Aug 31, 2009

மகதீரா – அஜித்துக்கு அதிர்ஷ்டமா?


 

    ஹைதையில் தொடர்ந்து வசிக்க வேண்டுமெனில் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற விதியை அறிந்துக் கொண்டதாலும், அஜித்தின் 50வது படமாக இது இருக்கக் கூடுமென்பதாலும், எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தால் தெரியும் ஹோர்டிங்கில் அநியாயத்துக்கு அழகாய் தெரிந்த காஜல் அகர்வாலுக்காகவும், இதுக்கு வரலைன்னா மல்லன்னாவுக்கு போகலாம் என்ற ரூம்மேட்டின் சதி திட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காவும் இன்னும் சில ‘காகவும்’ மகதீராவுக்கு சென்றேன். இதில் எந்த ‘காகவும்’ இல்லாமலும் இது பார்க்க வேண்டிய படமென்பது மட்டும் உண்மை.

இதுவரை வந்த 999 தெலுங்கு படங்களிலும், 888 தமிழ்ப் படங்களிலும் வந்த அதே ஓப்பனிங் சீன். பைக் ரேஸ். ஆனால் இந்த முறை உயரம் தாண்ட வேண்டும். ம்ம்ம்முமைத் கான்தான் போட்டி நடத்துபவர். எனவே ஹீரோ வென்றவுடன் பாடலில் இவரும் ஆடுவார் என்று பக்கத்து சீட்காரர் சொன்னபோது அவரது நுட்பமான அறிவுக்காக பத்மஸ்ரீ இல்லையென்றாலும், பத்மபூஷனாவது கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கிராஃபிக்ஸ்தான் என்றாலும் அட்டகாசம். அந்த காட்சி மட்டுமாவது யூட்யூபில் கிடைத்தால் பாருங்கள். நம்ம ஊரில் ஸ்டார் படங்களில் கூட அவ்வளவு க்ளியர் கிராஃபிக்ஸ் காட்சி கிடையாது. ம்ம் (உடனே குருவி படம் மட்டும்தான் ஸ்டார் படமா என்று கமெண்ட் போடாதிங்க ராஜா) . பாட்டு முடிந்தவுடன் சிரஞ்சீவி வந்து ஏதோ சொல்கிறார். ஹீரோ ராம்சரண் அவரது மகன் என்பது தெரியும்தானே?

Magadheera030809_08

   கதை இதுதான். நம்ம ஹீரோ ஆட்டோவில் செல்லும்போது ஒரு பெண்ணின் விரலை சீண்டுகிறார். அவருக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்கிறது. அந்த வெள்ளை நிற தேவதையை தேடி ஓடுகிறார். மழையில் நனைந்ததால் நம்ம தேவதை, மேலே கருப்பு நிற ஜாக்கெட் அணிந்துக் கொள்ள, தேடுகிறார், தேடுகிறார் ஹீரோ. என்னவென்று காஜல் கேட்க, விவரம் சொல்கிறார் ஹர்ஷா(ஹீரோ பேருங்க). அவள் என் தோழிதான் என்று ஹர்ஷாவை வைத்து டைம் பாஸ் செய்கிறார். இரண்டு பாட்டும் பாடுகிறார். நம் உயரையும் வாங்கித் தொலைக்கிறார் காஜல்.இந்த நேரத்தில் காஜலின் அப்பா தன் பரம்பரை சொத்துக்காக வழக்கு தொடுக்கிறார். அந்த வக்கீல் கொலை செய்யப்படுகிறார். இவரையும் கொலை செய்ய அந்த ராஜா அண்ட் க்ரூப் வர, ராஜாவுக்கு காஜலை பார்த்தவுடன் நம்மைப் போலவே இதயம் துடிப்பது நின்றுவிடுகிறது. சொத்தை விட காஜலே முக்கியம் என முடிவு செய்கிறார். சொத்தை விட்டுத்தர முடிவும் செய்கிறார். அப்போது ஒரு மந்திரவாதி, 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை சொல்கிறார்.

