, 2009

நான் வீணாப் போன கதை


  

   தாமிரா என்னும் ஆதி என்னும் ஆதிமூலகிருஷ்ணன் அழைத்த தொடர்பதிவு இது. ஆறு தன் புவியியல் கூறுதல் (ஹிஹிஹி. நான் தான் தளபதி ஃபேன் ஆச்சே. எப்படி வரலாறுன்னு சொல்லுவேன்). நிகழ்ச்சிக்கு போகலாமா?

OgAAAAAdDYpiEAWxA2LS9t8wHPkjq8d-XkTQB7AA5OCCxd8n93EpZ6Wuxrbqiyjyj33qDLkfgZDYAOnVs246M8mtSdAAm1T1UKmJ6T43_9PoSS9RQDxLIGgbiiBs

  எனக்கொரு கஸின் இருக்கான்ன்னு அடிக்கடி சொல்லுவேனில்ல. அந்த புண்ணியவான் தான் எனக்கு பிளாக அறிமுகப்படுத்தினான். அப்போ இந்தியா யார் கூடவோ கிரிக்கெட் ஆடிட்டு இருந்த நேரம். அவன் டோனி கிரெய்க், நான் ஹர்ஷா போக்லே. இங்கிலிஷ்ல ஒரு பிளாக் ஓப்பன் செஞ்சு விளாச ஆரம்பிச்சோம். சச்சின் ஏன் அந்த பாலை கவர் டிரைவ் பண்ணல, திராவிட் ஏன் கேப்டன் ஆனவுடன் அதிகமா நகம் கடிக்கிறாருன்னு அடிச்சு விடுவோம். திடீர்னு ஒரு நாள் தமிழ்ல எழுதினா என்னன்னு ஒரு ஐடியா.

ஜுலை 10. நாம அதிகமா படிச்சது அப்போது சுஜாதாதான். அவர் மேல பாரத்த போட்டு, நன்றியும் சொல்லி கிளப்பிய வண்டிதான் இது. ஆரம்பத்தில் என் நண்பர்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி படிக்க சொன்னேன். அதில் ஒருவன் தான் பாலாஜி. நம்ம துபாய் மச்சான் குசும்பனின் ரூம் மேட். அவன் தான் தமிழ்மணத்தை அறிமுகப்படுத்தி, அதில் இணைக்க சொன்னான். அப்புறம்தான் அது வலையூர் அல்ல, வலையுலகம்ன்னு தெரிஞ்சுது. ஆரம்பத்தில் 3000ஹிட்ஸுக்கு ஒரு நன்றி என்றெல்லாம் பதிவு போட்டேன். கொஞ்சம் கொஞ்சமா வண்டி ஸ்பீடு எடுக்க ஆரம்பிச்சது. முதல் ரெண்டு மாசம் மொக்கையே கிடையாது. அட நம்புங்க.  வேணும்ன்னா நீங்களே போய் படிச்சுப் பாருங்க.

என்னை முதன்முதலில் மொக்கை போட வைத்தவர் பரிசல்தாங்க. அப்போதெல்லாம் தினமும் இரண்டு எதிர்பதிவாது வரும். நமக்கும் அந்த ஆசை வர பரிசலின் அவியலை இப்படி கொத்தினேன். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். அடடா இதுதாண்டா நம்ம ரூட்டுன்னு ஜூட் விட்டேன். செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொக்கைசாமி என்ற லேபிளில் 12 பதிவு போட்டு நானும் பிரபல பதிவராக முயற்சி செய்தேன். செப்டம்பர் 23 என் பிறந்த நாள். அன்று மட்டும் 4 பதிவு போட்டேன். அரண்டு போன வலையுலகம் யாருடா இந்த காமெடி பீஸுன்னு திரும்பி பார்த்தது. இதுவரை என்னை பார்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் திரும்பிக் கொண்டேன்.

  சூடான இடுகைக்கே நான் வொர்த் இல்லப்பான்னு நினைத்த நேரம், என் கதை ஒன்று உயிரோசையில் வெளிவந்தது. அதுதான் எனக்கே என் மீது நம்பிக்கை கொடுத்த கதை. அதைத் தொடர்ந்து தேவதை, ராமசாமி தாத்தா போன்ற புனைவுகள் எனக்கு நல்ல பேரை தந்தன. இருந்தாலும் சைடுபக்கமாகவே இவற்றை எழுதினேன். நடுசெண்டரில் புட்டிக்கதைகளும், மொக்கை பதிவுகளுமே ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.

