Sep 8, 2009

விக்ரம், அஜித், விஜய்க்கு கதை சொன்ன கேபிள் சங்கர்


  

அடுத்த நூற்றாண்டு வருவதற்குள் எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டுமென்ற
முனைப்போடு களத்தில் இறங்குகிறார் கேபிள் சங்கர். சில முன்னணி
நடிகர்களும் நேரம் ஒதுக்க கதையோடும், இடுப்பு பகுதியில் சேர்த்து வைத்து
குலுக்கும் சதையோடும் கிளம்புகிறார் அக்மார்க் ‘டூப்ளிகேட் யூத் கேபிள்”.
முதலில் விக்ரம். இந்த நிறத்தில் இருப்பவை கேபிளின் மனசாட்சி பேசும் டயலாக்குகள்.

விக்ரம் : வணக்கம் பாஸ்.கந்தசாமியை கவுத்ததே நீங்கதான்னு சொல்றாங்க. அதை
சரிகட்ட நல்ல கதை ஒன்னு சொல்லுங்க.

கேபிள் : சரிங்க. கதையோடு நாயகன் பரோட்டா மாஸ்டர் & ஓனர். அந்தக் கடையில்
சாப்பிட ஆர்டர் கொடுக்கும் போதே நம்ம குறையையும் சத்தம் போட்டு சொன்னா,
பரோட்டா உடனே கிடைக்கும், பிரச்சினைக்கு தீர்வு கொஞ்ச நாளிலும்
கிடைக்கும். இதனால் அந்தக் கடைக்கு நல்ல கூட்டம் வருது. இதை விசாரிக்க
ஒரு போலிஸ்..

விக்ரம் : ஹலோ என்ன கந்தசாமி கதை மாதிரி இருக்கே

கேபிள் : (அடப்பாவி இது அன்னியன்& etc படத்தோட  கதைடா. அதுவே
தெரியாம கந்தசாமி நடிச்ச. இப்ப மட்டும் எங்க இருந்து ஞானோதயம் வருது)

இல்ல சார். இதுல உங்க பேரு ஜார்ஜ் பீட்டர். அதனால் இது வேற கதை.

விக்ரம் :  யூ நோ வாட்? நான் இனிமேல் சூப்பர் ஹீரோ கதைல நடிக்கிறதா இல்ல.
வேற கதை வச்சி இருக்கிங்களா?

கேபிள் : இருக்கு சார். நடிக்க ஸ்கோப் உள்ள படம். நீங்க ஒருத்தர மானசீக
குருவா நினைச்சு வளறீங்க. அவர் கூடவே வேலை செய்யும் வாய்ப்பும்
கிடைக்குது உங்களுக்கு. அவருக்கும் உங்களுக்கு வர பிரச்சினைதான் படமே.
க்ளைமேக்ஸுல நீங்க, அவரு, உங்க காதலி என எல்லோரும் செத்துடறீங்க.
புதுமையான க்ளைமேக்ஸ் சார்.

   இம்ப்ரஸ் ஆன விக்ரம் உடனே கால்ஷீட் தர, எத்தனை வருடம் ஆனாலும் இந்த படம்
நடிச்சிட்டுதான் அடுத்து என்கிறார். வேறு கதை இல்லாததால் பீமா கதையை
உல்ட்டா செய்து சொன்ன கேபிள், ஸ்கிரிப்ட்டை பாலிஷ்(?) செய்து கொண்டு
வருவதாக சொல்லிவிட்டு எஸ் ஆகி, அடுத்து அல்டிமேட் ஸ்டாரிடம்
செல்கிறார்

அஜித் :  சொல்ங்க சார். என்ன கதை வச்சி இருக்கிங்க?

