Aug 11, 2009

தம்தம்தம் தம்தம் தததம்..


 

ராஜாவின் பாடல்களில் பிடித்தது எதுவென்று கேட்ட போது ஆளுக்கொரு படம் சொன்னது நினைவிருக்கிறதா? கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடிப் பார்த்தேன் என்ற கவிப்பேரரசு, அடுத்த வரியாக ராஜாவின் பாடலில் சிறந்ததை பாடிப் பார்த்தேன் என்று சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்க கூடும்தானே!!

நம் மனநிலைக்கு ஏற்ப அவ்வபோது ராஜாவின் ஏதோ ஒரு பாட்டு நம்மை ஆட்கொண்டு விடும். அந்த வகையில் சில வாரங்களாக என்னை இயக்கிக் கொண்டிருக்கும் பாட்டு

“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது”

ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. எனக்கு தெரிந்த சில விஷயங்கள்

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார்.  தும்பி வா என  எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)

”அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”

ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று  இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள்.  எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.

மலையாள பாடல்:

  ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.

இதோ அந்த காலத்தால் அழியாப் பாடல். கேப்டனை கான சகிக்காதவர்கள் இங்கே தரவிறக்கி கேளுங்கள்.

பாடல் வரிகள்:

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்


தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

பி.கு: ராஜாவின் இன்னொரு மாஸ்டர் பீஸைப் பற்றி நம்ம வலையுலக மாஸ்டர், பீஸ் பீஸாக பிரித்து மேய்ந்து ரசித்து எழுதியதை படிக்க இங்கே செல்லுங்கள்.

58 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on August 11, 2009 at 10:32 AM said...

இந்த டியூனை ரிங் டோனா வைக்க ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். கிடைக்கவே இல்லை :(

தாரணி பிரியா on August 11, 2009 at 10:34 AM said...

இந்த டியூன்காகவே ஸ்ரேயாவை சகிச்சுகிட்டு பார்த்தோமில்ல :)

radhika on August 11, 2009 at 10:52 AM said...

wow.. excellent song karki. i never heard this. thanks for sharing. but why dont you write about song? usually you will write more about the song, how it is, etc.. but this time you have written only background of the song. we missed it karki. i enjoyed these lines

ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடிப் பார்த்தேன் என்ற கவிப்பேரரசு, அடுத்த வரியாக ராஜாவின் பாடலில் சிறந்ததை பாடிப் பார்த்தேன் என்று சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்க கூடும்தானே!

Bleachingpowder on August 11, 2009 at 10:58 AM said...

//. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும்//

உண்மை தல. மலையாளத்தில் பாலுமகேந்திர இயக்கத்தில் வெளிவந்த ஓலங்கள் படத்தில் தான் ராஜா இந்த டியுனை முதலில் பயன்படுத்தினார்.

நாஞ்சில் நாதம் on August 11, 2009 at 11:10 AM said...

:))

மாசற்ற கொடி on August 11, 2009 at 11:12 AM said...

மற்ற பாடல் விமர்சனங்களை போல் இதுவும் சூப்பர் இடுகை.

இந்த மாதிரி பல பாடல்கள் - "Gems of Maestro - but not superhits ".

Mutual advertisement and twin posts - Nice idea.

அன்ப்டுஅன்
மாசற்ற கொடி

ஸ்ரீமதி on August 11, 2009 at 11:13 AM said...

Naan kettadhe illaye.. :(((

நர்சிம் on August 11, 2009 at 11:15 AM said...

பரிசல் பதிவ பார்த்தீங்களா? இப்பிடியே கூட்டு சேர்ந்து சுத்துனா என்னத்தச் சொல்ல?

சுசி on August 11, 2009 at 11:37 AM said...

அருமையான பதிவு கார்க்கி. என்னோட சாங் கலெக்ஸ்ஷன்ல இது இருக்கு. படம் பாக்கலை. ஆனா காப்டன் இதில நடிச்சிருப்பார்னு சத்தியமா எதிர்பார்க்கலை.

அனுஜன்யா on August 11, 2009 at 12:01 PM said...

