Sep 2, 2009

தமிழகத்தை ஆட வைப்பவர்கள்


 

    சினிமா மீது மோகம் வரும் முன்பே நடனத்தில் மீது காதல் உண்டெனக்கு. நான் பார்க்கும் எல்லாப் படங்களிலும் சற்று உற்று கவனிக்கும் ஒரு விஷயம் நடனம். என்னைக் கவர்ந்த சில நடன இயக்குனர்களைப் பற்றிய பதிவு இது.

இந்த பட்டியலில் பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ராஜூ சுந்தரம் ஆகியோரை சேர்க்கவில்லை. ஒரு டான்சராக எனக்கு பிரபுதேவாவைத்தான் பிடிக்கும். ஆனால் Choreographer என்ற வகையில் ராஜு சுந்தரத்தின் பரம ரசிகன். லாரன்ஸும் நல்ல நடன இயக்குனரே.

1) ஷோபி:

shobi

ஆத்திச்சூடி பாடலில் ஆடினாரே அவரேதான். ராஜு சுந்தரத்தின் பள்ளியில் இருந்து வந்தவர். பல படங்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கு தெரிந்து ராஜூவின் குழுவின் இருந்து வந்தவர்களில் வித்தியாசமான முறையில் நடனம் அமைப்பவர் இவர்தான். வாள மீனுக்கு பாடலுக்கு இவரது நடனம் அத்தனை கச்சிதம். என்னைப் பொறுத்தவரை அந்தப் பாடலின் மாபெறும் வெற்றிக்கு காரணம் மாளவிகாவும் நடனமும்தான்.இப்போதைக்கு எனது ஃபேவரிட் டான்ஸ் மாஸ்டர். 

ஹிட்ஸ்:

ஆத்திசூடி, கண்ணும் தான் கலந்தாச்சு, வாள மீனுக்கு விலாங்கு மீனுக்கு, வாடி வாடி கை படாத சிடி, டாக்சி டாக்சி

2) தினேஷ்

dhina

தினா என்றும் ஒருவர் இருக்கிறார். கத்தாழ கண்ணால் பாடலுக்கு நடம் அமைத்தவர். அவரல்ல இந்த தினேஷ் . ஒரு முறை விஜயின் படத்தில் ராஜு சுந்தரம் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க இருந்தார். விஜயுடன் ஆட இருந்தவர் சிம்ரன். ராஜுவுக்கும் சிம்ரனுக்கும் இடையே அப்போது பிரச்சினை இருந்தது. சிம்ரன் வருகிறார் என்ற விஷயம் தெரிந்து செட்டை விட்டு சென்றுவிட்டார் ராஜு. படப்பிடிப்பை நிறுத்தாமல் ராஜுவின் சம்மதத்தோடு விஜய் கைகாட்டிய ஆள்தான் தினேஷ். அந்தப் பாடல் ஆல் தோட்ட பூபதி. தமிழகத்தையே ஆட வைத்த அந்தப் பாடலில் ஒரு ஓரமாக ஆடவும் செய்தார். பிரபுதேவாவின் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலாவது இவருக்கு இருக்கும்.

ஹிட்ஸ்:

ஆல் தோட்ட பூபதி, மாம்பழமாம் மாம்பழமாம், தீம்தனக்க தில்லானா,வா வா என் தலைவா

3) ஸ்ரீதர்

untitled

மச்சான் பேரு மதுரவில் ஆரம்பித்தது இவர் பயணம். ராஜுவின் ஆஸ்தான டான்சர்களில் ஒருவர். சில விளம்பரப்  படங்களிலும் ஆடி இருக்கிறார். இவருடன் வந்த இன்னொருவர் ஜானி. இருவருக்குமே நல்ல உடல்வாகு. ஜானி இவரை விட நன்றாக ஆடக்கூடியவர். என்றாலும் நடன இயக்குனராக அவர் கலக்கவில்லை. இவரது நடனத்தில் ராஜுவைப் போல் சற்று காமெடியும் கலந்திருக்கும். போக்கிரியில் வரும் வசந்த முல்லை பாடலை சொல்லலாம். தமிழகத்தையே ஆட வைத்த நாக்க முக்கவின் நடனம் இவரதுதான்.

