Aug 24, 2009

கார்க்கியின் காக்டெயில் – வாழ்க பதிவுலகம்


 

   கந்தசாமி.  நானும் பார்த்துவிட்டேன். ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல் பார்த்தவர்களை நொந்தசாமி ஆக்கிவிட்டது. சுசி.கணேசன் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம். நேற்று சீயானும் ஒரு பேட்டியில் அது குழந்தைகளுக்கான படம் என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சில குழந்தைகளும் அவரைக் கேள்வி கேட்டது. சீயான் பதிலளிக்கிறார் “ எல்லாப் பாடல்களும் குழந்தைகளை மனதில் வைத்தே போடபட்டவை”. உடனே பாடல் வருகிறது. ஒற்றை துண்டுடன் ஷ்ரேயா பாடுகிறார்.

ஒன்.. நம் இதயம் ஒன்னு

டூ. நம் உடல்தான் ரெண்டு

த்ரீ.. ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூனு.

வாழ்க குழந்தைகள்.

********************************************

தற்போதைய பிரபல விளம்பரம் கவின்ஸ் மில்க்தான். இந்த குழந்தையும் ச்சோ க்யூட். நேற்று அந்த பிரபல பின்னூட்ட பெண் பதிவர் அழைத்தார். அந்த விளம்பரத்தை  சிலாகித்து பேசியவர் அந்த குழந்தை முடிவில் ‘கார் கீ” னு அழகா சொல்லுது இல்ல என்றார். என் பேரை யார் சொன்னாலும் அழகாத்தான் இருக்கும் என்றேன். நாலு முறை கார்க்கி கார்க்கி என்றார்.

நீங்க எது சொன்னாலும் க்யூட்டாத்தான் இருக்கு. அப்புறம் ஏன் கார்க்கி மட்டும் சொல்றீங்க என்றேன். அப்புறம்..

நல்ல வேளை நேரில் சொல்லவில்லை.

வாழ்க கிரகாம்பெல்

********************************************

இன்னொரு பெண் பதிவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று அழைத்து happy birthday என்றார். உடனே சுதாரித்துக் கொண்டு இன்னைக்கு என்ன ராம நவமியா என்றேன்?

  ரொம்பத்தான் ரீல் விடாதிங்க. உங்களுக்கு சீதை கூட இல்லைன்னு எனக்கும் தெரியும் என்றார்.

ஆமாங்க. ராதை இல்ல. சீதையும் இல்ல. இப்’போதை’க்கு  போதை மட்டும் தான் என்றேன்

வாழ்க விஜய் மல்லையா

*******************************************

சென்ற வாரம் சென்னை சென்றிருந்தேன். காலையில் எழுந்ததும் என்னைப் பார்த்த என் அக்கா மகன், “ஏ…. கார்க்கி என்றான். நானும் ” B.. பப்லு” என்றேன்.

கடுப்பான அம்மா, ஏண்டா அவன் கிட்ட மொக்கை. போடற. உன்னை கட்டையாலே அடிக்கனும் என்றார்

முட்டையால அடிச்சா ஹாஃப் பாயிலாவது கிடைக்கும். கட்டையால அடிச்சா வேஸ்ட்டுதானே?

நானும் ஸ்ரீகேஷும் (பப்லு)  ஒரு விளையாட்டு விளையாடுவோம். முதலில் அவன் ஆரம்பிப்பான்

சிடி போட்டா படம் வரும். படம் போட்டா சிடி வருமா?. அடுத்து நான் சொல்ல வேண்டும்.

மம்மி அடிச்சா ஸ்ரீகேஷ் அழுவான். ஸ்ரீகேஷ் அடிச்சா மம்மி அழுவாங்களா? இப்படி அரை மணி நேரம் தொடர்ந்து சளைக்காமல் அவனும் சொல்லுவான். இதனால்த்தான் நான் மொக்கை அடித்தால் அம்மா என்னை அடிக்கிறார்கள். அடித்தவுடன் சொல்லுவேன், “நீங்களும் மொக்கையைத்தான் அடிக்கறீங்க”

வாழ்க மொக்கைசாமி

*******************************************

untitled

ஸ்ரீலஸ்ரீ மொக்கைநாத சுவாமிகள் பள்ளிக் கொண்டிருக்கிறார்.

”சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”

இன்று காலை பக்கத்து வீட்டு அங்கிள் வீட்டுக்கு வரும் போது இப்படி சொல்லிவிட்டு ஓடியிருக்கிறான் பப்லு. என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள் எங்கள் வீட்டில். யாருடா சொல்லிக் கொடுத்தது என்றதற்கு “கார்க்கிதான்” என்றானாம். அடுத்த முறை சென்னை வரும் போது இருக்கு எனக்கு என்கிறார் என் அக்கா.  உண்மை என்னவென்றால் திங்கள் கிழமை காலை அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது குழந்தையை கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அந்த அங்கிள் வந்தால் இப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்?

வாழ்க பக்கத்து வீட்டு அங்கிள்

*******************************************

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம் என்ற பதிவில் ஒரு ஃப்ளோவில் ”காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.” என்று குறிப்பிட்டிருந்தேன். பின்னூட்டங்களிலே அதன் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது. சில பேர் மெயிலிலும் ஆவலுடன் காத்திருப்பதாக சொன்னார்கள். எழுதாமல் விட்டால் துவைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. எழுதிவிட்டால் துவைப்பதற்கும் ஆள் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க காதலிகள்

48 கருத்துக்குத்து:

Unknown on August 24, 2009 at 12:02 PM said...

Me the first.. :)

விக்னேஷ்வரி on August 24, 2009 at 12:03 PM said...

இன்னிக்கு என்ன எல்லாருக்கும் வாழ்க. இதன் உள்ளர்த்தம் என்ன....

Unknown on August 24, 2009 at 12:05 PM said...

//”சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”//

சன் டீவி ஹாலிவுட் டப்பிங்க் படமெல்லாம் பார்க்கறீங்களா என்ன?? :))))))))))

Unknown on August 24, 2009 at 12:06 PM said...

//எழுதாமல் விட்டால் துவைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. எழுதிவிட்டால் துவைப்பதற்கும் ஆள் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.//

:)))))))))))

Unknown on August 24, 2009 at 12:07 PM said...

அப்பறம் பென்னிதயாள் சூப்பர்.. ;)))

யுவகிருஷ்ணா on August 24, 2009 at 12:09 PM said...

ம்ஹூம்

விக்னேஷ்வரி on August 24, 2009 at 12:10 PM said...

நானும் படம் பார்த்து நொந்து போனேன்.

உங்களோட மொக்கைகளை படிச்சு போதாதுன்னு போன் பண்ணி வேற தாங்கிக்குற அவங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.

ஆஹா, அடுத்த கார்க்கி ஸ்ரீகேஷ் தானா.....
உங்களை பெத்து, உங்க படுத்தலையும் தாங்குற அம்மா கிரேட் தான்.

வாழ்க காதலிகள்? யாரோட காதலிகள்....

மேவி... on August 24, 2009 at 12:10 PM said...

valga blogspot

மேவி... on August 24, 2009 at 12:12 PM said...

valga pyra labs

மேவி... on August 24, 2009 at 12:14 PM said...

pyrA labs thaan first blogspot start panninanga... piragu google take over panniyathu....


avargalal thaan neenga ippo mokkai poduringa

மேவி... on August 24, 2009 at 12:18 PM said...

"ஸ்ரீமதி said...
Me the first.. :)"


for the time in the world history naan ithukku repeat agikkiren

Prosaic on August 24, 2009 at 12:22 PM said...

adi dhool.... :)

thamizhparavai on August 24, 2009 at 12:40 PM said...

கலக்கல் காக்டெய்ல்...
ரசித்தேன்....

நையாண்டி நைனா on August 24, 2009 at 1:00 PM said...

