Sep 7, 2009

கார்க்கியின் காக்டெயில்


  

   நேற்று உலக சினிமா (Sweet 16. அட நல்லப் படங்க) காண சென்றிருந்தேன். கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் இருந்தார் பைத்தியக்காரன். ஆனால் கூட்டம் தான் குறைவாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிரெயினுக்கு நேரமாகிறது என்ற காரணம் இருந்தது. இந்த முறை ஒரு நாள் லீவெடுத்து வந்து பார்த்தேன். நல்லப் படம் எடுக்கிறேன் காசு கொடுங்க என்று கேட்காமல் நல்ல படம் இலவசமாக காட்டினால் கூட வர மாட்டேன் என்கிறார்களே என்று தோன்றியது. அது சரி அவரவர்க்கு அவரவர் preferences. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன செய்யலாம்? முடிந்தால் போய் படம் பார்க்கலாம். நேயர் விருப்பம் போட்டால் கூட்டம் வருமோ? எனது விருப்பம் இரானியப் படம் நகாப். (NAKAB). இருக்கா சிவாண்ணா?

*******************************************

படம் முடிந்த பின் நண்பர் ஒருவரிடம் நான் கார்க்கி என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின் “நீங்க தான் புட்டிக்கதைகள் எழுதறீங்களா?” என்று சந்தேகத்துடனே கேட்டார். நானும் ஆமாம் என்ற பின் மலர்ச்சியாக பேசினார். அவரது அலுவலக நண்பர்களும் ஏழுவின் ரசிகர்கள் என்றார். மகிழ்ச்சியாக இருந்தாலும் கார்க்கியை விட ஏழுவுக்கு பேரு எனும்போது…

    ஹைதை வாழ் நண்பர் ஒருவர் சேட்டில் வரும்போதெல்லாம் வேறு எதுவும் பேச மாட்டார். ஏழு எங்கே என்றுதான் கேட்பார். நானும் இதோ அதோ என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். போன வாரம் வந்து ஏழு வந்தா சொல்லுங்க என்றார். அதுவரை இந்தப் பக்கமே வருவது போல் தெரியவில்லை.பலரும் கேட்டு விட்டார்கள். இதோ இந்த வாரம் நிச்சயம் வருகிறார் ஏழு.

*******************************************

சென்னையில், பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக இருக்கிறார். சென்ற வாரம் அவர் மீது யாரோ கூரியர் தருவது போல்  வீட்டுக்கே வந்து ஆசிட் ஊற்றிவிட்டார்கள். தான் அழகாக இருப்பதாக கொஞ்சம் திமிரான கர்வம் அவருக்கு உண்டு. இனி எப்படி வாழ்ப் போகிறார் எனும்போது ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னும் திருமணமாகவில்லை. யாரோ ஒரு பலம் வாய்ந்த புள்ளியின் மகன் தான் ஆளை வைத்து செய்ததாக தெரிகிறது. ஆனால் போலிஸோ மறைக்கிறது. இவர்கள் வீட்டு டிரைவரை தினமும் அழைத்து சென்று விசாரிப்பதாக அடிக்கிறார்களாம். எதற்கென்றால் இன்னும் விசாரணை நடக்கிறது என்று காட்ட… கொஞ்சம் ஆசிட் மீதி கிடைத்தால் போலிஸ் மீதும் அதே ஆளிடம் காசு கொடுத்து ஊற்ற சொல்லலாம் என்றிருக்கிறேன்.

வீடு வீடாக வந்து பிஸினஸ் செய்பவர்களால் பல தொல்லைகள் வருகின்றன. எனவே அவர்கள் அந்த ஏரியா காவல் நிலையத்திற்கு சென்று தங்களின் அடையாளத்தை காட்டி ஒரு அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும். அந்தக் கடிதத்தில் புகைப்படமும் இருத்தல் நலம். அக்கடிதம் கொண்டு வருவோருடன் மட்டுமே மக்கள் வாங்கத் தொடங்கினால் பல குற்றங்கள் குறையும். அதேப் போல் வீட்டு மெயின் கேட்டை ஃபோகஸ் செய்தபடி ஒரு கேமரா மறைவாக பொருத்தப்பட்டு விட்டால் எப்படி இருக்கும்? காலிங்க் பெல்லையே 10,000 ரூபாய்க்கு வாங்குவதை விட, கேமரா ஒன்றும் செலவாகிவிடாது. சொந்த வீடு கட்டுபவர்கள், கட்டும்போதே இதை ரகசியமாக வைத்துவிட்டால் விமானத்தின் பிளாக் பாக்ஸ் போல ஆகிவிடாது? நான் செய்யப் போகிறேன்.