கேபிள் : (நல்ல கதைல மட்டும்தான் இவரு நடிப்பாரு) கதையை விடுங்க சார்.
உங்க முகத்தில பல இடங்களில் முடி வச்சி ஒரு கெட்டப் போடறோம். தலையை பாதி
மொட்டை அடிச்சு இன்னொரு கெட்டப். பூஜை அன்னைக்கு இந்த ஸ்டில்ஸ
பார்த்துட்டு இது மாதிரியெல்லாம் அவரால கெட்டப் போட முடியுமான்னு உங்க
ரசிகர்கள் பேசுவாங்க. படத்துக்கு ரியல் னு பேரு. பூஜைக்கு வர்ற பெரிய
ஆளுங்க எல்லாம் வேற வழியே இல்லாம ரியல் ஸ்டார் அஜித்ன்னுதான்
சொல்லுவாங்க.  அப்படியே பூஜையைப் போட்டுட்டு நான் கதை ரெடி பண்ண
போயிடறேன். ஒரு நாலு அஞ்சு மாசம் கழிச்சு ஷூட்டிங் ஸ்டார்ட் செய்வோம்
சார்.

அஜித் :  வாவ்.பிரில்லியன்ட். உட்னே ஃபோட்டோ ஷூட்  ரெடி பண்ங்க சார். யூ
ஆர் ரியலி பிரில்லியண்ட்.

   பல நாள் யோசிச்சு ரெடி செய்த ஸ்க்ரிப்டுகளை விட அந்த  நொடியில் வரும்
ஐடியாக்களே வெற்றி பெற என்ன செய்வதென்று யோசிக்கிறார் கேபிள். ஸ்க்ரிப்ட்
இல்லாமல் படம் எடுத்தால் ப்ளாகர்ஸ் விமர்சனம் என்று படுத்தி விடுவார்களே
என்று நிதானமாக இன்னொரு ஸ்கிரிப்ட் ரெடி செய்கிறார். இந்த முறை இளைய
தளபதிக்கு கதை எழுதுகிறார்.

விஜய் :  வாங்கண்ணா. வாங்கண்ணா

கேபிள் : வணக்கம் சார். இந்த கதைல வேற யாரும் நடிக்க முடியாது. கதை
சொல்றதுக்கு முன்னாடி பன்ச் டயலாக் சொல்லட்டுமா?

விஜய் : சொல்லுங்கண்ணா.

கேபிள் : நீ எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் மைய, உன் கையிலதாண்டா வைப்பாங்க.

விஜய் : அட பின்றீங்க்ண்ணா. கைய வச்சே எல்லா பன்ச் டயலாக்கையும் எழுதிடலாம்

கேபிள் : (வேறு எப்படி எழுத முடியும்) சும்மா சும்மா விரலை நீட்டினவன்
எல்லாம் ஜெயிச்சதில்லை. வோட்டுப் போட விரலை நீட்டினா நாட்டுல கவலையில்லை.

விஜய் :  இதான் பாஸ் எதிர்பார்த்தேன். காங்கிரஸ் சின்னத்த மக்கள் மனசுல பதிய வைக்கனும்

கேபிள் : (அரசியலுக்கு வறீங்களாமே. congratsனு அனுப்பினா, எல்லோரும் காங்கிரஸ்ல சேர சொல்றாங்கன்னு நினைச்சுட்டார் போல)  எல்லோரும் கனவு கோட்தைதான் கட்டுவாங்க. நான் கோட்டையையே கனவா கண்டவண்டா

விஜய் : இந்த படம் நினைவாக்கிடும் போலிருக்கே. ண்ணா. படத்துக்கு என்ன
டைட்டில் வைக்கலாம்?

கேபிள் : (எம்.ஜி.ஆர் படம் தான் கேட்பிங்க) எங்க வீட்டுப் பிள்ளை
இல்லைன்னா, நான் ஆணையிட்டால் வைக்கலாம்ண்ணா

விஜய் : கதையை கேட்டவுடனே நானும் அதேத்தான் நினைச்சேண்ணா

கேபிள் : (என்னது? கதையை கேட்டிங்களா?) ரைட்டுங்கண்ணா.

இந்த வேலையே வேண்டாமென்று கொத்து பரோட்டா போட கிளம்புகிறார் கேபிள். அதற்குள் நான் தான் உங்க படத்துல பாடுவேன்னு அப்துல்லாவும், காமெடி டிராக் எனக்குதான் என்று குசும்பனும், வசனத்திற்கு பரிசலும் இன்னும் சிலரும் அவருக்கு கொடுத்த டார்ச்சர்கள் விரைவில்…

37 கருத்துக்குத்து:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 8, 2009 at 11:31 AM said...

me the first

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 8, 2009 at 11:35 AM said...