கார்க்கி,

இதே பாட்டின் மெட்டில் 'நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே, தீ கூட குளிர் காயுதே' என்கிற மாதிரி ஒரு பாடலும் இருக்கு. நிழல்கள் படம் (படத்தில் வராது) என்று ஞாபகம். ராஜாவுக்கு மிகப் பிடித்த டியூன் என்பது இத்தனை முறை வெவ்வேறு வடிவங்களில், மொழிகளில் வந்ததில் தெரிகிறது.

அனுஜன்யா

கார்க்கி on August 11, 2009 at 12:03 PM said...

தா,பி, கூடிய சீகிரம், நல்ல குவாலிட்டில இதை ரிங்க்டோனாக்கி கொடுக்கிறேன். ஆனாலும் ஸ்ரேயாவ சகிச்சிக்கிட்டு என்பதெல்லாம் ஓவரு. :)

நன்றி ராதிகா. இந்த பாட்டு கேட்டு அனுபவிங்க. சில பேருக்கு இது புதுசு என்பதால் பாட்டை பத்தி அதிகம் சொல்லவில்லை. உங்க நுணுக்கமான பார்வைக்கு நன்றி :))

ப்ளிச்சிங்க், நானேதான் அது முதலில் பாட்டா மலையாளத்தில் வந்துச்சுன்னு சொல்லி இருக்கேனே. ஆனா மூலம் மூன்றாம் பிறை தான்

நன்றி நாதம்

நன்றி மாசற்ற கொடி

கேட்டுட்டு சொல்லு ஸ்ரீ

சகா, நான் யாருடனும் கூட்டணி வைக்க தயார். :))

நன்றி சுசி. நிறைய பேருக்கு தெரியாது. அதே போல் நான் தேடும் செவ்வந்தி பீ பாடலில் கார்த்திக் வருவார். பாட்ட பார்த்தா கேட்க தோணவே தோணாது :))

பரிசல்காரன் on August 11, 2009 at 12:05 PM said...

What a Co-incidence!

பரிசல்காரன் on August 11, 2009 at 12:06 PM said...

பார்க்கச் சகிக்காத, கேட்கச் சலிக்காத பாடலிது!

பரிசல்காரன் on August 11, 2009 at 12:06 PM said...

அந்த LIVE CONCERTல் வயலினால் விளையாடியிருப்பாரே.. அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே போய்ச் சேர்ந்துவிடத் தோன்றும்!

பாசகி on August 11, 2009 at 12:07 PM said...

அருமை-ஜி ரசித்தேன்...

கார்க்கி on August 11, 2009 at 12:10 PM said...

//இதே பாட்டின் மெட்டில் 'நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே, தீ கூட குளிர் காயுதே' என்கிற மாதிரி ஒரு பாடலும் இருக்கு. நிழல்கள் படம் (படத்தில் வராது) என்று ஞாபகம். ராஜாவுக்கு மிகப் பிடித்த டியூன் என்பது இத்தனை முறை வெவ்வேறு வடிவங்களில், மொழிகளில் வந்ததில் தெரிகிறது//

அது நிழல்கள் இல்ல தல. கண்ணே கலைமானே என்ற படம். நிரீக்‌ஷனா என்ற தெலுங்கு ப்டத்தில் இந்த மெட்டை பயன்படுத்தினார் ராஜா. பின் அந்த படம் தமிழில் கண்னே கலைமானே என்று மொழிமாற்றம் செய்யப்பட்ட்து. அந்த பாடலும் தமிழாக்கப்பட்டது. ஆட்டோ ராஜா வெளிவந்த போது இந்தப் பாடல் அதிகம் ஹிட்டாகவில்லை. எனவே இன்னொரு முறை வந்தால் தப்பிலை என நினைத்து இருப்பார்கள். அந்த பாடலை எழுதியவர் அறிவுமதி. இதோ அந்தப் பாடல்

நீர் வீழ்ச்சி தீமூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்கின்றதே

(நீர் வீழ்ச்சி)

தெம்மாங்கு மழை வந்து பெய்யுது
தேன் சிட்டு நனைகின்றது
கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது
மீன் கொத்தி மிரள்கின்றது
தண்ணீரின் சங்கீத கொலுசுகள்
மலை வாழை கனவோடு அணிய
இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட
முடி நெளிகள் பொன்சூடி மகிழ
இமையாலே... இதழாலே...
விரலாலே.... இரவாலே...