*******************************************

   சென்னைக்கு வந்தவுடன் வாசலிலே நிற்க வைத்து யோகா கதைகள் சொல்லிக் கொண்டிருந்தான் பப்லு,என் அக்கா பையன். (அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என்றெல்லாம் பின்னூட்டமிட மாட்டீர்கள் என நம்புகிறேன்). கேட்டுக்கொண்டும், அவனைத் தள்ளிக் கொண்டும் உள்ளே வந்து சேர்ந்தேன்.பேச்சு அப்படியே டயட்டைப் பற்றியும் வந்தது. தினமும் இரவில் இரண்டே இரண்டு தோசை சாப்பிடுவதாக சொன்னான். ராஜா காலத்து மொக்கை ஒன்றை சொன்னேன் ”டின்னருக்கு பின்னாடியா, முன்னாடியா?”.  எல்லோரும் சிரித்துவிட(?) கோவம் வந்துவிட்டது பப்லுவுக்கு.

உனக்கு டயட்டைப் பற்றி என்ன தெரியும்? என்றான்

பேண்ட் டய்ட்டானா டயட்டுல இருக்கனும். அந்த டயட் தானே என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த பப்லு சொன்னான் “ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”

XXXXXXXXXXXXXXXXXXX

********************************************

பிளாகர்கள் எழுதும் சினிமா விமர்சனம் பற்றிய பேச்சுதான் சென்ற வாரம் சூடாக இருந்தது. இவர்கள் எழுதும் விமர்சனத்தால் படத்தின் வெற்றியே பாதிப்பதாக சொல்வதெலாம் டூ மச். நாங்க அவ்ளோ வொர்த் இல்லப்பா. ஆனால் பிளாகர்கள் எதை எழுதுகிறார்கள்? முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து டீக்கடையிலும் மற்ற இடங்களிலும் பேசுவதைத்தான் பதிவில் எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் துக்கடா வெப்சைட்டுகளும், பத்திரிகைகளும் எழுதும் விமர்சனத்தை விட சில நல்ல விமர்சனங்கள் பிளாகில் எழுதப்படுகின்றன.

   தமிழ்சினிமா.காம் ஒரு படி மேலேப் போய் தலையங்கமே எழுதி இருக்கிறார்கள். கந்தசாமியை நாறடித்துவிட்டோமாம். காசு போட்டு எடுப்பவர்களுக்குத்தான் கஷ்டம் தெரியுமாம். சுசி.கணேசன் குங்குமத்திலோ குமுதத்திலோ ஸ்பைடேர்மேனுக்கு எழுதிய விமர்சனம் அவர்கள் படிக்கவில்லை. மரண மொக்கை என்பது போல் சொல்லி இருந்தார். ஓசி பாஸீலோ. திருட்டு டிவிடியிலோ பார்த்துவிட்டு விமர்சிக்கவில்லை. காசு கொடுத்துப் பார்த்து நொந்தவர்கள் நல்லப் படத்தை மொக்கை என்றாலும் சரிதான். கந்தசாமிக்கு தமிழ்சினிமா.காம் கொடுத்தது 4ஸ்டார்கள்.

  தலைவா வாங்கிய கவரில் கொஞ்சம் எங்களுக்கும் கொடுத்தால் நாங்களும் *கந்தசாமி.. கலக்கல்சாமி” என்று பதிவ்ழுத தயார்.

57 கருத்துக்குத்து:

Busy on September 7, 2009 at 8:48 AM said...

Kalakal Kok Tail..............

டம்பி மேவீ on September 7, 2009 at 9:11 AM said...

koli vaalu nalla irukku...

(valpaiyanoda val thane ithu??)

டம்பி மேவீ on September 7, 2009 at 9:20 AM said...

என் நண்பன் வீட்டில் அந்த மாதிரி ஒரு கேமரா வைச்சாங்க ... கொஞ்ச நாள் பிறகு கேமராவையே காணவில்லை

டம்பி மேவீ on September 7, 2009 at 9:22 AM said...

“ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”அது தான் உங்களால் முடியாதே

டம்பி மேவீ on September 7, 2009 at 9:23 AM said...

உலக சினிமாவா ????