ஹிட்ஸ்:

மச்சான் பேரு மதுர, வசந்த முல்லை, படிச்சு பார்த்தேன் ஏறவில்லை, நாக்க முக்க

4) அசோக்ராஜா

2008101050321601

ராஜுவோட வேலை செய்திருந்தாலும் அவரது குழுவில் அதிகம் ஆடாதவர், அல்லது முன் வரிசையில் இல்லாதவர். ஆரம்பமே அதகளம் இல்லை. ஓ போடு இவரது முதல் ஹிட். பின் ஒரு சின்ன இடைவெளி. திருமலையில் வாடியம்மா ஜக்காம்மாவில் திரையில் சில வினாடிகள் தோன்றினார். தொடர்ந்து விஜய் படங்களில் வாய்ப்பு. எனக்கு தெரிந்து ராஜுவுக்கு அடுத்தபடி நிறைய ஒப்பனிங் சாங்கிற்கு நடனம் அமைத்தவர் என்ற பெருமை கொண்டவர். சற்று உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்பதை ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அறிவார்கள்

ஹிட்ஸ்:

ஆடுங்கடா என்னை சுத்தி, வாடா வாடா தோழா, ஓ போடு, வாடியம்மா ஜக்கம்மா

5) பிரேம் ரக்‌ஷித்:

DSC_00321233077629

தெலுங்கு திரையுலகில் இருந்து வந்தவர். ஆந்திராவில் கிட்டத்தட்ட அனைத்து முண்ணனி நடிகர்களுக்கும் ஆஸ்தான் நடன இயக்குனர். well defined steps  இல்லாமல் வித்தியாசமான முறையில், குறிப்பாக கால்களை மடக்கி ஆடும் ஸ்டைல் இவருடையது. ஒரு பாடல் சொன்னாலே புரிந்துக் கொள்வீர்கள். எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலில் விஜயின் கால்களை மடக்கி ஒடித்தவர் இவர் தான். இந்தப் பட்டியலில் ராஜுவின் பள்ளியில் இருந்து வராத ஒரே ஒருவர். இவரது தெலுங்கு பாடல்கள் இன்னும் தூளாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று இங்கே

ஹிட்ஸ்:

எல்லாப் புகழும், டன் டன் டன்னா டர்னா.

*************************************************8

பின்.கு 1: இவர்களைத் தவிர சரோஜா சாமான் நிக்கோலா புகழ் கல்யான், சிம்புவின் ஃபேவரிட் ராப்ர்ட், கூல் ஜெயந்த் என பலர் இருந்தாலும் என்னை கவரவில்லை என்பதால் குறிப்பிடவில்லை.

பின். கு 2: விஜயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? எனக்கு விஜயின் நடனம் பிடிக்குமென்பதால் அவரது பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்கள் பெயரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மற்றவர்கள் படங்களில் அந்த ஆர்வம் இருக்காது.

இலவச இணைப்பு : என்னைப் பொறுத்தவரை பீட்ஸ், பாடலின் வேகம், ஒளிப்பதிவு, ஆடுபவர்கள் என எல்லாமும் பாடலுக்கு ஏற்றவாறு பக்காவாக (நடனத்தை பொறுத்தவரை)  அமைந்த பாடல் இதுதான்.

41 கருத்துக்குத்து:

நாஞ்சில் நாதம் on September 2, 2009 at 9:52 AM said...

தமிழகத்தை ஆட வைப்பவர்கள்(கார்க்கி)
அதென்ன கார்க்கி அப்படின்னு அடைப்புக்குறிக்குள்ள?

