Aug 12, 2009

கார்க்கியின் காக்டெயில்


 

இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக உதவி வேண்டி காத்திருக்கும் பதிவர் சிங்கை நாதனுக்கு உதவும் உள்ளமிருப்பவர்கள் நண்பர் கே.வி.ராஜா எழுதிய இந்தப் பதிவைப் படிக்க விழைகிறேன்.

அவர் விரைவில் நலம்பெறப் பிரார்த்திப்போம்!

******************************

கிரிக்கெட், ஜாகிங், ஸ்கிப்பிங் என தொப்பையை குறைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் நானும் என் ரூம் மேட்டும்.  இன்று காலை 158 159 என்று குதித்துக் கொண்டே வந்தவன், எழுந்து ஸ்கிப் பண்ணுடா என்றான்.

இன்னைக்கு ஸ்கிப் பண்ணிட்டேன் மச்சி என்றேன்.

மொக்கை புரியாமல் , இன்னும் எழுந்திருக்கவே இல்ல. ஏன் பொய் சொல்ற என்றான்.

இல்லடா ஸ்கிப்பிங் பண்ணாம skip பண்ணிட்டேன் என்றேன்.

இப்பலாம் நீ இப்படி அதிகம் பேசறது இல்லையா. அதான் டக்குன்னு புரியல என்றான்.

என்னது? மொக்கை குறைஞ்சுடுச்சா?

******************************

மொக்கை குறைஞ்சிடுச்சுன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது.

  ஒரு வாரத்தில்  இசைப் பற்றிய மூன்று பதிவுகள். சென்னைப் பற்றி , நட்பைப் பற்றி கவிதைகள். இதனால் மொக்கைகள் குறைந்துவிட்டதாக உரிமையுடன் சகா ஒருவர் கோவப்பட்டார்.  எதையும் சரியாக எடைப் பார்த்து சொல்பவர் அவர். நான்கு நாட்கள் கழித்து பதிவு போடப் போறேன் என்றதும், நச்சுன்னு ஒரு ஏழுவா என்றார் சிரிப்பு. இல்லைங்க சங்கத்தில் பாடாத கவிதை என்றதும் ப்ச் என்கிறார். நீ இதுக்குத்தான் லாயக்கு என்று சொல்லவில்லை சகா, ஆனாலும் உன் மொக்கைகள் எங்களுக்கு உற்சாக டானிக் என்கிறார் வடநாட்டுக்காரர். என்ன சொல்ல. கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))

****************************************

சார்மினார் எக்ஸ்பிரஸில் ஹைதைக்கு சென்றுக் கொண்டிருந்தேன். விவேகானந்தா வித்யாலயா என்ற பள்ளி மாண்வர்கள் 100 பேரும் ஹைதைக்கு வந்துக் கொண்டிருந்தார்கள். அவரக்ளுடன் பேசிக் கொண்டு வந்தேன். 8.30க்கே வந்து தூங்க சொன்னார் ஒரு மேம். ஒரு மாணவன் ”மேம், ஹைதராபாத்தில் பன்றி காய்ச்சல் இருக்கா?” என்றான். அதெல்லாம் மனுஷங்களுக்குத்தான் வரும். பன்னிங்களுக்கு வராது. கம்முனு தூங்குடா என்று எரிச்சசலுடன் சொன்னார் அந்த மேம். என் பெர்த்துக்கு கிளம்பிய நான் “உங்க மேம்க்கு அவங்க மேல மட்டும்தான் அக்கறை. உங்கள கண்டுக்க மாட்டறாங்க” என்றேன். கொல்லென சிரித்து விட்டார்கள் மாணவர்கள். சொன்னது சரியா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் மாணவர்களிடம் நடந்தக் கொண்ட விதம் அப்படி சொல்ல சொல்லியது

