Aug 21, 2009

ஆதவன் – ஆறு பாட்டும் ஆர்ப்பாட்டம்


 

large_05

1) ஹசிலி பிசிலி- கார்த்திக், ஹரிணி, பர்ன், மாயா, பாடல் – பா.விஜய்

பரிசலை பைத்தியம் பிடிக்க வைத்த பாடல். ஹாரிசின் இசையில் வழக்கமாய் ஒரு பாடல் கலக்குமே. மின்னலேயில் அழகிய தீயே, மஜ்னுவில் முதற்கனவே எனத் தொடங்கி வாரணம் ஆயிரத்தில் அடியே கொல்லுதே வரை தொடர்ந்தது அல்லவா? ஆதவனில் அது ஹசிலி ஃபிசிலியே . டாக்டர். பர்னின் குரலில் அன்பே உன்னால் என் மனம் freezing.. அடடா காதல் என்றும் amazing எனும் போதே பாடல் மீது ஒரு ஆர்வம் பிறக்கிறது. ஹரிணியின் குரல் ஆங்காங்கே வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் சரணம் தொடங்கும் போது உன்னாலே உன்னாலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. பின் இது ஹாரீஸ் ஆல்பம் என்பதும் நினைவுக்கு வர ஃப்ரீயா விட்டு விட்டேன். ஆனாலும் அவர் அஞ்சனா என்று உருகும்போது வாவ்!!!!

நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா

உன் அழகின் மீதிதான் பூமியா?

பா.விஜய்? மீண்டும் கலக்குங்க வித்தகரே. இதைத்தான் இதுவரை உங்களிடம் மிஸ் செய்தோம்.

Verdict : ஆறு மாதத்திற்கு அலறி, அதன் பின் மரித்து போகும் பாடல்.

********************************

2) ஏனோ ஏனோ பனித்துளி - shail hada., சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா, பாடல் -தாமரை

கிடாரோடு தொடங்குகிறது. கூடவே மாலை நேரம் என என்னை மயக்கிய ஆண்டிரியாவின் கீச்சு கீச்சு..அதேதான். எனக்கு இறக்கை முளைக்க தொடங்குகிறது. மெதுவாய் வசீகரிக்கிறது மெட்டும், தாமரையின் வரிகளும்.

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே

தேனோ பாலோ எரியுது எரியுது தீப் போலே

என்ற இரண்டாம் வரியை கடித்து துப்புகிறார் shail hada. ஏண்ணா? வேற யாரும் கிடைக்கலையா? அப்படி ஒன்றும் அசத்தவில்லை அவர். பல்லவி முடிந்ததும் வருகிறது சாக்ஸஃபோன். சுட்டும் விழி சுடரேவில் சுத்தி சுத்தி அடித்த மாதிரி இல்லையென்றாலும் அழகான் பிட். ஏனோ சரணத்தில் மனம் லயிக்கவில்லை. ஆண்டிரியாவின் குரலும் சுமாரே. மெட்டை விட மிக்ஸிங் அருமை. ஹிட்டாக வேண்டிய பாடல்தான். இருந்தாலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் வாழ்ந்திருக்கும், சுதா இருந்தும் அவரைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. பல்லவி மட்டும் போதுமென்று விட்டுவிட்டார் ஹாரீஸ்.

Verdict :  இந்தப் பாடல் படமாக்கப்பட நல்ல வழிகள் இருக்கு. அதனால் முன்னே வரவும் வாய்ப்பு உண்டு. 75 மார்க் தரலாம்.

********************************

3) டமுக்கு டமுக்கு – பென்னி தயாள். பாடல் -  நா.முத்துக்குமார்

பாடகரும், பாடலாசிரியரும் நம்ம ஃபேவரிட். எதிர்பார்ப்பு உருவாவதை தவிர்க்க முடியவில்லை.ஒப்பனிங் சாங் என நினைக்கிறேன். வழக்கம் போல் அசத்துகிறார் பென்னி. முதல் முறையே பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனல் அயனில் பளபளக்கிற பகலா நீ என்பது போல் ரவுண்ட் கட்டி அடிக்க போற பாட்டு. 