kajal-magadheera-hot-exposing

  படத்தின் மிகப் பெரிய பலமே இந்த ராஜா காலத்து எபிசோட்தான். வாவ். இயக்குனர் ராஜமெளலியாம். வாய்ப்புகளே இல்லைங்க. மஜாராஜாவாக சரத்பாபு, அவருக்கு மகளாக காஜல், இருங்க அவரது ஃபோட்டோவை பார்த்து விட்டு வருகிறேன். ம்ம் தளபதியாக ராம்சரண், வில்லனாக ஒருவன். இந்த நாடு மீது போர் தொடுக்க ஷேர்கான் வருகிறார். காஜலுக்காக வில்லனுக்கும், தளபதிக்கும் நடந்த போட்டியில் வழக்கம் போல தளபதி(தளபதி என்றாலே வெற்றிதான் போலிருக்கு) வெற்றி பெற, வில்லன் ஷேர்கானுடன் சேர்ந்து படையெடுக்கிறான். பின் என்னவானது நாடும், நானுறு ஆண்டுகளுக்கு பின் காதலும் என்பதே க்ளைமேக்ஸ்.

அசுர பலம் கொண்ட ஸ்க்ரிப்ட், தேர்ந்த இயக்குனர், பணத்தைக் கொட்டிய தயாரிப்பாளர். பிறகென்ன ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு பளிச்சிடுகிறது. சொத்தை ஸ்க்ரிப்டுடன் பல ஆண்டுகளாக தாணுவின் பணத்தையும், விக்ரம் என்ற அசாத்திய கலைஞனின் நேரத்தையும், உழைப்பையும் வீணடித்த சுசி இந்த நேரத்தில் ஞாகபத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. எனக்கு தெரிந்து ஹீரோ , ஹீரோயின், வில்லன் என்ற எந்த நடிகரையும் விட எல்லாக் காட்சிகளிலும் இயக்குனரே தெரிகிறார். ரியலி ஹேட்ஸ் ஆஃப் ராஜ்மெளலி.படத்தின் பாடல்கள் தான் சற்று சறுக்கலாக எனக்கு தோன்றுகிறது. மற்ற அனைத்தும் அட்டகாசம்

கில்லி படத்தை தரணி பார்த்துவிட்டு சொன்னாராம், ரீமேக் ரைட்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, முத்துப்பாண்டிக்காக பிரகாஷ்ராஜை புக் செய்திடுங்க. மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று. அதே போல் இந்த படத்தை எடுப்பவர்கள் தயவுசெய்து காஜல் அகர்வாலை புக் செய்திடுங்க. அகர்வால கடை நெய் ஸ்வீட்டை போல் இனிக்கிறார். பின்பாதியில் அழகான இளவரசியாகவும், முதல் பாதியில் இளைஞர்களின் அரசியாகவும் வந்து அதகளம் செய்கிறார். இவருக்கும், ஹீரோவுக்கும் நடிக்கவே தெரியாது என்பதை கடைசி நொடி வரை தெரியாமல் பார்த்துக் கொள்வது இயக்குனரின் இன்னொரு சாமர்த்தியம்.

தமிழில் ராஜா காலத்து எபிசோடுக்கு விக்ரம் தான் என் சாய்ஸ். முதல் பாதி விஜய். ஆனால் முதல் பாதியில் விக்ரம் செட்டாவாரா எனத் தெரியவில்லை. விஜய் போக்கிரியில் வசந்த முல்லை பாடலில் ராஜா வேஷம் கட்டினார். ஆனால் இந்தப் படம் நடிக்க வேண்டுமென்றால், முறுக்கான உடம்பு வேண்டும். ஆனால், தனது பாணி படங்களிலே சற்று வித்தியாசம் வேண்டும் என்று முடிவு செய்தால் விஜய் இதை தேர்ந்தெடுக்கலாம். எபடியும் ஷூட்டிங் ஒரு வருடம் ஆகும். இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவிருக்கிறார். பட்டையை கிளப்பும். என்னது? அஜித்தா? அவரே படம் பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவார். இது அவருக்கான படமாக தெரியவில்லை எனக்கு.

முக்கியமாக டைரக்டர். பக்கா ஸ்கிரிப்ட். நேரமாக்காமல் எடுக்க வேண்டும். எப்படியும் பட்ஜெட் 40 கோடியை தாண்டும். எனவே கே.எஸ்.ஆர் தான் என் சாய்ஸ். வேறு யாரையும் நினைக்க கூட முடியவில்லை. ஷங்கர், இப்போது வர மாட்டார். பார்ப்போம். இயக்குனரின் தேர்விலே படத்தின் வெற்றி இருக்கிறது.