**********************************

மும்பையில் பேருந்துகளில் ரொம்ப சரியா நடந்துக்குறாங்க. பெண்கள் முன்பக்கம்தான் ஏறுகிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஹைதையில் சூப்பர். கண்டக்டரிடமே, காசு இல்லை. டிக்கெட் வாங்க முடியாது. செக்கிங் வந்தா பார்த்துக்கிறேன் என்று சொல்லலாம். கோவையில் இன்னும் சூப்பர். வண்டியை நிறுத்த, பின்னாடி சீட்டில் இருந்து முன்னாடி இருக்கும் கண்ணாடி வரை, ஒரு கயிறு கட்டி இருக்காங்க. அதுல ஒரு மணி தொங்குது. வண்டியை நிறுத்தனும்மா கண்டக்டர் கயிறு லேசா இழுக்கிறாரு. மணி சத்தம் கேட்டு வண்டிய நிறுத்தறாங்க. மணியாச்சின்னா மணியாட்டறாங்க. வண்டி கிளம்புது.

************************************

கூகிள் மூலம் என் வலைக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. சரி, எதை தேடினால் என் பக்கத்திற்கு வருகிறார்கள் என்று அலசினால் !!!!!!

ஜோக்குகள்

சே குவேரா

டீ.ஆர்.மகாலிங்கம்

வில்லு

இட்லி சாம்பார்

தல

அடல்ட்ஸ் ஒன்லி

இப்படி போதுங்க அந்த லிஸ்ட். ஆனாலும் நிறைய பேரை கொண்டு வந்து சேர்த்த பெருமை ஷகீலாவுக்கும், டக்கீலாவுக்கும் தான். ம்க்கும்.

*******************************

பொலம்பல்கள் எஸ்.கே. வை பலர் அறிவோம். அவரின் இந்தப் பதிவு பலரையும் சென்றடைய வேண்டும் என்பதால்...

 

சனி கிழமை எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததாகவும், அவருக்கு மாற்று கால் பொறுத்த உதவும் படியும் கேட்டுக்கொள்ள பட்டு இருந்தது. நண்பர்கள் நால்வருடன் இதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.
ஜெய்ப்பூர் பூட், 1975'இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும்.

Jaipur Foot

இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை நானும் நமக்கு தெரிந்தவர்களுடன் பரப்பி முடிந்த வரை நாம் அறிந்தவர்களுக்கு உதவ முன்வருவோமா.
அதிகம் வாசிக்க படுகின்ற பதிவர்கள் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவோ, அல்லது ஒரு காட்ஜெட் போன்றவையோ போட்டு இருக்கும் பட்சத்தில் நிறைய நண்பர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதே போல் நமக்கு தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து அவர்கள் ஜெய்ப்பூர் செல்வதற்கு மட்டும் தயார் செய்து கொடுத்தால் அங்கு அனைத்தையும் அவர்களே இலவசமாக செய்கிறார்கள்.
இவர்களுக்கு சென்னையிலும் ஒரு தொடர்பு அலுவலகம் உள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

MR. D. MOHAN JAIN
ADINATH JAIN TRUST (REGD.)
24, SUBBA NAIDU STREET,
CHOOLAI, CHENNAI-600112.
044-26693982.
26692813, 26692539.
Mobile- 09840022536

நன்றி எஸ்.கே

34 கருத்துக்குத்து:

ஸ்ரீமதி on August 12, 2009 at 11:28 AM said...

me the first :))

ஸ்ரீமதி on August 12, 2009 at 11:29 AM said...

//என்னது? மொக்கை குறைஞ்சுடுச்சா?//

ம்ம்ம்ம் ஆமா குறைஞ்சிடிச்சு.. :))

ஸ்ரீமதி on August 12, 2009 at 11:30 AM said...

//கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))//

தத்துவம் நம்பர் 45783758759... இன்னும் உங்கக்கிட்ட இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறோம்..

ஸ்ரீமதி on August 12, 2009 at 11:38 AM said...

காக்டெயில் சூப்பர்... யாரோ அவசரப்படுத்தி போட்ட மாதிரி இருக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து நல்லா போட்டிருக்கலாம்... ;)))))))))))))

டம்பி மேவீ on August 12, 2009 at 11:42 AM said...

ஸ்ரீமதி said...
//என்னது? மொக்கை குறைஞ்சுடுச்சா?//

ம்ம்ம்ம் ஆமா குறைஞ்சிடிச்சு.. :))


amanga....