// அதற்குள் நான் தான் உங்க படத்துல பாடுவேன்னு அப்துல்லாவும், காமெடி டிராக் எனக்குதான் என்று குசும்பனும், வசனத்திற்கு பரிசலும் இன்னும் சிலரும் அவருக்கு கொடுத்த டார்ச்சர்கள் விரைவில்…//
சீக்ரம்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 8, 2009 at 11:40 AM said...

//கதையை கேட்டவுடனே நானும் அதேத்தான் நினைச்சேண்ணா//
என்ன தல, நீங்களுமா தளபதிய டேமேஜ் பண்ணனும்

Anonymous said...

//விஜய் : கதையை கேட்டவுடனே நானும் அதேத்தான் நினைச்சேண்ணா//

இது :)

கட்சி மாறிட்டீங்களா

ராஜு.. on September 8, 2009 at 12:12 PM said...

சரி...ரைட்டு..ஒ. கே. நடக்கட்டும்.

SurveySan on September 8, 2009 at 12:19 PM said...

:)

பாலா on September 8, 2009 at 12:39 PM said...

என்ன மாப்பி ஆர்டர் தப்பா இருக்கு விஜய் லேர்ந்துல நீ ஆரம்பிசிருக்கணும்

யோ வாய்ஸ் (யோகா) on September 8, 2009 at 12:40 PM said...

//படத்துக்கு ரியல் னு பேரு. பூஜைக்கு வர்ற பெரிய
ஆளுங்க எல்லாம் வேற வழியே இல்லாம ரியல் ஸ்டார் அஜித்ன்னுதான்
சொல்லுவாங்க//

இது உள்ளுக்கு உள்ள உள்குத்த ரொம்பவே ரசிச்சேன் பாவா..

உங்க தளம் லோடாக நேரம் எடுக்குது, சில நேரம் ஓப்பன் ஆகுதில்லை..

தராசு on September 8, 2009 at 12:47 PM said...

//‘டூப்ளிகேட் யூத் கேபிள்”. //

யூத் சங்கத்தின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தராசு on September 8, 2009 at 12:48 PM said...

//ஸ்க்ரிப்ட் இல்லாமல் படம் எடுத்தால் ப்ளாகர்ஸ் விமர்சனம் என்று படுத்தி விடுவார்களே என்று நிதானமாக இன்னொரு ஸ்கிரிப்ட் ரெடி செய்கிறார்//

இந்த உள்குத்து எதுக்கு

Kalyani Suresh on September 8, 2009 at 12:58 PM said...

ஸ்க்ரிப்ட்
இல்லாமல் படம் எடுத்தால் ப்ளாகர்ஸ் விமர்சனம் என்று படுத்தி விடுவார்களே

அந்த பயம் இருக்குதா? :)

எம்.எம்.அப்துல்லா on September 8, 2009 at 12:59 PM said...

//அதற்குள் நான் தான் உங்க படத்துல பாடுவேன்னு அப்துல்லாவும், காமெடி டிராக் எனக்குதான் என்று குசும்பனும், வசனத்திற்கு பரிசலும் இன்னும் சிலரும் அவருக்கு கொடுத்த டார்ச்சர்கள் விரைவில்…

//

டேய் அந்தாள வச்சு காமடி பண்றதுன்னா அதோட நிறுத்த வேண்டியதுதான... எங்களையெல்லாம் ஏன்டா இழுக்குற??

:))))))))))))

எம்.எம்.அப்துல்லா on September 8, 2009 at 1:01 PM said...

//‘டூப்ளிகேட் யூத் கேபிள்”. //

யூத் சங்கத்தின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

//


விரைவில் இந்த சங்கத்தில் இணைய இருக்கும் கார்க்கிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்,

சுசி on September 8, 2009 at 1:05 PM said...

