Aug 17, 2009

சினிமா கிசுகிசுவும், எந்திரனின் படப்பிடிப்பு வீடியோவும்.


 

ரொம்ப நாள் ஆச்சுங்க கிசுகிசு எழுதி.இதோ..

1) தனது 50வது படம் எது என்பதில் பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் தல. கிரிக்கெட் இயக்குனர் ஒரு பக்கம் காத்து கிடக்க, பின் பருத்தி வீரரை அழைத்து பேச, நடுவில் இந்த ஹீரோவை வில்லனாக்கி வரலாறு படைத்தவரும் வந்தாராம். இது போதாதென்று இஸ்திரி இயக்குனரும் லிஸ்ட்டில் இருக்கிறாராம். கடைசியாக வந்த தகவல்படி தெலுங்கில் ஹிட்டடித்த படத்தை டிக் செய்திருக்கிறாராம். இயக்கப் போவது யார் என தெரியவில்லை. வாழ்த்துக்கள் சொன்னேங்க.

2) தல அளவிற்கு இல்லாவிட்டாலும், இயக்குனர்கள் தேடி அலுத்து விட்டாராம் தளபதி.கதை எஸ்.பி ராஜ்குமாருடையது என்றாலும் இயக்குவது யார் என்ற குழப்பம் தான். இஸ்த்ரி இயக்குனரிடம் இவரும் பேசி பார்த்தார். ஆனால் அவர் வேற கதையென்றால் ஓக்கே என்றிருக்கிறார். கடைசி கட்ட தகவல்படி கதாசிரியருக்கே யோகம் அடிப்பது போல தெரிகிறது. இன்னொரு முறை யோசிங்கண்ணா.

3) எந்திரன் 85% முடிந்து விட்டதாக சூப்பர்ஸ்டார் ஈரம் விழாவில் சொன்னது ஹாட்டாகிவிட்டது. விசாரித்தால் படத்தின் பெரிய வேலை கிராஃபிக்ஸ்தானாம். அதற்கே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் என்கிறார்கள். அதுவும் ஷங்கருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். கூட ஏ.ஆர். ஆர் வேற ஆறு மாதம் ஆக்குவார். அனேகமாக இந்தப் படத்தை என் குழந்தை குட்டிகளுடன் தான் பார்ப்பேன் என நினைக்கிறேன். ஆக்கர் ஸ்டுடியோஸிடம் கிராஃபிக்ஸ் வேலைகள் தராதிங்க மக்கா.

4) இனி வருடத்திற்கு ரெண்டு படம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ச்சீயான். இவரது கல்லுரி நண்பர் தான் தில்லாக, படமெடுத்து தூள் கிளப்பிய இயக்குனர். சமீபத்திய சறுக்கலால் துவண்டு போனவர் விக்ரமிடம் டேட்ஸ் கேட்டாராம். லயன் டேட்ஸ் ஒரு பாக்கெட் வாங்கி கொடுத்து டாட்டா சொல்லி விட்டாராம். வெறுத்து போன இயக்குனர் கழக குடும்பத்தில் இருந்து வாரிசைப் போட்டு படமெடுக்க போகிறாராம். தயாரிப்பாளர் ஆகிவிட்ட அவர், நடிக்கவும் செய்ய இருக்கிறார். வசூல் அருவியாக கொட்டட்டும்

5) ஆஸ்கார் வாங்கி தருவேன் என்று சொன்ன இயக்குனரின் லெட்டர் படம் ஊத்திக் கொண்டதில் அதிகம் அப்செட் ஆனது எதற்கும் அஞ்சாத இயக்குனர் தானாம். இது போன்ற படங்களை மக்கள் ஒதுக்க துவங்கினால் தனது லாலாலா படமும் ஊத்திக்குமோ என்ற பயம் இருக்கிறதாம். அது மட்டுமில்லாமல் எந்த இயக்குனரும் நடிகராக பிராகசிக்க முடியவில்லையே என்றும் ஆதங்கப்பட்டுதான் இவர் நடிக்க முடிவெடுத்தாராம். அதற்காக தான் ஆசையாக வளர்த்த முடியையும் எடுத்தாராம். ஆனால் நடிகரான பின் இண்டோர் அரங்கிலும் கூல்ஸோட அலைவது, பந்தா பண்ணுவது என்று இவரின் அலட்டல்களை இவரது உதவியாளர்களே கிண்டலடிக்கிறார்களாம். ஸ்னிக்தா நலமா இயக்குனரே?