அதுல யார் ஹீரோ ?????? குத்து பாட்டு இருக்கா ??? கவர்ச்சி இருக்கா ???

டம்பி மேவீ on September 7, 2009 at 9:25 AM said...

"இதோ இந்த வாரம் நிச்சயம் வருகிறார் ஏழு. "


அந்த கடவுளே நினைச்சாலும் இனிமேல் பதிவுலகத்தை காப்பாற்ற முடியாது

டம்பி மேவீ on September 7, 2009 at 9:26 AM said...

"கந்தசாமிக்கு தமிழ்சினிமா.காம் கொடுத்தது 4ஸ்டார்கள். "


அவ்வளவு தான் ஸ்டாக் இருந்திற்க்கும் .......அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க

MSKUMAR on September 7, 2009 at 9:27 AM said...

//அதேப் போல் வீட்டு மெயின் கேட்டை ஃபோகஸ் செய்தபடி ஒரு கேமரா மறைவாக பொருத்தப்பட்டு விட்டால் எப்படி இருக்கும்? //
நான் பெங்களூரில் இதே போன்ற House Security System ஒன்றை பார்த்திருக்கிறேன். நமது வீட்டின் காலிங் பெல்லை யார் அடித்தாலும், இந்த system அவர்களை போட்டோ எடுத்து விடும். அந்த போட்டோ system இல் உள்ள memory card இல் date & Time உடன் ஸ்டோர் ஆகி இருக்கும். நாம் தேவைப்படும் போது memory card ஐ கம்ப்யூட்டரில் போட்டு பார்த்து கொள்ளலாம்.

டம்பி மேவீ on September 7, 2009 at 9:27 AM said...

"(அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என்றெல்லாம் பின்னூட்டமிட மாட்டீர்கள் என நம்புகிறேன்)."


ச்சே... நான் அந்த அளவுக்கு புத்திசாலி இல்லைங்க

Prakash on September 7, 2009 at 9:39 AM said...

நேத்து எங்க உக்காந்திருந்தீங்க ? உங்கள எனக்கு அடையாளம் தெரியலை !

பீர் | Peer on September 7, 2009 at 9:42 AM said...

இதே நொந்த சாமி கதையைத்தான் ஞாநியும் சொல்றார்...

தராசு on September 7, 2009 at 9:42 AM said...

//நல்லப் படம் எடுக்கிறேன் காசு கொடுங்க என்று கேட்காமல் நல்ல படம் இலவசமாக காட்டினால் கூட வர மாட்டேன் என்கிறார்களே என்று தோன்றியது//

என்ன சொல்ல வர்றீங்க????

//எனவே அவர்கள் அந்த ஏரியா காவல் நிலையத்திற்கு சென்று தங்களின் அடையாளத்தை காட்டி ஒரு அனுமதி கடிதம் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.//

நல்ல ஐடியா தல. போலீஸுக்கு வருமானத்துக்கு இன்னொரு வழி.

கத்துக்குட்டி on September 7, 2009 at 9:44 AM said...

உலக சினிமா னா?? படம் பேர் சொன்னா நாங்களும் பாப்போம்ல....

தண்டோரா ...... on September 7, 2009 at 9:51 AM said...

கார்க்கி நேற்றைய படம் மகா மொக்கை.அந்த கெட்ட வார்த்தை வேண்டாம்னு விட்டுட்டேன்..இன்னும் கொஞ்சம் சுவாரசியமான படங்களை திரையிட வேண்டுமென்பது என் எண்ணம்.

Cable Sankar on September 7, 2009 at 9:57 AM said...

/நல்லப் படம் எடுக்கிறேன் காசு கொடுங்க என்று கேட்காமல் நல்ல படம் இலவசமாக காட்டினால் கூட வர மாட்டேன் என்கிறார்களே என்று தோன்றியது. //

haa..haa.. ப்ரியா விடு மாமே..

ஸ்ரீமதி on September 7, 2009 at 10:10 AM said...

:))))))))

பிரபாகர் on September 7, 2009 at 10:13 AM said...

சகா,

வாரம் முழுதும் வேலை, ஓய்வு நாளிலும் படமா என்று தான் பதிவர்கள் அதிகம் வரவில்லை என எண்ணுகிறேன். 'வாரம் முழுதும் கம்ப்யூட்டர கட்டிக்கிட்டு அழறீங்களே? ஒரு நாளைக்காவது குடும்பத்தோடு இருக்கக்கூடாதா?' எனும் கேள்வியாலும் இருக்கலாம்.

