Aug 13, 2009

சினிமா சின்னசாமி


 

விரைவில் வெளிவர இருக்கும் படங்களின் விமர்சனங்களை இப்போதே போட்டு உடைக்கிறார் சின்னசாமி.

1) வேட்டைக்காரன் - படம் பார்ப்பவர்களை மட்டும்

2) அசல்  - அக்மார்க் டூப்ளிகேட்

3) ஆதவன்அழுதவன்

4) கந்தசாமி - பார்ப்பவர்கள் நொந்த சாமி

5) விண்ணைத் தாண்டி வருவாயா? - நரகத்துக்கா?

சின்னசாமியின் சின்ன சின்னக் கேள்விகள்:

அஜித்திடம் - ரீமேக்கில் நடித்து வெற்றி பெறுவது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைவது போல்ன்னு சொன்னீங்க. கிரீடம், பில்லான்னு கலக்கிட்டு, இப்போ மகதீராவை 50வது படமா எடுக்க போறீங்களாமே தல?

விஜயிடம் - ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வித்தியாசமா முயற்சி செய்யலாம்ன்னு 2005ல சொன்னிங்க. என்ன ஆச்சுண்ணா?

சூர்யா - ஆறு (என்கிற)  படம் பார்த்து இப்படி நடிக்க நிறைய பேரு இருக்காங்க. நீ எதுக்குன்னு பாலா கோச்சிக்கிட்டாருன்னு வருத்தப்பட்டிங்க. இப்ப என்ன அயன், ஆதவன், ஹரி படம்ன்னு கிளம்பிட்டிங்க? பாலா ரை ரை சொல்லிட்டாரா போலிஸ்?

விக்ரம் -  உங்க டெடிகேஷன் ஊரறிந்தது. ஆனா பீமா, கந்தசாமிக்கெல்லாமா இப்படி காத்திட்டு இருக்கனும்? இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் ச்சீயான்.

சிம்பு - சிலம்பாட்டம் வெற்றின்னு சொன்னிங்க. அதே டைரக்ட்ரோட அடுத்த படம்ன்னு சொன்னிங்க. நடுவுல கெளதம் வந்தவுடனே, டிரெண்ட் மாறிடுச்சு, மசாலா எடுக்காதுன்னு உளறீங்களே குட்டி தல? அடுத்த படம் மறுபடியும் விரலை மடக்கித்தானே நடிச்சாகனும்!!!

37 கருத்துக்குத்து:

ஆதிமூலகிருஷ்ணன் on August 13, 2009 at 10:20 AM said...

Me the Firsttaa.?

mokkai.. hihi..

Cable Sankar on August 13, 2009 at 10:21 AM said...

sari mokkai.. hi..

முதலமைச்சர் 2011 on August 13, 2009 at 10:24 AM said...

என்ன ஆச்சு சகா? விஜயும் இந்த வட்டத்துல விழுந்துட்டாரே.. யாரோ அஜித் ரசிகைகிட்ட வசமா சிக்கிட்டிங்களா? இல்லை அஜித் ரசிகரிடம் வாங்கி கட்டிக்கிட்டிங்களா?

நல்லா இருந்துச்சு

ரமேஷ் விஜய் on August 13, 2009 at 10:42 AM said...

அனைத்தும் நல்லா இருந்துச்சுங்க சகா

பிரபாகர் on August 13, 2009 at 11:37 AM said...

உங்களின் விரிவான விமர்சனமும் கருத்தாழமிக்க அலசல்களும் அருமையிலும் அருமை. இந்த பதிவை ஃபிரேம் செய்து ஒவ்வொருவர் வீட்டிலும் மாட்ட வேண்டும்....

பின்ன என்ன? எதாச்சும் மேட்டர் இருக்கும்னு வந்தா மனுஷன இப்படியா நோகடிக்கிறது....

முடியல சகா...

பிரபாகர்.

Bala Kumaran on August 13, 2009 at 11:38 AM said...