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்

புல் கூடத்தான் பூமியே பிளந்து வரும்

உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்

நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

நெஞ்சில் இல்லை பயம் பயம்.. நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

நா, முத்துக்குமாருக்கு தங்க காப்பே போடலாம் சூர்யா. ஹெட்ஃபோனில் கேட்கும் புண்ணியவான்கள் அந்த பீட்டை கவனியுங்கள். நிச்ச்யம் ஹாரிஸ் சரக்கு அல்ல என்று அடித்து சொல்லலாம். ஆனால் மிக்ஸ் செய்த விதம், அட்டகாசம். இந்த வித்தை தெரிந்த இவர் இன்னும் பல ஹிட் ஆல்பங்கள் தருவது உறுதி.

Verdict : படம் ஹிட்டானால் பட்டையை கிளப்பும். என்னைப் பொறுத்தவரை PICK OF THE ALBUM.

********************************

4) வாராயோ – உன்னி கிருஷ்ணன், சின்மயி, மேகா, பாடல்- கபிலன்

அதே ஆரம்பம். ஏம்பா ஹாரீஸ்? என்னவோ போ. இதுவே பாடலின் மீதான் ஆர்வத்தை குறைக்கிறது. இதுல உன்னிகிருஷ்ணன் குரல் வேற. மெதுவா போனா நல்ல மெலடின்னு நினைப்பவர்கள் கொண்டாடுங்க. எனக்கு பிடிக்கலை. நாலு தடவைதான் கேட்டேன். சில ஹாரீஸ் பாடல்கள் அடிக்கடி கேட்டப் பின் அடிக்ட் செய்ததுண்டு. பார்ப்போம். ஆனால் சரணம், அயனின் நெஞ்சே நெஞ்சேவை ஞாபகபடுத்துகிறது. கபிலனுக்கு,

உணவு உடை உறைவிடம் உழவனுக்கு கிடைக்கனும்

அவன் அனுப்பி வச்ச மிச்சம் ஆண்டவனுக்கு படைக்கனும்

என்று விஜய்க்கு பாட்டு எழுதறவர எதுக்கு இப்படி கஷ்டபடுத்தறாங்களோ?

Verdict :  மெலடி. அவ்வளவுதான்

********************************

5) மாசி மாசி – மனோ, மேகா, பிரான்கோ, பாடல் – வாலி

முதல் நாலு வரிக்கேட்டு சிடி சிக்கி கொண்டதாக நினைச்சுடாதிங்க அப்பு. அது அப்படித்தான். பீமாவில் ரங்கு ரங்கம்மா கேட்டிங்களா? அப்ப சரி. மனோ ஏதோ முயற்சி செய்கிறார். வாலிப கவிஞர் எழுதிய பாடல். மாசி மாசின்னு தொடங்குனா அடுத்து என்ன செய்வார்? காட்டுவாசி, ஈசி ஈசி, பேசி பேசி, நேசி நேசி ன்னு யூகிச்சா உங்களுக்கு ஒரு ஷொட்டு வச்சுக்கோங்க.   ஐட்டம் சாங் மாதிரி தெரியுது. ஆடியோ சிடில எப்படிடா தெரியுதுன்னு கேட்காம வேலையைப் பாருங்க பாஸ். மன்னிக்கலாம் ஹாரீஸ. ஒரு பாட்டுதானே

Verdict : தம்மடிக்க போகலாம். இல்லைன்னா புகுந்து விளையாடும் (எங்கேயா?நீங்க நல்லவருங்க) கேமராவை ரசிக்கலாம். பாட்டு மட்டும் கேட்டா ஓக்கே. கேட்கலாம்.

