Aug 26, 2009

ஆதியின் குறும்படம் – விமர்சனம்


 

  நேற்று வெளியாகி சக்கை போடு போட்ட ஆதியின்”மொக்கை மெமரிஸ்” குறும்படம் பற்றிய விமர்சனம் இது. இதுவரை பார்க்காதவர்கள் இங்கே போய் பார்த்துட்டு வந்துடுங்க. விமர்சனம் படித்துவிட்டு பார்ப்பது நன்று. 84 பின்னூட்டம், 2000 ஹிட்ஸ் என முதல் நாளே ப்ளாக்பஸ்டர் ஆனது என்றாலும், இந்த ரெக்கார்ட் ஓப்பனிங்கிற்கு காரணம் அவரது முந்தைய படமான நீ எங்கே என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இனி விமர்சனம்.

முதல் ஃப்ரேமிலே அப்துல்லா+நர்சிம்+பரிசல் வழங்கும் என்று போடும்போது எதிர்பார்ப்பு மீட்டர் சூடு வச்சது போல் எகிறுகிறது. மேலும், இந்த படம் பற்றிய தகவல் எதுவும் கசியவில்லை என்பதால் , முதல் பட ஹீரோவான கார்க்கியே இதில் நடித்திருக்கக் கூடுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து எழுப்பிய கரவொலிகளும், விசில் சத்தமும் கேட்டு நிலவுக்கு சென்று கொண்டிருந்த விண்வெளி வீரர்கள் ஏதோ பிரச்சினை என்று திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஃப்ரேமிலே, இது காமெடி படமல்ல என்று போடும்போது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. யார் ஹீரோவாக இருக்கக் கூடுமென்று யூகிக்க தொடங்கினார்கள். குசும்பன், பரிசல், என எல்லா காமெடி பீஸுகள் பெயரும் அடிபட்டது. டைட்டிலில் நடிகர்கள் பெயர் போடாதது வித்தியாச முயற்சியா அல்லது ரசிகர்கள் அரங்கை விட்டு போகாமல் தடுக்க எடுத்த முயற்சியா என்பது விளங்கவில்லை.

முதல் காட்சியில் ஒரு வீட்டின் வாசலில் சற்று வயதான இருவர் அமர்ந்திருக்கிறார்கள். சொல்ல சொல்லக் கேட்காமல் பேண்ட் போட்ட அங்கிள் வீட்டுக்குள் நுழைந்து சேரை எடுத்து வருகிறார். இந்த காட்சியில் பல நுண்ணரசியல் விளையாடுகிறது. உள்ளே செல்லும் நபர் வலது காலை வைத்து போக வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார். அவர் காலை உள்ளே வைக்கும் சமயம் வெளியே இருக்கும் வீட்டின் உரிமையாளரின் முகத்தில் ஒரு அச்சம், படபடப்பு தெரிகிறது. ஏதோ நடக்கப் போகிறது என்பதை இயக்குனர் குறிப்பால் உணர்த்துகிறார்.

”என்னப்பா அதிசயமா இருக்கு, சென்னைல இருந்து எப்போ வந்த” என்பது போன்ற வசனங்கள் இரண்டு முறை வருகிறது. எடிட்டிங் சரியல்ல என்பது போல சிலர் சொல்கிறார்கள். பயத்தில் அவர் என்ன பேசுகிறார் என்பதே அவருக்கேத் தெரியவில்லை என்பதை மீண்டும் குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இயக்குனர்களில் கேபிள் சங்கரும் இடம் பெற்று விட்டார் இந்த காட்சியின் மூலம். அது மட்டுமில்லாமல் இருவரும் அமரும் ஸ்டைலிலும் சில குறிப்புகளை சொல்கிறார்கள். பேண்ட் போட்டவர் கால் மீது கால் போட்ட படியும், இன்னொருவர் கையை பிசைந்தபடி இருப்பது போலவும் காட்டுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் ஆரம்பமே அதகளம்.

