Aug 4, 2009

டீ.ஆர். மகாலிங்கம் - இசை மாமேதை   இன்னும் நூறு வருடம் கழித்தாலும் சிலப் பாடல்கள் பிரபலமாகவே இருக்கும். அதில் முக்கியமான பாடல் செந்தமிழ் தேன்மொழியாள். பாடியதோடு, அந்தப் பாடலில் தோன்றிய இசைமேதை டீ.ஆர். மகாலிங்கம் பற்றிய பதிவுதான் இது.

  1926ஆம் ஆண்டு பிறந்த மகாலிங்கம்,  ஏழு வயதிலே தன் முதல் அரங்கேற்றம் செய்தார் மாலி.     புல்லாங்குழலில் மட்டுமல்ல, ஒரு பாடகராகவும் TRM தேர்ச்சி பெற்றவர். அந்தக் காலத்தில் ஒலிப்பெருக்கிகள் இல்லாததால் பாடுபவர்கள் சற்று அதிக சத்தத்துடன் பாட வேண்டும். நம்புங்கள், TRMன் குரல் ஒரு கி.மீ. தூரம் வரை கேட்கும். இன்று வரை ஹை பிட்ச்சில் சந்ததி போடும் பாடகர் இவரைத் தவிர யாருமில்லை. மாலதி மேடைகளில் அதை முயற்சி செய்கிறார். ஒரு சில பாடல்களில் எஸ்.பி.பி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் TRM அளவிற்கு பெர்ஃபெக்‌ஷன் யாருக்குமில்லை. சூஃபி பாடகர் கைலாஷ் கேர் கொஞ்சம் அருகில் வருகிறார்.

சினிமா பிரவேசம்:

      நந்தகுமார் என்ற படத்தில் கிருஷ்ணர் வேடமிட்டு அறிமுகமானார் TRM. பாடல்கள் ஹிட்டானாலும் படம் தோல்வி. அதன் பின் TRMன் மார்க்கெட்டை உயர்த்திய படம் ஸ்ரீவள்ளி. அந்தக் கால படங்களில் நாம் கேள்விப்பட்டது போலவே 30 ,40 பாடல்கள் இருக்கும். இவர் நடித்து வெற்றி பெற்ற எல்லா படங்களின் பாடல்களும் ஹிட் ரகமே. இந்தியா சுதந்திரமடைந்த பின் வந்த ”நாம் இருவர்” TRMஐ சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையில் முதலில் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் காட்சியே பாரதியின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் தான். ஆர்ப்பரித்தது ரசிக கூட்டம். அரங்கில் இருந்த TRM அடையாளம் கண்டு கொண்டு தூக்கி வைத்துக் கொண்டாடியது மதுரை.

       அதன் பின் TRM நடித்த ஞானசுந்தரி, லைலா மஜ்னூ,இதய கீதமெல்லாம் அவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புகழ் போதையா அல்லது தவறான சகவாசமா? என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சில சொந்த படங்களும் அவரை ஏமாற்றியது. சுருண்டு போனவரை நிமிர செய்த படம்தான் இன்றும் TRMக்கு அடையாளமாக இருக்கிறது. ஆம். கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை. செந்தமிழ் தேன்மொழியாள். ஒரு முறை பாட்டை ரசித்துவிட்டு வாருங்கள். அதைப் பற்றி ஒரு முக்கிய செய்தி இருக்கு.

(செய்தி: உண்மையில் இந்த பாடலின் மெட்டு இந்தி இசை உலகின் ஜாம்பவான் நெளஷத் அவர்கள் போட்டது. அப்பவே காப்பி..)

     கண்ணதாசனுக்கு ஒரு குறை இருந்தது. அவர் எழுதி தந்த சிலப் பாடல்களை வேகம் குறைவென்றோ, வேறு சில காரணங்களிலாலோ தவிர்த்தனர் நம் சூப்பர்ஸ்டாரக்ள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அந்தப் பாடல்களையெல்லாம் சேர்த்து வைத்த கண்ணதாசன் சொந்த தயாரிப்பில் இறங்கினார். அந்தப் படம்தான் மாலையிட்ட மங்கை. பாடல்களுக்காகவே ஒரு படமெனில் அதில் நடிக்க TRMயை விட்டால் ஆளேது? மீண்டும் வந்தார் மாலி.