:))))

நர்சிம் on September 2, 2009 at 10:44 AM said...

கலக்கல் ஆட்டம் சகா

ஸ்ரீமதி on September 2, 2009 at 10:56 AM said...

டான்ஸ் மாஸ்டர்ஸ் பத்தி எழுதறேன்னு சொன்னீங்க?? ;)))

மண்குதிரை on September 2, 2009 at 11:07 AM said...

nanba niingkal solvathu poola

jani enakku rompa pitikkum

avarathu settaiyai rompa rasippeen

வித்யா on September 2, 2009 at 11:08 AM said...

டாக்ஸி டாக்ஸியும் ஷோபி தான். இன்னும் கொஞ்சம் டிடெய்லா அலசிருக்கலாம். ரெண்டு பதிவா போட்ருக்கலாம். அது சரி உங்களுக்கு பதிவெழுத மேட்டர் பஞ்சமாயென்ன:)

சுசி on September 2, 2009 at 11:15 AM said...

சூப்பர் பதிவு கார்க்கி.
//நான் பார்க்கும் எல்லாப் படங்களிலும் சற்று உற்று கவனிக்கும் ஒரு விஷயம் நடனம்.//
ஒத்துக்கிறேன்.... :)))

கலையரசன் on September 2, 2009 at 11:16 AM said...

ஆல் இன் ஆல் அலகுராஜா....!

(என்னது யாரா...? கண்டிப்பா நீதான் சகா!)

radhika on September 2, 2009 at 11:22 AM said...

i like ahmed khan. He composed and performed a song with sushmitha in muthalavan.

also, bobby. first song in anjathe.

i too love dance karki.My master also working in cine field. as you said shobi is rocking now.

Great post karki. Good introduction.

biskothupayal on September 2, 2009 at 11:33 AM said...

சிறு திருத்தம் நீங்கள் வட்டம் போட்டிருக்கும் நபர் தினேஷ் அல்ல

பார்த்திபன் கனவு படத்தில்

“முத்து மழை பெஞ்சத்துன்னா” பாடலில் ஆடுகிறவரே தினேஷ்

திரையில் வரும் ஹீரோகளை விட
ஹீரோ பக்கத்தில் ஆடும் நடன கலைஞர்களையே கவனிப்பேன்

ராஜீ சுந்தரம் குழுவிலிருந்து வந்த

“ஜானி” மற்றும் “நோயல்” இரண்டு பேருமே அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. நான் அவர்களின் திவிர ரசிகன் உதாரணம் ”சலோமியா பாடல்” கண்ணெதிரே தோன்றினாள்”

ஆதிமூலகிருஷ்ணன் on September 2, 2009 at 11:34 AM said...

விஜய் படங்களை ஆராய்ச்சி நடத்திவிட்டு ரொம்ப நல்லவன் மாதிரி பி.கு 2 வேறயா? சரிதான்..

gnani on September 2, 2009 at 11:35 AM said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

சூரியன் on September 2, 2009 at 11:42 AM said...

வெட்டி அலசல்...

மரியாதை படம் பாருங்க விசயகாந்த டான்ஸ் மூவ்மெண்ட அப்புறம் அலசி ஆராய்ங்க..

யுவகிருஷ்ணா on September 2, 2009 at 11:51 AM said...

கலக்கல் போஸ்ட்!

தராசு on September 2, 2009 at 12:07 PM said...

ம்....ம்..

படிச்சோம், படிச்சோம்.

எல்லாம் தளபதி படங்களாவே இருக்கு, தல ஆட்னத பாத்ததில்லையா...,,,

உங்களுக்கு அதப் பத்தி எழுத தெரியலயா??? சரி சரி

பரிசல்காரன் on September 2, 2009 at 12:13 PM said...