மகதீரா. திருட்டு வீடியோவிலாவது பார்த்து விடுங்கள்.

--சினிமா சின்னசாமி

*************************************************8

கொசுறு : Making of maghadheeraa

44 கருத்துக்குத்து:

நாஞ்சில் நாதம் on August 31, 2009 at 11:10 AM said...

ம் ம் ம் ம்

நர்சிம் on August 31, 2009 at 11:22 AM said...

பரவாயில்ல நாஞ்சில்..அப்பப்பவாது சிரிங்க தல..


ரைட்டு சகா.ஆரம்ப வரிகள் ரசித்தேன்.

radhika on August 31, 2009 at 11:52 AM said...

மஜாராஜாவாக சரத்பாபு, அவருக்கு மகளாக காஜல், இருங்க அவரது ஃபோட்டோவை பார்த்து விட்டு வருகிறேன்.

அகர்வால கடை நெய் ஸ்வீட்டை போல் இனிக்கிறார். பின்பாதியில் அழகான இளவரசியாகவும், முதல் பாதியில் இளைஞர்களின் அரசியாகவும் வந்து அதகளம் செய்கிறார்.

vaziyuthu karki. thudaichokonga. lolz. jus kidding

hope vijay wont do this movie :))

பரிசல்காரன் on August 31, 2009 at 11:58 AM said...

நேர்மையான விமர்சனம்.

காஜல் அகர்வலைக் கண்டாலே காததூரம் ஓடுவேன்.. ஆனா நீ போட்டிருக்கற ஃபோட்டோ பார்த்தா பார்க்கலாம்போலத்தான் இருக்குபா!

@ நர்சிம்

//ஆரம்ப வரிகள் ரசித்தேன்.//

அதுக்கப்பறம் படிக்கலியா?

யோ வாய்ஸ் on August 31, 2009 at 11:58 AM said...

அஜித்தா? அவரே படம் பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவார். இது அவருக்கான படமாக தெரியவில்லை எனக்கு.

அஜித் நடிக்க மாட்டார். அவர் தான் (வேறு மொழி) படங்களின் ரீமேக்கில் நடிக்க மாட்டாரே,?

டம்பி மேவீ on August 31, 2009 at 12:07 PM said...

boss..... english sub titles oda dvd vanthuruchu pola ?????

டம்பி மேவீ on August 31, 2009 at 12:09 PM said...

"பரிசல்காரன் said...
நேர்மையான விமர்சனம்.

காஜல் அகர்வலைக் கண்டாலே காததூரம் ஓடுவேன்.. ஆனா நீ போட்டிருக்கற ஃபோட்டோ பார்த்தா பார்க்கலாம்போலத்தான் இருக்குபா!"சின்ன பையன் நானே சும்மா இருக்கும் போது..... நீங்க போய்....முடியல

ஹி ஹி ஹி ஹி ஹி

டம்பி மேவீ on August 31, 2009 at 12:16 PM said...

nalla irukku

யாசவி on August 31, 2009 at 12:39 PM said...

:-)

கார்க்கி on August 31, 2009 at 12:46 PM said...

நாதம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சகா, ஆரம்பத்திலே அப்பீட்டா.. ரைட்டு

ராதிகா, இன்னொரு ஃபோட்டோ இருக்குங்க. :)))

பரிசல், பழனியில் எனக்கும் பிடிக்கல. ஆனா இந்த அப்டத்தில் சூப்பர். சரோஜாவிலும் நல்லா இருப்பாங்க..

யோ, யாரு சொன்னா? க்ரீடம், ஏகன்.. சரி விடுங்க. நான் எதுவும் சொல்லல

மேவீ, அப்படியா? அந்த பிரம்மாண்டத்தை வெள்ளி திரையிலே பார்க்க வேண்டும். தமிழகத்தில் வெளிவராததால் சிடியில் பார்க்கலாம்

நன்றி யாசவி

முரளிகண்ணன் on August 31, 2009 at 12:54 PM said...

கார்க்கி

அங்கே மல்லண்ணா எப்படிப் போகுது?

சூப்பர் ஹிட் ஆர் ஹிட் ஆர் மிஸ்?

பரிசல்காரன் on August 31, 2009 at 12:57 PM said...

சகா...

சரோஜாவுல யாரு? சம்பத் ஜோடியா வருவாங்களே அவிங்களா? (கோடானு கோடி..) இல்லியே.. வேற..?