///விரைவில் வெளிவர இருக்கும் படங்களின் விமர்சனங்களை இப்போதே போட்டு உடைக்கிறார் சின்னசாமி///
//ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வித்தியாசமா முயற்சி செய்யலாம்ன்னு 2005ல சொன்னிங்க. என்ன ஆச்சுண்ணா?//
அதுதான் வித்தியாசமா டைப்ல கட்சி அரம்பிச்ருக்ரரே.

அப்பாவி முரு on August 13, 2009 at 11:38 AM said...

//குட்டி தல?//


???????

Bala Kumaran on August 13, 2009 at 11:41 AM said...

///விரைவில் வெளிவர இருக்கும் படங்களின் விமர்சனங்களை இப்போதே போட்டு உடைக்கிறார் சின்னசாமி///

"சின்னசாமி - சரியான மொக்கசாமி"

comment மிஸ் ஆய்டுச்சு
ஹி ஹி ஹி....

யோ (Yoga) on August 13, 2009 at 11:46 AM said...

நீங்க விஜயையும் கலாய்க்கிறீங்க. என்ன கட்சி மாறிட்டீங்களா? எப்படியோ கேள்வி எல்லாம் நெத்திலடிச்ச மாதிரி இருந்துருக்கும்.. சம்பந்தப்பட்டவங்க வாசிப்பாங்களா?

சுசி on August 13, 2009 at 11:51 AM said...

நேத்து சொன்னத அப்டியே வாபஸ் வாங்கிக்கிறேன் மொக்கசாமி...... முடியல...
ஆனா விஜய்.... யூ... டூ... கார்க்கி...

டக்ளஸ்... on August 13, 2009 at 12:04 PM said...

இங்க பின்னூட்டம் போட்ட‌ எல்லாரும் "ஏன்கார்க்கி, இந்த லிஸ்ட்ல விஜய வச்சு கலாய்ச்சீங்க..?"ன்னு கேக்குறதப் பார்த்தா, உங்க கனிப்புப்படி விஜய் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் போலயே...!
அப்போ, ஸ்ட்ரைட்டா ஜே.கே.ஆர்,சாம் ஆன்டர்சன், ஆர்.கே,பா.விஜய், கருணாஸ், வடிவேலு, பிரசாந்த்,லிஸ்ட்டா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்...

கார்க்கி on August 13, 2009 at 12:05 PM said...

ஆதியே ஆதியா? ரைட்டு

படத்தைதானே சொல்றீங்க கேபிள்?

முதலமைச்சரே, உச்சி மீது வான் இடிந்து.. சரி சிடுங்க.. சும்மாதான்

நன்றி ரமேஷ் விஜய்

பிரபாகர், உங்களையெல்லாம் செதுக்குகிறேன். விரைவில் ஒரு மரண மொக்கை வரவிருக்கிறது. அதற்கான ஒத்திகையே இது..

பாலகுமாரன், அதுல என்ன வித்தியாசம்.. மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் ஆரம்பிப்பது வழக்கம் தானே :))

முரு, அப்படித்தானே அவர் சொல்றாரு..

யோ, நானாவது தள்பதிய விடறதாவ்து.. இது சும்மா.. லுல்லுலாயிக்கு

சுசி, இதுக்கே ஜகா வாங்கினா எப்படி? விஜய் மேட்டர்.. நேயர் விருப்பம்.. யாருன்னுலாம் கேட்க கூடாது..

Anonymous said...

//இப்ப என்ன அயன், ஆதவன், ஹரி படம்ன்னு கிளம்பிட்டிங்க? பாலா ரை ரை சொல்லிட்டாரா போலிஸ்//

கமல் கூட சொல்லியிருக்கார். ஒரு பேசும் படம் எடுக்கும் முன் சகலகலாவல்லவன், விக்ரம் மாதிரி நாலு மசாலா படம் தந்தாதான் மார்க்கெட்ல இருக்க முடியும்னு. (நாங்கெல்லாம் சூர்யா ரசிகர்ல)

பரிசல்காரன் on August 13, 2009 at 12:12 PM said...

ரைட்டு!

புன்னகை on August 13, 2009 at 12:22 PM said...

