Sep 3, 2009

பட்டறையும் வேணாம்.கொப்பறையும் வேணாம்.


 

ஒரு பிரபல பதிவரிடம் பேசப் போகிறோமே என்ற பயத்துடன் தன்னை தயார் செய்து கொள்கிறார் பைத்தியக்காரன். மொபைலில் calling karki என்று ஒளிர்கிறது

கார்க்கி: ஹலோ. சொல்லுங்கண்ணா

பை.காரன்: கார்க்கி. நலமா?

கார்க்கி: ரொம்பவே. நீங்க எப்படி இருக்கிங்க?

பை.காரன்: நல்லா இருக்கேன் கார்க்கி. செப்.13ம் தேதி ஒரு சிறுகதை பட்டறை ஏற்பாடு செஞ்சிருக்கோம்.

கார்க்கி: பதிவுல பார்த்தண்ணா.

பை.காரன்: யுவன், பா.ரா இன்னும் பலர் எடுக்கறாங்க. நீயும் கண்டிப்பா வரணும்.

கார்க்கி: என்ன சொல்றீங்க? எனக்கும் சிறுகதைக்கும் என்னண்ணா சம்பந்தம்? நான் போய். வந்து..

பை.காரன்: அப்படி இல்லம்மா. நீ எழுத மாட்டற. எழுதின ஒரு சில சிறுகதையும் நல்லாத்தான் இருக்கு.

கார்க்கி: சரிண்ணா. அதுக்குன்னு சிறுகதை பட்டறைக்கு நான்..

பை.காரன்: எனக்கு சரின்னு தோணுவதாலே கூப்பிடறேன். முருகன் தருவான் கதையெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒன்னு. ரமேஷ் வைத்யா கூட  அந்த தேவதை, புஜ்ஜி கதையை எவ்ளோ சிலாகிச்சாரு தெரியுமா?

கார்க்கி: கார்க்கிய கூப்பிடறேன்னு சுந்தர்ஜி கிட்ட சொன்னிங்களா?

பை.காரன்: அவர்தாம்மா உன்னை கூப்பிட சொன்னதே.

கார்க்கி: இல்லண்ணா. மறுபடியும் யோசிங்க. வர்றவங்க எல்லாம் கார்க்கியுமான்னு உங்கள திட்ட போறாங்க.

லைன் கட்டாகி விடுகிறது. சிறிது நேரத்திற்கு பின் அனுஜன்யா அழைக்கிறார்

கார்க்கி : சொல்லுங்க தல. எப்படி இருக்கிங்க?

அனுஜ : நல்லா இருக்கேம்மா. உன்னை திட்டனும்ன்னு கால் பண்ணேன். சிவா கிட்ட வர முடியாதுன்னு சொன்னியாமே?

கார்க்கி : தல, நீங்களுமா? அவர் தான் சொல்றார்ன்னா. எனக்கும் சிறுகதைக்கும் என்ன சம்பந்தம்? மொக்கை பட்டறை நடத்தலாமான்னு சொல்லுங்க

அனுஜ : என்னம்மா நீ? உயிரோசைல வந்துச்சே. நான் நான் தான். அது ஒன்னு போதாது உனக்கு கதை எழுத வரும்ன்னு காட்ட.

கார்க்கி : ஒரே ஒரு கதை தெரியாம எழுதிட்டேன். அதுக்காக

அனுஜ : அட முருகன் தருவான். அது டாப் 20ல வரும்ன்னு நானே நினைச்சேன். புட்டிகதைகள் கூட சிறுகதை ஃபார்மட்லதான் எழுதற நீ.

கார்க்கி : மக்கள் கிட்ட நீங்களும் அடி வாங்கப் போறீங்க. நீங்க எல்லாம் கலாய்க்கறீங்கன்னு நினைக்கிறேன்

அனுஜ : இல்லம்மா. என்ன நீ? உன்னை கலாய்க்க குசும்பன் தான் வரணும். அப்புறம் உன் இஷ்டம். இவ்ளோ சொல்லியும் நீ வரலைன்னு சொன்னாத்தான் தப்பா சொல்லுவாங்க.

கார்க்கி : இல்ல தல. இதுதான் சரின்னு தோணுது

இறுதியாக நர்சிம் அழைக்கிறார்

நர்சிம் : என்ன சகா பட்டறைக்கு வர மாட்டேன்னு சொன்னீங்களாம்?

