Sep 16, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

யோகி படத்தின் போஸ்டர்கள் காண நேர்ந்தது. ஒரு படத்திற்கு இயக்குனர்தான் எல்லாமும் என்றவர் அமீர். இதுவரை வந்த படங்களிலும் அமீரின் பருத்திவீரன், அமீரின் ராம் என்றுதான் இருந்தது. யோகியின் இயக்குனர் சுப்ரமணிய சிவா. இருந்தும் சுவரொட்டிகளில் அமீரின் யோகி என்றே இருக்கிறது. ஒரு விருது நிகழ்ச்சியில் சசிகுமார் சொன்னார் “இந்த விருது கனமாய்த்தான் இருக்கு. அந்தக் கனம் தலையில் ஏறாமல் பார்த்துக் கொள்வதே என் வேலை”. நடிகர் ஆனவுடன் இண்டோர் அரங்கிலும், இரவு நேரமென்றாலும், குளிர்சாதனப்பட்ட இடமென்றாலும் கூலிங் கிளாஸோடு சுற்றும் மிஷ்கின், ஒரு வித மயக்கத்திலே சுற்றிய சேரன் என இவர்களின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. யோகி பாடல்கள் கேட்டிங்களா? யுவன் always rocks.

   எல்லோரும் தூக்கி வைத்து சொல்லும் அளவுக்கு உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. ஸ்ருதியின் திறமையில் சந்தேகமில்லை. பலவிதமான இசைக்கருவிகளை நன்றாக உபயோகப்படுத்தி இருக்கிறார். அடியே கொல்லுதே என்று பாட மட்டுமல்ல, இசையமைக்கவும் அவரால் முடியும். ஆனால் உன்னைப் போல் ஒருவன் அவருக்கான தளமல்ல என்றே தோன்றுகிறது. அடுத்த முறை ஆட வைப்பார் என்று நம்பலாம்.

**************************************************************

சுப.வீரபாண்டியன் மீது எப்படியோ ஒரு ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. எப்படியென்றெல்லாம் நினைவிலில்லை. ஆனால் சமீபகாலமாக அவரும் அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்டார். கலைஞருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது எதனால் என்று ஒரு பட்டிமன்றமாம். சுப.வீரபாண்டியன் பேசவிருப்பது, அரசியல் நாகரீகமே என்று.  என்னமோ போங்கப்பா. எல்லோருமே போங்குப்பா.(என்னையும் சேர்த்துதான்)

**************************************************************

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பப்லுவிடம். போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன்  என்றான் பப்லு. என்னைப் பார்த்துக் கேட்டான்,

எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

பாட்டி, இவனை ஹைதராபாத்திற்கே போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்.

DSC01450

பப்லுவிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் பரிசல்.

**************************************************************

சென்னையில் இருந்தாலும் ஒரு முக்கியமான நபரை சந்திக்க முடியாமலே இருந்தது. சந்திக்க போட்ட திட்டங்கள் எப்படியோ தள்ளிக் கொண்டே சென்றது. இந்த முறை பட்டறையில் பார்த்துவிட்டேன். சமீபத்திய சேரனின் தொப்பி, துள்ளுவதோ இளமை தனுஷ் போல உடம்பு, அறிவாளிகளைப் போல ரொம்ப லூசான சட்டை எனப் பார்த்த மாத்திரத்திலே அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அந்த லயோலா கல்லூரி மாணவர். மணிக்கணக்கில் பேச வேண்டியவரிடம் மணி ஆகிவிட்டதே என்று மட்டுமே பேச முடிந்தது வருத்தம். ஆனால் ஒரு தேஜஸ் அவர் பார்வையில் தெரிந்தது. எந்த துறைக்கு சென்றாலும் தன் அழுத்தமான முத்திரையை இவர் பதிப்பார் என்று மட்டும் மனம் நம்பியது. இன்னொரு நாள், நாள் முழுக்க பேச வேண்டும் கார்த்திக்.