ஊருக்கு அடுத்த முறை வரும் போது அவசியம் சந்திக்க விழையும் முதல் நபர் என் சகாதான்.

====

வீட்டு பாதுகாப்புக்கு அருமையான யோசனை. ஆனாலும் பிடிபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்தாலொழிய குற்றங்கள் குறையாது.

====

பிளக்கர்களின் விமர்சனம் நிறைய பேர்களின் பாக்கெட்டை காப்பாற்றுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

கலக்கியிருக்கீங்க சகா. வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

Anonymous said...

//(அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என்றெல்லாம் பின்னூட்டமிட மாட்டீர்கள் என நம்புகிறேன்). //

அக்காவின் பையன் அப்படுன்னு போட்டுருங்க, யாரும் ஒண்ணும் கேக்க முடியாதில்ல. அப்பறம் ஏழுமலை மாதிரி பப்லுவும் எங்க ஃபேவரைட் ஆகிட்டு வரான். அப்பப்போ பப்லுவின் பஞ்ச்/மொக்கை எல்லாம் போட்டுருங்க

குசும்பன் on September 7, 2009 at 10:32 AM said...

//ஆனால் கூட்டம் தான் குறைவாக இருந்தது. //

ஒருவேளை நீங்க வருகிறீர்கள் என்ற செய்தி லீக் ஆகி இருக்கும்:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) on September 7, 2009 at 10:43 AM said...

///குசும்பன் said...

//ஆனால் கூட்டம் தான் குறைவாக இருந்தது. //

ஒருவேளை நீங்க வருகிறீர்கள் என்ற செய்தி லீக் ஆகி இருக்கும்:)///

கரெக்ட்.. குசும்பன் சொன்னா அது உண்மையாத்தான் இருக்கணும்..!

நாஞ்சில் நாதம் on September 7, 2009 at 10:57 AM said...

// பிளாகர்கள் எழுதும் சினிமா விமர்சனம் பற்றிய பேச்சுதான் சென்ற வாரம் சூடாக இருந்தது. இவர்கள் எழுதும் விமர்சனத்தால் படத்தின் வெற்றியே பாதிப்பதாக சொல்வதெலாம் டூ மச். நாங்க அவ்ளோ வொர்த் இல்லப்பா. ஆனால் பிளாகர்கள் எதை எழுதுகிறார்கள்? ///

எனக்கென்வோ பிளாகர்களுக்கு ஒரு நல்ல பிரேக் இவுங்க கொடுத்துருக்காங்க போல தோணுது.

// முதல் ஷோ பார்த்துவிட்டு வந்து டீக்கடையிலும் மற்ற இடங்களிலும் பேசுவதைத்தான் பதிவில் எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் துக்கடா வெப்சைட்டுகளும், பத்திரிகைகளும் எழுதும் விமர்சனத்தை விட சில நல்ல விமர்சனங்கள் பிளாகில் எழுதப்படுகின்றன. //

இந்த மாதிரி பிளாகர்களுக்கு வாசகர் வட்டம் கூட வாய்ப்பு இருக்கில.

டெக்னால‌ஜியை / ஊடகம் ஆகியவறை பகைச்சுக்காம இருந்தா சினிமாவுக்கு நல்லது.

ஜ்யோவ்ராம் சுந்தர் on September 7, 2009 at 11:03 AM said...

கார்க்கி, வீடியோ கேமரா facility இருக்கிறது. காலிங் பெல்லை யாராவது அழுத்தினால் உள்ளிருக்கும் டீவியில் நாம் பார்த்து விருப்பமிருந்தால் மட்டும் திறக்கலாம். இதை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கக் கூடும். முயற்சித்துப் பார்க்கலாம்.

மண்குதிரை on September 7, 2009 at 11:10 AM said...

aamam nanba

vimarsanam ethan poruttu ezuthappatukinrathu enree theriyavillai.

தீப்பெட்டி on September 7, 2009 at 11:10 AM said...

//வீட்டு மெயின் கேட்டை ஃபோகஸ் செய்தபடி ஒரு கேமரா மறைவாக பொருத்தப்பட்டு விட்டால் //

நல்ல ஐடியா தான்..
:)

யோ வாய்ஸ் (யோகா) on September 7, 2009 at 11:17 AM said...

