Aug 18, 2009

கலக்கல் பதிவுகள்


 

 எழுத எதுவுமில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க? இதுவரைக்கும் ஏதோ இருந்துதான் இவன் எழுதன மாதிரின்னு புரொஃபைல் டிஸேபிள் ஆனவரு வந்து சொல்லுவாரு. அதுக்காக எழுதாம இருக்க முடியுமா? அதான் நான் ரசித்த சிலப் பதிவுகளை சொல்லலாம்ன்னு. பயப்படாதிங்க. நான் எழுதி நான் ரசித்தது இல்லை.

*************************

1) புன்னகை என்ற பேருல எழுதறாங்க. இந்தப் பதிவு கோகுலாஷ்டமி அன்று போட்டது. கண்ணன் – ராதா காதலை இவர் அணுகிய விதம் எனக்கு புடிச்சு இருந்தது. அடிக்கடி எழுதலாமே புன்னகை?

பிடித்த வரிகள்:

 

கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய விஷயமாக மகாபாரதத்தையும் கீதையையும் பலரும் கொண்டாட, என் மனதில் என்றும் முதலிடத்தில் நிலைத்திருப்பது என்னவோ ராதை-கிருஷ்ணா காதல் மட்டுமே. சிறுவயதிலேயே என்னை மிகவும் ஈர்த்தது இந்தப் பெண்ணின் காதல் தான்.

ஸ்ரீ இராமபிரான் போன்ற டெம்ப்ளேட் நல்லவனை மணப்பதென்பது ஏதோ விக்ரமன் படம் பார்ப்பது போலத் தான். ஆனால், கண்ணனைப் போன்ற தீராத விளையாட்டுப் பிள்ளையை நேசித்து, அன்பால் அவனைத் தன்வசப்படுத்தி, தன் குழலிசையால் உலகை மயக்கிய அவனை, தன் காதலால் இயல்பாக இயங்க விடாமல் செய்த இந்த ராதை, என்னைப் பொறுத்த வரையில் "தெளிவு பெற்ற மதியினாள்". இந்த கோகுலாஷ்டமி நன்னாளில் அவளுக்கு ஒரு hats off!

 

முழுப்பதிவையும் படிக்க க்ளிக்குங்கள்

2) பிரபாகர்:

பின்னூட்டங்களில் கலக்கி கொண்டிருந்தவர் பதிவிலும் கலக்குகிறார். அவரின் இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்குங்க. ரொம்ப இயல்பான நடை. படிச்சி பாருங்க.

முழுப்பதிவையும் படிக்க க்ளிக்குங்கள்

3) சுசி:

என்னை டேமேஜ் செய்ற பதிவுதான். ஆனா இவங்களோட மொக்கைக்கு நான் ஃபேனுங்கோவ். டெம்ப்ளேட் கோளாறு இருக்கு. தமிழ்மணத்துல இணைக்கல. கவணிங்க மேடம். ஆனா நகைச்சுவையில் பின்றாங்க இந்த டாக்டர். அதுவும் போலி டாக்டர்.

பதிவு இங்கே

4) நையாண்டி நைனா

பலரும் அறிந்த பதிவர் தான். நக்கலும் நையாண்டியும் தாண்டவமாடுகிறது இவரிடம். மாஸ்டர் பீஸ் பதிவு ஒன்னு போட்டு இருக்கார். தலைப்பே துவம்சம் செய்கிறது “யூத்து பதிவராக எளிய வழி”

சும்மாவா....!!! முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க...

பதிவு இங்கே

நேரம் கிடைத்தால் இன்றே இன்னும் சிலரை சேர்க்கிறேன். இல்லையென்றால் அடுத்த வாரம் பத்து பதிவுகளை பார்ப்போம்.

33 கருத்துக்குத்து:

Anonymous said...

நையாண்டி நைனா மட்டும் தான் படித்திருக்கிறேன். மற்றவர்களையும் படிக்கின்றேன் சீக்கிரமே

Gayathri on August 18, 2009 at 11:55 AM said...

:-))

ரஹ்மான் on August 18, 2009 at 12:30 PM said...

சக ப்ளாக்கரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

நாஞ்சில் நாதம் on August 18, 2009 at 12:31 PM said...

எல்லாரையும் படிச்சாச்சு படிச்சாச்சு. next

ஸ்ரீமதி on August 18, 2009 at 12:33 PM said...

ஒருவேள பிடிக்காத பதிவுகள்ள என் பேரு வருமோ பார்க்கலாம்... :((

பாசகி on August 18, 2009 at 12:49 PM said...