தலைப்பைப் பார்த்து நான்கூட டாஸ்மாக் சூபர்வைசர்கள் பத்தின பதிவோன்னு பயந்துபோய்ட்டேன்!

நல்ல போஸ்ட் சகா!

Kalyani Suresh on September 2, 2009 at 12:17 PM said...

sorry kaarki. No comments.

ராஜு.. on September 2, 2009 at 12:24 PM said...

ரைட்டுங்கண்ணோவ்.

கார்க்கி on September 2, 2009 at 12:53 PM said...

நாதம், தமிழ்மணத்தில் என் பெயர் வர மாட்டேன்னு அடம் பிடிக்குது. அதான்.. அதில் இணைத்தபிறகு எடுத்து விடுவேன்

நன்றி நர்சிம்

ஸ்ரீமதி, லொள்ளு..

ஆமாம் மண்குதிரை. என்ன பிரச்சினையோ?

வித்யா, அவர்களைப் பற்றி தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை இணையத்தில் :))

நன்றி சுசி

ஹிஹிஹி.. நன்றி கலை

ராதிகா, அவர் அந்த ஒரு பாடல் மட்டும்தான் தமிழில் செய்தார். யாரிடம் கத்துக்கறீங்க? நான் ஹரி என்பவரிடம், வேளச்சேரி ateliers fitnessல் இருக்கிறார்

பிஸ்கோத்து, அவர்தான் வட்டத்துக்குள் இருப்பவரும், பாடலில் கவனியுங்கள். இந்த படம் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதால் சரியா இல்லை. நன்றி

ஆதி, வேற என்ன செய்ய? விஜயை பற்றி எழுதினாத்தான் சண்டைக்கு வறீஙக்ளே!!!

நன்றி ஞாநி. ஒரு படம் எடுத்து காட்டுங்கள். பிடித்திருந்தால் அடுத்த படத்திற்கு தருகிறேன்

சூரியன், மூக்குத்தி முத்தழகு என்ற பாடலுக்காக லாரன்ஸுக்கு தமிழக விருது தரப்பட்டது. :))

நன்றி யுவகிருஷ்ணா

தராசண்ணே, தல ரசிகர்கள்தான் ஆடுவாங்க. தல ஆடாது :))

நன்றி பரிசல். அவரக்ள் ஆட வைப்பவர்களல்ல, விழ வைப்பவர்கள்

ஏன் கல்யாணி மேடம்?

ராஜூ, பிடிச்சிட்டியா பாயிண்ட்ட?

யோ வாய்ஸ் on September 2, 2009 at 12:57 PM said...

விஜேயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? எனக்கு விஜயின் நடனம் பிடிக்குமென்பதால் அவரது பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்கள் பெயரை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். மற்றவர்கள் படங்களில் அந்த ஆர்வம் இருக்காது.//

இந்த விஷயத்தில நான் உங்க கட்சி தல.. விஜய் தான் தமிழில் தான் சிறந்த டன்செர். அவர் கிட்ட யாருமே போகல இன்னும்

கார்ல்ஸ்பெர்க் on September 2, 2009 at 1:15 PM said...

அண்ணா, எனக்கொரு Doubt.. இவங்களால நம்ம தலைவர் கலக்குறாரா இல்ல நம்ம தலைவரால இவங்கெல்லாம் கலக்குறாங்களா? எனக்கென்னமோ நான் முதல்ல சொன்னதுதான் சரின்னு தோணுது.. நீங்க என்ன சொல்றீங்க?

Kalyani Suresh on September 2, 2009 at 1:26 PM said...

என்னோட favourite பிரபுதேவா தான்.

விக்னேஷ்வரி on September 2, 2009 at 1:49 PM said...

நல்ல பதிவு. அவசரமா எழுதிட்டீங்களா....

"ராஜா" from புலியூரான் on September 2, 2009 at 2:48 PM said...