காலிங்க் பெல்லையே 10,000 ரூபாய்க்கு வாங்குவதை விட, கேமரா ஒன்றும் செலவாகிவிடாது. சொந்த வீடு கட்டுபவர்கள், கட்டும்போதே இதை ரகசியமாக வைத்துவிட்டால் விமானத்தின் பிளாக் பாக்ஸ் போல ஆகிவிடாது? நான் செய்யப் போகிறேன்.

சீக்கிரம் செய்யுங்க. ஏனென்றால் அஜித், தாணு போன்றவர்களின் ரசிகர்கள் உங்களுக்கு அசிட் அடிக்க நாள் பார்ப்பதாக ஒரு கேள்வி..

சுசி on September 7, 2009 at 11:26 AM said...

//நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன செய்யலாம்? //

நீங்கள் போய் தொல்லை பண்ணாமல் இருக்கலாம் :))

//படம் முடிந்த பின் நண்பர் ஒருவரிடம் நான் கார்க்கி என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். //

அவ்வ்வ்வ்....

பாவம் பப்லு....

கார்க்கி on September 7, 2009 at 11:30 AM said...

நன்றி பிசி

போதுமா டம்பி மேவி?

@குமார், அதேதாங்க. விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் நிறைய பேர் பயன்படுத்தினால் குறைய கூடும்..

பிரகாஷ், முன்னே. தரை டிக்கெட் :)). தொப்பி போடாததால் தெரியவில்லையா? :)))))

பீர், அவரும் படம் எடுக்கிறார் இல்லையா? இருக்கு கச்சேரி

தராசண்ணே, உண்மைதான். ஆனால் காவலர்கள் பஙக்ளிப்பு இல்லாமல் என்ன பாதுகாப்பு ஐடியா செயல்படுத்த முடியும்?

கத்துக்குட்டி, sweet 16. படம் சுமார்தான்

தண்டோரா, உண்மைதான். அது பற்றி சில நிமிடங்கள் நேற்றே பேசி இருக்கலாம்

கார்க்கி on September 7, 2009 at 11:51 AM said...

கேபிள்ஜி, அப்படித்தான் விடறோம்

நன்றி ஸ்ரீமதி

பிரபாகர், நானும்தான் சகா. விமர்சனம் என்பது என்ன? உங்கள் நண்பன் படம் பார்க்கலாம் மச்சி, அல்லது போவத்டான்னு ஒரு வரியில் சொல்வதை நீட்டி முழக்கி சொல்வதே.

அம்மிணி, நல்ல ஐடியாவ இருக்கே.. ஒரு பதிவு எழுதி பார்ப்போம். ரெஸ்பான்சை பொறுத்து தொடருகிறேன்

குசும்பரே, இது போன்று உண்மையை மாற்றிப் போட்டு நகைச்சுவை செய்வதில் உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது

@உ.த, குசும்பன் சொன்னது எப்படி நீங்க சொன்னாதாகும்(உண்மையாகும்)

நாதம் சரியா சொன்னிங்க. நமக்கு அவர்களோடு என்ன விரோதம்? பல நல்லப் படஙக்ளை தூக்கி விடுவதும் பிளாக்ர்களால் செய்யப்படுகிறது. பி.ந. வார்த்தைகளால் சொன்னால், பிரதிதான் முக்கியம்.படைப்பாளிகள் அல்ல.

சுந்தர்ஜி, அதில் ரெக்கார்ட் ஆவாது.மேலும் காலிங்க் பெல் அடிக்காமல் வரும் குற்றவாளிகளை எப்படி பிடிப்பது? இந்த கேமரா இருந்திருந்தால் அந்த ஆசிட் ஊற்றியவன் முகம் அதில் பதிவாகி இருக்கும்..

மண்குதிரை, நல்ல பாயிண்ட்

யோ வாய்ஸ், தகவலுக்கு நன்றி. :)))

சுசி, சரியா சொன்னிங்க.. :))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 7, 2009 at 12:02 PM said...

அக்மார்க் கார்கிடிரைவர்.
//கேமரா ஒன்றும் செலவாகிவிடாது// கண்டிப்பா.
Simple கேமரா ரூ 500 to 1000 தான்.(lot of types - PTZ,Smoke detector type,Day night,IP etc)
but what u r going to do with that video signal decides the cost. if u want to store, it requires DVR (digital video recorder). u can use ur PC as a DVR.

எம்.எம்.அப்துல்லா on September 7, 2009 at 12:04 PM said...

//கரெக்ட்.. குசும்பன் சொன்னா அது உண்மையாத்தான் இருக்கணும்..!