நன்னா இருக்குன்னா...

மேவி... on August 24, 2009 at 1:11 PM said...

nalla irukku

தராசு on August 24, 2009 at 1:20 PM said...

//என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.//

தெரிஞ்சுருச்சுன்னா கண்ணை மூடிக்குவியா??????

Anonymous said...

பப்லு நல்ல மருமகனாத்தான் இருக்கான். மொக்கைச்சாமியாக வாழ்த்துக்கள் :)

Prakash on August 24, 2009 at 1:49 PM said...

இந்த பெயருக்கு பதிலாக அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கொவ் என்று கூப்பிட சொல்லி மண்டைகாய சொல்லவும்

சுசி on August 24, 2009 at 2:10 PM said...

சென்னை இப்போ நிம்மதியா இருக்குமே?
உங்க அக்கா ரொம்ப நல்லவங்க..
வாழ்க குட்டி மொக்கைசாமி...

நர்சிம் on August 24, 2009 at 2:17 PM said...

வாழ்க கார்க்கி

ஜெனோவா on August 24, 2009 at 2:36 PM said...

//... எழுதாமல் விட்டால் துவைத்து விடுவார்கள் என்று தெரிகிறது. எழுதிவிட்டால் துவைப்பதற்கும் ஆள் இருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்//

விதியோ தற்செயலோ ... உங்க அடியை இது முடிவு செய்யட்டும் ...

தலவிழுந்தா ... சிங்கப் பாத ( பதிவு எழுதிடுங்க ... )

பூ விழுந்தா பூ பாத ... (ஹி... ஹி பூக்கள் வாழ்க )

காக்டைல் ... சாப்ட் லேண்டிங் ;-)

கார்க்கிபவா on August 24, 2009 at 3:42 PM said...

ஸ்ரீமதி நன்றி. பென்னி உங்களுக்கும் பிடிக்குமா?

விக்னேஷ்வரி, ஒரு அர்த்தமும் இல்ல. இப்படி யாராவ்து கேட்கனும்தான். எல்லோருடைய காதலிகளையும் தான் சொல்றேன்

லக்கி, நீங்க வர அன்னைக்குன்னு பார்த்து இப்படி எழுதறேன்.(இல்லைன்னா மட்டும்னு எல்லாம் சொல்ல கூடாது)

மேவி, தகவலுக்கு நன்றி.

அபி அண்ணா, என்ன காலைலே ஆன்லைன்?

நன்றி தமிழ்ப்பறவை :)

நன்றி நைனா

தராசண்ணே, மல்லாக்க படுத்திட்டு இருக்கிங்களா?

அம்மிணி, அவன் இப்ப பரவாயில்ல. ரெண்டு வருஷம் முன்பு நான் சென்ன்னைல இருந்தப்ப ஒரே ஜாலிதான்.. மத்தவங்க பாடுதான் கஷ்டம்

பிரகாஷ், இதை படிச்சு என் மண்டையே காய்ஞ்சிடுச்சு

சுசி, இருக்காது. நான் இல்லாதப்ப பார்த்துக்கத்தானே அவன உருவாக்கி வச்சிருக்கேன்.

வாழ்க நர்சிம் :)

ஜெனோவா, நம்ம நேரம் மேல போட்ட காய்னை யாரோ அங்கேயே சுட்டுட்டாங்க :))

சித்து on August 24, 2009 at 4:10 PM said...

நன்னா இருக்கு ஓய் உம்மா காக்டையில்!

Karthik on August 24, 2009 at 4:32 PM said...

ரணகளம்.. அதகளம்.. இன்னும் என்னென்ன களம் இருக்கோ எல்லாம்.

வாழ்க காக்டெயில்! :)

சிங்கக்குட்டி on August 24, 2009 at 4:33 PM said...

// “ஏ…. கார்க்கி என்றான். நானும் ” B.. பப்லு” // ...சூப்பரூ....காக்டெயில்-ன்னவுடன் வேகமா ஓடிவந்தேன் ஆனாலும் நல்ல கிக் :-))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 24, 2009 at 4:35 PM said...