        மகாலிங்கமோ பிராமணர். கண்ணதாசனோ திமுக அபிமானி. அந்தக் காலத்தில் திமுக பிராமணர்களை அடியோடு வெறுத்தது. கொதித்தனர் உடன்பிறப்புக்கள். முதல் காட்சி. கோவத்துடன் அரங்கில் திமுகவினர். சிகரெட்டுடன் அறிமுகமாவது சூப்பர்ஸ்டார் ஸ்டைல் என்றால், ஹைபிட்ச்சில் பாடிக் கொண்டே வருவது TRM ஸ்டைல். அரங்கம் அதிர ஒலித்தது TRMன் குரல்

விந்தியம் குமரியிடை

விளங்கும் திருநாடே

வேலேந்தும் மூவேந்தர்

ஆண்டிருந்த தென்னாடே..

எங்கள் திராவிடப் பொன்னாடே..

அசையாமல் நின்றனர் உடன்பிறப்புகள். தொகையறா முடிந்து பாடல் தொடங்கியது

எங்கள் திராவிட பொன் நாடே

கலை வாழும் தென்னாடே

இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம்

இயங்கும் செந்தமிழ் நாடே..

அடிக்க வந்த அனைவரும் அணைத்தனர். மாபெறும் வரவேற்பை பெற்றது படம். 17 பாடல்கள் கொண்ட அந்தப் படம் எம்.எஸ்,வி- ராமமூர்த்தி கூட்டணிக்கும் வாழ்வு தந்தது. TRM பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

----------------------XX-------------------------

TRM பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை:

1) காயாத கானகத்தே: நம் அனைவரும் கேட்ட பாடல்தான். இதன் ஆரம்பம். வாவ்.. என்னைப் பொறுத்தவரை மாலியின் THE BEST

2) வண்ண தாமரையை கண்டு - பாருங்க,. எனக்கு பிடிக்கும்.

3) ஆடை கட்டி வந்த நிலவோ - வீடியோ கிடைக்கவில்லை. ஆடியோ மட்டும்

4) செந்தமிழ் தேன்மொழியாள் - எவர்க்ரீன்

5) இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - !!!!!!!

30 கருத்துக்குத்து:

ghost on August 4, 2009 at 10:48 AM said...

i think both mali's r different

MayVee on August 4, 2009 at 10:54 AM said...

thiruvilaiyadal yil avar paddina oru pattu varume athu kuda nalla irukkum ....

ghost on August 4, 2009 at 10:57 AM said...

செந்தமிழ் தேன்மொழியாள் நல்ல பாடல்..

தராசு on August 4, 2009 at 11:00 AM said...

சரி, சரி, கொஞ்ச நாளா முரளி கண்ணன் அண்ணனை காணோம், அதுக்கு பதிலா நம்ம தல ஆரம்பிச்சுட்டாரு,

செந்தமிழ் தேன்மொழியாள் ஒரு அழியா பாடல்.

MayVee on August 4, 2009 at 11:04 AM said...

isai tamil pattu illai thala... vera onnu ...

athukku munadi varum...

vedala ulagam yil oru pattu varum.. athu kuda avaroduthu thaan entru ninaikkiren

டம்பி மேவீ on August 4, 2009 at 11:08 AM said...

puthu peyAR eppadi irukku thala

முதலமைச்சர் 2011 on August 4, 2009 at 11:17 AM said...

சூப்பர் பாஸ். முடிந்தால் இவரின் படங்கள், பாடல்கள் லிஸ்ட் போடுங்களேன். எனக்கும் மேயாத மான் தான் ஃபேவரிட். இசைத்தமிழும், செந்தமிழ் தேன்மொழியாளும் கூட.