இன்னைக்கு இல்ல என்னைக்குமே தமிழ்நாட்டையே ஆடவக்கிறது ஒரு குவாட்டேரும் தொட்டுக்க ஊருகாயிம்தான், அத எழுதாம பாட்டு , பீட்டுனுட்டு
சின்ன புள்ள தனமாள இருக்கு????

எல்லாம் தளபதி பாட்டா இருக்கு... வீர தளபதி ஜே. கே. ரித்தீஷ் கோபபட போறாருங்க....

ஆம்மா அதுல எல்லா புகழும் ஒருவனுக்கே,டன் டானா டர்னா அப்டின்னு ரெண்டு பாட்டு இருக்கே அதெல்லாம் எப்ப வந்துச்சி? மலையாள பாட்டா? வெளக்கமா போடுங்க முக்காவாசி பேருக்கு தெரியாது....

கார்க்கி on September 2, 2009 at 4:12 PM said...

யோ வாய்ஸ், நன்றி

கார்ல்ஸ்பெர்க், இருவருமே இருவருக்கும் நல்லது செய்கிறார்கள்

கல்யாணி மேடம், அவருதான் என்னைக்குமே பெஸ்ட். சொல்லி இருக்கேனே?

நன்றி விக்கி.. அப்படியெல்லாம் இல்ல..

ராஜா, பி.போ.இ..(நன்றி பரிசல்)

Cable Sankar on September 2, 2009 at 5:11 PM said...

நைஸ் நல்ல பதிவு கார்க்கி.. என்ன ஒரே விஜய் புராணமா இருக்கு.. :(

செல்வேந்திரன் on September 2, 2009 at 7:07 PM said...

Its Cool!

அறிவிலி on September 2, 2009 at 7:35 PM said...

ஆட்டம் அருமை

vettipaiyan on September 2, 2009 at 8:59 PM said...

வணக்கம் கார்க்கி
உஙக தலை விஜய் பட்த்தை மட்டும் பார்பீர்கள் என்பது புரீகிறது,
தணுஸ், ஜெயம் ரவி இவர்கள் பட்த்தையும் பாருங்கள், நடனம் வேகமாக ஆடினாலும் நளினமாக ஆட முடியும் என்பது தெரியும்,
ஜெயம் ரவி : Yeppadi Irundha Yem Manasu பாடல் மற்றும் பல
தணுஸ் : "Thottu Thottu" from Kadhal Konden , "Kaadhal Kondein" (Theme Music), Pudhupettai : enga eriya ullavarethe, Polladhavan: படிச்சு பார்த்தேன் ஏறவில்லை, மற்றும் பல
மேலும் சுர்யா, சிம்பு, எல்லாம் உஙகள் தல போல தான், இவர்கள் நடனத்தில் நிறைய CUT shot இருக்கும், உடன் ஆடுபவர்கள் உடன் சின்க் ஆக மாட்டார்கள்,
வில்லு பட்த்தின் DADY MUMMY பாடலுக்கு, சிரஞசிவி நடனம் பாருங்கள்,
http://www.youtube.com/watch?v=zMPH2XXIkPI , எவ்வளவு நளினம், அதே சமயம் உடன் ஆடும் நடிகைக்கு இணையாக , பீட்ஸ் தப்பாம்ல் , எக்ஷ்ஸ்பிரசனுடன் super ஆக ஆடி இருப்பார்,
ஆனால் உஙக விஜய் பெரும்பாலும், திரையை பார்த்துதான் ஆடுவார், பீட்ஸ், நிறைய தப்பும். ஒரே பாடலுக்கு இருவரும் ஆடியதால், Compare செய்ய வேண்டியதாகிவிட்ட்து,
விஜய் நடனம் தேவா இசை போல, ஆனால், உஙகள் வட்டம், ராசா இசையளவுக்கு பேசுவது, முடியல வலிக்குது, அதற்காக தேவா இசை மோசம் என்ப்து இல்லை, உங்கள் புகழ்ச்சிதான் கொஞசம் ஒவர்.
உங்களுக்கும் எனக்கும் விஜய் நடனம் பற்றிய கருத்து ம்ட்டுமே ஒத்துபோவதில்லை, ஏன்? ஏன்? ஏன்?

vettipaiyan on September 2, 2009 at 9:02 PM said...

soory கார்க்கி,

affable joe on September 2, 2009 at 10:55 PM said...