காக்டெயில். " ஸ்க்ருடிரைவர்ஆ இல்ல ஜிம்லட்ஆ?
வாழ்க கார்கி.
வளர்க அவர் மொக்கை

Cable சங்கர் on August 24, 2009 at 4:38 PM said...

கந்தசாமி குழந்தைகள் படம் தான் அதான் பாட்லேயே சொல்லிட்டீங்களே. இரண்டும் சேர்ந்தா மூணுன்னு செக்ஸ் எஜுகேஷன் குழந்தைகளுக்கு..

கல்யாணி சுரேஷ் on August 24, 2009 at 4:41 PM said...

”சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”

இன்று காலை பக்கத்து வீட்டு அங்கிள் வீட்டுக்கு வரும் போது இப்படி சொல்லிவிட்டு ஓடியிருக்கிறான் பப்லு. என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள் எங்கள் வீட்டில். யாருடா சொல்லிக் கொடுத்தது என்றதற்கு “கார்க்கிதான்” என்றானாம். அடுத்த முறை சென்னை வரும் போது இருக்கு எனக்கு என்கிறார் என் அக்கா. உண்மை என்னவென்றால் திங்கள் கிழமை காலை அனைவரும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது குழந்தையை கொஞ்சுகிறேன் பேர்வழி என்று அந்த அங்கிள் வந்தால் இப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்வதாம்?

கலக்கிட்ட(டா) கார்க்கி. (நன்றி : வசூல்ராஜா)

யோ வொய்ஸ் (யோகா) on August 24, 2009 at 4:58 PM said...

நீ்ங்க எழுத போற அந்த பதிவ நம்பித்தாய்ய என் எதிர்காலமே இருக்கு..

Karthik on August 24, 2009 at 5:02 PM said...

//யோ வாய்ஸ் said...
நீ்ங்க எழுத போற அந்த பதிவ நம்பித்தாய்ய என் எதிர்காலமே இருக்கு..

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!

Prakash on August 24, 2009 at 5:06 PM said...

நீ்ங்க எழுத போற அந்த பதிவ நம்பித்தாய்ய என் எதிர்காலமே இருக்கு..//


நாசமா போச்சு

கார்ல்ஸ்பெர்க் on August 24, 2009 at 5:08 PM said...

//" ஸ்க்ருடிரைவர்ஆ இல்ல ஜிம்லட்ஆ?//

-இது கார்க்கிடிரைவர்.. அதையெல்லாம் விட இவரு மிக்சிங் சூப்பரா இருக்கு..

அன்புடன் அருணா on August 24, 2009 at 5:13 PM said...

நல்லாவே டரெயினிங்க் கொடுத்திருக்கே கார்க்கி....

அறிவிலி on August 24, 2009 at 5:20 PM said...

வாழ்க.

Unknown on August 24, 2009 at 5:33 PM said...

கலக்கலான காக்டெயில்..

வாழ்க கார்க்கி.. :-)

Thamira on August 24, 2009 at 5:44 PM said...

இந்த காக்டெயிலும் கலக்ஸ்.. மொக்கைநாதரும் கலக்ஸ்..

T.V.ராதாகிருஷ்ணன் on August 24, 2009 at 6:47 PM said...

:-)))

Prabhu on August 24, 2009 at 11:34 PM said...

/”சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”//

ஹாலிவுட் ரியாக்ஷனா?

கலையரசன் on August 24, 2009 at 11:49 PM said...

மொக்க போட சொல்லிகுடுத்தீங்களே...
ஜிப்பு போட சொல்லி குடுத்தீங்களளளா...?
(சைட் ஜிப்புதான்!)

கார்க்கிடெயில்!!

Unknown on August 25, 2009 at 1:52 AM said...

///சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க///

முடியல ::::)))))

மகேஷ் : ரசிகன் on August 25, 2009 at 8:22 AM said...