புட்டிக்கதைகள் உருவான கதையே சுவாரஸ்யமானது. முதலில் ஏழு செய்த ஒரு கலாட்டாவை பதிவிட்டேன். பலராலும் ரசிக்கப்பட்டது அது. தொடர்ந்து எழுத சொன்னதால் இன்னொரு கலாட்டாவை எழுதினேன். நம்ம வால்பையன் தான் இதற்கு புட்டிக்கதைகள் என்று பெயரிட்டவர். அப்போது குட்டிக்கதைகள், ஜட்டிக்கதைகள் எல்லாம் பிரபலமாய் இருந்த சமயம். இதுவரை 22 புட்டிக்கதைகளை எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் ஏழு செய்த கலாட்டாவையும், நாங்கள் அடித்த கூத்தையுமே எழுதுகிறேன். கொஞ்சம் கொஞ்சம் கற்பனையும் சேர்த்துதான்.

புட்டிக்கதைகளைப் போலவே எனக்கு பெயர் தேடித் தந்தவை காதல் பதிவுகள். குங்குமம் இதழிலும் காதல் பதிவொன்றை பிரசுரித்தார்கள். யூத்ஃபுல் விகடனிலும் சில காதல் பதிவுகள் வந்திருக்கின்றன. இதுவரை படிக்காதவர்கள் இந்த லேபிளில் இருப்பதை படிக்கலாம்.அப்படியே வரலாற்று நாயகர்களையும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க.

என்னைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி ஆகனும். எங்க க்ரூப் என்று சொல்லப்படும் அனைவருக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் ஸ்பெஷலாக சில பேருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். புட்டிக்கதைகளை ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் அதிகமாகவே பாராட்டி வரும் ரமேஷ் வைத்யா, ஒரே கதைக்காக பல முறை பாராட்டி பின்னூட்டமிட்ட அனுஜன்யா, இன்றும் என்றாவது நல்ல பதிவு எழுதினால் அழைத்து பாராட்டும் பைத்தியக்காரன்,  தமிழ்ப்பறவை, கார்த்திக், இன்னும் பலர்.  இவர்கள் எல்லோருக்கும் முன்பே என் மீது பெரிய்ய்ய்ய்ய்ய்ய நம்பிக்கை வைத்த பரிசலுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

ரொம்ப ஓவரா போதோ? முடிச்சிக்கலாம் பாஸ்.

48 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on September 17, 2009 at 10:53 AM said...

வரலாறு நல்லா இருக்குங்க கார்க்கி (நாங்க வரலாறுன்னு தானே சொல்லுவோம்)

சுசி on September 17, 2009 at 11:03 AM said...

புவியியல் சூப்பரா இருக்கு கார்க்கி.

//என்னைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லி ஆகனும்.//

நிச்சயமா....

"ராஜா" from புலியூரான் on September 17, 2009 at 11:05 AM said...

//செப்டம்பர் 23 என் பிறந்த நாள்.

தல எனக்கும் அதுதான் பிறந்த நாள்.
advance wishes தல

ராஜன் on September 17, 2009 at 11:19 AM said...

நான் வீணாப் போன கதை - இந்த கதை நல்லா இருக்கு.... ஆமா இது எந்த பத்திரிக்கைலே வந்திச்சி... :)

Anonymous said...

வலையுலகையே புரட்டிப்போட்ட புரட்சிக்கதை :)
//நாம அதிகமா படிச்சது அப்போது சுஜாதாதான்//

எல்லாரையும் படிக்கவும் எழுதவும் ஆசைப்படவைத்தவர்.

ஜெட்லி on September 17, 2009 at 11:58 AM said...

நான் வீணாப் போன கதை ...

:)

ஆதிமூலகிருஷ்ணன் on September 17, 2009 at 12:59 PM said...

ங்கொய்யால.. கரெக்டா 6 வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட படம் இது. சரியா? சீரியஸா பதில் சொல்லு.

தராசு on September 17, 2009 at 1:25 PM said...

ங்கொய்யால,

இப்பிடி ஒரு படத்தப் போட்டு இன்னும் பிலிம் காட்டறியா, இரு, இரு உன்னை தனியா கவனிச்சுக்கறேன்.

பிரபாகர் on September 17, 2009 at 2:01 PM said...

வரலாறு எனக்கு பிரியாமான ஒன்று.

பிடித்தவர்களின் வரலாறு எனும் போது சொல்லவா வேண்டும்.

நிறைய தெரிந்து கொண்டேன் சகா..

பிரபாகர்.

பட்டிக்காட்டான்.. on September 17, 2009 at 2:03 PM said...

உங்க தள(தல) புவியியல் நல்லாத்தான் இருக்கு..