**************************************************************

    சிறுகதை பட்டறை நிச்சயம் பெரிய வெற்றிதான். கலந்துக் கொண்ட யாருமே, அல்லது பெரும்பாலனவர்கள் அடுத்த நாளே கதையெழுதாமல் இருப்பதைத்தான் சொல்கிறேன். இன்னும் பல நிகழ்ச்சிகளை உரையாடல் அமைப்பு நடத்த வேண்டுமென்றாலும் அவர்களின் நிதி நிலைமையும் நம் கணக்கில் கொள்ள வேண்டும். வருவதாக சொல்லி, எதிர்பாராத காரணங்களால் வர இயலாமல் போனவர்களால் ஏற்பட்ட இழப்பை நாங்களும் பங்கிட்டுக் கொள்கிறோம் சுந்தர்/சிவராமன். இதே போல் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன? பெரிய அளவில் ஒரு சந்திப்பாவது நடத்த வேண்டுமென்பது என் ஆசை. என்ன சொல்றிங்க சகாக்களே?

**************************************************************

   விஜயை கிண்டலடித்து ஆயிரம் எஸ்.எம்.எஸ்கள் சுற்றுகின்றன. தினமும் யாராவது ஒரு வலையுலக நண்பர் ஒருவர் எனக்கு அதை ஃபார்வர்ட் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். ஒன்று கூட விஜய்க்கென்று ஸ்பெஷலாக இல்லை. டெம்ப்ளேட் ஜோக்காகவே இருக்கு. வேற எப்படி இருக்கனும்ன்னு கேட்கறிங்களா? இத படிங்க.

எக்ஸாம் ஹால்...

ஆசிரியர் - உங்க தோல்விப்படங்களை வரிசையா எழுதுங்க
சிம்பு - ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க சார்
ஆசிரியர் - எல்லாத்தையும் அஜீத்தே மொத்தமா வாங்கிட்டாரேப்பா.

இந்த ஜோக் அவருக்குத்தான் எப்படி பெர்ஃபக்டா செட்டாகுது? இதேப் போல் விஜய்க்கு ஒன்று.

விஜய் : நடிக்க வரலைன்னா நான் பிசினஸ் செய்திருப்பேன்.

நிருபர் : இப்பவும்தான் நடிக்க வரலையே. பிசினஸ் செய்ய போலாமில்ல?

இப்படி இல்லாமல் கடவுள் சொர்க்கதிற்கு ரோடு போட்டாராம், தியேட்டர்ல கை தட்டலையாம் என்னென்னெவோ அனுப்பறாங்க. யோசிங்க பாஸ்.

47 கருத்துக்குத்து:

ராஜராஜன் on September 16, 2009 at 10:13 AM said...

Me the first .

நாடோடி இலக்கியன் on September 16, 2009 at 10:14 AM said...

கலக்கல் காக்டெயில்.

கடைசி ஜோக் அருமை.

ராஜராஜன் on September 16, 2009 at 10:14 AM said...

//பப்லுவிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் பரிசல்//

அடுத்த கொக்கை அரசன்கிட்ட இப்பவே ஆட்டோகிராப் வாங்குகிறார் ..

தராசு on September 16, 2009 at 10:16 AM said...

//சிறுகதை பட்டறை நிச்சயம் பெரிய வெற்றிதான். கலந்துக் கொண்ட யாருமே, அல்லது பெரும்பாலனவர்கள் அடுத்த நாளே கதையெழுதாமல் இருப்பதைத்தான் சொல்கிறேன்//

உண்மை, நானும் நினைத்தேன்.

//ஆசிரியர் - உங்க தோல்விப்படங்களை வரிசையா எழுதுங்க
சிம்பு - ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க சார்
ஆசிரியர் - எல்லாத்தையும் அஜீத்தே மொத்தமா வாங்கிட்டாரேப்பா.//

அடங்கவே மாட்டீங்களா!!!!

அப்புறம் அந்த பப்லு மேட்டர்ல, யரலவழள எல்லாம் சரியா எழுதுங்கப்பா.

ராஜராஜன் on September 16, 2009 at 10:17 AM said...

இந்த சைடு கொஞ்சம் எட்டி பாருங்க

http://ennaduidu.blogspot.com/2009/09/blog-post.html

Anbu on September 16, 2009 at 10:25 AM said...

கடைசி ஜோக் அருமை.....

ஸ்ரீமதி on September 16, 2009 at 10:28 AM said...

ஹ்ம்ம்ம் :))

Anonymous said...

ஆட்டோகிராப் வாங்க வேண்டிய ஆள்தான் பப்லு.

சுசி on September 16, 2009 at 10:49 AM said...

