Aug 22, 2009

பரிசலுக்கு வாழ்த்தும், ஒரு நினைவூட்டலும்


 

  இன்று திருமண நாள் கொண்டாடும் பரிசல்carரருக்கும், அண்ணிக்கும்

                                                           வாழ்த்துகள்.

சென்ற வருடம் அவர் எழுதிய பதிவை மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன். :)))

*****************************************

எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.

என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.

பதினோரு வருடங்களாக எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.

எனக்குப் பிடித்த நிறம் நீலமென்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் நீலம்தானென்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.

என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.

இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!

என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.

ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது உன் கழுத்துச் சங்கிலி வங்கிக்குப் போகும். எந்தச் சூழ்நிலையிலும் என் மணிக்கட்டுத் தங்கத்தை அவிழ்க்க அனுமதித்ததில்லை நீ.

நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.

என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். ஒருமுறை உனக்கான கால்வலி மாத்திரையைப் பார்த்தீர்களாவென்று என்னை நீ கேட்டதற்கு என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாய்.

பலருக்கு நடுவே உன் குழந்தை பாராட்டுப் பெறும் போது ‘அவங்கப்பாவோட மூளை அப்படியே’ என்று சொல்வதில் உனக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால் உன்னை எங்கும் நான் முன்னிலைப்படுத்திப் பேசியதில்லை.

எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. அன்றொரு நாள் உன் அன்னை வீட்டில் உனக்காகத் தனியே பாவக்காய் குழம்பு வைக்கப்பட்டபோதுதான் உனக்கது எவ்வளவு பிடிக்குமென்று உணர்ந்தேன் நான். அதற்குப் பிறகும் கூட பாவக்காய் நம் வீட்டு லிஸ்டில் வர நான் விடவில்லை.

நம் குழந்தைகளின் நல்ல பழக்க வழக்கங்களில் உனக்குத்தான் அதிகப் பங்கு. அதற்குப் பாராட்டாத நான்... ஏதேனும் அவர்கள் குறும்பாய் செய்துவிட்டால் திட்டுவதற்கு மட்டுமே உன்னை அழைக்கிறேன்.

எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.

பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.

அவரைக்காய் பொரியல் வைக்கும்போது மட்டும் சிவப்பு மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.

ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.

உமா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...

அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!

என் மனைவியாய் உன்னைப் பார்க்காமல்

உன் கணவனாய் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்

33 கருத்துக்குத்து:

Prakash on August 22, 2009 at 9:43 AM said...

வாவ். வாழ்த்துகள் பரிசல். :)

தராசு on August 22, 2009 at 10:07 AM said...

தல,

வாழ்த்துக்கள்.

அதை நினைவூட்டிய கார்க்கிக்கு நன்றிகள்.

Cable Sankar on August 22, 2009 at 10:11 AM said...

சூப்பர் கார்க்கி

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 22, 2009 at 10:13 AM said...

"பரிசலுக்கு வாழ்த்துக்கள்".
//அவர் எழுதிய பதிவை மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன். :)))

கார்கி
இதிலிருந்து பரிசல் என்ன தெரிஞ்சுக்க வேண்டும்? smily வேற போட்டருகிங்க...

மண்குதிரை on August 22, 2009 at 10:31 AM said...

excellent arumaiyaa irukku PARISAL avarkalukku thirumana nal vazhththootu

intha ezhuththukkum en vaazhththukkal

யோ வாய்ஸ் on August 22, 2009 at 10:48 AM said...

சூப்பர்ப் கார்க்கி பாவா! அப்படியே நம்ம வாழ்த்தக்களையும் பரிசலுககு தெரிவித்துக்கொள்கிறேன்.

Kalyani Suresh on August 22, 2009 at 11:05 AM said...

வாழ்த்துகள் பரிசல்.

இப்படி ஒவ்வொரு ஆணும் சிந்திக்கத் தொடங்கினால் எவ்வளவு நல்லாயிருக்கும் இல்லையா கார்க்கி?

நர்சிம் on August 22, 2009 at 11:05 AM said...

வாழ்த்துக்கள் பரிசல்

பைத்தியக்காரன் on August 22, 2009 at 11:42 AM said...

மணநாள் வாழ்த்துகள் பரிசல் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வெண்பூ on August 22, 2009 at 12:06 PM said...

வாழ்த்துகள் மிஸ்டர் & மிஸஸ் பரிசல்...

Anonymous said...