அப்புறம் ப்ரொஃபைல் படம் நல்லாருக்கு.

வினோத்கெளதம் on August 31, 2009 at 1:15 PM said...

கொஞ்சம் TROY மாதிரி தெரியுதே..

நெருப்புச் சக்கரம் on August 31, 2009 at 1:27 PM said...

நான் : ஏன் நாசர் நல்லா இருக்க மாட்டாரோ....
என் மனம் : அவர் தான் ஏற்கனவே இந்த படத்தை இயக்கி நடிச்சிட்டாரே....அப்புறமென்ன....

"ராஜா" from புலியூரான் on August 31, 2009 at 1:28 PM said...

மகாதீரால தல நடிச்சா அந்த படம் ரிலீஸ் ஆகுற நாள்தாங்க எங்களுக்கு தீபாவளி....

hope he will do it....

Kalyani Suresh on August 31, 2009 at 1:30 PM said...

ஹோர்டிங்கில் அநியாயத்துக்கு அழகாய் தெரிந்த காஜல் அகர்வாலுக்காகவும்,

என்ன கொடுமை சார் இது?

ஷாகுல் on August 31, 2009 at 1:56 PM said...

//காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.//

எப்போ தல இந்த பதிவு வரும்?

இப்படிக்கு
உடனடியாக காதலி தேவைபடுவோர் சங்கம்.

Karthik on August 31, 2009 at 2:04 PM said...

இங்கேயும் தெலுகு பசங்க ஓவர் பிலிம் ஓட்டினானுங்க. ஆனா, நாக்கு தெலுகு NOT தெலுசு கார்க்கி. ரீமேக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். :)

விஜய் போலீஸ், ராஜா வேஷமெல்லாம் போடுவது விஷப் பரீட்சை என்பது என் தாழ்மையான கருத்து.

Karthik on August 31, 2009 at 2:06 PM said...

//என்னது? அஜித்தா? அவரே படம் பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுவார். இது அவருக்கான படமாக தெரியவில்லை எனக்கு.

இந்த ஊர் இன்னுமா அவரை நம்புது? அவருக்கு செட் ஆகாத கதைகளை தேடிப் பிடித்து நடிப்பதையே தான் பல வருஷமா செய்கிறார்.

ஸ்ரீமதி on August 31, 2009 at 2:09 PM said...

அந்த பொண்ண பத்தி எழுதறதுக்காகவே படம் பார்த்த மாதிரி இருக்கு... ;))) ரெண்டாவது படத்துல அழகா இருக்காங்க..

ஸ்ரீமதி on August 31, 2009 at 2:11 PM said...

//பரிசல்காரன் said...
சகா...

சரோஜாவுல யாரு? சம்பத் ஜோடியா வருவாங்களே அவிங்களா? (கோடானு கோடி..) இல்லியே.. வேற..?//

(மிர்ச்சி)ஷிவாவுக்கு ஜோடியா வருவாங்க..

ஸ்ரீமதி on August 31, 2009 at 2:12 PM said...

// நாக்கு தெலுகு NOT தெலுசு கார்க்கி. ரீமேக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். :)//

கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்.....

ஜெட்லி on August 31, 2009 at 2:19 PM said...

இப்போதைக்கு இதை டப் செய்து வெளியிட போகிறார்கள்
என்று படித்தேன்... பார்ப்போம்.... ஆனா தலைக்கு இந்த படம்
கண்டிப்பா செட் ஆகாது....

கார்ல்ஸ்பெர்க் on August 31, 2009 at 2:32 PM said...

//ஹீரோவுக்கும் நடிக்கவே தெரியாது என்பதை கடைசி நொடி வரை தெரியாமல் பார்த்துக் கொள்வது இயக்குனரின் இன்னொரு சாமர்த்தியம்//

-அண்ணா, அப்ப அஜீத்த வச்சு நல்லா ட்ரை பண்ணலாமே.. இதத்தான கே.எஸ் அவரோட பல படத்துல பண்ணி இருக்காரு..

Karthik on August 31, 2009 at 2:46 PM said...

@ஸ்ரீமதி

// நாக்கு தெலுகு NOT தெலுசு கார்க்கி. ரீமேக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். :)//
கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்.....