அங்கள் சிருங்கார ஓடைகள்
அணைமீற விடை சொல்லும் ஆடைகள்

(நீர் வீழ்ச்சி)

பொன்னந்தி இருள் வாரி முடியுது
மோகப் பூ குவிகின்றது
கண்ணாங்கே இமை மீறி நுழையுது
காதல் பூ மலர்கின்றது
துரும்பொன்று இமை சேரும் பொழுதினில்
முள் என்று துடிக்கின்ற மனசு
மழை வில்லில் கயிறாடும் நினைவினில்
மனம் துள்ள உயிராகும் உறவு
பொன் ஊஞ்சல்... பூ ஊஞ்சல்...
அம்மம்மா இது காதல்
அணுவெங்கும் கார்காலம் வளரது
பலநூறு தீபங்கள் மலருது....

**********

ஆமாம் பரிசல்.. எப்புடி????


************
நன்றி பாசகி

தராசு on August 11, 2009 at 12:13 PM said...

தல,

பாட்டு சூப்பர்

பாசகி on August 11, 2009 at 12:36 PM said...

இதையும் பாருங்களேன்

http://www.envazhi.com/?p=9701

http://www.envazhi.com/?p=9490

தமிழ்ப்பறவை on August 11, 2009 at 12:58 PM said...

சகா அருமையான பதிவு...
உங்கள் பதிவுகள் எனது பிளாக்கரில் அப்டேட் ஆக மாட்டேங்குது. பரிசலின் பதிவினைப் பார்த்து விட்டு இங்கு வந்தேன்...
நானும் கடந்த வாரம்,’நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே’ பாடல் வரிகளைப் பதிய நினைத்தேன். பின்னூட்டத்தில் நீங்கள் முந்தி விட்டீர்கள்...
அதுவும் எனக்கு மிகப் பிடித்தது...
//கண் மீன்கள் கரைவந்து கொஞ்சுது
மீன் கொத்தி மிரள்கின்றது//
//இளங்காலை ஒளித்தூறல் கசிந்திட
முடி நெளிகள் பொன்சூடி மகிழ//
என்ன வரிகள்...?! சான்ஸே இல்லை...
//அங்கள் சிருங்கார ஓடைகள்
அணைமீற விடை சொல்லும் ஆடைகள்//
அங்கங்கள் என வரும்...
மலையாளத்தில் குடும்பப்பாசப்பிண்ணனி,தமிழில்(ஆட்டோ ராஜா) காதல்,தெலுங்கு,தமிழில்(கண்ணே கலைமானே) பெண்ணின் ஏக்கம் என ஒவ்வொரு வகையிலும் கலக்கி இருப்பார் ராஜா...
ஜானகியின் வாய் வாத்திய இசை இன்னும் சுகம்...
ஹிந்தியிலும் இப்பாடல் ராஜா இசையில் உண்டு என நினைக்கிறேன்...அதுவும் பாலுமகேந்திரா படம்தான். பெயர்,’அவுர் ஏக் பிரேக் கஹானி’-ரமேஷ் அரவிந்த்,ரேவதி,ஹீரா ...சுற்றுலா செல்லும் உற்சாக மூடில் இருக்கும்..
யூ ட்யூபில் இப்பாடல் பார்த்திருக்கிறேன்...
லிங்க்: http://www.youtube.com/watch?v=oJL9Z17P4YA
யூட்யூபில் இப்பாடல் இருக்குமிடத்தில் related videosஇல் முதல் பாடலையும் கேட்டுப் பாருங்கள்..
படம் பற்றி விக்கியில்:http://en.wikipedia.org/wiki/Aur_Ek_Prem_Kahani

தமிழ்ப்பறவை on August 11, 2009 at 1:00 PM said...

//. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்க//
என்ன கொடுமை இது...அது ஹலோ எஃப்.எம் ஆக இருக்காது. ஹாலோ எஃப்.எம் ஆக இருக்கும்...
//47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.//
அழகு.. ஏற்கெனவே எனது ஆயுள் ராஜ ராகங்களால் நீண்டு கொண்டுதானிருக்கிறது...

தமிழ்ப்பறவை on August 11, 2009 at 1:02 PM said...

இது ஏதோ ‘காபி’ ராகம்னு கேள்விப்பட்டிருக்கிறேன்...ராகம்தான்..
ரவிஷங்கர் சார் சரியாச் சொல்லிருவார்...
தம்..தம்...தம்...நெஞ்சைத் துவைக்கிற ராகமிது...

