Sep 9, 2009

நாலு வந்த நாளு.. (புட்டிக்கதைகள்)


 

   நல்லதொரு நாளில் ஏழுவின் நண்பர்கள் நால்வர் சென்னைக்கு வந்தார்கள். நாலு நாட்கள் தங்கி சென்னையில் நாலு இடங்களை  சுற்றிப் பார்த்து நாலு விஷயம் தெரிந்துக் கொள்ள வந்திருப்பதாய் சொன்னான் நாலு பேரில் ஒருவன், வெறும் நாலடியே இருந்தவன். அந்த நாலு விஷயத்தில் ஒன்று பரங்கிமலை ஜோதி என்றும், இன்னொன்று டாஸ்மாக் என்பதும் எங்களுக்கு பிறகுதான் தெரிந்தது. மெதுவாக என் காது கடிக்க வந்தான் ஏழு. அவர்கள் முன்பு அவனை கிண்டலடிக்க வேண்டாம் என்று அவன் சொல்லப் போவதாக நினைத்தால், “என்னை என்ன வேணும்ன்னா சொல்லு மச்சி. அவங்கள கிண்டல் பண்ணாத” என்றான். ஏழு ஒல்லியாக இருந்தாலும் என் கண்களுக்கு நட்புக்காக சரத்குமாராக தெரிந்தான்.

ஏழு வாயை மூடிய நேரம் நாலடியார் வாயை திறந்தார். “ஏன் மச்சி. நீ ஊருக்கு வரும்போது எப்படி பாட்டெல்லாம் போட்டு ஜமாய்ச்சோம். எங்களுக்கு எதுவும் இல்லையா?”

உஷ் உஷ் என ஏழு அமுக்குவதைக் கண்ட ஆறு, தொடர்ந்தான். என்ன பாட்டுங்க போட்டிங்க?

முத தடவ அவன் சென்னை வந்துட்டு வந்தப்ப “ஊரு கண்ணு உறவு கண்ணு” பாட்டு. அடுத்து முதலாண்டு பாஸானப்ப ஏலே இமயமலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாறாருனு பாடியே காமிச்சான். அதிர்ந்த ஆறு, எட்டு திசையையும் நடுங்க வச்ச ஏழுவைப் பார்த்தான். பாலாஜி நாலடியாரை நோண்டினான்,”அது ஏங்க எல்லாமே விஜய்காந்த பாடலாகவே இருக்கு?

அது தெரியாதா? ஏழுமலையோடு குல தெய்வமே கேப்டன் தாங்க. தலைவர் படம் வந்தா சோத்து மூட்டை கட்டிக்கிட்டு மாட்டு வண்டில நெய்வேலி போய் பார்த்துட்டு வருவாங்க.

அவரு குல தெய்வம் இல்லைங்க. கொல தெய்வங்க என்றான் பாலாஜி.

இதற்கு மேல் டேமேஜை தாங்க முடியாத ஏழு, அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினான். சென்னைக்கு வந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய வேலையை முடித்து விட்டு வந்தார்கள். என்ன வேலையா? அதான் தலைவர்கள் சமாதியும், ஷகீலா படம் ஒன்றும் பார்த்துவிட்டு வந்தார்கள். வரும்போது ஏழு, ஃபேண்ட்டா ஆப்பிள் ஃப்ளேவர் வாங்கித் வந்தான். நாலடியார் மட்டும் பெப்சி வாங்கிக் கொண்டார்.  பேண்ட்டாவை குடித்த ஏழு ஃபெண்ட்டாஸ்டிக்கா இருக்கில்ல மச்சி என்றான். நாலடியார் திருதிருவென முழித்துவிட்டு, இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா என்றார். நாங்கள் சிரிக்காமல் ஏழுவைப் பார்க்க, விடு மச்சி என்றான்.

இரவு சரக்கடிப்பது என்று முடிவானது. மறுநாள் எங்களுக்கு தேர்வு என்பதால் நாளை அடிக்கலாம் என்றோம். ஆனால் ஏழுவோ, நாளைக்கும் அடிக்கலாம் மச்சி என்று அவர்களை உசுப்பேத்தி விட்டுக் கொண்டிருந்தான். என்ன வாங்கலாம் என்று அவர்களுக்குள் டிஸ்கஷன் நடந்தது. ரெண்டு ஃபுல் போதும் மச்சி. அஞ்சு பேருதானே அடிக்கப் போறோம் என்றார் நாலடியார். ஏழுவின் நண்பர்களா இவங்க என்ற சந்தேகம் வந்தது. இதில் ஏழு வேற “முன்ன மாதிரி என்னால அடிக்க முடியாது மச்சி. ஆஃப் அடிக்கிறதே கஷ்டம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு நாலடியார் சொன்னார் “ ஏழு தான் சார் எங்களுக்கு அடிக்க கத்துக் கொடுத்தான்”. உஷாரன ஏழு விடு மாப்ள. அவனுங்க கிடக்கறாங்க என்று அவசர அவசரமாக சரக்கு வாங்க கிளம்ப சொன்னான்.