அடுத்த வசனத்தில் ஆதி நண்பரிடம் உன் வீட்டுக்காரி எங்கே என்று கேட்பதில் தான் ஒரு உலகத் தரம் வாய்ந்த நடிகன் என்பதை வெளிகாட்டுகிறார். பயங்கர வில்லனாக இருப்பார் என்பது போல் ஆரம்ப காட்சிகளில் சித்தரிக்கப்பட்டவர், ’உன்’ என்ற வார்த்தைக்கும் ’வீட்டுக்காரி’ என்ற வார்த்தைக்கும் இடையே விடும் இடைவெளி மனைவிகள் மீதான அவரின் பயத்தையும், பக்தியையும் அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. மேலும் அந்த ஒரு வார்த்தையில் மாறிப்போகும் அவரின் பாடி லேங்குவேஜ். அப்பப்பா. கைய கொடுங்க ஆதி.

இவர்கள் நண்பர்கள்தானே? இவரால் இவருக்கு என்ன நேரப் போகிறது? என்ன வேண்டும் ஆதிக்கு? இன்னும் கதையே வரவில்லை என்று நினைக்க துவங்குமுன் காட்டுகிறார் இயக்குனர். horizontalஆக சுற்றிய கேமரா, ஆதியின் தலைக்கு மேல vertical positionkku வருகிறது. அப்படியே கேமரா நகரும் போது ஆதியின் கால் கட்டை விரல், நண்பரின் காலை வருடுகிறது. தனது மதி மயக்கும் பேச்சால் நண்பரை தன் வசமாக்கி விட்ட ஆதி, அடுத்தடுத்து செய்யும் பல திடுக்கிடும் காட்சிகள்  சென்சாரில் வெட்டப்பட்டதால் படம் சடாரென்று க்ளைமேக்ஸை நோக்கி போய் விடுகிறது. படம் முடிந்து பெயர் போடும் போது ஆதியின் பெயரையும், நண்பர் சுடலையின் பெயரையும் போடும் போது அதிக இடைவெளி கொடுத்து அவர்கள் இப்போது பிரிந்து விட்டாரக்ள் என்றோ, இல்லை துவங்குமுன் அவர்கள் இடையே இருந்து இடைவெளியையோ குறிப்பால உணர்த்துகிறார்கள்.

எதிர்பாராமல் க்ளைமேக்ஸ் வந்துவிடுவதால் சப்பென்று போய்விடுகிறது நமக்கு. சில காட்சியில் நன்றாக ஆதி நடித்திருந்தாலும், அது இயக்குனரின் சாமார்த்தியம் என்று நன்றாக தெரிகிறது. நண்பர் நாலு கட்டையில் பேசும்போது, தேவையே இல்லாமல் ஏழு கட்டையில் ஆதி பதில் அளிக்கும்போது படத்தோடு ஒட்டாமல் ஒலிக்கிறது அவரின் கீச்சு கீச்சு குரல். முதல் பட ஹீரோவுக்கும் அவருக்கும் ஏதோ லடாய் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்த கதை சற்று வயதானவர்கள் நடிக்க வேண்டியது. என்னைப் போன்ற ரியல் யூத் நடிக்க முடியாது என்று அவர் சொன்னதாக கேள்வி. வெகுண்டெழுந்து தானே நடிகனாக ஆகிறேன் என்ற முயற்சியில் இறங்கிய ஆதிக்கு பெரும் சறுக்கல். சேரன் போல் ஆகிவிட்டார். அடுத்த படமாவது அதே சூப்பர்ஸ்டாரைப் போட்டு படம் எடுங்கள் ஆதி.

படத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் அடுத்தவருக்கு தள்ளிவிட்டு,  A film by aathi என்று போடும் அரசியல் புரியவில்லை நமக்கு. ”நீ எங்கே” போல் எதிர்பார்த்து செல்லாதீர்கள். இதில் கார்க்கி நடிக்கவில்லை. மொக்கை மெமரிஸில், மெமரிஸை காணவில்லை. மொக்கை மட்டுமே.

- சினிமா சின்னசாமி

38 கருத்துக்குத்து:

Gayathri on August 26, 2009 at 10:59 AM said...

-)

குசும்பன் on August 26, 2009 at 11:33 AM said...