Karthik on August 11, 2009 at 1:36 PM said...

wow, superb post karki!

can't hear here. will do later. :))

மண்குதிரை on August 11, 2009 at 2:02 PM said...

naanun iwthap paadalai scv yil rasiththirukkiReen.

pakirvukku nanri nanba

Raghavendran D on August 11, 2009 at 2:33 PM said...

அருமை.. :-))

படித்தேன் ரசித்தேன்.. :-))

முதலமைச்சர் 2011 on August 11, 2009 at 2:41 PM said...

கலக்கல் பாட்டு சகா. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க. இந்த விஷயமெல்லாம் முன்பே தெரியுமா இல்லை கூகிளில் தேடி எடுத்தீர்களா?

ராதிகா சொன்னது போல் இந்தப் பாட்ட பத்தி உங்க ஃபீலிங்க்ஸ ஏன் எழுதாம விட்டிங்க? அனல் மேலே பனித்துளி என்ற பாட்டுக்கு உங்க வரிகள் இன்னும் ஞாபகம் இருக்கு.

புட்டிக்கதைகளை விடவும் நான் ரசித்த பாடல்கள் என்ற லேபிளைத்தான் நான் அதிகம் வாசிக்கிறேன். You made my day karki.

கோபிநாத் on August 11, 2009 at 3:13 PM said...

கலக்கிட்ட சகா..எம்புட்டு சந்தோஷமாக இருக்கு தெரியுமா!! ;))

இந்த வீடியோகள் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு கணக்கே இல்ல.

அந்த live concertல் ஜெயா டிவி நடத்தினாங்க..ஆனா அந்த முழு நிகழ்ச்சியை CD & DVD கேட்டு பார்த்தும் அவுங்க அதுக்கு அனுமதி கொடுக்கல. அது மட்டும் வெளிவந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்.

கோபிநாத் on August 11, 2009 at 3:22 PM said...

\\பரிசல்காரன் said...
அந்த LIVE CONCERTல் வயலினால் விளையாடியிருப்பாரே.. அதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே போய்ச் சேர்ந்துவிடத் தோன்றும்!
\\\

ரீப்பிட்டே ;))

Prosaic on August 11, 2009 at 3:28 PM said...

Add this one too..

http://www.youtube.com/watch?v=faRZISdBpJc&feature=related

தமிழ்ப்பறவை on August 11, 2009 at 3:31 PM said...

நன்றி ப்ரொசாய்க்..
ஏற்கெனவே கேட்டிருந்தாலும் நினைவூட்டியதற்கு நன்றிகள்...

விக்னேஷ்வரி on August 11, 2009 at 3:41 PM said...

Nice post.

எம்.எம்.அப்துல்லா on August 11, 2009 at 4:37 PM said...

அடடா...எத்தனை அழகான கம்போசிங்.இந்தோளம் இராகத்தில் மெட்டைத் துவங்கி எங்கெங்கோ போகிறார்.இராஜா இராஜாதான்.

//அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள் //


இருவரும் இல்லை. வைரமுத்து எழுதியது.

டம்பி மேவீ on August 11, 2009 at 4:43 PM said...

sir...... innum niraiya solli irukkalame

கார்க்கி on August 11, 2009 at 4:54 PM said...

நன்றி தராசு, பாசகி

பறவை, அது இந்தோளம் ராகம் அறிவுமதியின் அந்த வரிகள் யாருக்குத்தான் பிடிக்காது? நீண்ட கருத்துக்கு நன்றி சகா

நன்றி கார்த்திக். மறக்காம கேளு.

நன்றி மண்குதிரை, ராக்வேந்திரன்

முதலமைச்சரே, சில விஷயங்கள் கூகிளில் தேடியதுதான், சரிபார்த்துக் கொள்ள. ரொம்ப நன்றி. இந்த பதிவுகள் எனக்கும் மிகவும் விருப்பமானவை. ஆதரவுக்கு நன்றி

எனக்கும் மகிழ்ச்சி கோபி. நானும் பல தடவை பார்த்தேன். வெளியிட்டால் அவரக்ளுக்கும் காசுதானே? ஏன் பண்ண மாட்டறாங்க?