6) சிவாஜியைப் போலவே எந்திரனின் ஷூட்டிங் காட்சிகள் நெட்டில் வந்து விட்டது. எவ்ளோ உஷாரா இருந்தாலும் நிஜார கழட்டறாங்களேன்னு நொந்து போன ஷங்கர் கெடுபிடிகளை தளர்த்திவிட்டாராம். இதோ அந்த வீடியோ

வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் எந்திரனின் நாலு வரிகளை சொன்னார். நினைவிருக்கிறதா?

அஃறினையின் கடவுள் நான்

காமுற்ற தெய்வம் நான்

சின்ன சிறுசின் இதயம் தின்னும்

சிலிக்கான் சிங்கம் நான்..

தலைவா!!!!!!!!!!!!!!!!!!!

 

40 கருத்துக்குத்து:

டக்ளஸ்... on August 17, 2009 at 11:11 AM said...

Vairamuthu vairamuthuthaanya....!

டக்ளஸ்... on August 17, 2009 at 11:13 AM said...

\\எந்த இயக்குனரும் நடிகராக பிராகசிக்க முடியவில்லையே \\

Sasi kumar...?!?!?

Let Us See Ameer in YOGI also.
:)

டக்ளஸ்... on August 17, 2009 at 11:14 AM said...

\\வாழ்த்துக்கள் சொன்னேங்க.\\

Thanx solittengoov...

யாசவி on August 17, 2009 at 11:42 AM said...

:-)

ஸ்ரீமதி on August 17, 2009 at 11:51 AM said...

:))))))))

நாஞ்சில் நாதம் on August 17, 2009 at 12:06 PM said...

:))))

mayil on August 17, 2009 at 12:11 PM said...

:))))

நர்சிம் on August 17, 2009 at 12:18 PM said...

ம்ம்..ரைட்டு சகா.குழந்தை ஓக்கே..குட்டிகள்???

தராசு on August 17, 2009 at 12:24 PM said...

ரைட்டு

சின்ன அம்மிணி on August 17, 2009 at 12:26 PM said...

//அனேகமாக இந்தப் படத்தை என் குழந்தை குட்டிகளுடன் தான் பார்ப்பேன் என நினைக்கிறேன்//

:)

மண்குதிரை on August 17, 2009 at 12:34 PM said...

pokkisam ???

niingka paaththiingkalaa nanba?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. on August 17, 2009 at 12:42 PM said...

//தெலுங்கில் ஹிட்டடித்த படத்தை டிக் செய்திருக்கிறாராம்.//
கந்தசாமி வசூல் பார்த்த பின்புதான் கலைபுலி பூஜை போடுவதா இல்ல முக்காடு போடுவதான்னு முடிவெடுப்பார்.
//எவ்ளோ உஷாரா இருந்தாலும் நிஜார கழட்டறாங்களே//
நாம யாரு தெரியும்ல.

கலையரசன் on August 17, 2009 at 12:43 PM said...

//ஸ்னிக்தா நலமா இயக்குனரே?//

என்ன தலைவா பேரை போட்டுட்ட?

கத்தாழ கண்ணழகி நலமா இயக்குனரே? அப்படின்னுல்ல கேட்டியிருக்கனும்... ஏன்னா இது கிசுகிசு இல்லையோ?

--
நக்கீரனின் தூரத்து உறவு

பிரபாகர் on August 17, 2009 at 12:52 PM said...