புலி பதுங்குவது பாய்ச்சலுக்குனு சொல்லுவாங்களே அது மாதிரி தானா இதெல்லாம்??? மரண மொக்கையை சகிக்க எல்லாம் வல்ல இறைவன் எங்களனைவருக்கும் மனப்பக்குவம் அளிக்கட்டும்! :P

கத்துக்குட்டி on August 13, 2009 at 12:24 PM said...

/இப்ப என்ன அயன், ஆதவன், ஹரி படம்ன்னு கிளம்பிட்டிங்க? பாலா ரை ரை சொல்லிட்டாரா போலிஸ்//

கமல் கூட சொல்லியிருக்கார். ஒரு பேசும் படம் எடுக்கும் முன் சகலகலாவல்லவன், விக்ரம் மாதிரி நாலு மசாலா படம் தந்தாதான் மார்க்கெட்ல இருக்க முடியும்னு. (நாங்கெல்லாம் சூர்யா ரசிகர்ல)//

இதை நான் வலுவாக ஆமோதிகிறேன்.....!!!

Karthik on August 13, 2009 at 12:37 PM said...

சின்னசாமியின் சின்ன சின்னக் கேள்விகள்:

கார்க்கியிடம் : மொக்கை குறைஞ்சிடுச்சுன்னு சொன்னீங்களே சகா?

பிரபாகர் on August 13, 2009 at 12:40 PM said...

//பிரபாகர், உங்களையெல்லாம் செதுக்குகிறேன். //

அய்யோ, பயமாயிருக்கு! கார்க்கி, நாங்கல்லாம் பொடிசுங்க.... பாத்து, பாத்து...

பிரபாகர்.

முரளிகண்ணன் on August 13, 2009 at 12:46 PM said...

அடிக்கடி வந்து போங்க சின்னசாமி

கலையரசன் on August 13, 2009 at 1:02 PM said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் சகாவாகிய கார்க்கி அவர்களே!!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

நாஞ்சில் நாதம் on August 13, 2009 at 1:58 PM said...

:))

யாசவி on August 13, 2009 at 2:09 PM said...

???

கார்க்கி on August 13, 2009 at 2:11 PM said...

டக்ளஸ்,

நீ சொன்ன லிஸ்ட்டு அவருக்குத்தான் சரி வரும். எங்காளு ஈடு இணையில்லாதவரு

அம்மிணி, அப்புறம் ஏன் ஆறு படத்துல நடிச்சதுக்கு வருத்தம் தெரிவிச்சாருங்க?

பரிசல், வலது..

புன்னகை, உங்க மன தைரியத்த நான் பாராட்டுறேன்.. கொடுப்பாரு கொடுப்பாரு

கத்துக்குட்டி.. ஆமோதிங்க.. ஆனா மத்தவங்க மார்க்கெட் தக்க வைக்க இப்படி நடிச்சா ஏன் கிண்டல் செய்றீங்க?

கார்த்திக், அதுக்குத்தான் இந்த பதிவே.. :))

நீங்க பொடிசா பிரபாகர்? ரைட்டு.. நான் ஏதும் சொல்லல

சினிமான்னு உடனே ஆர்வத்த பாருங்க முரளிக்கு?

கலை, நேத்து காக்டெயிலிலே போட்டு இருந்தேன்.. செய்வோம் சகா

சிரிச்சிட்டே இருங்க நாதம்.. :)))

radhika on August 13, 2009 at 3:23 PM said...

5) விண்ணைத் தாண்டி வருவாயா? - நரகத்துக்கா?

அஜித்திடம் - ரீமேக்கில் நடித்து வெற்றி பெறுவது பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைவது போல்ன்னு சொன்னீங்க. கிரீடம், பில்லான்னு கலக்கிட்டு, இப்போ மகதீராவை 50வது படமா எடுக்க போறீங்களாமே தல?

haahaa. super.

Anonymous said...

வித்தியாசமான முயற்சின்னா தெரியாதா? எங்க பப்பு கூட ஸ்கூல் டே அன்னைக்கு போட்ட பாரதியார் வேசம்தான்.:)

ஸ்ரீமதி on August 13, 2009 at 5:08 PM said...