//இதில் கார்க்கி நடிக்கவில்லை. //

நல்ல விசயத்தை முதலில் சொல்ல பழகிக்குங்க கார்க்கி!

”கண்டேன் சீதையை” என்று ஏன் அனுமர் சொன்னார் தெரியுமா? அதுக்கு ஒரு விளக்கம் இருக்கு அதுபோல் இதை எல்லாம் முன்னாடியே சொல்லனும்:))

குசும்பன் on August 26, 2009 at 11:35 AM said...

//முதல் பட ஹீரோவான கார்க்கியே இதில் நடித்திருக்கக் கூடுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து எழுப்பிய கரவொலிகளும்//

சாம் ஆண்டர்சன் படம் போட்ட அன்னைக்கு எவ்வளோ பேர் கைதட்டி ரசிச்சு படம் பார்த்தாங்க தெரியுமா?:) அதைவிட உங்க படத்துக்கு அதிகம் கார்க்கி:)

கலையரசன் on August 26, 2009 at 11:39 AM said...

இதனைப்பற்றிக்கூற யாதொன்றுமில்லை!!

Present Sir!

குசும்பன் on August 26, 2009 at 11:40 AM said...

//”நீ எங்கே” போல் எதிர்பார்த்து செல்லாதீர்கள்.//

ச்சே ச்சே அத மாதிரி எப்படி எதிர்பார்க்க முடியும் கார்க்கி! வீனைய எப்படி புடிக்கனும், எங்க முத்தம் கொடுக்கனும் என்று நீங்க விளக்கிய விளக்கம் இருக்கே கக்கூஸ் போகும் பொழுது கூட சிரிப்பு வந்துடும்:)

குசும்பன் on August 26, 2009 at 11:44 AM said...

//A film by aathi என்று போடும்//

buyன்னு போடுவதுக்கு பதில் அப்படி போட்டுவிட்டார் சொந்த ரிலீஸ், ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடு ராசா:)

குசும்பன் on August 26, 2009 at 11:48 AM said...

கிசு கிசு

முதல் படத்தில் எப்போ டெலிவரின்னு கேட்க நினைக்கும் படி பானை வயிறுடன் நடித்த ஹீரோ(??? தலையெழுத்து) இந்த படத்தில் கண்டிப்பாக ஒரு ரேப் சீன் வேண்டும் என்று அடம்பிடிச்சதால் தான் படத்தில் இருந்து தடாலடியாக நீக்கப்பட்டார் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கசியும் செய்திகள் சொல்கின்றன!!!

ஆனால் ஆதியின் அடுத்த படமான இருட்டறை ரகசியங்கள் படத்தில் நடிக்க அவரை அனுக முடிவு செய்து இருக்கிறார்களாம்!

குசும்பன் on August 26, 2009 at 11:51 AM said...

விடுப்பட்டவை (பாலபாரதி பதிவு இல்லை)

இருட்டறை ரகசியங்கள் படத்தில் இரண்டாவது படத்தில் பேண்ட் போட்டு அங்கிள் வேடத்தில் நடித்த ஹீரோதான் இருட்டறை ரகசியங்கள் படத்தில் ஹீரோயின் வேசம் கட்டபோகிறாராம்!
ஷகிலா கால் சீட் இல்லாததால் இந்தமுடிவாம்:)

சுசி on August 26, 2009 at 11:59 AM said...

கலக்கல் கார்க்கி.
விண்வெளி வீரர்கள் இப்போ விண்வெளிய விட்டு பூமிக்கு வரவே மாட்டேங்கிறாங்களாம்.
யாருப்பா அவங்களுக்கு நீ எங்கே லிங்க் குடுத்தது???

ஆதிமூலகிருஷ்ணன் on August 26, 2009 at 12:43 PM said...