சரக்கோடு வந்தார்கள் நாலடியாரும், நாலு பேரும்.இரண்டு பெரிய பாட்டில்களை கருப்பு நிற பையிலும், மிக்ஸிங்குக்கு தண்ணி, பெப்சி, சைடு டிஷ் என அள்ளிக் கொண்டு வந்தார்கள். மச்சி என்றான் பாலாஜி. படிடா வென்ரு என்று அதட்டிய ஆறு என்ன சரக்குங்க என்றான்

பிரித்த கவரில் பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு.

43 கருத்துக்குத்து:

முதலமைச்சர் 2011 on September 9, 2009 at 9:35 AM said...

//நாலு நாட்கள் தங்கி சென்னையில் நாலு இடங்களை சுற்றிப் பார்த்து நாலு விஷயம் தெரிந்துக் கொள்ள வந்திருப்பதாய் சொன்னான் நாலு பேரில் ஒருவன், வெறும் நாலடியே இருந்தவன்//

நாலு நாலா நல்லத்தான் இருக்கு சகா. சீக்கிரமே முடிஞ்ச மாதிரி ஃபீலிங்கு. ஆனா ஏழு ஏமாத்தல. கலக்கல் சகா

radhika on September 9, 2009 at 9:57 AM said...

as usual hilarious.

ஏழு ஃபெண்ட்டாஸ்டிக்கா இருக்கில்ல மச்சி என்றான். நாலடியார் திருதிருவென முழித்துவிட்டு, இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா என்றார்

:)))))

Anonymous said...

//இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா //

:)

நாஞ்சில் நாதம் on September 9, 2009 at 9:58 AM said...

ஏழு நல்லாயிருக்கு. ரெம்ப சீக்கிரமே அலப்பற முடிஞ்ச மாதிரி ஃபீலிங்கு. அந்த நாலடியார் கேரக்டர் சூப்பர் பாஸ்.

//பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு.//

கடைசி வரி தான் பன்ச்

Anonymous said...

ஊருக்கு வந்து ஒரே எஞ்சாய்தானா :)

தராசு on September 9, 2009 at 10:00 AM said...

கலக்கல் தல, ஆனா இதுல ஏழு ஏன் அடக்கி வாசிக்கறாருன்னு தெரியல.

ஸ்ரீமதி on September 9, 2009 at 11:06 AM said...

:)))))))

ஸ்ரீமதி on September 9, 2009 at 11:07 AM said...

புட்டிக்கதைகள்

வித்யா on September 9, 2009 at 11:09 AM said...

:))

சுசி on September 9, 2009 at 11:12 AM said...

//ஏழு ஒல்லியாக இருந்தாலும் என் கண்களுக்கு நட்புக்காக சரத்குமாராக தெரிந்தான்.//

கலக்கல் கார்க்கி.

//பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு.//

இதுக்கப்புறம்
ஏழு போக்கிரி வடிவேலா?

யோ வாய்ஸ் (யோகா) on September 9, 2009 at 11:13 AM said...

:))

மண்குதிரை on September 9, 2009 at 11:17 AM said...

//பேண்ட்டாவை குடித்த ஏழு ஃபெண்ட்டாஸ்டிக்கா இருக்கில்ல மச்சி என்றான். நாலடியார் திருதிருவென முழித்துவிட்டு, இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா என்றார்//

eppati ippatiyellaam?

nanba :-))

♠ ராஜு ♠ on September 9, 2009 at 11:25 AM said...

லேபிள்ல புட்டிக்கதைகள்ன்னு போட்ருக்கே...!

தமிழ்ப்பறவை on September 9, 2009 at 11:25 AM said...

:-)

கார்க்கி on September 9, 2009 at 11:51 AM said...

நன்றி முதலமைச்சரே..ஒரு வித தயக்கத்துடன் பதிவிட்டேன். கதைப்படி ஏழு அதிகம் பேச முடியாத சூழ்நிலை. எனவே சின்னதாகவும், மொக்கை கம்மியாகவும் இருக்கு

நன்றி ராதிகா..

