Aug 19, 2009

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?


 

   காதலிக்கு என்ன பரிசு வாங்குவதென்று குழம்பி போயிருக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் வாங்குங்கள். அதோடு ஒரு அட்டையில் நாலு வரி எழுதினால் போதும். சாதா பரிசும் ஸ்பெஷல் சாதாவாகிவிடும். இதோ சில உதாரணங்கள்

globe-bookends

   25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்த உருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்து வைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர் படிக்க வேண்டும்.

உனக்கான பரிசை

உலகமெங்கும் தேடியும்

கிடைக்கவில்லை.

இதோ..

உலகமே

உனக்காக..

முக்கிய விஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதை மாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.

***************************************

  அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி வாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள் வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவது கஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.

தேவதை உடையென

கேட்டால்

இல்லையென்கிறார்கள்.

நீ

உடுத்திய

உருப்படிகள்

அனைத்துமே

தேவதை உடையாகிவிடாதா?

முக்கிய குறிப்பு :  அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித் தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்வி வந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள். ”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”

***************************************

டால்ஃபின் புடிக்குமா? நீல நிறத்தில் இரண்டு டால்பின் துள்ளி விளையாடுவது போல் ஒரு பொம்மை இருக்கும். 50 ரூபாய் தான்.சற்று பெரிய டால்ஃபினை ஏதாவது ஒரு இடத்தில் சேதாரமாக்கி விடுங்கள். விஷ்யம் இருக்கு.  இந்த முறை கவிதை வேண்டாம். சின்ன பேப்பரில், இந்த பொம்மையைப் பற்றி உனக்கு என்ன தோன்றுகிறது? நாளை சந்திக்கும் போது சொல் என் செல்லமே என்று எழுதி விடுங்கள். போதும். இரவு முழுவதும் அந்த மொக்கை பொம்மையை பல ஆங்கிளில் பார்த்துக் கொண்டு இருப்பார். கவிதை எழுத முயற்சி செய்வார். மறுநாள் அவர் உளறிய பின்  நீங்கள் தொடங்குங்கள். உளற அல்ல, விவரிக்க.

233

இந்த ரெண்டு டால்பினும் கடல்ல இருக்கு(நீல கலர்). நல்ல தண்ணி கிடையாது. நம்மள சுத்தியும் இருக்கிற கஷ்டங்களால் அழுது அழுது நாமும் நம்மை சுற்றி உப்புத் தண்ணீரே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனாலும் இந்த டால்பின்கள் சந்தோஷமாக விளையாடுவது போல் நாமும் காதலிக்கிறோம். சந்தோஷமாக. பார், என்னைப் போலவே இந்த ஆண் டால்பினுக்கும் பிரச்ச்னை.(உடை(த்)ந்த பாகத்தை காட்டுங்கள்). நானும் உன்னைக் கண்டு உடைந்து போய் விட்டேன் அப்படின்னு அடிச்சு விடுங்க.

முக்கிய குறிப்பு: பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில் இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம் தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம் என்ன, தினமு்ம் அந்த் உடைந்த டால்பினுக்கு முத்தாபிஷேகம்தான்..

 

பி.கு: ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய் டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.

55 கருத்துக்குத்து:

டக்ளஸ்... on August 19, 2009 at 10:49 AM said...

யோவ்..!

Kalyani Suresh on August 19, 2009 at 10:57 AM said...

yeppadi sir ungalala mattum ithellm mudiyuthu?

radhika on August 19, 2009 at 10:58 AM said...

great ideas karki. kodupathuthaan mukkiyam. enna kodukkaraanganu paarkka koodathu. as usual you are rocking

ஸ்ரீமதி on August 19, 2009 at 10:59 AM said...

கார்க்கீஈஈஈஈஈஈஈஈஈ எப்படி இப்படில்லாம்???

குசும்பன் on August 19, 2009 at 11:40 AM said...

//காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?//

குழந்தையை தவிர அனைத்தையும் பரிசாக கொடுக்கலாம்:)

இப்படிக்கு
தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்

யாசவி on August 19, 2009 at 12:19 PM said...

eppadi ippadiyellaam

:-)

ஜெனோவா on August 19, 2009 at 12:30 PM said...

//காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.//

hmmmm wait panren ;-(

aarvappadutthiya pathivu... vaalthukkal

விக்னேஷ்வரி on August 19, 2009 at 12:43 PM said...

இப்படியும் கூட எழுதலாமே.