என் படத்துக்கும் ஒரு விமர்சனமா? படுபயங்கர உள்குத்துடன் ஒரு பதிவு என்றாலும், ஆனந்தக்கண்ணீர் வழிகிறது. மொக்கைகளையெல்லாம் ஓரம்கட்டிவிடு நிஜமாவே ஒரு படத்தை எடுத்து எல்லாரையும் அலறவிடறேனா இல்லையா பாருங்கள். இல்லைன்னா குசும்பன் பேரை மாத்திவெச்சுடலாம் (இல்லைனா சுருக்கியாவது வெச்சுடலாம்).

ஆதிமூலகிருஷ்ணன் on August 26, 2009 at 12:44 PM said...

அந்தப்படமாவது நல்லா வரணும்னு வேண்டிக்குங்க குசும்பன். நா ஒங்களை திருப்பதிக்கு நடத்தியே கூட்டினு போய் மொட்டைபோடறதா வேண்டியிருக்கேன்.

நாடோடி இலக்கியன் on August 26, 2009 at 12:57 PM said...

நல்ல விமர்சனம். :)

//நா ஒங்களை திருப்பதிக்கு நடத்தியே கூட்டினு போய் மொட்டைபோடறதா வேண்டியிருக்கேன்//

அப்புறம் அவர் எப்படி நல்லா வரணும்னு வேண்டுவார்.

விக்னேஷ்வரி on August 26, 2009 at 1:03 PM said...

மூணு விஷயங்கள் சொல்லணும்.

1. விமர்சனம் அபாரம்.

2. குறும்படத்தில் திரைக்கதை கொஞ்சம் சொதப்பல். காரணம் சொல்லத் தேவையில்லை.

3. போன குறும்பட ஹீரோவை விட இந்த ஹீரோ ஸ்மார்ட்டாக இருப்பதால் இவர் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டக்ளஸ்... on August 26, 2009 at 1:15 PM said...

நோ கமெண்ட்ஸ்...!

குசும்பன் on August 26, 2009 at 2:28 PM said...

//அந்தப்படமாவது நல்லா வரணும்னு வேண்டிக்குங்க குசும்பன்.//

அவ்வ் இருட்டறை ரகசியங்களில் நீங்க ஹீரோயின் கார்க்கி ஹீரோ உங்களை ரேப் செய்வது போல் சீன் இருக்குன்னு சொல்லியும் அந்த படம் நல்லா வரனும் என்று வேண்டிக்க சொல்லும் உங்களை நினைச்சா! ஆதி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கி on August 26, 2009 at 2:30 PM said...

சிரிப்புக்கு நன்றி காயத்ரி

குசும்பரே, ம்ம் நடக்கட்டும் நாச வேலைகள்

நன்றி கலை

சுசி, நீஙக்ளுமா? ரைட்டு.. நல்லதே பிடிக்காது நம்ம மகக்ளுக்கு

நல்ல படம் எடுங்க ஆதி.. வாழ்த்துகள். எப்பன்னு சொன்னா என் கால்ஷிட் செக் பண்ணி நாட்கள் ஒதுக்க வசதியா இருக்கும்

நன்றி நாடோடி இலக்கியன்

விக்கி, ஆதி எப்பவுமே ஸ்மார்ட்தான்.

நோ நன்றி டக்ளஸ்

Karthik on August 26, 2009 at 2:46 PM said...

நான் இன்னும் படம் பார்க்கலை. பார்த்துட்டு வரேன். :)

இந்த பதிவின் முதல் பாகம் அடிச்சு துவைச்சு காயப்போடுது! (அர்த்தம் கேட்டு வாங்கிக் கொள்ளாதீர்கள்.) :)))))

Truth on August 26, 2009 at 2:53 PM said...

குறும்படம் என்ற வார்த்தைக்கு விளக்கம் தேவை :-)

வால்பையன் on August 26, 2009 at 2:54 PM said...

//ஆதியின் கால் கட்டை விரல், நண்பரின் காலை வருடுகிறது. தனது மதி மயக்கும் பேச்சால் நண்பரை தன் வசமாக்கி விட்ட ஆதி, அடுத்தடுத்து செய்யும் பல திடுக்கிடும் காட்சிகள் சென்சாரில் வெட்டப்பட்டதால் படம் சடாரென்று க்ளைமேக்ஸை நோக்கி போய் விடுகிறது.//

இதுக்கு பேர் தான் அடுத்த கட்டத்துக்கு நவுத்துறதா!?
நவுத்துங்க நவுத்துங்க!

ghost on August 26, 2009 at 3:38 PM said...

விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு என்ன ஆபிசுல ஒக்காந்து படிக்க முடியல சிரிச்சா எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க

உங்க விமர்சனம் பாத்தா இனி யாரும் குறும்படம் எடுக்க மாட்டாங்க நீங்களூம் குசும்பனும் கிழிச்சு தோரணம் கட்டிட்டிங்க

கார்ல்ஸ்பெர்க் on August 26, 2009 at 3:40 PM said...

//முதல் காட்சியில் ஒரு வீட்டின் வாசலில் சற்று வயதான இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.//

உள்குத்து தெரிகிறது :))

//இன்னொருவர் கையை பிசைந்தபடி இருப்பது போலவும் காட்டுகிறார்கள்.//

ஏன் இவங்களப் பத்தி எதுவும் பெருசா யாருமே சொல்ல மாடேங்குறீங்க?

Truth on August 26, 2009 at 3:45 PM said...

@ghost said...
//உங்க விமர்சனம் பாத்தா இனி யாரும் குறும்படம் எடுக்க மாட்டாங்க நீங்களூம் குசும்பனும் கிழிச்சு தோரணம் கட்டிட்டிங்க //

இதுக்கெல்லாம பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்? கூடிய சீக்கிரம் (அப்படி தான் பல வருஷமா சொல்லிகிட்டு இருக்கேன்) நான் ஒரு குறும்படம் எடுத்து வெளியிடறேன்.

RAMYA on August 26, 2009 at 3:48 PM said...

நான் கூட சந்திர மனடளுத்துக்குதான் போய்கிட்டு இருந்தேன் :))
பிரிச்சனை பெருசாயுடுமோன்னு திரும்பி வந்துட்டேன் :))

ஆதியின் படத்தில் போன முறை நடித்த ஹீரோ இல்லையே என்ற கச முசாவில் ஏற்பட்ட குழப்பத்தினால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிர்ச்சனையாமா :))

RAMYA on August 26, 2009 at 3:53 PM said...

கார்க்கி நீங்க இப்போ ஸ்லிம் ஆகிட்டீங்களே இந்த விஷயம் யாருக்கும் தெரியலை போல.

க்ளோசப்லே ஒரு போட்டோ (அதுவும் புல் சைஸ்) எடுத்து சீக்கிரமா போடுங்க
அடுத்த படம் அப்போதான் கை நழுவி போகாது :-)

வெவரம் தெரியாத பிள்ளையா இருக்கீங்களே :-)

யோ வாய்ஸ் on August 26, 2009 at 4:12 PM said...

ஆமா போன முறை படத்தில நடித்த அந்த ஸ்டைல் ஹீரோ யாரு?

அன்புடன் அருணா on August 26, 2009 at 4:54 PM said...

படம் ஆஸ்கர் அவார்டுக்கு நாமினேட் செய்யப்பட்டருக்காமே கார்க்கி???

நாஞ்சில் நாதம் on August 26, 2009 at 5:06 PM said...

:))

வித்யா on August 26, 2009 at 5:33 PM said...

:)

அறிவிலி on August 26, 2009 at 6:05 PM said...

//குசும்பன், பரிசல், என எல்லா காமெடி பீஸுகள் பெயரும் அடிபட்டது//

பரிசல்.......... எங்கிருந்தாலும் இங்கு வரவும்.

குசும்பன்- இதை பத்தி ஒண்ணுமே சொல்லலியே.

கார்க்கி on August 26, 2009 at 6:06 PM said...

@கார்த்திக்,

இப்படி சொன்னா எப்படி? சொல்லுப்பா, ஆனா தனியா :))

@ட்ரூத்,

கூகிளில் நீ எங்கே ந்னு தேடிப் பாருங்க. அதுதான் குறும்படம் :))

@வாலு,

ஆதரவுக்கு நன்றி. :))

@பிசாசு,

நன்றி :)))

@கார்ல்ஸ்பெர்க்,

அவர் பற்றிய விவரம் விரைவில் ஆதி வெளியிடுவார். கேன்ஸ் பட விழாவுக்கு அவரையும் அழைத்து செல்லவிருக்கிறார்

@ட்ரூத், மீண்டும்..