கிசு கிசுக்கள் ஒன்றைக் கூட என்னால் ஊகிக்கவே முடியவில்லை(மனசாட்சி, சும்மா கம்முனு கிட, ஒரு தடவையாவது பொய் பேச விடு), ப்ளீஸ் கார்க்கி, வரிசையா விளக்கமா சொல்லுங்க...(பாஸ், சும்மா பேச்சுக்கு).

எழுதிய விதம் அருமை. அழகாக எழுத்துக்களை கையாளுகிறீர்கள்...

வாழ்த்துக்கள் கார்க்கி.

பிரபாகர்.

யோ (Yoga) on August 17, 2009 at 12:53 PM said...

கடைசில நீல நிறத்துல இருக்கிற கமெண்டுககள் கலக்கல் தலைவா

Gayathri on August 17, 2009 at 1:01 PM said...

:-)

சுசி on August 17, 2009 at 1:03 PM said...

கலக்கல் கார்க்கி.
வைரமுத்து முத்துதான்.
கட்டிக் குடுக்கும்போது கூடவே நாய், பூனை குட்டிகள் எல்லாம் தருவதாக பேச்சோ? குழந்தை சரி. குட்டி எப்டி?

பீர் | Peer on August 17, 2009 at 1:04 PM said...

ஒண்ணுமே புரியல...

இவ்ளோ சிக்கலாவா கிசுகிசு எழுதுறது?

ghost on August 17, 2009 at 1:14 PM said...

என்னமோ போங்க..! கலக்குறீங்க

6) சிவாஜியைப் போலவே எந்திரனின் ஷூட்டிங் காட்சிகள் நெட்டில் வந்து விட்டது. எவ்ளோ உஷாரா இருந்தாலும் நிஜார கழட்டறாங்களேன்னு நொந்து போன ஷங்கர் கெடுபிடிகளை தளர்த்திவிட்டாராம். இதோ அந்த வீடியோ

நான் பார்த்தேன், ரசித்தேன்

டக்ளஸ்... on August 17, 2009 at 1:57 PM said...

\\பிரபாகர் said...
எழுதிய விதம் அருமை. அழகாக எழுத்துக்களை கையாளுகிறீர்கள்... \\

இவை அனைத்தும் கற்பனையே...!
சீரிய‌ஸாக‌ எடுத்துக் கொண்டு, ம‌ன‌தைக் குழ‌ப்பிக் கொள்ள‌ வேண்டாம் கார்க்கி.
:)

அறிவிலி on August 17, 2009 at 2:19 PM said...

:))

பிரபாகர் on August 17, 2009 at 2:24 PM said...

டக்ளஸ்... எழுதினத மாத்தி போட்டு நல்லா கோத்து விடறப்பா... வாழ்க உன் தொண்டு...

பிரபாகர்.

கார்க்கி on August 17, 2009 at 2:38 PM said...

டக்ளஸ், அப்போ வைரமுத்து வாலி இல்லையா?

நன்றி யாசவி, ஸ்ரீமதி, நாதம், மயில், தராசு, அம்மிணி

நர்சிம், குழந்தைதான் குட்டியா இருக்கும்

மண்குதிரை, ஆச்சுங்க

பாலகுமாரன், தாணு அதுக்கெல்லாம் அசரா ஆளா?

ஆமா கலை. மிஸ் ஆயிடுச்சு.

நன்றி பிரபாகர்.. கிசுகிசு அபப்டித்தான் இருக்கனும். புதிர்தான் குழப்பனும்

நன்றி யோ

நன்றி காயத்ரி

சுசி, வெள்ளைக் கொடி தெரியுதா?

பீர், ஹிஹிஹி

நன்றி பிசாசு :))

டக்ளஸ், இதுக்கெல்லாம் நாம மயங்குவோமா?

நன்றி அறிவிலி

Bleachingpowder on August 17, 2009 at 2:41 PM said...

//கதை எஸ்.பி ராஜ்குமாருடையது என்றாலும் இயக்குவது யார் என்ற குழப்பம் தான்//

யார் இயக்கினாலும் ஒரே மாதிரி தானே தல இருக்க போகுது அப்புறம் என்ன?