********************************

6) தேகோ தேகோ – சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீ சரன், பாடல் – வாலி

வாலியண்ணா, இல்ல இல்ல வாலியங்கிள், இல்ல இல்ல வாலி தாத்தா இதுதான் இளமைன்னு இன்னுமா நினைக்கறீங்க? பல தலைமுறையோடு ஒட்டி வாழ முடிந்த உங்களால் இனிமேல் முடியுமான்னு தெரியல.  இல்லை,  லெஃப்ட் ஹேண்டுல எழுதி தந்திங்களா? என்னமோ போங்க. பாட்டும் ரொம்ப ஸ்லோவா இருக்கு. எப்படி உட்கார வைக்க போறிங்க கே.எஸ்.ஆர்? சுமாரான டிராக்.

Verdict : இன்னொரு பாட்டு.

********************************

முதல்ல சிடி வாங்குங்க பாஸ். அதுவும் கார் வச்சிரு்ந்தா ஒரிஜினல் வாங்குங்க. இந்த பாட்ட கேட்க புதுசா காரே வாங்கிட்டாரு பரிசல் தெரியுமா?

நல்ல பாடல்கள் என்று பாராட்டும் அதே நேரம் ஒரு பெரிய பாறாங்கல்லை மொத்த டீமின் தலையிலும் போட வேண்டும் போலிருக்கிறது. ஹைதையில் கிடைத்த சிடியில் பாடலாசிரியர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில பகுதிகளில் கிடைக்கும் இசைத்தட்டில் எங்கேயும் அவர்களின் பெயர் இல்லை என்று தெரிகிறது. காலையில் வந்து நெட்டில் மேய்ந்தால் இந்த லின்க்கில் இருக்கும் சிடியில் எங்கேயும் காணவில்லை. என்ன செய்யப் போகிறது திரையுலகம்?

ஹாரிஸின் வலைப் பற்றி சிலர் முன்னரே அறிந்திருக்கலாம். தெரியாதவர்கள் இங்கே செல்லுங்கள்.

57 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:11 AM said...

நாந்தான் ஃப்ர்ஸ்ட் :))

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:13 AM said...

இந்த பாட்டெல்லாம் நான் கேட்டதே இல்ல... சோ கேட்டுட்டு தான் கமெண்ட்டுவேன்.. வர்ட்டா?? ;)))

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:14 AM said...

//கீச்சு கீச்சு..அதேதான். எனக்கு இறக்கை முளைக்க தொடங்குகிறது. //

இது என்னவோ பி.ந மாதிரி இருக்கு.. நான் வரலப்பா விளையட்டுக்கு...

ஆதிமூலகிருஷ்ணன் on August 21, 2009 at 10:15 AM said...

Me the Apeettu..

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:15 AM said...

//என்ற இரண்டாம் வரியை கடித்து துப்புகிறார் shail hada. ஏண்ணா?//

அவர் பேரே தமிழ்ல எழுத முடியல.. பின்ன அவர் தமிழ் எப்படி இருக்கும்?? ;))

பி.கு: அவர் பாடல் கேட்டதில்லை... ;)))

சின்ன அம்மிணி on August 21, 2009 at 10:19 AM said...

நீங்க போட்டிருக்க படத்துல நயன் நல்லா இருக்காரே. பாட்டேல்லாம் கேட்டுட்டு மறுபடியும் உங்க கமெண்ட் படிக்கறேன்.

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:20 AM said...

//இந்த பாட்ட கேட்க புதுசா காரே வாங்கிட்டாரு பரிசல் தெரியுமா?//

நிஜமாவா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:20 AM said...

//நல்ல பாடல்கள் என்று பாராட்டும் அதே நேரம் ஒரு பெரிய பாறாங்கல்லை மொத்த டீமின் தலையிலும் போட வேண்டும் போலிருக்கிறது.//

அப்போ அடுத்து உங்கள ஜெயில்ல தான் சந்திக்கனுமா???