நல்ல பதிவு. செந்தமிழ் தேன்மொழியாள் - எவர்க்ரீன் என்று போட்டுவிட்டு, பச்சை நிறம் தந்தது, சுப்பர்ப் திங்கிங். கலக்குற சகா

தாரணி பிரியா on August 4, 2009 at 11:42 AM said...

செந்தமிழ் தேன்மொழியாள் தான் எனக்கு பேவரைட் :)

நாஞ்சில் நாதம் on August 4, 2009 at 11:48 AM said...

////இன்னும் நூறு வருடம் கழித்தாலும் சிலப் பாடல்கள் பிரபலமாகவே இருக்கும்.\\\

:)))

மண்குதிரை on August 4, 2009 at 11:51 AM said...

திராவிட பொன் நாடு பாடல் சிவகங்கைச்சீமையில் தானே.
ரசித்தேன் நண்பா.

கார்க்கி on August 4, 2009 at 12:03 PM said...

நன்றி பிசாசு(உங்கள இப்படி சொல்லலாமா, ghost?) :)))

மேவீ, அந்த ஒரு பாடல்தானே டம்பி? இன்னொரு பாட்டு பாடியது பாலமுரளிகிருஷ்ணா. டம்பி மேவீ நல்லாத்தான் இருக்கு

தராசண்ணே, முரளி வந்தா பார்ட் பார்ட்டா போட்டு கலக்கிடுவாரு

நன்றி விஜய்காந்த்(பின்ன, 2011ல அவர்தானே முதலமைச்சர்) :))

பலருக்கும் தா.பி. ஆனா நீங்க மேயாதா மான் கேட்டு பாருங்க

நன்றி நாதம்

நன்றி மண்குதிரை

**********

பதிவு சின்னதுதான். ஆனா லிங்கையெல்லாம் பார்த்திஙக்ண்ணா நேரமெடுக்கும். அதனால்தான் இரண்டு பாகங்களாக பிரித்தேன்

radhika on August 4, 2009 at 1:10 PM said...

i know only senthamizh then moziyal. good post karki

பாலா on August 4, 2009 at 1:30 PM said...

பின்னோக்கிய பயணமா மாப்பி
அசத்தல்
இதே போல எல்லா சூப்பெர் ஸ்டார்களுக்கும் ட்ரை பண்ணலாமே (எக்ஸ்செப்ட்டு நம்ம தளபதி ஹிஹிஹி)

கலையரசன் on August 4, 2009 at 1:52 PM said...

நீயா...?

நீயா...?

நீயா...?

கார்க்கி on August 4, 2009 at 2:47 PM said...

thanks radhika

மாப்பி, அப்ப தளபதியும் சூப்பர்ஸ்டார்தான் ஏத்துக்கற..

கலை, நானேதான்.. ஏம்ப்பா?

ஏதாவ்து இப்படி முயற்சி செஞ்சா சொதப்புவிங்களே.. நாளைக்கு மரண மொக்கை வருது... be ready

Karthik on August 4, 2009 at 3:39 PM said...

நல்ல பதிவு கார்க்கி. :-)

//ஏதாவ்து இப்படி முயற்சி செஞ்சா சொதப்புவிங்களே.. நாளைக்கு மரண மொக்கை வருது... be ready

eagerly awaiting!! :))

அப்பாவி முரு on August 4, 2009 at 4:02 PM said...

வயசான காதலியோ???

Cable Sankar on August 4, 2009 at 7:02 PM said...

நல்ல முயற்சி கார்க்கி.

SK on August 4, 2009 at 7:45 PM said...

சகா இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சு எழுதி இருக்கலாம். :) ஆனா இது ஒரு நல்ல தொடக்கம்.. தொடரட்டும்..

பரிசல்காரன் on August 4, 2009 at 11:48 PM said...

இது எவ்வளவு நல்ல பதிவென்பதை இதுவரை 19 பின்னூட்டங்கள்தான் வந்துள்ளதென்பதை வைத்து தெரிந்து கொண்டேன்.