//அதுவும் ஷங்கருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். கூட ஏ.ஆர். ஆர் வேற ஆறு மாதம் ஆக்குவார். அனேகமாக இந்தப் படத்தை என் குழந்தை குட்டிகளுடன் தான் பார்ப்பேன் என நினைக்கிறேன்//

எல்லாம் ஓக்கே தல, தயாரிப்பாளர் யாருன்னு மறந்துட்டீங்களே. வைட்டமின் "பா" கொஞ்சம் சேர்த்து அடிச்சு வுட்டால் போதும், அதுவும் நடக்கவில்லைன்னா, உடன் பிறப்புக்களிடம் கொஞ்சம் அன்பா வேண்டுகோள் விட சொன்னா போதும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தல, படம் 2010 தமிழ் புத்தாண்டு ரிலீஸ், அதுல எந்த டவுட்டும் வேணாம், அதுக்குள்ள குழந்தை குட்டியெல்லாம் ரெடி பண்ணிருங்க :)

//இனி வருடத்திற்கு ரெண்டு படம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ச்சீயான்//
கந்தசாமிக்கு இவனுங்க கொடுக்குற பில்டப் தாங்க முடியலை. ஆளவந்தான் என்ன கதி ஆச்சுன்னு தெரியாதா? கந்தசாமியோட விதி ரெண்டு வாரம் தான், எல்லா பட பொட்டியும் தான் தானு விட்டுக்கு வந்திடும். அடுத்த ஆடு அஜித்தா? ஹாஹாஹா...எல்லா அடிச்சாலும் தாங்குறவர் அவர் தான்.

//எந்த இயக்குனரும் நடிகராக பிராகசிக்க முடியவில்லையே என்றும் ஆதங்கப்பட்டுதான் இவர் நடிக்க முடிவெடுத்தாராம்//

ஏன் பாக்யராஜ்,பார்திபன்,பாண்டியராஜன் எல்லாம் இவர் போட்டிருக்கிற கூல்ஸ் வழியே பார்த்தா தெரியாதாமாம்

Cable Sankar on August 17, 2009 at 2:54 PM said...

இவ்வளவு ஓப்பனா கிசு கிசுவா..? :)

முரளிகண்ணன் on August 17, 2009 at 3:02 PM said...

கிசு கிசுன்னா கொஞ்சமாச்சும் யோசிக்க வைக்கணும் சகா.

தேங்காய் உடைச்ச மாதிரி எழுதினா அது செய்தி

பட்டிக்காட்டான்.. on August 17, 2009 at 3:02 PM said...

சில கிசுகிசு புரியலைங்க..

மற்றபடி ரசித்தேன்.. :-)

ஷாகுல் on August 17, 2009 at 3:29 PM said...

\\எந்த இயக்குனரும் நடிகராக பிராகசிக்க முடியவில்லையே \\

Sasi kumar...?!?!?

Let Us See Ameer in YOGI also.

சசிகுமார் இல்ல. மிஷ்கின் டக்ள்ஸீ

டக்ளஸ்... on August 17, 2009 at 3:33 PM said...

\\முரளிகண்ணன் said...
கிசு கிசுன்னா கொஞ்சமாச்சும் யோசிக்க வைக்கணும் சகா.
தேங்காய் உடைச்ச மாதிரி எழுதினா அது செய்தி\\

இத..இத..இத..இதத்தான் சொல்லனும்ணு நெனைச்சு, யாராச்சும் சொல்லுவாங்களான்னு இந்த ஏரியாவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன்.
நீங்க சொல்லீட்டீங்க தலைவரே...!
பெரிய ரிப்பிட்டு.

டக்ளஸ்... on August 17, 2009 at 4:47 PM said...

ஷாகுல்,

ஸ்னிக்தான்னு சொன்னப்புறம் மிஷ்கின்னு தெரியாதா..?
அது சசிக்குமாரும் இயக்குனர் கம் நடிகர்ன்றதுக்காக போட்டது பாஸ்.