நன்றி prosaic

நன்றி விக்கி

வைரமுத்துவா? அண்ணா நிஜமாவா? தேடிய எங்கேயும் சொல்லப் படவில்லை. அரிதான தகவலுக்கு நன்றி

மேவீ, உண்மை தாம்ப்பா.. எனக்கு இவளோதான் தெரியும்

Kalyani Suresh on August 11, 2009 at 4:56 PM said...

கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
எனக்கு மிக பிடித்த வரிகள்.

கைப்புள்ள on August 11, 2009 at 5:22 PM said...

//ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. //

ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைத்த படம் ஆட்டோ ராஜா இல்லீங்க. அந்த படத்தோட பேரு "கண்ணில் தெரியும் கதைகள்". அதுல ராஜா இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாட்டு ஒன்னு இருக்கு.

"நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே..இளமை இளமை...இனிமை...இது புதுமை..."

ஒரு வேளை 'சங்கத்தில் பாடாத கவிதை' யும் 'நானொரு பொன்னோவியம் கண்டேன்'உம் கேக்க ஒரே மாதிரி இருக்கோ என்னவோ? அதனால தான் இந்த குழப்பம் வந்துருக்கலாம். ஆனா சங்கத்தில் பாடாத கவிதை ராஜா இசையில் வெளிவந்த பாட்டு தான்.

கண்ணில் தெரியும் கதைகள்ல அஞ்சு இசையமைப்பாளர்கள்ல ஒருத்தரான சங்கர் கணேஷ் இசையில் வந்த பாடல் "நான் ஒன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே?"

ஆட்டோ ராஜா பாட்டை பத்தி கானா பிரபாவும் ஒரு பதிவு போட்டிருக்காரு.

http://videospathy.blogspot.com/2007/10/blog-post_31.html

http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_19.html

அப்பாவி முரு on August 11, 2009 at 5:39 PM said...

பாட்டுக்கு இடையில எங்க தலை தலைய ஆட்டி, ஆட்டி எதோ செஞ்சாரே,

சூப்பர்ல

ஆதிமூலகிருஷ்ணன் on August 11, 2009 at 8:10 PM said...

கார்க்கி on August 11, 2009 12:03 PM said...
தா,பி, கூடிய சீகிரம், நல்ல குவாலிட்டில இதை ரிங்க்டோனாக்கி கொடுக்கிறேன். ஆனாலும் ஸ்ரேயாவ சகிச்சிக்கிட்டு என்பதெல்லாம் ஓவரு. :)//

என்ன விளாடுறியா? தாரணி கொஞ்சம் கம்மியா சொல்லியிருக்காங்க.. எனக்கு ஏதாவ்து வாயில வந்துரும்.!

ஆதிமூலகிருஷ்ணன் on August 11, 2009 at 8:11 PM said...

பரிசல்காரன் said...
What a Co-incidence!//

எவனாவது காதுல பூ வெச்சுக்கிட்டு தங்கமணி பதிவுகள் எழுதிகிட்டிருப்பான். அவன்கிட்ட சொல்லுங்க..

நாடோடி இலக்கியன் on August 11, 2009 at 8:29 PM said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் on August 11, 2009 at 8:31 PM said...

//பார்க்கச் சகிக்காத, கேட்கச் சலிக்காத பாடலிது!//

இதைவிட நச் விமர்சனம் இந்த பாட்டிற்கு இருக்க முடியாது.இந்த பாடலை மியூசிக் சேனல்களில் ஒளிபரப்பும் போது பாட்டை மட்டுமே கேட்பேன்,முகத்தை தவறியும் டீவி பக்கம் திருப்புவதில்லை.

:)

ஆயில்யன் on August 11, 2009 at 8:50 PM said...

அருமையானதொரு பாடல் மலையாளத்தில் ஹிட்டான அளவுக்கு தமிழில் ஆகாவிட்டாலும் இளையராஜாவின் இசை பெரிதும் பேசப்படும் பாடல்

சூப்பர்!!!

//தாரணி பிரியா on August 11, 2009 10:34 AM said...

இந்த டியூன்காகவே ஸ்ரேயாவை சகிச்சுகிட்டு பார்த்தோமில்ல :)
///

:(((((((((((((((((((((((

சூர்யா on August 11, 2009 at 9:51 PM said...

