Aug 5, 2009

நீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சிநீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சி

இன்னமும் என்னிடம்

தீக்குச்சியாய்

______________________________________

இரண்டு நாட்களாய் ஜலதோஷம்

அதிகம் அழுதுவிட்டாயோ?

______________________________________

தோற்றால் தோள்தருவாய்

உன்னையே தோற்றுவிட்டேனே

என்ன தருவாய் நீ எனக்கு

______________________________________

கொஞ்சம் பெருத்துவிட்டாயே!!!!

வளர்பிறை காலமோ?

______________________________________

நேற்று வந்த சாரல் மழை

உன் ரகசியங்களை வெளிக்கொணர

முதல் முறையாய்

தமிழகத்தில் வென்னீர் மழை

என்றது தலைப்பு செய்தி.

______________________________________

உன்

நினைவு நச்சரிக்கும்போதெல்லாம்

கவிதை

எழுதுகிறேன் நான்.

என்ன செய்கிறாய்?

நீ

______________________________________

எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை.

______________________________________

எந்த குபேரபுரிக்கும்

எடுத்து செல்லும்

உத்தரவாதம் இல்லாத போது

ஏன் மேற்கொள்கிறேன்

இந்த சுடுமணல் பாதையில்

வெறுங்கால் பயணத்தை

40 கருத்துக்குத்து:

radhika on August 5, 2009 at 10:42 AM said...

great karki. Am lucky today. i like this very much

நீ தின்னு கொடுத்த ஐஸ்குச்சி இன்னமும் என்னிடம் தீக்குச்சியாய்

கொஞ்சம் பெருத்துவிட்டாயே!!!! வளர்பிறை காலமோ?

எனக்கென மட்டும் எப்போதும் வைத்திருக்கிறாய் நீ பிரத்யேகமாய் ஓர் புன்னகையை... நானல்லாத யார்மீதும் பிரயோகிப்பதில்லை அந்த பிரம்மாஸ்திரத்தை.

பிரியமுடன்.........வசந்த் on August 5, 2009 at 10:50 AM said...

//கொஞ்சம் பெருத்துவிட்டாயே!!!!

வளர்பிறை காலமோ?//

ரசனை

எல்லாமே நல்லாருக்குங்க.....

விக்னேஷ்வரி on August 5, 2009 at 10:54 AM said...

நல்லாருக்கு. ஆனா, அவசரமா எழுதின மாதிரி இருக்கு கார்க்கி. நேரமிருந்தா இன்னும் நேர்த்திப்படுத்துங்களேன்.

தாரணி பிரியா on August 5, 2009 at 10:56 AM said...

கடைசி ரெண்டு மட்டும்தான் நல்லா இருக்கு கார்க்கி.

தாரணி பிரியா on August 5, 2009 at 10:58 AM said...

மத்தது எல்லாம் விக்னேஷ்வரி சொன்னது போல அவசரமா எழுதினது போல இருக்கு

டக்ளஸ்... on August 5, 2009 at 11:01 AM said...

\\நேற்று வந்த சாரல் மழை
உன் ரகசியங்களை வெளிக்கொணர
முதல் முறையாய்
தமிழகத்தில் வென்னீர் மழை
என்றது தலைப்பு செய்தி.\\

Ithuthaan TOPPU...!
:)

ghost on August 5, 2009 at 11:12 AM said...

நினைவு நச்சரிக்கும்போதெல்லாம் கவிதை எழுதுகிறேன் நான். என்ன செய்கிறாய்? நீ

எந்த குபேரபுரிக்கும் எடுத்து செல்லும் உத்தரவாதம் இல்லாத போது ஏன் மேற்கொள்கிறேன் இந்த சுடுமணல் பாதையில் வெறுங்கால் பயணத்தை

ரெண்டும் நல்லா இருக்கு கார்க்கி.

விக்னேஷ்வரி on August 5, 2009 at 11:12 AM said...

உன்

நினைவு நச்சரிக்கும்போதெல்லாம்

கவிதை

எழுதுகிறேன் நான்.

என்ன செய்கிறாய்?