கார்க்கி: நீங்க வேற சகா? யுவன், பா.ரா வெல்லாம் கிளாஸ் எடுக்கறாங்க. அதுல என்னையும் எடுக்க சொன்னா, என்ன ஆவறது? அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. இதுல அனுஜன்யா ரெகமெண்டேஷன் வேற

நர்சிம் : அடப்பாவி. உன்னை கலந்துக்கத்தான் கூப்பிட்டதா சொன்னாங்க? கான்ஃப்ரன்ஸ்ல பை.காரனும் இருக்காரு. ஹலோ அண்ணா..

கார்க்கி: என்ன சகா?

நர்சிம் : உன்னை கலந்து.

கார்க்கி: லைன்ல ஏதோ பிரச்சினை. நான் கால் பண்றேன்.

மெர்சிலாகிறார்கள் நர்சிம்மும், பை.க்காரனும். பரிசலை அழைக்கிறார் கார்க்கி.

பரிசல்: சொல்லு சகா. (டேய் அங்க என்ன வேடிக்கை. பதில் சொல்லு)

கார்க்கி : 13ம்தேதி சிறுகதை பட்டறைக்கு உங்களயும் கூப்பிட சொன்னாரு சிவாண்ணா. யுவன், பா.ரா, பாஸ்கர் சக்தி எல்லாம் எடுக்கறாங்க. உங்களையும்..

பரிசல் :  என்ன சகா சொல்ற? நானா? இதெல்லாம் ஓவர் இல்ல?( இது ஓக்கே ஆகும் பாருங்க)

கார்க்கி : (ங்கொய்யால நாம நினைச்சது தப்பே இல்லடா) இல்ல சகா. உங்க கதையெல்லாம் ருத்ரனே பாராட்டி இருக்காரு.

பரிசல்: இருந்தாலும். சிவாண்ணா கூப்பிட சொன்னாரா? அவரே கூப்பிடலாமே?

கார்க்கி : பார்த்திங்களா. சீஃப் கெஸ்ட் தோரணை வந்துடுச்சு. அவர் உங்க லைன் ட்ரை பண்ணாராம் கிடைக்கலையாம்.

பரிசல்: அட இல்ல சகா. இரு நானே அவர்கிட்ட பேசரேன். இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

பரிசல் பை.க்காரனை அழைக்கிறார்

பரிசல்: ஹலோ எப்படி இருக்கிங்கண்ணா?

பை.காரன்: நலம் பரிசல். நானே உங்களுக்கு கூப்பிடனும்ன்னு நினைச்சேன்

பரிசல் : தெரியும்ண்ணா. ஆனா நான் கிளாஸ் எடுக்கிறத விட சுந்தரும், நீங்களுமே எடுக்கலாமே?

பை.காரன் : என்ன சொல்றீங்க? டேய் எத்தனை பேருடா கிளம்பியிருக்கிங்க. பட்டறையும் வேணாம். கொப்பறையும் வேணாம்.

45 கருத்துக்குத்து:

என். உலகநாதன் on September 3, 2009 at 10:22 AM said...

நகைச்சுவையை ரசித்தேன் சகா.

பைத்தியக்காரன் on September 3, 2009 at 10:27 AM said...

கலக்கல் கார்க்கி :-) :-) :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வால்பையன் on September 3, 2009 at 10:31 AM said...

ரைட்டு!
எல்லாம் யார் எடுக்குறதுன்னு சண்டை போடுங்க!
மொக்கை சிறுகதை எழுதுறது எப்படின்னு நான் வந்து க்ளாஸ் எடுக்கிறேன்!

நர்சிம் on September 3, 2009 at 10:35 AM said...

ரைட்டு.

சுசி on September 3, 2009 at 10:42 AM said...

கலக்கல் கார்க்கி.
கடைசிவரை யார் அந்த பிரபல பதிவர்னு சொல்லவே இல்லையே...

SanjaiGandhi on September 3, 2009 at 10:42 AM said...

ஜாலி டீம் :)

ஸ்ரீமதி on September 3, 2009 at 10:52 AM said...

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :)))))))))))

Anonymous said...

சூப்பர் கார்க்கி :)

விக்னேஷ்வரி on September 3, 2009 at 11:12 AM said...