This is "Mood Kaapi" by illayaraja. Aedho intha adiyanukku therinjadhai share pannanumnu aasai..avalvuae.
"ilayaraja mood kapi or italy concert" nnu google panni parunga. even ungalakku cool toad linku kooda kidaikkum

சூர்யா on August 11, 2009 at 9:52 PM said...

one of my friend have this as his ringtone, if you need i can send it sir.

பீர் | Peer on August 11, 2009 at 10:03 PM said...

கேட்க அருமையான பாடல்.

அதுசரி.. உங்களுக்கு இந்தப்பாட்டோட இசை பிடிச்சிருக்கா? இல்ல பாடல் வரிகளா?
பாடல் வரிகளைத்தான் விளக்கமா எழுதியிருக்கீங்க..

நிலாக்காலம் on August 11, 2009 at 11:19 PM said...

செம பாட்டு.. ட்யூன், வரிகள், பாட்டு முழுசும் வரும் ஹம்மிங்-னு எல்லாமே கலக்கல்!! அப்புறம்.. கேப்டன் முகத்தைக் கூட சகிச்சிக்கலாம், அந்த ஹீரோயின் ரியாக்‌ஷன்.. ஸ்ஸ்ஸப்பா..
ஒரு அழகான பாட்டை இப்படிப் படமாக்க எப்படித்தான் மனசு வருமோ! இதே மாதிரி நோகடிச்ச இன்னொரு பாட்டு: நீயா அழைத்தது? என் நெஞ்சில் மின்னல் அடித்தது.. (படம்: அலை ஓசை)

//
அந்த live concertல் ஜெயா டிவி நடத்தினாங்க..ஆனா அந்த முழு நிகழ்ச்சியை CD & DVD கேட்டு பார்த்தும் அவுங்க அதுக்கு அனுமதி கொடுக்கல. அது மட்டும் வெளிவந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்.//

அந்த நிகழ்ச்சி சிடி, டிவிடிக்களாக யாஹூ-வில் 'Maestromagic' குழுமத்தில் கிடைக்கும்-னு நினைக்கிறேன். நான் ரெகார்ட் செய்து,5 விசிடிக்களாகச் செய்து வைத்திருக்கிறேன்.

Anonymous said...

நல்ல பாடல் கார்க்கி. இளையராஜாவின் இது போல சில பாடல்கள் கவனம் பெறாமலே போய் விட்டது.

பாடல் வரிகளில் ஒரு சிறு திருத்தம்.

கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ?

காலென்றே செவாழை இனைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ?

ஓளங்கள் படத்தில் வந்த பாட்டிற்கு யாராவது மலையாளம் தெரிந்தவர்களிடம் அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொள். அற்புதமான பாடல் அது.

கும்க்கி on August 12, 2009 at 12:58 AM said...

ராசா நீ ரொம்பவே தேரிட்டபா....

vettipaiyan on August 12, 2009 at 12:58 AM said...

வணக்கம் கார்க்கி
இந்த பாட்டில் விஜய் நடிச்ச மாதிரி இல்லையே ?........

Super நினைவுட்டல்,

ராஜா பாணியில் சொல்வதனால்
“ நன்றி சொல்ல வார்த்தை இல்லை

vettipaiyan on August 12, 2009 at 1:10 AM said...

வணக்கம் கார்க்கி

லீங்கில் திரும்பவும் பார்த்தேன், மீண்டும்
நன்றி சொல்ல வார்த்தை இல்லை

Sampath on August 12, 2009 at 5:48 AM said...

Thalai ... check this youtube playlist ...

http://www.youtube.com/view_play_list?p=62A6C7841581D6D5

கார்க்கி on August 12, 2009 at 11:03 AM said...

நன்றி கல்யாணி

//ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து இசையமைத்த படம் ஆட்டோ ராஜா இல்லீங்க//

கைப்புள்ள, நான் அப்படி சொல்லவே இல்லைங்க. ஆனா குழப்பம் நிலவுவது உண்மை. நன்றி

முரு, நீங்க நிஜமா அப்பாவிதாம்ப்பா

@ஆதி,

ஸ்ரேயா புடிக்காது உங்களுக்கு. ஆனா ஜெயம் ரவி வாய்ஸ் சூப்பர்ன்னு சொல்லுவீங்க..

