Sep 1, 2009

கல்லூரி-கேம்பஸ்-சிங்கை- எஸ்.பி-ஈழம்


 

  நான் டிப்ளோமா முடித்திருந்த சமயம் அது. (அப்போ லாங் லாங் அகோ, சோ லாங் அகோன்னு சொல்லு)  கேம்பஸ் இண்ட்டெர்வ்யூவில் தேர்வாகிவிட்டேன்.(த்தோடா) சிங்கப்பூரில்  ஆறு மாத காலம், சிங்கை அரசு நடத்தும் பயிற்சிக்காக நடந்த நேர்முகத் தேர்வு அது.  நான்கு கட்டத்தை தாண்டி மறுநாள் Communication round. வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஆனந்த்ராஜைப் போலவே இருந்தார்கள் வந்தவர்கள். ஆனாலும், ஒரு அரசு கல்லூரிக்கு வந்து  ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்பினோம். விமான செலவுக்கு 10,000 ரூபாய் மட்டுமே நம் கட்ட வேண்டும். மாதம் ரூ25,000 stipend. தங்குமிடம், போக்குவரத்து என மற்றவை அனைத்தும் அவர்கள் செலவு. பயிற்சி முடிந்தால் ஒரு வருடம் கழித்து சிங்கையிலே 50,000 சம்பளத்தில் வேலை. சிங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் உண்டு.யாருக்குத்தான் ஆசை வராது?

மறுநாள் Communication roundற்கு ஹாஸ்டலில் பல அறைகளில் ஒத்திகை நடைபெற்று கொண்டிருந்தது.(நல்ல வேளை, நீங்க டாக்டருக்கு படிக்கல) ஆங்கிலத்தில் பேச அப்போது பலருக்கு தயக்கம். அனைத்து துறைகளுக்கும் நடைபெற்றதாலும், நிறைய பேரை அவர்கள் தேர்ந்தெடுத்ததாலும் ஹாஸ்டல் முழுக்க ஷேக்ஸ்பியர் வாசம் வீசிக் கொண்டிருந்தது. (பாவம்டா அவரு, கேப்டன் வாசம்ன்னு சொல்லு)

மறுநாள்,கார்க்கி என்று அழைத்தவுடன் கெத்தாக போய் அமர்ந்தேன். சம்பிரதாய கேள்விக்குப் பின், கடைசியாக என்ன படம் பார்த்தீங்கன்னு கேட்டார் ஆனந்த்ராஜ்.(அச்சச்சோ, அந்த பேரெல்லாம் சொல்ல முடியாதே) தயங்கி தயங்கி அலைபாயுதே என்றேன்.(அலைபாயுதே தெரியும், தயங்கி தயங்கி அலைபாயுதே?) அந்தக் கதையை சொல்லுங்க என்றார். பாதிக் கதையை சொல்லும் போதே U are selected என்றார். (அப்போ அலை படத்தோட கதையைத்தான் சொன்னியா?) நல்லதா, கெட்டதா என்ற குழப்பத்தோடு வெளியே வந்தேன். (அவங்களுக்குத்தானே?)

  ஏழு வாடிய முகத்தோடு வந்தான். என்னடா ஆச்சு என்றேன். (வாடிப் போச்சுன்னு நீதானே சொன்ன) படம் பார்த்தியான்னு கேட்டாங்களா என்றான். தலையசைத்தேன்.

எதுக்குன்னு தெரியாம நான் பார்த்த கடைசி படம்..

டேய்.. அதெல்லாமா சொல்லுவாங்க?

இருடா. என்னம்மா கன்னுன்னு சொல்லிட்டேன். அந்த கதையை எப்படிடா இங்கிலிஷில் சொல்றதுன்னு ஏழு கேட்டான். என்ன சொல்றது?

   அன்று தேர்வாகிய போதும் கைவசம் பாஸ்போர்ட் இல்லாததால் என்னால் உடனே சிங்கப்பூர் செல்ல இயலவில்லை. TATKALல் விண்ணப்பிக்க அப்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த ரவி என்பவரை சந்திக்க சென்றிருந்தேன். தொடர்ந்து 10 நாட்கள் காலை முதல் மாலை வரை எஸ்.பி ஆஃபிஸே கதி என்றிருந்தேன். (B.P.யே கதின்னு இருந்தவன்தாண்டா நீ) 11ம் நாள் என்னோடு வந்த என் நண்பனுக்கு லெட்டர் கிடைத்து விட்டது. எனக்கு???? என் அப்பாவுக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக (அப்போது அவர் இறந்து ஒரு ஆண்டு ஆகியிருந்தது)  காரணம் சொல்லி நிராகரித்து விட்டார். என் நிலைமையை சொல்லி அவரிடம் கிட்டத்தட்ட கெஞ்சினேன். அவர் சொன்ன வார்த்தைகள் சரியா நினைவில் இல்லை. ஆனால் அங்க(ஈழம்) எவன் செத்தா நமக்கென்ன? நம்ம வேலையைத்தானே பார்க்கனும் என்றார். திரும்பி வந்துவிட்டேன். நார்மலில் அப்ளை செய்து பாஸ்போர்ட் வாங்க மூன்று மாதாமகிவிட்டது. பின் ஒரு வருடம் தாமதமாகவே என்னால் சிங்கைக்கு செல்ல முடிந்தது.