எப்பூடி.. :-D

வித்யா on September 17, 2009 at 2:08 PM said...

புவியியல் போரடிக்கவில்லை..

பித்தன் on September 17, 2009 at 2:10 PM said...

புட்டிகதைகள் சூப்பர் அண்ணாச்சி, பொரும்பாலும் ஒவ்வொரு தண்ணிவண்டி கூட்டத்திலும் ஒரு ஏழுமலை ஆளு இருப்பான். ஆதாலால் அந்த ஹிரோ ஹிட் ஆகிடுவார். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உங்கள் பதிவுகள், படிக்க நாங்க ரெடீ.(வெற என்ன பண்ண, ஆனி புடுங்கறதுக்கு இது பெட்டர்)

சூரியன் on September 17, 2009 at 2:11 PM said...

வரலாறு டாப்பீசு...

Truth on September 17, 2009 at 2:48 PM said...

இத விட டீசெண்டான படம் ஏதும் இல்லையா? :)

முரளிகுமார் பத்மநாபன் on September 17, 2009 at 3:05 PM said...

சகா, வரலாறு, சாரி புவியியல் அருமை. என்னோட தேவதை வந்து சேர்ந்தாளா?

முரளிகுமார் பத்மநாபன் on September 17, 2009 at 3:05 PM said...

சகா 23ஆம் தேதி நீங்க எங்க இருந்தாலும் எனக்கு ஒரு பீரை அனுப்பிவச்சிடுங்க, அவ்ளோதான். எல்லோருக்கும் முன்னால கேட்டதால முன்னுரிமை கிடைக்குமென்ற அளவில்லா நம்பிக்கையுடன். முரளி

நாஞ்சில் நாதம் on September 17, 2009 at 3:08 PM said...

உங்க புவியியல் நல்லாத்தான் இருக்கு

pappu on September 17, 2009 at 3:20 PM said...

ஓ... பீ.. பீ...யா நல்லா ஊதுங்க!

நாங்களும் செந்து ஊதுறோம்!
:)

நர்சிம் on September 17, 2009 at 3:23 PM said...

நல்லா எழுதி இருக்கீங்க சகா.

கும்க்கி on September 17, 2009 at 3:55 PM said...

pappu said...

ஓ... பீ.. பீ...யா நல்லா ஊதுங்க!

நாங்களும் செந்து ஊதுறோம்!
:)

அடப்பாவி......எப்படில்லாம் யோசிக்கறாங்கப்பா....

யோ வாய்ஸ் (யோகா) on September 17, 2009 at 4:08 PM said...

இது நீங்க வீணா போன கதையா இல்லை மொக்கை போட தொடங்கின கதையா?

நல்லாயிருக்கு

டம்பி மேவீ on September 17, 2009 at 5:10 PM said...

சரித்திரம் மிகவும் முக்கியம் அமைச்சரே.....


பதிவை முழுமையாய் படித்தேன் கார்கி ... நம்புங்க

டம்பி மேவீ on September 17, 2009 at 5:13 PM said...

உங்க சரித்திரம் யாருக்கும் பிடிக்கவில்லை போல் இருக்கே ..... பின்னோட்டம் கம்மியாக இருக்கே ...

ஹிட்ஸ் நிறைய இருக்கு என்று சொல்ல வேண்டாம் ........

டம்பி மேவீ on September 17, 2009 at 5:15 PM said...

உங்கள் பேச்சு ஆளுமைக்கு நான் ரசிகன்

டம்பி மேவீ on September 17, 2009 at 5:16 PM said...

hitlerin mein kampf padithathu pol irukku

he he he he he

டம்பி மேவீ on September 17, 2009 at 5:17 PM said...

adventures of a mokka sami nnu oru book podunga boss

டம்பி மேவீ on September 17, 2009 at 5:18 PM said...

RK than topu....

vijay ajith ellam waste

டம்பி மேவீ on September 17, 2009 at 5:21 PM said...

"நான் வீணாப் போன கதை"


ஒரு

மொக்கையே

மொக்கை போடுகிறதே


ஆச்சிரிய குறி

ரமேஷ் வைத்யா on September 17, 2009 at 5:21 PM said...

நாங்க அதிகமா எல்லாம் பாராட்டுறதில்லடீயோய்

டம்பி மேவீ on September 17, 2009 at 5:23 PM said...

மொக்கை பட்டறை ன்னு ஒரு வொர்க் ஷாப் நடத்தலாம்ன்னு பார்க்கிறேன் ... அதுக்கு நீங்கள் தான் தலைமை தங்க வேண்டும்

டம்பி மேவீ on September 17, 2009 at 5:24 PM said...