வாழ்த்துக்கள் பரிசல்

கார்ல்ஸ்பெர்க் on August 22, 2009 at 2:14 PM said...
This comment has been removed by the author.
கார்ல்ஸ்பெர்க் on August 22, 2009 at 2:16 PM said...

//இதிலிருந்து பரிசல் என்ன தெரிஞ்சுக்க வேண்டும்? smily வேற போட்டருகிங்க...//

--இதான்ன்னா நம்ம டவுட்டும்.. :))

வாழ்த்துக்கள் பரிசல் அண்ணா :)))

ஜெஸ்வந்தி on August 22, 2009 at 2:25 PM said...

வாழ்த்துக்கள் பரிசல்

வெங்கிராஜா on August 22, 2009 at 3:21 PM said...

அண்ணனுக்கு மணநாள் வாழ்த்துகள்!

ஷங்கரலிங்கம் on August 22, 2009 at 4:04 PM said...

வாழ்த்துக்கள்.

Kiruthikan Kumarasamy on August 22, 2009 at 4:57 PM said...

வாழ்த்துக்கள் திரு. திருமதி. பரிசல் ... வாழ்த்திய கார்க்கியும் வாழ்க

Karthik on August 22, 2009 at 6:43 PM said...

அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உங்களுக்கு சீ வி ப்!! :))

புதுகைத் தென்றல் on August 22, 2009 at 7:20 PM said...

வாழ்த்துக்கள் பரிசல்

அன்புடன் அருணா on August 22, 2009 at 7:29 PM said...

இதுக்குததான் ஒரு சகா வேணும் போல!

அன்புடன் அருணா on August 22, 2009 at 7:30 PM said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்து பரிசலுக்கு....

பிரியமுடன்...வசந்த் on August 22, 2009 at 7:41 PM said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா சார்

டம்பி மேவீ on August 22, 2009 at 8:07 PM said...

valthukkal

எம்.எம்.அப்துல்லா on August 22, 2009 at 8:16 PM said...

வாழ்த்துகள் பரிசல் அண்ணா

விக்னேஷ்வரி on August 22, 2009 at 8:49 PM said...

பரிசலுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். இவ்வளவு அழகான பதிவிற்காக பரிசலுக்கும், அதை மீண்டுமொரு முறை படிக்க வைத்த உங்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்.

Anonymous said...

//சென்ற வருடம் அவர் எழுதிய பதிவை மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன். //

வாழ்த்துக்கள் பரிசல்.

அதுக்கு வந்த எதிர் வினைகள் !!!!

Kiruthikan Kumarasamy on August 23, 2009 at 5:14 AM said...

இது உங்களுக்கு சகா
http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html

ஆதிமூலகிருஷ்ணன் on August 23, 2009 at 12:52 PM said...

வாழ்த்துகள் பரிசல்.!

(அப்படியே இந்தப்பதிவுக்கு வந்த ஒரு முக்கிய உலகப்புகழ்பெற்ற எதிர்பதிவுக்கும் லிங்க் குடுத்திருக்கலாமே.! ஹிஹி.. புது ஆளுங்களுக்கு யூஸாவுமேன்னுதான்..)

முத்துலெட்சுமி/muthuletchumi on August 23, 2009 at 1:27 PM said...

வாழ்த்துக்கள் பரிசல், உமா.. :)

சுசி on August 23, 2009 at 3:59 PM said...

பரிசல் உமாவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட கார்க்கிக்கு நன்றிகள்.
வீட்டுக்கு வீடு வாசற்படி தான் இல்லையா கார்க்கி...

பட்டிக்காட்டான்.. on August 24, 2009 at 5:38 PM said...

பரிசலுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துகள்..

//.. அதை நினைவூட்டிய கார்க்கிக்கு நன்றிகள். ..//

ரிப்பீட்டு..

சூர்யா on August 24, 2009 at 8:33 PM said...

vaazhthukkal parisal anna & anni..

ப்ரியா on August 25, 2009 at 9:51 AM said...

பதிவு எழுதுற ஆண்களாவது, இப்டி atleast, பதிவுக்காக பொண்டாட்டி மேல கொஞ்சம் பீலிங்க்ஸ் காமிக்கிறாங்க. பதிவு எழுதாதவங்க மனைவிகள் எல்லாம், இதை பாத்து பெருமூச்சு தான் விடனும்...:-)
Nice post.
Vaazhththukkal Parisal and Uma.

 

all rights reserved to www.karkibava.com