கலையரசன் on August 12, 2009 at 12:13 PM said...

இன்னம் "ஷார்ப்" வேனும் சகா!

ஆதிமூலகிருஷ்ணன் on August 12, 2009 at 12:27 PM said...

கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))
//

அனுஜன்யா கவனிக்கவும். நக்கல்.. நக்கல் பண்றாண்ணே.. (அன்பே சிவம் சந்தானபாரதி ஸ்டைலில் படிக்கவும்)

வழக்கம் போல ரசித்தேன்.

சுசி on August 12, 2009 at 12:33 PM said...

//கிரிக்கெட், ஜாகிங், ஸ்கிப்பிங் என தொப்பையை குறைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்//

தொப்பை குறைஞ்சுதோ இல்லையோ மொக்கை குறைஞ்சு போச்சேப்பா....

//என்று எரிச்சசலுடன் சொன்னார் அந்த மேம். //

மேம பார்த்து நீங்க சிரிச்சீங்களா என்ன???

பரிசல்காரன் on August 12, 2009 at 12:41 PM said...

சுமாராக இருந்தாலும் அங்கங்கே உன் டச்!

நாஞ்சில் நாதம் on August 12, 2009 at 12:45 PM said...

:))

radhika on August 12, 2009 at 12:50 PM said...

Nothing wrong karki. Write more good posts. We expect all from you. Mokkai, love, puttikathaikal, kavithaikal, music etc. you can do it man. best wishes

புன்னகை on August 12, 2009 at 1:03 PM said...

//கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க.//
எங்கோ கேட்ட ஞாபகம்! ;-)

//பெண்கள் முன்பக்கம்தான் ஏறுகிறார்கள்.//
நம்ம ஊர்ல இறங்கும் வழி தானே முன்னாடி இருக்கு? அங்க அப்படி இல்லையா??? அந்த மணி கட்டப்பட்ட கயிறு, பூனேவில் கூட பேருந்துகளில் இப்படி தாங்க இருக்கு.

ஒரு சில இடங்களில் மட்டுமே உங்கள் டச்??? என்ன ஆச்சு??

பைத்தியக்காரன் on August 12, 2009 at 1:21 PM said...

கார்க்கி,

மிக்சிங்கில் ஏதோ குறைகிறது. என்னன்னு பாருங்க.

எவ்வளவு அடிச்சாலும் தாங்கலாம். அதுக்காக லைட்டா கிக் ஏறினா எப்படி நண்பா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

குசும்பன் on August 12, 2009 at 1:22 PM said...

//கூகிள் மூலம் என் வலைக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது.//

சரோஜா தேவி கதை புத்தகம் என்று டைட்டில் மட்டும் வெச்சு பாரு எப்படி கும்முன்னு ஏறுதுன்னு:)

ஜெகநாதன் on August 12, 2009 at 1:29 PM said...

பாவம்.. இவரும் மொக்கைக்காக கஷ்டப்படறாரு..! ​தேதேதேதேவனே​ என்னைப் பாருங்கள்..... ஓகே.. ஒரு ஐடியா.. பிளாக் எழுதற ஈரோவும் பின்னூட்டம் போடற ஈரோயினும் எப்படி லவ்வுவாங்கன்னு கொஞ்சம் தாடைய சொறிங்க.. அப்படியே ஒரு வில்லன், காமடியன், பாட்டு, குத்துன்னு தூவுங்க... ​தொடர் மொக்கை இடுகையே போட்டுடலாம்..

குசும்பன் on August 12, 2009 at 1:32 PM said...

//சார்மினார் எக்ஸ்பிரஸில் ஹைதைக்கு சென்றுக் கொண்டிருந்தேன்//

இந்த முறை ஆட்டோகிராப் யாரும் கேட்கவில்லையா சகா?:)

//தொப்பையை குறைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் //

ஆல்தி பெஸ்ட், கல்யாண தேதி பிக்ஸ் செஞ்சாச்சா:)

டக்ளஸ்... on August 12, 2009 at 1:51 PM said...

கவலப்பட்டவரு யாரு தராசண்ணனா..?
பாவம்யா உஙக ரூம் மேட்டு.