பப்லு சூப்பர். காக்டெயில் கலக்கல்.

//எல்லோருமே போங்குப்பா.(என்னையும் சேர்த்துதான்) //

ஐ லைக் யுவர் எண்ணம்..:))

Ram on September 16, 2009 at 10:54 AM said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

மண்குதிரை on September 16, 2009 at 11:11 AM said...

siriththen

sila karuththukkaludan udan patukireen

தீப்பெட்டி on September 16, 2009 at 11:17 AM said...

ஜோக் ரெண்டும் அருமை..

பரிசல்காரன் on September 16, 2009 at 11:28 AM said...

முதல் பத்தி மட்டுமே படித்தேன். நேற்று யுவன் சந்திரசேகரின் பேச்சை சிலாகித்து எழுதிய நீ அவர் சொன்ன ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டுகிறேன்.

அது கணம் அல்ல - கனம்.

அதே போல இந்த கமெண்ட் போடும்போதுதான் உனக்கு வந்த முதல் கமெண்டைப் பார்க்கிறேன். பா.ரா. நியாபகத்துக்கு வந்தார்!

பரிசல்காரன் on September 16, 2009 at 11:32 AM said...

யோகி - யாரோடு யாரோவில் யுவனின் குரல் அப்படி ஈர்க்கிறது சகா. அதேபோல சீர்மேவும்’ பாட்டில் அவரது இசை துள்ள வைக்கிறது. (ஆனா சினேகனை யார்ப்பா பாடச் சொன்னது?)

தீம் ம்யூசிக்கில் உஸ்தாத் சுல்தான்கானின் சாரங்கி அபாரம்.

உ.போ.ஒ - வீடியோ பார்த்தியா சகா? ஸ்ருதி நல்ல ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட்!

ஜெட்லி on September 16, 2009 at 12:07 PM said...

ஏன் தல மேல கொலவெறி உங்களுக்கு???...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 16, 2009 at 12:10 PM said...

சகா, வழக்கம்போல் மிக்ஸிங்க் கரெக்ட்டா இருக்கு.
//இதே போல் பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன?//
நல்ல ஐடியா, சீக்ரம் பட்டறைய போடுங்க சாரி ஏற்பாடு பண்ணுங்க.

கல்யாணி சுரேஷ் on September 16, 2009 at 12:39 PM said...

//பாட்டி, இவனை ஹைதராபாத்திற்கே போ சொல்லு//

இதெல்லாம் நமக்கு தேவையா கார்க்கி?

Karthik on September 16, 2009 at 12:41 PM said...

கலக்கல் காக்டெயில். :))

LOL @ பப்லு கமெண்ட்.

கடைசி ஜோக்ஸில் நடுநிலை காத்ததற்கு நன்றிகள்! :))

Karthik on September 16, 2009 at 12:43 PM said...

ரொம்ம்ம்ப நன்றி கார்க்கி. உங்க வார்த்தைலாம் ரொம்ப பெரிசு, தகுதியுடையவனா ஆயிடனும்.

நர்சிம் on September 16, 2009 at 12:44 PM said...

வாழ்த்துக்கள்.

யோ வாய்ஸ் (யோகா) on September 16, 2009 at 12:58 PM said...

காக்டெயில் அருமை கார்க்கி..

வர வர மொக்கைகள் குறையுற மாதிரி இருக்கு மெச்சுரிட்டீ ஆகிட்டு வாறீங்களோ?

கார்க்கி on September 16, 2009 at 1:15 PM said...

நன்றி ராஜராஜன்

நன்றி இலக்கியன்

நன்றி தராசு. அவஙக்ள அடங்க சொல்லுங்க :)))

நன்றி அன்பு

நன்றி ஸ்ரீமதி

நன்றி அம்மிணி.

நன்றி சுசி. நாம எல்லொருமே போங்குதானே?

நன்றி மண்குதிரை

நன்றி தீப்பெட்டி. கால் இப்ப நல்லாயிடுச்சா சகா?

நன்றி பரிசல். மாத்திட்டேன். யோகியில் பாடல்கள் நல்லாவே இருக்கு. சினேகனின் வரிகள்தான் பெரிதாய் ஈர்க்கவில்லை.

நன்றி ஜெட்லீ. உங்களுக்கு ஏன் தள்பதி மேல கொலவெறி சகா?