ஏமி மேம்? ஐ ஸ்போக் ஏஸ் யு டாட்! :))

கார்க்கி on August 31, 2009 at 3:05 PM said...

@முரளி,

மகதீரா முன்பு எதுவும் ஒன்னும் செய்ய முடியாது. படம் செம ப்ளாப்

பரிசல், அந்த பாப்பா பேரு நிகிதா. ஷிவாவுக்கு ஜோடியா வருவா காஜல்.

வினோத், இதெல்லாம் ஓவரு. அது வெறும் சரித்திர படம். இதுல அது ஒரு பார்ட் தான்

நெருப்பு சக்கரம்.. ஆமாம் அவரு மொக்கையா எடுத்தத இவங்க நல்லா எடுத்து இருக்காங்க

ராஜா, பொங்கல் நல்வாழ்த்துகள்.

கல்யாணி மேடம், உங்களுக்கு பிடிக்கலையா?

ஷாகுல், அதுல சில அரசியல் இருக்கு. நிச்சயம் வரும்

ஸ்ரீமதி, உனக்கு பத்மஸ்ரீதான். பூஷனெல்லாம் பத்தாது :)))

கார்த்திக், போக்கிரியும், திருப்பாச்சியும் ஹிட்டுப்பா :)))

ஜெட்லீ, உங்க தலைக்கு அது தெரியுதான்னு பார்ப்போம். ஆனால் டப் எல்லாம் இல்லை.

கார்ல்ஸ்பெர்க், நடத்து ராசா

Karthik on August 31, 2009 at 3:13 PM said...

//கார்த்திக், போக்கிரியும், திருப்பாச்சியும் ஹிட்டுப்பா :)))

ஜோக் தான? அதுல மட்டும் தளபதி முழுசும் யூனிபார்ம்ல வந்திருந்தாரு......

//தளபதி என்றாலே வெற்றிதான் போலிருக்கு

தமிழ்நாட்ல எல்லோரும் தளபதி தான கார்க்கி. புரட்சித் தளபதி, சின்ன தளபதி, ...

எல்லோரும் ஜெயிச்சா, நானும் உங்க ரூம் மேட் ஆக வேண்டியதுதான். ஹைதையில். முடிஞ்சா சிங்கை கூட ஓடிப்போயிடலாம்.

ஆதிமூலகிருஷ்ணன் on August 31, 2009 at 3:22 PM said...

அவருக்கு மகளாக காஜல், இருங்க அவரது ஃபோட்டோவை பார்த்து விட்டு வருகிறேன். ம்ம் //

ஜொள்ளை துடைத்துக்கொள்ளவும்.

அப்புறம் இதென்ன தெலுங்குப்படமா? அவங்க இப்ப இவுங்களை விட நல்லாத்தான் படமெடுக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. பாத்துடவேண்டியதுதான்.

பைத்தியக்காரன் on August 31, 2009 at 3:26 PM said...

பதிவு நல்லா இருந்தது கார்க்கி.

சில தகவல்களுக்காக:

1. தமிழ்ல டப்பிங்தான் ஆகப்போகுது. அல்லு அரவிந்தே செய்யறார். ஸ்ரீஹரி கேரக்டர்ல மட்டும் சரத் அல்லது அர்ஜுனை நடிக்க வைக்கலாமானு ஒரு யோசனை. ('அந்தப்புரம்' படத்துல இப்படித்தான் ஜெகபதி பாபு ஃபோர்ஷனை மட்டும் பார்த்திபனை வச்சு ஷூட் பண்ணினாங்க).

2. இயக்குநர் ராஜமவுலி செம மாஸ் இயக்குநர். இதுவரைக்கும் 7 படம் செய்திருக்கார். 7ம் பம்பர் ஹிட். 'சிம்மாத்ரி' (தமிழ்ல 'கஜேந்திரா') இவர் இயக்கினதுதான். இவரோட 'சத்ரபதி' (பிரபாஸ் ஹீரோ) படத்தோட ஃபர்ஸ்ட் ஆஃபை அப்படியே 'குருவி'யோட செகண்ட் ஆஃப்பா ரீமேக் வாங்காம தரணி சீன் பை சீன் செய்திருந்தார். இது பெரிய பிரச்னையாகி, தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகைய கொடுத்து ராஜமவுலி வாயை அடைச்சாரு. தரணியால இனிமே தெலுங்கு பக்கமே போக முடியாது. ரெட் கார்ட் போட்டாச்சு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுசி on August 31, 2009 at 3:53 PM said...