இவிய்ங்க எப்பயுமே இப்படித்தான் பாஸ்..

தாரணி பிரியா on August 5, 2009 at 10:56 AM said...
This comment has been removed by the author.
கார்க்கி on August 5, 2009 at 11:57 AM said...

நன்றி கார்த்திக் ))

முரு, எல்லாருமே வயசானவங்கதான். நான் 26 வயதானவன்

நன்றி கேபிளாரே

எஸ்.கே, அவரது நினைவு நாளான மே 31க்கு எழுதியது. நானும் எத்தனை நாள்தான் டிராஃப்ட்லே போட்டு வைக்கிறது? சரிதான். அடுத்து கவனம் கொள்கிறேன்

பரிசல், என்னுடைய சமீபத்திய எல்லா பதிவும் குறைந்தது 30 கமெண்டு வாங்கியது. அப்ப என்ன சொல்ல வறீங்க? ஆவ்வ்வ்வ்வ்

அனுஜன்யா on August 5, 2009 at 12:44 PM said...

என்ன மாதிரி யூத்துக்குத் தெரியாத பல விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி கார்க்கி.

Aside, புல்லாங்குழல் மாலி வேறு; TRM வேறு; Right?

அனுஜன்யா

கார்க்கி on August 5, 2009 at 12:54 PM said...

@அனுஜன்யா,

அவர் வேறு தான் தல. ஆனால் இவரும் புல்லாங்குழல் வாசிப்பார்.

எனக்கு ஷாஜஹான்(விஜய் படமல்ல) கதை கூட தெரியும். அது போலத்தான் டீ.ஆர்.எம்மும். :))

உங்க ஃபேவரைட் பாட்டு எது தல?

பரிசல்காரன் on August 5, 2009 at 1:08 PM said...

நவரசக்கவிஞர் அனுஜன்யா தன்னை யூத்தாகாக் காட்டிக் கொள்ள கிண்டலாக ஒரு கேள்வி கேட்டது ஜோக்கென்றால் அதற்கு சீரியஸாக நீ பதில் சொல்லியிருப்பது இன்னொரு ஜோக்கூ!

ஆதிமூலகிருஷ்ணன் on August 5, 2009 at 10:42 PM said...

வெறும் இன்றைய ஹிட் பாடல்களை கொண்டாடும் நபர் என்ற எண்ணத்தை மாற்றிய பதிவு. பரந்த இசை ஆர்வம் விளங்குகிறது. வாழ்த்துகள்.!

☼ வெயிலான் on August 6, 2009 at 2:20 PM said...

நல்ல பதிவு கார்க்கி!

டிஆர்எம் பிராமணர் இல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன்.

நிலாக்காலம் on August 8, 2009 at 3:37 PM said...

’செந்தமிழ்த் தேன்மொழியாள்’ மெட்டைத்தான் முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு, சென்னை 600028 படத்தில் ‘இனி ஜல்சா பண்ணுங்கடா’பாடலாக யுவன் அமைத்திருக்கிறார்.

கார்க்கி on August 10, 2009 at 11:28 AM said...

பரிசல் அது வேற மேட்டர்..

நன்றி ஆதி

இல்லை வெயிலான். அவர் பிராமணர்தான்

நிலாக்காலம், அந்த பாடலின் மெட்டை போட்டது கானா உலகனாதன். அதை உல்டா செய்தவர் யுவன். அவர் பெயரை குறிப்பிடவில்லை என்படஹ்ற்காக வெஙட் பிரபு பொங்கல்ன்று அவர் அப்பா நடத்திய நிகழ்ச்சியில் உலகனாதனிடமே மன்னிப்பு கேட்டு சொன்னார். நன்றி

விக்னேஷ்வரி on August 11, 2009 at 7:37 PM said...

அட, யூத்துக்கு இந்த மேட்டரெல்லாம் கூட எழுத தெரியுமா...... கலக்கிட்டீங்க. நல்ல பதிவு கார்க்கி.

 

all rights reserved to www.karkibava.com