   அந்த ரவி தான் இப்போது வட சென்னை இணை கமிஷன்ர். சென்ற வாரம் லயன்ஸ் கிளப் மீட்டிங்கில் அவரை சந்திக்க நேர்ந்தது. எரிச்சலோடு வெளியே சென்றுவிட்டேன். பின் நண்பர் வந்து அவர் பேசியதை சொன்னார். மே17முதல் அவர் இனிப்பு மற்றும் அசைவ உணவுகளை விட்டு விட்டாராம். காரணம்? அவர் சொன்னது, அன்றுதான் ஈழத்தில் 20,000 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டார்களாம். எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்களுக்காக இதையாவது செய்வோம் என்று முடிவெடுத்தாராம்.

என்னை யாரென்று சொல்லாமல் அவரிடம் கை கொடுத்து விட்டு வந்தேன்.

2006080400650601

33 கருத்துக்குத்து:

Kalyani Suresh on September 1, 2009 at 10:20 AM said...

இன்னிக்குதான் மனசு கனமாகறமாதிரி ஒரு விஷயத்தை சொல்லிருக்கீங்க கார்க்கி. நம் சகோதர சகோதரிகளுக்காக நம்மால் செய்ய இயலுவது இது போன்ற சில விஷயங்கள்மட்டும்தானா?

தாரணி பிரியா on September 1, 2009 at 10:56 AM said...

யாருன்னு சொல்லியே கை குடுத்துட்டு வந்து இருக்கணும் கார்க்கி.

தாரணி பிரியா on September 1, 2009 at 10:57 AM said...
This comment has been removed by the author.
சுசி on September 1, 2009 at 11:04 AM said...

ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு கார்க்கி. மனசு ரொம்பவே பாரமாயிடிச்சு.

டம்பி மேவீ on September 1, 2009 at 11:41 AM said...

"தாரணி பிரியா said...
யாருன்னு சொல்லியே கை குடுத்துட்டு வந்து இருக்கணும் கார்க்கி."


amam athu than seingi irukkanum

தராசு on September 1, 2009 at 12:10 PM said...

தல,

எல்லா மனுஷரும் எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, கமிஷனரும் மாறிட்டார் விடுங்க.

தமிழ்ப்பறவை on September 1, 2009 at 12:20 PM said...

இவ்வளவு சீரியஸான பதிவிலும் கார்க்கி உள்ள நுழையணுமா..?

Vinothini on September 1, 2009 at 12:23 PM said...

ஏழுவைப்பற்றித்தான் சொல்லப்போறீங்கன்னு நினைத்தேன்
கடைசில மே 17 .........:( :(

யாசவி on September 1, 2009 at 12:31 PM said...

:)

nice

ஸ்ரீமதி on September 1, 2009 at 12:31 PM said...

ஹ்ம்ம்ம் :(

ghost on September 1, 2009 at 12:33 PM said...

மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை காலத்திற்கேற்ப அவரும் மாறிவிட்டார்

கார்க்கி on September 1, 2009 at 12:48 PM said...

உண்மைதான் கல்யாணி

தா.பி, எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு

சுசி, ம்ம்

மேவீ, கவிதை நல்லாத்தான் இருந்துச்சு

தராசண்ணா, வெல்கம் பேக்.

பறவை, அது வேணும்ன்னுதான் செஞ்சேன். எடுத்த உடனே இதுதான் மேட்டர்ன்னா நம்மாளுங்க ஓடிடுவாங்களே.. அவரைப் பற்றி அனைவரும் தெரிஞ்சிக்கனும் என்பதாலே :))

நன்றி வினோதினி

நன்றி யாசவி

நன்றி ஸ்ரீமதி

ஆமாம் பிசாசு. நன்றி

யோ வாய்ஸ் on September 1, 2009 at 12:57 PM said...

:)

radhika on September 1, 2009 at 1:58 PM said...

present sir

ஜெனோவா on September 1, 2009 at 2:20 PM said...

:-((

Anonymous said...

தாரிணிபிரியா சொன்ன மாதிரி நீங்க யாருன்னு சொல்லிட்டு கை குடுத்துருக்கலாம்.

மண்குதிரை on September 1, 2009 at 2:49 PM said...

nanba !