" என்னுடைய உலகமே
நீயாகிவிட்ட பின்
இந்த உலகம்
இனி எனக்கெதற்கு.... "

" உனக்கான உடை தேடி
சோர்ந்து போனேன்.
உன்னை விட அழகாய்
உன்னை இன்னும் அழகாக்க
எந்த உடையும்
இருப்பதாய்த் தெரியவில்லை. "

டால்பின் கொஞ்சம் மொக்கை தலைவா. இப்படியெல்லாம் கதை சொன்னீங்க, பொண்ணு இவன் கிறுக்கன்னு நினைச்சு சுதாரிச்சு எஸ்கேப் ஆகிடும்.

:))))))

கார்க்கி on August 19, 2009 at 12:45 PM said...

டக்ளஸ், இதுக்கு என்ன அர்த்தம்ப்பா?

அதுவா வருதுங்க கல்யாணி மேடம்..

நன்றி ராதிகா

ஸ்ரீமதி, ரொம்ப அடியோ?

குசும்பரே, அதுதான் பெஸ்ட் கிஃப்ட்

நன்றி யாசவி

ஜெனோவா, அடுத்த வாரம் வருது

சுசி on August 19, 2009 at 12:54 PM said...

உங்க அனுபவங்களை ரொம்ப அழகா உங்க ஸ்டைல்லயே கலக்கலா எழுதி இருக்கீங்க கார்க்கி...
//இந்த கவிதை மாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர். //
எடுத்து மண்டையையா இல்லை மூக்கையா குறி வைக்கப் போறாங்கிரத கண்டு பிடிக்கத்தானே???
குட்.. குட்...

Anonymous said...

:)

புலியூரான் "ராஜா" on August 19, 2009 at 1:34 PM said...

நெறைய கொடுகிறீங்க போல....

டால்பின் மேட்டெர் செம்ம மொக்க...
அது மட்டும் காதல பிரிக்க கொடுத்த
ஐடியா மாதிரி தெரியுது

டம்பி மேவீ on August 19, 2009 at 2:19 PM said...

"காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது"


wait pannuren....

(neenga eppo chennai varuringa.... )

டம்பி மேவீ on August 19, 2009 at 2:21 PM said...

"குசும்பன் said...
//காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?//

குழந்தையை தவிர அனைத்தையும் பரிசாக கொடுக்கலாம்:)"

thala... athu after sale service...

யோ வாய்ஸ் on August 19, 2009 at 2:26 PM said...

தல சூப்பர் தல நான் ஆம்பளங்க கிட்ட இருந்து பொண்ணுங்கள காப்பாத்த நெனச்சா நீங்க என்னான்னா செய்யவே விட மாட்டேங்கிறீங்க.

எப்படியோ நான் அடுத்த சிறப்பு பதிவு வாசிக்க வெயிட்டிங், அப்பதானே நீங்க இந்த கிப்ட் கொடுக்க முடியும்..

சூரியன் on August 19, 2009 at 2:36 PM said...

டிங் டிங் டிங்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 19, 2009 at 2:45 PM said...

கார்கி
நொறுக்குங்க.
//குழந்தையை தவிர அனைத்தையும் பரிசாக கொடுக்கலாம்:)// குசும்பன் தல லைசென்ஸ் வாங்கி வண்டி ஓட்டனும், இல்லாங்காட்டி மாமா பிடிச்சுட்டு போய்டுவார்

நர்சிம் on August 19, 2009 at 2:53 PM said...

ரைட்டு..

SK on August 19, 2009 at 3:19 PM said...

rightu :-)

ஷாகுல் on August 19, 2009 at 3:27 PM said...

பேக் செய்யும் முன்பு கவிதை வைக்கிறீகளோ இல்லையோ. முதலில் Price லேபில கிழிச்சிடுங்க இல்ல உலகத்துல சுனாமியே வந்துடும்.

உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்பாக்குறோம்.

கார்க்கி on August 19, 2009 at 3:37 PM said...

விக்கி, நானேதான் அதுக்கு பி.கு போட்டு இருக்கேனே.. ஆனால் சொன்ன மாதிரி செய்தால் ஒர்க் அவுட் ஆகும். ஆதாரம் இருக்கு மேடம்..

நன்றி சுசி. நீங்க மட்டும்தான் கரெக்டா புடிச்சிங்க.. கககபோ

நன்றி அம்மிணி

ராஜா நன்றி.. :))

மேவீ, உனக்கு எதுக்கு அந்த போஸ்ட்? :)

அது சரி. நீங்க ஆதி கோஷ்டியா யோ?

நன்றி சூரியன்

நன்றி பாலகுமாரன்

நர்சிம், எஸ்.கே என்ன ஆச்சு?

ஷாகுல் , நன்றி. முயற்சி செய்றேன்

எம்.எம்.அப்துல்லா on August 19, 2009 at 3:57 PM said...

//காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?

//

நான் அளிக்கிறதெல்லாமில்லை. குடுத்துருவேன் :))

கார்ல்ஸ்பெர்க் on August 19, 2009 at 3:57 PM said...

////காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?//

குழந்தையை தவிர அனைத்தையும் பரிசாக கொடுக்கலாம்:)

இப்படிக்கு
தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
//

--நானும் இந்தச் சங்கத்துல இம்மீடியட்டா சேர்ந்துக்கிறேன்..

குடுக்குற டிப்ஸ் எல்லாம் பார்த்தா இதுல அண்ணனுக்கு ஏகப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் போலத் தெரியுதே??

பிரபாகர் on August 19, 2009 at 4:17 PM said...
This comment has been removed by the author.
பிரபாகர் on August 19, 2009 at 4:47 PM said...

கார்க்கி,

கலக்கல் பதிவு...

நாங்களும் ஐடியா கொடுப்போமில்ல?

ஒரு இருபத்தஞ்சி ரூபாய்க்கு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்கி வைத்து இதில் நீ பார்ப்பவள்தான் உலகத்துலேயே பேரழகின்னு எழுதி தரலாம்...

இன்னும் ஒரு செலவே இல்லாத மேட்டர் இருக்கு, இதுக்கு பேடன்ட் எனக்குத்தான்.

காலியான நகைப்பெட்டியை கொடுத்துட்டு, உள்ளே, ரெண்டு விஷயத்த எழுதி வைக்கலாம்.

1. காலியா இருப்பது இந்த பெட்டி மட்டுமல்ல, என் இதயத்தில் மற்றவர்களுக்கு இடமும்தான்.

2. தங்கமே, உனக்கு தேவையா தங்கம்?

(அதுக்கப்புறம் காதலி கழண்டுகிட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்ல....)

பிரபாகர்.

தாரணி பிரியா on August 19, 2009 at 4:50 PM said...

அனுபவக்குறிப்புகள் அருமை

Karthik on August 19, 2009 at 5:12 PM said...

தொடர்ந்து காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கும் வலையுலக டாக்டர்.லவ் கார்க்கிக்கு நன்றிகள். :))

சித்து on August 19, 2009 at 5:20 PM said...

அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டீங்க, சூப் தல. அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்கணுமா??

ghost on August 19, 2009 at 5:46 PM said...

//உனக்கான பரிசை உலகமெங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதோ.. உலகமே உனக்காக.. //

நல்லாருக்கு

//தேவதை உடையென கேட்டால் இல்லையென்கிறார்கள். நீ உடுத்திய உருப்படிகள் அனைத்துமே தேவதை உடையாகிவிடாதா?//

//டால்பின் மேட்டெர்//

இரண்டும் மரண மொக்க

Sinthu on August 19, 2009 at 6:18 PM said...

எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிரீன்களோ? பெண்களைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறீங்களே அண்ணா எப்படி?
ஊருக்குப் போனமையால் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியவில்லை..

Sinthu on August 19, 2009 at 6:19 PM said...

என் தளத்துக்கு ஒருமுறை விஜயம் செய்யுங்கள் அண்ணா... something is waiting for u..
http://vsinthuka.blogspot.com

Kiruthikan Kumarasamy on August 19, 2009 at 6:29 PM said...

ஒரு டெக்னிக்கல் மிஸ்டேக்.. தலைப்பு காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? என தவறாகப் பதிவேற்றப்பட்டு விட்டது.. அதை காதலிகளுக்கு என்று மாற்றிப் படிக்கவும்

Truth on August 19, 2009 at 6:39 PM said...

உண்மையில் இதெல்லாம் தேவையே இல்லை. இது உனக்கும் தெரியுமில்ல கார்க்கி? :)

கார்க்கி on August 19, 2009 at 6:41 PM said...

அண்ணே, நீங்க கொடுப்பிங்க.. காதல் ஒரு பள்ளிக்குடம் நண்பா.. :))

கார்ல்ச்பெர்க், அண்ணனுக்கு அட்வைஸ் பண்ணித்தான் நிறைய எக்ஸ்பீரியன்ஸ்:)

பிரபாகர், கலக்கிடீங்க போங்க.. என்னை மாதிரியா, இல்ல சொந்த சரக்கா?

தா.பி, வொய் வொய் வொய்?

கார்த்திக், அப்ப நானும் டாக்டரா? :))

சித்து, சூப் தலயா? அவர ஏங்க கிண்டல் பண்றீங்க? :))

பிசாசு, நான் முதல் மேட்டரும் மொக்கைன்னுதான் போடேன் :))

விருதுக்கு நன்றி சிந்து. நலமா?

குமாரசாமி, நன்றிங்க.. எனக்கு காதலியே இல்லை. இதுல பன்மை வேறயா?

ஆ.முத்துராமலிங்கம் on August 19, 2009 at 6:46 PM said...