Anonymous said...

/வண்டியை நிறுத்தனும்மா கண்டக்டர் கயிறு லேசா இழுக்கிறாரு. //
அதே மாதிரி நீள விசில் குடுத்தா பஸ் நிக்கும். சின்ன விசில் குடுத்த பஸ் போகும். கோவை போனப்போ அதை கவனிக்கலயா.

யோ (Yoga) on August 12, 2009 at 2:36 PM said...

நானும் தினமும் ஸ்கிப்பிங் செய்றத ஸ்கிப்பிங் பண்ணுறேன்....

தாரணி பிரியா on August 12, 2009 at 2:49 PM said...

ஆமாம் மொக்கை குறைஞ்சுதான் இருக்கு ஆனா இதை சொன்னா சேர்த்து வெச்சு மரண மொக்கை வருமே :)

எங்க ஊருல பொண்ணுங்க எல்லாம் முன்னாடி மட்டும்தான் ஏறி இறங்கணும். அதே போல ஆம்பிளைங்க எல்லாம் பின்னாடி மட்டும்தான் ஏறி இறங்கணும்

Anonymous said...

அது மட்டும் இல்ல, எங்க ஊர்ல தான் பஸ்ல லேடீஸ் கிட்ட மக்கள் கொஞ்சம் நாகரீகமா நடந்துபாங்க. சென்னை பஸ், உவ்வ்வே எங்க வென ஏறலாம், எங்க வேணா உட்காரலாம் என்கிற கதையெல்லாம் எங்க ஊரில் நடக்காது.. அத சொல்ல மாட்டீங்களா?

முரளிகண்ணன் on August 12, 2009 at 3:05 PM said...

கார்க்கி, இப்போத்தான் பழசெல்லாம் படிக்கிறேன்.

நல்ல முன்னேற்றம்

Karthik on August 12, 2009 at 3:18 PM said...

என்னது மொக்கை குறைஞ்சிடுச்சா? உங்க ரெண்டு பிரச்சனைகளை பற்றி படிக்க கொடுங்க கார்க்கி. நானெல்லாம் அதிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் இருக்கேன். :))

Karthik on August 12, 2009 at 3:20 PM said...

//கோவையில் இன்னும் சூப்பர். வண்டியை நிறுத்த, பின்னாடி சீட்டில் இருந்து முன்னாடி இருக்கும் கண்ணாடி வரை, ஒரு கயிறு கட்டி இருக்காங்க. அதுல ஒரு மணி தொங்குது. வண்டியை நிறுத்தனும்மா கண்டக்டர் கயிறு லேசா இழுக்கிறாரு. மணி சத்தம் கேட்டு வண்டிய நிறுத்தறாங்க. மணியாச்சின்னா மணியாட்டறாங்க. வண்டி கிளம்புது.//

கண்டக்டர் மறந்துட்டா கூட நாங்களே அடிச்சிடுவோம். இறங்கின பினாடியும் கண்டக்டர் கவலைப்பட தேவையில்லை. பசங்க அடிச்சிடுவாங்க. :))

கனா கண்ட காலங்கள் எழுத வெச்சிருவீங்க போலிருக்கே?!

கார்க்கி on August 12, 2009 at 4:23 PM said...

ஸ்ரீமதி, தத்துவம் வந்துட்டே இருக்கும்:)

டம்பீ மேவீ, நல்லதா கெட்டதா?

ஆமாம் கலை, :))

ஆதி, வழக்கம் போல ரசித்தேன்னா? ஏதாவ்து உள்குத்து?