:)

ghost on September 3, 2009 at 11:21 AM said...

ம்ம்ம் நல்லா இருக்குங்க நடத்துங்க நடத்துங்க

வள்ளி on September 3, 2009 at 11:41 AM said...

சூப்பர்........
நல்லா இருக்கு கார்க்கி

பரிசல்காரன் on September 3, 2009 at 11:53 AM said...

//உங்க கதையெல்லாம் ருத்ரனே பாராட்டி இருக்காரு.//

இது எப்படா? சொல்லவேல்ல?

பரிசல்காரன் on September 3, 2009 at 11:53 AM said...

//என். உலகநாதன் said...

நகைச்சுவையை ரசித்தேன் சகா.//

நகைச்சுவையா? சீரியஸா பேசிகிட்டிருக்கோம்.. சிரிப்புபோலீஸ்ங்கறாரு இவரு?

அனுஜன்யா on September 3, 2009 at 11:55 AM said...

இதானா விஷயம்! சிவா என்ன கூப்பிட்டது participate பண்ணவா? நானும் உன்ன மாதிரியே, 'அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும்; சாதிக்க வேண்டும்' என்ற ரீதியில் பேசினேன். உனக்கு ஆன மாதிரியே எனக்கும் லைன் கட்டு ஆகிடிச்சு. இதெல்லாம் பொது வாழ்வில் ......

எனி ஹௌ, நா வரல. ஆதலால், ஜாலியா எல்லோரும் என்ஜாய் மாடி.

அது சரி, என்னதான் புனைவு/பகடி என்றாலும், உன்னோட கதைகளை (?) நான் புகழுற மாதிரி கற்பனை எல்லாம் ..... சாரி ரொம்ப ஓவர்.

அனுஜன்யா

பரிசல்காரன் on September 3, 2009 at 12:01 PM said...

//அது சரி, என்னதான் புனைவு/பகடி என்றாலும், உன்னோட கதைகளை (?) நான் புகழுற மாதிரி கற்பனை எல்லாம் ..... சாரி ரொம்ப ஓவர்.

அனுஜன்யா//

அதெல்லாம் கற்பனையில்தான் சாத்தியம்னு சகா முடிவு பண்ணீட்டாரு அனு-ஜி!

தராசு on September 3, 2009 at 12:07 PM said...

உங்களுக்கு சுய விளம்பரம் புடிக்காதுன்னு சொன்னாங்களே, அப்ப அது உண்மையில்லையா,

கலக்கல் நகைச்சுவை தல.

கார்க்கி on September 3, 2009 at 12:08 PM said...

நன்றி உலகனாதன்

நன்றி சிவாண்ணா :))

ஹலோ வாலு, நீங்க எதிர்கவுஜைக்கு எடுங்க. மொக்கை கதைக்கு ஆதி ஆவலா இருக்காராம்..

நர்சிம், உங்கள எடுக்க சொல்லலைன்னுதானே கோவம்?

சுசி, அதான் மொபைலில் கார்க்கின்னு வருதே.. அது மட்டுமில்லாமல் பிரபல பதிவர்ன்னா யாருன்னு வேற சொல்லனுமா?ஹைய்யோ ஹைய்யோ

சஞ்சய், ஹிஹிஹி

ஸ்ரீமதி, உங்கிட்ட இப்படி கமெண்ட் வாங்க எவ்ளோ கஷ்டப்ட வேண்டியிருக்கு

நன்றி அம்மிணி

நன்றி விக்கி

நன்றி பிசாசு

நன்றி வள்ளி

பரிசல், மறந்தாச்சா? அந்த கண்ணாடி கதைக்கு வந்து சொன்னாரே..

தல, அதுக்கு நீங்க தூரமா செல்லத்தான் வேண்டும். ஏன்னா நடக்கிறது சென்னைல.. உயிரோசை கதைக்கு நீங்க சொன்னது ஞாபகமில்லை “ஒரு கதைக்கு மூனி பதிவில் பின்னூட்டம் வாங்கிய பெருமை உனக்கும், வாழ்த்திய பெருமை எனக்கு” ஹிஹிஹிஹி

கார்ல்ஸ்பெர்க் on September 3, 2009 at 12:57 PM said...

அண்ணா, கலக்கிட்டீங்க போங்க..

Kalyani Suresh on September 3, 2009 at 12:58 PM said...