//எழுத எதுவுமில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க? இதுவரைக்கும் ஏதோ இருந்துதான் இவன் எழுதன மாதிரின்னு//

//பயப்படாதிங்க. நான் எழுதி நான் ரசித்தது இல்லை.//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

போலி டாக்டர் பதிவு சூப்பரு.

நையாண்டி நைனா பதிவு சூப்பரோ சூப்பர் :))

சுசி on August 18, 2009 at 1:30 PM said...

கார்க்கி வெள்ளைக் கொடிகள் தெரிகின்றனவா???
சொந்த செலவுல சூனியம்னு எதோ சொல்வாங்களே...
ரைட்டு.. கவனிச்சுக்கிறேன்!!!

radhika on August 18, 2009 at 2:01 PM said...

good links. thanks for sharing. i like punnagai post

மண்குதிரை on August 18, 2009 at 2:22 PM said...

punnakai prabhakar irantuperaiyum vasiththen interesting pinnuttamum pottuvitteen

marravarkalaiyum vasikkireen nanba

pikirvukku nanri

கார்க்கி on August 18, 2009 at 3:06 PM said...

நன்றி அம்மிணி

நன்றி காயத்ரி

நன்றி ரஹ்மான்

நன்றி நாதம்

ஸ்ரீமதி, நீதான் மத்தவங்கள அறிமுகப்படுத்தனும். நீ யாரு..

ஹிஹிஹி..நன்றி பாசகி

ரைட்டு சுசி.

நன்றி ராதிகா

நன்றி மண்குதிரை..

பரிசல்காரன் on August 18, 2009 at 3:35 PM said...

அப்படியே வளர்ந்துவரும் என்னைப் போன்றவர்களையும் அறிமுகப்படுத்தக் கூடாதா?

(ரெண்டு வாரம் முன்னாடி சாட்ல வந்த ஒருத்தர் ‘ஏன் நீங்க கார்க்கி மாதிரியெல்லாம் எழுதறதில்லை?’ன்னு கேட்டாருப்பா.. அவருக்காகத்தான் இன்றைய பதிவே போட்டேன். வேணும்னா எனக்கு வந்த பின்னூட்டத்தப் பாரு)

பிரபாகர் on August 18, 2009 at 3:53 PM said...

நம்மைப்பற்றி இருக்கே இதில் பின்னூட்டம் போடலாமா? எனும் ஒரு கேள்வி பெரிதாய் எழுந்தாலும் சகா மற்றும் பல இனிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்காக நன்றி. அவர்களில் எல்லோரும் என்னால் தொடந்து படிக்கப்படுபவர்கள் என்பது எனக்கு பெருமையான விஷயம்.

இது போன்று சக பதிவர்களை ஊக்குவிக்கும் பாங்கு எல்லோருக்கும் இருந்தால், வலையுலகமே செழுமையாய் இருக்கும்.

வாழ்த்துக்களும் நன்றியும் சகா...

பிரபாகர்.

யோ (Yoga) on August 18, 2009 at 4:08 PM said...

லிங்க்குகளுக்கு நன்றி, ஆனாலும் உங்க மொக்கையும் வேண்டும் தல.

நம்ம பக்கமும் வந்திட்டு போறது.


ஆண்கள் பெண்களை ஏமாற்றும் 7 விடயங்கள்
http://yovoice.blogspot.com/2009/08/7.html

கார்ல்ஸ்பெர்க் on August 18, 2009 at 4:43 PM said...

என்னங்கணா, லிஸ்ட்'ல நம்மள மறந்துட்டீங்க போல.. ஹி ஹி!!!

Cable Sankar on August 18, 2009 at 4:50 PM said...

ரைட்டு...

கார்க்கி on August 18, 2009 at 5:48 PM said...

@பரிசல்,

உங்கள போல வளர்ந்து கொண்டே இருக்கும் பதிவரக்ளை நான் படிப்பது இல்லையே

நன்றி பிரபாகர்.

யோ ஆதரவுக்கு நன்றி. படிச்சிட்டுதான் இருக்கிறேன் சகா.

கார்ல்ஸ்பெர்க், தள்பதி ஃபேன மறப்பேனா? உங்களுக்கு லின்க் கொடுத்தா விஜய் ஃபேன் என்பதாலே கொடுத்தேன்னு சொல்லுவாங்க.. அடுத்த லிஸ்டுல உங்க கதை நிச்சயம் இருக்கும்.

நன்றி நட்சத்திரம்..

பிரபா on August 18, 2009 at 5:50 PM said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

சப்ராஸ் அபூ பக்கர் on August 18, 2009 at 5:56 PM said...

எல்லோருடைய வலையையும் அப்படியே ஒரு மேய்ச்சல் விட்டாச்சு... அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.....