Cable Sankar on August 21, 2009 at 10:21 AM said...

anjanaa.. karthik rocks..

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:22 AM said...

அப்பறம் ஏன் ஆதவன்- ஆறு பாட்டும் ஆர்ப்பாட்டம்ன்னு தலைப்புக் கொடுத்துருக்கீங்க????

ஸ்ரீமதி on August 21, 2009 at 10:23 AM said...

பாட்டு கேட்காமலே 7 கமெண்ட் போட்டாச்சு.. கேட்டிருந்தா??


1 கமெண்ட்ல ஓடிருப்பேன்.. ;))

ghost on August 21, 2009 at 10:40 AM said...

//இந்த பாட்டெல்லாம் நான் கேட்டதே இல்ல... சோ கேட்டுட்டு தான் கமெண்ட்டுவேன்.. வர்ட்டா??//

ரிப்பிட்டேய்

Kalyani Suresh on August 21, 2009 at 10:46 AM said...

இன்னும் பாடல்களை கேட்கலை. கேட்டப்புறம் சொல்றேன். O.K வா?

தமிழ்ப்பறவை on August 21, 2009 at 10:48 AM said...

சகா அதுக்குள்ளயே விமர்சனமா?
நான் இப்போதான் கேட்க ஆரம்பிச்சேன்...
டிபிகல் ஹாரிஸ் ஆல்பம்...அயன் அளவு இல்லன்னாலும் ஆதவன் தேறுவான்...:-)

கார்க்கி on August 21, 2009 at 10:59 AM said...

ஸ்ரீமதி, காலைலே கும்மியா? நடத்துங்க மேடம்

ஆதி, எப்பவோ நீங்க அப்பீட்டு

நயன் நல்லா இருக்காரா? அம்மிணி, நான் மாத்திட்டேன்.. :))

அஞ்சனா, கார்த்திக் மட்டுமல்ல, ஹரிணி, பர்ன், ஹாரீஸ், பா.விஜய் என எல்லோருமே ராக்ஸ் கேபிள்

கோஸ்ட், கல்யாணி கேட்டுட்டு மறக்காம சொல்லுங்க

சகா, அயனும் ஆரம்பத்தில் கிளப்பவில்லை. விழி மூடி யோசித்தால் போல் ஒரு மெலடி இல்லை.ஆனால் ஆதவன் பெட்டர்ன்னு தோணுது

சுசி on August 21, 2009 at 11:07 AM said...

நல்ல பதிவு கார்க்கி.

Anbu on August 21, 2009 at 11:08 AM said...

\\எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்

உன் கூடத்தான் பூமியே பிளந்து வரும்\\\


"புல் கூட பூமியை பிளந்து வரும்" "என்பதே சரி என்று நினைக்கிறேன் அண்ணா

விக்னேஷ்வரி on August 21, 2009 at 11:09 AM said...

Excellent. உடனே பாட்டு கேக்குறேன்.

Anbu on August 21, 2009 at 11:13 AM said...

பாடல்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது...

யோ வாய்ஸ் on August 21, 2009 at 11:20 AM said...

நான் இன்னும் கேட்கல்ல. ஆமா எப்பவுமே ஹரிஸ் பாட்டு கேட்கிறப்ப ஏற்கனவே கேட்ட மாதிரி தோணுமே. இதுவும் அப்படி தானா? அப்படினா இதுவும் வாரணம் ஆயிரம், அயன் மாதிரி ஹிட் தான்......

Bleachingpowder on August 21, 2009 at 11:26 AM said...

//பல தலைமுறையோடு ஒட்டி வாழ முடிந்த உங்களால் இனிமேல் முடியுமான்னு தெரியல.//

:( தல, விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். இயக்குனருக்கு சரக்கு வாங்க தெரியலை, மத்தபடி இன்னும் இருபது வருசம் கழிச்சு அவர் பாட்டெழுதினாலும் இளமை துள்ளும்

சூரியன் on August 21, 2009 at 11:39 AM said...