நீ
_________________________________

எந்த குபேரபுரிக்கும்

எடுத்து செல்லும்

உத்தரவாதம் இல்லாத போது

ஏன் மேற்கொள்கிறேன்

இந்த சுடுமணல் பாதையில்

வெறுங்கால் பயணத்தை ///இது ரெண்டும் ரொம்ப அழகு.

தராசு on August 5, 2009 at 11:38 AM said...

இதெல்லாம் நல்லதுக்கில்ல, ஆமாம், சொல்லிபுட்டேன்.

எப்ப பார்த்தாலும், காதல்ல கசிந்து உருகிக்கிட்டு, என்ன வெளயாடறீங்களா, ஏழுமலையக் காணோம், காக்டெயில் எழுதறதில்ல, ரொம்ப ஒழுங்கீனம் கார்க்கி.

சரி, சரி, மேட்டருக்கு வருவோம்,

//எந்த குபேரபுரிக்கும் எடுத்து செல்லும் உத்தரவாதம் இல்லாத போது ஏன் மேற்கொள்கிறேன் இந்த சுடுமணல் பாதையில் வெறுங்கால் பயணத்தை//

எங்க போறம்னே தெரியாம போறதுதான்யா காதல். வேணும்னா எங்க யூத் சங்க தலைவர் கிட்ட கேளுங்க.

Anonymous said...

//எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை.//

இது நல்லாருக்கு :)

Anonymous said...

//radhika on August 5, 2009 10:42 AM said...

great karki. Am lucky today. i like this very much//

கவிதையெல்லாம் இருக்கட்டும். யாரு இவங்க ராதிகா, உங்க புது நண்பியா

கார்க்கி on August 5, 2009 at 12:03 PM said...

நன்றி ராதிகா. :))

நன்றி வசந்த்

விக்கி, முயற்சி செய்கிறேன். நன்றி

தா.பி. நன்றி. உண்மைதான்

டம்ப்ரீ. தேங்க்ஸ்ப்பா. நீ யூத்துன்னு ஏத்துக்கறேன்

நன்றி கோஸ்ட். உங்கள போன பதிவுல ஒரு கேள்வி கேட்டிருந்தேன். பார்த்திஙக்ளா?

தராசண்ணே, போன செவ்வாய்தான் காதல் போஸ்ட். ஒரு வாரம் ஆயிடுச்சு. ஏழு.. சரியா வரல. எனக்கே திருப்தியா வர மாட்டேங்குது. ஏன்னு தெரியல சகா..

நன்றி அம்மிணி. ராதிகாவும் வலையுலக நண்பர்களில் ஒருவர் தான்..

Anonymous said...

ஐய்யயோ , கார்க்கி நல்லாத்தானே போயிட்டு இருந்தது. பொண்ணு பாத்தாச்சா? எப்ப கல்யாணம்? அதுவரை இந்த இம்சையை நாங்க சகிக்கணுமா? அட்ரஸ் தந்தா நேர்ல போய் குடுத்தறேன். முடியலே..ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்...

நர்சிம் on August 5, 2009 at 12:10 PM said...

13ல 9.. ரைட்டு.. காதல் கவிதைகள்ன்னா அப்படித்தான்.

ghost on August 5, 2009 at 12:14 PM said...

நன்றி கோஸ்ட். உங்கள போன பதிவுல ஒரு கேள்வி கேட்டிருந்தேன். பார்த்திஙக்ளா?

பார்த்தேன், ரசித்தேன்

நாஞ்சில் நாதம் on August 5, 2009 at 12:23 PM said...

///தராசண்ணே, போன செவ்வாய்தான் காதல் போஸ்ட். ஒரு வாரம் ஆயிடுச்சு. ஏழு.. சரியா வரல. எனக்கே திருப்தியா வர மாட்டேங்குது. ஏன்னு தெரியல சகா ////


மாங்கு மாங்குன்னு காதல் கவிதை எழுதினா ஏழு எப்படி எழுத முடியும்

அனுஜன்யா on August 5, 2009 at 12:34 PM said...

ரைட்டு. நடத்து.