கலக்கல் கார்க்கி... மத்தவங்கள பத்தின மொக்கைய ஆவலோட எதிர்பார்க்கறேன் :))

// சில முன்னணி
நடிகர்களும் நேரம் ஒதுக்க //

லிஸ்ட்ல கார்க்கி பேர காணோம்?
ஓ.. அவர் இப்போ ரொம்ப பிசியா...

மண்குதிரை on September 8, 2009 at 1:19 PM said...

-:)

கார்க்கி on September 8, 2009 at 1:37 PM said...

வாங்க பாலகுமாரன். தளபதிய யாரும் டேமேஜ் பண்ண முடியாது.

அம்மிணி, நானா? வாய்ப்புகளே இல்லை.. இது ஜாலிக்கு..

ராஜூ, என்ன? சொல்லுப்பா..

நன்றி சர்வேசன்

எப்பவும் பெரியாளுஙக்ள கடைசிலதான் சகா கூப்பிடுவாங்க

யோ வாய்ஸ், அப்படியா? அந்த பாட்டு விட்ஜெட்லாயா?

தராசன்னா, ரைட்டு. நீங்களும் டூப்ளிகேட் யூத்துதானா?

கல்யாணி மேடம், அவருக்கு நிறையவே இருக்கு

அப்துல்லா அண்ணே, எத்தனை நாள்தான் நீங்களும் நான் எஸ்கேப்புடான்னு பின்னூட்டம் போடுவிங்க.. சமீபத்தில் 1967ன்ற மாதிரி, உங்க விரைவில் என்ன 2067 ஆ?

சுசி, கார்க்கிய இந்த லிஸ்ட்டுல சேர்க்கலாமா? என்னங்க நீங்க.இன்னொரு தடவை நீ எங்கே படத்தை பார்த்துட்டு வாங்க

நன்றி மண்குதிரை

நாஞ்சில் நாதம் on September 8, 2009 at 1:44 PM said...

:))

Karthik on September 8, 2009 at 1:51 PM said...

:))

உலவு.காம் (ulavu.com) on September 8, 2009 at 2:05 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

biskothupayal on September 8, 2009 at 2:43 PM said...

விரைவில்…
இது வேறயா

ஆஹா! ஆரம்பச்சிட்டாங்கயா அலப்பறைய

சூப்பர்ப்!!!

எம்.எம்.அப்துல்லா on September 8, 2009 at 3:27 PM said...

//உங்க விரைவில் என்ன 2067 ஆ?

//

அடப்பாவி நம்ப பாட்டு எப்.எம்.ல வருதே கேக்கலையா??

படம் வரும் 18 ரிலீஸ் :)

பிரபாகர் on September 8, 2009 at 3:36 PM said...

//congratsனு அனுப்பினா, எல்லோரும் காங்கிரஸ்ல சேர சொல்றாங்கன்னு நினைச்சுட்டார் போல//

கலக்கல் சகா...

பேசாம கேபிளண்ணாவுக்கு பதிலா நீங்க கதை சொல்ல போகலாம்...

கேபிளண்ணா, உங்களுக்கு போட்டியா கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா...

(சகா, சும்மா டமாசுக்கு, கதை சொல்ல கிளம்பிடாதீங்கோ!)

நையாண்டி அருமை.

பிரபாகர்.

ஸ்ரீமதி on September 8, 2009 at 3:44 PM said...

:))))))))

Achilles/அக்கிலீஸ் on September 8, 2009 at 3:52 PM said...

செம காமெடி சார் நீங்க... :)

அன்புடன் அருணா on September 8, 2009 at 4:45 PM said...

:)

Truth on September 8, 2009 at 5:54 PM said...

கேபிள், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. மான நஷ்ட வழக்கு ஒன்னு போடுங்க. வர்ற காசுல (வந்தா தானே ) புதுசா ஒரு படம் எடுங்க. வேறேதும் ஐடியா தேவைப்பட்டா என்னை அனுகுங்க.

டம்பி மேவீ on September 8, 2009 at 6:33 PM said...

விரைவில் உங்களை வைத்து அவர் ஒரு பதிவு போட்டாலும் போடுவார் .......


அப்ப ஜெகே ரிதீஷ் கிட்ட கேபிள் அண்ணா கதை சொல்ல போகவில்லையா .....