//என்ன சொல்றீங்க? டேய் எத்தனை பேருடா கிளம்பியிருக்கிங்க. பட்டறையும் வேணாம். கொப்பறையும் வேணாம்.//
final touch னு சொல்றது இதுதானா கார்க்கி. :)

முதலமைச்சர் 2011 on September 3, 2009 at 12:58 PM said...

எப்படித்தான் பதிவுக்கு மேட்டர் தேத்தறியோ சகா?

சி.எம் இறந்துட்டாராமே? லீவு இல்லையா? பார்த்து பத்திரமா இருப்பா.

மண்குதிரை on September 3, 2009 at 1:02 PM said...

siriththeen nanba -:))

யோ வாய்ஸ் on September 3, 2009 at 1:38 PM said...

எப்படி இப்படி

யாசவி on September 3, 2009 at 2:25 PM said...

ஹிலோரியஸ்

;)

Anbu on September 3, 2009 at 3:09 PM said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் on September 3, 2009 at 3:11 PM said...

கடைசி வரியில் வாய்விட்டுச்சிரித்தேன்.. பரிசல் சொன்னாலும் சொல்லியிருப்பார்.. ஹிஹி..

T.V.Radhakrishnan on September 3, 2009 at 3:19 PM said...

கலக்கல் கார்க்கி

Achilles/அக்கிலீஸ் on September 3, 2009 at 3:43 PM said...

//ஒரு பிரபல பதிவரிடம் பேசப் போகிறோமே என்ற பயத்துடன் தன்னை தயார் செய்து கொள்கிறார் பைத்தியக்காரன்.//

நல்லா குடுக்கறாங்கையா டீடெய்லு....

அருமையாக இருந்தது கார்க்கி... :)

Vidhoosh/விதூஷ் on September 3, 2009 at 4:35 PM said...

:)) hilarious.

--vidhya

அறிவிலி on September 3, 2009 at 5:17 PM said...

:))))))))

நாஞ்சில் நாதம் on September 3, 2009 at 5:29 PM said...

கடைசி வரி குபீர் சிரிப்பு

பட்டாம்பூச்சி on September 3, 2009 at 5:30 PM said...

:))))

வித்யா on September 3, 2009 at 5:52 PM said...

:)

செல்வேந்திரன் on September 3, 2009 at 6:53 PM said...

ரை ரை!

நாதஸ் on September 3, 2009 at 9:01 PM said...

:) :) :)

ராஜராஜன் on September 3, 2009 at 9:49 PM said...

:))

பாலா on September 3, 2009 at 10:33 PM said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

வெட்டிப்பயல் on September 3, 2009 at 10:54 PM said...

:)

//நான் நான் தான்//

Athu attakasamana story aache... I liked it very much...

மகேஷ் on September 4, 2009 at 12:20 AM said...

// ஒரு பிரபல பதிவரிடம் பேசப் போகிறோமே என்ற பயத்துடன் தன்னை தயார் செய்து கொள்கிறார் பைத்தியக்காரன். மொபைலில் calling karki என்று ஒளிர்கிறது //

Karki style opening!!!! அசத்துறீங்க சகா!

தமிழ்ப்பறவை on September 4, 2009 at 1:10 AM said...

ROTFL....
எக்ஸலண்ட் சகா...

பட்டிக்காட்டான்.. on September 4, 2009 at 2:33 AM said...

கலக்கிட்டிங்க..

:-D

அன்புடன் அருணா on September 4, 2009 at 6:37 PM said...

அடடா.....எனனைக்கூட கலந்துககத்தான் கூப்பிட்டாங்களா? தெளியவைத்த கார்ககிக்கு நன்றிகள் பல!!!கலக்குறெ கார்க்கி!

Karthik on September 5, 2009 at 4:01 PM said...

அடடா, நீங்க க்ளாஸ் எடுக்கப் போறதா இருந்தா வந்திருப்பேனே? :))

S.U.P.E.R.B.

மங்களூர் சிவா on September 5, 2009 at 8:15 PM said...

:))))))

காலப் பறவை on September 5, 2009 at 9:12 PM said...

:-)))

மந்திரன் on September 8, 2009 at 3:08 PM said...

இருந்தாலும் உங்கள் நேர்மை எனக்கு பிடித்து இருக்கு ..
:)

 

all rights reserved to www.karkibava.com