நையாண்டி நைனா on August 18, 2009 at 6:00 PM said...

அறிமுகம் கொடுத்திருப்பதற்கு நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் on August 18, 2009 at 6:22 PM said...

அப்ப நானு.??

ஆதிமூலகிருஷ்ணன் on August 18, 2009 at 6:23 PM said...

சார் அப்பப்ப கடைக்கு வாங்க.. கூப்பிட வேண்டியதா போச்சே.. ஹூம்.!!

எம்.எம்.அப்துல்லா on August 18, 2009 at 6:29 PM said...

//ஒருவேள பிடிக்காத பதிவுகள்ள என் பேரு வருமோ பார்க்கலாம்... :((

//

அதுல என் பேரு முதல்ல இருக்கும் :)

அன்புடன் அருணா on August 18, 2009 at 6:54 PM said...

சரி...கலககல்ஸ்.....கூட்டத்திலே
நான் இலலை....கலக்காத கூட்டத்திலேயாவது இருக்கேனா பார்க்கலாம்!!!

வெங்கிராஜா on August 18, 2009 at 7:09 PM said...

நல்ல அறிமுகங்கள்... தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். நன்றி சகா!

Truth on August 18, 2009 at 7:47 PM said...

நல்ல விஷயம் கார்க்கி.

நேசன்..., on August 18, 2009 at 7:56 PM said...

எங்கேடா பரிசல்,நர்சிம்ன்னு வழக்கம் போல வாசிச்சிருவீங்களோன்னுப் பாத்தேன்....நல்லவேளை உண்மையிலேயே சில நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தினீங்க.....ரொம்ப்ப டாங்க்ஸ்....

டம்பி மேவீ on August 18, 2009 at 8:38 PM said...

:))

திருச்சிகாரன் on August 18, 2009 at 8:39 PM said...

"பரிசல்காரன் said...


(ரெண்டு வாரம் முன்னாடி சாட்ல வந்த ஒருத்தர் ‘ஏன் நீங்க கார்க்கி மாதிரியெல்லாம் எழுதறதில்லை?’ன்னு கேட்டாருப்பா.. அவருக்காகத்தான் இன்றைய பதிவே போட்டேன். வேணும்னா எனக்கு வந்த பின்னூட்டத்தப் பாரு)"


i like it

கலையரசன் on August 18, 2009 at 9:36 PM said...

கலக்கல்ன்னு பாதி போட்டுட்டீங்க.. கலைன்னு மீதிய போட அடுத்த வாரமா?
பட்.. உங்க நட்பு எனக்கு புடிச்சிருக்கு!!

கார்க்கி on August 19, 2009 at 10:04 AM said...

பிரபா, உஙக்ள் வலைக்கு வந்து பின்னூட்டம் கூட போட்டு இருக்கிறேன். நினைவிருக்கிறதா?

நன்றி அபூபக்கர்

நைனா, உங்க கடைல ஒரு ரெக்வெஸ்ட் கொடுத்து இருக்கேன்.. கண்டுக்கவும் :))

ஆதி, இதெல்லாம் ஓவரு.. ஆமா

அண்ணே, பதிவு கிடக்கு.. நீங்கெல்லாம் மனசுல இருக்கிர ஆளுண்ணே..

அருணா மேடம் உங்களுக்கு எதுக்கு அறிமுகம்? பெரியாளுங்க நீங்க


நிச்ச்யம் வெங்கி

நன்றி ட்ரூத்

நேசன், முடிவே பண்ணிட்டிங்களா? கலாய்க்கும் போது உரிமை இருப்பவர்களைத்தான் செய்ய முடியும். புதிதாய் ஒருவரை கலாய்த்து எதுக்கு பிரச்சினை? மத்தபடி நீஙக்ள் நினைப்பது போல் நாஙக்ள் என்ன குழுவாகவா செயல்படுகிறோம்? அனைவரும் நண்பரக்ளே

நன்றி மேவீ

i too like it trichikaran

நன்றி கலை :))

Sinthu on August 19, 2009 at 6:52 PM said...

ஏன் எல்லாரும் இப்படி நல்லவங்களா இருக்கிறாங்க?

Karthik on August 19, 2009 at 7:23 PM said...

//முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க...//

ha..ha. :))))))))))))))))))))))))))

semaiya naan eppadi intha pathiva miss panninen?!

thanks for the intro karki!

தமிழ்ப்பறவை on August 20, 2009 at 11:52 AM said...

தலை படிச்சிட்டு சொல்றேன்.. நையாண்டி நைனா நம்ம ஃபேவரைட்..

 

all rights reserved to www.karkibava.com