நன்றி அம்மிணி

நன்றி நாதம்

நன்றி தராசண்ணே..

நன்றி ஸ்ரீமதி

நன்றி வித்யா

நன்றி சுசி.. ஏழு வடிவேலேவையெல்லாம் மிஞ்சியவன்

நன்றி யோகா

நன்றி மண்குதிரை. ஏற்கனவே சொன்னதுதான். உங்களுக்கு கவிதை எப்படி அதுவா வருதோ, அப்படித்தான்.. ரைட்டு திட்டாதிங்க :))

ராஜூ, :)

பறவை, சரியில்லையா சகா????

எம்.எம்.அப்துல்லா on September 9, 2009 at 11:53 AM said...

//பிரித்த கவரில் பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு //

எப்பிடி இப்படியெல்லாம் :)))

இரசித்துச் சிரித்தேன்.

கலையரசன் on September 9, 2009 at 12:24 PM said...

புட்டிகதை குட்டிகதையா இருக்கு?
இன்னம் கொஞ்சம் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீட்ட்ட்டி, மொழக்கி, பெருருருருருசா, லெந்ந்ந்ந்தா போடுங்க அடுத்த தடவை!!

:-)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 9, 2009 at 12:29 PM said...

ஸோ, மீண்டும் ஏழு தனது லீலைகளை ஆரம்பிச்சுட்டார்.
அப்படியே ரெண்டு ஃபுல்ல முடிச்சு, வழக்கம்போல் ஏழு ஆஃப்-பாயில் போட்டாரா இல்லையான்னு சொல்லிருக்கலாம்.
ஏழு - "புட்டிஸ்டிக்"
வாழ்த்துக்கள் சகா

தீப்பெட்டி on September 9, 2009 at 12:32 PM said...

:))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 9, 2009 at 12:34 PM said...

சகா இன்னும் கோல்டன் ஈகிள் பியர் கிடைக்குதா?
கொஞ்சம் எழ மாடர்னா பட்வைசர், ஹெயனகின் லெவெலுக்கு கொண்டு போங்க. ராயல் போதைல மிதக்கட்டும்

கார்ல்ஸ்பெர்க் on September 9, 2009 at 1:29 PM said...

//ஏழு ஒல்லியாக இருந்தாலும் என் கண்களுக்கு நட்புக்காக சரத்குமாராக தெரிந்தான்.//

//அவரு குல தெய்வம் இல்லைங்க. கொல தெய்வங்க என்றான் பாலாஜி.//

- :))

//ரெம்ப சீக்கிரமே அலப்பற முடிஞ்ச மாதிரி ஃபீலிங்கு//

-எனக்கும்..

ஆதிமூலகிருஷ்ணன் on September 9, 2009 at 1:38 PM said...

“முன்ன மாதிரி என்னால அடிக்க முடியாது மச்சி. ஆஃப் அடிக்கிறதே கஷ்டம்” //

எல்லா டீமுலயும் இந்த வசனம் இருக்கத்தான் செய்யும் போல் இருக்குது.

கிளைமாக்ஸ் எதிர்பார்த்திருந்தாலும் டாப்புதான்..

Kalyani Suresh on September 9, 2009 at 1:55 PM said...

:)

கார்க்கி on September 9, 2009 at 2:24 PM said...

நன்றி அப்துல்லாண்ணே

கலை, இன்னும் நீட்டினால் நல்லா இருக்குமா? நானே எப்படியாவ்து எழுதிடனும்ன்னு முடிச்சேன். வரவர மொக்கை கூட தோண மாட்டேங்குது.. ஒரு பட்டறையை போடனும் போல :)

நன்றி தீப்பெட்டி.

பாலகுமாரன், ஏழு என் கல்லூரி நண்பன். அப்ப எல்லாம் கோல்டன் ஈகில்தான் ஃபேமஸ். மேலும் பளபளன்னு சொன்னதால கோல்டன் ஈகிள் :)))

நன்றி கார்ல்ஸ்பெர்க். சீக்கிரம் ஏழு உங்கள குடிக்க போறான்

நன்றி ஆதி :))

நன்றி கல்யாணி

நர்சிம் on September 9, 2009 at 3:19 PM said...

வ.க.ச.

T.V.Radhakrishnan on September 9, 2009 at 3:34 PM said...

:-))

அன்புடன் அருணா on September 9, 2009 at 4:34 PM said...

புட்டிஸ்டிக்!!!!!!

Karthik on September 9, 2009 at 4:43 PM said...