ஹசிலி பிசிலி ஒன்லி..

நர்சிம் on August 21, 2009 at 11:40 AM said...

ரைட்டு சகா..

மண்குதிரை on August 21, 2009 at 11:58 AM said...

innum kekkavillai nanba

டக்ளஸ்... on August 21, 2009 at 12:01 PM said...

நர்சிம்முக்கு ரிப்பிட்டு.

கார்க்கி on August 21, 2009 at 12:14 PM said...

நன்றி சுசி

நன்றி அன்பு. மாத்திட்டேன்

எது விக்கி? பாட்டா பதிவா?

யோ, அதே அதே.. ஹிட்டுதான்

ரைட்டு ப்ளிச்சிங்

நன்றி சூரியன்

நன்றி நர்சிம். பதிவு படிக்கலைன்னு தெரியுது :))

கேட்டுட்டு சொல்லுங்க குதிரை

டக்ளஸ், நீயுமா? ரைட்டு

விக்னேஷ்வரி on August 21, 2009 at 12:17 PM said...

ஹசிலி ஃபிசிலியே - நிஜமாவே கிறுக்கு பிடிக்க வைக்கிற பாடல். அசத்தல். திரும்ப திரும்ப கேட்டேன்.

ஏனோ ஏனோ பனித்துளி - இசை கொள்ளை கொள்ளுது. பாட்டை வேற யாராவது பாடியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமோன்னு தோனுது.

டமக் டமக் - இசை கலந்து கட்டி கலக்கல். பென்னி தயாள் குரல் கலக்கலுக்கு கூடுதல்.

வாராயோ வாராயோ - எனக்கும் போர் அடிக்குது. முதல் தடவை கேக்கும் போதே ஏற்கனவே கேட்ட மாதிரி பீல். நெஞ்சே நெஞ்சேயின் தொடர்ச்சி.

தேக்கோ தேக்கோ - சரோஜா தேவிக்காக எழுதின பாட்டா இருக்கலாம். பாப் கார்ன் வாங்க வெளிய போயிட்டு வந்திடலாம்.

மாசி மாசி - கண்டிப்பாக கேட்டால் தலை வலி வரும் பாடல். இசை, குரல் என எதுவுமே தேறவில்லை. ஒரு முறை கேட்டதுக்கே ஒரு கப் காபி குடிக்க வேண்டியதாப் போச்சு.

பாடல்களை உங்கள் விமர்சனங்களைப் படித்துக் கொண்டே கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கு கார்க்கி. நல்ல இசை விமர்சனம்.

என்னைப் பொறுத்த வரை முதல் பாடல் தவிர எல்லாம் ஓ.கே. ரகம்.

விக்னேஷ்வரி on August 21, 2009 at 12:19 PM said...

Excellent - பதிவுக்காக. பாட்டு ஓகே தான்.

கலையரசன் on August 21, 2009 at 12:24 PM said...

Freeயா இருக்கியாப்பா..?

கத்துக்குட்டி on August 21, 2009 at 12:57 PM said...

//அவர் அஞ்சனா என்று உருகும்போது வாவ்!!!! //
hasili fisiliye தான் என் சாய்ஸ் !!!

ஏனோ ஏனோ லா புதுச்சா சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல ....

டமக்கு டமக்கு கு கேக்க கேக்க பிடிச்சு போச்சு..
" நேற்றென்பது எனக்கு நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றேன்பதை தவிரவும் எதுவும் இல்லை " வரிகள் நல்லா இருக்கு ...