Hmm apparam???

மங்களூர் சிவா on August 13, 2009 at 6:27 PM said...

/
அடுத்த படம் மறுபடியும் விரலை மடக்கித்தானே நடிச்சாகனும்!!!
/

:)))))))))

ILA on August 13, 2009 at 7:14 PM said...

//விஜயிடம் - ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை வித்தியாசமா முயற்சி செய்யலாம்ன்னு 2005ல சொன்னிங்க. என்ன ஆச்சுண்ணா?//
வில்லு படத்துல மீசை பெருசா இருந்துச்சே. பார்க்கலையா?

அத்திரி on August 13, 2009 at 7:43 PM said...

அருமையான மொக்கை

தமிழ்ப்பறவை on August 14, 2009 at 12:56 AM said...

ம்ஹூம்...
தேறுவதற்கில்லை...
:-(

பட்டிக்காட்டான்.. on August 14, 2009 at 3:25 AM said...

மொக்கையா இருந்தாலும் பதிவுல நீங்க கேட்ட கேள்வியெல்லாம் சரிதான்..

ஆனா..!

//.. அதுல என்ன வித்தியாசம்.. மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் ஆரம்பிப்பது வழக்கம் தானே :)) ..//

முடியலைங்க..

கார்க்கி on August 14, 2009 at 9:14 AM said...

நன்றி ராதிகா

மயிலக்கா, அழுதுடுவேன்ன் :))

ஸ்ரீம்தி, விழுப்புரம்.. இரு உன் கவிதைக்கு பொருளுரை போடறேன்

சிரிப்புக்கு நன்றி சிவா

இளாண்ணே, அவர்கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறாங்க தமிழ் ரசிகரக்ள்

நன்றி அத்திரி :))

பறவை, கண்டுக்காம விடுங்க பாஸ்.. கொஞ்சம் பிசி..

பட்டிக்காட்டான், என்னை மொக்கைன்னு சொல்றீஙக்ளா, இல்லை பதிவு மொக்கைன்னு சொல்றீங்களா? :))

விக்னேஷ்வரி on August 14, 2009 at 11:22 AM said...

நல்லாருக்கு. ஆனா, சீக்கிரமே முடிஞ்சு போச்சு.

புலியூரான் "ராஜா" on August 14, 2009 at 1:34 PM said...

பில்லா கிரீடம் போன்றவை போன மாதம் வந்த படத்திற்கு இந்த மாதம் சுட சுட போடப்பட்ட xerox copy அல்ல... மேலும் எங்கள் தல remake-கிற்கு எதிர் ஆனவர் இல்லை , ஏனென்றால் எங்க தலையே அந்த கால எம்.ஜீ.ஆர் இன் இந்த கால remake தான். (கவனிக்கவும் xerox copy அல்ல)

கார்க்கி on August 14, 2009 at 1:40 PM said...

நன்றி விக்கி

ராஜா, நலமா? மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடறீஙக்ளா? உடம்ப பார்த்துக்கொங்க. உங்கள பார்க்க வரும்போது லெமன் வாங்கிட்டு வரேன்

புலியூரான் "ராஜா" on August 14, 2009 at 2:23 PM said...

என்னங்க தல.... அவரு எம்.ஜீ.ஆர் மாதிரி ஆக்ட்டு கொடுக்கும்போது இவர நாங்க எம்.ஜீ.ஆர்ரோட ரீமேக்குனு சொல்ல கூடாதா.... நாங்க யாருக்கும் சளைத்தவர்கள் இல்ல தல...
//.. அதுல என்ன வித்தியாசம்.. மக்கள் செல்வாக்கு இருப்பவர்கள் ஆரம்பிப்பது வழக்கம் தானே :)) ..//

விஜய பத்தி இப்படி சொன்னவருதான் 4 லாரி load லெமன் வங்கி தேய்க்கணும்....

பிரியமுடன்.........வசந்த் on August 14, 2009 at 6:14 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com