//

அப்படியா??? அப்ப குசும்பன் உங்களைப் பத்தி சொன்னதையெல்லாம் ஞாபக அடுக்கில் இருந்து எடுத்து எழுதவா??

இஃகிஃகிஃகிஃகி

ஏன் கார்க்கி இன்னைக்கு காக்டெய்ல் ரொம்ப கலக்கலா இருக்கே!! மண்டபத்துல யாராவது எழுதித் தந்தாங்களா??

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 7, 2009 at 12:06 PM said...

// பீர் | Peer "இதே நொந்த சாமி கதையைத்தான் ஞாநியும் சொல்றார்..."// கார்க்கி "பீர், அவரும் படம் எடுக்கிறார் இல்லையா? இருக்கு கச்சேரி"

இப்போவே ஆரம்பிச்சாச்சா.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on September 7, 2009 at 12:12 PM said...

// எம்.எம்.அப்துல்லா "ஏன் கார்க்கி இன்னைக்கு காக்டெய்ல் ரொம்ப கலக்கலா இருக்கே!!"//
அதற்கு காரணம் தெரியுமா? வேறென்ன காக்டெய்ல் தான்

தமிழ்ப்பறவை on September 7, 2009 at 12:14 PM said...

//தலைவா வாங்கிய கவரில் கொஞ்சம் எங்களுக்கும் கொடுத்தால் நாங்களும் *கந்தசாமி.. கலக்கல்சாமி” என்று பதிவ்ழுத தயார்.//
நான் கூட சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சுடுவேன்...

Bleachingpowder on September 7, 2009 at 12:19 PM said...

//பிளாகர்கள் எழுதும் சினிமா விமர்சனம் பற்றிய பேச்சுதான் சென்ற வாரம் சூடாக இருந்தது//

கொஞ்சம் ஓவராதான் போகுது தல, அதிலையும் நானும் இண்டஸ்ரியில இருக்கேன்னு சொல்லீட்டு பதிவு எழுதுறவங்க தொல்லை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே வருது. கவுண்டமணி மாதிரி சொல்லனும்னா, லைட் பாய்க்கு குடை புடிக்குறவன், கேரவனுக்கு பெயிண்ட் அடிக்குறவன் எல்லாம் லைட்டிங் சரியில்லை, திரைக்கதையில தொய்வுன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

தனக்கு வாய்ப்பு கிடைக்கலை என்பதற்காக கிட்டதட்ட எல்லா படங்களையும் குறை சொல்லும் கூட்டம் ஜாஸ்தியாட்டே போகுது, இவனுகளுக்கு காசை கொடுத்து படமெடுக்க சொன்னா இன்னொரு உதிரிப் பூக்கள் முள்ளும் மலருமா எடுக்க போகிறார்கள்?

சக கலைஞர்களை தட்டி கொடுக்க தெரியாதவர்கள் கடைசி வரைக்கும் அசிஸ்டெண்ட் டைரக்டர்களாக இருந்து திரை விமர்சணம் மட்டும் தான் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு படத்தையும் விமர்சிக்கும் போதும் திரைக்கதை சரியில்லைன்னு பேசும் பதிவுலக பாக்கியராஜுகளும், பாரதிராஜாக்களும் சிறுகதை போட்டியில் பல்பு வாங்கியதை மறந்து விட கூடாது, முதல்ல நல்ல சிறுகதைகள் எழுதி பழகட்டும், அப்புறம் படங்களை விமர்சிக்கலாம்.

கந்தசாமி விமர்சணத்தை வைத்து மட்டும் இதை சொல்லலை, பொதுவா எல்லா படத்தையும் இவங்க இப்படி தான் எழுதுறாங்க.

பி.கு. கந்தசாமியை நான் இன்னும் பார்க்க வில்லை, பாக்குறதாகவும் இல்லை, இந்த படம் ஆரம்பிக்கும் போது கிராமத்தை தத்தெடுக்கிறோம் மயிரை புடுங்குவோம்னு சொன்னவனுங்க படம் ரீலீஸுக்கு அப்புறம் அதை பத்தி வாயே தொறக்க மாட்டேங்குறாங்க. இந்த படம் ஊத்திக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.

கிருஷ்குமார் on September 7, 2009 at 12:59 PM said...

Yennadhan neengha yellam vimarsanam pannalum SUN TV top ten la avangaloda padatha avangale vimarsanam panra alage alagu...Vimarsanam oppipavar sorry panravar varasaa varusam rameswaram poyi paavatha kaluvanum nu ninakiren....