சுசி, சிரிச்சா ஏன் எரிச்சலோட போறாங்க? ஓ மிஸ் பண்ணிட்டொம்ன்னா? :))

சுமாரா இருப்பதுதான் என் டச்ன்னு சொல்றீங்களா பரிசல்? :)

சிரிப்புக்கு நன்றி நாதம்

நன்றி ராதிகா.முயற்சி செய்கிரேன் :)

புன்னகை, ஒன்னும் ஆகல். அதான் பிரச்சினையே

சிவாண்ணா, இது மினி குவார்ட்டர்ன்னு வச்சிக்கொங்க.. :))

ஜெகனாதன், மொக்கைக்கு கஷ்டபடல.. உட்கார்ந்தா அருவி மாதிரி வரும். இப்பவெல்லாம் மத்த்வங்க மேல கொஞ்சம் பாவம் வருது அதான்

குசும்பரே, அபப்டி போட்டா உங்க கடைக்குத்தான் வழிகாட்டுது :))

அவரேதான் டக்ளஸ்

அம்மிணி, நான் பார்த்தப்ப எல்லா விசிலும் ஒரே சைசுலதான் இருந்துச்சுங்க

சேம் ப்ளட் யோகா..

தா.பி. உங்க ஊருக்கு பஸ் வருமா?

மயில், பயமா இருக்கும். உங்க ஊரு லேடீஸ் எல்லாம் அப்படியா?அடிப்பிங்களா?

நன்றி முரளி. எப்படி இருக்கிங்க

கிகி. கார்த்திக். நம்பர் கம்மி ஆயிடுச்சாம்.. :)) வீரியம் குறையுமா???????

சுசி on August 12, 2009 at 6:29 PM said...

//சுசி, சிரிச்சா ஏன் எரிச்சலோட போறாங்க? ஓ மிஸ் பண்ணிட்டொம்ன்னா? :))//

ஆஹா இப்டி ஆகிப் போச்சே... இருந்தாலும் இது ரெம்ப ஓவரு...

அத்திரி on August 12, 2009 at 8:22 PM said...

என்னவோ கொஞ்சம் மொக்கை கம்மியாத்தான் இருக்கு......அடுத்த கட்டத்துக்கு போறியா சகா??

அன்புடன் அருணா on August 12, 2009 at 9:22 PM said...

//“உங்க மேம்க்கு அவங்க மேல மட்டும்தான் அக்கறை. உங்கள கண்டுக்க மாட்டறாங்க” என்றேன்//
அடப்பாவி...கையை நீடடு பத்து பிரம்படி கொடுக்கப் போறேன்!

பீர் | Peer on August 12, 2009 at 10:10 PM said...

காக்டெயில் கார்க் ஓப்பன் பண்ணிவச்சு நாளாச்சா?... ஸ்ப்ரிட் குறையுது..

பட்டிக்காட்டான்.. on August 13, 2009 at 12:56 AM said...

ஆமாங்க, எல்லோரும் சொல்லுற போல காக்டெயில்ல என்னமோ குறையுது..

//..கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))..//

உங்களால முடியும், நாங்க நம்புறோம்..

கார்ல்ஸ்பெர்க் on August 13, 2009 at 2:47 AM said...

இப்ப கொஞ்ச நாளாதான் உங்க பதிவுகள படிக்க ஆரம்பிச்சிருக்கேன்'ணா.. அதனால மத்தவங்க மாதிரி கமெண்ட் பண்ண முடியல.. ஆனா கூடிய சீக்கிரமே ஆரம்பிச்சுடுவேன்..

கார்க்கி on August 13, 2009 at 10:19 AM said...

சுசி, நாங்க யாரு?? :))

அத்திரி, கார்க்கிட்ட மொக்கை குறைஞ்சா கீழ போறான்னு அர்த்தம்ன்னு மூத்த்த்த பதிவர் சொல்றாரு

அரூணா மேடம், எல்லொரும் உங்கள மாதிரி நல்லா டீச்சரா இருந்தா பரவாயில்லை

பீர், அடுத்த முறை டைட்டா மூடி வச்சிடறேன்

நம்பிகைக்கு நன்றி பட்டிக்காட்டான்

கார்ல்ஸ்பெர்க், சிங்கையில் இருந்தப்ப நீங்கதான் என் ஃபேவரிட் :)))

தராசு on August 13, 2009 at 4:36 PM said...

//கவிதை மாதிரிதான் மொக்கையும். அதுவா வரணுங்க. ஃபோர்ஸ் பண்ணக்க் கூடாது :)))//

சரியாச் சொன்னீங்க.

மங்களூர் சிவா on August 13, 2009 at 7:18 PM said...

nice!

 

all rights reserved to www.karkibava.com