வாராயோ வாராயோ கேக்க நல்லா தான் இருக்கு ... ஆனா நிறைய பழைய பாட்டை ஞாபகபடுத்துகிறது... (ஹாரிஸ் பாட்டு லா இதெல்லாம் சகஜம் பா னு சொல்றது புரியுது... )

தேக்கோ தேக்கோ
//வாலியண்ணா, இல்ல இல்ல வாலியங்கிள், இல்ல இல்ல வாலி தாத்தா இதுதான் இளமைன்னு இன்னுமா நினைக்கறீங்க?//
வாலி ய ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ... அவர்கிட்ட இருந்து இன்னும் நல்ல பாட்டு வாங்கிருக்கலாம் கே எஸ் உம் ஹாரிஸ் உம் ....

மாசி மாசி பாட்டு போன நூற்றாண்டு லா வர பாட்டு மாதிரி தான் எனக்கு தோனுது கார்கி அண்ணா !!

கத்துக்குட்டி on August 21, 2009 at 12:59 PM said...

ஏன் தல ஆறு பாட்டும் ஆர்பாட்டம் னு தலைப்பு கொடுத்துருகிங்க ???!!

கார்ல்ஸ்பெர்க் on August 21, 2009 at 1:01 PM said...

//உணவு உடை உறைவிடம் உழவனுக்கு கிடைக்கனும்

அவன் அனுப்பி வச்ச மிச்சம் ஆண்டவனுக்கு படைக்கனும்

என்று விஜய்க்கு பாட்டு எழுதறவர எதுக்கு இப்படி கஷ்டபடுத்தறாங்களோ?//

-அண்ணா, நீங்க அடிக்கடி நம்ம ஆளையே டார்கெட் பண்றீங்களே..

Karthik on August 21, 2009 at 1:08 PM said...

நான் இன்னும் கேட்கலை. கேட்டுட்டு சொல்றேன். :)

//உணவு உடை உறைவிடம் உழவனுக்கு கிடைக்கனும் அவன் அனுப்பி வச்ச மிச்சம் ஆண்டவனுக்கு படைக்கனும் என்று விஜய்க்கு பாட்டு எழுதறவர எதுக்கு இப்படி கஷ்டபடுத்தறாங்களோ?//

உங்க கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையே! ;))

Karthik on August 21, 2009 at 1:10 PM said...

@ஸ்ரீமதி said...
//என்ற இரண்டாம் வரியை கடித்து துப்புகிறார் shail hada. ஏண்ணா?//
அவர் பேரே தமிழ்ல எழுத முடியல.. பின்ன அவர் தமிழ் எப்படி இருக்கும்?? ;))

அடடா, இதை ஆட்டோவுக்கு பின்னாலயே எழுதலாம் போல! LOL. :)))

டம்பி மேவீ on August 21, 2009 at 1:45 PM said...

ell comment kkum oru periya repeatu.........

நாஞ்சில் நாதம் on August 21, 2009 at 3:28 PM said...

:))

கார்க்கி on August 21, 2009 at 3:33 PM said...

@விக்கி,
நன்றி. விமர்சனம் படிச்சிட்டு கேட்டிஙக்ளா?கேட்டுட்டு படிச்சிஙக்ளா? ஏன்னா நான் சொன்னதே ரீப்பீட் செய்திருக்கிங்க

@கலை,
நான் எப்பவுமே ஃப்ரீதான்

நன்றி கத்துக்குட்டி. ஏனோ தலைப்பு ரைமிங்க்கா இருக்கட்டுமேன்னு வச்சிட்டேன். தப்புதான்

கார்ல்ஸ்பெர்க், சந்துல நம்ம பாட்டுக்கு விளம்பரம் பண்ணேன்ப்பா. இது போய் டார்கெட்டா?

கார்த்திக், ஹிஹிஹி.. அது அப்படித்தான். ஸ்ரீமதி, எழுதிடலாமா?

டம்பி, அப்போ அதுக்கான பதில படிச்சிக்கோ

வாங்க சிரிப்பு நாதம்

SK on August 21, 2009 at 4:42 PM said...