அனுஜன்யா

Aruna on August 5, 2009 at 12:40 PM said...

//ஏன் மேற்கொள்கிறேன்

இந்த சுடுமணல் பாதையில்

வெறுங்கால் பயணத்தை//
எங்கியோ போயிட்டே கார்க்கி!

Priya on August 5, 2009 at 12:45 PM said...

// எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை //

Ithu Thabu Shankar Kavithaiyen sayal mathiri irukku

sabari on August 5, 2009 at 12:52 PM said...

All r nice

பரிசல்காரன் on August 5, 2009 at 1:10 PM said...

கடைசி கவிதை அருமை சகா.

எதற்காக எழுதினாலும் எப்போது எழுதினாலும் என்றும் இனிப்பது காதல் கவிதைகள் மட்டும்தான்!

(இதையே மடக்கி மடக்கி எழுதினா சூப்பர் கவிதை வருதே...)

கலையரசன் on August 5, 2009 at 1:13 PM said...

ம்.

(பிரபல பதிவர் ஆகிடோமுல்ல..)

Raghavendran D on August 5, 2009 at 1:15 PM said...

நல்லாயிருக்கு கார்க்கி.. :-)))

pappu on August 5, 2009 at 2:17 PM said...

அய்யோ கார்க்கி, யாராவது சூன்யம் வச்சிட்டாங்களா? இல்ல லவ் கிவ் பண்றீங்களா?
ஏன் பாவா கொல்லுறீங்க?

SK on August 5, 2009 at 2:41 PM said...

ம்ம்ம்ம்

மீண்டும் அவசர பதிவு.. :(

Karthik on August 5, 2009 at 2:59 PM said...

கவிதை நல்லா இருக்கு. ஆனா கீழே என்னவோ எழுதியிருக்கீங்களே என்ன அது? ;) (இது உங்களோடதுதான்)

Karthik on August 5, 2009 at 2:59 PM said...

//உன் நினைவு நச்சரிக்கும்போதெல்லாம் கவிதை எழுதுகிறேன் நான். என்ன செய்கிறாய்? நீ

this one is superb! :)

கார்க்கி on August 5, 2009 at 3:07 PM said...

மயில், இப்பவும் நல்லாத்தானே போது.. (அப்படின்னு நினைக்கிறேன்)

சகா, 13ல் 9 ந்னா தராசு மேட்டரா? ம்ம்

நன்றி பிசாசு :))

நாதம் ரொம்ப நன்றி. ஏழுவுக்கு காதல் வந்து, தண்ணியடிச்சிட்டு பேசுனா? லீடு கிடைச்சுடுச்சு.. டேங்க்ஸுப்பா

நன்றி கவிஞரே

நன்றி அருணா மேடம். (அப்புறமா வந்து, கீழ்ப்பாக்கம் போயிட்டேன்னு சொன்னதா வாரிடாதிங்க)

பிரியா, இது எல்லா காதல் பதிவிலும் வர குற்றச்சாட்டுதான். என்ன சொல்றதுன்னு தெரியல. நன்றி

நன்றி சபரி

பரிசல், இருங்க அனுஜன்யாவ கூப்பிடறேன்.(நர்சிம், நீங்க லக்கிய கொஞ்சம் கூப்பிடுங்க)

கலைக்கு நன்றி கிடையாது. ஏன்னா நாஙக்ளும் மூத்த பதிவர் ஆகிட்டோமில்ல

நன்றி ராக்வேந்திரா

ரெண்டும் ஒன்னுதானே பப்பு.. :))

கார்த்திக், ஞாபகம் இருக்கு :))))

வால்பையன் on August 5, 2009 at 3:55 PM said...

//தோற்றால் தோள்தருவாய்
உன்னையே தோற்றுவிட்டேனே
என்ன தருவாய் நீ எனக்கு//


வலிகள் நிறைந்த வாக்கியங்கள்!

Joe on August 5, 2009 at 4:12 PM said...

//முன்னாள் காதலிக்கு இன்னாளும் அவளைக்காதலிக்கும் ஒருவனின் புலம்பல்கள்...