விமர்சனம் சூப்பரா இருக்கு கார்க்கி...
காஜலும் சூப்பரா இருக்காங்க.
உங்க ஜொள்ளும் சூப்பரா இருக்கு.

கும்க்கி on August 31, 2009 at 4:48 PM said...

ஸ்ரீமதி said...

அந்த பொண்ண பத்தி எழுதறதுக்காகவே படம் பார்த்த மாதிரி இருக்கு... ;)))

எனக்கும் அதேதான் தோன்றியது.

தாரணி பிரியா on August 31, 2009 at 5:35 PM said...

பொண்ணு நல்லாதான் இருக்கு கார்க்கி :)

கலையரசன் on August 31, 2009 at 7:33 PM said...

எப்டி சகா இந்த படத்தை நல்லாயிருக்குன்னு சொல்ற?
பீரியர்ட் பார்ட்டும், டெக்னிகல் வைஸ் காட்சிகளும் நல்லாயிருக்கு அவ்வளவுதான்..

படத்தின் ஹீரோக்கள் 3 பேர்..
1. ஆர்ட் டைரக்டர் ரவீந்தர்
2. ஸ்டன்ட் டைரக்டர் பீட்டர் ஹெய்ன்
3. கிராஃப்பிக்ஸ் டீம்

என்னை கடுப்பேத்திய விஷயங்கள்
1. பைக்குல கிரான்ட் பிரிக்ஸ் போல பறக்குற சீன் எல்லாம் ஓவரு..
2. கருமம் புடிச்ச சிரஜ்சீவி ஆடுற சீன் (என்ன எழவுக்கு வந்தான்னே தெரியல..)
3. கோரா கதாபாத்திரத்தை சரியான முறையில பயன்படுத்தாதது..
4. ஸ்ரீஹரி ஜீப்பை வச்சு, ஹெலிக்காப்டரை மோதுற சீன். (விஜயகாந்த் ஐடியா?)
5. குதிரையை வச்சி பஸ்ச தொறத்துற சீன்...
6. கிளைமேக்ஸ் கொடுமையோ.. கொடுமை (ஹெலிக்காப்டர் சுத்தி சுத்தி வர்றப்ப.. எனக்கு நல்லா வந்துது வாயில..)

எனக்கு பிடிச்ச ***** சீன்
முக்கியமா படம் ஓடுறத்துக்கு காரணம் அந்த 300 படத்திலிருந்து காப்பி அடிச்சு எடுத்திருந்தாலும்... 100 பேரு கூட சண்டை போடுற சீன்... சூப்பர்!! அதுதான் மத்த குறைகளை மறைச்சிடுச்சு!!

(இத ஒரு பதிவா போட்டுயிருக்கலாம் நானு..)

கலையரசன் on August 31, 2009 at 7:33 PM said...

எப்டி சகா இந்த படத்தை நல்லாயிருக்குன்னு சொல்ற?
பீரியர்ட் பார்ட்டும், டெக்னிகல் வைஸ் காட்சிகளும் நல்லாயிருக்கு அவ்வளவுதான்..

படத்தின் ஹீரோக்கள் 3 பேர்..
1. ஆர்ட் டைரக்டர் ரவீந்தர்
2. ஸ்டன்ட் டைரக்டர் பீட்டர் ஹெய்ன்
3. கிராஃப்பிக்ஸ் டீம்

என்னை கடுப்பேத்திய விஷயங்கள்
1. பைக்குல கிரான்ட் பிரிக்ஸ் போல பறக்குற சீன் எல்லாம் ஓவரு..
2. கருமம் புடிச்ச சிரஜ்சீவி ஆடுற சீன் (என்ன எழவுக்கு வந்தான்னே தெரியல..)
3. கோரா கதாபாத்திரத்தை சரியான முறையில பயன்படுத்தாதது..
4. ஸ்ரீஹரி ஜீப்பை வச்சு, ஹெலிக்காப்டரை மோதுற சீன். (விஜயகாந்த் ஐடியா?)
5. குதிரையை வச்சி பஸ்ச தொறத்துற சீன்...
6. கிளைமேக்ஸ் கொடுமையோ.. கொடுமை (ஹெலிக்காப்டர் சுத்தி சுத்தி வர்றப்ப.. எனக்கு நல்லா வந்துது வாயில..)