கிருஷ்குமார் on September 7, 2009 at 1:03 PM said...

Bleachingpowder said...
லைட் பாய்க்கு குடை புடிக்குறவன், கேரவனுக்கு பெயிண்ட் அடிக்குறவன் எல்லாம் லைட்டிங் சரியில்லை, திரைக்கதையில தொய்வுன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.
Avangalukku vimarsanam panra urimai illainu solrathuthan over...Nalla rasigana irukkura batchathula avangalum pannalam

வித்யா on September 7, 2009 at 1:45 PM said...

:)

Karthik on September 7, 2009 at 2:17 PM said...

நல்லாருக்கு கார்க்கி. ஏழு வந்தால் சந்தோஷம். :))

கார்ல்ஸ்பெர்க் on September 7, 2009 at 2:28 PM said...

//என் நண்பன் வீட்டில் அந்த மாதிரி ஒரு கேமரா வைச்சாங்க ... கொஞ்ச நாள் பிறகு கேமராவையே காணவில்லை//

-இதே கூத்து எங்க ஏரியா'ல கூட நடந்திருக்கு.. ஆனா இங்க ஆட்டைய போட்டது கடையில..

பரிசல்காரன் on September 7, 2009 at 4:30 PM said...

கவர் தர்றாங்களா?

எங்க? எங்க?

வர்ற வெள்ளி இரவு ஈரம் (படம்) பார்க்கப் போறேன். ஷங்கருக்கோ, அறிவழகனுக்கோ (இயக்குனர்) சொல்லீடுங்கப்பா..

பரிசல்காரன் on September 7, 2009 at 4:33 PM said...

@ ப்ளீச்சிங் பவுடர்

வாய்யா.,,

ஆரம்பிச்சாச்சா அடுத்த ஆட்டத்தை? நடத்துங்க சாமீ.. நடத்துங்க!

நான் விமர்சனமே எழுதல போ! (அதுக்காக சிறுகதைப் போட்டி- பல்பெல்லாம் தேவையில்ல தல... நீ பஸ் தப்பான ரூட்ல ஓட்டறன்னு சொல்ல எனக்கு பஸ் ஓட்டத் தெரியணும்கற அவசியமில்ல!)

அன்புடன் அருணா on September 7, 2009 at 5:04 PM said...

ஐயய்யோ...மறுபடியும் ஏழுவா???????

குசும்பன் on September 7, 2009 at 5:04 PM said...

//பத்தி சொன்னதையெல்லாம் ஞாபக அடுக்கில் இருந்து எடுத்து எழுதவா??//

அப்துல்லா அண்ணே உங்க ஞாபக சக்தியில் 10 ரூவா சூடத்தை வெச்சு கொளுத்த!!!

குசும்பன் on September 7, 2009 at 5:05 PM said...

//"இரவு ஈரம்" பார்க்கப் போறேன்.//

இன்னுமா இந்த ஈரம் ஆகும் பழக்கம்:))

Kalyani Suresh on September 7, 2009 at 5:38 PM said...

“ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”

சொல்றது சின்ன பையனா இருந்தாலும் நல்லது சொன்னா follow பண்ண வேண்டியதுதானே கார்க்கி. :)

T.V.Radhakrishnan on September 7, 2009 at 7:59 PM said...

காக்டெயில் *****

T.V.Radhakrishnan on September 7, 2009 at 8:00 PM said...

Five Stars

அவ்வளவு தான் ஸ்டாக்

சிங்கக்குட்டி on September 7, 2009 at 8:45 PM said...

கலக்குங்க கார்கி....

ராஜராஜன் on September 7, 2009 at 10:59 PM said...

உனக்கு டயட்டைப் பற்றி என்ன தெரியும்? என்றான்

பேண்ட் டய்ட்டானா டயட்டுல இருக்கனும். அந்த டயட் தானே என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த பப்லு சொன்னான் “ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”///

உங்களயே தூகி சாபிடுவான் போல உங்க அக்கா பையன் ..

கலக்குங்க பாஸ் ..

Mr.vettiபைய்யன் on September 8, 2009 at 12:47 AM said...

