Aug 2, 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்..


 

முக்கிய குறிப்பு: டம்ப்ரீ டக்ளஸ் பதிவுல படிச்சப்ப என்னவோ செஞ்சது. நான் கிறுக்கி வச்ச பதிவ விட இந்த நாளுக்கு தோதான பதிவா தோன்றியதால் இதையேப் போட்டு சகாக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..

Happy friendship day

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...


அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!


கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!


பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!


அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...


சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!


படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!


வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!


ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...


நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

34 கருத்துக்குத்து:

Priya on August 2, 2009 at 2:59 PM said...

Me the First...

Priya on August 2, 2009 at 2:59 PM said...

Me the First...

:) :)

Priya on August 2, 2009 at 3:06 PM said...

Really Very good when i was read i feel i was in my college...

good

வெங்கிராஜா on August 2, 2009 at 3:08 PM said...

செம கெத்து சகா!
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

velan on August 2, 2009 at 3:41 PM said...

ஏற்கனவே படித்துதான் என்றாலும்....சரியான நேரத்தில் நினையூட்டியமைக்கு நன்றி.......நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்......

அன்புடன் அருணா on August 2, 2009 at 4:13 PM said...

//மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்... //
கட்டபொம்மனையும் எட்டப்பனையும் நல்ல விஷயத்துக்கு உதாரணம் சொன்னது கார்க்கி மட்டுமாகத்தானிருக்கும்!

சிங்கக்குட்டி on August 2, 2009 at 4:34 PM said...

பொருத்தமான நாள்.. ....நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் :-))

டக்ளஸ்... on August 2, 2009 at 6:01 PM said...

வாழ்த்துக்கள்.

Karthik on August 2, 2009 at 6:02 PM said...

happy friendship day!!

finally i have found the way to wish you guys.. lol.. :)

Starjan ( ஸ்டார்ஜன் ) on August 2, 2009 at 6:39 PM said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

லவ்டேல் மேடி on August 2, 2009 at 6:50 PM said...

நல்ல கவிதை.... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

MayVee on August 2, 2009 at 7:22 PM said...

unmaiyile super.....

பீர் | Peer on August 2, 2009 at 7:38 PM said...

நட்பு தின நல்வாழ்த்துக்கள், கார்க்கி.

இன்று நட்பு தினமாமே
நமக்கு தினம் தினம்
நட்பின் தினம் தானே....

பாலா on August 2, 2009 at 8:04 PM said...

சரிதான் மாப்பி

SUREஷ் (பழனியிலிருந்து) on August 2, 2009 at 9:33 PM said...

சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் நண்பர்கள் தினவிழா

வாழ்த்துக்கள் தல..,

கும்க்கி on August 2, 2009 at 10:40 PM said...

என்னமோ போப்பா........
மனசு ஒடிஞ்சு போச்சுப்பா.....

Kathir on August 2, 2009 at 10:54 PM said...

வாழ்த்துக்கள் சகா..

T.V.Radhakrishnan on August 2, 2009 at 11:45 PM said...

வாழ்த்துக்கள்.

பாலராஜன்கீதா on August 3, 2009 at 12:05 AM said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் கார்க்கி.

Nalina on August 3, 2009 at 3:21 AM said...

ஐயோ கார்க்கி! என்ன சொல்றது னே தெரியலை.பெண்களாகிய எங்களுக்கு சில விஷயங்கள் பொருத்தமில்லை யென்றாலும்........உணர்வுகள் அதே தானே!அதுவும் ஹாஸ்டலில் படித்த எனக்கு...உங்கள் வரிகள் அனைத்தும்...அப்படியே பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வந்து விட்டது.நன்றி உங்களுக்கு.அதனால் தான் முதல்முறையாக பின்னூட்டமும்.

தராசு on August 3, 2009 at 9:22 AM said...

Good one.

கார்க்கி on August 3, 2009 at 10:25 AM said...

அனைவருக்கும் நன்றி. நான் தான் தெளிவா மு.கு போட்டு இருக்கேனே.. இது நான் படித்து ரசித்தது..

இவ்ளோ நல்லா என்னால எழுத முடியுமான்னு யோசிக்க வேணாம்? :)))))))

முரளிகுமார் பத்மநாபன் on August 3, 2009 at 10:46 AM said...

நண்பா.... எதோ கிண்டலா அரம்பிச்ச மாதிரி இருந்தாலும் கடைசியா படிச்சு முடிக்கும்போது கண்ணுல தண்ணி வந்திருச்சு.... இந்த செண்டிமெண்டெல்லாம் இல்லைன்னா லைஃப்ல சுவாரஸ்யம் போயிடும். வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்களை நண்பராக பெற்றவர்களுக்கும். :-)
நமது தின வாழ்த்துக்கள்.

மண்குதிரை on August 3, 2009 at 10:56 AM said...

வாழ்த்துக்கள் நண்பா!

கோபிநாத் on August 3, 2009 at 11:37 AM said...

வாழ்த்துக்கள் சகா ;))

Raj on August 3, 2009 at 12:08 PM said...

நட்பு தின நல்வாழ்த்துக்கள் கார்க்கி.

MayVee on August 3, 2009 at 4:05 PM said...

"கார்க்கி said...

இவ்ளோ நல்லா என்னால எழுத முடியுமான்னு யோசிக்க வேணாம்? :)))))))"


செல்லாது செல்லாது ..... அதுக்கு நீங்க டிஸ்கி போட்டு இருக்க வேண்டும்.....

MayVee on August 3, 2009 at 4:06 PM said...

நீங்க ஒரு இலக்கியவாதி என்பதால் ; அந்த கவிதையை நீங்க எழுதினது என்று நம்பி விட்டேன்.......

MayVee on August 3, 2009 at 4:08 PM said...

கவிதை நல்ல இருக்குமே போதே நினைத்தேன் .... ஹீ ஹீ ஹீ ஹீ


இருந்தாலும் பெரிய மனசுடன் பகிர்ததுக்கு தேங்க்ஸ்

MayVee on August 3, 2009 at 4:08 PM said...

nane 30

வால்பையன் on August 3, 2009 at 5:51 PM said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

ஆதிமூலகிருஷ்ணன் on August 5, 2009 at 10:49 PM said...

உணர்வுப்பூர்வமான கவிதை. இந்நாளுக்கு பொருத்தமான பதிவு. வாழ்த்துகள் உனக்கும், டக்ளசுக்கும்.!

ஆதிமூலகிருஷ்ணன் on August 5, 2009 at 10:58 PM said...

எழுதியவருக்கு கிரெடிட் சேர்க்கத்தவறிய உங்கள் இருவருக்கும் எனது சிறிய கண்டனங்கள். முதலில் இது டக்ளஸ் எழுதியது என எண்ணிவிட்டேன்.

டக்ளஸ்... on August 6, 2009 at 9:16 AM said...

எழுதியவரின் பெயர் தெரிந்திருப்பின், கண்டிப்பாக சேர்த்திருப்போம்.
தவறுக்கு மன்னிக்கவும் அன்பு ஆதி அங்கிள்.
:)

 

all rights reserved to www.karkibava.com