கார்க்கி on September 8, 2009 at 7:16 PM said...

நன்றி நாதம்

நன்றி கார்த்திக்

நன்றி பிஸ்கோத்பயல்

அண்ணே, நான் கேட்டது, ‘விரைவில் கார்க்கியும் இணைவான்” நு சொன்னிஙக்ளே.. அதுக்கு..

நன்றி பிரபாகர்

நன்றி ஸ்ரீமதி

நன்றி அக்கிலீஸ்

நன்றி அருணா

ட்ரூத், நல்லா இருங்க..

நன்றி டம்பி.. எடுத்து கொடுங்க..

நேசன்..., on September 8, 2009 at 7:17 PM said...

இவங்கள்லாம் கதை கேட்டுத் தான் நடிக்கிறாங்களா?.........நல்ல கதையா இருக்கே!...........எப்போப் பாத்தாலும் அஜீத்,விஜய்,விக்ரம் இவங்களயே சொல்றீங்களே சேரன்,சுந்தர்.சி. மாதிரி பெரிய நடிகருங்களையும் கொஞ்சம் சொல்லுங்களேன் சகா!.........

வித்யா on September 8, 2009 at 7:37 PM said...

:)

அறிவிலி on September 8, 2009 at 7:44 PM said...

ண்ணா.. பஞ்ச் டயலாகெல்லாம் சூப்பருங்கண்ணா...

உலவு.காம் (ulavu.com) on September 8, 2009 at 8:37 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஆதிமூலகிருஷ்ணன் on September 8, 2009 at 9:42 PM said...

வழக்கம் போல கலக்கல்.

இதுல உங்க பேரு ஜார்ஜ் பீட்டர். அதனால் இது வேற கதை.// செம்ம.. ரசித்தேன்.

Cable Sankar on September 8, 2009 at 11:13 PM said...

விக்ரம் மேட்டரும், விஜய் மேட்டரும் சூப்பர்.. கார்க்கி.. அதிலும் கங்கிராட்ஸ், காங்கிரஸ்..சிரிச்சிட்டே இருக்கேன்.

அதென்னா போலி யூத்து.. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். இதையும் மீறி எழுதினா உன்னையும் யூத்தாக்கிருவேன்..:)

தராசண்ணே.. சொல்லி வையுங்க..

அடுத்த நூற்றாண்டா..:(

PITTHAN on September 9, 2009 at 7:02 AM said...

அண்ணா எனக்கு ஒரு கதை சொல்லுங்க 2031 ல நான் தான் பெரிய ஹிரோ ஆவன்

ghost on September 9, 2009 at 9:59 AM said...

/////கேபிள் : நீ எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் மைய, உன் கையிலதாண்டா வைப்பாங்க. விஜய் : அட பின்றீங்க்ண்ணா. கைய வச்சே எல்லா பன்ச் டயலாக்கையும் எழுதிடலாம் கேபிள் : (வேறு எப்படி எழுத முடியும்)/////

இது சூப்பர், அப்படியே கார்கி உங்களுக்கும் ஒரு கத ரெடி பண்ண சொல்லலாமா

கார்க்கி on September 9, 2009 at 10:10 AM said...

நேசன், சேரனுக்கு ஒரு தனிப் பதிவே எழுதனும் :))

நன்றி கொ.ப.செ

நன்றி அறிவிலி. பன்ச் டயலாக் பன்ச்சா இருந்துச்சா?

நன்றி ஆதி :))

அப்பாடா!!! கேபிள்ஜி வராம பயந்துட்டே இருந்தேன்.. இதுல கூட அஜித் மேட்டர் நல்லா இல்லையா சகா? :)))
ஆகலாம்.. அடுத்த வருஷமே ஆகலாம். கால்ஷீட் தர நான் ரெடி

பித்தன், 2031க்கு இப்பவே எதுக்கு கதை? நாம என்ன மெகா சீரியலா எடுக்கிரோம்?

நன்றி பிசாசு..கார்க்கிக்கு கதை சொல்ல ஆதி இருக்காரே

 

all rights reserved to www.karkibava.com