காதலியே இல்லை, அதற்கென்ன செய்ய வேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவு வருகிறது.//

முதல்ல இத போடுங்கப்பா....!!!
காத்திருக்கே(னைய)ன்

Sinthu on August 19, 2009 at 6:47 PM said...

நலம் தான்

இரா.சிவக்குமரன் on August 19, 2009 at 6:54 PM said...

ஹூம், ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மட்டும் இப்பிடி யாராவது ஐடியாலாம் குடுத்திருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்.

பட்டிக்காட்டான்.. on August 19, 2009 at 7:50 PM said...

முடியல..

தஞ்சாவூர் கல்வெட்டுலதான் எழுதணும்..

Raghavendran D on August 19, 2009 at 9:19 PM said...

//சாதா பரிசும் ஸ்பெஷல் சாதாவாகிவிடும்//

அட்டகாசம் கார்க்கி.. :-)))

ஆதிமூலகிருஷ்ணன் on August 19, 2009 at 10:48 PM said...

நானும் அடுத்த வாரம் வரைக்கும் வெயிட் பண்றேன்.!

பிரியமுடன்...வசந்த் on August 19, 2009 at 10:55 PM said...

அனுபவம் பேசுகிறது

முதல் பரிசு ரசனை சகா

பீர் | Peer on August 19, 2009 at 11:53 PM said...

//பிரபாகர், கலக்கிடீங்க போங்க.. என்னை மாதிரியா, இல்ல சொந்த சரக்கா?//

இதுதான் ஹிட், கார்க்கி.

(ஆமா... காதலிய பரிசளிக்க அவங்க அப்பாக்கு என்ன கவிதை எழுதணும்? டிடி மேட்டர் தனியா பேசிக்கலாம் ;))

nila on August 20, 2009 at 12:20 AM said...

ஹா ஹா ஹா... எப்புடி இப்படி எல்லாம் தோணுது????
உங்க காதலி உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்...
உங்க பதிவும் அதுக்கு வந்திருக்கும் கமேண்டசும் சூபர்....
அடுத்த பதிவு காதலனுக்கு என்ன பரிசளிக்கலாம்னு தான???
இதை தொடர் பதிவா எழுதுற ஐடியா ஏதும் இருக்கா???

முல்லைமண் on August 20, 2009 at 2:19 AM said...

காலம் போனாப்பிறகு ஐடியாக்களை அள்ளித் தெளிக்கிறீங்கள்.

சரி பிள்ளைகளுக்குச் சொல்ல வேணும் உங்கள் வலைப்பூவை பார்க்கச் சொல்லி

தமிழ்ப்பறவை on August 20, 2009 at 12:08 PM said...

ரைட்டு...
இப்ப போறேன்.. அடுத்த வாரம் வர்றேன்...

தமிழ்ப்பறவை on August 20, 2009 at 12:22 PM said...

சகா ... இவ்வளவு நாள் காத்திருந்தது போதாதா... அடுத்த வாரம் வரை காத்திருக்கணுமா?
இன்னைக்கே பதிவு போடுங்கள்.. இல்லை என் மெயிலுக்கு அனுப்பி விடுங்கள்...(காதலி அல்ல பதிவுதான்)

நாஞ்சில் நாதம் on August 20, 2009 at 2:57 PM said...

:))

அத்திரி on August 20, 2009 at 9:01 PM said...

:)))))))))))))

மங்களூர் சிவா on August 20, 2009 at 11:12 PM said...

//காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?//

யாரோட காதலிக்கு

இப்படிக்கு
தலைப்பை மட்டும் படிப்போர் சங்கம்
மங்களூர்

மங்களூர் சிவா on August 20, 2009 at 11:14 PM said...

நானும் அடுத்த வாரம் வரைக்கும் வெயிட் பண்றேன்.!

&

50

ஷாஜி on August 20, 2009 at 11:14 PM said...

eppppuuuudiiii..........

கார்க்கி on August 21, 2009 at 9:31 AM said...

அனைவருக்கும் நன்றி.. சும்மா ஒரு பேச்சுக்கு அடுத்து வாரம் ஒரு பதிவுன்னா இப்படி செஞ்சிட்டிஙக்ளே மக்கா? இப்ப அதை எழுதிலன்னா அவ்வளவுதான் போலிருக்கே.. எழுதினாலும் பாய்ஞ்சு வருவாங்க..

என்ன செய்யலாம்?

goindu on August 21, 2009 at 12:22 PM said...

pinreenga machi epdi ungaluuku mattum epdi ipdi...?

but naan aduthavaram wait panna vendia alu mm

காலப் பறவை on August 22, 2009 at 2:48 PM said...

Nice :-)

செல்வேந்திரன் on August 23, 2009 at 10:42 PM said...

மூளைக்காரம்யா நீய்யி...

 

all rights reserved to www.karkibava.com