இந்த நூறாண்டின் சிறந்த இலக்கியவாதி நீங்க தான் ... ஹி ஹி ஹி

கல்யாணி சுரேஷ் on September 17, 2009 at 5:26 PM said...

சுயசரிதம் எதுவும் எழுத போறீங்களா என்ன? அதுக்கான ஒத்திகையா இது?

kanagu on September 17, 2009 at 6:41 PM said...

Varalaru sema super thalaiva... :))

ungaloda links ellam ipa padika mudiyala.. apalikka padikiren :))

chidambararajan on September 17, 2009 at 6:46 PM said...

varalarunu soninga athu anga thala

பாலா on September 17, 2009 at 6:47 PM said...

டம்பி மேவீ on September 17, 2009 5:21 PM said...
"நான் வீணாப் போன கதை"


ஒரு

மொக்கையே

மொக்கை போடுகிறதே


ஆச்சிரிய குறி

அடேடே !!!!!!!!!!!!!!!!!!!

Sinthu on September 17, 2009 at 8:54 PM said...

இந்த வரலாற்றையே இரு படமாக எடுத்திடலாம் போல இருக்கே...
விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...

தமிழ்ப்பறவை on September 17, 2009 at 10:24 PM said...

நல்லா இருந்தது புவியியல்...
அப்போ அந்த ‘fake ipl player' நீங்கதானா சகா...
இப்போதான் பரிசலோட அவியலையும், அதற்கு நீங்க போட்ட தொவையலையும் படிச்சேன்..
ச்சான்ஸே இல்லை...:-)
இன்னும் உயிரோசை கதை படிக்கவில்லை...

Mr.vettiபைய்யன் on September 18, 2009 at 1:54 AM said...

வணக்கம் கார்க்கி
”நான் வீணாப் போன கதை “
”அட்டகாசம்”, உங்களுக்கு எனது ”கீரிடம்”

எப்படி...................

Mr.vettiபைய்யன் on September 18, 2009 at 1:55 AM said...

பி போ உண்டா

செல்வேந்திரன் on September 18, 2009 at 8:01 AM said...

புட்டிக்கதைகளின் மூலமாக புனைவுலகில் புதுப்பாய்ச்சல் நிகழ்த்தியவர் கார்க்கி!

Cable Sankar on September 18, 2009 at 8:22 AM said...

கார்கியின் உண்மை படத்தை பார்க்க
http://cablesankar.blogspot.com/2009/09/blog-post_14.html

RaGhaV on September 18, 2009 at 9:37 AM said...

நான், வீணாப் போன கதை தெரியுமா கார்க்கி..?
?
?
?
?
?


எல்லாம் உங்க பிளாக் படிச்சிதான்.. :-)

Karthik on September 18, 2009 at 9:52 AM said...

//தாரணி பிரியா said...
வரலாறு நல்லா இருக்குங்க கார்க்கி (நாங்க வரலாறுன்னு தானே சொல்லுவோம்)

ரிப்பீட்டேய்ய்!! :)))

Karthik on September 18, 2009 at 9:53 AM said...

//RaGhaV said...
நான், வீணாப் போன கதை தெரியுமா கார்க்கி..??????
எல்லாம் உங்க பிளாக் படிச்சிதான்.. :-)

ரிப்பீட்டேய்ய்!!

Karthik on September 18, 2009 at 9:54 AM said...

நானெல்லாம் நல்ல பதிவு எழுதியிருக்கேன்னு தெரிஞ்சிப்பதே நீங்க பாராட்டும்போதுதான் கார்க்கி, சீரியஸாவே. :)

தமிழ்ப்பறவை on September 18, 2009 at 11:47 AM said...

//நான், வீணாப் போன கதை தெரியுமா கார்க்கி..?
?
?
?
?
?


எல்லாம் உங்க பிளாக் படிச்சிதான்.. :-)//

சரியாச் சொன்னீங்க...

Varadaradjalou .P on September 18, 2009 at 12:12 PM said...

//முதலில் ஏழு செய்த ஒரு கலாட்டாவை பதிவிட்டேன். பலராலும் ரசிக்கப்பட்டது அது. //

நானும் ஒரு ரசிகன்

மாசத்துக்கு ஒரு கதையாவது போடுங்க

வால்பையன் on September 18, 2009 at 4:50 PM said...

ஏழு மீதிருந்து பிரியத்தினாலேயே புட்டிக்கதைகள் என்ற தலைப்பை தாரை வார்த்தேன்!

 

all rights reserved to www.karkibava.com