////எல்லாம் தளபதி படங்களாவே இருக்கு, தல ஆட்னத பாத்ததில்லையா...,,,

உங்களுக்கு அதப் பத்தி எழுத தெரியலயா??? சரி சரி////

நல்ல காமெடி, தல என்னைக்கி ஆடுனாரு நடந்தாரு, நின்னாரு :-) .எத்தனை பேர் சொல்லணும் விஜய் தான் தமிழ் சினிமா ஹீரோக்களில் நல்ல டான்ஸ் ஆடுவார்னு கலக்கல் பதிவு கார்க்கி .

தமிழ்ப்பறவை on September 3, 2009 at 1:18 AM said...

கலக்கல் சகா... ஆடலாசிரியர்கள் பற்றிய குறிப்புகள் அவ்வளவு எளிதில் கிடைக்காது.அவர்களின் ஸ்டைலை வைத்துக் கவனித்திருப்பீர்கள் போலும்.
எப்படியோ..வித்தியாசமான பதிவு...

பட்டிக்காட்டான்.. on September 3, 2009 at 3:26 AM said...
This comment has been removed by the author.
பட்டிக்காட்டான்.. on September 3, 2009 at 3:27 AM said...

//.. பின். கு 2: விஜயின் பாடல்களே அதிகம் இருப்பதாக தெரிகிறதா? ..//

நினச்சுட்டே வந்தேன், நீங்களே பின்.கு. போட்டுடிங்க..

:-)

கார்க்கி on September 3, 2009 at 10:25 AM said...

கேபிள்ஜி, பி.கு தான் போட்டு இருக்கேன்..

நன்றி செல்வா

நன்றி அறிவிலி

நன்றி ஜோ. உண்மைதான்

நன்றி பற்வை.பதிவுக்கு பின் இருக்கும் உழைப்பை புரிந்து கொண்டமைக்கு நன்றி

நாங்க உஷாரு பட்டிக்காட்டான்


வெட்டி, இதுவே ராஜா போன்ற அஜித் ரசிகர்கள் சொல்லி இருந்தால் பி.பொ.இ என்று ஒரே வரியில் சொல்லி இருப்பேன். உங்கள அப்படி நினைக்காததால் விரிவான பதில். சாரியெல்லாம் வேண்டாமே.

முதலில் பதிவை முழுவதுமாக படிக்க முடிந்தால் பின்னூட்டமிடுங்கள். நீங்கள் சொன்ன படிச்சு பார்த்தேன் ஏறவில்லை பாட்டை நானும் குறிப்பிட்டு இருக்கிறேன். மேலும் தனுஷும் ஜெயம் ரவியும் நன்றாக ஆடக் கூடியவரக்ள். ஆனால் விஜயை விட பெட்டர் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களையும் நான் வற்புறுத்தவில்லை. என் கருத்து எனக்கு. உஙக்ள் கருத்து உஙக்ளுக்கு.