நன்றி பாலகுமாரன். நீங்க எங்க இருக்கிங்க?

கல்யாணி, நன்றி. மாப்ளதானே.. விட்டுப் பிடிப்போம்

நன்றி கார்த்திக். :)))

நர்சிம், எதுக்கு சகா?

நன்றி யோவாய்ஸ். அதெல்லாம் இல்லப்பா. நாளைக்கே மரண மொக்கை வரலாம் :))

ghost on September 16, 2009 at 1:28 PM said...

கலக்கல் காக்டெயில்

விஜய் : நடிக்க வரலைன்னா நான் பிசினஸ் செய்திருப்பேன். நிருபர் : இப்பவும்தான் நடிக்க வரலையே. பிசினஸ் செய்ய போலாமில்ல?

சூப்பர்

Bleachingpowder on September 16, 2009 at 1:37 PM said...

//குளிர்சாதனப்பட்ட இடமென்றாலும் கூலிங் கிளாஸோடு சுற்றும் மிஷ்கின், ஒரு வித மயக்கத்திலே சுற்றிய சேரன் என இவர்களின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை//

மனசை திட படுத்திக்கோங்க தலா, சுசி கனேசனும் ஹீரோவா வரப்போறாரு

மணிகண்டன் on September 16, 2009 at 1:43 PM said...

me the 25th.

மணிகண்டன் on September 16, 2009 at 1:44 PM said...

போன கமெண்ட் எங்கள் தானை தலைவர் ராஜராஜனை கிண்டல் செய்த பரிசலுக்காக.

எம்.எம்.அப்துல்லா on September 16, 2009 at 1:54 PM said...

:)

யுவகிருஷ்ணா on September 16, 2009 at 2:05 PM said...

//அதுசரி, ஈழம் அமைப்போம் என்று உளறிய ஜெயலலிதாவையே நம்பியவர்தானே இவர்.//

எப்போது?

கொஞ்சம் முக்கியமான ஆட்களை பற்றி எழுதும்போது தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொண்டு எழுதுவது உத்தமம் கார்க்கி.

கார்ல்ஸ்பெர்க் on September 16, 2009 at 2:22 PM said...

அண்ணா, நடிக்க வரலைனா இப்ப என்ன? நாலு பேருக்கு பிடிக்குற மாதிரி இருந்தாலே போதும்.. நடிக்கத் தெரிஞ்சவங்க மட்டும் என்னத்த சாதிச்சுட்டாங்க? பீமா, கந்தசாமி கதி தான்.. Producer தெருவுக்கு வந்தது தான் மிச்சம்..

வித்யா on September 16, 2009 at 2:22 PM said...

ரைட்டு:)

மகா on September 16, 2009 at 2:32 PM said...

jokes superabu

Truth on September 16, 2009 at 3:33 PM said...

:-)

affable joe on September 16, 2009 at 3:40 PM said...

என்ன கார்க்கி உ .போ.ஒ பாடல்கள் பிடிக்கல்லையா அல்லாஹ் ஜானே,நிலை வருமா ஆகியவற்றில் கலக்கி இருப்பார் ஸ்ருதி .பப்லூவிடம் பல்பு வாங்குவதே வேலை போல ஜூனியர் கார்க்கி யாக மாற்றி விட வேண்டாம்.காக்டைல் நன்றாகவே இருந்துச்சு


சிறுகதை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில்
ஜோ விமல்

கார்க்கி on September 16, 2009 at 4:04 PM said...

நன்றி கோஸ்ட்

ப்ளீச்சிங்க, வரட்டும் வரட்டும்.. :))

மணிகண்டன், நடத்துங்க

வணக்கம் அப்துல்லாண்ணே

நன்றி லக்கி. ஞாபகத்தில் இருந்து எழுதிட்டேன். சரியான நேரத்தில் சொன்னிங்க. இனிமேல் கவனமா இருக்கேன். ஆனா எப்பவோ அவர் ஜெயலலிதாவை ஆதரிச்சு பேசியதாக்வே ஞாபகம். அந்த வரியை மட்டும் எடுத்திட்டேன்

கார்ல்ஸ்பெர்க், சுத்தமா நடிக்க வரலைன்னு சொல்லிட முடியாது. எபப்டி இருந்தாலும் அவர் ஒரு நல்ல எண்டெர்டெயினர்.