சிங்கக்குட்டி on August 17, 2009 at 6:05 PM said...

நல்ல பதிவு கார்க்கி, நன்றி.

கார்ல்ஸ்பெர்க் on August 17, 2009 at 6:17 PM said...

//வாழ்த்துக்கள் சொன்னேங்க//
- ண்ணா, ஆரம்பத்திலேயே நீங்க நம்ம ஆளுன்னு காட்டிடீங்க..

//கடைசி கட்ட தகவல்படி கதாசிரியருக்கே யோகம் அடிப்பது போல தெரிகிறது//
-நமக்கு ஆப்பு அடிக்காம இருந்த சரி.. இதுவும் ஊத்திக்கிச்சுன்னா, அப்பறம் நாம வெளிய தல காட்ட முடியாது..

//லயன் டேட்ஸ் ஒரு பாக்கெட் வாங்கி கொடுத்து டாட்டா சொல்லி விட்டாராம்//

சூப்பர்..

pappu on August 17, 2009 at 7:22 PM said...

. அனேகமாக இந்தப் படத்தை என் குழந்தை குட்டிகளுடன் தான் பார்ப்பேன் என நினைக்கிறேன்.////

என்னவோ ஹிண்ட் பண்ணுற் மாதிரி தெரியுதே!

அத்திரி on August 17, 2009 at 8:19 PM said...

கிசுகிசு எழுதியிருக்கேனு சொன்னியே..........காணோம்

ஆதிமூலகிருஷ்ணன் on August 17, 2009 at 10:20 PM said...

அவ்வளவாக கண்டுபிடிக்க முடியாததால் கிசுகிசுக்கள்னாலே எனக்கு பிடிக்காது. ஆனால் முதல் முறையாக அத்தனையையும் கண்டு பிடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.!

அதற்காக தொடரவேண்டாம்.. ஹிஹி..

Karthik on August 18, 2009 at 8:53 AM said...

கார்க்கி, அடுத்த முறை யாருக்கும் புரியாதபடி 'போஸ்ட் மாடர்ன் கிசு கிசு' எழுதவும். LOL. :)))))

//வாழ்த்துக்கள் சொன்னேங்க.

புரியுது. கையில் கிடைச்சா என்ன பண்ணுவீங்க? :))))

Busy on August 18, 2009 at 11:08 AM said...

Enna intha kadai pakkam Naindai Taklas arajakm illama irukka............

Naina Varliya.............!!!

கார்க்கி on August 18, 2009 at 12:16 PM said...

அனைவருக்கும் நன்றி..

கிசுகிசு கஷ்டமா எழுதலாம். சீக்கிரமே மண்டைய பிச்சுக்க வைக்கிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் on August 18, 2009 at 10:24 PM said...

கிசுகிசு கஷ்டமா எழுதலாம். சீக்கிரமே மண்டைய பிச்சுக்க வைக்கிறேன்//

அதென்ன வேண்டாம்னு சொன்னாலும் எழுதறேங்கிறது. பெரியவங்களுக்கு ஒரு மருவாதியே கிடையாதா.?

அனைவருக்கும் நன்றி..// கண்டிப்பா செல்லாது செல்லாது. தனித்தனியா நன்றி சொல்லித்தான் ஆவணும். நாங்கல்லாம் என்ன இளிச்சவாயியா.? பதிவெழுதவே நேரமில்லாட்டாலும் உக்காந்து நன்றி சொல்லிக்கிட்டிருக்கோமில்ல.?

புலியூரான் "ராஜா" on August 19, 2009 at 9:58 AM said...

கிசு கிசுனவுடனே நம்ம சினேகா,ஸ்ரேயா, ஷமீரா, ப்ரியாமணி இவங்கள பத்தி இருக்கும்னு வந்து பாத்தா???? ,,,, தல ,தளபதி பத்தி எழுதுறதெல்லாம் சினிமா துணுக்குகள் தல.... ஏமாத்திடீன்களே....

 

all rights reserved to www.karkibava.com