அதிலும் சூர்யாவெல்லாம் விஜயோடு ஒப்பிட்டது, நடனத்தை மற்றிய உங்கள் அறியாமையை காட்டுகிறது. விஜய்க்கு கட் ஷாட்டா? பெரும்பாலும் சரணத்திற்கும், அனுபல்லவிக்கும் இடையே வரும் பி.ஜி.எம்மில் ஒரே ஷாட்டாக ஆட விஜய் ஆசைப்படுவார். வாடா வாடா தோழா, வாடி வாடி கை, ராமா ராமா, ஆடுஙக்டா என போட்டு பாருங்கள். மேக்கரீனாவில் கடைசி ஒரு நிமிடம் கட்டாகமால் வரும். சிரஞ்சீவியும் விஜயும் ஒரே ஸ்டெப்பாஇ ஆடினார்கள். தாம்தக்க தீம்தக்கவில் வரும் வீணை ஸ்டெப். பார்த்ததுண்டா? லாரன்ஸே லெக் மூவ்மெண்ட்டிலும், எக்ஸ்பிரஷினிலும் விஜயை அடிச்சிக்க ஆளே இல்லையென்று சொல்லி இருக்கிறார். ஷில்பா ஷெட்டி தன்னோடு ஆடிய ஹீரோக்களில் பெஸ்ட் விஜய் தான்(பிரபுதேவா நடிகர் அல்ல) என்றார்.

டேடி மம்மி மட்டுமல்ல, வில்லுவில் எந்த பாடலும் நடனம் சரியில்லை என்றே நான் விமர்சனத்தில் சொல்லி இருந்தேன். படிச்சிஙக்ளா? அது பிரபுதேவவின் மடன் இறந்தவுடன் அவர் இல்லாமல், ஒரே நாளில் ஷூட் செய்யப்பட்ட பாடல்.

விஜய் தேவாவா? சரி. அப்போ தமிழ் சினிமாவில் யாரு ராசா என்றும் சொல்லுஙக்ளேன்...

radhika on September 3, 2009 at 10:37 AM said...

dont waste your time for this karki. they just want to irritate you.

avaru peru thaan sariyaa vachi irukkaare.leave this

affable joe on September 3, 2009 at 11:10 AM said...

கார்க்கி அவர்களுக்கு தல தான் சிறந்தவர் அனைத்திலும் சிவாஜிக்கு நடிக்க தெரியாது S.P.B க்கு பாட தெரியாது விடுங்கள் .சூர்யாவின் ஆதவன் பட பாடல் வெளயீட்டு விழா மற்றும் சிவ சங்கர் மாஸ்டர் பேட்டியும் படியுங்கள் Mr.வெட்டி

"ராஜா" from புலியூரான் on September 5, 2009 at 9:51 AM said...

சரிங்க உ. தெ. சி.

taaru on September 7, 2009 at 1:00 PM said...

வசந்த முல்லை from போக்கிரி - ஸ்ரீதர் அல்ல...தினேஷ் செய்தது- [விஜய் அவார்ட்ஸ்' 07 பாருங்கள்.]

Anonymous said...

அண்ணே இவரா தினேஷ்?? பார்த்திபன் கனவு படத்துல நந்திதா கூட ஆடுவாரே அவரு தான் தினேஷ்.. இவரு இல்ல னு நெனைக்கறேன்!! எதுக்கும் கொஞ்சம் செக் பண்ணுங்க..

Anonymous said...

//சிறு திருத்தம் நீங்கள் வட்டம் போட்டிருக்கும் நபர் தினேஷ் அல்ல

பார்த்திபன் கனவு படத்தில்

“முத்து மழை பெஞ்சத்துன்னா” பாடலில் ஆடுகிறவரே தினேஷ்
//


ஐயோ இத படிக்காம போட்டுட்டேன்.. அதே படத்தை வெச்சு சொல்லீட்டாங்க.. வெரி சாரி.. இப்ப இதுக்கு ரிபீட் மட்டும் போட்டுக்கறேன் !

Anonymous said...

//பிஸ்கோத்து, அவர்தான் வட்டத்துக்குள் இருப்பவரும், பாடலில் கவனியுங்கள். இந்த படம் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதால் சரியா இல்லை. நன்றி//

இல்ல அண்ணே.. நீங்க ரெண்டு பாடும் ஒரு தடவ பாருங்க !!

 

all rights reserved to www.karkibava.com