வெல்கம் பேக் புட்டிக்கதைகள்! :)

//வரவர மொக்கை கூட தோண மாட்டேங்குது.. ஒரு பட்டறையை போடனும் போல :)

தலை 7 வோட சரக்கு காக்டெயில்ல மி(க்)ஸ் யூஸ் ஆகுதோ??? :))

Karthik on September 9, 2009 at 4:44 PM said...

//அன்புடன் அருணா said...
புட்டிஸ்டிக்!!!!!!

LOL. :))))

Achilles/அக்கிலீஸ் on September 9, 2009 at 5:01 PM said...

அருமை... ஃபினிஷிங்கும் சூப்பர்... :)))

Kiruthikan Kumarasamy on September 9, 2009 at 5:08 PM said...

///ஏழு ஃபெண்ட்டாஸ்டிக்கா இருக்கில்ல மச்சி என்றான். நாலடியார் திருதிருவென முழித்துவிட்டு, இது கூட பெப்சிஸ்டிக்கா இருக்குடா என்றார்///
இது ஃபேண்டாஸ்டிக், கோக்காஸ்டிக்னு கொஞ்சக் காலத்துக்கு முன்னால உலவின ஜோக் சகா... அதை பெப்ஸிஸ்டிக் ஆக்கிட்டீங்க.

ஆனா சகா, ஏழு ஃபெண்டாஸ்டிக் சகா.. ஆனா கொஞ்சம் சின்னதா முடிச்சிட்டீங்க போல இருக்கு... அடிக்கடி ஏழுவைக் கூட்டியாங்க, எவ்வளவு மிஸ் பண்ணோம் தெரியுமா??

உலவு.காம் (ulavu.com) on September 9, 2009 at 5:09 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

இளைய கவி on September 9, 2009 at 5:23 PM said...

சூப்பரோ சூப்பரு நால்வரோடு ஐவரானோம்.

Truth on September 9, 2009 at 8:06 PM said...

//பளபளவென மின்னியது கோல்டன் ஈகிள் பியர் இரண்டு.//

கொஞ்சம் சத்தம் போட்டே சிரிச்சிட்டேன்.

Mr.vettiபைய்யன் on September 9, 2009 at 9:27 PM said...

வணக்கம் கார்க்கி

” பெப்சிஸ்டிக்கா ” super

கார்க்கி on September 10, 2009 at 10:13 AM said...

@நர்சிம்,

ந.ச

@டி.வி.ஆர்,

நன்றி அய்யா

@அருணா,
தேங்க்ஸ்டிக்

@கார்த்திக்,
இனிமேல் காக்டெயிலில் மொக்கை கிடையாது கார்த்திக் :))

@அக்கிலீஸ்,
நன்றி

@குமாரசாமி,
இனிமேல் ரெகுலரா, முழுசா வர சொல்ரேன் சகா

@இளையகவி,

நன்றி சகா

@ட்ரூத்,

:)) நன்றி

@வெட்டிப்பையன்,
நன்றி சகா

கத்துக்குட்டி on September 10, 2009 at 1:19 PM said...

உங்கள கேக்காம சுட்டி போட்டது தப்பு தான் அதுக்காக டம்பீ னு சொல்லிடீங்க ... நா தங்கச்சியாக்கும் !!!
ஹ்ம்ம் ... ஒழுங்கா ப்ரோபைல பாத்து கமெண்ட் எழுதுங்க அண்ணா...

Manimaran on September 10, 2009 at 5:11 PM said...

Karki.. Innaiku night enna vishesam?

டம்பி மேவீ on September 10, 2009 at 5:11 PM said...

RAITTU :))

சிங்கக்குட்டி on September 10, 2009 at 6:42 PM said...

வழக்கம் போல கலக்கல் கார்க்கி.

பட்டிக்காட்டான்.. on September 10, 2009 at 10:40 PM said...

//.. சீக்கிரமே முடிஞ்ச மாதிரி ஃபீலிங்கு. ஆனா ஏழு ஏமாத்தல. கலக்கல் சகா ..//

ரிபீட்டு..

கார்க்கி on September 11, 2009 at 9:08 AM said...

கத்துக்குட்டி, ரைட்டும்மா..

மணி, ஹிஹிஹி

டம்பி, அப்ப சரி

நன்றி சிங்கக்குட்டி

நன்றி பட்டிக்காட்டான்.

முகிலன் on September 23, 2009 at 10:23 AM said...

மிக்ஸிங் என்னன்னு சொல்லவேயில்ல?

 

all rights reserved to www.karkibava.com