வணக்கம் கார்க்கி
இருக்கும் 6 கோடி தமிழர்களுக்காக 40, 50 கோடிகள் செலவு செய்து படம் எடுத்து, டிக்கெட் விலை 200, 300 வித்துட்டு, பிளாக் மணி பற்றிய கருத்து சொன்னா நியாயமா , விமர்சனம் பண்ண வேண்டாம்னா என்ன சொல்லறது?, இவங்க கருத்து சொல்வதை நிறுத்த சொல்லுங்க எல்லா படமும் ஒடும்.

பின் குறிப்பு

என்னுடைய வ்லைப் பகுதிக்கு வந்து முதல் (முறையாக) பின்னூட்டம் போட்டதற்கு நன்றி சகா

PITTHAN on September 8, 2009 at 10:19 AM said...

pls dont tell like that about the cases, they will send summons to you also. namma police romba killadikal thabbu pannuvanai vittu aduthavan mela case poduvanga. three years baby mela kolai case potta deporment athu.

ஆதிமூலகிருஷ்ணன் on September 8, 2009 at 11:08 AM said...

கிட்டத்தட்ட ஒரு மீள்பதிவு படிக்கிறா மாதிரி இருந்தது. நேர்ல எல்லாத்தையும் பேசினதுனால..

Prakash said...
நேத்து எங்க உக்காந்திருந்தீங்க ? உங்கள எனக்கு அடையாளம் தெரியலை !
//

சீனியர்னா அப்பிடித்தான் கண்டுக்காம எங்களை விட சீனியருங்க கூட பேசிண்டிருப்போம். ஜூனியருங்கள்லாம் தானா வந்து அறிமுகப்படுத்திக்கணும்ங்க.. என்னங்க இது? எங்களையெல்லாம் வந்த புதுசுல எப்பிடி ராகிங் பண்ணினாங்க தெரியுமா? சொல்லுங்கப்பு.. (அப்பாடி நானும் வந்திருந்தேன்னு சொல்லியாச்சு. யாராவது கண்டுக்கிட்டாத்தானே? அவ்வ்வ்வ்வ்..)

கார்க்கி on September 8, 2009 at 11:54 AM said...

அனைவருக்கும் நன்றி மக்கா

இது நம்ம ஆளு on September 8, 2009 at 12:12 PM said...

டயட்டைப் பற்றி என்ன தெரியும்? என்றான் பேண்ட் டய்ட்டானா டயட்டுல இருக்கனும். அந்த டயட் தானே என்றேன். கொஞ்ச நேரம் யோசித்த பப்லு சொன்னான் “ கொஞ்சம் கொயட்டா இரு. அது போதும்”

கந்தசாமிக்கு தமிழ்சினிமா.காம் கொடுத்தது 4ஸ்டார்கள். தலைவா வாங்கிய கவரில் கொஞ்சம் எங்களுக்கும் கொடுத்தால் நாங்களும் *கந்தசாமி.. கலக்கல்சாமி” என்று பதிவ்ழுத தயார்.

அருமை :)

உலவு.காம் (ulavu.com) on September 8, 2009 at 12:15 PM said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நாளைப்போவான் on September 8, 2009 at 12:16 PM said...

இந்த நேயர் விருப்பத் திட்டத்தை நானும் வழிமொழிகிறேன்.

என்னதான் எழுமலைக்கு பேர்னாலும், அவரை ஆட்டுவிக்கிற சூத்திரதாரி நீங்க தான பாஸ். அப்ப அந்த பேர் உங்களுக்கு தான வந்து சேரும்??

:)

சூர்யா on September 8, 2009 at 9:38 PM said...

உண்மைதான் கார்கி, நாங்கள் இருப்பது நியூஜெர்சி , கந்தசாமி படத்தை பற்றி ஒரு வலையில் "Thatstamil.com" இல் நன்றாக விமர்சனம் எழுதி இருந்தார்கள். அதை நம்பி 2 மணி நேரம் பயணம் செய்து படம் பார்த்தோம் . முதல் காட்சியிலே விக்ரம் சேவல் போல் வந்து காமடி செய்தார். படம் முடித்து வெளியே வந்த போது என் நண்பர்கள் என்னை பார்த்த பார்வை இருக்கே , கோயல இப்பே என்ன சொன்னாலும் நம்ப மாடேன்றானுங்க. அய்யா காசு போட்டு படம் எடுக்கும் புண்ணியவான்களே நான் இந்த படத்திற்கு அழுதது 15$. இப்படி பட்ட வலை தளங்களில் வெளியிடும் செய்திகளை எப்படி நம்புவது , நீங்களே சொல்லுங்களேன்..

 

all rights reserved to www.karkibava.com