என் தோல்விகளைச்
சொல்லி அழும் போதெல்லாம்-சாய
தோள் கொடுப்பாயே..இன்று
உன்னையே தோற்றுவிட்டேனே..
என்ன தருவாய் நீ எனக்கு?

நீ
தின்று கொடுத்த
ஐஸ் குச்சிகள்
இன்றும் உள்ளன..ஆனால்
தீக்குச்சிகளாய்..!//

Coincidence! I've read these lines in narsim's blog.. ;-)

The last 2 are pretty super
Thanks,
Joe

புன்னகை on August 5, 2009 at 5:01 PM said...

//நேற்று வந்த சாரல் மழை
உன் ரகசியங்களை வெளிக்கொணர
முதல் முறையாய்
தமிழகத்தில் வென்னீர் மழை
என்றது தலைப்பு செய்தி.//
அண்ணனுக்கு லவ் மூட் ஆரம்பிச்சுடுச்சு போல? ;-)

Truth on August 5, 2009 at 5:51 PM said...

கார்க்கி,
எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். எழுதவும் தெரியாது, மத்தவங்க எழுதினாலும் புரியாது. எதுக்கு பிரச்சனைன்னு படிக்கிறதேயில்லை. ஆனா ரீசெண்டா நீங்க எழுதினது எல்லாம் புரிந்து தொலைத்துவிடுகிறது. :-) நல்லா எழுதுறீங்க கார்க்கி.
சில மாதங்களாக உங்களின் குவாலிட்டி சூப்பர். எக்செலண்ட்.

அத்திரி on August 5, 2009 at 8:17 PM said...

என்னமோ நடக்குது ஹைதையில்

T.V.Radhakrishnan on August 5, 2009 at 8:52 PM said...

காதல் கவி கார்க்கி வாழ்க

ஆதிமூலகிருஷ்ணன் on August 5, 2009 at 10:39 PM said...

ஒன்றிரண்டு நல்லாயிருந்தது.

(சரி சரி இனி நான் கவிதை எழுதலை.. பேசித்தீத்துக்குவோம்)

nila on August 6, 2009 at 12:11 AM said...

//எந்த குபேரபுரிக்கும் எடுத்து செல்லும் உத்தரவாதம் இல்லாத போது ஏன் மேற்கொள்கிறேன் இந்த சுடுமணல் பாதையில் வெறுங்கால் பயணத்தை//

அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்

கார்க்கி on August 6, 2009 at 10:09 AM said...

நன்றி வால்..

ஜோ, சர்ப்ரைஸ்..

புன்னகை, அது பொறந்தப்பவே ஸ்டார்ட் ஆனதா வரலாறு சொல்லுது :))

ரொம்ப ந்ன்றி ட்ரூத். சில மாதம் முன்பு நீங்க என் மூக்குல குத்தியது ஞாபகமிருக்கு. இப்போ இப்படி சொல்ல வச்ச்தில் சந்தோஷமா இருக்கு. உங்கள் உண்மையான விமர்சனத்திற்கு நன்றி.

அத்திரி ஹைதைல மட்டுமா சகா?

நன்றி டீ.வி.ஆர்

ஆதி, அப்போ மூனு, நாலு எல்லாம்??

நன்றி நிலா..

யோ (Yoga) on August 6, 2009 at 10:14 AM said...

எதாவது படத்துக்கு பாட்டு எழுத முயற்சி மாதிரி தெரியுது, இளைய தளபதி ஐம்பதாவது படத்துக்கு பாட்டு எழுதலாமே?

Suresh Kumar on August 6, 2009 at 10:31 AM said...

இரண்டு நாட்களாய் ஜலதோஷம்

அதிகம் அழுதுவிட்டாயோ?/////////

இப்படியெல்லாம் ஜலதோஷம் வருமா

மங்களூர் சிவா on August 7, 2009 at 9:47 PM said...

//கொஞ்சம் பெருத்துவிட்டாயே!!!!

வளர்பிறை காலமோ?//

கொஞ்சம் தீனி ஜாஸ்தியோ??? இப்படில்ல வரும்????
:)))

 

all rights reserved to www.karkibava.com