Nice na....:)

Unknown on August 25, 2009 at 10:02 AM said...

தாங்கலப்பா மொக்க..

நாஞ்சில் நாதம் on August 25, 2009 at 10:26 AM said...

வாழ்க மொக்கைசாமிகள் :))))

கார்க்கிபவா on August 25, 2009 at 11:31 AM said...

நன்றி சித்து. என்ன அவங்க ஆத்துல இப்படித்தான் பேசறாஙக்ளா? :))

கார்த்திக், ஆடுகளம், ஓடுகளம், அப்படின்னு நிறைய இருக்குப்பா :))

சிங்கக்குட்டி, நீங்க நடந்தாலே ஓடுற மாதிரிதானே இருக்கும் :)

வாழ்த்துக்கு நன்றி பாலகுமாரன்

கேபிள்ஜி, ரைட்டு

நன்றி கல்யாணி. (நன்றி: பதிவுலகம்)

யோ வாய்ஸ், உங்க எதிர்காலம் இப்படி இருட்டா போயிடுச்சே? ஆவ்வ்வ். :))

பிரகாஷ், எது நாசமா போச்சு? உங்க எதிர்காலமா? :))

கார்ல்ஸ்பெர்க், டேங்க்ஸுப்பா..

டீச்சர், நீங்க சொன்னா சரிதான். ஆனா அம்மாதான் திட்டிட்டே இருக்காங்க

அறிவிலியும் வாழ்க

நன்றி ஆதி.. :))

பப்பு, அதே அதே

கலை, அதெல்லாம் அவனே கத்துக்கிட்டான். கார்க்கிடெயில் நல்லா இருக்கு. மைண்டல வச்சிக்கிரேன். தேவைப்பட்ட காக்டெய்ல் பேர மாத்திடுவோம் :))

முடியலன்னா வடக்கு பக்கமா ஓடுங்க குமாரசாமி :))

நன்றி ரசிகா (மகேஷ்)

முகிலன், இன்னும் இருக்குங்க. இதுக்கே இப்படி ஆகலாமா? உஙக்ளால முடியும் வாங்க. புட்டிகதைகள் படிச்சு பாருங்க

நாதம், சாமிகள்ன்னா? உங்களையுமா பாஸ்?

radhika on August 25, 2009 at 12:23 PM said...

cho cute.

like you :)))

மண்குதிரை on August 25, 2009 at 12:57 PM said...

nalla irukku nanba siriththen

ஜெட்லி... on August 25, 2009 at 1:08 PM said...

//சீக்கிரம் ஓடுங்க. அது நம்மள நோக்கித்தான் வருது. அது ரொம்ப ஆபத்தானது. சொன்னா கேளுங்க. கிழக்கு பக்கமா ஓடுங்க”
//
என்ன ஜி , டப்பிங் படம் வசனம் மாதிரி இருக்கு.....?

ஜோசப் பால்ராஜ் on August 25, 2009 at 2:52 PM said...

//அடுத்த முறை சென்னை வரும் போது இருக்கு எனக்கு என்கிறார் என் அக்கா //

why Blood ? Same Blood .

இந்த அக்கா எல்லாம் மோசம் சகா. மாப்ளைங்க அறிவாளியா இருக்க மாமனுங்கள பார்த்து ஏதாச்சும் செஞ்சு வைச்சா, அதுக்கும் நம்மள அடிக்க ரிசர்வ் பண்ணிக்கிறாங்க. நீங்க அப்ப அப்ப போயி வாங்கிட்டு வந்துடுறீங்க. நான் வருசத்துக்கு ரெண்டு தபா போயி மொத்தமா வாங்கிட்டு வர்றேன்.

இதுல என் மாப்ள, அக்கா மறந்துட்டா கூட என்னமோ வீரமா பேசினீங்களேம்மா, இப்ப அடிங்க பார்ப்போம்னு சரியா எடுத்து குடுத்து மாட்டிவிடுறாரு.

வாழ்க மாப்ளைகள்

 

all rights reserved to www.karkibava.com