Sep 15, 2009

யுவன்!!!!!!!!!!!


 

                                  yuvan chandrasekar-1

   எதிர்பார்த்தது போல நல்லாவே நடந்துச்சு சிறுகதை பட்டறை. பேசிய நால்வரில் யுவனின் ஆளுமை எனக்கு ரொம்ப புடிச்சுது. கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சில வினாடிகள் தீர்க்கமாக யோசித்துவிட்டு அவர் தரும் பதில்கள் சுவாரஸ்யம். பேச்சாளர்களுக்கு வழமையாக இருக்கும் பிரச்சினை, தொடங்கிய இடத்தை விட்டு எங்கெங்கோ சென்றுவிட்டு தொடங்கிய இடத்தை”எங்க விட்டேன்” என்று கேட்பது அல்லது அதை மறந்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்வது. ஆனால் யுவன், இறுதியில் ”உங்கள் கேள்விக்கு ஓரளவுக்கு பதில் அளித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்றே முடிக்கிறார். கேள்வியைப் பற்றிய பிரக்ஞை இல்லாவிடில் அதைப் பற்றிய தன் போதாமையை வெளிப்படையாய் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார். அவரது ஹாஸ்யம் மிகவும் அழகானது. போலவே அவரது குரலும். என்னை முழுமையாய் influence செய்து விட்டார் யுவன்.

அறிவியலில் இருந்து அழகாய் அவர் வடித்த கவிதை ஒன்றை விவரித்தார். ஒரு பூ இயல்பாய் மலர்வதைப் போல, எந்தவித பூச்சுகளுமின்றி அவர் சொன்னவிதமே அழகு. இந்தப் பட்டறையைப் பற்றி பலரும் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால் கலந்துக் கொள்ளாத ஒருவர் அதை கண் முன்னால் கொண்டு வர இயலாத மொழியிலே அனைத்தும் இருக்கிறது. நேரிடையாக கலந்துக் கொண்டவர்களுக்கு எதற்கு மேலும் மேலும் தகவல்கள்? இதை எதற்கு சொல்கிறேன் என்றால், கிட்டத்தட்ட எழுதும் மொழியிலே யுவன் அந்தக் காட்சியை விவரித்தபோது எனகு முன்னே இருந்த பலரின் முகத்திலும் தெரிந்த உணர்ச்சி, அவர்கள் அந்த கவிதையை காட்சிப்படுத்திவிட்டார்கள் என்பதற்கான சாட்சி. கதையை எப்படி எழுத வேண்டும் என்று அவர் பட்டியலிடவே இல்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையிலும் கதை எழுத தொடங்கவிருக்கும் படைப்பாளிகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் வைத்திருக்கிறார்.  கவிதைக்கான பாடுபொருளையும், கதைக்கான கருவையும் எங்கிருந்து எடுக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியம்.

விமர்சனங்கள் குறித்தப் பார்வையும் சொன்னார். புனைவு என்பதே முழுக்க முழுக்க கற்பனை. method acting போல் அல்ல. தலித் பிரச்சினைகளை எழுத அவர் தலித்தாய் இருக்க வேண்டிய அவசியமில்லையே என்கிறார். அபப்டி எழுதப்பட்ட படைப்பு அவர்களின் வலியை சரியாய் பிரதிபலிக்கவில்லையென்றால், ஒதுக்குங்கள். விமர்சனம் செய்யுங்கள். ஆனால் எழுதவே கூடாது என்பது ஃபாசிசம் இல்லையா? என்ற அவரது அறச்சீற்றம், மற்ற புகழ்தேடும் எழுத்தாளர்களையுடையது போல் அரசீற்றம் அல்ல. எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார் என்பது போலே இருந்தது அவரது உடல்மொழி. கவனமாக தவிர்த்தாரா அல்லது அது அவரது இயல்பா எனத் தெரியவில்லை.

   இன்னும் பல விஷயங்கள் மனதில் ஓடுகிறது. யுவனைப் பற்றியும், அவரது படைப்புகளையும் வாசித்துவிட்டு எழுதுவது நல்லதென்று தோன்றுவதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இணையத்தில் தேடிப் படித்ததில் என்னை கவர்ந்த யுவனின் கவிதையொன்று.

"ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.

சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.

பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்மாவையோ
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்"

-யுவன் சந்திரசேகர்

38 கருத்துக்குத்து:

தராசு on September 15, 2009 at 10:10 AM said...

ஃபர்ஸ்டு,

நல்ல தகவல் கார்க்கி,

பட்டறையை அணு அணுவா அனுபவிச்சிருக்கீங்க, எங்களுக்கெல்லாம் குடுத்து வைக்கலப்பா!!!!!!

//கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.//

இது நச்!!!!!!!

தீப்பெட்டி on September 15, 2009 at 10:46 AM said...

யுவனைப் பற்றிய அறிமுகம் அருமை..

கவிதைப் பகிர்விற்கு நன்றி..

வெயிலான் on September 15, 2009 at 10:59 AM said...