சீக்கிரம் எடுங்க பாஸ்.. வாழ்த்துகள்

@ரம்யா,,

நலமா மேடம்? ஸ்லிம் ஆயிட்டெனா? நான் எப்பவும் ஸ்ளிம் தான். அந்த படத்துக்காக இயக்குனர் சொன்னது போல் தொப்பை வளர்த்தேன். இப்ப மீண்டும் சரியாகிவிட்டேன் :))

ரசிகரக்ள் தொல்லை இருந்தது. அதை எப்படி நானே சொல்வது? எனக்கு கொஞ்சம் தன்ண்டக்கம் அதிகம் :))

@யோ,

நிஜமா தெரியாதா? அப்புறம் உங்கள யோவ்ன்னுதான் கூப்பிடனும் :)))

@அருணா,

ஆமாங்க. ஸ்க்ரீன்ப்ளேவுக்காக :))

@நாதம்,

:))

நன்றி கொ.ப.செ

Cable Sankar on August 26, 2009 at 6:43 PM said...

/தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் இயக்குனர்களில் கேபிள் சங்கரும் இடம் பெற்று விட்டார் இந்த காட்சியின் மூலம். //

அலோவ்வ்..இதுல நான் எங்கய்யா வந்தேன் என்னைய உள்ளார இழுத்துவிட்டுறுக்க..

T.V.Radhakrishnan on August 26, 2009 at 7:30 PM said...

கடைசியாக வந்த செய்தி...

ஆதியின் பெயர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதாம்.

PITTHAN on August 27, 2009 at 6:59 AM said...

ayya pona padath thayarippu appa nan pinnutathil unga padathula nadikka chance kettu irunthane maranthuttingala. nan nalla karupa, dokku kannam,kuzi viluntha kannu, vaiku veliya pallum parkka nalla alaka ammsama iruppan. enakkum oru hero chance kodunga

கார்க்கி on August 27, 2009 at 10:31 AM said...

சங்கர்ஜி, படத்த முழுசா பார்க்கலையா? டைரக்‌ஷன்னு உங்க பேருதான் போட்டு இருக்காங்க்

டி.வி.ஆர், அய்யா.. பாவங்க அவரு. விட்டுடலாம் :)))

பித்தன், அப்ப குசும்பன் மாதிரி இருப்பிங்கன்னு நினைக்கிறேன்

biskothupayal on August 27, 2009 at 11:06 AM said...

இயக்குனர். horizontalஆக சுற்றிய கேமரா, ஆதியின் தலைக்கு மேல vertical positionkku வருகிறது. அப்படியே கேமரா நகரும் போது ஆதியின் கால் கட்டை விரல், நண்பரின் காலை வருடுகிறது.

எனக்கு ஒரு டவுட்டு?

கேமராமேனை யாராவது ஆடு ராமா! ஆடு ராமா! சொல்லிட்டு இருந்தாங்களோ அந்த ஆட்டு ஆட்றாரு

தராசு on August 27, 2009 at 3:14 PM said...

இந்த மாதிரி ஒரு விமர்சனம் எழுதுனாவெல்லாம் எங்க ஆஸ்கர் நாயகன் ஆதிய ஜெயிச்சுட முடியாது.

ஆஸ்கார் நாயகன், வருங்கால முதல்வர் ஆதி வாழ்க.

பட்டிக்காட்டான்.. on August 28, 2009 at 7:09 PM said...

ரசித்தேன்..

:-D

மங்களூர் சிவா on August 29, 2009 at 10:00 AM said...

/
குசும்பன் said...

//இதில் கார்க்கி நடிக்கவில்லை. //

நல்ல விசயத்தை முதலில் சொல்ல பழகிக்குங்க கார்க்கி!
/

ரிப்பீட்டு

 

all rights reserved to www.karkibava.com