கார்ல்ஸ்பெர்க் on September 1, 2009 at 2:59 PM said...

//யாருன்னு சொல்லியே கை குடுத்துட்டு வந்து இருக்கணும் கார்க்கி//

- ஸ்ட்ராங்கா ரிப்பீட்டு..

SK on September 1, 2009 at 3:43 PM said...

நல்ல பகிர்வு கார்க்கி

Cable Sankar on September 1, 2009 at 3:47 PM said...

பேரை சொல்லியிருந்தா என்னவாயிருக்கும்..?

சித்து on September 1, 2009 at 4:08 PM said...

அப்படியா சொல்றீங்க?? அவரை பத்தி ரொம்ப நல்லாத்தான கேள்விப் பட்டேன். எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குமோ :(

கார்க்கி on September 1, 2009 at 4:28 PM said...

நன்றி யோவாய்ஸ்

நன்றி ராதிகா

நன்றி ஜெனோவா

நன்றி சின்ன அம்மிணி

நன்றி மண்குதிரை

நன்றி கார்ல்ஸ்பெர்க்

நன்றி எஸ்.கே

நன்றி கேபிள். ஒன்னும் ஆகாது :)

சித்து, அவர் நல்லவரில்லைன்னு சொல்லல.. இந்த விஷயத்தில் அவரது பார்வை மாறியிருக்குன்னுதான் சொல்ல வறேன்..

சூரியன் on September 1, 2009 at 5:12 PM said...

:)

ஆரூரன் விசுவநாதன் on September 1, 2009 at 5:13 PM said...

மனிதனின் மறுபக்கம்.......
அடடா....இவ்வளவு அசிங்கமாவா?
நடிப்புச் சுதேசிகள்


வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆரூரன்

அனுஜன்யா on September 1, 2009 at 5:18 PM said...

கார்க்கி,

I am proud of you. நீயும் முறுக்கிக் கொள்ளாமல் கை கொடுத்ததற்கு. சில பேர் சொல்வது போல் நீ யார்னு சொல்லியிருக்கலாம்.

Aside, இந்த மாதிரி symbolic gestures செய்வதினால் என்ன பயன்? ஒரு கேலிக்காக சொல்லவில்லை. அதற்குப் பதில் உயர் அதிகாரிகள் கூட்டத்திலோ (Meeting of Secretaries) அல்லது முதல் அமைச்சரைச் சந்திக்க முடிந்தாலோ அவரிடமே நேரிடையாக எப்படி நாம் செயல்படலாம் என்று சொல்வது சிறந்தது.

அனுஜன்யா

ILA on September 1, 2009 at 5:49 PM said...

mm

Kiruthikan Kumarasamy on September 1, 2009 at 5:49 PM said...

//யாருன்னு சொல்லியே கை குடுத்துட்டு வந்து இருக்கணும் கார்க்கி//

அதில்லை முக்கியம்... வெளியில வந்த கார்க்கி அப்பிடியே கையே குடுக்காம திரும்பி வந்திருக்கலாம்.. திரும்பிப் போய் கை குடுத்தாரே.. அங்கதான் நிக்கிறார்... கலக்கிட்ட சகா..

pappu on September 1, 2009 at 6:45 PM said...

touching!

வித்யா on September 1, 2009 at 8:37 PM said...

:(

வெட்டிப்பயல் on September 1, 2009 at 9:18 PM said...

Kaarki,
இவ்வளவு சின்ன போஸ்ட்ல இத்தனை மைண்ட் வாய்ஸ் தேவையா?

வேற யார் பதிவா இருந்தாலும் ரெண்டாவது பேராலயே ப்ரவுசரைக் க்ளோஸ் பண்ணியிருப்பேன்.

கும்க்கி on September 1, 2009 at 10:55 PM said...

ப்ரதர்...அந்த நீலக்கலர்ல(அழகான கலர்..அதை எழுதக்கூட தயங்கற மாதிரி பன்னிட்டாங்க..) இருக்கின்ற கமெண்ஸ்....நல்லாருக்கு.

மற்றபடி மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா.....

கார்க்கி on September 2, 2009 at 9:42 AM said...

நன்றி சூரியன்

நன்றி ஆருரான்

நன்றி தல.நீங்கள் சொல்வது சரியெனப்பட்டாலும், அவரால் அதுவெல்லாம் முடியவில்லை எனபதையும் ஒத்துக் கொள்கிறார்.

நன்றி இளா

நன்றி குமாரசாமி

நன்றி பப்பு

நன்றி வித்யா

நன்றி வெட்டி. மாத்திக்கிறேன் பாஸ்

உண்மைதான் கும்க்கி

நர்சிம் on September 2, 2009 at 10:42 AM said...

வருத்தமாய் இருக்கிறது சகா.

 

all rights reserved to www.karkibava.com