நன்றி வித்யா

நன்றி மகா

நன்றி ட்ரூத்

ஜோ, பாடல்கள் வேஸ்ட்டுன்னு சொல்லல. ஆனா என்னை அவ்வளவா கவரவில்லை.
சிறுகதையா? ஆவ்வ்வ்வ்வ்

MUTHU on September 16, 2009 at 4:06 PM said...

எல்லோரும் தூக்கி வைத்து சொல்லும் அளவுக்கு உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது.

same blood ya

டம்பி மேவீ on September 16, 2009 at 4:37 PM said...

நானும் எதாவது நல்ல எழுதி உங்களை impress பண்ணி காட்டுறேன் பாருங்க .......


அனா எனக்கு உருப்படியா ஏதும் எழுத தெரியாதே

நாஞ்சில் நாதம் on September 16, 2009 at 4:49 PM said...

//எல்லோரும் தூக்கி வைத்து சொல்லும் அளவுக்கு உன்னைப் போல் ஒருவன் பாடல்கள் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது//

பாட்டுகளால படம் சுவாரசியம் குறையுமோ?

இந்த மாதிரி படத்துக்கு பாட்டு தேவையில்ல என்பது என் கருத்து

முரளிகுமார் பத்மநாபன் on September 16, 2009 at 6:13 PM said...

சகா, பரிசலை நான் வழிமொழிகிறேன்.
சாரங்கியும் உஸ்தாதின் வாய்ஸும் நமக்கு ரொம்பவே புதுசு, கிறங்கடிக்குது, சகா.

Cable Sankar on September 16, 2009 at 6:42 PM said...

யுவன், உஸ்தாத், சாரங்கி.. மைண்ட் ப்ளோயிங்.. கார்க்கி

kanagu on September 16, 2009 at 7:59 PM said...

kalakkal padhivunga :))

Ameer-in Yogi nu potturukkurathuku kaaranam avar than andha padathin kadhai, thiraikadai, vasanam ezhuthi irukkar nu nenaikkiren..

innum andha padathin paadalkala kaekala... this weekend than kaekanum..

apram.. andha sirukadhai pataraya pathi theriyama pochu.. illaina naanum kalandhu kondu irundhiruppen..

bablu matter sema comedy :))

கலையரசன் on September 16, 2009 at 8:18 PM said...

//ஆசிரியர் - உங்க தோல்விப்படங்களை வரிசையா எழுதுங்க
சிம்பு - ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க சார்
ஆசிரியர் - எல்லாத்தையும் அஜீத்தே மொத்தமா வாங்கிட்டாரேப்பா.//

பேப்பர் எல்லாம் பத்தாது தோழா! 24" x 150" ப்லாட்டர் ரோல் தான் வாங்கி கொடுக்கனும்!!

ஆதிமூலகிருஷ்ணன் on September 16, 2009 at 8:57 PM said...

ரசித்தேன்.!

அறிவிலி on September 16, 2009 at 9:29 PM said...

:))

pappu on September 17, 2009 at 1:03 AM said...

அந்த கோடு போட்ட சட்டை நீங்களா?

கார்த்திக்குக்கு ஓவர் சப்போர்ட்டா இருக்கே! குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வாங்கி கொடுத்தானா!

தமிழ்ப்பறவை on September 17, 2009 at 2:40 AM said...

ரசித்தேன்...
//ஆசிரியர் - உங்க தோல்விப்படங்களை வரிசையா எழுதுங்க
சிம்பு - ஒரு அடிஷனல் பேப்பர் கொடுங்க சார்
ஆசிரியர் - எல்லாத்தையும் அஜீத்தே மொத்தமா வாங்கிட்டாரேப்பா.//
இது மேட்டரு... :-))

கார்க்கி on September 17, 2009 at 11:03 AM said...

அனைவருக்கும் நன்றி..

முரளி, நான் யோகி பாட்டு நல்லா இல்லைன்னு சொல்லவே இல்லையே? உன்னை போல் ஒருவன் தான் எனக்கு பிடிக்கவில்லை என்றேன்.

அன்புடன் அருணா on September 19, 2009 at 9:37 AM said...

பாவம் பப்லூ!!!

 

all rights reserved to www.karkibava.com