எனக்கு பிடிச்ச ***** சீன்
முக்கியமா படம் ஓடுறத்துக்கு காரணம் அந்த 300 படத்திலிருந்து காப்பி அடிச்சு எடுத்திருந்தாலும்... 100 பேரு கூட சண்டை போடுற சீன்... சூப்பர்!! அதுதான் மத்த குறைகளை மறைச்சிடுச்சு!!

(இத ஒரு பதிவா போட்டுயிருக்கலாம் நானு..)

அத்திரி on August 31, 2009 at 8:28 PM said...

படத்த பாத்தோமா வந்தோமான்னு இல்லாமா அஜீத்துக்கு சூட்டாகுமா இல்லையாங்கிறது ரொம்ப முக்கியம்.........

RaGhaV on August 31, 2009 at 8:32 PM said...

:-)

ILA on August 31, 2009 at 9:08 PM said...

புண்ணை சொரிவானேன், அப்புறம் வலிக்குதென்பானேன்?

தமிழ்ப்பறவை on August 31, 2009 at 9:15 PM said...

இருக்குது.. பாக்கணும் சகா./.. பாத்துட்டுச் சொல்றேன்.. சப்-டைட்டில் இல்லை.. அதான் தயங்குறேன்...
அஜித்துக்கு..????ஹி./..ஹி...

☀நான் ஆதவன்☀ on August 31, 2009 at 9:33 PM said...

இங்க தியேட்டர்ல பார்க்கனும் நினைச்சு கடைசியில மிஸ் ஆகிடுச்சு. நல்ல பிரிண்ட் வந்த பொறவு தரை இறக்கனும்

வித்யா on August 31, 2009 at 9:38 PM said...

ஹூம். தமிழ் படம் பார்க்கவே நேரமில்லயாம்...

கோபிநாத் on September 1, 2009 at 12:50 AM said...

ரைட்டு சகா...பார்த்துடுவோம் ;)))

தராசு on September 1, 2009 at 9:31 AM said...

படம் பார்த்தா படம் நல்லாருக்கு இல்லை நல்லால்லைனு சொல்லணும். வீணா எதுக்கு தலயை வம்புக்கு இழுக்கறீங்க???

நல்லதுக்கில்லை, சொல்லீட்டேன்.

கார்க்கி on September 1, 2009 at 9:47 AM said...

ஆதி, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்

சிவாண்ணே, தகவலுக்கு நன்றி. தரணியால் இங்கே நிலைக்க முடியுமா என்பதே டவுட்டாகிவிட்டது :))

சுசி, முதல் இரண்டு வரிகளுக்கு நன்றி

கும்க்கி, ரைட்டு

தா.பி, ஆமாங்க. பொண்ணுனாலே நல்லாத்தான் இருப்பாங்கன்னு

கலை, நீங்க சொன்ன காட்சிகள் எல்லாம் சில நிமிடஙக்லே வருபவை. எல்லாப் படஙக்ளுமே இப்படித்தான். மொத்தமாக பார்த்தால் என்னை பிரமிக்க வைத்தது.நானே சொன்னது போல , அந்த ராஜா காலத்து எபிசோட்தான் காரணம்

அத்திரி,இளா, தராசு,

நான் ஒன்னும் சும்மா சொல்லல. தானுவின் தயாரிப்பில் அஜித் நடிக்க போவதாக சேட்டில் வந்த தலை ரசிகர் சொன்னார். சில தளங்களில் செய்தியாகவும் பார்த்ததால் சொன்னேன்

நன்றி ராகவ்(பேரை சுருக்கியாச்சா)

பாருங்க பறவை. எனக்கும் அவ்வளவாக தெரியாது :))

ஆதவன், வந்துடுச்சு பசங்க சொன்னாங்க. என்ன சைட்ன்னு தெரியல

கொ.பெ.செ, இப்போதைக்கு தமிழ்ப்படம் தவிர்ப்பது நலம். வேட்டைக்காரன் தீபாவளிக்குத்தான் ரிலீஸ் :)))))))

கோபி, பார்த்துட்டு சொல்லுங்க சகா

Truth on September 1, 2009 at 8:30 PM said...

இத பாத்துட்டு தான் அந்த பிராஜக்டா? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

 

all rights reserved to www.karkibava.com