சரி ரைட்டு :-)

ஏதேதோ சொல்றீங்க ம்ம்ம்

அப்படியே கந்தசாமி விமர்சனமும் கொஞ்சம் சீகரம் எழுதிடுங்க.. நாங்க போய் பாக்கலாமா வேணாமான்னு தெரிஞ்சக்கறோம்.

ஜெனோவா on August 21, 2009 at 4:43 PM said...

இன்னிக்கு ராத்திரி கேட்டுரவேண்டியதான்... விமர்சனத்துக்கு நன்றி கார்க்கி !

நன்றியும் , வாழ்த்துக்களும்

தாரணி பிரியா on August 21, 2009 at 5:09 PM said...

ஹசிலி பிசிலி மட்டும்தான் எனக்கு ஒ.கே.

தாரணி பிரியா on August 21, 2009 at 5:09 PM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on August 21, 2009 at 5:11 PM said...

// SK said...
சரி ரைட்டு :-)

ஏதேதோ சொல்றீங்க ம்ம்ம்

அப்படியே கந்தசாமி விமர்சனமும் கொஞ்சம் சீகரம் எழுதிடுங்க.. நாங்க போய் பாக்கலாமா வேணாமான்னு தெரிஞ்சக்கறோம். //

repeatu :)

எம்.எம்.அப்துல்லா on August 21, 2009 at 7:11 PM said...

//ஐட்டம் சாங் மாதிரி தெரியுது. //

ஃபேமிலி சாங் அது. அதில் சரோஜாதேவிகூட ஆடி இருக்கார். நேபாள் பேக்டிராப்பில் எடுத்து இருக்காங்க.

//தம்மடிக்க போகலாம். //

விஷூவலில் பார்த்தால் எழுந்துபோக முடியாது.

எம்.எம்.அப்துல்லா on August 21, 2009 at 7:12 PM said...

படத்துல பத்து வயசு பையனா 15 நிமிஷம் சூர்யா வர்றாரு.அதை வார்த்தையில் வர்னிக்க எனக்குத் தெரியல.அதகளம்.

மங்களூர் சிவா on August 21, 2009 at 8:07 PM said...

/
ஸ்ரீமதி said...

இந்த பாட்டெல்லாம் நான் கேட்டதே இல்ல... சோ கேட்டுட்டு தான் கமெண்ட்டுவேன்.. வர்ட்டா?? ;)))
/

ரிப்பீட்டிக்கிறேன்

Prakash on August 21, 2009 at 8:28 PM said...
This comment has been removed by the author.
Prakash on August 21, 2009 at 8:29 PM said...

இப்போ என்னத்துக்கு தமிழில் ராப் ? யாருக்கும் ஒழுங்காக வரலை. ஹசிலி அப்படி ஒன்றுமே சிறப்பாக இல்லை. ஒரே மாதிரியாக எவ்வளவு நாள் ஹாரிஸ் போடுகிறார் என்று பார்க்கலாம். யுவன் அடித்து செல்லாலாம். பன்முகத்தன்மை ஹாரிஸ்க்கு சுத்தமாக இல்லை.

MAHA on August 21, 2009 at 9:00 PM said...

ஹசிலி பிசிலி மட்டும்தான் எனக்கு ஒ.கே.

pappu on August 21, 2009 at 11:34 PM said...

ஒரிஜனலா? அப்படின்னா ஹைதராபாத் ஸ்பெஷல் ஸ்வீட்டா? எங்க ஊரில கிடைக்கிறதில்லைங்க!

pappu on August 21, 2009 at 11:35 PM said...

ஒரிஜனலா? அப்படின்னா ஹைதராபாத் ஸ்பெஷல் ஸ்வீட்டா? எங்க ஊரில கிடைக்கிறதில்லைங்க!

-இப்படிக்கு ஸ்டீரியோவில் பென் டிரைவ் மாட்டும் சங்கம்.

Kiruthikan Kumarasamy on August 22, 2009 at 2:26 AM said...