தேவதாஸ் ஐயா பேசியதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே கார்க்கி! ;)

நர்சிம் on September 15, 2009 at 10:59 AM said...

மிக நல்ல பதிவு சகா.மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.ஆம்.யுவனின் பேச்சு மிக ஈர்த்தது.

ஜ்யோவ்ராம் சுந்தர் on September 15, 2009 at 11:14 AM said...

அந்த சகா ’வேற ஒருத்தர் காரணம்’னு சொல்லலையே, ’வேற ஒரு காரணம்’னு சொன்னா மாதிரி பக்கத்துல இருந்தவங்களுக்குக் கேட்டுச்சாம் :)

எவ்வளவு நல்ல கவிதைல்ல நீங்க மேற்கோள் காட்டியிருக்கறது!

சுசி on September 15, 2009 at 11:21 AM said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க கார்க்கி.
கலந்துக்க முடியலையேன்னு பொறாமையா இருக்கு.. :))

மண்குதிரை on September 15, 2009 at 11:32 AM said...

அருமையா எழுதியிருக்கீங்க நண்பா

யுவன் கவிதையும் அருமை

நாஞ்சில் நாதம் on September 15, 2009 at 11:52 AM said...

யுவனைப் பற்றிய கவிதை மேற்கோள் அருமை. கொஞ்சம் கூடுதல் தகவல்கள்

ஒவ்வொருத்தரையா நாலு நாள் எழுதுவிங்களா தல?

பிரபாகர் on September 15, 2009 at 12:10 PM said...

யுவனைப் பற்றி மிகவும் அழகாய் எழுதி அசத்திவிட்டீர்கள், அவரின் அழகான கவிதையுடன்.

கார்க்கி என்றாலே கலக்கல் தானோ?

பிரபாகர்.

யோ வாய்ஸ் (யோகா) on September 15, 2009 at 12:11 PM said...

:))

PITTHAN on September 15, 2009 at 12:20 PM said...

எனக்கு என்னமோ இந்த குருவீ கதையை படித்தவுடன், முல்லைத்தீவுகளில் முகாம்களில் அடைபட்டு இருக்கும் நமது சகோதரர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் on September 15, 2009 at 12:22 PM said...

பட்டறை தொடர்பாக வந்த பதிவுகளில் மிகச்சிறந்ததாக இது இருக்கக்கூடும்.

நல்ல ரசனையான பதிவு.

எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதையை என்னென்று சொல்வது.. படித்துக்கொண்டிருக்கையில் ஒரு படபடப்பையும், முடித்ததும் நீண்டதொரு பெருமூச்சையும் தந்தது.

PITTHAN on September 15, 2009 at 12:22 PM said...

கடைசியா போட்ட சாப்பாடு மற்றும் சைடுடிஷ் ஒரு கட்டு கட்டுனிங்களே அதை சொல்லாம விட்டுட்டீங்க

பரிசல்காரன் on September 15, 2009 at 12:23 PM said...

சகா

ரைட் அப் நல்லா இருக்கு. ஆனா நடுவுல உன் வழக்கமான கிண்டலை எழுதி கெடுத்துட்ட.

இதே மாதிரி ட்ரை பண்ணுப்பா...

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் on September 15, 2009 at 12:47 PM said...

கார்க்கி,
ரொம்ப நல்லா, ரசிச்சு, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. இதே போல எழுத்து நடைய தொடர்ந்து எழுதுங்க.‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கார்க்கி on September 15, 2009 at 12:49 PM said...

நன்றி தராசு. நீங்க வருவிங்கன்னு நினைச்சேன்

நன்றி தீப்பெட்டி

வெயிலான், இது யுவனைப் பற்றிய பதிவு. :)))

நன்றி நர்சிம்

நன்றி சுந்தர்ஜி. நீங்க ரொம்ப ஷார்ப்

நன்றி சுசி. நார்வேல நடத்துற ஐடியா இருக்கான்னு பைத்தியக்காரனிடம் கேளுங்க

நன்றி மண்குதிரை

நன்றி நாதம். அந்த மாதிரி ஐடியா இல்லை

நன்றி பிரபாகர் :))

நன்றி யோவாய்ஸ்

நன்றி பித்தன் :((

நன்றி ஆதி. எனக்கும் படித்து முடிக்கும்போது ஒரு மாதிரி இருந்துச்சு

நன்றி பரிசல். அந்த ஒரு பத்தியை தமிழ்மணத்தில் இணைத்த பின் தான் சேர்த்தேன். இப்போது எடுத்துவிட்டேன்.

முரளிகுமார் பத்மநாபன் on September 15, 2009 at 2:05 PM said...

சகா, கவிதைத் தேர்வு அருமை. நானும் யுவனை பற்றிய பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன், அவருடைய “மணற்கேணி” பாதி படித்தவாரு இருக்கிறது, அதை முடித்தது பதிவிடலாமென்றிருக்கிறேன். சமுத்திரம் - ஒரு துளி நீர் என்ற விளக்கத்தில் தொடங்கும் அந்த கவிதையை தேடிப்பாருங்கள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 15, 2009 at 2:06 PM said...