@இலக்கியன்,

உண்மைதாங்க. :))

@ஆயில்யன்,

எங்க தலைமுறை பசஙக்ளுக்கே இந்த பாட்டு தெரியல சகா :((

@சூர்யா,

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். ஆனால் அப்துல்லா அண்ணன் இந்தோளம் சொன்னாரு. அவரு பிண்ணனி பாடகரு இல்லையா ? :))) நன்றி. முடிஞ்சா அனுப்புங்க சார்.

@பீர்,

இசைதான் சகா. ஆனா அத பத்தி என்ன என்ன எழுத? கேட்டு பார்க்கலாம். :))

தகவலுக்கு நன்றி நிலாக்காலம்.

நன்றி அண்ணாச்சி. கேட்டுக் கொள்கிறேன்.

என்ன கும்க்கியண்ணா? :))

//vettipaiyan said...
வணக்கம் கார்க்கி
இந்த பாட்டில் விஜய் நடிச்ச மாதிரி இல்லையே ?..//

கிகிகி. நீங்க அறிவிகொழுந்துங்க

ரொம்ப நன்றி சம்பத். எல்லாமே அருமையான பாடல்கள்.

ஆயில்யன் on August 12, 2009 at 11:37 AM said...

//@ஆயில்யன்,

எங்க தலைமுறை பசஙக்ளுக்கே இந்த பாட்டு தெரியல சகா :((///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்ப நீங்க 70களின் தொடக்கமா? நான் என்னமோ என்ன்னைய மாதிரி யூத்துன்னுல்ல நினைச்சேன் :(

கார்க்கி on August 12, 2009 at 12:12 PM said...

ரைட்டு. சமாதானம்.. 80களில் பிறந்த நம் தலைமுறைக்கே இது தெரியலங்க.. ஓக்கேவா?

ரமேஷ் விஜய் on August 12, 2009 at 12:36 PM said...

supper

புன்னகை on August 12, 2009 at 1:13 PM said...

Good effort! :-)

எம்.எம்.அப்துல்லா on August 12, 2009 at 1:16 PM said...

//@சூர்யா,

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். ஆனால் அப்துல்லா அண்ணன் இந்தோளம் சொன்னாரு. அவரு பிண்ணனி பாடகரு இல்லையா ? :))) நன்றி. முடிஞ்சா அனுப்புங்க சார்.

//


தம்பி கார்க்கி அந்த பாடலில் காபியும் உண்டு. ஆனால் அதன் பல்லவி துவங்குவது இந்தோளத்தில்தான். அதன் இசைக் கோர்வையைப்பற்றி முழுதாய்ச் சொல்ல எனக்கு ஒரு தனி பதிவு வேண்டும்.அதனால்தான் ’’இந்தோளம் இராகத்தில் மெட்டைத் துவங்கி எங்கெங்கோ போகிறார் இராஜா ” என சுருக்கமாகச் சொன்னேன். என் போன்ற சிறுவனின் வார்த்தையில் சந்தேகம் இருப்பின் யாரேனும் வித்வானிடம் கேட்டுப்பார்.

கார்க்கி on August 12, 2009 at 1:46 PM said...

நன்றி ரமேஷ் விஜய்

நன்றி புன்னகை.

அண்ணா,

அப்ப அந்த பதிவ சீக்கிரம் போடுங்க.. நீங்க தெரிஞ்சாதான் சொலுவிங்கன்னு எனக்கு தெரியும். அதனால் தான் தைரியமா அது இந்தோளம்ன்னு போட்டேன்.. சினிமா பாடல்கள் எல்லாமே ராகஙக்ளின் கலவைதான். சொற்ப பாடல்களே முழுவதும் ஒரு ராகத்தில் இருக்கும்.. நீங்க சிறுவன் தான். ஆனா எங்களுக்கு தெரிஞ்ச வித்வான் நீங்கதானே :))

சங்கணேசன் on August 13, 2009 at 3:09 PM said...

பரிசல் இந்த பாட்டைப் பற்றி சொல்லாமல் விட்டுட்டாரே அப்படின்னு நினச்சிட்டே லிங்க்ல வந்தால்..அடடா...

“இறைவனை இசையால் தொட்டவர் இளையராஜா”

சரிதானே நண்பா?

 

all rights reserved to www.karkibava.com