ஹசிலி பிசிலிதான் எனக்கு இந்த ஆல்பத்தில ரொம்ப பிடிச்சிருக்கு..

டமக்கு டமக்கு பென்னிக்காகக் கேட்கலாம்.. பீட்ஸ் கொஞ்சமே ‘மசக்களி'யை ஞாபகப் படுத்துகிறது..

மற்றப் பாடல்கள் பரவாயில்லை..

எதிர்பார்த்ததுக்கு மேலே இல்லை என்றாலும் குறை ஒன்றும் இல்லை

பரிசல்காரன் on August 22, 2009 at 2:45 AM said...

எனக்கு ஹசிலிபிசிலியேவும், டம்க்கு டமக்கும், வாராயோவும் பிடிச்சது.. நான் சொல்லியிருக்கற வரிசைல!

வெங்கிராஜா on August 22, 2009 at 4:00 PM said...

//வாரணம் ஆயிரத்தில் அடியே கொல்லுதே//
கிழிச்சார்.. அதுவும் திருடினது தானே?

எல்லாரோட பாட்டுக்கும் இதே ரேஞ்சுல தியான நிலைக்கு தள்ளப்படுகிறேன், அட்டகாசம், கலக்கல்னு போடுறது நல்லா இல்ல சகா... எல்லா பாட்டுமே ஏற்கனவே கேட்ட மாதிரி தான் இருக்குது... இப்புடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே கன்சாமி மாதிரி படங்களை அப்ப வைத்துக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல... பாவம்ல அவிய்ங்களும்...

செல்வேந்திரன் on August 23, 2009 at 9:59 PM said...

ஆடியோ சிடில எப்படிடா தெரியுதுன்னு //
கார்க்கி ஏதாவது ஒரு யூனிட்ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீ!

கார்க்கி on August 24, 2009 at 1:16 PM said...

அனைவருக்கும் நன்றி,

@வெங்கிராஜா,

தியான நிலைக்கு தள்ளப்பட்டேன்னு ஒரு பாட்டுக்குத்தான் எழுதி இருந்தேன். அது உண்மைன்னு எல்லோரும் ஒத்துக்கிட்டாங்க. உஙக்ளுக்கு பிடிக்கலின்னா நான் ஒன்னும் செய்ய முடியாது.

அடுத்து, பிடித்த பாடல்களுக்கு மட்டுமே பதிவாக எழுதிகிறேன். அதனால் பிடிக்கிரதுன்னுதான் எழுத முடியும். ஏற்கனவே கேட்ட ஃபீலை தருகிறதுன்னு நானும் எழுதி இருக்கேன். பதிவை முழுசா படிங்க. மேலும் நான் என்ன ஏத்தி விட்டேன்? பாடல் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும், படம் நல்லா இல்லாமல் போவடஹ்ற்கும் என்ன சம்பந்தம்? என்ன சொல்ல வறீங்க? பாட்டு புடிச்சா நல்லா இருக்குன்னு சொல்ல கூடாதா?

@செல்வா,

ரொம்ப நன்றி செல்வா. சொல்லி சேர்த்துவிட்டால் புண்ணியமா போவுமில்ல? :))))

Kalyani Suresh on August 26, 2009 at 10:39 AM said...

Dammaku Dammakku - Energytic entertainer.
Dekho Dekho - Not bad.
Hasile Fisile - Thaalam poda vaikkirathu.
Masi Masi - மன்னிக்கலாம் ஹாரீஸ. ஒரு பாட்டுதானே
Vaarayo Vaarayo - Too slow.
Yeno Yeno - மெதுவாய் வசீகரிக்கிறது மெட்டும், தாமரையின் வரிகளும்.
ஒரு முறை மட்டுமே கேட்டேன். போகப் போக நிலை மாறலாமோ என்னவோ?

mix on September 6, 2009 at 8:25 PM said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

 

all rights reserved to www.karkibava.com