சூப்பரு. பதிவும், கவிஜும். சாரி கவிதையும்.

மங்களூர் சிவா on September 15, 2009 at 4:18 PM said...

அறிமுகம் அருமை.

Karthik on September 15, 2009 at 4:39 PM said...

செம பதிவு கார்க்கி. கவிதையும் சூப்பர்ப். அப்பப்ப கொஞ்சம் சீரியஸாகுங்க. :))

நல்ல பதிவில் சொல்லலாமா தெரியலை. இருந்தாலும் மீ த 20th!

கலையரசன் on September 15, 2009 at 4:57 PM said...

நல்ல இசையமைப்பாளர்!!
(படிச்சிட்டுதான் பின்னூட்டம் போட்டேன்)
:-)

கார்க்கி on September 15, 2009 at 6:26 PM said...

நன்றி அகநாழிகை

நன்றி முரளி. அந்த கவிதையை தேடினேன். கிடைக்கவில்லை சகா

நன்றி பாலகுமாரன்

நன்றி சிவா

நன்றி கார்த்திக். :))

நன்றி கலை, தெரியுது :))

நேசன்..., on September 15, 2009 at 7:24 PM said...

\\கவிதைக்கான பாடுபொருளையும், கதைக்கான கருவையும் எங்கிருந்து எடுக்கலாம் என்பதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியம்.//
என்ன
சொன்னாருன்னு கொஞ்சம் சொல்லலாமே!...வராத நாங்களும் தெரிஞ்சுக்குவோமே!

சுரேகா.. on September 15, 2009 at 7:42 PM said...

ஒரு நிகழ்வை
உங்கள் பார்வையில்
உங்களை ஈர்த்ததை நல்லா
சொல்லியிருக்கீங்க சகா!

யுவனின்
கவிதை...!
அப்பப்பா!

கடைசிவரிகளை
படிக்கவிடாமல்
கண்ணீர் மறைக்கிறது!

கும்க்கி on September 15, 2009 at 8:07 PM said...

பை.காரன் படிச்சா சந்தோஷப்படுவாரோன்னு தோணுது.

நல்ல மாற்றம்.வாழ்த்துக்கள் சகா(சகா பட்டியலில் இருக்கேனா?) தொடரவும்.

யுவனைப்பற்றி
பிறகு...

சிங்கக்குட்டி on September 15, 2009 at 8:52 PM said...

கவிதை அருமையாக இருக்கிறது.

டம்பி மேவீ on September 15, 2009 at 9:01 PM said...

arumai .... nalla eluthi irukkinga boss....


miss pannitten ......


ellam en niyabaga marathi thaan karnam ...

வித்யா on September 15, 2009 at 10:12 PM said...

நைஸ்.

தமிழ்ப்பறவை on September 16, 2009 at 1:55 AM said...

கவிதை அதிரவைத்தது சகா..
பதிவு வித்தியாசமான அனுபவம்...

கார்க்கி on September 16, 2009 at 9:41 AM said...

நேசன், அவரவர் செய்யும் தொழிலில் இருந்து எடுக்கலாம் என்றார். இன்னும் விரிவாக அடுத்த பதிவில் எழுதவிருக்கிறேன்

நன்றி சுரேகா. வந்திருக்கலாமே? கவிதை, உண்மைதான்.

நன்றி கும்க்கி. என்ன இது கேள்வி? :(((

வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி

நன்றி மேவீ. அச்சச்சோ. நானாவ்து ஞாபகபடுத்தியிருப்பேனே!!

நன்றி வித்யா

நன்றி பறவை

ஸ்ரீமதி on September 16, 2009 at 10:41 AM said...

அருமை :))

மஞ்சூர் ராசா on September 16, 2009 at 1:22 PM said...

வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்.

யுவனின் கவிதையும் கலக்கல்.

mix on September 16, 2009 at 2:08 PM said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

Cable Sankar on September 16, 2009 at 7:10 PM said...

கார்க்கி... அருமையான கவிதையை கொடுத்திருக்கிறாய்.. ஏற்கனவே.. யுவனின் பேச்சை கேட்டு அவரை படிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தவனை இந்த கவிதையின் மூலம் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டாய்.. நன்றி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) on September 18, 2009 at 2:55 PM said...

கொலைகாரக் கவிதையா இருக்கே..!

படிக்கும்போதே மனசு உச்சுக் கொட்டுது..

எப்படி அந்த மனுஷன் எழுதுனாரு..?

அன்புடன் அருணா on September 19, 2009 at 9:36 AM said...

ரொம்பப்ப் பொறாமையா இருக்கு.......

sahana on September 24, 2009 at 11:42 PM said...

எப்பொழுதும் கார்க்கி... சுய-நலவாதி...

shiny on March 4, 2011 at 10:40 AM said...

smileygirlch

அழகாக பேசி இருக்கிறார் யுவன் அதை நீங்கள் அழகாக பதிவு செய்து இருகிறீர்கள்..யுவனின் கவிதை யுகத்தை கிரக அடித்தது.

 

all rights reserved to www.karkibava.com